அதிகாரம் / Chapter 62

திருக்குறள் 616

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

முயற்சி செல்வத்தை உண்டாக்கும்: முயலாமை வறுமையை உண்டாக்கும். இது செல்வமும் நல்குரவும் இவற்றாலே வருமென்றது.

பரிமேலழகர்

முயற்சி திருவினை ஆக்கும்-அரசர்மாட்டு உளதாய முயற்சி அவரது செல்வத்தினை வளர்க்கும்; முயற்று இன்மை இன்மை புகுத்திவிடும்-அஃதில்லாமை வறுமையை அடைவித்து விடும். விளக்கம் ('செல்வம்-அறுவகை அங்கங்கள். வறுமை - அவற்றான் வறியராதல். அதனை அடைவிக்கவே பகை வரான் அழிவர் என்பது கருத்து.)

English explanation

Effort brings fortune's sure increase,Its absence brings to nothingness

Labour will produce wealth; idleness will bring poverty.