அதிகாரம் / Chapter 73

திருக்குறள் 727

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்துஅஞ்சு மவன்கற்ற நூல்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

பகையின்கண் அஞ்சுமவன் பிடித்த கூர்வாள் போலும், அவையின்கண் அஞ்சுமவன் கற்றநூலும்.மேல் பயனில்லை யென்றார் இங்குப் பயனில்லாதவாறு காட்டினார்.

பரிமேலழகர்

பகையத்துப் பேடி கை ஔÿபுள்ளிÿவாள் - எறியப்படும் பகை நடுவண் அதனை அஞ்சும் பேடி பிடித்த கூர்வாளை ஒக்கும்; அவையகத்து அஞ்சுமவன் கற்ற நூல் - சொல்லப்படும் அவை நடுவண் அதனை அஞ்சுமவன் கற்ற நூல். விளக்கம் (பேடி: பெண் இயல்பு மிக்கு ஆண் இயல்பும் உடையவள். களமும் வாய்த்துத் தானும் நன்றாய் இருந்ததேயாயினும் பிடித்தவள் குற்றத்தால் வாள் சிறப்பின்றாயினாற் போல, அவையும் வாய்த்துத் தானும் நன்றாய் இருந்ததேயாயினும், கற்றவன் குற்றத்தால் நூல் சிறப்பின்றாயிற்று.)

English explanation

As shining sword before the foe which 'sexless being' bears,Is science learned by him the council's face who fears

The learning of him who is diffident before an assembly is like the shining sword of an hermaphrodite in the presence of his foes.