அதிகாரம் / Chapter 125
திருக்குறள் 1242
காதல் அவரிலர் ஆகநீ நோவதுபேதைமை வாழியென் நெஞ்சு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
அவர் நம்மேற் காதலிலராக, என் நெஞ்சே! நீ கூட்டத்தைக் கருதி வருந்துகின்றது பேதைமை. இஃது அன்பிலார்மாட்டு வருந்தினாலும் பயனில்லை யென்றது.
பரிமேலழகர்
தலைமகனைக் காண்டற்கண் வேட்கை மிகுதியால் சொல்லியது. என் நெஞ்சு வாழி - என் நெஞ்சே, வாழ்வாயாக; காதல் இலராக நீ நோவது - அவா நம்கண் காதல் இலராகவும் நீ அவர் வரவு நோக்கி வருந்துதற்கு ஏது; பேதைமை - நின் பேதைமையே; பிறிதில்லை. விளக்கம் ('நம்மை நினையாமையின், நங்கண் காதல் இலர் என்பது அறியலாம்; அஃதறியாமை மேலும் அவர்பால் செல்லக் கருதாது அவர் வரவு பார்த்து வருந்தா நின்றாய்; இது, நீ செய்து கொள்கின்றது' என்னும் கருத்தால் 'பேதைமை' என்றாள். 'வாழி' இகழ்ச்சிக் குறிப்பு. 'யாம்' அவர்பால் சேறலே அறிவாவது' என்பதாம்.)
English explanation
Since he loves not, thy smartIs folly, fare thee well my heart
May you live, O my soul! While he is without love, for you to suffer is (simple) folly.