அதிகாரம் / Chapter 38
திருக்குறள் 372
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்ஆகலூழ் உற்றக் கடை.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
கெடுக்கும் ஊழ் தோன்றினால் அறியாமையை யுண்டாக்கும்; ஆக்கும் ஊழ் தோன்றினால் அறிவை விரிக்கும். இஃது அறிவும் அறியாமையும் ஊழால் வருமென்றது.
பரிமேலழகர்
இழவு ஊழ் (உற்றக்கடை) அறிவு பேதைப் படுக்கும் - ஒருவனுக்கு எல்லா அறிவும் உளவாயினும், கைப்பொருள் இழத்தற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து, அஃது அதனைப் பேதையாக்கும்; ஆகல் ஊழ் உற்றக்கடை அகற்றும் - இனி அவன் அறிவு சுருங்கியிருப்பினும், கைப்பொருளாதற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து அஃது அதனை வரிக்கும். விளக்கம் ('கைப்பொருள்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'இழவு ஊழ்', 'ஆகல் ஊழ்' என்பன இரண்டும் வேற்றுமைத் தொகை. 'உற்றக்கடை' என்பது முன்னும் கூட்டப்பட்டது. இயற்கையானாகிய அறிவையும் வேறுபடுக்கும் என்பதாம்.)
English explanation
The fate that loss ordains makes wise men's wisdom foolishness;The fate that gain bestows with ampler powers will wisdom bless
An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged knowledge.