அதிகாரம் / Chapter 66

திருக்குறள் 658

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்முடிந்தாலும் பீழை தரும்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

நல்லோரால் கடியப்பட்டவற்றைக் கடிந்து நீக்காது செய்யுமவர்க்கு அவ்வினைகள் தாம் கருதியவாற்றான் முடிந்த பின்பும் பீடையைத் தரும். இது நன்மையல்லாத வினையைச் செயின், அது தீமை தருமென்றது. அவை பின்பு காட்டப்படும்.

பரிமேலழகர்

கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு - நூலோர் கடிந்த வினைகளைத் தாமும் கடிந்தொழியாது பொருள் நோக்கிச் செய்த அமைச்சர்க்கு; அவைதான் முடிந்தாலும் பீழை தரும் - அவை தூய அன்மையின் முடியா; ஒருவாற்றான் முடியினும், பின் துன்பத்தையே கொடுக்கும். விளக்கம் [முடித்தல் - கருதிய பொருள் தருதல். பீழை தருதலாகிய பொருளின் தொழில் அதற்குக் காரணமாய வினைகள் மேல் ஏற்பட்டது.]

English explanation

To those who hate reproof and do forbidden thingWhat prospers now, in after days shall anguish bring

The actions of those, who have not desisted from doing deeds forbidden (by the great), will, even if they succeed, cause them sorrow.