அதிகாரம் / Chapter 44

திருக்குறள் 437

செயற்பால செய்யா திவறியான் செல்வம்உயற்பால தன்றிக் கெடும்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

பொருளால் தனக்குச் செய்துகொள்ளப்படு மவற்றைச் செய்து கொள்ளாது. அதன்கண் பற்றுள்ளஞ் செய்தானது செல்வம் பின் உளதாம் பான்மைத்தன்றி வறிதே கெடும்.

பரிமேலழகர்

செயற்பால செய்யாது இவறியான் செல்வம் - பொருளாள் தனக்குச் செய்து கொள்ளப்படும் அவற்றைச் செய்து கொள்ளாது அதன்கண் பற்றுள்ளம் செய்தானது செல்வம்; உயற்பாலது அன்றிக் கெடும் - பின் உளதாம்பான்மைத்து அன்றி வறிதே கெடும். விளக்கம் (செயற்பால் ஆவன : அறம் பொருள் இன்பங்கள். பொருளாற் பொருள் செய்தலாவது; பெருக்குதல்: அது "பொன்னின் ஆகும் பொருபடை; அப்படை, தன்னின் ஆகும் தரணி; தரணியில், பின்னை ஆகும் பெரும்பொருள்; அப்பொருள், துன்னும் காலைத் துன்னாதன இல்லையே" (சீவ. விமலை. 35) என்பதனான் அறிக. அறம் செய்யாமையானும் பொருள் பெருக்காமையானும் 'உயற்பாலதன்றி' என்றும், இன்பப்பயன் கொள்ளாமையின், 'கெடும்' என்றும் கூறினார். 'உயற் பாலதின்றி' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)

English explanation

Who leaves undone what should be done, with niggard mind,His wealth shall perish, leaving not a wrack behind

The wealth of the avaricious man, who does not expend it for the purposes for which he ought to expend it will waste away and not continue.