அதிகாரம் / Chapter 13

திருக்குறள் 124

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்மலையினும் மாணப் பெரிது.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

தனது நிலையிற் கெடாதே யடங்கினவனது உயர்ச்சி மலையினும் மிகப் பெரிது. நிலை- வன்னாச்சிரம தன்மம்.

பரிமேலழகர்

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் - இல்வாழ்க்கையாகிய தன் நெறியின் வேறுபடாது நின்று அடங்கியவனது உயர்ச்சி; மலையினும் மானப் பெரிது-மலையின் உயர்ச்சியினும் மிகப் பெரிது. விளக்கம் (திரியாது அடங்குதல்-பொறிகளால் புலன்களை நுகராநின்றே அடங்குதல். 'மலை' ஆகுபெயர்.)

English explanation

In his station, all unswerving, if man self subdue,Greater he than mountain proudly rising to the view

More lofty than a mountain will be the greatness of that man who without swerving from his domestic state, controls himself.