அதிகாரம் / Chapter 96
திருக்குறள் 960
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்வேண்டுக யார்க்கும் பணிவு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
ஒருவர் தமக்கு நலத்தை வேண்டுவாராயின் நாணுடமையை விரும்புக: அவ்வண்ணமே குலத்தை விரும்புவாராயின் யாவர்மாட்டும் தாழ்ந்தொழுகுதலை விரும்புக. இது பணிந்தொழுக வேண்டு மென்றது.
பரிமேலழகர்
நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் - ஒருவன் தனக்கு நலனுடைமையை வேண்டுவானாயின், தான் நாணுடையன் ஆதலை வேண்டுக; குலம் வேண்டின் யார்க்கும் பணிவு வேண்டுக - குலனுடைமையை வேண்டுவானாயின், பணியப்படுவார் யாவர் மாட்டும் பணிதலை வேண்டுக. விளக்கம் (நலம் - புகழ் புண்ணியங்கள். 'வேண்டும்' என்பது, விதிப் பொருட்டாய் நின்றது. 'வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்" (தொல்.சொல்.கிளவி.33) என்புழிப்போல. "அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம்முன்னோர், தந்தைதாய் என்றிவர்" எல்லாரும் அடங்க, 'யார்க்கும்' என்றார். பணிவு - இருக்கை எழலும் எதிர் செலவும் முதலாயின. இவை இரண்டு பாட்டானும் குடிமைக்கு வேண்டுவன கூறப்பட்டன.)
English explanation
Who seek for good the grace of virtuous shame must know;Who seek for noble name to all must reverence show
He who desires a good name must desire modesty; and he who desires (the continuance of) a family greatness must be submissive to all.