அதிகாரம் / Chapter 38
திருக்குறள் 375
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்நல்லவாம் செல்வம் செயற்கு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
செல்வம் உண்டாக்குவதற்குத் தனக்குமுன்பு தீதாயிருந்தனவெல்லாம் நன்றாம்: அச்செல்வத்தை யில்லை யாக்குவதற்கு முன்பு நன்றாய் இருந்தனவெல்லாம் தீதாம்.
பரிமேலழகர்
செல்வம் செயற்கு - செல்வத்தை ஆக்குதற்கு; நல்லவை எல்லாம் தீயவாம் - நல்லவை எல்லாம் தீயவாய் அழிக்கும்; தீயவும் நல்லவாம் - அதுவேயன்றித் தீயவை தாமும் நல்லவாய் ஆக்கும் ஊழ்வயத்தான். விளக்கம் ('நல்லவை' 'தீயவை' என்பன காலமும், இடனும், கருவியும், தொழிலும் முதலாயவற்றை. 'ஊழான்' என்பது அதிகாரத்தால் பெற்றாம். அழிக்கும் ஊழ் உற்றவழிக் காலம் முதலிய நல்லவாயினும் அழியும்; ஆக்கும் ஊழ் உற்றவழி அவை தீயவாயினும் ஆகும் என்பதாயிற்று. ஆகவே, காலம் முதலிய துணைக்காரணங்களையும் வேறுபடுக்கும் என்பது பெற்றாம்.)
English explanation
All things that good appear will oft have ill success;All evil things prove good for gain of happiness
In the acquisition of property, every thing favourable becomes unfavourable, and (on the other hand) everything unfavourable becomes favourable, (through the power of fate).