அதிகாரம் / Chapter 112
திருக்குறள் 1115
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்குநல்ல படாஅ பறை.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
அனிச்சப்பூவைக் காம்புகள் அறாது மயிரில் அளைந்தாள்: இனி இவளது நுசுப்பிற்கு நல்லவாக ஒலிக்கமாட்டா பறை. இஃது இடையினது நுண்மை கூறிற்று.
பரிமேலழகர்
பகற்குறிக்கண் பூ அணி கண்டு சொல்லியது. அனிச்சப்பூக்கால் களையாள் பெய்தாள் - இவள் தன் மென்மை கருதாது அனிச்சப்பூவை முகிழ் களையாது சூடினாள்; நுசுப்பிற்கு நல்ல பறை படா - இனி இவள் இடைக்கு நல்ல பறைகள் ஒலியா. விளக்கம் ('அம் முகிழ்ப்பாரம் பொறாமையின் இடை முரியும். முரிந்தால், அதற்குச் செத்தார்க்கு உரிய நெய்தற்பறையே படுவது' என்பதாம். மக்கட்கு உரிய சாக்காடும் பறைபடுதலும் இலக்கணைக் குறிப்பால் நுசுப்பின்மேல் ஏற்றப்பட்டன.)
English explanation
The flowers of the sensitive plant as a girdle around her she placed;The stems she forgot to nip off; they 'll weigh down the delicate waist
No merry drums will be beaten for the (tender) waist of her who has adorned herself with the anicham without having removed its stem.