அதிகாரம் / Chapter 43
திருக்குறள் 421
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்உள்ளழிக்க லாகா அரண்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
ஒருவனுக்குக் குற்றமறைக்குங் கருவியாவது அறிவு: பகைவராலும் உட்புகுந்து அழிக்கலாகா அரணும் அதுதானே. இது தனக்குள்ள குற்றத்தை மறைக்கு மென்றும் பிறரால் வருந்தீமையைக் காக்குமென்றும் அறிவினாலாம் பயன் கூறிற்று.
பரிமேலழகர்
அறிவு அற்றம் காக்கும் கருவி - அரசர்க்கு அறிவு என்பது இறுதி வாராமல் காக்கும் கருவியாம்; செறுவார்க்கு அழிக்கலாகா உள் அரணும் - அதுவேயுமன்றிப் பகைவர்க்கும் அழிக்கலாகாத உள்ளரணும் ஆம். விளக்கம் (காத்தல் - முன் அறிந்து பரிகரித்தல். உள்ளரண் - உள்ளாய அரண்; உள்புக்கு அழிக்கலாகா அரண் என்றும் ஆம். இதனால், அறிவினது சிறப்புக் கூறப்பட்டது.)
English explanation
True wisdom wards off woes, A circling fortress high;Its inner strength man's eager foes Unshaken will defy
Wisdom is a weapon to ward off destruction; it is an inner fortress which enemies cannot destroy.