அதிகாரம் / Chapter 77

திருக்குறள் 764

அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்தவன்க ணதுவே படை.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

கெடுதலின்றிக் கீழறுக்கப்படாததாகிக் குலத்தின் வழிவந்த அஞ்சாமையையுடையதே படையாவது. வழிவருதல்- வீரன்மகன் வீரனாகுதல். இது படையினது நன்மைகூறிற்று.

பரிமேலழகர்

அழிவு இன்றி-போரின்கண் கெடுதல் இன்றி; அறை போகாதாகி-பகைவரால் கீழறுக்கப்படாததாய்; வழிவந்த வன்கணதுவே படை-தொன்று தொட்டு வந்த தறுகண்மையை உடையதே அரசனுக்குப் படையாவது. விளக்கம் (அழிவின்மையான் மற மானங்கள் உடைமையும், அறை போகாமையான் அரசன்மாட்டு அன்புடைமையும் பெறப்பட்டன. வழி வந்த வன்கண்மை: கல்நின்றான் எந்தை கணவன் களப்பட்டான், முன்னின்று மொய்யவிந்தார் என்ஐயர்-பின்னின்று, கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி எய்போற் கிடந்தான் என ஏறு," [பு.வெ. மா. வாகை, 22] என்பதனான் அறிக. குற்றியலுகரத்தின் முன்னர் உடம்படுமெய் விகாரத்தான் வந்தது. இது வருகின்ற பாட்டுள்ளும் ஒக்கும்.)

English explanation

That is a host, by no defeats, by no desertions shamed,For old hereditary courage famed

That indeed is an army which has stood firm of old without suffering destruction or deserting (to the enemy).