அதிகாரம் / Chapter 26
திருக்குறள் 253
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்உடல்சுவை உண்டார் மனம்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
ஆயுதம் கையிற்கொண்டவர் நெஞ்சுபோல் நன்மையை நினையாது: ஒன்றினுடலைச் சுவைபடவுண்டார் மனம்.
பரிமேலழகர்
படை கொண்டார் நெஞ்சம் போல்-கொலைக் கருவியைத் தம் கையில் கொண்டவர் மனம் அதனால் செய்யும் கொலையையே நோக்குவதல்லது அருளை நோக்காதவாறு போல; ஒன்றன் உடல் சுவை உண்டார் மனம் நன்று ஊக்காது-பிறிதோர் உயிரின் உடலைச் சுவைபட உண்டவர் மனம் அவ் வூனையே நோக்குவது அல்லது அருளை நோக்காது. விளக்கம் (சுவைபட உண்டல், காயங்களான் இனிய சுவைத்து ஆக்கி உண்ட . இதனான் ஊன் தின்றார் மனம் தீங்கு நினைத்தல் உவம அளவையால் சாதித்து, மேலது வலியுறுத்தப்பட்டது.)
English explanation
Like heart of them that murderous weapons bear, his mind,Who eats of savoury meat, no joy in good can find
Like the (murderous) mind of him who carries a weapon (in his hand), the mind of him who feasts with pleasure on the body of another (creature), has no regard for goodness.