அதிகாரம் / Chapter 63

திருக்குறள் 623

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்குஇடும்பை படாஅ தவர்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

துன்பத்திற்குத் துன்பத்தைச் செய்வார், அத் துன்பத்திற்குத் துன்ப முறாதவர். இது பொறுக்க வேண்டுமென்றது. இவை மூன்றும் பொதுவாகக் கூறப்பட்டன.

பரிமேலழகர்

இடும்பைக்கு இடும்பை படாஅதவர்-வினை செய்யுங்கால் அதற்கு இடையே வந்த துன்பத்திற்கு வருந்தாதவர்; இடும்பைக்கு இடும்பை படுப்பர்-அத்துன்பந்தனக்குத் தாம் துன்பம் விளைப்பர். விளக்கம் (வருந்துதல்-இளைத்துவிட நினைத்தல். மனத்திட்பமுடையராய் விடாது முயலவே வினைமுற்றுப் பெற்றுப் பயன்படும். படவே, எல்லா இடும்பையும் இலவாம். ஆகலின், 'இடும்பைக்கு இடும்பை படுப்பர்' என்றார். வருகின்ற பாட்டு இரண்டினும் அதற்கு இவ்வாறே கொள்க. சொற்பொருட் பின்வருநிலை.)

English explanation

Who griefs confront with meek, ungrieving heart,From them griefs, put to grief, depart

They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrow.