அதிகாரம் / Chapter 91

திருக்குறள் 907

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்பெண்ணே பெருமை உடைத்து.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

பெண்டிர் ஏவின தொழிலைச் செய்தொழுகும் ஆண்மையின், நாணமுடைய பெண்மையே தலைமை உடைத்தாம். இது பிறரால் மதிக்கப்படாரென்றது.

பரிமேலழகர்

பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் - நாண் இன்றித் தன் இல்லாளது ஏவல் தொழிலைச் செய்து திரிகின்றவனது ஆண் தன்மையின்; நாண் உடைப் பெண்ணே பெருமை உடைத்து - நாணினையுடைய அவள் பெண் தன்மையே மேம்பாடு உடைத்து. விளக்கம் ('நாணுடைப் பெண்' என வேண்டாது கூறியது, அவள் ஏவல் செய்வஈனது நாணின்மை முடித்தற் காதலின், அம்மறுதலைத் தொழில் வருவிக்கப்பட்டது. ஏவல் - ஆகுபெயர். இறுதிக்கண் 'பெண்' என்பதூஉம் அது. ஏவல் செய்வித்துககோடற் சிறப்புத் தோன்றப் 'பெண்ணே' எனப் பிரித்தார்.)

English explanation

The dignity of modest womanhood excelsHis manliness, obedient to a woman's law who dwells

Even shame faced womanhood is more to be esteemed than the shameless manhood that performs the behests of a wife.