அதிகாரம் / Chapter 67
திருக்குறள் 661
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்மற்றைய எல்லாம் பிற.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
வினையினிடத்துத் திண்மை யென்று சொல்லப்படுவது ஒருவன் மனத்து உண்டான திண்மை; அதனையொழிய மற்றவையெல்லாம் திண்மையென்று சொல்லப்படா. மற்றவையென்றது கருவியும் உபாயமும்.
பரிமேலழகர்
வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் - வினை செய்தற்கண் திண்மை என்று சொல்லப்படுவது அதனை முடித்தற்குரியானோருவன் மனத்தினது திண்மை; மற்றைய எல்லாம் பிற - அஃது ஒழிந்தன எல்லாம் அதற்குத் திண்மை என்று சொல்லப்படா. விளக்கம் [ஒழிந்தனவாவன: படை, அரண், நட்பு முதலியவற்றின் திண்மைகள், அவையும் அதற்கு வேண்டுவனவாய் இனமாகலின், 'மற்றைய' என்றும், வேண்டினும் அஃது இவ்வழிப் பயனிலவாகலின் 'பிற' என்றும் கூறினார். இதனால் வினைத் திட்பமாவது இன்னது என்பது கூறப்பட்டது.]
English explanation
What men call 'power in action' know for 'power of mind'Externe to man all other aids you find
Firmness in action is (simply) one's firmness of mind; all other (abilities) are not of this nature.