அதிகாரம் / Chapter 122
திருக்குறள் 1213
நனவினால் நல்கா தவரைக் கனவினால்காண்டலின் உண்டென் உயிர்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
நனவின்கண் நமக்கு அருளாதவரைக் கனவு தேடித் தருதலால், அக்கனவின் கண்ணே எனக்கு இன்பம் உண்டாகும். இது கண்டாற் பயனென்னை? காம நுாகர்ச்சியில்லையே என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிமேலழகர்
ஆற்றான் எனக் கவன்றாட்கு 'ஆற்றுவல்' என்பதுபடச் சொல்லியது. நனவினான் நல்காதவரை - நனவின்கண் வந்து தலையளி செய்யாதாரை; கனவினாற் காண்டலின் என் உயிர் உண்டு - யான் கனவின் கண் கண்ட காட்சியானே என்னுயிர் உண்டாகா நின்றது. விளக்கம் (மூன்றனுருபுகள் ஏழன் பொருண்மைக்கண் வந்தன. 'அக்காட்சி யானே யான் ஆற்றியுளேன் ஆகினறேன். 'நீ கவலல் வேண்டா,' என்பதாம்.)
English explanation
Him, who in waking hour no kindness shows,In dreams I see; and so my lifetime goes
My life lasts because in my dream I behold him who does not favour me in my waking hours.