அதிகாரம் / Chapter 103

திருக்குறள் 1021

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்பெருமையின் பீடுடையது இல்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

ஒருவன் கருமஞ்செய்தற்கு நான் ஒழியே னென்று சொல்லுகின்ற பெருமைபோலப் பெருமையுடையது பிறிது இல்லை.

பரிமேலழகர்

கருமம் செயக் கைதூவேன் என்னும் பெருமையின்-தன் குடி செய்தற்பொருட்டுத் தொடங்கிய கருமம் முடியாமையின் எண்ணி கருமம் செய்தற்கு யான் கையொழியேன் என்னும் ஆள்வினைப்பெருமை போல; ஒருவன் பீடு உடையது இல் - ஒருவனுக்கு மேம்பாடுடைய பெருமை பிறிது இல்லை. விளக்கம் ('குடி செயற்கு என்பது அதிகாரத்தான் வந்தது. பலவகைத்தாய கருமச் செயலாற் செல்வமும் புகழும் எய்திக் குடி உயரும் ஆகலின், பீடுடையது இல்' என்றார். குடி செய்தற் கருமமே நடத்தலால் 'தன் கருமஞ் செய்ய' என்றும், 'பிறர் கருமஞ் செய்ய' என்றும், உரைப்பாரும் உளர். தன் கருமமும் அதுவேயாகலானும், பிறர் ஏவல் செய்தல் தலைமையன்மையானும், அவை உரையன்மை அறிக.)

English explanation

Who says 'I'll do my work, nor slack my hand',His greatness, clothed with dignity supreme, shall stand

There is no higher greatness than that of one saying. I will not cease in my effort (to raise my family).