அதிகாரம் / Chapter 10

திருக்குறள் 97

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்றுபண்பின் தலைப்பிரியாச் சொல்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

பிறரால் விரும்பப்படுதலையும் பயந்து, பொருளையும் பயந்து, அறத்தினையும் பயக்கும்; குணத்தினின்று நீங்காத சொல்.

பரிமேலழகர்

நயன் ஈன்று நன்றி பயக்கும் ஒருவனுக்கு இம்மைக்கு நீதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும்; பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல்-பொருளால் பிறர்க்கு நன்மையைக் கொடுத்து இனிமைப் பண்பின் நீங்காத சொல் நீதி. உலகத்தோடு பொருந்துதல். விளக்கம் ('பண்பு' என்பது ஈண்டு அதிகாரத்தான் இனிமைமேல் நின்றது. தலைப்பிரிதல்-ஒரு சொல் நீர்மைத்து.)

English explanation

The words of sterling sense, to rule of right that strict adhere,To virtuous action prompting, blessings yield in every sphere

That speech which, while imparting benefits ceases not to please, will yield righteousness (for this world) and merit (for the next world).