அதிகாரம் / Chapter 61

திருக்குறள் 601

குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்மாசூர மாய்ந்து கெடும்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

குடியென்று சொல்லப்படுகின்ற குறைவில்லாத ஒளி, மடியென்று சொல்லப்படுகின்ற மாசு மறைக்கத் தோன்றாது கெடும். முன்பே தோற்றமுடைத்தாகிய குடியுங் கெடுமென்றவாறு.

பரிமேலழகர்

குடி என்னும் குன்றா விளக்கம்-தான் பிறந்த குடியாகிய நந்தா விளக்கு மடி என்னும் மாசு ஊர மாய்ந்து கெடும்-ஒருவன் மடியாகிய இருள் அடர நந்திப் போம். விளக்கம் (உலக நடை உள்ள துணையும் இடையறாது தன்னுள் பிறந்தாரை விளக்குதலின், குடியைக் 'குன்றா விளக்கம்' என்றும், தாமத குணத்தான் வருதலின் 'மடியை' மாசு என்றும், அஃது ஏனையிருள் போலாது அவ்விளக்கத்தைத் தான் அடர்ந்து மாய்க்கும் வலி உடைமையின் 'மாசு ஊர மாய்ந்து கெடும்' என்றும் கூறினார். கெடுதல் - பெயர் வழக்கமும் இல்லை யாதல்.)

English explanation

Of household dignity the lustre beaming bright,Flickers and dies when sluggish foulness dims its light

By the darkness, of idleness, the indestructible lamp of family (rank) will be extinguished.