அதிகாரம் / Chapter 15
திருக்குறள் 143
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்தீமை புரிந்து ஒழுகு வார்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
தம்மைத் தெளிந்தா ரில்லின்கண்ணே தீமையைப் பொருந்தி ஒழுகுவார் மெய்யாகச் செத்தாரின் வேறல்லர். இஃது அறம் பொருளின்பம் எய்தாமையின் பிணத்தோடொப்ப ரென்றது.
பரிமேலழகர்
மன்ற தெளிந்தார் இல் தீமை புரிந்து ஒழுகுவார்-தம்மை ஐயுறாதார் இல்லாள் கண்ணே பாவஞ்செய்தலை விரும்பி ஒழுகுவார்; விளிந்தாரின் வேறு அல்லர்-உயிருடையவரேனும் இறந்தாரே ஆவர். விளக்கம் (அறம் பொருள் இன்பங்கள் ஆகிய பயன் உயிர் எய்தாமையின், 'விளிந்தாரின் வேறல்லர்' என்றும், அவர் தீமை புரிந்து ஒழுகுவது இல்லுடையவரது தெளிவு பற்றியாகலின், 'தெளிந்தார் இல்' என்றும் கூறினார்.)
English explanation
They're numbered with the dead, e'en while they live, -how otherwise?With wife of sure confiding friend who evil things devise
Certainly they are no better than dead men who desire evil towards the wife of those who undoubtingly confide in them.