அதிகாரம் / Chapter 35
திருக்குறள் 341
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்அதனின் அதனின் இலன்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
எவன் யாதொன்றினின்றும் யாதொன்றினின்றும் நீங்கினான் அவன் அதனளவு துன்பமுறுதலிலன்.
பரிமேலழகர்
யாதனின் யாதனின் நீங்கியான் - ஒருவன் யாதொரு பொருளின் யாதொரு பொருளின் நீங்கினான்; அதனின் அதனின் நோதல் இலன் - அவன் அப்பொருளால் அப்பொருளால் துன்பம் எய்துதல் இலன். விளக்கம் (அடுக்குகள் பன்மை குறித்து நின்றன. நீக்குதல் - துறத்தல். ஈண்டத் துன்பம் என்றது இம்மைக்கண் அவற்றைத் தேடுதலானும், காத்தலானும், இழத்தலானும் வருவனவும், மறுமைக்கண் பாவத்தான் வருவனவும் ஆய இருவகைத் துன்பங்களையும் ஆம். எல்லாப் பொருளையும் ஒருங்கே விடுதல் தலைமை; அஃதன்றி, ஒரொ ஒன்றாக விடினும் அவற்றான் வரும் துன்பம் இலனாம் என்பது கருத்து.)
English explanation
From whatever, aye, whatever, man gets free,From what, aye, from that, no more of pain hath he
Whatever thing, a man has renounced, by that thing; he cannot suffer pain.