அதிகாரம் / Chapter 15
திருக்குறள் 142
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடைநின்றாரின் பேதையார் இல்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
காமத்தின்கண்ணே நின்றார் எல்லாரினும், பிறனொருவன் கடைத்தலை பற்றி நின்றவர்களைப் போல் அறியாதாரில்லை.
பரிமேலழகர்
அறன்கடை நின்றாருள் எல்லாம் - காமம் காரணமாகப் பாவத்தின்கண் நின்றார் எல்லாருள்ளும்; பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்-பிறன் இல்லாளைக் காதலித்து, அவன் வாயிற்கண் சென்று நின்றார் போலப் பேதையார் இல்லை. விளக்கம் (அறத்தின் நீக்கப்பட்டமையின் 'அறன்கடை' என்றார். அறன்கடை நின்ற பெண்வழிச் செல்வாரும், வரைவின் மகளிரோடும் இழிகுல மகளிரோடும் கூடி இன்பம் நுகர்வாரும் போல அறமும் பொருளும் இழத்தலே அன்றிப், பிறன்கடை நின்றார் அச்சத்தால் தாம் கருதிய இன்பமும் இழக்கின்றார் ஆகலின், 'பேதையார் இல்' என்றார்; எனவே இன்பமும் இல்லை என்பது பெறப்பட்டது.)
English explanation
No fools, of all that stand from virtue's pale shut out,Like those who longing lurk their neighbour's gate without
Among all those who stand on the outside of virtue, there are no greater fools than those who stand outside their neighbour's door.