அதிகாரம் / Chapter 4

திருக்குறள் 33

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதேசெல்லும்வாய் எல்லாஞ் செயல்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

தமக்கியலுந் திறத்தானே, அறவினையை ஒழியாதே செய்யலாமிடமெல்லாஞ் செய்க. இயலுந்திறமென்பது மனமொழிமெய்களும் பொருளும். செல்லும்வாய் என்பது அறஞ்செய்தற் கிடமாகிய பல விடங்களும் ஒழியாதென்றது நாடோறு மென்றது. இஃது அறம் வலி தென்றறிந்தவர்கள் இவ்வாறு செய்க வென்றது.

பரிமேலழகர்

ஒல்லும் வகையான்-தத்தமக்கு இயலுந்திறத்தான்; அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாம் செயல்-அறம் ஆகிய நல்வினையை ஒழியாதே அஃது எய்தும் இடத்தான் எல்லாம் செய்க. விளக்கம் (இயலுந்திறம் ஆவது-இல்லறம் பொருள் அளவிற்கு ஏற்பவும், துறவறம் யாக்கை நிலைக்கு ஏற்பவும் செய்தல். ஓவாமை, இடைவிடாமை. எய்தும் இடம் ஆவன: மனம் வாக்குக் காயம் என்பன. அவற்றால் செய்யும் அறங்கள்ஆவன: முறையே நற்சிந்தையும் நற்சொல்லும் நற்செயலும் என இவை. இதனான் அறஞ்செய்யும் ஆறு கூறப்பட்டது.)

English explanation

To finish virtue's work with ceaseless effort strive,What way thou may'st, where'er thou see'st the work may thrive

As much as possible, in every way, incessantly practise virtue.