அதிகாரம் / Chapter 2

திருக்குறள் 16

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கேபசும்புல் தலைகாண்பு அரிது.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

வானின்று துளிவீழினல்லது அவ்விடத்துப் பசுத்த புல்லினது தோற்றமுங் காண்டல் அரிது. ஆங்கென்பதனை அசையாக்கினு மமையும். இஃது ஓரறிவுயிருங் கெடுமென்றது.

பரிமேலழகர்

விசும்பின் துளி வீழின் அல்லால் - மேகத்தின் துளி வீழின் காண்பது அல்லது; மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பது அரிது-வீழாதாயின் அப்பொழுதே பசும்புல்லினது. தலையையும் காண்டல் அரிது. விளக்கம் ('விசும்பு ஆகு பெயர். 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது. இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. ஓர் அறிவு உயிரும் இல்லை என்பதாம்)

English explanation

If from the clouds no drops of rain are shed'Tis rare to see green herb lift up its head

If no drop falls from the clouds, not even the green blade of grass will be seen.