அதிகாரம் / Chapter 117

திருக்குறள் 1167

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்யாமத்தும் யானே உளேன்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

காமமாகிய பெருக்காற்றினை நீந்திக் கரை காண்கின்றிலேன். அரையிருள் யாமத்தினும் உறங்காது யானேயுளேன் மற்று உறங்காதாரில்லை இதுகாதலர் குறித்தநாள் வருந்துணையும் ஆற்றுமாறு என்னையென்று தலைமகள் தன்னுள்ளே சொல்லியது.

பரிமேலழகர்

'காமக்கடல் நிறை புணையாக நீந்தப்படும்,' என்றாட்குச் சொல்லியது. காமக் கடும்புனல் நீந்திக் கரை காணேன் - காமமாகிய கடல் நீந்தாதேனல்லேன்; நீந்தியும் அதற்குக் கரை காண்கின்றிலேன்; யாமத்தும் யானே உளேன் - அக்காணாமைக் காலந்தான் எல்லோரும் துயிலும் அரையிருளாயிற்று; இருட்கண்ணும் அதற்கு ஒரு துணையின்றியானேயாயினேன்; ஆயும் இறந்துபட்டுய்ந்து போகாது உளனாகாநின்றேன்; ஈதொரு தீவினைப்பயன் இருந்தவாறென் விளக்கம் (கடுமை, ஈண்டு மிகுதிக்கண் நின்றது. உம்மை முன்னும் கூட்டப்பட்டது. 'யானே ஆயினேன்' என்பது 'நீ துணையாயிற்றிலை' என்னும் குறிப்பிற்று.)

English explanation

I swim the cruel tide of love, and can no shore descry,In watches of the night, too, 'mid the waters, only I

I have swam across the terrible flood of lust, but have not seen its shore; even at midnight I am alone; still I live.