அதிகாரம் / Chapter 65
திருக்குறள் 647
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனைஇகல்வெல்லல் யார்க்கும் அரிது.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
ஒருவன் சொல்ல வல்லவனுமாய் அதனைச் சோர விடுதலும் இல்லானாய் அஞ்சாது சொல்லுதலும் உடையவனாயின், அவனை மாறுபாட்டின்கண் வெல்லுதல் யாவர்க்கும் அரிது.
பரிமேலழகர்
சொலன் வல்லன் - தான் எண்ணிய காரியங்களைப் பிறர்க்கு ஏற்பச் சொல்லுதல் வல்லனாய்; சோர்வு இலன் - அவை மிகப் பலவாயவழி ஒன்றினும் சோர்விலனாய்; அஞ்சான் - அவைக்கு அஞ்சானாயினான் யாவன்; அவனை இகல் வெல்லல் யார்க்கும் அரிது - அவனை மாறுபாட்டின் கண் வெல்லுதல் யாவர்க்கும் அரிது. விளக்கம் [ஏற்பச் சொல்லுதல் - அவர்க்கு அவை காரியமல்லவாயினும், ஆம் எனத் துணியும் வகை சொல்லுதல். சோர்வு சொல்ல வேண்டுவதனை மறப்பான் ஒழிதல். இம்மூன்று குணமும் உடையானை மாற்றாராய்ப் பிரித்தல் பொருத்தல் செய்து வெல்வாரில்லை என்பதாம்.]
English explanation
Mighty in word, of unforgetful mind, of fearless speech,'Tis hard for hostile power such man to overreach
It is impossible for any one to conquer him by intrique who possesses power of speech, and is neither faulty nor timid.