அதிகாரம் / Chapter 81

திருக்குறள் 810

விழையார் விழையப் படுப பழையார்கண்பண்பின் தலைப்பிரியா தார்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

பழைய நட்டோர்மாட்டுக் குணத்தினின்று நீங்காதார், விரும்பாதாராலும் விரும்பப்படுவர். இது பகைவரும் விரும்புவாரென்றது.

பரிமேலழகர்

பழையார்கண் பண்பின் தலைப்பிரியாதார் - பழைய நட்டார் பிழை செய்தாராயினும் அவர்மாட்டுத் தம் பண்பின் நீங்காதார்; விழையார் விழையப்படுப - பகைவரானும் விரும்பப்படுவர். விளக்கம் (தம் பண்பாவது செய்யாத முன்போல அன்புடையராதல். மூன்றன் உருபும் சிறப்பு உம்மையம் விகாரத்தால் தொக்கன. அத் திரிபின்மை நோக்கிப் பகைவரும் நட்டாராவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பழைமையறிவார் எய்தும் பயன் கூறப்பட்டது..)

English explanation

Ill-wishers even wish them well, who guardFor ancient friends, their wonted kind regard

Even enemies will love those who have never changed in their affection to their long-standingfriends.