அதிகாரம் / Chapter 53

திருக்குறள் 526

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்மருங்குடையார் மாநிலத்து இல்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

மிகக் கொடுக்க வல்லவனாய்ச் சினத்தையும் விரும்பானாயின் அவனின் துணையுடையார் பெரிய உலகின்கண் இல்லை. இது மேற்கூறிய அளவின்றி யிவ்வாறு செய்யின் துணை யுடையானா மென்றது.

பரிமேலழகர்

பெருங்கொடையான் வெகுளி பேணான் - ஒருவன் மிக்க கொடையை உடையனுமாய் வெகுளியை விரும்பானுமாயின்; அவனின் மருங்கு உடையார் மாநிலத்து இல் - அவன்போலக் கிளை உடையார் இவ்வுலகத்து இல்லை. விளக்கம் [மிக்க கொடை: ஒன்றானும் வறுமை எய்தாமல் கொடுத்தல், விரும்பாமை: 'இஃது அரசற்கு வேண்டுவதொன்று,' என்று அளவிறந்து செய்யாமை.]

English explanation

Than one who gifts bestows and wrath restrains,Through the wide world none larger following gains

No one, in all the world, will have so many relatives (about him), as he who makes large gift, and does not give way to anger.