அதிகாரம் / Chapter 4
திருக்குறள் 32
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனைமறத்தலின் ஊங்கில்லை கேடு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
ஒருவனுக்கு அறஞ் செய்தலின் மேற்பட்ட ஆக்கமுமில்லை; அதனைச் செய்யாமையின் மேற்பட்ட கேடுமில்லை. இஃது அறஞ் செய்யாக்காற் கேடுவருமென்று கூறிற்று.
பரிமேலழகர்
அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை-ஒருவனுக்கு அறஞ்செய்தலின் மேற்பட்ட ஆக்கமும் இல்லை;அதனை மறத்தலின் ஊங்கு கேடு இல்லை-அதனை மயக்கத்தான் மறத்தலின் மேற்பட்ட கேடும் இல்லை. விளக்கம் (அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை' என மேற்சொல்லியவதனையே அநுவதித்தார், அதனால் கேடு வருதல் கூறுதற் பயன் நோக்கி. இதனான் அது செய்யாவழிக் கேடு வருதல் கூறப்பட்டது.)
English explanation
No greater gain than virtue aught can cause;No greater loss than life oblivious of her laws
There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of it.