அதிகாரம் / Chapter 43
திருக்குறள் 422
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇநன்றின்பால் உய்ப்ப தறிவு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
உள்ளஞ் சென்ற விடத்தே உடம்பையுஞ் செல்லவிடாது, தீமையை நீக்கி நன்மைப் பகுதியிலே செலுத்துவது அறிவாவது. இது காம நுகர்ச்சியின்கண் பழியும் பாவமும் பொருட்கேடும் வாராமற் செலுத்துவது அறிவென்றது.
பரிமேலழகர்
சென்ற இடத்தால் செலவிடாது - மனத்தை அதுசென்ற புலத்தின்கண் செல்ல விடாது; தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு - அப்புலத்தின் நன்மை தீமைகளை ஆராய்ந்து தீயதனின்நீக்கி நல்லதன்கண் செலுத்துவது அறிவு. விளக்கம் (வினைக்கு ஏற்ற செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. ஓசை ஊறு, ஒளி, சுவை, நாற்றம் எனப் புலம் ஐந்தாயினும், ஒரு காலத்து ஒன்றின்கண் அல்லது சொல்லாமையின், 'இடத்தால்' என்றார். 'விடாது' என்பது கடைக் குறைந்து நின்றது. குதிரையை நிலமறிந்து செலுத்தும் வாதுவன்போல வேறாக்கி மனத்தைப் புலமறிந்து செலுத்துவது அறிவு என்றார், அஃது உயிர்க்குணம் ஆகலான்.)
English explanation
Wisdom restrains, nor suffers mind to wander where it would;From every evil calls it back, and guides in way of good
Not to permit the mind to go where it lists, to keep it from evil, and to employ it in good, this is wisdom.