அதிகாரம் / Chapter 125
திருக்குறள் 1243
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்பைதல்நோய் செய்தார்கண் இல்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
நெஞ்சே! நீ இறந்துபடாது இருந்து அவர்வரவை நினைந்து வருந்துகின்றது யாதிற்கு? வருத்தமுற்று நினைத்தல் நமக்குச் சிறுமைசெய்யும் நோயைத் தந்தார்மாட்டு இல்லை யாயின். இது வாராது வருந்துகின்றாமென்று கூறியது.
பரிமேலழகர்
இதுவும் அது. நெஞ்சே இருந்து உள்ளிப் பரிதல் என் - நெஞ்சே, அவர்பால் செல்வதும் செய்யாது ஈண்டு இறந்துபடுவதும் செய்யாதிருந்து அவர் வரவு நினைந்து நீ வருந்துகின்றது என்னை? பைதல் நோய் செய்தார் கண் பரிந்து உள்ளல் இல் - இப்பயுள் நோய் செய்தார்மாட்டு நமக்கு இரங்கிவரக் கருதுதல் உண்டாகாது. விளக்கம் ('நம்மாட்டு அருளுடையர், அன்மையின், தாமாக வாரார்; நாம் சேறலே இனித் தகுவது' என்பதாம்.)
English explanation
What comes of sitting here in pining thought, O heart? He knowsNo pitying thought, the cause of all these wasting woes
O my soul! why remain (here) and suffer thinking (of him)? There are no lewd thoughts (of you) in him who has caused you this disease of sorrow.