அதிகாரம் / Chapter 107

திருக்குறள் 1066

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்குஇரவின் இளிவந்த தில்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

இப் பசுவிற்குத் தண்ணீர் தருமினென்று பிறரை இரப்பினும் நாவினுக்கு இரத்தல்போல இளிவரவு தருவது பிறிது இல்லை. இஃது அறத்திற்காக இரத்தலும் ஆகா தென்றது.

பரிமேலழகர்

ஆவிற்கு நீர் என்று இரப்பினும் - தண்ணீர் பெறாது இறக்கும் நிலைமைத்தாயதோர் ஆவினைக் கண்டு, அறம் நோக்கி இதற்குத் தண்ணீர் தரல் வேண்டும் என்று இரந்து சொல்லுங்காலும்; இரவின் நாவிற்கு இளிவந்தது இல் - அவ்விரவு போல ஒருவன் நாவிற்கு இளிந்தது பிறிது இல்லை. விளக்கம் (ஆகாத்தோம்பல் பேரறமாகலின், 'ஆவிற்கு' என்றும், பொருள் கொடுத்துக் கொள்ள வேண்டாத எண்மைத்தாகலின் 'நீர்' என்றும் இரக்கின்றானுக்கு இளிவு அச்சொல் அளவே ஆதலின் 'நாவிற்கு' என்றும், அதுதான் எல்லா இளிவினும் மேற்படுதலின், 'இளி வந்தது இல்' என்றும் கூறினார். இதனான் அறனும் முயன்று செய்வதல்லது இரந்து செய்யற்க என்பது கூறப்பட்டது.)

English explanation

E'en if a draught of water for a cow you ask,Nought's so distasteful to the tongue as beggar's task

There is nothing more disgraceful to one's tongue than to use it in begging water even for a cow.