அதிகாரம் / Chapter 55
திருக்குறள் 541
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்தேர்ந்துசெய் வஃதே முறை.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
ஒருவன் செய்த குற்றத்தை ஆராய்ந்து நட்டோரென்று கண்ணோடாது தலைமையைப் பொருந்தி யாவர்மாட்டும் குற்றத்திற்குத் தக்க தண்டத்தை நூல்முகத்தாலாராய்ந்து அதன் வழியே செய்வது முறையென்று சொல்லப்படும். யார்மாட்டும் என்றது தன்சுற்றமாயினு மென்றது.
பரிமேலழகர்
ஓர்ந்து-தன்கீழ் வாழ்வார் குற்றம் செய்தால் அக்குற்றத்தை நாடி; யார்மாட்டும் கண்ணோடாது-யாவர் மாட்டும் கண்ணோடாது; இறை புரிந்து -நடுவு நிலைமையைப் பொருந்தி; தேர்ந்து-அக்குற்றத்திற்குச் சொல்லிய தண்டத்தை நூலோரோடும் ஆராய்ந்து; செய்வஃதே முறை- அவ்வளவிற்றாகச் செய்வதே முறையாம். விளக்கம் [நடுவு நிற்றல் இறைக்கு இயல்பு ஆகலின், அதனை 'இறை' என்றும், உயிரினும் சிறந்தார்கண்ணும் என்பார், 'யார் மாட்டும்' என்றும் கூறினார். இறைமை 'இறை' எனவும், செய்வது 'செய்வஃது' எனவும் நின்றன. இதனான் செங்கோன்மையது இலக்கணம் கூறப்பட்டது.]
English explanation
Search out, to no one favour show; with heart that justice lovesConsult, then act; this is the rule that right approves
To examine into (the crimes which may be committed), to show no favour (to any one), to desire to act with impartiality towards all, and to inflict (such punishments) as may be wisely resolved on, constitute rectitude.