அதிகாரம் / Chapter 112
திருக்குறள் 1120
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்அடிக்கு நெருஞ்சிப் பழம்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
அனிச்சப்பூவும், அன்னத்தின் தூவியும், மாதரடிக்கு நெருஞ்சிப் பழத்தோடு ஒக்கும். இஃது அவையிற்றினும் மெல்லியது அடியென்று கூறிற்று.
பரிமேலழகர்
உடன் போக்கு உரைத்த தோழிக்கு அதனது அருமை கூறி மறுத்தது. அனிச்சமும் அன்னத்தின் தூவியும் - உலகத்தாரான் மென்மைக்கு எடுக்கப்பட்ட அனிச்சப்பூவும் அன்னப்புள்ளின் சிறகும் ஆகிய இரண்டும்; மாதர் அடிக்கு நெருஞ்சிப்பழம் - மாதரடிக்கு நெருஞ்சிப் பழம்போல வருத்தஞ் செய்யும். விளக்கம் (முன் வலிதாதலுடைமையின் 'பழம்' என்றான். 'இத்தன்மைத்தாய அடி ''பாத்தி அன்ன குடுமிக் கூர்ங்கற்'' களையுடைய (அகநா. களிற். 5) வெஞ்சுரத்தை யாங்ஙனம் கடக்கும்?' என்பது குறிப்பாற் பெறப்பட்டது. செம்பொருளேயன்றிக் குறிப்புப் பொருளும் அடிநலனழியாமை யாகலின், இதுவும் இவ்வதிகாரத்தாயிற்று.)
English explanation
The flower of the sensitive plant, and the down on the swan's white breast,As the thorn are harsh, by the delicate feet of this maiden pressed
The anicham and the feathers of the swan are to the feet of females, like the fruit of the (thorny) Nerunji.