அதிகாரம் / Chapter 49

திருக்குறள் 481

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

இராப்பொழுது வெல்லுங் கூகையைக் காக்கை பகற்பொழுது வெல்லும். ஆதலான் மாறுபாட்டை வெல்லும் அரசர்க்குக் காலம் வேண்டும் இது காலமறிதல் வேண்டும் என்றது.

பரிமேலழகர்

கூகையைக் காக்கை பகல் வெல்லும் - தன்னின் வலிதாய கூகையைக் காக்கை பகற்பொழுதின் கண் வெல்லாநிற்கும்; இகல் வெல்லும் வேந்தர்க்குப் பொழுது வேண்டும் - அது போலப் பகைவரது இல்லை வெல்லக் கருதும் அரசர்க்கு அதற்கு ஏற்ற காலம் இன்னி அமையாது. விளக்கம் [எடுத்துக் காட்டு உவமை, காலம் அல்லாவழி வலியால் பயன் இல்லை என்பது விளக்கி நின்றது. இனிக் காலம் ஆவது, வெம்மையும் குளிர்ச்சியும் தம்முள் ஒத்து, நோய் செய்யாது, தண்ணீரும் உணவும் முதலிய உடைத்தாய்த் தானை வருந்தாது செல்லும் இயல்பினதாம். இதனால் காலத்தது சிறப்புக் கூறப்பட்டது.]

English explanation

A crow will conquer owl in broad daylight;The king that foes would crush, needs fitting time to fight

A crow will overcome an owl in the day time; so the king who would conquer his enemy must have (a suitable) time.