{
  "source": {
    "url": "https://github.com/antonykanagu/thirukkural-okf",
    "commit": "6f22bbc35ead256295df1262f6628235772becbb",
    "rights": "Classical source texts are public domain; compilation CC0. Only Manakkudavar and Pope fields are included. No modern paraphrases or generated tags are imported."
  },
  "entries": [
    {
      "number": 1,
      "lines": [
        "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி",
        "பகவன் முதற்றே உலகு."
      ],
      "manakkudavar": "எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து.",
      "pope": "A, as its first of letters, every speech maintains;The \"Primal Deity\" is first through all the world's domains",
      "sourceFile": "0001.md",
      "sourceSha256": "5639a05f370dbdd5d2caf6a2aabd4a7b9612e93c0388b810066db05e2a587faf"
    },
    {
      "number": 2,
      "lines": [
        "கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்",
        "நற்றாள் தொழாஅர் எனின்."
      ],
      "manakkudavar": "மேற்கூறிய வெழுத்தினா னாகிய சொற்க ளெல்லாங் கற்றதனானாகிய பயன் வேறியாது? விளங்கின வறிவினை யுடையவன் திருவடியைத் தொழாராயின். சொல்லினானே பொருளறியப்படுமாதலான் அதனைக் கற்கவே மெய்யுணர்ந்து வீடுபெறலாகும். மீண்டும் வணக்கம் கூறியது எற்றுக்கென்றாற்கு, இஃது அதனாற் பயனிது வென்பதூஉம், வேறுவேறு பயனில்லையென்பதூஉம் கூறிற்று. `கற்பக் கழிமட மஃகும் என்றாருமுளர்.",
      "pope": "No fruit have men of all their studied lore,Save they the 'Purely Wise One's' feet adore",
      "sourceFile": "0002.md",
      "sourceSha256": "980b2d95d03ac1bfe727349d488a20ff2c08000965c13b6c161f207386512212"
    },
    {
      "number": 3,
      "lines": [
        "மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்",
        "நிலமிசை நீடுவாழ் வார்."
      ],
      "manakkudavar": "மலரின்மேல் நடந்தானது மாட்சிமைப்பட்ட திருவடியைச் சேர்ந்தவரன்றே, நிலத்தின்மேல் நெடுங்காலம் வாழ்வார். 'நிலம்' என்று பொதுப்படக் கூறியவதனான் இவ்வுலகின் கண்ணும் மேலுலகின்கண்ணுமென்று கொள்ளப்படும். தொழுதாற் பயனென்னையென்றாற்கு, போகநுகர்தலும் வீடுபெறலுமென்று கூறுவார் முற்படப் போகநுகர்வாரென்று கூறினர்.",
      "pope": "His feet, 'Who o'er the full-blown flower hath past,' who gainIn bliss long time shall dwell above this earthly plain",
      "sourceFile": "0003.md",
      "sourceSha256": "81531ccfab011293212e65d76dab64500fbf0ae5fea7100f83027a0d6e5fd0c3"
    },
    {
      "number": 4,
      "lines": [
        "வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு",
        "யாண்டும் இடும்பை இல."
      ],
      "manakkudavar": "இன்பமும் வெகுளியு மில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர் எவ்விடத்து மிடும்பை யில்லாதவர்.பொருளுங் காமமுமாகாவென்றற்கு \"வேண்டுதல் வேண்டாமையிலான்\" என்று பெயரிட்டார்.",
      "pope": "His foot, 'Whom want affects not, irks not grief,' who gainShall not, through every time, of any woes complain",
      "sourceFile": "0004.md",
      "sourceSha256": "857ad457da3e6cf83645ec3448dfeb5d1b57eb7943f9c7fc87e86e0bf2b77e56"
    },
    {
      "number": 5,
      "lines": [
        "இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்",
        "பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு."
      ],
      "manakkudavar": "மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.",
      "pope": "The men, who on the 'King's' true praised delight to dwell,Affects not them the fruit of deeds done ill or well",
      "sourceFile": "0005.md",
      "sourceSha256": "52c5da12a6dcd5d3ce5f37c6fb5ee4c5b19ffc953bbe1ad7e26046efdf21017c"
    },
    {
      "number": 6,
      "lines": [
        "பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க",
        "நெறிநின்றார் நீடுவாழ் வார்."
      ],
      "manakkudavar": "மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐம் பொறிகளின் வழியாக வரும் ஊறு சுவை யொளி நாற்ற மோசை யென்னு மைந்தின்கண்ணுஞ் செல்லும் மன நிகழ்ச்சியை அடக்கினானது பொய்யற்ற வொழுக்க நெறியிலே நின்றாரன்றே நெடிது வாழ்வார்?.இது சாவில்லையென்றது.",
      "pope": "Long live they blest, who 've stood in path from falsehood freed;His, 'Who quenched lusts that from the sense-gates five proceed'",
      "sourceFile": "0006.md",
      "sourceSha256": "5b45b7c48e748867ad329d0c9c411b7c64f581ac4d1f1fc20f213b19040923a3"
    },
    {
      "number": 7,
      "lines": [
        "தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்",
        "மனக்கவலை மாற்றல் அரிது."
      ],
      "manakkudavar": "பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவ ரதனு ளழுந்துவார்.",
      "pope": "Unless His foot, 'to Whom none can compare,' men gain,'Tis hard for mind to find relief from anxious pain",
      "sourceFile": "0007.md",
      "sourceSha256": "f6c1284dd574e83c400ad851166448148159b4084ec9b9a94c64248861f7a3ef"
    },
    {
      "number": 8,
      "lines": [
        "அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்",
        "பிறவாழி நீந்தல் அரிது."
      ],
      "manakkudavar": "அறமாகிய கடலையுடைய அந்தணனது திருவடியைச் சேர்ந்தவர்க்கல்லது, ஒழிந்த பேர்களுக்குப் பிறவாழியை நீந்தலாகாது. அது பெறுதலரிது. இது காமமும் பொருளும் பற்றி வரும் அவலங் கெடுமென்றது.",
      "pope": "Unless His feet 'the Sea of Good, the Fair and Bountiful,' men gain,'Tis hard the further bank of being's changeful sea to attain",
      "sourceFile": "0008.md",
      "sourceSha256": "d17582d6e05d339cde5dd30b6102a9d1a8f87c98eb5cba4eb8eaba69ae25bc6a"
    },
    {
      "number": 9,
      "lines": [
        "கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்",
        "தாளை வணங்காத் தலை."
      ],
      "manakkudavar": "அறிவில்லாத பொறிகளையுடைய பாவைகள் போல, ஒரு குணமுமுடையனவல்ல; எட்டுக் குணத்தினை யுடையவன் திருவடியினை வணங்காத தலையினையுடைய உடம்புகள். உயிருண்டாகில் வணங்குமென் றிழித்து உடம்புக ளென்றார்.",
      "pope": "Before His foot, 'the Eight-fold Excellence,' with unbent head,Who stands, like palsied sense, is to all living functions dead",
      "sourceFile": "0009.md",
      "sourceSha256": "cb7d9f0b42ab2ad1578543e6f734030dbd05d67fbb45e50905fa2b001a9adb6d"
    },
    {
      "number": 10,
      "lines": [
        "பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்",
        "இறைவன் அடிசேரா தார்."
      ],
      "manakkudavar": "பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவ ரதனு ளழுந்துவார்.",
      "pope": "They swim the sea of births, the 'Monarch's' foot who gain;None others reach the shore of being's mighty main",
      "sourceFile": "0010.md",
      "sourceSha256": "959741a218f5aaa3089e6e55ea0bdf8813d0d89208ae5c0e800ae573834fe931"
    },
    {
      "number": 11,
      "lines": [
        "வான்நின்று உலகம் வழங்கி வருதலால்",
        "தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று."
      ],
      "manakkudavar": "மழைவளம் நிலை நிற்றலானே உலகநடை தப்பாது வருதலான், அம்மழைதான் உலகத்தார் அமுதமென்றுணரும் பகுதியது. இஃது அறம் பொரு ளின்பங்களை யுண்டாக்குதலானும், பலவகைப்பட்ட வுணவுகளை நிலை நிறுத்தலானும். இம்மழையினை மற்றுள்ள பூத மாத்திரமாக நினைக்கப் படாதென்ற நிலைமை கூறிற்று.",
      "pope": "The world its course maintains through life that rain unfailing gives;Thus rain is known the true ambrosial food of all that lives",
      "sourceFile": "0011.md",
      "sourceSha256": "2e97f347de82953c1072395a5822150d7f17eb296f65696956ddf224044c2569"
    },
    {
      "number": 12,
      "lines": [
        "துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்",
        "துப்பாய தூஉம் மழை."
      ],
      "manakkudavar": "பிறிதொன்றுண்பார்க்கு அவருண்டற்கான வுணவுகளையு முண்டாக்கித் தன்னை யுண்பார்க்குத் தானே உணவாவதும் மழையே. இது பசியைக் கெடுக்கு மென்றது.",
      "pope": "The rain makes pleasant food for eaters rise;As food itself, thirst-quenching draught supplies",
      "sourceFile": "0012.md",
      "sourceSha256": "c57dcbdfdf9a5ad69d19ee9693e84f229045d9f08fb6b46d938ed2a3e6537501"
    },
    {
      "number": 13,
      "lines": [
        "விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து",
        "உள்நின்று உடற்றும் பசி."
      ],
      "manakkudavar": "வானமானது நிலைநிற்கப் பொய்க்குமாயின், விரிந்த நீரினையுடைய அகன்ற வுலகத்திடத்தே பசியானது நின்று வருத்தாநிற்கும், எல்லாவுயிர்களையும். பொய்த்தல்- தன்றொழில் மறுத்தல். இது பசி என்று பொதுப்படக் கூறியவதனான் மக்களும் விலங்கும் பொருளுங் காமமுந் துய்க்கலாற்றாது துன்ப முறுமென்று கூறிற்று.",
      "pope": "If clouds, that promised rain, deceive, and in the sky remain,Famine, sore torment, stalks o'er earth's vast ocean-girdled plain",
      "sourceFile": "0013.md",
      "sourceSha256": "5d06db94f4d4875975c01ce69e2d20e2493c70e96771c9bb488a6a62ac7cac4a"
    },
    {
      "number": 14,
      "lines": [
        "ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்",
        "வாரி வளங்குன்றிக் கால்."
      ],
      "manakkudavar": "ஏரினுழுதலைத் தவிர்வாருழவர், புயலாகிய வாரியினுடைய வளங்குறைந்தகாலத்து. இஃது உழவாரில்லை யென்றது.",
      "pope": "If clouds their wealth of waters fail on earth to pour,The ploughers plough with oxen's sturdy team no more",
      "sourceFile": "0014.md",
      "sourceSha256": "846486e9b7fd0b9f7760e8f9c14860fcc8c0fda27eacb539dc4a6da3c3c3ae32"
    },
    {
      "number": 15,
      "lines": [
        "கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே",
        "எடுப்பதூஉம் எல்லாம் மழை."
      ],
      "manakkudavar": "பெய்யாது நின்று எல்லாப் பொருளையுங் கெடுப்பதும் அவை கெடப் பட்டார்க்குத் துணையாய்த் தான் பெய்து பொருள்களெல்லாவற்றையும் அவ்விடத்தே யுண்டாக்குவதும் மழை. இஃது இரண்டினையுஞ் செய்யவற்றென்றவாறு.",
      "pope": "'Tis rain works all: it ruin spreads, then timely aid supplies;As, in the happy days before, it bids the ruined rise",
      "sourceFile": "0015.md",
      "sourceSha256": "e9d5fc92e00e8ab22e50291a150ce3676ce4ac706c4dbcfada4ff21c51a4c57f"
    },
    {
      "number": 16,
      "lines": [
        "விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே",
        "பசும்புல் தலைகாண்பு அரிது."
      ],
      "manakkudavar": "வானின்று துளிவீழினல்லது அவ்விடத்துப் பசுத்த புல்லினது தோற்றமுங் காண்டல் அரிது. ஆங்கென்பதனை அசையாக்கினு மமையும். இஃது ஓரறிவுயிருங் கெடுமென்றது.",
      "pope": "If from the clouds no drops of rain are shed'Tis rare to see green herb lift up its head",
      "sourceFile": "0016.md",
      "sourceSha256": "2e69b56af1e32ed59e22bf1a0ee7695b17b1b3e2ee5ddfceeeb63437ae40f6bf"
    },
    {
      "number": 17,
      "lines": [
        "நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி",
        "தான்நல்கா தாகி விடின்."
      ],
      "manakkudavar": "நிலமேயன்றி நெடியகடலும் தனது தன்மை குறையும், மின்னி மழையானது பெய்யாவிடின். தடிந்தென்பதற்கு, கூறுபடுத்து என்று பொருளுரைப்பாரு முளர். இது நீருள் வாழ்வனவும் படுவனவுங் கெடுமென்றது. இவை நான்கினானும் பொருட்கேடு கூறினார், பொருள்கெட இன்பங்கெடு மென்பதனால் இன்பக்கேடு கூறிற்றிலர்.",
      "pope": "If clouds restrain their gifts and grant no rain,The treasures fail in ocean's wide domain",
      "sourceFile": "0017.md",
      "sourceSha256": "7106be91be94a68d1b6814786598aa2fb976499e19047e0e9ac01dbddc255b0b"
    },
    {
      "number": 18,
      "lines": [
        "சிறப்பொடு பூசனை செல்லாது வானம்",
        "வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு."
      ],
      "manakkudavar": "சிறப்புச் செய்யப்படுகின்ற விழவு பூசனை நடவாது, வானம் புலருமாகில் தேவர்களுக்கும் இவ்வுலகின்கண். மழைபெய்யாக்கால் வருங் குற்றங் கூறுவார் முற்பட நான்குவகைப்பட்ட அறங்களில் பூசை கெடுமென்றார்.",
      "pope": "If heaven grow dry, with feast and offering never more,Will men on earth the heavenly ones adore",
      "sourceFile": "0018.md",
      "sourceSha256": "78dbdfcd3191c5be47ea5c9c242bae4a15d987d8a67b2f9b95c606dcf7197534"
    },
    {
      "number": 19,
      "lines": [
        "தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்",
        "வானம் வழங்கா தெனின்."
      ],
      "manakkudavar": "தானமும் தவமுமாகிய விரண்டறமு முளவாகா; அகன்ற வுலகத்துக்கண் மழை பெய்யாதாயின். இது தானமும் தவமுங் கெடுமென்றது.",
      "pope": "If heaven its watery treasures ceases to dispense,Through the wide world cease gifts, and deeds of 'penitence'",
      "sourceFile": "0019.md",
      "sourceSha256": "a790262ab679282755af9f9b4061aa3988895dcc81201e2d20c3a2442909660c"
    },
    {
      "number": 20,
      "lines": [
        "நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்",
        "வான்இன்று அமையாது ஒழுக்கு."
      ],
      "manakkudavar": "நீரையின்றி யுலகம் அமையாதாயின் யாவர்க்கும் மழையையின்றி ஒழுக்கம் உண்டாகாது. ஒழுக்கம்- விரதம். இஃது ஆசாரங்கெடுமென்றது. இவை மூன்றினானும் நான்கறமுங் கெடுமென்று கூறினார்.",
      "pope": "When water fails, functions of nature cease, you say;Thus when rain fails, no men can walk in 'duty's ordered way'",
      "sourceFile": "0020.md",
      "sourceSha256": "39886b00756f4af219754c19fa0efb8d7161f25abb7af292aea4eb6dfb2fd264"
    },
    {
      "number": 21,
      "lines": [
        "ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து",
        "வேண்டும் பனுவல் துணிவு."
      ],
      "manakkudavar": "ஒழுக்கத்தின் பொருட்டு எல்லாப் பொருளையுந் துறந்தாரது பெருமையை நூல்களின் துணிவு விழுப்பத்தின் பொருட்டு வேண்டும். தானுமொரு பொய்யைச் சொல்லும் நூலும் தன்னை யெல்லாருங் கொண்டாடுவதற்காகத் துறந்தார் பெருமையை நன்கு மதித்துக் கூறும். அதனானே யானுஞ் சொல்லுகின்றேனென்பது.",
      "pope": "The settled rule of every code requires, as highest good,Their greatness who, renouncing all, true to their rule have stood",
      "sourceFile": "0021.md",
      "sourceSha256": "8af52b1fd7e25b3b40e3b78346bc6c08123a15bc44669dce452e63c27d2f595f"
    },
    {
      "number": 22,
      "lines": [
        "துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து",
        "இறந்தாரை எண்ணிக்கொண் டற்று."
      ],
      "manakkudavar": "காம முதலாகத் துறந்தார் பெருமைக்கு அளவு கூறின் உலகத்துப் பிறந்திறந்தாரை இத்துணையாரென்று எண்ணி யறியலுற்றாற் போலும். து பெருமைக்கெல்லை கூறுத லரிதாயினுஞ் சில சொல்லப் புகாநின்றே னென்றது கருதிக் கூறிற்று.",
      "pope": "As counting those that from the earth have passed away,'Tis vain attempt the might of holy men to say",
      "sourceFile": "0022.md",
      "sourceSha256": "59d207ff83ce471ea068f2f831154cba43bac532bbbdf9349f5d8d88e9e43fff"
    },
    {
      "number": 23,
      "lines": [
        "இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்",
        "பெருமை பிறங்கிற்று உலகு."
      ],
      "manakkudavar": "பிறப்பும் வீடுமென்னு மிரண்டினது கூறுபாட்டை யாராய்ந்து இவ்விடத்தே துறவறத்தை மேற்கொண்டவரது பெருமை உலகத்தில் மிக்கது. இஃது எல்லாரானும் போற்றப்படுமென்றது.",
      "pope": "Their greatness earth transcends, who, way of both worlds weighed,In this world take their stand, in virtue's robe arrayed",
      "sourceFile": "0023.md",
      "sourceSha256": "94706f599dfebbfcfbff6f942ac0d133b5befa273a3aec03cdf0e5968b698088"
    },
    {
      "number": 24,
      "lines": [
        "உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்",
        "வரனென்னும் வைப்பிற்கோர் வித்து."
      ],
      "manakkudavar": "அறிவாகிய தோட்டியானே பொறியாகிய யானையைந் தினையும் புலன்களிற் செல்லாமல் மீட்பவன் மேலாகிய விடத்தே யாதற்கு இவ்விடத்தேயிருப்பதொரு வித்து.",
      "pope": "He, who with firmness, curb the five restrains,Is seed for soil of yonder happy plains",
      "sourceFile": "0024.md",
      "sourceSha256": "611a4f9233bba1f50413d81415b56c6bc958ad12fe3e667e41248b7d1f2ce3b6"
    },
    {
      "number": 25,
      "lines": [
        "ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்",
        "இந்திரனே சாலுங் கரி."
      ],
      "manakkudavar": "நுகர்ச்சியாகிய வைந்தினையுந் துறந்தானது வலிக்கு அகன்ற விசும்பிலுள்ளார்க்கு நாயகனாகிய இந்திரனே யமையுஞ் சான்று. இந்திரன் சான்றென்றது இவ்வுலகின்கண் மிகத் தவஞ் செய்வாருளரானால் அவன் தன்பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான். இது தேவரினும் வலியனென்றது.",
      "pope": "Their might who have destroyed 'the five', shall soothly tellIndra, the lord of those in heaven's wide realms that dwell",
      "sourceFile": "0025.md",
      "sourceSha256": "5ac199ffb9471faf1d3b4ef6b43a5a1f5ef661fea78d464e7df09a91bf01d1b7"
    },
    {
      "number": 26,
      "lines": [
        "செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்",
        "செயற்கரிய செய்கலா தார்."
      ],
      "manakkudavar": "செயற்கு அரியன செய்வாரைப் பெரியோரென்று சொல்லுவர். அவற்றை செய்யமாட்டாதாரைத் துறந்தாராயினுஞ் சிறியோரென்று சொல்லுவர். செயற்கரியன- இயம நியம முதலாயின. இவ்வதிகாரம் நீத்தார் பெருமையென்று கூறப்பட்டதாயினும், துறந்த மாத்திரத்தானே பெரியரென்று கொள்ளப்படார். செயற்கரியன செய்வாரே பெரியரென்று கொள்ளப்படுவரென்று இது கூறிற்று.",
      "pope": "Things hard in the doing will great men do;Things hard in the doing the mean eschew",
      "sourceFile": "0026.md",
      "sourceSha256": "2727dc5ffe9edafbe3eb186acefbdf9306776cef53da729560afa47ae0fead48"
    },
    {
      "number": 27,
      "lines": [
        "சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்",
        "வகைதெரிவான் கட்டே உலகு."
      ],
      "manakkudavar": "சுவை முதலாகக் கூறிய வைந்து புலன்களின் வகையை யாராய்வான் கண்ணதே யுலகம். எனவே, இவற்றின் காரியம் வேறொன்றாகத் தோன்றுமன்றே அதனை அவ்வாறு கூறுபடுத்துக் காணக் காரணந் தோற்றுமாதலால், காரியமான வுலகம் அறிவான் கண்ணதா மென்றவா றாயிற்று.",
      "pope": "Taste, light, touch, sound, and smell: who knows the wayOf all the five,- the world submissive owns his sway",
      "sourceFile": "0027.md",
      "sourceSha256": "8810bb6ede58504649c6f75909560f2dd7b6e8e06641db621272e5ed4f758333"
    },
    {
      "number": 28,
      "lines": [
        "நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து",
        "மறைமொழி காட்டி விடும்."
      ],
      "manakkudavar": "நிரம்பிய கல்வியுடைய மாந்தரது பெருமையை அவராற் சொல்லப்பட்டு நிலத்தின்கண் வழங்காநின்ற மந்திரங்களே காட்டும். இஃது அவராணை நடக்குமென்று கூறிற்று.",
      "pope": "The might of men whose word is never vain,The 'secret word' shall to the earth proclaim",
      "sourceFile": "0028.md",
      "sourceSha256": "9c05cafb113605456f8649514035263c62a9b05fd70b352d2b90b64c01056896"
    },
    {
      "number": 29,
      "lines": [
        "குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி",
        "கணமேயும் காத்தல் அரிது."
      ],
      "manakkudavar": "குணமாகிய மலையை மேற்கொண்டு நின்றார்மாட்டு உளதாகிய வெகுளியால் வருந்தீமையைச் சிறிது பொழுதாயினும் வாராமற் காத்தலரிது. நகுஷன் பெரும்பாம்பாயினன். இது வெகுளி பொறுத்தலரிதென்றது.",
      "pope": "The wrath 'tis hard e'en for an instant to endure,Of those who virtue's hill have scaled, and stand secure",
      "sourceFile": "0029.md",
      "sourceSha256": "43b216c8c19d76c4b5113ab8e2a482005563ca85ba61b72c17c5edecf22c6760"
    },
    {
      "number": 30,
      "lines": [
        "அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்",
        "செந்தண்மை பூண்டொழுக லான்."
      ],
      "manakkudavar": "எல்லாவுயிர்க்குஞ் செவ்விய தட்பஞ்செய்தலை மேற்கொண்டொழுகலானே, அந்தணரென்போரும் துறந்தாராகக் கொள்ளப்படுவர். மேல் துறந்தவர்களினுஞ் சிறியாருளரென்று கூறினார். இதனானே துறவாதாரினும் பெரியாருளரென்று கூறினார். இவை யெட்டானும் துறவறத்தின் பெருமை கூறப்பட்டது.",
      "pope": "Towards all that breathe, with seemly graciousness adorned they live;And thus to virtue's sons the name of 'Anthanar' men give",
      "sourceFile": "0030.md",
      "sourceSha256": "4d63e02793f9a15bc0cbcff65fc5bd8bd8d566b5b6512744244da51c1f7bc532"
    },
    {
      "number": 31,
      "lines": [
        "சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு",
        "ஆக்கம் எவனோ உயிர்க்கு."
      ],
      "manakkudavar": "முத்தியுந்தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை. இது பொருளான் ஆக்கமுண்டென்பாரை மறுத்து, அறன் வலி யுடைத்தென்று கூறிற்று.",
      "pope": "It yields distinction, yields prosperity; what gainGreater than virtue can a living man obtain",
      "sourceFile": "0031.md",
      "sourceSha256": "34fc4dd89acbb3a684200509c83d4b11f6536e30f4eb8936bd5f360ee868b6f3"
    },
    {
      "number": 32,
      "lines": [
        "அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை",
        "மறத்தலின் ஊங்கில்லை கேடு."
      ],
      "manakkudavar": "ஒருவனுக்கு அறஞ் செய்தலின் மேற்பட்ட ஆக்கமுமில்லை; அதனைச் செய்யாமையின் மேற்பட்ட கேடுமில்லை. இஃது அறஞ் செய்யாக்காற் கேடுவருமென்று கூறிற்று.",
      "pope": "No greater gain than virtue aught can cause;No greater loss than life oblivious of her laws",
      "sourceFile": "0032.md",
      "sourceSha256": "6b559f5838cd2e85eec9136064b4bdec0ecee0c0e08f3e8e4a64c4085496c904"
    },
    {
      "number": 33,
      "lines": [
        "ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே",
        "செல்லும்வாய் எல்லாஞ் செயல்."
      ],
      "manakkudavar": "தமக்கியலுந் திறத்தானே, அறவினையை ஒழியாதே செய்யலாமிடமெல்லாஞ் செய்க. இயலுந்திறமென்பது மனமொழிமெய்களும் பொருளும். செல்லும்வாய் என்பது அறஞ்செய்தற் கிடமாகிய பல விடங்களும் ஒழியாதென்றது நாடோறு மென்றது. இஃது அறம் வலி தென்றறிந்தவர்கள் இவ்வாறு செய்க வென்றது.",
      "pope": "To finish virtue's work with ceaseless effort strive,What way thou may'st, where'er thou see'st the work may thrive",
      "sourceFile": "0033.md",
      "sourceSha256": "b19043059241c4b9c763cba6b7d9c5a32d7cdea8a7a0c8da002cd09362ed99d7"
    },
    {
      "number": 34,
      "lines": [
        "மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்",
        "ஆகுல நீர பிற."
      ],
      "manakkudavar": "ஒருவன் தன்மனத்தின்கட் குற்றமிலனாதலே எல்லாவறமுமாம்; அதில் அழுக்குண்டாயின் மேற்செய்வன வெல்லாம் ஆரவார நீர்மைய. பிறரறியவேண்டிச் செய்தானாமென்றவாறாயிற்று. மேல் நான்கு பொருளைக் கடியவேண்டுமென்றார் அவை நான்கும் மனமொன்றுந் தூயதாகப் போமென்று அதன்பின் இது கூறினார்.",
      "pope": "Spotless be thou in mind! This only merits virtue's name;All else, mere pomp of idle sound, no real worth can claim",
      "sourceFile": "0034.md",
      "sourceSha256": "6116a2f1420c93133e19968fc6d05802046071de8019958cf7920804fb6d5a46"
    },
    {
      "number": 35,
      "lines": [
        "அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்",
        "இழுக்கா இயன்றது அறம்."
      ],
      "manakkudavar": "மனக்கோட்டமும், ஆசையும், வெகுளியும், கடுஞ்சொல்லும் என்னும் நான்கினையும் ஒழித்து நடக்குமது யாதொன்று அஃது அறமென்று சொல்லப்படும். பின்னர்ச் செய்யலாகாதென்று கூறுவனவெல்லாம் இந்நான்கினுள் அடங்குமென்று கூறிய அறம் எத்தன்மைத் தென்றார்க்கு இது கூறப்பட்டது.",
      "pope": "'Tis virtue when, his footsteps sliding not through envy, wrath,Lust, evil speech-these four, man onwards moves in ordered path",
      "sourceFile": "0035.md",
      "sourceSha256": "bf8d2e27dbb6549fd7e11d9a53e105712bc0597e4a254d0e1f78b65ac5a737a5"
    },
    {
      "number": 36,
      "lines": [
        "அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது",
        "பொன்றுங்கால் பொன்றாத் துணை."
      ],
      "manakkudavar": "பின்பே அறிந்து செய்வோமென்னாது முன்பே அறத்தைச் செய்க. அது சாங்காலத்தினுஞ் சாகாதே நின்று பிறக்கு மிடத்திற்குத் துணையாம். இஃது அறஞ்செய்யுங்கால் விரைந்து செய்யவேண்டு மென்பதும் அது மறுமைக்குத் துணையாமென்பதும் கூறிற்று.",
      "pope": "Do deeds of virtue now Say not, 'To-morrow we'll be wise';Thus, when thou diest, shalt thou find a help that never dies",
      "sourceFile": "0036.md",
      "sourceSha256": "2da0a2ff293f3288da7bc72cf6f65dbd7be3a7f2e4d739c4a388ddd51a6e5a2b"
    },
    {
      "number": 37,
      "lines": [
        "அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை",
        "பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை."
      ],
      "manakkudavar": "நீங்கள் அறநெறி யித்தன்மைத்தென் றறிய வேண்டா, சிவிகைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காணலாம். இது பொன்றினாலுந் துணையாகுமோ என்றார்க்குத் துணையாயினவாறு காட்டிற்று.",
      "pope": "Needs not in words to dwell on virtue's fruits: compareThe man in litter borne with them that toiling bear",
      "sourceFile": "0037.md",
      "sourceSha256": "a29898251b53ab0d829a35b692df201fa358288393e9b36ec2c2c1872b69c11c"
    },
    {
      "number": 38,
      "lines": [
        "வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்",
        "வாழ்நாள் வழியடைக்கும் கல்."
      ],
      "manakkudavar": "ஒருவன் ஒரு நாளிடைவிடாமல் நன்மையைச் செய்வானாயின் அச்செயல் அவனது பிறப்பும் இறப்புமாகிய நாள் வருகின்ற வழியை யடைப்பதொரு கல்லாம். இது வீடு தருமென்றது.",
      "pope": "If no day passing idly, good to do each day you toil,A stone it will be to block the way of future days of moil",
      "sourceFile": "0038.md",
      "sourceSha256": "70fbc4dac84b517b47ba53d313bc7ddf19f38c1521def5511096cc3927e405f3"
    },
    {
      "number": 39,
      "lines": [
        "அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்",
        "புறத்த புகழும் இல."
      ],
      "manakkudavar": "அறத்தால் வருவது யாதொன்று, அதுவே இன்பமும் புகழுமாம்; அதனாலன்றி வருவனவெல்லாந் துன்பமாம்; புகழுமிலவாம். இஃது எல்லாப் போக நுகர்ச்சியும் இதனானே வருமென்றது.",
      "pope": "What from virtue floweth, yieldeth dear delight;All else extern, is void of glory's light",
      "sourceFile": "0039.md",
      "sourceSha256": "ff2b9a67e952c45516f9ee4a85f33b4b1e0c766f13b5de48531dc11abfb3da5f"
    },
    {
      "number": 40,
      "lines": [
        "செயற்பால தோரும் அறனே ஒருவற்கு",
        "உயற்பால தோரும் பழி."
      ],
      "manakkudavar": "ஒருவனுக்குச் செய்யும் பகுதியது அறமே, தப்பும் பகுதியது பழியே. மேல் அறஞ் செய்யப் பிறப்பறு மென்றார், அதனோடு பாவமுஞ் செய்யின் அறாதென்றற்கு இது கூறினார்.",
      "pope": "'Virtue' sums the things that should be done;'Vice' sums the things that man should shun",
      "sourceFile": "0040.md",
      "sourceSha256": "2f2bc6599c9645ff24806a402da498177d5671dbc3b38e1d742564bf2ee7e1ca"
    },
    {
      "number": 41,
      "lines": [
        "இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்",
        "நல்லாற்றின் நின்ற துணை."
      ],
      "manakkudavar": "இல்வாழ்வானென்று சொல்லப்படுபவன் இயல்புடைய மூவர்க்கும் நல்ல வழியின்கண்ணே நின்றவொருதுணை. (தவசி, பிரமச்சாரி, துறவியாகிய மூவர்) என்றது தானமாகிய வில்லறஞ் செய்யுமவன் தவத்தின்பாற்பட்ட விரதங் கொண்டொழுகாநின்ற பிரமச்சாரிக்கும், தவமேற் கொண்டொழுகாநின்ற வானப்பிரஸ்தன் ஸந்நியாசிகளுக்கும், தத்தம் நிலைகுலையாம லுணவு முதலாயின கொடுத்துப் பாதுகாத்தலின் அவர்க்கு நல்லுலகின்கண் செல்லும் நெறியிலே நின்ற வொரு துணையென்று கூறியவாறாயிற்று. துணையென்பது இடையூறு வாராமலுய்த்து விடுவாரை.",
      "pope": "The men of household virtue, firm in way of good, sustainThe other orders three that rule professed maintain",
      "sourceFile": "0041.md",
      "sourceSha256": "ff94effb706f42677318b89af605922b31660f8beefa752f1f87de5b990412e4"
    },
    {
      "number": 42,
      "lines": [
        "துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்",
        "இல்வாழ்வான் என்பான் துணை."
      ],
      "manakkudavar": "வருணத்தினையும் நாமத்தினையுந் துறந்தார்க்கும், துறவாது நல்குரவாளரா யுண்ணப் பெறாதார்க்கும், பிறராய் வந்து செத்தார்க்கும் இல்வாழ்வானென்று சொல்லப்படுமவன் துணை யாவான். (வறுமையாளர், கைவிடப்பட்டவர், திக்கற்றவர்). மேற்கூறிய மூவரும் வருணநாமங்களைத் துறவாமையாலீண்டுத் துறந்தாரென்று கூறினார். செத்தார்க் கிவன் செய்ய வேண்டிய புறங்காட்டுய்த்தல் முதலாயின. இது மேற்கூறியவர்க்கேயன்றி இவர்க்கும் துணையென்று கூறிற்று.",
      "pope": "To anchorites, to indigent, to those who've passed away,The man for household virtue famed is needful held and stay",
      "sourceFile": "0042.md",
      "sourceSha256": "38cfea68819271e38ed6427bff7699cba5564b0b7cadbb66639cdc671e308210"
    },
    {
      "number": 43,
      "lines": [
        "தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு",
        "ஐம்புலத்தாறு ஓம்பல் தலை."
      ],
      "manakkudavar": "பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னு மைந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கை. தனக்குண்டான பொருளை ஆறு கூறாக்கி ஒருகூறு அரசற்குக் கொடுத்து ஒழிந்தவைந்து கூறினுந் தான் கொள்வது ஒரு கூறென்றற்குத் தன்னையு மெண்ணினார். இது தலையான இல்வாழ்க்கை வாழும் வாழ்வு கூறிற்று: என்னை? இவையெல்லா மொருங்கு செய்யப்படுதலின் மேற்கூறிய அறுவரும் விருந்தினது வகையினரென்று கொள்ளப்படுவர்.",
      "pope": "The manes, God, guests kindred, self, in due degree,These five to cherish well is chiefest charity",
      "sourceFile": "0043.md",
      "sourceSha256": "bbeb97fae71fc7b073b3a5cdfd09bb16093e894c359090fdb34ce0877537f907"
    },
    {
      "number": 44,
      "lines": [
        "பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை",
        "வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்."
      ],
      "manakkudavar": "இல்வாழ்க்கையாகிய நிலை, பழியையுமஞ்சி பகுத்துண்டலையுமுடைத்தாயின், தனதொழுங்கு, இடையறுதல் எக்காலத்தினுமில்லை. மேல் பகுக்குமாறு கூறினார். பகுக்குங்காற் பழியோடு வாராத பொருளைப் பகுக்க வேண்டுமென்று கூறினார்.",
      "pope": "Who shares his meal with other, while all guilt he shuns,His virtuous line unbroken though the ages runs",
      "sourceFile": "0044.md",
      "sourceSha256": "ee0d04494af81cabb40aeabf2faffe64d82eeaf84170bac996987c3aa0ca74d0"
    },
    {
      "number": 45,
      "lines": [
        "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை",
        "பண்பும் பயனும் அது."
      ],
      "manakkudavar": "இல்வாழ்க்கையாகிய நிலை யாவர்மட்டும் அன்பு செய்தலையும் அறஞ்செய்தலையும் உடைத்தாயின், அதற்குக் குண மாவதும் பயனாவதும் அவ்விரண்டினையு முடைமை தானே. பயன் வேறு வேண்டாம் :தனக்கும் பிறர்க்கும் உண்டான முகமலர்ச்சி தானே யமையுமென்பது. இது பழியோடு வாராத வுணவை நுகர வேற்பார் மாட்டு அன்புசெய்யவேண்டுமென்பதும் சீலனாய்க் கொடுக்க வேண்டுமென்பதும் கூறிற்று.",
      "pope": "If love and virtue in the household reign,This is of life the perfect grace and gain",
      "sourceFile": "0045.md",
      "sourceSha256": "d03755d61411cbff8a8d663b35d2eed69f7b319f065c183029c287998e29f620"
    },
    {
      "number": 46,
      "lines": [
        "அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்",
        "போஒய்ப் பெறுவ தெவன்?"
      ],
      "manakkudavar": "இல்வாழ்க்கையாகிய நிலையை அறநெறியிலே செலுத்தவல்லவனாயின் புறநெறியாகிய தவத்திற் போய்ப் பெறுவது யாதோ?. மேல் சீலனாய்க் கொடுக்க வேண்டுமென்றார் அவ்வாறு செய்யின் தவப்பயனும் இதுதானே தருமென்றார்.",
      "pope": "If man in active household life a virtuous soul retain,What fruit from other modes of virtue can he gain",
      "sourceFile": "0046.md",
      "sourceSha256": "918b5345ec22bc0e6ecc21a2e6a9e9425c8449e2536df47414a705c1e90146b2"
    },
    {
      "number": 47,
      "lines": [
        "இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்",
        "முயல்வாருள் எல்லாம் தலை."
      ],
      "manakkudavar": "நெறியினானே யில்வாழ்க்கை வாழ்பவனென்பான், முயல்வாரெல்லாரினுந் தலையாவான். முயறல்- பொருட்கு முயறல்.",
      "pope": "In nature's way who spends his calm domestic days,'Mid all that strive for virtue's crown hath foremost place",
      "sourceFile": "0047.md",
      "sourceSha256": "9baa8b3efd6d4646d5059083bb98c81651b330663d18e64fcf9bac43d8c962e8"
    },
    {
      "number": 48,
      "lines": [
        "ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை",
        "நோற்பாரின் நோன்மை உடைத்து."
      ],
      "manakkudavar": "பிறரையும் நன்னெறியிலே ஒழுகப்பண்ணித் தானும் அறத்தின் பாலொழுகும் இல்வாழ்க்கை தவஞ்செய்வாரினும் வலியுடைத்து. ஒழுகப் பண்ணலாவது அவர்க்கு வேண்டுவன அமைத்தல். இது தவத்தினும் வலியுடைத்தென்றது.",
      "pope": "Others it sets upon their way, itself from virtue ne'er declines;Than stern ascetics' pains such life domestic brighter shines",
      "sourceFile": "0048.md",
      "sourceSha256": "5e945cfc0e9f0c210a68df3f7a1b8c011eb6f32be13f0612c9f222abd3e3d8c3"
    },
    {
      "number": 49,
      "lines": [
        "அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்",
        "பிறன்பழிப்ப தில்லாயின் நன்று."
      ],
      "manakkudavar": "அறனென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே. அதுவும் நன்றாவது பிறனொருவனாற் பழிக்கப்படுவதொன்றை யுடைத்தல்லவாயின். பழிக்கப்படுவதென்றது இழிகுலத்தாளாகிய மனையாளை. இனி வாழ்க்கைத் துணைநலங் கூறுகின்றாராகலின், இது கூறப்பட்டது.",
      "pope": "The life domestic rightly bears true virtue's name;That other too, if blameless found, due praise may claim",
      "sourceFile": "0049.md",
      "sourceSha256": "e982351cf7daf279a2a796db1106b48f7a8dc2d77d4f4995eb50d38841f99577"
    },
    {
      "number": 50,
      "lines": [
        "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்",
        "தெய்வத்துள் வைக்கப் படும்."
      ],
      "manakkudavar": "இல்வாழ்க்கை வாழும்படியிலே வாழுமவன் உலகத்திலே தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவன். இவன் எல்லாராலும் நன்கு மதிக்கப்படுவ னென்றவாறு.",
      "pope": "Who shares domestic life, by household virtues graced,Shall, mid the Gods, in heaven who dwell, be placed",
      "sourceFile": "0050.md",
      "sourceSha256": "93d810c07772657dac6051f4b6b63f25ebadf8ed21acb92e19135a5fbf011d26"
    },
    {
      "number": 51,
      "lines": [
        "மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்",
        "வளத்தக்காள் வாழ்க்கைத் துணை."
      ],
      "manakkudavar": "தான் பிறந்த குடிக்குத்தக்க வொழுக்கத்தை யுடையாளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க செலவினை யுடையவள் இல்வாழ்க்கைத் துணையாவள்.",
      "pope": "As doth the house beseem, she shows her wifely dignity;As doth her husband's wealth befit, she spends: help - meet is she",
      "sourceFile": "0051.md",
      "sourceSha256": "1a2981e67ae578e89b3bbb39908ba695eb7f21740c38168d3efb6aa0ea47c912"
    },
    {
      "number": 52,
      "lines": [
        "மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை",
        "எனைமாட்சித் தாயினும் இல்."
      ],
      "manakkudavar": "குடிக்குத்தக்க வொழுக்கம் மனையாள்மாட்டு இல்லையாகில், அவ்வில்வாழ்க்கை எத்துணை நன்மைகளை யுடைத்தாயினும் ஒரு நன்மையும் இன்றாம்.",
      "pope": "If household excellence be wanting in the wife,Howe'er with splendour lived, all worthless is the life",
      "sourceFile": "0052.md",
      "sourceSha256": "331d5eac61b5ec4f691df0854096df9163c0aabd9a658cd9e05266560a3e71cc"
    },
    {
      "number": 53,
      "lines": [
        "இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்",
        "இல்லவள் மாணாக் கடை?"
      ],
      "manakkudavar": "ஒருவனுக்கு மனையாள் மாட்சிமையுடையாளானால் எல்லாமிலனேயாயினும் இல்லாதது யாது? மனையாள் மாட்சிமை இல்லாளானால் எல்லாமுடையானாயினும் உண்டானது யாது?.",
      "pope": "There is no lack within the house, where wife in worth excels,There is no luck within the house, where wife dishonoured dwells",
      "sourceFile": "0053.md",
      "sourceSha256": "2f399fbe3d0283ccaf77068df9e5f39e6322be78d97ceed58d06a00bd4a6034f"
    },
    {
      "number": 54,
      "lines": [
        "பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்",
        "திண்மைஉண் டாகப் பெறின்."
      ],
      "manakkudavar": "பெண் பிறப்புப்போல் மேம்பட்டன யாவையுள? கற்பாகிய திண்மை யுண்டாகப் பெறின்.",
      "pope": "If woman might of chastity retain,What choicer treasure doth the world contain",
      "sourceFile": "0054.md",
      "sourceSha256": "7c2e045b0559a359578a88b2a2b3ac3952044e0ad7ae8420398b6470bb56bdf9"
    },
    {
      "number": 55,
      "lines": [
        "தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்",
        "பெய்யெனப் பெய்யும் மழை."
      ],
      "manakkudavar": "தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், எல்லாத் தெய்வமுந் தன்கணவனென்றே கருதி, அவனை நாடோறுந் தொழுதெழுமவள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும்.",
      "pope": "No God adoring, low she bends before her lord;Then rising, serves: the rain falls instant at her word",
      "sourceFile": "0055.md",
      "sourceSha256": "0815b576cf2b992c03552a636e5e97c13360486ba0ed11a31fb1b5201a691c23"
    },
    {
      "number": 56,
      "lines": [
        "தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற",
        "சொற்காத்துச் சோர்விலாள் பெண்."
      ],
      "manakkudavar": "தன்னையுங் காத்துத் தன்னைக் கொண்ட கணவனையும் பேணி நன்மையமைந்த புகழ்களையும் படைத்துச் சோர்வின்மை யுடையவளே பெண்ணென்று சொல்லப்படுவள்.",
      "pope": "Who guards herself, for husband's comfort cares, her household's fame,In perfect wise with sleepless soul preserves, -give her a woman's name",
      "sourceFile": "0056.md",
      "sourceSha256": "a3376ca6201293bf68d9f7bdde171555e29a35db3c77c9644de26d2ed3870644"
    },
    {
      "number": 57,
      "lines": [
        "சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்",
        "நிறைகாக்கும் காப்பே தலை."
      ],
      "manakkudavar": "மகளிரைச் சிறைசெய்து காக்குங்காவல் யாதினைச் செய்யும்? அவரது கற்புக் காக்குங் காவலே தலையான காவல்.",
      "pope": "Of what avail is watch and ward?Honour's woman's safest guard",
      "sourceFile": "0057.md",
      "sourceSha256": "d0ced606242dd0b9a3567c8c29e47a02423b79469401f8621f2ccfc21991d82b"
    },
    {
      "number": 58,
      "lines": [
        "பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்",
        "புத்தேளிர் வாழும் உலகு."
      ],
      "manakkudavar": "பெண்டிரானவர் தம்மை மனைவியராகப் பெற்றவரையே தமக்குத் தலைவராகப் பெறின் தேவர் வாழும் பெரிய சிறப்பினையுடைய உலகத்தைப் பெறுவர்.",
      "pope": "If wife be wholly true to him who gained her as his bride,Great glory gains she in the world where gods bliss abide",
      "sourceFile": "0058.md",
      "sourceSha256": "a359f5cf0d99211f08ded8d0fadd6e7a78a604906a8898eb9f20f2e816758a84"
    },
    {
      "number": 59,
      "lines": [
        "புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்",
        "ஏறுபோல் பீடு நடை."
      ],
      "manakkudavar": "புகழ்பொருந்தின மனையாளை இல்லாதார்க்கு இல்லையாம்: தம்மை யிகழ்ந்துரைப்பார்முன் ஏறுபோல நடக்கும் மேம்பட்ட நடை. ஏறு நடை- அசைவும் தலையெடுப்பும் பொருந்திய நடை.",
      "pope": "Who have not spouses that in virtue's praise delight,They lion-like can never walk in scorner's sight",
      "sourceFile": "0059.md",
      "sourceSha256": "4fa4bdbe5e6a9b36e4307c4e4a82ecd3997f38b08209eb4a21dfc0572808313f"
    },
    {
      "number": 60,
      "lines": [
        "மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்",
        "நன்கலம் நன்மக்கட் பேறு."
      ],
      "manakkudavar": "ஒருவனுக்கு அழகென்று சொல்லுப, மனையாள் ஒழுக்கமுடையாளாதலை: அவ்வழகின்மேலே நல்ல அணிகலனென்று சொல்லுப, நல்ல புதல்வரைப் பெறுதலை.",
      "pope": "The house's 'blessing', men pronounce the house-wife excellent;The gain of blessed children is its goodly ornament",
      "sourceFile": "0060.md",
      "sourceSha256": "ca2214809baff63ff91c6ca0ef0ea68067fa0a71e303c8414eb332dbfa460422"
    },
    {
      "number": 61,
      "lines": [
        "பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த",
        "மக்கட்பேறு அல்ல பிற."
      ],
      "manakkudavar": "ஒருவன் பெறும் பொருள்களுள் அறிவுடைய மக்களைப் பெறுதல் பயன்படுவது: ஒழிந்த பொருள்களெல்லாம் அவற்றினும் சிறந்தனவாக யாம் கண்டறிவதில்லை.",
      "pope": "Of all that men acquire, we know not any greater gain,Than that which by the birth of learned children men obtain",
      "sourceFile": "0061.md",
      "sourceSha256": "bfb1f8bd5d86d4355bd0f244b766dc8b67d4f212672225a75c6263a6d27b7a1f"
    },
    {
      "number": 62,
      "lines": [
        "எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்",
        "பண்புடை மக்கட் பெறின்."
      ],
      "manakkudavar": "எழுபிறப்பினுந் துன்பங்கள் சாரா: ஒரு பிறப்பிலே பழியின்கண் மிகாத குணத்தினையுடைய புதல்வரைப் பெறுவாராயின்.",
      "pope": "Who children gain, that none reproach, of virtuous worth,No evils touch them, through the sev'n-fold maze of birth",
      "sourceFile": "0062.md",
      "sourceSha256": "9c5706262338c3b2ae01f456a722d639ae819688e6e382807f66e9c418c77f50"
    },
    {
      "number": 63,
      "lines": [
        "தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்",
        "தம்தம் வினையான் வரும்."
      ],
      "manakkudavar": "தம்முடைய பொருளென்று சொல்லுவர் உலகத்தார் தம்மக்களை: அம்மக்களுடைய பொருள் தத்தமுடைய வினையோடே கூடவருதலான்.",
      "pope": "'Man's children are his fortune,' say the wise;From each one's deeds his varied fortunes rise",
      "sourceFile": "0063.md",
      "sourceSha256": "d51d83a1de0e95f032843a934e46a1475081cbe99773dc4bddf74ab6f2eb3ff3"
    },
    {
      "number": 64,
      "lines": [
        "அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்",
        "சிறுகை அளாவிய கூழ்."
      ],
      "manakkudavar": "இனிமையுடைத்தாகிய அமிழ்தினும் மிகவினிது, தம்முடைய மக்கள் சிறுகையாலே யளையப்பட்ட கூழ்.",
      "pope": "Than God's ambrosia sweeter far the food before men laid,In which the little hands of children of their own have play'd",
      "sourceFile": "0064.md",
      "sourceSha256": "4117293fc86b55a78e8784e1d23d099b3ea36c73dbb3a0df984578b8fd555900"
    },
    {
      "number": 65,
      "lines": [
        "மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்",
        "சொற்கேட்டல் இன்பம் செவிக்கு."
      ],
      "manakkudavar": "தம்மக்கள் தமதுடம்பினைச் சார்தல் தம்முடம்பிற் கின்பமாம்: அவர் சொற்களைக் கேட்டல் செவிக்கின்பமாம்.",
      "pope": "To patent sweet the touch of children dear;Their voice is sweetest music to his ear",
      "sourceFile": "0065.md",
      "sourceSha256": "c2486cf9e02c706e1021cd2f80f14b1c839d0745e3222e27748e7f126d3c9a0c"
    },
    {
      "number": 66,
      "lines": [
        "குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்",
        "மழலைச்சொல் கேளா தவர்."
      ],
      "manakkudavar": "குழலோசை யினிது, யாழோசை யினிதென்று சொல்லுவர் தம் மக்களது மழலைச் சொற்களைக் கேளாதவர்; கேட்டவர் சொல்லார்.",
      "pope": "'The pipe is sweet,' 'the lute is sweet,' by them't will be averred,Who music of their infants' lisping lips have never heard",
      "sourceFile": "0066.md",
      "sourceSha256": "20b9fb8e5841ac01ed50e1ec73759a224aceda1b0be998024d16d34337ca492e"
    },
    {
      "number": 67,
      "lines": [
        "தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து",
        "முந்தி இருப்பச் செயல்."
      ],
      "manakkudavar": "தந்தை மகனுக்குச் செய்யும் உபகாரம் அவையத்தின் கண்ணே முந்தியிருக்குமாறு கல்வி யுண்டாக்குதல்.",
      "pope": "Sire greatest boon on son confers, who makes him meet,In councils of the wise to fill the highest seat",
      "sourceFile": "0067.md",
      "sourceSha256": "29ebdd3b8ebed6afc0b69e5179f6c19746cbd15d2050e4323ff4e40a4dd5dedb"
    },
    {
      "number": 68,
      "lines": [
        "தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து",
        "மன்னுயிர்க் கெல்லாம் இனிது."
      ],
      "manakkudavar": "தம்மக்க ளறிவுடையாரானால் அது தம்மினும் உலகத்துயிர்கட்கெல்லாம் இனிதாம்.",
      "pope": "Their children's wisdom greater than their own confessed,Through the wide world is sweet to every human breast",
      "sourceFile": "0068.md",
      "sourceSha256": "0f27a7b73e7abb7f88cbbaae73666937745b0ee647db5ff50244a54164ac30e4"
    },
    {
      "number": 69,
      "lines": [
        "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்",
        "சான்றோன் எனக்கேட்ட தாய்."
      ],
      "manakkudavar": "தான்பெற்ற காலத்தினும் மிக மகிழும்; தன்மகனைச் சான்றோனென்று பிறர் சொல்லக் கேட்ட காலத்துத் தாய்.",
      "pope": "When mother hears him named 'fulfill'd of wisdom's lore,'Far greater joy she feels, than when her son she bore",
      "sourceFile": "0069.md",
      "sourceSha256": "eb4b2d80803da2fecf63d56354baccf385bed1fc74e8a065c38ed814c283c78f"
    },
    {
      "number": 70,
      "lines": [
        "மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை",
        "என்நோற்றான் கொல் எனும் சொல்."
      ],
      "manakkudavar": "மகன் தந்தைக்குச் செய்யும் உபகாரம் இவன் தந்தை என்ன தவஞ்செய்தானென்று உலகத்தார் சொல்லுஞ் சொல்லைப் படைத்தல். இது நெறியினொழுகுவாரை உலகத்தார் புகழ்வாராதலான், மகனும் ஒழுக்கமுடையனாக வேண்டுமென்றது.",
      "pope": "To sire, what best requital can by grateful child be done?To make men say, 'What merit gained the father such a son?'",
      "sourceFile": "0070.md",
      "sourceSha256": "82dffc7d1729735b1a04e06e25c4f0393a76038575659a2e566b7b21a2d08209"
    },
    {
      "number": 71,
      "lines": [
        "அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்",
        "புன்கணீர் பூசல் தரும்."
      ],
      "manakkudavar": "அன்பினை யடைக்குந்தாழுமுளதோ? அன்புடையார் மாட்டு உளதாகிய புல்லிய கண்ணின் நீர்தானே ஆரவாரத்தைத் தரும்.",
      "pope": "And is there bar that can even love restrain?The tiny tear shall make the lover's secret plain",
      "sourceFile": "0071.md",
      "sourceSha256": "48d88442dc88f634804f503b3aa6e66f06882c916fae7590178ce1e1c201d536"
    },
    {
      "number": 72,
      "lines": [
        "அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்",
        "என்பும் உரியர் பிறர்க்கு."
      ],
      "manakkudavar": "அன்பிலாதார் எல்லாப் பொருளையுந் தமக்கு உரிமையாக வுடையர்: அன்புடையார் பொருளேயன்றித் தம்முடம்புக்கு அங்கமாகிய வெலும்பினையும் பிறர்க்கு உரிமையாக வுடையர். அன்புடையார்க்கல்லது அறஞ்செய்த லரிதென்றாயிற்று.",
      "pope": "The loveless to themselves belong alone;The loving men are others' to the very bone",
      "sourceFile": "0072.md",
      "sourceSha256": "92feb246b2bcd3fb5a209e4147d486c04626a7e56b19f45719c9787d772df647"
    },
    {
      "number": 73,
      "lines": [
        "அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு",
        "என்போடு இயைந்த தொடர்பு."
      ],
      "manakkudavar": "முற்பிறப்பின்கண் அன்போடு பொருந்தச் சென்ற செலவென்று சொல்லுவர்; பெறுதற்கரிய வுயிர்க்கு இப்பிறப்பின்கண் உடம்போடு இடைவிடாத நட்பினை.",
      "pope": "Of precious soul with body's flesh and bone,The union yields one fruit, the life of love alone",
      "sourceFile": "0073.md",
      "sourceSha256": "da71dc0a3d55894c778243ed5a5bf0f2d736bd46ec783271ae4aa31061080065"
    },
    {
      "number": 74,
      "lines": [
        "அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்",
        "நண்பு என்னும் நாடாச் சிறப்பு."
      ],
      "manakkudavar": "அன்பு தரும் ஆர்வமுடைமையை அவ்வார்வமுடைமை தரும். நட்பென்று சொல்லப்பட்ட ஆராய்தலில்லாத சிறப்பினை.",
      "pope": "From love fond yearning springs for union sweet of minds;And that the bond of rare excelling friendship binds",
      "sourceFile": "0074.md",
      "sourceSha256": "8108705e7ae3523252b7249914d573b7ebe6547e036595051e4e4ce4a61bf932"
    },
    {
      "number": 75,
      "lines": [
        "அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து",
        "இன்புற்றார் எய்தும் சிறப்பு."
      ],
      "manakkudavar": "முற்பிறப்பின்கண் பிறர்மேலன்பு வைத்துச் சென்ற செலவென்று சொல்லுவர்: இப்பிறப்பின்கண் உலகத்தில் இன்பமுற்றார் அதன் மேலுஞ் சிறப்பெய்துதலை.",
      "pope": "Sweetness on earth and rarest bliss above,These are the fruits of tranquil life of love",
      "sourceFile": "0075.md",
      "sourceSha256": "313ad77b074bc1a7e4b20e59f259e149a889823e06ce252be02794bb81acabac"
    },
    {
      "number": 76,
      "lines": [
        "அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்",
        "மறத்திற்கும் அஃதே துணை."
      ],
      "manakkudavar": "அன்பானது அறஞ்செய்வார்க்கே சார்பாமென்பர் அறியாதார். அவ்வன்பு மறஞ் செய்வார்க்குந் துணையாம்.",
      "pope": "The unwise deem love virtue only can sustain,It also helps the man who evil would restrain",
      "sourceFile": "0076.md",
      "sourceSha256": "ec42d82c7c2cd6dc712b46c374300b73de237c7d3ea0e42551cda52349d6c3c8"
    },
    {
      "number": 77,
      "lines": [
        "என்பி லதனை வெயில்போலக் காயுமே",
        "அன்பி லதனை அறம்."
      ],
      "manakkudavar": "என்பிலாத சீவனை வெயில் சுடுமாறு போற் சுடும்: அன்பிலாதவுயிரினை அறம்.",
      "pope": "As sun's fierce ray dries up the boneless things,So loveless beings virtue's power to nothing brings",
      "sourceFile": "0077.md",
      "sourceSha256": "acc929caa0d5278d3bb9bde76de8b8587e96cc95a677dffc3c43ea7837e21b4e"
    },
    {
      "number": 78,
      "lines": [
        "அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்",
        "வற்றல் மரந்தளிர்த் தற்று."
      ],
      "manakkudavar": "தன்னிடத்து அன்பில்லாத உயிரினது வாழ்க்கை வலிய பாரிடத்து (பாறை) உண்டாகிய உலர்ந்த மரம் தளிர்த்தாற் போலும். தளிர்த்தற்குக் காரணமின்மையால் தளிராதென்றவாறு.",
      "pope": "The loveless soul, the very joys of life may know,When flowers, in barren soil, on sapless trees, shall blow",
      "sourceFile": "0078.md",
      "sourceSha256": "1042df42b2fff84f9ca78d3d55c3597db5fb4cfce90e6f0f91a152f6371f04d2"
    },
    {
      "number": 79,
      "lines": [
        "புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை",
        "அகத்துறுப்பு அன்பி லவர்க்கு."
      ],
      "manakkudavar": "உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பிலார்க்குப் புறத்துறுப்புகளெல்லாம் யாதினைச் செய்யும்?.",
      "pope": "Though every outward part complete, the body's fitly framed;What good, when soul within, of love devoid, lies halt and maimed",
      "sourceFile": "0079.md",
      "sourceSha256": "7b1926424b16ad0306119b88d212f5fe93cea6e97bb728a5d9866342917fa6ec"
    },
    {
      "number": 80,
      "lines": [
        "அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு",
        "என்புதோல் போர்த்த உடம்பு."
      ],
      "manakkudavar": "உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பிலார்க்குப் புறத்துறுப்புகளெல்லாம் யாதினைச் செய்யும்?.",
      "pope": "Bodies of loveless men are bony framework clad with skin;Then is the body seat of life, when love resides within",
      "sourceFile": "0080.md",
      "sourceSha256": "62db32c2ed2d38815210902cb8e8383bf54f8d88e72f405ed9eedff5e5e6253c"
    },
    {
      "number": 81,
      "lines": [
        "இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி",
        "வேளாண்மை செய்தற் பொருட்டு."
      ],
      "manakkudavar": "இல்லின்கண் இருந்து பொருளைப் போற்றி வாழும் வாழ்க்கை யெல்லாம் வந்தவிருந்தினரைப் போற்றி அவர்க்கு உபகரித்தற்காக.",
      "pope": "All household cares and course of daily life have this in viewGuests to receive with courtesy, and kindly acts to do",
      "sourceFile": "0081.md",
      "sourceSha256": "40fa7580197e643d64e8053b74940560fd1b9e2bbdb287337b10fa60ff5e3351"
    },
    {
      "number": 82,
      "lines": [
        "விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா",
        "மருந்தெனினும் வேண் டற்பாற் றன்று."
      ],
      "manakkudavar": "விருந்தினர் இற்புறத்தாராகத் தானே யுண்டல், சாவாமைக்கு உண்ணும் மருந்தாயினும் வேண்டும் பகுதி யுடைத்தன்று.",
      "pope": "Though food of immortality should crown the board,Feasting alone, the guests without unfed, is thing abhorred",
      "sourceFile": "0082.md",
      "sourceSha256": "bee2e6f01c2f374b640784ef7aa386a98b34bb17e178b5956e5d17c114da46ed"
    },
    {
      "number": 83,
      "lines": [
        "வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை",
        "பருவந்து பாழ்படுதல் இன்று."
      ],
      "manakkudavar": "நாடோறும் வந்தவிருந்தினரைப் போற்றுவானது ஆக்கம், வருத்தமுற்றுக் கேடுபடுவதில்லை.",
      "pope": "Each day he tends the coming guest with kindly care;Painless, unfailing plenty shall his household share",
      "sourceFile": "0083.md",
      "sourceSha256": "d95923fc09eb517ed380fca7d8f92747ac49b358411a43dccff9dcd8eeae2b95"
    },
    {
      "number": 84,
      "lines": [
        "அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து",
        "நல்விருந்து ஓம்புவான் இல்."
      ],
      "manakkudavar": "திருவினாள் மனம்பொருந்தி உறையும்: நல்ல விருந்தினரை முகம் பொருந்திப் போற்றுவானது மனையின்கண். இது கேடின்மையன்றிச் செல்வமுமுண்டா மென்றது.",
      "pope": "With smiling face he entertains each virtuous guest,'Fortune' with gladsome mind shall in his dwelling rest",
      "sourceFile": "0084.md",
      "sourceSha256": "be03b403cf486408d52ee7e83fc9058c1f5c6f047fabd6b0379ff7a3a3728132"
    },
    {
      "number": 85,
      "lines": [
        "வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி",
        "மிச்சில் மிசைவான் புலம்."
      ],
      "manakkudavar": "விருந்தினரை ஊட்டி மிக்க வுணவை யுண்ணுமவன் புலத்தின் கண், விளைதற் பொருட்டு விதைக்கவும் வேண்டுமோ? தானே விளையாதோ? பொருள் வருவாயாக இயற்றுமிடம் நன்றாகப் பயன்படுமென்றவாறு.",
      "pope": "Who first regales his guest, and then himself supplies,O'er all his fields, unsown, shall plenteous harvests rise",
      "sourceFile": "0085.md",
      "sourceSha256": "ab719727d310bedcac9fa1b59997f5b746bf7ec1151505d9b09da2d756e557ab"
    },
    {
      "number": 86,
      "lines": [
        "செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்",
        "நல்வருந்து வானத் தவர்க்கு."
      ],
      "manakkudavar": "வந்த விருந்தினரைப் போற்றி வாராத விருந்தினரது வரவு பார்த்திருக்குமவன், வானத்தவர்க்கு நல்விருந்தாவன். வரவு பார்த்தல்-விருந்தின்றி யுண்ணாமை.",
      "pope": "The guest arrived he tends, the coming guest expects to see;To those in heavenly homes that dwell a welcome guest is he",
      "sourceFile": "0086.md",
      "sourceSha256": "dd932385fd2cef35b23e695116f1279edf00e75796ff12c98e3ca205a3b7e387"
    },
    {
      "number": 87,
      "lines": [
        "இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்",
        "துணைத்துணை வேள்விப் பயன்."
      ],
      "manakkudavar": "விருந்தினர்க்கு அளித்ததனால் வரும் பயன் இன்ன அளவினையுடைத்தென்று சொல்லலாவது ஒன்றில்லை. அவ்விருந்தினரின் தன்மை யாதோ ரளவிற்று அத்தன்மை யளவிற்று விருந்தோம்பலின் பயன்.",
      "pope": "To reckon up the fruit of kindly deeds were all in vain;Their worth is as the worth of guests you entertain",
      "sourceFile": "0087.md",
      "sourceSha256": "49a19e9d77b9ae849738b119e12cd702cfe6e0ee132d1c01e955375c2b5b889b"
    },
    {
      "number": 88,
      "lines": [
        "பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி",
        "வேள்வி தலைப்படா தார்."
      ],
      "manakkudavar": "விருந்தினரைப் போற்றி உபசரிக்க மாட்டாதார், வருந்தியுடம் பொன்றையும் ஓம்பிப் பொருளற்றோமென் றிரப்பர்.",
      "pope": "With pain they guard their stores, yet 'All forlorn are we,' they'll cry,Who cherish not their guests, nor kindly help supply",
      "sourceFile": "0088.md",
      "sourceSha256": "44b4bfa9222ec248cb82645deeaa97408691b2cd4be05cf65878e7c038c79510"
    },
    {
      "number": 89,
      "lines": [
        "உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா",
        "மடமை மடவார்கண் உண்டு."
      ],
      "manakkudavar": "உடைமையின் கண்ணே யில்லாமைபோல, விருந்தினர்க்கு அளித்தலைப் போற்றாத பேதைமை, பேதைமையார் மாட்டேயுளதாம்.",
      "pope": "To turn from guests is penury, though worldly goods abound;'Tis senseless folly, only with the senseless found",
      "sourceFile": "0089.md",
      "sourceSha256": "3d9cfa8af8a4b29b1eee6036c9b4d1140f65fc4c3c3a7306e26f2ae7d5ab0bc8"
    },
    {
      "number": 90,
      "lines": [
        "மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து",
        "நோக்கக் குநழ்யும் விருந்து."
      ],
      "manakkudavar": "எல்லா மலரினும் மெல்லிதாகிய அனிச்சப்பூ மோந்தாலல்லது வாடாது: விருந்தினரை முகந்திரிந்து நோக்க அவர் வாடுவர். இது முகம்நோக்கி யினிமை கூறவேண்டுமென்றது.",
      "pope": "The flower of 'Anicha' withers away, If you do but its fragrance inhale;If the face of the host cold welcome convey, The guest's heart within him will fail",
      "sourceFile": "0090.md",
      "sourceSha256": "40ffe4ab6a556bfc5c3e869327289b1e8aac161ec2fc1b5c48a2312b18f921c9"
    },
    {
      "number": 91,
      "lines": [
        "இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்",
        "செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்."
      ],
      "manakkudavar": "ஒருவன் இனியவாகச் சொல்லுஞ் சொற்கள் இன்பத்தைப் பயத்தலைக் காண்பான். அதற்கு மறுதலையாகிய வன்சொல்லை வழங்குவது எப்பயனை நோக்கியோ?.",
      "pope": "Pleasant words are words with all pervading love that burn;Words from his guileless mouth who can the very truth discern",
      "sourceFile": "0091.md",
      "sourceSha256": "c7fbae1e07c9f161cf3d51fc0a679f01f2aae5dc8dc5d27326ce1d7459ac4d2c"
    },
    {
      "number": 92,
      "lines": [
        "அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து",
        "இன்சொலன் ஆகப் பெறின்."
      ],
      "manakkudavar": "மனம் பொருந்திக் கொடுத்தலினும் நன்று: முகம் பொருந்தி இனிமைச்சொல் சொல்ல வல்லவனாயின்.",
      "pope": "A pleasant word with beaming smile's preferred,Even to gifts with liberal heart conferred",
      "sourceFile": "0092.md",
      "sourceSha256": "6b10ed4b47211332507b7b7cdc4a51727515d6acacd5cfae102edac4563a23c2"
    },
    {
      "number": 93,
      "lines": [
        "முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்",
        "இன்சொ லினதே அறம்."
      ],
      "manakkudavar": "கண்ணாலே பொருந்தி, இனிதாக நோக்கி மனத்தோடே பொருந்திய இன்சொல் சொல்ல வல்லவனாயின் அதுதானே யறமாம்.",
      "pope": "With brightly beaming smile, and kindly light of loving eye,And heart sincere, to utter pleasant words is charity",
      "sourceFile": "0093.md",
      "sourceSha256": "524673e14f7465d8362f8918b963740d96d3e4d4f1047f7d55306b11cb88f4ec"
    },
    {
      "number": 94,
      "lines": [
        "துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்",
        "இன்புறூஉம் இன்சொ லவர்க்கு."
      ],
      "manakkudavar": "துன்பமுறுவிக்கின்ற நுகராமையாகிய நல்குரவு இல்லையாகும். யாவர்மாட்டுங் கூற இன்பமுறுவிக்கின்ற இனிய சொல்லை யுடையார்க்கு.",
      "pope": "The men of pleasant speech that gladness breathe around,Through indigence shall never sorrow's prey be found",
      "sourceFile": "0094.md",
      "sourceSha256": "c8e485b01d6846f421c0e41d17e1764742d979db5d6c26ed7f89278bbaa189ea"
    },
    {
      "number": 95,
      "lines": [
        "பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு",
        "அணியல்ல மற்றுப் பிற."
      ],
      "manakkudavar": "ஒருவனுக்கு அழகாவது தாழ்ச்சி யுடையனா யினிய சொற்களைக் கூற வல்லவ னாதல்: பிறவாகிய அழகெல்லாம் அழகெனப்படா. இது தாழ்த்துக் கூறவேண்டு மென்பதும் அதனாலாம் பயனுங் கூறிற்று.",
      "pope": "Humility with pleasant speech to man on earth,Is choice adornment; all besides is nothing worth",
      "sourceFile": "0095.md",
      "sourceSha256": "541d9cd66b64ff07629ee3223445163e8db2a86b301c152a8dfea9189afe7def"
    },
    {
      "number": 96,
      "lines": [
        "அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை",
        "நாடி இனிய சொலின்"
      ],
      "manakkudavar": "நல்லவான சொற்களை யாராய்ந்து இனியவாகச் சொல்லுவானாயின் அதனானே அறமல்லாதன தேய அறம் வளரும்.",
      "pope": "Who seeks out good, words from his lips of sweetness flow;In him the power of vice declines, and virtues grow",
      "sourceFile": "0096.md",
      "sourceSha256": "77c825acc351a9b05be0080c601ee84795970ac2b92b6416ca7fd10e614ae7e9"
    },
    {
      "number": 97,
      "lines": [
        "நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று",
        "பண்பின் தலைப்பிரியாச் சொல்."
      ],
      "manakkudavar": "பிறரால் விரும்பப்படுதலையும் பயந்து, பொருளையும் பயந்து, அறத்தினையும் பயக்கும்; குணத்தினின்று நீங்காத சொல்.",
      "pope": "The words of sterling sense, to rule of right that strict adhere,To virtuous action prompting, blessings yield in every sphere",
      "sourceFile": "0097.md",
      "sourceSha256": "b45c4d1a80bafe0ce59ca6b8beecada4b4d152392ecb901d2f1940450a5cb53d"
    },
    {
      "number": 98,
      "lines": [
        "சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்",
        "இம்மையும் இன்பம் தரும்."
      ],
      "manakkudavar": "புன்மையுள் நின்று நீங்கிய இனிய சொற்கள் இம்மையின் கண்ணும் மறுமையின் கண்ணும் இன்பத்தைத் தரும்.",
      "pope": "Sweet kindly words, from meanness free, delight of heart,In world to come and in this world impart",
      "sourceFile": "0098.md",
      "sourceSha256": "e8e3149ed9a2136a60b68c10e9f936f6a68ae9b2dfcb031f55a8545e2dcdc8d2"
    },
    {
      "number": 99,
      "lines": [
        "இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ",
        "வன்சொல் வழங்கு வது?"
      ],
      "manakkudavar": "இருவர் மாறுபடச் சொன்ன மாற்றத்தினது உண்மைப் பொருளைக் கண்டார் கூறும் மெய்யாகிய சொற்களும் இன்சொலாதலானே அருளொடு பொருந்திக் குற்றமிலவாம். இஃது ஒருவனைக் கடிந்து சொல்லவேண்டு மிடத்தும் இன்சொல்லாலே கடிய வேண்டுமென்றது.",
      "pope": "Who sees the pleasure kindly speech affords,Why makes he use of harsh, repellant words",
      "sourceFile": "0099.md",
      "sourceSha256": "0682860d62036b897b008e48aaabaeaa58bd572f53e7c9f35682f6f852cf8e73"
    },
    {
      "number": 100,
      "lines": [
        "இனிய உளவாக இன்னாத கூறல்",
        "கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று."
      ],
      "manakkudavar": "பிறர்க் கினியவாகச் சொல்லுஞ் சொற்க ளின்பத்தைத் தருதலைக் கண்டவன் இனிய சொற்கள் இருக்கக் கடிய சொற்களைக் கூறுதல், பழமுங் காயும் ஓரிடத்தே யிருக்கக் கண்டவன், பழத்தைக் கொள்ளாது காயைக் கொண்ட தன்மைத்து.",
      "pope": "When pleasant words are easy, bitter words to use,Is, leaving sweet ripe fruit, the sour unripe to choose",
      "sourceFile": "0100.md",
      "sourceSha256": "7354fcd4fec65d71b1f9f8feb1eeff4a69f1d3d69792d24bf816e30210531cf7"
    },
    {
      "number": 101,
      "lines": [
        "செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்",
        "வானகமும் ஆற்றல் அரிது."
      ],
      "manakkudavar": "முன்னோருதவி செய்யாதார்க்கு ஒருவன் செய்த வுதவிக்கு உலகமுஞ் சுவர்க்கமும் நிறையாற்றுத லரிது.",
      "pope": "Assistance given by those who ne'er received our aid,Is debt by gift of heaven and earth but poorly paid",
      "sourceFile": "0101.md",
      "sourceSha256": "39809a3052e886d79383d6817385288fbbf4d760a5bbf61d49e72fa5ceb26b93"
    },
    {
      "number": 102,
      "lines": [
        "காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்",
        "ஞாலத்தின் மாணப் பெரிது."
      ],
      "manakkudavar": "உதவவேண்டுங்காலந் தப்பாமற் செய்தவுதவி தான்சிறிதாயிருந்ததாயினும், உலகத்தினும் மிகப் பெரிது. இது காலந் தப்பாமற் செய்த வுதவி உலகத்தினும் பெரிதென்றது.",
      "pope": "A timely benefit, -though thing of little worth,The gift itself, -in excellence transcends the earth",
      "sourceFile": "0102.md",
      "sourceSha256": "b3dab84bdba6dbb75d2a8cab54d9a6f5a824c53804c89917af5239203cec67f1"
    },
    {
      "number": 103,
      "lines": [
        "பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்",
        "நன்மை கடலின் பெரிது."
      ],
      "manakkudavar": "தமக்கொரு பயனை நோக்காதவராய்ச் செய்த வுபகாரத்தாலுண்டாய நன்மையை யாராயின், அதனா லுண்டாய நன்மை கடலினும் பெரிது.",
      "pope": "Kindness shown by those who weigh not what the return may be:When you ponder right its merit, 'Tis vaster than the sea",
      "sourceFile": "0103.md",
      "sourceSha256": "1ad661a2df61edfac89a8580436eb2d4ec993c8b653e3a39a6e69eb6b59012e6"
    },
    {
      "number": 104,
      "lines": [
        "தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்",
        "கொள்வர் பயன்தெரி வார்."
      ],
      "manakkudavar": "தினையளவு நன்றி செய்தாராயினும், அதனை யவ்வளவிற்றென்று நினையாது, பனையளவாகக் கொள்வார் அதன் பயனை யறிபவர். பனையளவு- அதனுயர்ச்சி.",
      "pope": "Each benefit to those of actions' fruit who rightly deem,Though small as millet-seed, as palm-tree vast will seem",
      "sourceFile": "0104.md",
      "sourceSha256": "7969b189e39c27eb4dd0b178ba4020335790a35b920562b66f91a0e3d76fb74d"
    },
    {
      "number": 105,
      "lines": [
        "உதவி வரைத்தன்று உதவி உதவி",
        "செயப்பட்டார் சால்பின் வரைத்து."
      ],
      "manakkudavar": "முன்னே செய்த வுதவியின் அளவன்று பின்பு செய்யும் மாற்றுதவி: அவ்வுதவி செய்யப்பட்டவர் தன்மை எவ்வளவிற்று அவ்வளவிற்று அவர் செய்யும் மாற்றுதவி. இது மாற்றுதவிக்கு அளவில்லை என்றது.",
      "pope": "The kindly aid's extent is of its worth no measure true;Its worth is as the worth of him to whom the act you do",
      "sourceFile": "0105.md",
      "sourceSha256": "94ffc09b7fa232e6857e0565b7af4714366920aa63f15ca3047e8aaab6ad25ce"
    },
    {
      "number": 106,
      "lines": [
        "மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க",
        "துன்பத்துள் துப்பாயார் நட்பு."
      ],
      "manakkudavar": "தனக்குத் துன்பம் வந்தகாலத்து வலியாயினர் நட்பை விடாதொழிக: எக்காலத்துங் குற்றமற்றாரது நட்பை மறவாதொழிக.",
      "pope": "Kindness of men of stainless soul remember evermoreForsake thou never friends who were thy stay in sorrow sore",
      "sourceFile": "0106.md",
      "sourceSha256": "ada9899e32b244dfa3711828f1027a060ddc96ee63ec1bd0ad446ad76e5f510e"
    },
    {
      "number": 107,
      "lines": [
        "எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்",
        "விழுமந் துடைத்தவர் நட்பு."
      ],
      "manakkudavar": "தங்கண் உற்ற துன்பத்தை நீக்கினவரது நட்பை அப்பிறப்பிலே யன்றி எழுமையிலுந் தோற்றும் பிறப்பெல்லாம் நினைப்பர் சான்றோர்.",
      "pope": "Through all seven worlds, in seven-fold birth, Remains in mem'ry of the wiseFriendship of those who wiped on earth, The tears of sorrow from their eyes",
      "sourceFile": "0107.md",
      "sourceSha256": "9eb078a7f1fcc3878bcf4a6a7b7981e2af783af570cd6b65c5c624ca7c2e003a"
    },
    {
      "number": 108,
      "lines": [
        "நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது",
        "அன்றே மறப்பது நன்று."
      ],
      "manakkudavar": "பிறர் செய்த நன்றியை மறப்பது என்றும் நன்றல்ல: பிறர் செய்த தீமையை அன்றே மறப்பதன்றே நன்றாம். இது தீமையை மறக்க வேண்டுமென்று கூறிற்று.",
      "pope": "'Tis never good to let the thought of good things done thee pass away;Of things not good, 'tis good to rid thy memory that very day",
      "sourceFile": "0108.md",
      "sourceSha256": "c42ddde71f170bb0237f43bbbebe71495dfe8ce1ac198a45b9d5feba642b5a34"
    },
    {
      "number": 109,
      "lines": [
        "கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த",
        "ஒன்றுநன்று உள்ளக் கெடும்."
      ],
      "manakkudavar": "தமக்கு முன்பு நன்மை செய்தார் தம்மைக் கொன்றாலொத்த இன்னாமையைப் பின்பு செய்யினும் அவர் முன்பு செய்த நன்றி யொன்றை நினைக்க அவ்வின்னாமை யெல்லாங் கெடும்.",
      "pope": "Effaced straightway is deadliest injury,By thought of one kind act in days gone by",
      "sourceFile": "0109.md",
      "sourceSha256": "8e2c29dca490c71747a4449481fdea21ac461303faa38482e9a7bc7f899db547"
    },
    {
      "number": 110,
      "lines": [
        "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை",
        "செய்ந்நன்றி கொன்ற மகற்கு."
      ],
      "manakkudavar": "எல்லா நன்மைகளையுஞ் சிதைத்தார்க்கும் பின்பொரு காலத்தேயாயினும் உய்வுண்டாம்: ஒருவன் செய்த நன்றியைச் சாவாக்கின மகனுக்கு ஒரு காலத்தினும் உய்தலில்லை.",
      "pope": "Who every good have killed, may yet destruction flee;Who 'benefit' has killed, that man shall ne'er 'scape free",
      "sourceFile": "0110.md",
      "sourceSha256": "8cfea587b75fb6448a062c03a8c5eed349b57c42e21416d405d94554a10d6c25"
    },
    {
      "number": 111,
      "lines": [
        "தகுதி எனவொன்று நன்றே பகுதியால்",
        "பாற்பட்டு ஒழுகப் பெறின்."
      ],
      "manakkudavar": "நடுவு நிலைமை யென்று சொல்லப்படுகின்ற தொன்று நல்லதே: அவரவர்நிலைமைப் பகுதியோடே அறத்தின்பாற்பட்டு ஒழுகப் பெறுமாயின்.",
      "pope": "If justice, failing not, its quality maintain,Giving to each his due, -'tis man's one highest gain",
      "sourceFile": "0111.md",
      "sourceSha256": "ea12a1f9b4c95992580ac5c8dce140ab72d0784d8f3ca314e530cfcd53868802"
    },
    {
      "number": 112,
      "lines": [
        "செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி",
        "எச்சத்திற் கேமாப்பு உடைத்து."
      ],
      "manakkudavar": "நடுவு நிலைமை யுடையவனது செல்வம் தன்னளவிலுங் கேடின்றியே நின்று, தன் வழியுள்ளார்க்குங் கேடுவாராமற் காவலாதலையுடைத்து. நடுவுநிலைமையுடையார் செல்வம் அழியாதென்றவாறு.",
      "pope": "The just man's wealth unwasting shall endure,And to his race a lasting joy ensure",
      "sourceFile": "0112.md",
      "sourceSha256": "56c3762fbd464da284f96031ff246996b4ab07fcdf53d5237717ceae406cf574"
    },
    {
      "number": 113,
      "lines": [
        "நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை",
        "அன்றே யொழிய விடல்."
      ],
      "manakkudavar": "பெருமையே தரினும் நடுவுநிலைமையை நீங்கி வரும் ஆக்கத்தை அவ்வாக்கம் வருதற்குத் தொடக்கமான அன்றே யொழிய விடுக.",
      "pope": "Though only good it seem to give, yet gainBy wrong acquired, not e'en one day retain",
      "sourceFile": "0113.md",
      "sourceSha256": "835971156a29b668c8d3b3bf0a3c210df0aa5bdb0119bb88e665130bae21aa5f"
    },
    {
      "number": 114,
      "lines": [
        "தக்கார் தகவிலர் என்பது அவரவர்",
        "எச்சத்தாற் காணப்ப படும்."
      ],
      "manakkudavar": "செவ்வை யுடையார் செவ்வையிலரென்பது அவரவர் ஆரவாரத்தொழிலினானே காணப்படும். இது தம்மளவிலே நிற்பதல்லது தம் மக்களையும் விடாதென்பது கூறிற்று. (இதனால் எச்சத்தால் என்பதற்கு மக்களானே என்றுரையிருக்கலாமென்பது விளங்குகின்றது.).",
      "pope": "Who just or unjust lived shall soon appear:By each one's offspring shall the truth be clear",
      "sourceFile": "0114.md",
      "sourceSha256": "99505b81a2cd52532b61bae1b69cf4b1a500ace9ed73f53e84e59d0e4015213a"
    },
    {
      "number": 115,
      "lines": [
        "கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்",
        "கோடாமை சான்றோர்க் கணி."
      ],
      "manakkudavar": "கேடுவருதலும் ஆக்கம் வருதலும் உலகத்தில்லையல்ல: அவ்விரண்டினுள்ளும் யாதானுமொன்று வந்த காலத்துத் தன்னெஞ்சு கோடாம லொழுகல் சான்றோர்க்கு அழகாம்.",
      "pope": "The gain and loss in life are not mere accident;Just mind inflexible is sages' ornament",
      "sourceFile": "0115.md",
      "sourceSha256": "08dedb2d9a4da4c41d43e100589aecbe8fb2da158ddd79b960136d4fa6d33a20"
    },
    {
      "number": 116,
      "lines": [
        "கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்",
        "நடுவொரீஇ அல்ல செயின்."
      ],
      "manakkudavar": "தனது நெஞ்சு நடுவுநிலைமையை நீங்கி நடுவல்லாதவற்றைச் செய்யுமாயின் அஃதேதுவாக எனக்குக் கேடு வருமென்று தானே யறிக.",
      "pope": "If, right deserting, heart to evil turn,Let man impending ruin's sign discern",
      "sourceFile": "0116.md",
      "sourceSha256": "32671243287c0e80f56b8f186dc58a8c82b5b13f014d7fef36d7a8e0f996847e"
    },
    {
      "number": 117,
      "lines": [
        "கெடுவாக வையாது உலகம் நடுவாக",
        "நன்றிக்கண் தங்கியான் தாழ்வு."
      ],
      "manakkudavar": "நன்மையின்கண்ணே நடுவாக நின்றவனுக்கு அது காரணமாகப் பொருட்கேடு உண்டாயின் அதனை உலகத்தார் கேடாகச் சொல்லார். ஆக்கத்தோடே யெண்ணுவர்.",
      "pope": "The man who justly lives, tenacious of the right,In low estate is never low to wise man's sight",
      "sourceFile": "0117.md",
      "sourceSha256": "eb18795314824a6d380f2d79dcfd64f57c2142e8ca677198b08522d0529a8395"
    },
    {
      "number": 118,
      "lines": [
        "சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்",
        "கோடாமை சான்றோர்க் கணி."
      ],
      "manakkudavar": "சமன்வரைப்பண்ணி யிரண்டுதலையுஞ் சீரொத்தால் தூக்கிப் பார்க்கப்படுகின்ற கோலைப்போல, வீக்கம் தாக்கமற்று ஒருவன் பக்கமாக நெஞ்சைக் கோடவிடாமை சான்றோர்க்கு அழகாவது. இது நடுவுநிலைமை வேண்டுமென்றது.",
      "pope": "To stand, like balance-rod that level hangs and rightly weighs,With calm unbiassed equity of soul, is sages' praise",
      "sourceFile": "0118.md",
      "sourceSha256": "6fac4b4adaf728461b88c7c869e5ce5b6c44e7a9a19f9dcc1dbe3268317f1593"
    },
    {
      "number": 119,
      "lines": [
        "சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா",
        "உட்கோட்டம் இன்மை பெறின்."
      ],
      "manakkudavar": "நடுவுநிலைமையாவது கோட்டமில்லாததாய சொல்லாம்: உறுதியாக மனக்கோட்ட மின்மையோடு கூடுமாயின். இது நடுவுநிலைமையாவது செவ்வை சொல்லுத லென்பதூஉம் இது பொருட் பொதுமொழி கூறதலன்றென்பதூஉம் கூறிற்று.",
      "pope": "Inflexibility in word is righteousness,If men inflexibility of soul possess",
      "sourceFile": "0119.md",
      "sourceSha256": "fce4590a83fd15413fac60c1e0696cd4f1ccf2d02a90617a275105ee91ce41a3"
    },
    {
      "number": 120,
      "lines": [
        "வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்",
        "பிறவும் தமபோல் செயின்."
      ],
      "manakkudavar": "வாணிகஞ் செய்வார்க்கு வாணிகமாம், பிறர் பொருளையுந் தமது பொருள்போலப் பேணிச் சோர்வுபடாமற் செய்வாராயின். வாணிகம் - இலாபம்.",
      "pope": "As thriving trader is the trader known,Who guards another's interests as his own",
      "sourceFile": "0120.md",
      "sourceSha256": "7df63741bd04c623850d475b8e971e3e4d2695e11415f3b5ff58c655dd9b2dd5"
    },
    {
      "number": 121,
      "lines": [
        "அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை",
        "ஆரிருள் உய்த்து விடும்."
      ],
      "manakkudavar": "மன மொழி மெய்களை யடக்கி யொழுக அவ்வடக்கம் தேவரிடத்தே கொண்டு செலுத்தும்: அவற்றை யடக்காதொழிய அவ்வடங்காமை தானே நரகத்திடைக் கொண்டு செலுத்திவிடும். மேல் பலவாகப் பயன் கூறினாராயினும், ஈண்டு அடக்கத்திற்கும் அடங்காமைக்கு மிதுவே பயனென்று தொகுத்துக் கூறினார்.",
      "pope": "Control of self does man conduct to bliss th' immortals share;Indulgence leads to deepest night, and leaves him there",
      "sourceFile": "0121.md",
      "sourceSha256": "fe19a8d24726ef1170fa1f5e5c82dffe29765e5e6d107474e612cb98eaa923c6"
    },
    {
      "number": 122,
      "lines": [
        "காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்",
        "அதனினூஉங் கில்லை உயிர்க்கு."
      ],
      "manakkudavar": "ஒருவன் தனக்குப் பொருளாக அடக்கத்தை யுண்டாக்குக. அவனுயிர்க்கு ஆக்கம் அதனின் மேற்பட்டது பிறிதில்லை.",
      "pope": "Guard thou as wealth the power of self-control;Than this no greater gain to living soul",
      "sourceFile": "0122.md",
      "sourceSha256": "ae7bf97ab261a402cf7532d3b9222ab6f675adfa91bc53f8fca0d878c2b350f6"
    },
    {
      "number": 123,
      "lines": [
        "செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து",
        "ஆற்றின் அடங்கப் பெறின்."
      ],
      "manakkudavar": "அறியப்படுவனவும் அறிந்து அடக்கப்படுவனவும் அறிந்து நெறியினானே யடங்கப்பெறின் அவ்வடக்கம் நன்மை பயக்கும். அறியப்படுவன- சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்: அடக்கப் படுவன- மெய் வாய் கண் மூக்கு செவி.",
      "pope": "If versed in wisdom's lore by virtue's law you self restrainYour self-repression known will yield you glory's gain",
      "sourceFile": "0123.md",
      "sourceSha256": "6303c694ead338aceb3e61871998833201b2ef71d279e62afac61c68a30cb784"
    },
    {
      "number": 124,
      "lines": [
        "நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்",
        "மலையினும் மாணப் பெரிது."
      ],
      "manakkudavar": "தனது நிலையிற் கெடாதே யடங்கினவனது உயர்ச்சி மலையினும் மிகப் பெரிது. நிலை- வன்னாச்சிரம தன்மம்.",
      "pope": "In his station, all unswerving, if man self subdue,Greater he than mountain proudly rising to the view",
      "sourceFile": "0124.md",
      "sourceSha256": "69321cae41d4825b148c210f7af0c7b251b95ef218065cd23f56be7078f24085"
    },
    {
      "number": 125,
      "lines": [
        "எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்",
        "செல்வர்க்கே செல்வம் தகைத்து."
      ],
      "manakkudavar": "அடங்கியொழுகல் எல்லார்க்கும் நன்மையாம்: அவரெல்லாரினுஞ் செல்வமுடையார்க்கே மிகவும் நன்மை யுடைத்தாம். செல்வம் - மிகுதி.",
      "pope": "To all humility is goodly grace; but chief to themWith fortune blessed, -'tis fortune's diadem",
      "sourceFile": "0125.md",
      "sourceSha256": "1dd9c66206d0117e13add92f51ba4aebbc33309bdb1d6f0948edb7918856ba0a"
    },
    {
      "number": 126,
      "lines": [
        "ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்",
        "எழுமையும் ஏமாப் புடைத்து."
      ],
      "manakkudavar": "ஒருபிறப்பிலே பொறிகளைந்தினையும் ஆமைபோல அடக்க வல்லவனாயின், அவனுக்கு அதுதானே எழுபிறப்பினுங் காவலாதலை யுடைத்து.",
      "pope": "Like tortoise, who the five restrainsIn one, through seven world bliss obtains",
      "sourceFile": "0126.md",
      "sourceSha256": "d95cc2f99a1198b23934f916197e43227e4a90413b67d50805d6d5ffb6f4f889"
    },
    {
      "number": 127,
      "lines": [
        "யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்",
        "சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு."
      ],
      "manakkudavar": "எல்லாவற்றையும் அடக்கிலராயினும் நாவொன்றினையும் அடக்குக: அதனை அடக்காக்காற் சொற்சோர்வுபட்டுத் தாமே சோகிப்பா ராதலான். இது சோகத்தின்மாட்டே பிணிக்கப் படுவரென்பது.",
      "pope": "Whate'er they fail to guard, o'er lips men guard should keep;If not, through fault of tongue, they bitter tears shall weep",
      "sourceFile": "0127.md",
      "sourceSha256": "8ccf8d5e8a398dc62a609d3985ad13439e75745ff24ed26f15f5906d575acdde"
    },
    {
      "number": 128,
      "lines": [
        "ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்",
        "நன்றாகா தாகி விடும்."
      ],
      "manakkudavar": "ஒரு சொல்லேயாயினும் கேட்டார்க்கு இனிதாயிருந்து தீயசொல்லின் பொருளைப் பயக்குமாயின், நன்மையாகாதாகியே விடும். இது சால மொழிகூறினாலுந் தீதாமென்றது.",
      "pope": "Though some small gain of good it seem to bring,The evil word is parent still of evil thing",
      "sourceFile": "0128.md",
      "sourceSha256": "ef44ee2f636f03e08b4642b5c5bf79324931614f7b85235c74ba7e1a0db2cd18"
    },
    {
      "number": 129,
      "lines": [
        "தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே",
        "நாவினாற் சுட்ட வடு."
      ],
      "manakkudavar": "தீயினாற் சுட்டபுண் உள்ளாறித் தீரும்: நாவினாற் சுட்ட புண் ஒருகாலத்தினுந் தீராது.",
      "pope": "In flesh by fire inflamed, nature may thoroughly heal the sore;In soul by tongue inflamed, the ulcer healeth never more",
      "sourceFile": "0129.md",
      "sourceSha256": "1111806be56321b42a23c77bcd476e03df05d6233a2701b8850b0943677d07b6"
    },
    {
      "number": 130,
      "lines": [
        "கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி",
        "அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து."
      ],
      "manakkudavar": "வெகுளியும் அடக்கிக் கல்வியுமுடையனாய் அதனால் வரும் பெருமிதமும் அடக்கவல்லவன்மாட்டு, அறமானது நெறியானே வருந்தித் தானே வருதற்குக் காலம் பார்க்கும். இஃது அடக்கமுடையார்க்கு அறமுண்டாமென்றது.",
      "pope": "Who learns restraint, and guards his soul from wrath,Virtue, a timely aid, attends his path",
      "sourceFile": "0130.md",
      "sourceSha256": "13fb6e8f07eb0090e7908b540a684cb10f34ed5b50b94c8e0f1c42cf1ee0de1f"
    },
    {
      "number": 131,
      "lines": [
        "ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்",
        "உயிரினும் ஓம்பப் படும்."
      ],
      "manakkudavar": "ஒழுக்கமுடைமை சீர்மையைத் தருதலானே, அவ்வொழுக்கத்தைத் தனது உயிரைக் காட்டினும் மிகக் காக்க வேண்டும். இஃது ஒழுக்கம் மேற்கூறிய நன்மையெல்லாந் தருமாதலின், அதனைத் தப்பாமற் செய்யவேண்டுமென்று வலியுறுத்திற்று.",
      "pope": "'Decorum' gives especial excellence; with greater care'Decorum' should men guard than life, which all men share",
      "sourceFile": "0131.md",
      "sourceSha256": "30b772ef211ec2efbd884f53a5ee510c64b337d2b770f9fa38e4033202af3c03"
    },
    {
      "number": 132,
      "lines": [
        "பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்",
        "தேரினும் அஃதே துணை."
      ],
      "manakkudavar": "வருந்திப் போற்றி யொழுக்கத்தினைக் காக்க: எல்லா வறங்களினும் நல்லதனைத் தெரிந்து அதனையுந் தப்பாமலாராய்ந்து பார்ப்பினும் தமக்கு அவ்வொழுக்கமே துணையாமாதலால். இஃது ஒழுக்கங் காக்கவேண்டுமென்றது.",
      "pope": "Searching, duly watching, learning, 'decorum' still we find;Man's only aid; toiling, guard thou this with watchful mind",
      "sourceFile": "0132.md",
      "sourceSha256": "a4ae585a424b60ccc110f0afcbb242e6982a02b715a1e4237d973eab37c11ff3"
    },
    {
      "number": 133,
      "lines": [
        "ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்",
        "இழிந்த பிறப்பாய் விடும்."
      ],
      "manakkudavar": "ஒருவன் இழிந்த குலத்தானாயினும் ஒழுக்க முடையவனாக உயர் குலத்தனாம்; அதனைத் தப்பி ஒழுகுவா னாயின், உயர்குலத்தினாயினும் இழிகுலத்தானாயே விடும். இது குலங்கெடுமென்றது.",
      "pope": "'Decorum's' true nobility on earth;'Indecorum's' issue is ignoble birth",
      "sourceFile": "0133.md",
      "sourceSha256": "0de02c6415e1f1cd49c55b44fa3464837f6a55f298347829543f4cad6f5e8275"
    },
    {
      "number": 134,
      "lines": [
        "மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்",
        "பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்."
      ],
      "manakkudavar": "பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும். இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று.",
      "pope": "Though he forget, the Brahman may regain his Vedic lore;Failing in 'decorum due,' birthright's gone for evermore",
      "sourceFile": "0134.md",
      "sourceSha256": "96b3367a5edd3e8460bb6a5092f0d4ec97f0a76be62cc1934702ce38316dfe70"
    },
    {
      "number": 135,
      "lines": [
        "அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை",
        "ஒழுக்க மிலான்கண் உயர்வு."
      ],
      "manakkudavar": "மனக்கோட்ட முடையவன்மாட்டு ஆக்கம் இல்லை யானாற் போல ஒழுக்கமில்லாதான் மாட்டு மிகுதியில்லையாம். இஃது உயர்ச்சியில்லையா மென்றது.",
      "pope": "The envious soul in life no rich increase of blessing gains,So man of 'due decorum' void no dignity obtains",
      "sourceFile": "0135.md",
      "sourceSha256": "33b8888cf9563991e7b39a6fb3e0297a47eb50f29c04005eb48b7a719e164daa"
    },
    {
      "number": 136,
      "lines": [
        "ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்",
        "ஏதம் படுபாக் கறிந்து."
      ],
      "manakkudavar": "ஒழுக்கத்தினின்று நீங்கார் அறிவுடையார்: அதனைத் தப்பினாற் குற்றம் வருதலை யறிந்து. இஃது இதனை அறிவுடையார் தவிராரென்றது. குற்றம் வருதல் பின்னே காணப்படும்.",
      "pope": "The strong of soul no jot abate of 'strict decorum's' laws,Knowing that 'due decorum's' breach foulest disgrace will cause",
      "sourceFile": "0136.md",
      "sourceSha256": "8e02a7b85d87339c9506897f056e310fd86d525f3fcbb34ff1a6eae5dcbfaf93"
    },
    {
      "number": 137,
      "lines": [
        "ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்",
        "எய்துவர் எய்தாப் பழி."
      ],
      "manakkudavar": "ஒழுக்கத்தாலே தமக்கு எய்தாத மேம்பாட்டை எய்துவர்; அஃதின்மையாலே தமக்கு அடாதபழியை எய்துவர்.",
      "pope": "'Tis source of dignity when 'true decorum' is preserved;Who break 'decorum's' rules endure e'en censures undeserved",
      "sourceFile": "0137.md",
      "sourceSha256": "ecdc770f9d5d764407fd85c78955dab4b8e7198ca921ac85d5d66493c84e7c36"
    },
    {
      "number": 138,
      "lines": [
        "நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்",
        "என்றும் இடும்பை தரும்."
      ],
      "manakkudavar": "முத்திக்கு விதையாகும் நல்லொழுக்கம்: தீயவொழுக்கம் என்றும் இடும்பையைத் தரும். தீயவொழுக்கம் நாடோறுந் துன்பத்தையே தருமென்றவாறு. என்றும்- இருமையின்கண்ணுமென்றவாறு.",
      "pope": "'Decorum true' observed a seed of good will be;'Decorum's breach' will sorrow yield eternally",
      "sourceFile": "0138.md",
      "sourceSha256": "a9447e34762c4e076a8237c408cc69e8bff433b666f8505b1bfef4f08e5bbd53"
    },
    {
      "number": 139,
      "lines": [
        "ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய",
        "வழுக்கியும் வாயாற் சொலல்."
      ],
      "manakkudavar": "தீமைபயக்குஞ் சொற்களை மறந்தும் தம்வாயாற் சொல்லுதல் ஒழுக்க முடையார்க்கு இயலாது.",
      "pope": "It cannot be that they who 'strict decorum's' law fulfil,E'en in forgetful mood, should utter words of ill",
      "sourceFile": "0139.md",
      "sourceSha256": "74c3ec5fac5dc0e4908c8e6fe02dcc3cea6c5d4ac1a858120f189a7932bd7a29"
    },
    {
      "number": 140,
      "lines": [
        "உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்",
        "கல்லார் அறிவிலா தார்"
      ],
      "manakkudavar": "அறிவிலாதார் பல நூல்களைக் கற்றாலும் உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதலை அறியார். இஃது ஒழுக்கமாவது உயர்ந்தாரொழுகின நெறியில் ஒழுகுதலென்பதூஉம் அவ்வொழுக்கம் கல்வியினும் வலி யுடைத்தென்பதூஉம் கூறிற்று.",
      "pope": "Who know not with the world in harmony to dwell,May many things have learned, but nothing well",
      "sourceFile": "0140.md",
      "sourceSha256": "20670f6640027d9b3795e7347f4a23b3461aae7abdf7d0c783e9c5347ed06776"
    },
    {
      "number": 141,
      "lines": [
        "பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து",
        "அறம்பொருள் கண்டார்கண் இல்."
      ],
      "manakkudavar": "பிறனுடைய பொருளாயிருப்பவளை விரும்பி யொழுகுகின்ற அறியாமை உலகத்து அறமும் பொருளும் அறிந்தார் மாட்டு இல்லையாம்.",
      "pope": "Who laws of virtue and possession's rights have known,Indulge no foolish love of her by right another's own",
      "sourceFile": "0141.md",
      "sourceSha256": "a2fdcc6ac1c8e85edd3db29a731a5e5af51108cbd46614c0000d358e1b2ec854"
    },
    {
      "number": 142,
      "lines": [
        "அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை",
        "நின்றாரின் பேதையார் இல்."
      ],
      "manakkudavar": "காமத்தின்கண்ணே நின்றார் எல்லாரினும், பிறனொருவன் கடைத்தலை பற்றி நின்றவர்களைப் போல் அறியாதாரில்லை.",
      "pope": "No fools, of all that stand from virtue's pale shut out,Like those who longing lurk their neighbour's gate without",
      "sourceFile": "0142.md",
      "sourceSha256": "69bd00a93138d1f708be97685a4ce0f5c6de0962457f9ca0a7fbae8ff9074e2e"
    },
    {
      "number": 143,
      "lines": [
        "விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்",
        "தீமை புரிந்து ஒழுகு வார்."
      ],
      "manakkudavar": "தம்மைத் தெளிந்தா ரில்லின்கண்ணே தீமையைப் பொருந்தி ஒழுகுவார் மெய்யாகச் செத்தாரின் வேறல்லர். இஃது அறம் பொருளின்பம் எய்தாமையின் பிணத்தோடொப்ப ரென்றது.",
      "pope": "They're numbered with the dead, e'en while they live, -how otherwise?With wife of sure confiding friend who evil things devise",
      "sourceFile": "0143.md",
      "sourceSha256": "e927c909b705f16db215a222d2f3133082c22da32c5c5c462ef1b0745d873b1a"
    },
    {
      "number": 144,
      "lines": [
        "எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்",
        "தேரான் பிறனில் புகல்."
      ],
      "manakkudavar": "எல்லாவமைதியினையும் உடையவராயினும், தினையளவுந் தேராது பிறனுடைய இல்லிலே புகுதல் யாதாய்ப் பயக்குமோ?. பிறனில் விழைவால் வருங் குற்றங் கூறுவார் முற்பட வெல்லாக் குணமுமிழியுமென்று கூறினார்.",
      "pope": "How great soe'er they be, what gain have they of life,Who, not a whit reflecting, seek a neighbour's wife",
      "sourceFile": "0144.md",
      "sourceSha256": "8d6df76337af6918fe53365ae2965b97ec723cfc0280e9af0e5a9160bf636968"
    },
    {
      "number": 145,
      "lines": [
        "எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்",
        "விளியாது நிற்கும் பழி."
      ],
      "manakkudavar": "தனக்கு எளிதென்று நினைத்துப் பிறனுடைய இல்லின் கண்ணே மிகுமவன் எல்லா நாளும் அழியாது நிற்கும் பழியைப் பெறுவான். இது பழியுண்டா மென்றது.",
      "pope": "'Mere triflel' saying thus, invades the home, so he ensuresA gain of guilt that deathless aye endures",
      "sourceFile": "0145.md",
      "sourceSha256": "944579c0f782724b44596c412efb83c84f6905b4f34a4fde4e79975fe887caff"
    },
    {
      "number": 146,
      "lines": [
        "பகைபாவம் அச்சம் பழியென நான்கும்",
        "இகவாவாம் இல்லிறப்பான் கண்."
      ],
      "manakkudavar": "பகையும் பாவமும் அச்சமும் பழியுமென்னும் நான்கு பொருளும் நீங்காவாம்: பிறனில்லின்கண்ணே மிகுவான் மாட்டு.",
      "pope": "Who home ivades, from him pass nevermore,Hatred and sin, fear, foul disgrace; these four",
      "sourceFile": "0146.md",
      "sourceSha256": "53754bdecef6e55184abfc577a0711ed47ef75c7b96057f7f96d4f5c08dcb37e"
    },
    {
      "number": 147,
      "lines": [
        "அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்",
        "பெண்மை நயவா தவன்."
      ],
      "manakkudavar": "அறநெறியானே யில்வாழ்வானென்று சொல்லப் படுவான். பிறன்வழியானவளது பெண்மையை விரும்பாதவன். இது பிறனில் விழையாமை வேண்டும் என்றது.",
      "pope": "Who sees the wife, another's own, with no desiring eyeIn sure domestic bliss he dwelleth ever virtuously",
      "sourceFile": "0147.md",
      "sourceSha256": "f15aa0bc0da424e3755a88e810f60c86d3ce98c2b5c435ee31979ce573041858"
    },
    {
      "number": 148,
      "lines": [
        "பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு",
        "அறனொன்றோ ஆன்ற வொழுக்கு."
      ],
      "manakkudavar": "பிறனது மனையாளைப் பாராத பெரியவாண்மைதானே சான்றோர்க்கு அறனும் அமைந்த வொழுக்கமுமாம். இஃது இதனை விரும்பாமைதானே அறனும் ஒழுக்கமுமென்றது.",
      "pope": "Manly excellence, that looks not on another's wife,Is not virtue merely, 'tis full 'propriety' of life",
      "sourceFile": "0148.md",
      "sourceSha256": "8881edb3f1486fa8e9a837346c3a313f0b949ad37d60ddaedd082d9821a8eaf8"
    },
    {
      "number": 149,
      "lines": [
        "நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்",
        "பிறர்க்குரியாள் தோள்தோயா தார்."
      ],
      "manakkudavar": "நலத்துக்கு உரியார் யாரெனின் நினைத்ததைத் தருகின்ற நீர் சூழ்ந்த வுலகத்தில் பிறனுக்கு உரியவளது தோளைத் தீண்டாதார். நலக்குரியார்- விரும்புதற்குரியார்.",
      "pope": "Who 're good indeed, on earth begirt by ocean's gruesome tide?The men who touch not her that is another's bride",
      "sourceFile": "0149.md",
      "sourceSha256": "46421d355ce9b6ea23afcc431a452417dd586e5e3cbeabf741455e97e14fdc90"
    },
    {
      "number": 150,
      "lines": [
        "அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்",
        "பெண்மை நயவாமை நன்று."
      ],
      "manakkudavar": "அறத்தை வரையாதே அறமல்லாதன செய்யினும் பிறனிடத்து ஆளானவளது பெண்மையை விரும்பாமை நன்று. இஃது ஓரறமுஞ் செய்திலனாயினும் நன்மை பயக்குமென்றது.",
      "pope": "Though virtue's bounds he pass, and evil deeds hath wrought;At least, 'tis good if neighbour's wife he covet not",
      "sourceFile": "0150.md",
      "sourceSha256": "19d8839b565d44dffb05b5111bb0fa9f9bcc64f7d093f5be9a0921ed3c24a9be"
    },
    {
      "number": 151,
      "lines": [
        "அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை",
        "இகழ்வார்ப் பொறுத்தல் தலை."
      ],
      "manakkudavar": "தன்னை யகழ்வாரைத் தரிக்கின்ற நிலம்போலத் தம்மை யிகழுபவர்களைப் பொறுத்தல் தலைமையாம். இது பொறுத்தானென் றிகழ்வாரில்லை; அதனைத் தலைமையாகக் கொள்வார் உலகத்தாரென்றது.",
      "pope": "As earth bears up the men who delve into her breast,To bear with scornful men of virtues is the best",
      "sourceFile": "0151.md",
      "sourceSha256": "eb5be4281b7716f8fda0a15c3879fd6e0b99bdcbca66e672f8bad1fd8baacc63"
    },
    {
      "number": 152,
      "lines": [
        "பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை",
        "மறத்தல் அதனினும் நன்று."
      ],
      "manakkudavar": "பிறர் செய்த மிகையினை யென்றும் பொறுத்தல் நன்று; அதனை மறத்தல் அப்பொறையினும் நன்று.",
      "pope": "Forgiving trespasses is good always;Forgetting them hath even higher praise;",
      "sourceFile": "0152.md",
      "sourceSha256": "57dd9aa88d3c0af33aea11a8d0f68fe14abe9017a36b596cde3fb601bfdae156"
    },
    {
      "number": 153,
      "lines": [
        "இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்",
        "வன்மை மடவார்ப் பொறை."
      ],
      "manakkudavar": "வலிமையின்மையுள் வைத்து வலியின்மையாவது புதுமையை நீக்காமை: வலியுடைமையுள் வைத்து வலியுடைமையாவது அறியாதாரைப் பொறுத்தல். புதுமை யென்றது கேட்டறியாதது. நீக்காமை- பொறுமை.",
      "pope": "The sorest poverty is bidding guest unfed depart;The mightiest might to bear with men of foolish heart",
      "sourceFile": "0153.md",
      "sourceSha256": "28524d8c8c6205b1e5f30d47fb85007500c0ff5fa4b287fd1c7b55f296d5835b"
    },
    {
      "number": 154,
      "lines": [
        "நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை",
        "போற்றி யொழுகப் படும்."
      ],
      "manakkudavar": "தனக்கு நிறையுடைமை நீங்காதொழிய வேண்டுவனாயின், பொறையுடைமையைப் பாதுகாத்தொழுக வேண்டும். நிறையென்பது காப்பன காத்துக் கடிவன கடிந்தொழுகும் ஒழுக்கம்.",
      "pope": "Seek'st thou honour never tarnished to retain;So must thou patience, guarding evermore, maintain",
      "sourceFile": "0154.md",
      "sourceSha256": "8e9f6a603107ace0d1b35c49b7ec18c493cc8f2ddb4648e3bcd271dd716d739f"
    },
    {
      "number": 155,
      "lines": [
        "ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்",
        "பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து."
      ],
      "manakkudavar": "தமக்குத் துன்பஞ் செய்தாரை மாறாக ஒறுத்தாரை யொரு பொருளாக மதித்து வையார். பொறுத்தாரைப் பொன்னைப் பொதிந்து வைத்தாற்போலப் போற்றுவார் உலகத்தார்.",
      "pope": "Who wreak their wrath as worthless are despised;Who patiently forbear as gold are prized",
      "sourceFile": "0155.md",
      "sourceSha256": "4a13c9b7dbc2880da07c50811f61cb613efca86e7711b12cc0129d81e42a9434"
    },
    {
      "number": 156,
      "lines": [
        "ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்",
        "பொன்றுந் துணையும் புகழ்."
      ],
      "manakkudavar": "ஒறுத்தவர்க்கு அற்றைநாளை யின்பமே உண்டாம்: பொறுத்தவர்க்குத் தாம் சாமளவும் புகழுண்டாம். இது புகழுண்டா மென்றது.",
      "pope": "Who wreak their wrath have pleasure for a day;Who bear have praise till earth shall pass away",
      "sourceFile": "0156.md",
      "sourceSha256": "fbf26ec29a16fb908c2968c870ff61b89bdaec80106657b6767a44e823591d25"
    },
    {
      "number": 157,
      "lines": [
        "திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து",
        "அறனல்ல செய்யாமை நன்று."
      ],
      "manakkudavar": "தகுதியல்லாதவற்றைத் தனக்குப் பிறர்செய்தாராயினும் அவற்றைத் தானுஞ் செய்தால் அவர்க்கு உளதாம் நோவுக்கு நொந்து அறமல்லாதவற்றைச் செய்யாமை நன்று.",
      "pope": "Though others work thee ill, thus shalt thou blessing reap;Grieve for their sin, thyself from vicious action keep",
      "sourceFile": "0157.md",
      "sourceSha256": "efa4001bca3d76e7120c0bd2ed89523f1d76b4c5785bf1330d806e57069c8992"
    },
    {
      "number": 158,
      "lines": [
        "மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்",
        "தகுதியான் வென்று விடல்."
      ],
      "manakkudavar": "தமது செல்வ மிகுதியாலே மிகையானவற்றைச் செய்தவர்களைத் தாங்கள் தமது பொறையினாலே வென்று விடுக. இது பொறுத்தானென்பது தோல்வியாகாது: அதுதானே வெற்றியாமென்றது.",
      "pope": "With overweening pride when men with injuries assail,By thine own righteous dealing shalt thou mightily prevail",
      "sourceFile": "0158.md",
      "sourceSha256": "ad021113d7d46ec02ff294f4c8ec41b1d1c8979e87ecf50c10bdd9475ffa8463"
    },
    {
      "number": 159,
      "lines": [
        "துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்",
        "இன்னாச்சொல் நோற்கிற் பவர்."
      ],
      "manakkudavar": "மிகையாய்ச் சொல்லுவாரது தீச்சொல்லைப் பொறுக்குமவர், துறந்தவர்களைப் போலத் தூய்மை யுடையார். இது பற்றறத் துறந்தவரோ டொப்பரென்றது.",
      "pope": "They who transgressors' evil words endureWith patience, are as stern ascetics pure",
      "sourceFile": "0159.md",
      "sourceSha256": "92e99e609db2d2a66600517e46926ac409beef4e078604d6fa107c9bc3d5db89"
    },
    {
      "number": 160,
      "lines": [
        "உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்",
        "இன்னாச்சொல் நோற்பாரின் பின்."
      ],
      "manakkudavar": "உண்ணாது பொறுப்பார் எல்லாரினும் பெரியர்: அவர் பெரியாராவது பிறர் சொல்லுங் கடுஞ்சொல்லைப் பொறுப்பாரின் பின், இது தவம் பண்ணுவாரினும் பெரியதென்றது.",
      "pope": "Though 'great' we deem the men that fast and suffer pain,Who others' bitter words endure, the foremost place obtain",
      "sourceFile": "0160.md",
      "sourceSha256": "263150b2d4a02978ac56f5c88bed5228fa672e1991ec37096d9f667ca28b5049"
    },
    {
      "number": 161,
      "lines": [
        "ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து",
        "அழுக்காறு இலாத இயல்பு."
      ],
      "manakkudavar": "ஒருவன் தன்னெஞ்சத்து அழுக்காறு இல்லாத வியல்பைத் தனக்கு ஒழுக்க நெறியாகக் கொள்க. இஃது அழுக்காறு தவிரவேண்டு மென்றது.",
      "pope": "As 'strict decorum's' laws, that all men bind,Let each regard unenvying grace of mind",
      "sourceFile": "0161.md",
      "sourceSha256": "027245a788ce7c6387bef2748fb0f5bfa3793dd9d564aac5e20f2d41f1ab57c7"
    },
    {
      "number": 162,
      "lines": [
        "விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்",
        "அழுக்காற்றின் அன்மை பெறின்."
      ],
      "manakkudavar": "விழுமிய பேறுகளுள் யார் மட்டும் அழுக்காறு செய்யாமையைப் பெறுவனாயின், அப்பெற்றியினை யொப்பது பிறிதில்லை. இஃது அழுக்காறு செய்யாமை யெல்லா நன்மையினும் மிக்கதென்றது.",
      "pope": "If man can learn to envy none on earth,'Tis richest gift, -beyond compare its worth",
      "sourceFile": "0162.md",
      "sourceSha256": "1d0b60d22ab35f52927ccd7652ccba7207d61590f52bc8b4ff5f3ce55ee0f433"
    },
    {
      "number": 163,
      "lines": [
        "அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்",
        "பேணாது அழுக்கறுப் பான்."
      ],
      "manakkudavar": "தனக்கு அறனாகிய வாழ்வு வேண்டாதானென்று சொல்லப்படுவான், பிறனுடைய ஆக்கத்தை விரும்பாதே அழுக்காறு செய்வான். இஃது அழுக்காறுடையார்க்குப் புண்ணிய மில்லையாமென்று கூறிற்று.",
      "pope": "Nor wealth nor virtue does that man desire 'tis plain,Whom others' wealth delights not, feeling envious pain",
      "sourceFile": "0163.md",
      "sourceSha256": "8b359fd3cf40f85c540bbf5b6dc32d05b42b0d34aabaee9534b3b6ba65caa33c"
    },
    {
      "number": 164,
      "lines": [
        "அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்",
        "ஏதம் படுபாக்கு அறிந்து."
      ],
      "manakkudavar": "அழுக்காற்றினானே அறமல்லாதவற்றைச் செய்யார்: நல்லோர் அவ்வறத்தைத் தப்பின நெறியினாற் குற்றம் வருவதை யறிந்து.",
      "pope": "The wise through envy break not virtue's laws,Knowing ill-deeds of foul disgrace the cause",
      "sourceFile": "0164.md",
      "sourceSha256": "79d83e96bae07aa44609e31f7b5b4c9ee5308528a9601264ee217df48c2bfe1c"
    },
    {
      "number": 165,
      "lines": [
        "அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்",
        "வழுக்காயும் கேடீன் பது."
      ],
      "manakkudavar": "அழுக்காறுடையார்க்கு அவ்வழுக்காறு தானே அமையும்: பகைவர் கேடுபயத்தல் தப்பியும் கெடுப்பதற்கு, இஃது உயிர்க்குக் கேடுவருமென்று கூறிற்று.",
      "pope": "Envy they have within! Enough to seat their fate!Though foemen fail, envy can ruin consummate",
      "sourceFile": "0165.md",
      "sourceSha256": "fcb38fcc9a5635f77a530eaea2ceed9229c51ffa5e39dec88abffd00d822fc99"
    },
    {
      "number": 166,
      "lines": [
        "கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்",
        "உண்பதூஉம் இன்றிக் கெடும்."
      ],
      "manakkudavar": "பிறனொருவன் மற்றொருவனுக்குக் கொடுப்பதனை அழுக்காற்றினாலே விலக்குமவனது சுற்றம் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும். இது நல்குரவு தருமென்றது.",
      "pope": "Who scans good gifts to others given with envious eye,His kin, with none to clothe or feed them, surely die",
      "sourceFile": "0166.md",
      "sourceSha256": "812175a9476cbb38cfaafa8da5e645f70b152626b3aa86bce3586aa436c57163"
    },
    {
      "number": 167,
      "lines": [
        "அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்",
        "தவ்வையைக் காட்டி விடும்."
      ],
      "manakkudavar": "அழுக்காறுடையானைத் திருமகள் தானும் அழுக்காறு செய்து, தன் தவ்வையாகிய மூதேவிக்குக் காட்டி இவன்பாற் செல்லென்று போம், இது நல்குரவிற்குக் காரணங் கூறிற்று.",
      "pope": "From envious man good fortune's goddess turns away,Grudging him good, and points him out misfortune's prey",
      "sourceFile": "0167.md",
      "sourceSha256": "89994e16518e60d741f1997bba9877e8a8f75bf53da5e72fe9776f2d92bbd298"
    },
    {
      "number": 168,
      "lines": [
        "அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்",
        "தீயுழி உய்த்து விடும்."
      ],
      "manakkudavar": "அழுக்காற்றைச் செய்து பெரியராயினாரும் இல்லை: அச்செயலிலாதார் பெருக்கத்தி னீங்கினாரு மில்லை.",
      "pope": "Envy, embodied ill, incomparable bane,Good fortune slays, and soul consigns to fiery pain",
      "sourceFile": "0168.md",
      "sourceSha256": "7cf90e17f0b983d2340e2d22cccd198698f6d04598184c9e5ca632c5581f4738"
    },
    {
      "number": 169,
      "lines": [
        "அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்",
        "கேடும் நினைக்கப் படும்."
      ],
      "manakkudavar": "அழுக்காற்று நெஞ்சத்தானுடைய ஆக்கமும் செவ்விய நெஞ்சத்தானுடைய கேடும் விசாரிக்கப்படும்.",
      "pope": "To men of envious heart, when comes increase of joy,Or loss to blameless men, the 'why' will thoughtful hearts employ",
      "sourceFile": "0169.md",
      "sourceSha256": "2ea83f62eee00beb9a1fc7eed6d6fde094a00ea8a9967dfddcf3c8b1eb4f8f62"
    },
    {
      "number": 170,
      "lines": [
        "அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்",
        "பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்."
      ],
      "manakkudavar": "அழுக்காறென்று சொல்லப்படுகின்ற வொருபாவி செல்வத்தையுங் கெடுத்துத் தீக்கதியுள்ளுங் கொண்டு செலுத்தி விடும். ஒரு பாவி- நிகரில்லாத பாவி, இது செல்வங் கெடுத்தலே யன்றி நரகமும் புகுவிக்கு மென்றது.",
      "pope": "No envious men to large and full felicity attain;No men from envy free have failed a sure increase to gain",
      "sourceFile": "0170.md",
      "sourceSha256": "1699c95b8ef38e40c2fa2a8ccaa85e3140ac9004af336cdac5490138fd6723d3"
    },
    {
      "number": 171,
      "lines": [
        "நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்",
        "குற்றமும் ஆங்கே தரும்."
      ],
      "manakkudavar": "நடுவுநிலைமையின்றி மிக்க பொருளை விரும்புவானாயின் அதனானே குலமுங்கெட்டு அவ்விடத்தே குற்றமுமுண்டாம், இது சந்தான நாச முண்டாமென்றது.",
      "pope": "With soul unjust to covet others' well-earned store,Brings ruin to the home, to evil opes the door",
      "sourceFile": "0171.md",
      "sourceSha256": "2186853272635604bc15f287cc79d28ddf043100639b952fba8a0ca5acb62756"
    },
    {
      "number": 172,
      "lines": [
        "படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்",
        "நடுவன்மை நாணு பவர்."
      ],
      "manakkudavar": "தமக்குப் பயனுண்டாக வேண்டிப் பழியொடுபடுவன செய்யார், நடுவன்மைக்கு நாணுபவர். இது நடுவுநிலைமை வேண்டுபவர் செய்யாரென்றது.",
      "pope": "Through lust of gain, no deeds that retribution bring,Do they, who shrink with shame from every unjust thing",
      "sourceFile": "0172.md",
      "sourceSha256": "d88986957580dca809ace874109880470c29f3bcd6ade750e9ef27e3c42b4883"
    },
    {
      "number": 173,
      "lines": [
        "சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே",
        "மற்றின்பம் வேண்டு பவர்."
      ],
      "manakkudavar": "சிற்றின்பமாகிய பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் செய்யார் பேரின்பமாகிய வீடுபேற்றைக் காமிப்பவர். இது வீடுபெற வேண்டுவார் செய்யாரென்றது.",
      "pope": "No deeds of ill, misled by base desire,Do they, whose souls to other joys aspire",
      "sourceFile": "0173.md",
      "sourceSha256": "f7a3b2c2ff1143fde904293ab62c6815832ce949e5e1fdb411d35709d40c4cb6"
    },
    {
      "number": 174,
      "lines": [
        "இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற",
        "புன்மையில் காட்சி யவர்."
      ],
      "manakkudavar": "வறிய மென்று பிறர்பொருளை விரும்புதல் செய்யார்: ஐம்புலனையும் வென்ற புன்மையிலாத தெளிவுடையார். இது தெளிவுடையார் செய்யா ரென்றது.",
      "pope": "Men who have conquered sense, with sight from sordid vision freed,Desire not other's goods, e'en in the hour of sorest need",
      "sourceFile": "0174.md",
      "sourceSha256": "2373ea700d100c590f8fd89b4ba394272415d420ecdf7cdea9803c015a7073d8"
    },
    {
      "number": 175,
      "lines": [
        "அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்",
        "வெஃகி வெறிய செயின்."
      ],
      "manakkudavar": "நுண்ணிதாகப் பரந்த அறிவுடையானாயினும் அதனாற் பயன் யாதாம்? எல்லார் மாட்டும் பொருளை விரும்பி யீரமில்லாதன செய்வனாயின், இஃது அறிவுடையார் செய்யாரென்றது.",
      "pope": "What gain, though lore refined of amplest reach he learn,His acts towards all mankind if covetous desire to folly turn",
      "sourceFile": "0175.md",
      "sourceSha256": "e6386bed915579158bcdba812ee70b6c597b7ddd14d67a06ef1b4404f86a8ae6"
    },
    {
      "number": 176,
      "lines": [
        "அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்",
        "பொல்லாத சூழக் கெடும்."
      ],
      "manakkudavar": "அருளை விரும்பி யறனெறியிலே நின்றவனும் பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் சூழக் கெடுவன், இஃது அருளுடையானுங் கெடுவனென்றது.",
      "pope": "Though, grace desiring, he in virtue's way stand strong,He's lost who wealth desires, and ponders deeds of wrong",
      "sourceFile": "0176.md",
      "sourceSha256": "40e1c03c49a7b29ec45cfa72d403797fb083999f9aab25ff417fb3b792f5076c"
    },
    {
      "number": 177,
      "lines": [
        "வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்",
        "மாண்டற் கரிதாம் பயன்."
      ],
      "manakkudavar": "பிறர்பொருளை விரும்பிப் பெறுகின்ற ஆக்கத்தை வேண்டாதொழிக; அது பயன்படுங் காலத்தில் ஆகும் பயன் நன்றாதலில்லையாதலான்.",
      "pope": "Seek not increase by greed of gain acquired;That fruit matured yields never good desired",
      "sourceFile": "0177.md",
      "sourceSha256": "8927eac2287a48646bb268dfc4ad3179ee6aae83251752d25a8bb851e0bbf34d"
    },
    {
      "number": 178,
      "lines": [
        "அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை",
        "வேண்டும் பிறன்கைப் பொருள்."
      ],
      "manakkudavar": "செல்வஞ் சுருங்காமைக்குக் காரண மியாதோவெனின், பிறன் வேண்டுங் கைப்பொருளைத் தான் வேண்டாமை, இது செல்வ மழியாதென்றது.",
      "pope": "What saves prosperity from swift decline?Absence of lust to make another's cherished riches thine",
      "sourceFile": "0178.md",
      "sourceSha256": "f51eec4922c59f6826edb0e6ca79052d985d953c01d7b0dba028ac3fa4d918b3"
    },
    {
      "number": 179,
      "lines": [
        "அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்",
        "திறன்அறிந் தாங்கே திரு."
      ],
      "manakkudavar": "அறத்தை யறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தானே தகுதியறிந்து அப்போதே சேரும், அறனறிதல்- விரும்பாமை யென்றறிதல். இது செல்வமுண்டாமென்றது.",
      "pope": "Good fortune draws anigh in helpful time of need,To him who, schooled in virtue, guards his soul from greed",
      "sourceFile": "0179.md",
      "sourceSha256": "0d4ced22ea2a8551229cb2f24e6bec7bc2b18aa9baabda3f40d17c65ecabdc12"
    },
    {
      "number": 180,
      "lines": [
        "இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்",
        "வேண்டாமை என்னுஞ் செருக்கு."
      ],
      "manakkudavar": "விசாரியாதே பிறர் பொருளை விரும்புவானாயின் அது கேட்டைத் தரும். அதனை வேண்டாமையாகிய பெருமிதம் ஆக்கத்தைத்தரும். இஃது உயிர்க்குக் கேடு தருமென்றது.",
      "pope": "From thoughtless lust of other's goods springs fatal ill,Greatness of soul that covets not shall triumph still",
      "sourceFile": "0180.md",
      "sourceSha256": "04489b9aa2f3d1cdb0774f5ca1f6b4d617ae88e5ad539476c0974fa0d20eb462"
    },
    {
      "number": 181,
      "lines": [
        "அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்",
        "புறங்கூறான் என்றல் இனிது."
      ],
      "manakkudavar": "ஒருவன் அறத்தை வாயாற் சொல்லுதலுஞ் செய்யானாய்ப் பாவஞ் செய்யினும் பிறரைப் புறஞ் சொல்லானென்று உலகத்தாரால் கூறப்படுதல் நன்றாம், இது பாவஞ்செய்யினும் நன்மை பயக்கும் என்றது.",
      "pope": "Though virtuous words his lips speak not, and all his deeds are illIf neighbour he defame not, there's good within him still",
      "sourceFile": "0181.md",
      "sourceSha256": "59246a9009bf0d4d200dbb58197c56daf77e4d1588e4472181aef3314a87ba61"
    },
    {
      "number": 182,
      "lines": [
        "அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே",
        "புறனழீஇப் பொய்த்து நகை."
      ],
      "manakkudavar": "அறத்தை யழித்து அறமல்லாதவற்றைச் செய்வதனினும் தீது, ஒருவனைக் காணாத விடத்து இழித்துரைத்துக் கண்டவிடத்துப் பொய் செய்து நகுதல். இது பாவத்தினும் மிகப் பாவமென்றது.",
      "pope": "Than he who virtue scorns, and evil deeds performs, more vile,Is he that slanders friend, then meets him with false smile",
      "sourceFile": "0182.md",
      "sourceSha256": "c3f94a777aa38c7986bffa3317263a04c6e3558f24db2a49d0c25dbd803d1418"
    },
    {
      "number": 183,
      "lines": [
        "புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்",
        "அறங்கூற்றும் ஆக்கத் தரும்."
      ],
      "manakkudavar": "காணாவிடத்துப் புறஞ்சொல்லிக் கண்டவிடத்துப் பொய்செய்து உயிரோடு வாழ்தலின் புறங்கூறாதிருந்து நல்குரவினாற் சாதல் அறநூல் சொல்லுகின்ற ஆக்க மெல்லாந் தரும்.",
      "pope": "'Tis greater gain of virtuous good for man to die,Than live to slander absent friend, and falsely praise when nigh",
      "sourceFile": "0183.md",
      "sourceSha256": "1eb88ff6ba802a6fed4462191de48e9e4dea70e0394069dac243575b5f1e8e86"
    },
    {
      "number": 184,
      "lines": [
        "கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க",
        "முன்னின்று பின்நோக்காச் சொல்."
      ],
      "manakkudavar": "ஒருவன் கண்ணெதிரே நின்று கண்பார்த்த லொழியச் சொல்லினும் அமையும்; பிற்காலத்து அவன் முன்னே நின்று எதிர் முகம் நோக்க வொண்ணாத சொல்லைச் சொல்லா தொழிக, இது புறங் கூறுதல் தவிர்க வென்றது: இதனாற் கடிய சொற் கூறலும் ஆகாதென்றது.",
      "pope": "In presence though unkindly words you speak, say notIn absence words whose ill result exceeds your thought",
      "sourceFile": "0184.md",
      "sourceSha256": "7d1a70b79890a3c4a707fa2a61b2428013346729723c2855a07977b1942f1575"
    },
    {
      "number": 185,
      "lines": [
        "அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்",
        "புன்மையாற் காணப் படும்."
      ],
      "manakkudavar": "ஒருவன் அறத்தை நினைக்கின்ற மனமுடையனல்லாமை, அவன் பிறரைப் புறஞ்சொல்லும் புல்லியகுண மேதுவாக அறியப்படும். இஃது இதனைச் சொல்லுவார் அறமறியா ரென்றது.",
      "pope": "The slanderous meanness that an absent friend defames,'This man in words owns virtue, not in heart,' proclaims",
      "sourceFile": "0185.md",
      "sourceSha256": "a8d74ca49b399059b300bd5284eaed2184ff482935560c64bed446cbf0a3dc0b"
    },
    {
      "number": 186,
      "lines": [
        "பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்",
        "திறன்தெரிந்து கூறப் படும்."
      ],
      "manakkudavar": "பிறனுடைய பழியைச் சொல்லுமவன் தனக்குண்டான பழிகளிலுஞ் சிலவற்றை வேறுபடத் தெரிந்து பிறராற் சொல்லப் படுவன்.",
      "pope": "Who on his neighbours' sins delights to dwell,The story of his sins, culled out with care, the world will tell",
      "sourceFile": "0186.md",
      "sourceSha256": "8f172c8119ab5b03ef82481d6712b1f393b86f16cf867f88eeaf924ce0dedf13"
    },
    {
      "number": 187,
      "lines": [
        "பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி",
        "நட்பாடல் தேற்றா தவர்."
      ],
      "manakkudavar": "நீங்கும்படி சொல்லித் தங் கேளிரானாரைப் பிரிப்பர்: மகிழச் சொல்லி நட்பாடலை உயர்வுபண்ண மாட்டாதார். இது நட்டவரை யிழப்பர் என்றது.",
      "pope": "With friendly art who know not pleasant words to say,Speak words that sever hearts, and drive choice friends away",
      "sourceFile": "0187.md",
      "sourceSha256": "e61d83be7518702fc1730e11f13f86fee3a1cec9228cba12b8af248a767d96ba"
    },
    {
      "number": 188,
      "lines": [
        "துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்",
        "என்னைகொல் ஏதிலார் மாட்டு."
      ],
      "manakkudavar": "தம்மோடு செறிந்தார் குற்றத்தையும் பிறர்க்கு உரைக்கின்ற சேதியை யுடையார் செறிவில்லாதார்மாட்டு யாங்ஙனஞ் செய்வாரோ? இது யாவரோடும் பற்றிலரென்றது.",
      "pope": "Whose nature bids them faults of closest friends proclaimWhat mercy will they show to other men's good name",
      "sourceFile": "0188.md",
      "sourceSha256": "48994a7a6e4d6ed39b660d993134f8a06060513df730f1b03692014f457efe2d"
    },
    {
      "number": 189,
      "lines": [
        "அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்",
        "புன்சொல் உரைப்பான் பொறை."
      ],
      "manakkudavar": "பிறனில்லாதவிடம் பார்த்துப் புறஞ்சொற் கூறுவானது உடற்பாரத்தை நிலம் தானே அறத்தை நோக்கிப் பொறுத்ததாம்: அல்லது போக்கும். இது புறங்கூறுவார்க்குத் துணையாவாரில்லை யென்றது.",
      "pope": "'Tis charity, I ween, that makes the earth sustain their loadWho, neighbours' absence watching, tales or slander tell abroad",
      "sourceFile": "0189.md",
      "sourceSha256": "229ace02e1541460524959a8e3604d2554291662795e450c6df33d2b54b30a72"
    },
    {
      "number": 190,
      "lines": [
        "ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்",
        "தீதுண்டோ மன்னும் உயிர்க்கு."
      ],
      "manakkudavar": "பிறனில்லாதவிடம் பார்த்துப் புறஞ்சொற் கூறுவானது உடற்பாரத்தை நிலம் தானே அறத்தை நோக்கிப் பொறுத்ததாம்: அல்லது போக்கும். இது புறங்கூறுவார்க்குத் துணையாவாரில்லை யென்றது.",
      "pope": "If each his own, as neighbours' faults would scan,Could any evil hap to living man",
      "sourceFile": "0190.md",
      "sourceSha256": "9e2dbb069832f934257cfe855cb916ba5538b0582d7f59bfe283c071d12fd504"
    },
    {
      "number": 191,
      "lines": [
        "பல்லார் முனியப் பயனில சொல்லுவான்",
        "எல்லாரும் எள்ளப் படும்."
      ],
      "manakkudavar": "பயனில்லாதவற்றைப் பலர் வெறுக்கச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.",
      "pope": "Words without sense, while chafe the wise,Who babbles, him will all despise",
      "sourceFile": "0191.md",
      "sourceSha256": "19a3d43aa40957823a7449bc3bb461267cb01de50d6a0f8ae517777ba98b1efb"
    },
    {
      "number": 192,
      "lines": [
        "பயனில பல்லார்முன் சொல்லல் நயனில",
        "நட்டார்கண் செய்தலிற் றீது."
      ],
      "manakkudavar": "பயனில்லாத சொல்லைக் கொண்டாடுவானை மகனென்னாதொழிக; மக்களில் பதரென்று சொல்லுக, இது மக்கட் பண்பிலனென்றது.",
      "pope": "Words without sense, where many wise men hear, to pourThan deeds to friends ungracious done offendeth more",
      "sourceFile": "0192.md",
      "sourceSha256": "c7f241a83cc16211dbad18ae1b3dda36b494ae2e0e8712cbedd358c75aff6576"
    },
    {
      "number": 193,
      "lines": [
        "நயனிலன் என்பது சொல்லும் பயனில",
        "பாரித் துரைக்கும் உரை."
      ],
      "manakkudavar": "நயனுடைய னல்லனென்பதனை யறிவிக்கும், பயனில்லாதவற்றைப் பரக்க விட்டுச் சொல்லுஞ் சொற்கள், இது பயனில சொல்வார் இம்மையின்கண் பிறரால் இயம்பப் படாரென்றது.",
      "pope": "Diffusive speech of useless words proclaimsA man who never righteous wisdom gains",
      "sourceFile": "0193.md",
      "sourceSha256": "c71fd63cd29f27d25b6033d53ae22a2409be6c3a1f799bf565f4af20fcffa864"
    },
    {
      "number": 194,
      "lines": [
        "நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்",
        "பண்பில்சொல் பல்லா ரகத்து."
      ],
      "manakkudavar": "ஒருவன் ஒரு பயனைச் சாராத பண்பில்லாச் சொல்லைப் பலரிடத்துக் கூறுவானாயின் அவன் நடு சாராது நன்மையினீங்கும். இது விரும்பப்படாமையுமன்றி நன்மையும் பயவாதென்றது.",
      "pope": "Unmeaning, worthless words, said to the multitude,To none delight afford, and sever men from good",
      "sourceFile": "0194.md",
      "sourceSha256": "73e3de10979b5e93c96fc38b3a875eda901c917b9c82c2f88b1757a2b994c587"
    },
    {
      "number": 195,
      "lines": [
        "சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில",
        "நீர்மை யுடையார் சொலின்."
      ],
      "manakkudavar": "பயனில்லாதவற்றை நீர்மையுடையார் கூறுவாராயின் அவர்க்கு உண்டான சீர்மையும் சிறப்பும் போம் இது நீர்மையுடையா ராயினும் எல்லா நன்மையும் போமென்றது.",
      "pope": "Gone are both fame and boasted excellence,When men of worth speak of words devoid of sense",
      "sourceFile": "0195.md",
      "sourceSha256": "8f45d0fb8616109be59970aaad634100ea8dbf7602f956cab4ef836587eb616a"
    },
    {
      "number": 196,
      "lines": [
        "பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்",
        "மக்கட் பதடி யெனல்."
      ],
      "manakkudavar": "பயனில்லாதவற்றைப் பலர் முன்பு கூறுதல், விருப்பமில்லாதவற்றை நட்டார் மாட்டுச் செய்தலினுந் தீதே, இது பயனில சொல்லல் இம்மை மறுமை யிரண்டின் கண்ணுந் தீமை பயக்கு மென்றது.",
      "pope": "Who makes display of idle words' inanity,Call him not man, -chaff of humanity",
      "sourceFile": "0196.md",
      "sourceSha256": "97efca53722e871b48f3053eb5f6fc6c224c9593f9ed82bc00b1cf9015dced01"
    },
    {
      "number": 197,
      "lines": [
        "நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்",
        "பயனில சொல்லாமை நன்று."
      ],
      "manakkudavar": "சான்றோர் நயனில்லாதவற்றைச் சொல்லினுஞ் சொல்லுக, அமையும்; பயனில்லாதவற்றைச் சொல்லாமை நன்று. இது சான்றோர்க்கு ஆகாதென்றது.",
      "pope": "Let those who list speak things that no delight afford,'Tis good for men of worth to speak no idle word",
      "sourceFile": "0197.md",
      "sourceSha256": "f33ccb2e7c72e3a7e3af0974d6978d323a0bc326b765d38a0ffc180940f72e8b"
    },
    {
      "number": 198,
      "lines": [
        "அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்",
        "பெரும்பயன் இல்லாத சொல்."
      ],
      "manakkudavar": "அரிய பொருளை யாராயும் அறிவினையுடையார் சொல்லார்; பெரிய பயனில்லாத சொற்களை, இது மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின் இதனை யறிவுடையார் கூறாரென்றது.",
      "pope": "The wise who weigh the worth of every utterance,Speak none but words of deep significance",
      "sourceFile": "0198.md",
      "sourceSha256": "2faa95bc139f4b0a1b902a75fff69b2bee7f86e96d694b3b303fd029282bb4cf"
    },
    {
      "number": 199,
      "lines": [
        "பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த",
        "மாசறு காட்சி யவர்."
      ],
      "manakkudavar": "பொருளில்லாத சொல்லை மறந்துஞ் சொல்லார்; மயக்கந் தீர்ந்த குற்றமற்ற தெளிவினை யுடையார், இது தெளிவுடையார் கூறாரென்றது.",
      "pope": "The men of vision pure, from wildering folly free,Not e'en in thoughtless hour, speak words of vanity",
      "sourceFile": "0199.md",
      "sourceSha256": "e00a7d782c4e8438685d0881fd49574e568efec9b771ca9c0a36d0b132abc088"
    },
    {
      "number": 200,
      "lines": [
        "சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க",
        "சொல்லிற் பயனிலாச் சொல்."
      ],
      "manakkudavar": "சொல்லுவனாயின் பயனுடைய சொற்களைச் சொல்லுக: சொற்களிற் பயனில்லாத சொற்களைச் சொல்லா தொழிக. இது பயனில சொல்லாமை வேண்டுமென்றது.",
      "pope": "If speak you will, speak words that fruit afford,If speak you will, speak never fruitless word",
      "sourceFile": "0200.md",
      "sourceSha256": "8b609015d6cc3d1840fba8d10cf11f05cb215121dc632d5973355e64e3632fff"
    },
    {
      "number": 201,
      "lines": [
        "தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்",
        "தீவினை என்னும் செருக்கு."
      ],
      "manakkudavar": "என்றுந் தீத்தொழில் செய்வா ரஞ்சார்: சீரியரஞ்சுவர், தீவினையாகிய களிப்பை. இஃது இதற்கு நல்லோ ரஞ்சுவ ரென்றது.",
      "pope": "With sinful act men cease to feel the dread of ill within,The excellent will dread the wanton pride of cherished sin",
      "sourceFile": "0201.md",
      "sourceSha256": "4d5099a7e6828fe86c19dce30e82ec7602e102832792c377d81edab11b8c2000"
    },
    {
      "number": 202,
      "lines": [
        "தீயவை தீய பயத்தலால் தீயவை",
        "தீயினும் அஞ்சப் படும்."
      ],
      "manakkudavar": "தீத்தொழிலானவை தமக்குத் தீமை பயத்தலானே, அத்தொழில்கள் தொடிற் சுடுமென்று தீக்கு அஞ்சுதலினும் மிக அஞ்சப்படும்.",
      "pope": "Since evils new from evils ever grow,Evil than fire works out more dreaded woe",
      "sourceFile": "0202.md",
      "sourceSha256": "2e4b95c727fc11de30d25f04737c8d5b3b0e0553840cff5d063f98c6ea6871fa"
    },
    {
      "number": 203,
      "lines": [
        "அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய",
        "செறுவார்க்கும் செய்யா விடல்."
      ],
      "manakkudavar": "எல்லா அறங்களையும் அறியும் அறிவு எல்லாவற்றுள்ளும் தலையான அறிவென்று சொல்லுவர் நல்லோர்; தமக்குத் தீமை செய்வார்க்குந் தாம் தீமை செய்யாதொழிதலை. இஃது எல்லாவற்றுள்ளுந் தலைமை யுடைத்தென்றது.",
      "pope": "Even to those that hate make no return of ill;So shalt thou wisdom's highest law, 'tis said, fulfil",
      "sourceFile": "0203.md",
      "sourceSha256": "636ad4e73ab630d6669ffd5feeea99d8fb221e829b97e72e85237486a4c418af"
    },
    {
      "number": 204,
      "lines": [
        "மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்",
        "அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு."
      ],
      "manakkudavar": "பிறனுக்குக் கேட்டை மறந்துஞ் சூழாதொழிக: சூழ்வனாயின் அவனாற் சூழப்பட்டவன் அதற்கு மாறாகக் கேடு சூழ்வதன்முன்னே சூழ்ந்தவனுக்குக் கேட்டைத் தீமை செய்தார்க்குத் தீமை பயக்கும் அறந்தானே சூழும். இது தீமை நினையினுங் கேடு தருமென்றது.",
      "pope": "Though good thy soul forget, plot not thy neighbour's fall,Thy plans shall 'virtue's Power' by ruin to thyself forestall",
      "sourceFile": "0204.md",
      "sourceSha256": "a371ea7e3164446537ba18c0fb6ed08208517b6fb78fdf4f05d39d13445d2b4c"
    },
    {
      "number": 205,
      "lines": [
        "இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்",
        "இலனாகும் மற்றும் பெயர்த்து."
      ],
      "manakkudavar": "நல்கூர்ந்தேமென்று நினைத்துச் செல்வத்தைக் கருதி தீவினையைச் செய்யாதொழிக; செய்வானாயின் பின்பும் நல்குரவினனாவன். அது செல்வம் பயவாது. இது வறுமை தீரத் தீமை செய்யினும் பின்பும் வறியனாகுமென்றது.",
      "pope": "Make not thy poverty a plea for ill;Thy evil deeds will make thee poorer still",
      "sourceFile": "0205.md",
      "sourceSha256": "20978394617c533a7a84f570ea3b1cd18d7363ac51872cc7e07df7dea5ecf626"
    },
    {
      "number": 206,
      "lines": [
        "தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால",
        "தன்னை அடல்வேண்டா தான்."
      ],
      "manakkudavar": "தன்னைத் துன்பப்பகுதியானவை நலிதல் வேண்டாதவன் தீமையாயினவற்றைத் தான் பிறர்க்குச் செய்யதா தொழிக. இது நோயுண்டாமென்றது.",
      "pope": "What ranks as evil spare to do, if thou would'st shunAffliction sore through ill to thee by others done",
      "sourceFile": "0206.md",
      "sourceSha256": "376a599ddf6f8c371bc3391b791aef41af86734642c0ce95def2d1199dfa66b5"
    },
    {
      "number": 207,
      "lines": [
        "எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை",
        "வீயாது பின்சென்று அடும்."
      ],
      "manakkudavar": "எல்லாப்பகையும் உற்றார்க்கும் உய்தியுண்டாம்; தீவினை யாகிய பகை நீங்காது என்றும் புக்குழிப் புகுந்து கொல்லும். அஃதாமாறு பின் கூறப்படும்.",
      "pope": "From every enmity incurred there is to 'scape, a way;The wrath of evil deeds will dog men's steps, and slay",
      "sourceFile": "0207.md",
      "sourceSha256": "2cc25a9dc5fe2520b53eb5622fa3a6356deb0fdfd7bf85a6f98c00c6e0b86544"
    },
    {
      "number": 208,
      "lines": [
        "தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை",
        "வீயாது அஇஉறைந் தற்று."
      ],
      "manakkudavar": "தீயவானவற்றைப் பிறர்க்குச் செய்தார் கெடுதல், நிழல் தன்னை நீங்காதே உள்ளடியின்கீழ் ஒதுங்கினாற் போலும். மேல் வினைப்பகை பின் சென்றடுமென்றார் அஃதடுமாறு காட்டினார்.",
      "pope": "Man's shadow dogs his steps where'er he wends;Destruction thus on sinful deeds attends",
      "sourceFile": "0208.md",
      "sourceSha256": "7e62b9f3399bc3609400594fc0bbb7502fb93e99ae5082b087e7bc110850b5c0"
    },
    {
      "number": 209,
      "lines": [
        "தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்",
        "துன்னற்க தீவினைப் பால்."
      ],
      "manakkudavar": "தனக்குத் தான் நல்லவனாயின், யாதொன்றாயினும் தீவினைப் பகுதியாயினவற்றைப் பிறர்க்குச் செய்யாதொழிக. இது தீவினைக்கு அஞ்சவேண்டுமென்றது.",
      "pope": "Beware, if to thyself thyself is dear,Lest thou to aught that ranks as ill draw near",
      "sourceFile": "0209.md",
      "sourceSha256": "c06cd6fd9fa4ab462804622a1c91dec3566196e135f4d6da474b72c33f20a277"
    },
    {
      "number": 210,
      "lines": [
        "அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்",
        "தீவினை செய்யான் எனின்."
      ],
      "manakkudavar": "ஒருமருங்கு ஓடிப் பிறர்க்குத்தீவினைகளைச் செய்யானாயின் தனக்குக் கேடுவருவதில்லை யென்று தானே யறிக. இது கேடில்லை யென்றது.",
      "pope": "The man, to devious way of sin that never turned aside,From ruin rests secure, whatever ills betide",
      "sourceFile": "0210.md",
      "sourceSha256": "a975a319750e21067b4ddf6ebb14b9db18ee784522037d761eecdbe54a351a01"
    },
    {
      "number": 211,
      "lines": [
        "கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு",
        "என் ஆற்றுங் கொல்லோ உலகு."
      ],
      "manakkudavar": "ஒப்புரவு செய்யுங்காற் கைம்மாறு கருதிச் செய்ய வேண்டா: எல்லார்க்கும் நல்வழி சுரக்கின்ற மாரிக்கு உலகம் கைம்மாறு செய்தலுண்டோ? கடப்பாடு- ஒப்புரவு. இஃது ஒப்புரவாவது கைம்மாறு வேண்டாத கொடை யென்று கூறிற்று.",
      "pope": "Duty demands no recompense; to clouds of heaven,By men on earth, what answering gift is given",
      "sourceFile": "0211.md",
      "sourceSha256": "bccf30561d47b636d01e874a10f5efd09a6c25043bcc2909fe97592eea0ed8bf"
    },
    {
      "number": 212,
      "lines": [
        "தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு",
        "வேளாண்மை செய்தற் பொருட்டு."
      ],
      "manakkudavar": "ஒருவன் முயன்று ஈட்டிய பொருளெல்லாம் தகுதி யுடையார்க்கு உபகரித்தற்காகவாம். இது பொருளுண்டானால் ஒப்புரவு செய்கவென்றது.",
      "pope": "The worthy say, when wealth rewards their toil-spent hours,For uses of beneficence alone 'tis ours",
      "sourceFile": "0212.md",
      "sourceSha256": "d05c3027c0b97bcc00937e0c5a48c4c7ffc704719daf45861b39c990bc952da7"
    },
    {
      "number": 213,
      "lines": [
        "புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே",
        "ஒப்புரவின் நல்ல பிற."
      ],
      "manakkudavar": "ஒப்புரவு செய்தலின் நன்றாயிருப்பது தேவருலகத்தினும் இவ்வுலகத்தினும் பெறுதற்கு அரிதாம்.",
      "pope": "To 'due beneficence' no equal good we know,Amid the happy gods, or in this world below",
      "sourceFile": "0213.md",
      "sourceSha256": "29d8d1292681f03e5a04057400a88fe89d09a5e09598f3eee72913489397ae90"
    },
    {
      "number": 214,
      "lines": [
        "ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்",
        "செத்தாருள் வைக்கப் படும்."
      ],
      "manakkudavar": "ஒப்புரவறிவான் உயிர்வாழ்வானென்று சொல்லப்படுவன். அஃதறியான் செத்தவருள் ஒருவனாக எண்ணப்படுவன். இஃது ஒப்புரவறியாதார் பிணத்தோ டொப்ப ரென்றது.",
      "pope": "Who knows what's human life's befitting grace,He lives; the rest 'mongst dead men have their place",
      "sourceFile": "0214.md",
      "sourceSha256": "78bf00e36d356c80a0cb2926d10198eb02e3f8b869f7f72e12cdf6a1447559b2"
    },
    {
      "number": 215,
      "lines": [
        "ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்",
        "பேரறி வாளன் திரு."
      ],
      "manakkudavar": "ஊர் உண்கின்றகேணி நீர் நிறையப் புகுந்தாலொக்கும்: உலகத்தாரெல்லாராலும் நச்சப்படுகின்ற பெரிய வொப்புரவு அறிவானது செல்வம். இஃது ஒப்புரவறிவார்க்கு உளதாகிய செல்வம் நச்சிச்சென்றார் வேண்டியவாறு முகக்கலா மென்றது.",
      "pope": "The wealth of men who love the 'fitting way,' the truly wise,Is as when water fills the lake that village needs supplies",
      "sourceFile": "0215.md",
      "sourceSha256": "50f5e923d3b198c3d819cf3ba38f33bffb206369c21c005b5a97219b7069c4fa"
    },
    {
      "number": 216,
      "lines": [
        "பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்",
        "நயனுடை யான்கண் படின்."
      ],
      "manakkudavar": "பயன்படுமரம் ஊர்நடுவே பழுத்தாற் போலும்: பிறரால் விரும்பப்படுவான்மாட்டுச் செல்வ முண்டாயின். இது வேண்டாதார்க்கும் பயன்படு மென்றது.",
      "pope": "A tree that fruits in th' hamlet's central mart,Is wealth that falls to men of liberal heart",
      "sourceFile": "0216.md",
      "sourceSha256": "a1b9d9a3dad3edbdd349d8e478f351814ef4685ac3e0829d03f5e682be77db22"
    },
    {
      "number": 217,
      "lines": [
        "மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்",
        "பெருந்தகை யான்கண் படின்."
      ],
      "manakkudavar": "பிணிமருந்தாகித் தேடுவார்க்கு மறைதலில்லாத மரத்தை யொக்கும், செல்வமானது பெருந்தகைமையான்மாட்டு உண்டாயின். தப்புதலென்றது ஒளித்தலை.",
      "pope": "Unfailing tree that healing balm distils from every part,Is ample wealth that falls to him of large and noble heart",
      "sourceFile": "0217.md",
      "sourceSha256": "4e2e358b85607129d9454b20dfa856d6f14d94b11ca66404e43145c4bab9d027"
    },
    {
      "number": 218,
      "lines": [
        "இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்",
        "கடனறி காட்சி யவர்."
      ],
      "manakkudavar": "செல்வம் விரிவற்ற காலத்திலும் ஒப்புரவிற்குத் தளரார்: ஒப்புரவை யறியும் அறிவுடையார். இது செல்வம் விரிவில்லாத காலத்தினும் செய்யவேண்டு மென்றது.",
      "pope": "E'en when resources fall, they weary not of 'kindness due,'-They to whom Duty's self appears in vision true",
      "sourceFile": "0218.md",
      "sourceSha256": "1ce28e496c52396b78e7b652c2f623b226ab4a52dc568d409d3d2445e97b55c0"
    },
    {
      "number": 219,
      "lines": [
        "நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர",
        "செய்யாது அமைகலா வாறு."
      ],
      "manakkudavar": "நயனுடையான் நல்கூர்ந்தா னாகின்றது செய்ய வேண்டுவன செய்யாதே யமைய மாட்டாத இயல்பாம். இது செல்வங் குறைபடினுஞ் செய்வரென்றது.",
      "pope": "The kindly-hearted man is poor in this alone,When power of doing deeds of goodness he finds none",
      "sourceFile": "0219.md",
      "sourceSha256": "22a6620d25b246203639ab96b4a39376ee1cf4cf737a622873d202511a3c42c1"
    },
    {
      "number": 220,
      "lines": [
        "ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்",
        "விற்றுக்கோள் தக்க துடைத்து."
      ],
      "manakkudavar": "ஒருவன் ஒப்புரவு செய்தலினாலே பொருட்கேடு வருமென்று சொல்லின், அக்கேட்டைக் கேடாகச் சேர்த்துக் கொள்ளல் கூடாது. அஃது ஒன்றை விற்று ஒன்றைக் கொள்ளுகின்ற வாணிகமாகக் கொள்ளுந் தகுதியுடைத்து. கெட்டானாயினும் அதனை ஆக்கமாகக் கொள்ளல் தகும்: பிற்பயப்பன நன்மையாதலான்.",
      "pope": "Though by 'beneficence,' the loss of all should come,'Twere meet man sold himself, and bought it with the sum",
      "sourceFile": "0220.md",
      "sourceSha256": "2e6af1fb4d1ae983aca837b3bb009d3b8951ed5c10b06a73d2ac84ac33b8dbdd"
    },
    {
      "number": 221,
      "lines": [
        "வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்",
        "குறியெதிர்ப்பை நீர துடைத்து."
      ],
      "manakkudavar": "ஈகையாவது இல்லாதார்க்கு யாதானும் ஒன்றைக் கொடுத்தல்; இஃதொழிந்த கொடையெல்லாம் குறியெதிர்ப்பைக் கொடுத்த நீர்மையாதலையுடைத்து. இது கொடுக்குங்கால் இல்லார்க்குக் கொடுக்கவேண்டுமென்றது.",
      "pope": "Call that a gift to needy men thou dost dispense,All else is void of good, seeking for recompense",
      "sourceFile": "0221.md",
      "sourceSha256": "a26c708ced7e09097f084a613227e049430f74f5366147cb67aced0d4a06d8db"
    },
    {
      "number": 222,
      "lines": [
        "நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்",
        "இல்லெனினும் ஈதலே நன்று."
      ],
      "manakkudavar": "ஒருவன்மாட்டுக் கொள்ளல் நன்மை பயக்கும் நெறியெனினும் கோடல் தீது: ஒருவர்க்குக் கொடுத்தாற் பாவ முண்டெனினும் கொடுத்தல் நன்று. கொள்வோ ரமைதி யறிந்து கொடுக்கவேண்டுமெனினும் இது வரையாது கொடுத்தலாதலால் யாதொருவாற்றானுங் கொடை நன்றென்பது கூறிற்று.",
      "pope": "Though men declare it heavenward path, yet to receive is ill;Though upper heaven were not, to give is virtue still",
      "sourceFile": "0222.md",
      "sourceSha256": "67f0df868acb13124b84efe429fc78f1dc04aa60316639339c2428562dc66dc0"
    },
    {
      "number": 223,
      "lines": [
        "இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்",
        "குலனுடையான் கண்ணே யுள."
      ],
      "manakkudavar": "இரந்துவந்தார்க்கு இலனென்னா நின்ற துன்பத்தைக் கூறாது ஈதலும் குடிப்பிறந்தான்மாட்டே யுளதாம். இது கொடுக்குங்கால் மாறாது கொடுக்க வேண்டுமென்றது.",
      "pope": "'I've nought' is ne'er the high-born man's reply;He gives to those who raise themselves that cry",
      "sourceFile": "0223.md",
      "sourceSha256": "52789868c425b48ced3ed4408b20c00d64f500c9a79557b7ba31c51a332ccd2d"
    },
    {
      "number": 224,
      "lines": [
        "இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்",
        "இன்முகங் காணும் அளவு."
      ],
      "manakkudavar": "பிறன் ஒருவனா லிரக்கப்படுதலும் இன்னாது எவ்வளவு மெனின், இரந்து வந்தவன் தான் வேண்டியது பெற்றதனானே இனிதான முகங் காணுமளவும். இது கொடுக்குங்கால் தாழாது கொடுக்க வேண்டுமென்றது.",
      "pope": "The suppliants' cry for aid yields scant delight,Until you see his face with grateful gladness bright",
      "sourceFile": "0224.md",
      "sourceSha256": "99060a1c1ef57e5ab15eb3bcac1cfadd4f74036de78aef8b910b8435af27006b"
    },
    {
      "number": 225,
      "lines": [
        "ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை",
        "மாற்றுவார் ஆற்றலின் பின்."
      ],
      "manakkudavar": "பெரியாரது பெருமையாவது பசியைப் பொறுத்தல்: அதுவும் பெரிதாவது பிறர் பசியைத் தீர்ப்பாரது பெருமைக்குப் பின்பு. இது தவம்பண்ணுவாரினும் தானம் பண்ணுவார் வலியுடைய ரென்றது.",
      "pope": "'Mid devotees they're great who hunger's pangs sustain,Who hunger's pangs relieve a higher merit gain",
      "sourceFile": "0225.md",
      "sourceSha256": "5f687fff9370ce676ea64b264bb67b356e5228331084e9a3874d2cb75195881f"
    },
    {
      "number": 226,
      "lines": [
        "அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்",
        "பெற்றான் பொருள்வைப் புழி."
      ],
      "manakkudavar": "பொருளற்றாராது குணங்களையழிக்கும் பசியைப் போக்குக. அது செய்ய ஒருவன் தான் தேடின பொருள் வைத்தற்கு இடம் பெற்றானாம். இது பகுத்துண்ணப் பொருளழியாது என்றது.",
      "pope": "Let man relieve the wasting hunger men endure;For treasure gained thus finds he treasure-house secure",
      "sourceFile": "0226.md",
      "sourceSha256": "d901ad2b324a39c436f30596919986fcc43b4e309c433caef1112e8e5023f5f9"
    },
    {
      "number": 227,
      "lines": [
        "பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்",
        "தீப்பிணி தீண்டல் அரிது."
      ],
      "manakkudavar": "பகுத்து உண்டலைப் பழகியவனைப் பசியாகிய பொல்லா நோய் தீண்டுத லில்லை. இஃது ஒருவன் பிறர்க்கீயா தொழிகின்றமை ஈந்தால் பொருள் குறையும். அதனாலே பசியுண்டாமென் றஞ்சியன்றோ? அவ்வாறு நினைத்தல் வேண்டா. பகுத்துண்ணப் பசிவாராதென்று கூறிற்று.",
      "pope": "Whose soul delights with hungry men to share his meal,The hand of hunger's sickness sore shall never feel",
      "sourceFile": "0227.md",
      "sourceSha256": "9c2dfbdff54b308d32e344c92f1812d4833319b32f11ab82261988ed8fb4d238"
    },
    {
      "number": 228,
      "lines": [
        "ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை",
        "வைத்திழக்கும் வன்க ணவர்."
      ],
      "manakkudavar": "கொடுத்த கொடையினால் பெற்றவர்க்கு வரும் முகமலர்ச்சியைக் கண்டறியாரோ? தாமுடைய பொருளைக் கொடாதே வைத்துப் பின் னிழக்கின்ற வன்கண்ணர். இஃது இடார் இழப்பரென்றது.",
      "pope": "Delight of glad'ning human hearts with gifts do they not know.Men of unpitying eye, who hoard their wealth and lose it so",
      "sourceFile": "0228.md",
      "sourceSha256": "84882f8255537f4cacf29142d995107360f26f992528592a7698d5f6709f8d52"
    },
    {
      "number": 229,
      "lines": [
        "இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய",
        "தாமே தமியர் உணல்."
      ],
      "manakkudavar": "இரத்தல்போல மெய்யாக இன்னாதாம்: தேடின உணவைத் தாமே தமியராயிருந் துண்டல். தமியரா யென்றது ஒருவருங் காணாமலென்றது.",
      "pope": "They keep their garners full, for self alone the board they spread;-'Tis greater pain, be sure, than begging daily bread",
      "sourceFile": "0229.md",
      "sourceSha256": "cd77e5a8f31fb45dc1a3bbf303bb694b10ca98aa1fcb3cd128a30ee1b5a02425"
    },
    {
      "number": 230,
      "lines": [
        "சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்",
        "ஈதல் இயையாக் கடை."
      ],
      "manakkudavar": "சாதலின் மிக்க துன்பமில்லை. அதுவும் இனிதாம் இரந்து வந்தவர்க்குக் கொடுத்தல் முடியாவிடத்து. இஃது ஈயாது வாழ்தலில் சாதல் நன்றென்றது.",
      "pope": "'Tis bitter pain to die, 'Tis worse to live.For him who nothing finds to give",
      "sourceFile": "0230.md",
      "sourceSha256": "0c1ea5fcd037855c858155bde39f0ea67c184e38efd5900ff6989766800eeac1"
    },
    {
      "number": 231,
      "lines": [
        "ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது",
        "ஊதியம் இல்லை உயிர்க்கு."
      ],
      "manakkudavar": "புகழ்பட வாழ்தலாவது கொடுத்தல். அக்கொடையா னல்லது உயிர்க்கு இலாபம் வேறொன்றில்லை. இது புகழுண்டாமாறு கூறிற்று.",
      "pope": "See that thy life the praise of generous gifts obtain;Save this for living man exists no real gain",
      "sourceFile": "0231.md",
      "sourceSha256": "6578276d5b4a5cba1838da490ce8b19e93dcafc36b1c798ae8a6e27b90f0937f"
    },
    {
      "number": 232,
      "lines": [
        "உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று",
        "ஈவார்மேல் நிற்கும் புகழ்."
      ],
      "manakkudavar": "சொல்லுவார் சொல்லுவனவெல்லாம் இரந்துவந்தார்க்கு அவர் வேண்டியதொன்றைக் கொடுப்பார்மேல் நில்லாநின்ற புகழாம்.",
      "pope": "The speech of all that speak agrees to crownThe men that give to those that ask, with fair renown",
      "sourceFile": "0232.md",
      "sourceSha256": "102d9b9c150bc32cc1af1980b4e886094a67806c7a5c97fc8eecf930b5125f73"
    },
    {
      "number": 233,
      "lines": [
        "ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்",
        "பொன்றாது நிற்பதொன் றில்."
      ],
      "manakkudavar": "உயர்ந்த புகழல்லது இணை யின்றாக உலகத்துக் கெடாது நிற்பது பிறிதில்லை. இது புகழ் மற்றுள்ள பொருள்போலன்றி அழியாது நிற்கு மென்றது.",
      "pope": "Save praise alone that soars on high,Nought lives on earth that shall not die",
      "sourceFile": "0233.md",
      "sourceSha256": "0fc10616733e4c23af7df3e6a6ad39317e587417dfbd6ad95d4bc0c0ba039d74"
    },
    {
      "number": 234,
      "lines": [
        "நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்",
        "போற்றாது புத்தேள் உலகு."
      ],
      "manakkudavar": "ஒருவன் நிலத்தெல்லையின் கண்ணே நெடிய புகழைச் செய்வனாயின் தேவருலகம் புலவரைப் போற்றாது இவனைப் போற்றும். புலவரென்றார் தேவரை, அவர் புலனுடையாராதலான். இது புகழ் செய்தாரைத் தேவருலகம் போற்றுமென்றது.",
      "pope": "If men do virtuous deeds by world-wide ample glory crowned,The heavens will cease to laud the sage for other gifts renowned",
      "sourceFile": "0234.md",
      "sourceSha256": "7aed5b2a6c193468a870f88528d87e3065ed7347ecc5fe45454755d2ea330836"
    },
    {
      "number": 235,
      "lines": [
        "நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்",
        "வித்தகர்க் கல்லால் அரிது."
      ],
      "manakkudavar": "ஆக்கம்போலக் கேடும் உளதானாற்போலச் சாதலும் வல்லவற்கல்லது அரிது. இது புகழ்பட வாழ்தல் மக்களெல்லார்க்கும் அரிதென்றது.",
      "pope": "Loss that is gain, and death of life's true bliss fulfilled,Are fruits which only wisdom rare can yield",
      "sourceFile": "0235.md",
      "sourceSha256": "9293d5df53b36717faa6851f9149522950a1409171f96adddf3b9d4557f26667"
    },
    {
      "number": 236,
      "lines": [
        "தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்",
        "தோன்றலின் தோன்றாமை நன்று."
      ],
      "manakkudavar": "பிறக்கிற் புகழுண்டாகப் பிறக்க; அஃதிலார் பிறக்குமதிற் பிறவாமை நன்று. இது புகழ்பட வாழவேண்டு மென்றது.",
      "pope": "If man you walk the stage, appear adorned with glory's grace;Save glorious you can shine, 'twere better hide your face",
      "sourceFile": "0236.md",
      "sourceSha256": "ffd04da54a13905256cac0566d9c89618c69560ea4b45a1903430ef7e50e7350"
    },
    {
      "number": 237,
      "lines": [
        "புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை",
        "இகழ்வாரை நோவது எவன்?"
      ],
      "manakkudavar": "புகழ்பட வாழ மாட்டாதார் தங்களை நோவாது தம்மை யிகழ்வாரை நோகின்றது யாதினுக்கு? இது புகழ்பட வாழமாட்டாதார் இகழப்படுவரென்றது.",
      "pope": "If you your days will spend devoid of goodly fame,When men despise, why blame them? You've yourself to blame",
      "sourceFile": "0237.md",
      "sourceSha256": "f39988dc719a3043b3f6f762430cf3aa25b3a6646c4a99f99c820348e41f6d80"
    },
    {
      "number": 238,
      "lines": [
        "வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்",
        "எச்சம் பெறாஅ விடின்."
      ],
      "manakkudavar": "உலகத்தார்க்கெல்லாம் புகழாகிய ஒழிபு பெறாவிடின், அப்பெறாமைதானே வசையாமென்று சொல்லுவர். மேல் புகழில்லாதாரை யிகழ்பவென்றார் அவர் குற்றமில்லா ராயின் இகழப்படுவரோவென்றார்க்கு வேறு குற்றம் வேண்டா, புகழின்மைதானே யமையுமென்றார்.",
      "pope": "Fame is virtue's child, they say; if, then,You childless live, you live the scorn of men",
      "sourceFile": "0238.md",
      "sourceSha256": "a72750dd5e0678fba55f3d6729529867304c1410d73df8e1281d9f15cefbc78e"
    },
    {
      "number": 239,
      "lines": [
        "வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா",
        "யாக்கை பொறுத்த நிலம்."
      ],
      "manakkudavar": "புகழில்லாத வுடம்பைப் பொறுத்த நிலம் பழியற்ற நல்விளைவு குறையும். இது புகழில்லாதா னிருந்தவிடம் விளைவு குன்றுமென்றது.",
      "pope": "The blameless fruits of fields' increase will dwindle down,If earth the burthen bear of men without renown",
      "sourceFile": "0239.md",
      "sourceSha256": "151264878754c05e50da5b0be7e4947da1d106a23619cc9f610675b7b62e25ec"
    },
    {
      "number": 240,
      "lines": [
        "வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய",
        "வாழ்வாரே வாழா தவர்."
      ],
      "manakkudavar": "வசையொழிய வாழுமவர்களே உயிர் வாழ்வாராவர்; புகழொழிய வாழ்வாரே உயிர் வாழாதார். இது புகழில்லார் பிணத்தோ டொப்ப ரென்றது.",
      "pope": "Who live without reproach, them living men we deem;Who live without renown, live not, though living men they seem",
      "sourceFile": "0240.md",
      "sourceSha256": "fe78fcf92d3a850777127bbbd40481bc91aa0c08b26f126cce3efd8bcac399eb"
    },
    {
      "number": 241,
      "lines": [
        "அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்",
        "பூரியார் கண்ணும் உள."
      ],
      "manakkudavar": "செல்வத்துள் வைத்துச் செல்வமாவது அருளுடைமையாகிய செல்வமாம்; பொருட்செல்வமானது கீழாயினோர்மாட்டும் உளவாதலால். இஃது அருள்நிலை கூறிற்று.",
      "pope": "Wealth 'mid wealth is wealth 'kindliness';Wealth of goods the vilest too possess",
      "sourceFile": "0241.md",
      "sourceSha256": "637a1e8ce6759212bbaacdea104fe54f0aefa35ec8c3828baa7f935453bea620"
    },
    {
      "number": 242,
      "lines": [
        "நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்",
        "தேரினும் அஃதே துணை."
      ],
      "manakkudavar": "நல்ல வழியாலே நாடி அருளையுண்டாக்குக: பல வழியினும் ஓடி யாராயினும் தமக்கு அவ்வருளே துணையாம். நல்லாற்றானாடியருளாள்க என்றது அருளுடைமை யுண்டாகப் பலவறங்களையுஞ் செய்கவென்றவாறு. இஃது அருளுடைமை வேண்டுமென்றது.",
      "pope": "The law of 'grace' fulfil, by methods good due trial made,Though many systems you explore, this is your only aid",
      "sourceFile": "0242.md",
      "sourceSha256": "96ef6eed6106aed0e605d6a8f136e14b326d92aa4d772edd72f034c2fc6b168f"
    },
    {
      "number": 243,
      "lines": [
        "அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த",
        "இன்னா உலகம் புகல்."
      ],
      "manakkudavar": "அருளைப் பொருந்தின நெஞ்சினையுடைவர்க்கு இருளைப் பொருந்தின நரகலோகம் புகுதலில்லை. இது நரகம் புகாரென்றது.",
      "pope": "They in whose breast a 'gracious kindliness' resides,See not the gruesome world, where darkness drear abides",
      "sourceFile": "0243.md",
      "sourceSha256": "1a072905ef42e2181f0fa409aa52e35c60ee804f7196fe144c2457488cdc6cd2"
    },
    {
      "number": 244,
      "lines": [
        "மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப",
        "தன்னுயிர் அஞ்சும் வினை."
      ],
      "manakkudavar": "நிலைபெற்ற உயிரை ஓம்பி அருளை ஆள்வானுக்குத் தன்னுயிரஞ்ச வரும் வினை வருவ தில்லையென்று சொல்லுவார். இது தீமை வாராதென்றது.",
      "pope": "Who for undying souls of men provides with gracious zeal,In his own soul the dreaded guilt of sin shall never feel",
      "sourceFile": "0244.md",
      "sourceSha256": "5aeea433b02fad35e15e49b8de5f501cac03f598f141961913a0ee64dac579ff"
    },
    {
      "number": 245,
      "lines": [
        "அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்",
        "மல்லன்மா ஞாலங் கரி."
      ],
      "manakkudavar": "அருளுடையார்க்கு அல்லலில்லை: அதற்குச் சான்று காற்றியங்குகின்ற வளப்பத்தினை யுடைய பெரிய வுலகம். இஃது அருளுடையார்க்கு அல்லலின்மை உலகத்தார்மாட்டே காணப்படுமென்றது.",
      "pope": "The teeming earth's vast realm, round which the wild winds blow,Is witness, men of 'grace' no woeful want shall know",
      "sourceFile": "0245.md",
      "sourceSha256": "a2d6acc283d258e66c7d19e4b7c94f7b53ac62de9f315e8e50ba5bdb2783a8f0"
    },
    {
      "number": 246,
      "lines": [
        "பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி",
        "அல்லவை செய்தொழுகு வார்."
      ],
      "manakkudavar": "முற்பிறப்பின்கண் அருளினின்று நீங்கி அல்லாதவற்றைச் செய்தொழுகினவர் இப்பிறப்பின்கண் பொருளினின்று நீங்கி மறவியுமுடையவரென்று சொல்லுவர். இது பொருளில்லையாமென்றது.",
      "pope": "Gain of true wealth oblivious they eschew,Who 'grace' forsake, and graceless actions do",
      "sourceFile": "0246.md",
      "sourceSha256": "3eb868fe6b760e3819dd930d067688b8cb5c213984cf2e57e9b817a3f2f0fef0"
    },
    {
      "number": 247,
      "lines": [
        "அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு",
        "இவ்வுலகம் இல்லாகி யாங்கு."
      ],
      "manakkudavar": "அருள் இல்லாதார்க்கு மேலுலகமுறுங் காட்சியில்லை; பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகின்கண் இன்பமுறுங்காட்சி யில்லையானாற்போல. இஃது அருளில்லாதார் சுவர்க்கம் புகாரென்றது.",
      "pope": "As to impoverished men this present world is not;The 'graceless' in you world have neither part nor lot",
      "sourceFile": "0247.md",
      "sourceSha256": "c3048c7066c6992cdcff46bd4a258fced4949592a3e9deb013550b424b1a269b"
    },
    {
      "number": 248,
      "lines": [
        "பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்",
        "அற்றார்மற் றாதல் அரிது."
      ],
      "manakkudavar": "பொருளில்லாதார் ஒருகாலத்தே பொருளுடையராதலும் கூடும்; அருளில்லாதார் கெட்டார், பின்பு ஆக்கமுண்டாகாது. இது பொருளின்மையேயன்றி எல்லாக் கேடு முண்டாமென்றது.",
      "pope": "Who lose the flower of wealth, when seasons change, again may bloom;Who lose 'benevolence', lose all; nothing can change their doom",
      "sourceFile": "0248.md",
      "sourceSha256": "d71d79e6a28912022ae93f86751088acfa6a37cdd052ea9478729bfddd18ad52"
    },
    {
      "number": 249,
      "lines": [
        "தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்",
        "அருளாதான் செய்யும் அறம்."
      ],
      "manakkudavar": "தெளிவில்லாதான் மெய்ப்பொருளைத் தெளிந்தாற்போலும்: ஆராயின்அருளில்லாதான் செய்யும் அறமும். இஃது அறஞ் செய்யவும் மாட்டாரென்றது.",
      "pope": "When souls unwise true wisdom's mystic vision see,The 'graceless' man may work true works of charity",
      "sourceFile": "0249.md",
      "sourceSha256": "75cd15f82fc0881df51ae4dd9ddf2137f766d08455d46fd62546d12b5207e6ec"
    },
    {
      "number": 250,
      "lines": [
        "வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்",
        "மெலியார்மேல் செல்லு மிடத்து."
      ],
      "manakkudavar": "தாம் தம்மின் மெலியார்மேல் வெகுண்டெழுமிடத்துத் தம்மின் வலியார் முன் தாம் நிற்கும் நிலையை நினைக்க.",
      "pope": "When weaker men you front with threat'ning brow,Think how you felt in presence of some stronger foe",
      "sourceFile": "0250.md",
      "sourceSha256": "57ef9c20768a99e0568e9e246b6233876cadecb34d4633dd1f6cf9ca1a207f45"
    },
    {
      "number": 251,
      "lines": [
        "தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்",
        "எங்ஙனம் ஆளும் அருள்?"
      ],
      "manakkudavar": "தன்னுடைம்பை வளர்த்ததற்குத் தான் பிறிதொன்றினது உடம்பை உண்ணுமவன் அருளுடையவனாவது மற்றியா தானோ?. ஊனுண்ண அருள்கெடுமோ என்றார்க்கு இது கூறப்பட்டது.",
      "pope": "How can the wont of 'kindly grace' to him be known,Who other creatures' flesh consumes to feed his own",
      "sourceFile": "0251.md",
      "sourceSha256": "df6f012fd68cf1eb47a56e6a4dbfe6465195b1d47ee10dc0efe5e3d827ef8b77"
    },
    {
      "number": 252,
      "lines": [
        "பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி",
        "ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு."
      ],
      "manakkudavar": "பொருளினை யாளுதல் அதனைக் காக்கமாட்டாதார்க்கு இல்லை. அதுபோல அருளினை யாளுதல் ஊன் தின்பவர்க்கு இல்லை. இஃது ஊனுண்ண அருட்கேடு வருமென்றது.",
      "pope": "No use of wealth have they who guard not their estate;No use of grace have they with flesh who hunger sate",
      "sourceFile": "0252.md",
      "sourceSha256": "27772089cb908ea32bc597009d8b069b4a8a403980f6f0c06fb493897cfec63f"
    },
    {
      "number": 253,
      "lines": [
        "படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்",
        "உடல்சுவை உண்டார் மனம்."
      ],
      "manakkudavar": "ஆயுதம் கையிற்கொண்டவர் நெஞ்சுபோல் நன்மையை நினையாது: ஒன்றினுடலைச் சுவைபடவுண்டார் மனம்.",
      "pope": "Like heart of them that murderous weapons bear, his mind,Who eats of savoury meat, no joy in good can find",
      "sourceFile": "0253.md",
      "sourceSha256": "34a5292a78ad49c2c46eaf94fd3839ada878d26f9f9605584aad3e8f8272c1f2"
    },
    {
      "number": 254,
      "lines": [
        "அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்",
        "பொருளல்லது அவ்வூன் தினல்."
      ],
      "manakkudavar": "அருளல்லது யாதெனின், கொல்லாமையைச் சிதைத்தல்; பொருளல்லது யாதெனின் அவ்வூனைத் தின்றல். இஃது அதனை யுண்டதால் அருள் கெடுதலேயன்றிப் பெறுவதொரு பயனுமில்லை என்றது.",
      "pope": "'What's grace, or lack of grace'? 'To kill' is this, that 'not to kill';To eat dead flesh can never worthy end fulfil",
      "sourceFile": "0254.md",
      "sourceSha256": "538aa1adec1ae072335aad35eedd213358be3b9a47182ec603a3e56a6bb343e7"
    },
    {
      "number": 255,
      "lines": [
        "உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண",
        "அண்ணாத்தல் செய்யாது அளறு."
      ],
      "manakkudavar": "புலாலை யுண்ணாமை வேண்டும். அது பிறிதொன்றின் புண். ஆதலால் அதனை அவ்வாறு காண்பாருண்டாயின். இது புலால் மறுத்தல் வேண்டுமென்பதூஉம், அது தூயதாமென்பதூஉங் கூறிற்று.",
      "pope": "If flesh you eat not, life's abodes unharmed remain;Who eats, hell swallows him, and renders not again",
      "sourceFile": "0255.md",
      "sourceSha256": "6f9d51fe209e757ca931cc9046890ddbc77f2706f3c6df6f3297b088fcdda35f"
    },
    {
      "number": 256,
      "lines": [
        "தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்",
        "விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்."
      ],
      "manakkudavar": "தின்னுதற்காக உலகத்தார் கொள்ளாராயின், விலைக்காக ஊன் விற்பார் யாரும் இல்லை. இது கொன்று தின்னாது விலைக்குக்கொண்டு தின்பார்க்குக் குற்றமென்னை யென்றார்க்கு அதனாலுங் கொலைப்பாவம் வருமென்று கூறிற்று.",
      "pope": "'We eat the slain,' you say, by us no living creatures die;Who'd kill and sell, I pray, if none came there the flesh to buy",
      "sourceFile": "0256.md",
      "sourceSha256": "996ebffc6fe563e2bbff16da121f029bcb0e7aea556a7bbd098769d9c776ac1a"
    },
    {
      "number": 257,
      "lines": [
        "உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்",
        "புண்ணது உணர்வார்ப் பெறின்."
      ],
      "manakkudavar": "உயிர் நிலையைப் பெறுதல் ஊனை யுண்ணாமையினால் உள்ளது; ஊனையுண்ண உண்டாரை எல்லாவுலகத்தினும் இழிந்த நரகம் விழுங்கிக் கொண்டு அங்காவாது. அங்காவாமை- புறப்பட விடாமை.",
      "pope": "With other beings' ulcerous wounds their hunger they appease;If this they felt, desire to eat must surely cease",
      "sourceFile": "0257.md",
      "sourceSha256": "bf89bd047b14823e338721ee82be798289b5ffa6010c0d0e6373854ff5e29c90"
    },
    {
      "number": 258,
      "lines": [
        "செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்",
        "உயிரின் தலைப்பிரிந்த ஊன்."
      ],
      "manakkudavar": "குற்றத்தினின்று நீங்கின தெளிவுடையார் உண்ணார்; உயிரினின்று நீங்கின உடம்பை. இது மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின் அதனைத் தெளிவுடையாருண்ணாரென்றது.",
      "pope": "Whose souls the vision pure and passionless perceive,Eat not the bodies men of life bereave",
      "sourceFile": "0258.md",
      "sourceSha256": "cbfb5aae1e3b15071f40e498ba22084f14777d57c02d8e391cb9c4d7f8d52582"
    },
    {
      "number": 259,
      "lines": [
        "அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்",
        "உயிர்செகுத் துண்ணாமை நன்று."
      ],
      "manakkudavar": "நெய் முதலான அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும் ஒன்றினுயிரை நீக்கி அதனுடம்பை யுண்ணாமை நன்று.",
      "pope": "Than thousand rich oblations, with libations rare,Better the flesh of slaughtered beings not to share",
      "sourceFile": "0259.md",
      "sourceSha256": "143af18087749738ebe292adb2e2ddaaf41f6b9ed2ea49f4594cd67e9fdab2b0"
    },
    {
      "number": 260,
      "lines": [
        "கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி",
        "எல்லா உயிருந் தொழும்."
      ],
      "manakkudavar": "கொல்லானுமாய்ப் புலாலையுண்டலையுந் தவிர்த்தவனைக் கை குவித்து எல்லாவுயிருந் தொழும். மேல் எல்லாப்புண்ணியத்திலும் இது நன்றென்றார்; அது யாதினைத் தருமென் றார்க்குக் கொல்லாதவன் தேவர்க்கும் மேலாவனென்று கூறினார்.",
      "pope": "Who slays nought,- flesh rejects- his feet beforeAll living things with clasped hands adore",
      "sourceFile": "0260.md",
      "sourceSha256": "e7f42f8c380ada9c1f0504e3dd7aaef0be042447bac94439f1ebf7bc2013d960"
    },
    {
      "number": 261,
      "lines": [
        "உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை",
        "அற்றே தவத்திற் குரு."
      ],
      "manakkudavar": "தமக்கு உற்றநோயைப் பொறுத்தலும் பிறவுயிர்க்கு நோய் செய்யாமையுமாகிய அத்தன்மையே தவத்திற்கு வடிவமாம்.",
      "pope": "To bear due penitential pains, while no offenceHe causes others, is the type of 'penitence'",
      "sourceFile": "0261.md",
      "sourceSha256": "4883d08efcdbbd6dfd36d7146efca4f79bd0404f5ac68529d4b108ae03edc24c"
    },
    {
      "number": 262,
      "lines": [
        "தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை",
        "அஃதிலார் மேற்கொள் வது."
      ],
      "manakkudavar": "தவஞ்செய்தலும் முன்பு நல்வினை செய்தார்க்கு வரும்; அந்நல்வினையில்லாதார் அத்தவத்தை மேற்கொள்வது பயனில்லை. இது தவமிலார்க்குத் தவம் வாராது வரினுந் தப்புமென்றது.",
      "pope": "To 'penitents' sincere avails their 'penitence';Where that is not, 'tis but a vain pretence",
      "sourceFile": "0262.md",
      "sourceSha256": "db78c9582be1f1133452b123d2ebcf3334a871997dadcd263c389163687c96a8"
    },
    {
      "number": 263,
      "lines": [
        "துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்",
        "மற்றை யவர்கள் தவம்."
      ],
      "manakkudavar": "துறந்தவர்களுக்கு உணவு கொடுத்தலை வேண்டித் தவிர்ந்தாராயினரோ? இல்வாழ்வார் தவஞ் செய்தலை. இது தானத்திலும் தவம் மிகுதியுடைத்தென்றது.",
      "pope": "Have other men forgotten 'penitence' who striveTo earn for penitents the things by which they live",
      "sourceFile": "0263.md",
      "sourceSha256": "48b5fbb70b3981d432ed58a54cfa51ad224cc7b15627821e505b2e8d150a9c8c"
    },
    {
      "number": 264,
      "lines": [
        "ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்",
        "எண்ணின் தவத்தான் வரும்."
      ],
      "manakkudavar": "இவ்விடத்துப் பகைவரை தெறுதலும், நட்டோரை யாக்குதலுமாகிய வலி ஆராயின் முன்செய்த தவத்தினாலே வரும். இது பிறரை யாக்குதலும் கெடுத்தலுந் தவத்தினாலே வருமென்றது.",
      "pope": "Destruction to his foes, to friends increase of joyThe 'penitent' can cause, if this his thoughts employ",
      "sourceFile": "0264.md",
      "sourceSha256": "2eb65969782bb8c3d8239f013d2c9bfbd2c34c97a682d38013ac01eb03ddefd0"
    },
    {
      "number": 265,
      "lines": [
        "வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்",
        "ஈண்டு முயலப் படும்."
      ],
      "manakkudavar": "விரும்பின விரும்பினபடியே வருதலால், தவஞ்செய்தலை இவ்விடத்தே முயல வேண்டும். இது போக நுகர்ச்சியும் இதனானே வருமென்றது.",
      "pope": "That what they wish may, as they wish, be won,By men on earth are works of painful 'penance' done",
      "sourceFile": "0265.md",
      "sourceSha256": "9f0d8a3cc7374d48a2f9f8d134a7dc32b1c8843d2167abfd53c3f725129d4513"
    },
    {
      "number": 266,
      "lines": [
        "தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்",
        "அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு."
      ],
      "manakkudavar": "தங்கருமஞ் செய்வார் தவம் செய்வார்; அஃதல்லாதன செய்வாரெல்லாம் ஆசையிலே அகப்பட்டுப் பயனில்லாதன செய்கின்றார். இது தவம்பண்ண வேண்டுமென்றது.",
      "pope": "Who works of 'penance' do, their end attain,Others in passion's net enshared, toil but in vain",
      "sourceFile": "0266.md",
      "sourceSha256": "8e7ba8ba3b0ae5bf71590b377986bc97f6643bfeba7c346d45a8d1aa940984ef"
    },
    {
      "number": 267,
      "lines": [
        "சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்",
        "சுடச்சுட நோற்கிற் பவர்க்கு."
      ],
      "manakkudavar": "நெருப்பின்கண்ணே இட இடத் தன்னோடு கலந்த மாசற்று ஒளிவிடுகின்ற பொன்னைப்போலத் துன்பம் நலிய நலியத் தவஞ்செய்வார்க்குத் தம்மோடு மருவின வினை விட்டு ஒளிவிடும். இது வினைவிட் டொளி யுண்டாம் என்றது.",
      "pope": "The hotter glows the fining fire, the gold the brighter shines;The pain of penitence, like fire, the soul of man refines",
      "sourceFile": "0267.md",
      "sourceSha256": "5b18049d53721ecdd05b028569785b08d38fc805361e3b6df8f9abad4a0daafd"
    },
    {
      "number": 268,
      "lines": [
        "தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய",
        "மன்னுயி ரெல்லாந் தொழும்."
      ],
      "manakkudavar": "தன்னுயிரானது தானென்று கருதுங் கருத்து அறப்பெற்றவனை, ஒழிந்தனவாகிய நிலைபெற்ற உயிர்களெல்லாம் தொழும். உயிரென்றது சலிப்பற்ற அறிவை; தானென்றது சீவனாகி நிற்கின்ற நிலைமையை; தானறுதலாவது அகங்கார மறுதல்.",
      "pope": "Who gains himself in utter self-control,Him worships every other living soul",
      "sourceFile": "0268.md",
      "sourceSha256": "d7830262c1f116bd45f9a6e2b92908cf3cdef45ec4b130fd6d8ce2de30f6415e"
    },
    {
      "number": 269,
      "lines": [
        "கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்",
        "ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்."
      ],
      "manakkudavar": "கூற்றத்தைத் தப்புதலுங் கைகூடும்; தவத்தினாகிய வலியைக் கூடினார்க்கு. இது மார்க்கண்டேயன் தப்பினாற்போல வென்றது.",
      "pope": "E'en over death the victory he may gain,If power by penance won his soul obtain",
      "sourceFile": "0269.md",
      "sourceSha256": "9dadddf4efe23f2722fb7dfecabfdbe6cc46b02d33d00b9fc388caf7e222a67b"
    },
    {
      "number": 270,
      "lines": [
        "இலர்பல ராகிய காரணம் நோற்பார்",
        "சிலர்பலர் நோலா தவர்."
      ],
      "manakkudavar": "பொருளில்லாதார் உலகத்துப் பலராதற்குக் காரணம் தவஞ்செய்வார் சிலராதல்; அது செய்யதார் பலராதல்.",
      "pope": "The many all things lack! The cause is plain,The 'penitents' are few The many shun such pain",
      "sourceFile": "0270.md",
      "sourceSha256": "bfa167bf5d636b64362154ad11a6ce295788c444ee956a6a1193ed53eb469335"
    },
    {
      "number": 271,
      "lines": [
        "வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்",
        "ஐந்தும் அகத்தே நகும்."
      ],
      "manakkudavar": "கள்ள மனத்தை யுடையானது குற்றத்தினையுடைய ஒழுக்கத்தைப் பிறரறியாராயினும், தன்னுடம்பி னுண்டான பூதங்களைந்தும் அறிந்து தம்முள்ளே நகாநிற்கும். பூதங்களைந்தும் அவையிற்றின் காரியமாகிய பொறிகளை.",
      "pope": "Who with deceitful mind in false way walks of covert sin,The five-fold elements his frame compose, decide within",
      "sourceFile": "0271.md",
      "sourceSha256": "0aa79ed9c19c0d330a21c78be12cea642786d3a95f792e175c221effc1c1a421"
    },
    {
      "number": 272,
      "lines": [
        "வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்",
        "தான்அறி குற்றப் படின்."
      ],
      "manakkudavar": "வானளவும் உயர்ந்த பெருமையுண்டாயினும் அஃதியாதினைச் செய்யவற்று; தன்னெஞ்சறியக் குற்ற முண்டாயின். தான்- அசை. இஃது இக்கூடா ஒழுக்கத்தானைப் பிறரறிந்து இகழாராயினும் அவன் செய்கின்ற தவத்தினாற் பயனுண்டாகாது என்றது.",
      "pope": "What gain, though virtue's semblance high as heaven his fame exalt,If heart dies down through sense of self-detected fault",
      "sourceFile": "0272.md",
      "sourceSha256": "fd69be45528aa743c9041bdf1d4eab37c0472103f4e0cc629d10e4cfdee40221"
    },
    {
      "number": 273,
      "lines": [
        "வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்",
        "புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று."
      ],
      "manakkudavar": "வலியில்லாத நிலைமையை யுடையவன் வலிதாகிய தவவுருவங் கோடல், பெற்றமானது பிறர் பயப்படும்படி புலியினது தோலைப் போர்த்துப் பைங்கூழ் மேய்ந்த தன்மைத்து.",
      "pope": "As if a steer should graze wrapped round with tiger's skin,Is show of virtuous might when weakness lurks within",
      "sourceFile": "0273.md",
      "sourceSha256": "54b30c50cae090cb15f7e90b9acf3ea56de2dda3df54a3870842ca670d372247"
    },
    {
      "number": 274,
      "lines": [
        "தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து",
        "வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று."
      ],
      "manakkudavar": "தவத்திலே மறைந்து தவ மல்லாதவற்றைச் செய்தல் வேட்டுவன் தூற்றிலே மறைந்து புள்ளைப் பிணித்தாற் போலும். அர்ச்சுனன் தவமறைந்தல்லவை செய்தான்.",
      "pope": "'Tis as a fowler, silly birds to snare, in thicket lurksWhen, clad in stern ascetic garb, one secret evil works",
      "sourceFile": "0274.md",
      "sourceSha256": "62dce6efee9cbd04ab34f0bbafe7541af80a60a956a11412fbf222ac00b3153a"
    },
    {
      "number": 275,
      "lines": [
        "பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று",
        "ஏதம் பலவுந் தரும்."
      ],
      "manakkudavar": "பற்றினை யற்றேமென்பாரது குற்றத்தினை யுடைய ஒழுக்கம் எல்லாரும் எற்றெற் றென்று சொல்லும்படி பல குற்றமும் உண்டாக்கும். எற்றென்பது திசைச்சொல். இது தீமைபயக்கு மென்றது.",
      "pope": "'Our souls are free,' who say, yet practise evil secretly,'What folly have we wrought!' by many shames o'er-whelmed, shall cry",
      "sourceFile": "0275.md",
      "sourceSha256": "d1fb70786c7d1bac0d0fff8b046e4bfdf1584b77f1cde67ff35b2b9161d3d00c"
    },
    {
      "number": 276,
      "lines": [
        "நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து",
        "வாழ்வாரின் வன்கணார் இல்."
      ],
      "manakkudavar": "நெஞ்சிற் றுறவாராய்த் துறந்தாரைப் போல வஞ்சனை செய்து வாழுமவர்களைப் போலக் கொடியா ரில்லை யுலகத்து.",
      "pope": "In mind renouncing nought, in speech renouncing every tie,Who guileful live,- no men are found than these of 'harder eye'",
      "sourceFile": "0276.md",
      "sourceSha256": "c9cba008bb6e6cd2543ad353db9dcf2e3d326ba83218c1a6239def18638a58ad"
    },
    {
      "number": 277,
      "lines": [
        "புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி",
        "முக்கிற் கரியார் உடைத்து."
      ],
      "manakkudavar": "புறத்தே குன்றி நிறம்போன்ற தூய வேடத்தாராயிருப்பினும், அகத்தே குன்றி மூக்குப் போலக் கரியராயிருப்பாரை உடைத்து இவ்வுலகம். இஃது அறிஞர் தவத்தவரை வடிவு கண்டு நேர்படாரென்றது.",
      "pope": "Outward, they shine as 'kunri' berry's scarlet bright;Inward, like tip of 'kunri' bead, as black as night",
      "sourceFile": "0277.md",
      "sourceSha256": "e01cc2949497adc29f09bcb6f0d6db08d33df79aa5c31931e9785bc58a9b6503"
    },
    {
      "number": 278,
      "lines": [
        "மனத்தது மாசாக மாண்டார் நீராடி",
        "மறைந்தொழுகு மாந்தர் பலர்."
      ],
      "manakkudavar": "மாசு மனத்தின்கண் உண்டாக வைத்து மாட்சிமைப் பட்டாரது நீர்மையைப் பூண்டு, பொருந்தாத விடத்திலே மறைந்தொழுகு மாந்தர் பலர். இது பலர்க்குக் கூடாவொழுக்க முண்டாகு மென்றது.",
      "pope": "Many wash in hollowed waters, living lives of hidden shame;Foul in heart, yet high upraised of men in virtuous fame",
      "sourceFile": "0278.md",
      "sourceSha256": "15d2171ee1663f525c4a8cb8031055f67119f7c407ac1cca350f03b13a8fcec7"
    },
    {
      "number": 279,
      "lines": [
        "கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன",
        "வினைபடு பாலால் கொளல்."
      ],
      "manakkudavar": "செவ்விய கணை கொடுமையைச் செய்யும்; கோடியயாழ் செவ்வையைச் செய்யும்; அதுபோல யாவரையும் வடிவுகண்டறியாது; அவரவர் செய்யும் வினையின் பகுதியாலே யறிந்துகொள்க.",
      "pope": "Cruel is the arrow straight, the crooked lute is sweet,Judge by their deeds the many forms of men you meet",
      "sourceFile": "0279.md",
      "sourceSha256": "c2be4fc04642071d76f3dad66ca21ce272a7419bfe3ed0390a6abba9d313288c"
    },
    {
      "number": 280,
      "lines": [
        "மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்",
        "பழித்தது ஒழித்து விடின்."
      ],
      "manakkudavar": "தவத்தினர்க்குத் தலையை மழித்தலும் நீட்டலும் வேண்டா; உலகத்தார் கடிந்தவையிற்றைத் தாமுங்கடிந்து விடுவாராயின். இது வேடத்தாற் பயனில்லை: நல்லொழுக்கமே வேண்டுமென்றது.",
      "pope": "What's the worth of shaven head or tresses long,If you shun what all the world condemns as wrong",
      "sourceFile": "0280.md",
      "sourceSha256": "cf63984f1853d2ca9c4e70b43f939d91c68ccce897344c44048670142d7718be"
    },
    {
      "number": 281,
      "lines": [
        "எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்",
        "கள்ளாமை காக்கதன் நெஞ்சு."
      ],
      "manakkudavar": "பிறரா லிகழப்படாமையை வேண்டுவா னிவனென்று சொல்லப்படுமவன் யாதொரு பொருளையுங் களவிற் கொள்ளாமல் தன்னெஞ்சைக் காக்க. இது களவு ஆகாதென்றது.",
      "pope": "Who seeks heaven's joys, from impious levity secure,Let him from every fraud preserve his spirit pure",
      "sourceFile": "0281.md",
      "sourceSha256": "838bad139ce45154d176263b5c45762692f27ac1a992989ae15b0bc0cff503b6"
    },
    {
      "number": 282,
      "lines": [
        "உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்",
        "கள்ளத்தால் கள்வேம் எனல்."
      ],
      "manakkudavar": "பிறன் பொருளை நெஞ்சினால் நினைத்தலும் தீதாம்; ஆதலால் அதனை மறைவினாலே கள்வேமென்று முயலாதொழிக. இது களவு தீதென்றது.",
      "pope": "'Tis sin if in the mind man but thought conceive;'By fraud I will my neighbour of his wealth bereave.'",
      "sourceFile": "0282.md",
      "sourceSha256": "beff6eaa7e70602daf08ad27a0c5a72c42e71de925cb42e4bb3b0260279a9464"
    },
    {
      "number": 283,
      "lines": [
        "களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து",
        "ஆவது போலக் கெடும்."
      ],
      "manakkudavar": "களவிற் கொண்ட பொருளா லாகிய ஆக்கம் மேன் மேலும் மிகுவதுபோலக் கெடும். இது பொருள் நிலையாதென்றது.",
      "pope": "The gain that comes by fraud, although it seems to growWith limitless increase, to ruin swift shall go",
      "sourceFile": "0283.md",
      "sourceSha256": "4f95cf9b914285fb77050fef2a0dc1b93527dfca2421d8e2147e1f743d49d35a"
    },
    {
      "number": 284,
      "lines": [
        "களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்",
        "வீயா விழுமம் தரும்."
      ],
      "manakkudavar": "களவின்கண்ணே மிக்கஆசை, பயன்படுங் காலத்துக் கேடில்லாத நோயைத் தரும். இது நரகம் புகுத்தும் என்றது.",
      "pope": "The lust inveterate of fraudful gain,Yields as its fruit undying pain",
      "sourceFile": "0284.md",
      "sourceSha256": "31ea6606c065acc8f93a626cdd2071f28fbdfd5af773d362d72979ea62f8ab26"
    },
    {
      "number": 285,
      "lines": [
        "அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்",
        "பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்."
      ],
      "manakkudavar": "அருளைக் குறித்து உயிர்மீது அன்புடையரா யொழுகுதல் பொருளை குறித்துப் பிறரது மறவியைப் பார்ப்பார் மாட்டு இல்லை. இஃது அருளும் அன்பு மில்லையாமென்றது.",
      "pope": "'Grace' is not in their thoughts, nor know they kind affection's power,Who neighbour's goods desire, and watch for his unguarded hour",
      "sourceFile": "0285.md",
      "sourceSha256": "acc6744f42965a180ec20dc976068245ac9bcf958794c1757eddbbf6ff9fc11f"
    },
    {
      "number": 286,
      "lines": [
        "அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்",
        "கன்றிய காத லவர்."
      ],
      "manakkudavar": "களவின்கண்ணே மிக்க ஆசையையுடையவர் நேரின்கணின்று ஒழுகுதலைச் செய்யமாட்டார். இது நேர் செய்ய மாட்டாரென்றது.",
      "pope": "They cannot walk restrained in wisdom's measured bound,In whom inveterate lust of fraudful gain is found",
      "sourceFile": "0286.md",
      "sourceSha256": "ac4800c0fb41e2ffba0bd8e2286e7744956bb839e92b5ea2cdfb1c4f183152ad"
    },
    {
      "number": 287,
      "lines": [
        "களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்",
        "ஆற்றல் புரிந்தார்கண்ட இல்."
      ],
      "manakkudavar": "களவாகிய பொல்லா அறிவுடைமை நேராகிய பெருமையைப் பொருந்தினார்மாட்டு இல்லை. இது நேரறிந்தவர் களவு காணாரென்றது.",
      "pope": "Practice of fraud's dark cunning arts they shun,Who long for power by 'measured wisdom' won",
      "sourceFile": "0287.md",
      "sourceSha256": "229cd8a6670b604e781adf3bdc8026492de1cf3c1813c3439047efe222ae1b30"
    },
    {
      "number": 288,
      "lines": [
        "அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்",
        "களவறிந்தார் நெஞ்சில் கரவு."
      ],
      "manakkudavar": "நேரறிந்தவர் நெஞ்சத்து அறம் நிற்குமாறுபோல நிற்கும்: களவறிந்தவர் நெஞ்சில் வஞ்சகமும். இது களவு காண்பாரைப் பின்பு களவினின்று தவிர்த்தல் முடியாதென்றது.",
      "pope": "As virtue dwells in heart that 'measured wisdom' gains;Deceit in hearts of fraudful men established reigns",
      "sourceFile": "0288.md",
      "sourceSha256": "61d836471699057f1e4c26402ee15073803cafdf12991f56513ba1a82ce94189"
    },
    {
      "number": 289,
      "lines": [
        "அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல",
        "மற்றைய தேற்றா தவர்."
      ],
      "manakkudavar": "நேர் ஆகாதன செய்து அவ்விடத்தே கெடுவார்; களவல்லாத மற்றைய அறங்களைத் தெளியாதவர். இது கள்வாரை அரசர் கொல்வரென்றது.",
      "pope": "Who have no lore save that which fraudful arts supply,Acts of unmeasured vice committing straightway die",
      "sourceFile": "0289.md",
      "sourceSha256": "1208912152b829b18188f810d6ef9415ae26ab1b61d70ac0a4466decd463d0d0"
    },
    {
      "number": 290,
      "lines": [
        "கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்",
        "தள்ளாது புத்தே ளுளகு."
      ],
      "manakkudavar": "பிறர் பொருளைக் கள்வார்க்கு உயிர்நிலையாகிய வீடு பெறுதல் தப்பும். கள்ளாதார்க்குத் தேவருலகம் பெறுதல் தப்பாது. இது கள்வார் முத்தி பெறுதலுமிலர், கள்ளாதார் சுவர்க்கம் பெறாமையுமிலரென்றது.",
      "pope": "The fraudful forfeit life and being here below;Who fraud eschew the bliss of heavenly beings know",
      "sourceFile": "0290.md",
      "sourceSha256": "07db5aa0330d17cbc73904865edf507332c5c0dab9bdb64b8a6cbfbc320142d5"
    },
    {
      "number": 291,
      "lines": [
        "வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்",
        "தீமை இலாத சொலல்."
      ],
      "manakkudavar": "பொய் சொல்லாத மெய்யென்று சொல்லப்படுவது யாதென்று வினவின், பிறர்க்கு யாதொன்றானும் தீமை பயவாத சொற்களைச் சொல்லுதல், வாய்மை யாது என்றார்க்கு இது கூறப்பட்டது.",
      "pope": "You ask, in lips of men what 'truth' may be;'Tis speech from every taint of evil free",
      "sourceFile": "0291.md",
      "sourceSha256": "5bba52f1d3b3cf8e591438954bd9e252767294f13887447deb9dfa392808d3cd"
    },
    {
      "number": 292,
      "lines": [
        "பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த",
        "நன்மை பயக்கும் எனின்."
      ],
      "manakkudavar": "பொய்யும் மெய்யோ டொக்கும், குற்றந் தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின்.",
      "pope": "Falsehood may take the place of truthful word,If blessing, free from fault, it can afford",
      "sourceFile": "0292.md",
      "sourceSha256": "9941c31d868d96adf56977f4751880ffa801423c094ad93589eeebceefb35895"
    },
    {
      "number": 293,
      "lines": [
        "தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்",
        "தன்நெஞ்சே தன்னைச் சுடும்."
      ],
      "manakkudavar": "தன்னெஞ்சினாற் பொய்யை நினையாது ஒழுகுவனாயின் உலகத்தார் நெஞ்சினுளெல்லாம் உளனாவான். இது பொய்யை நினையாதாரை எல்லாரும் போற்றுவாரென்றது.",
      "pope": "Speak not a word which false thy own heart knowsSelf-kindled fire within the false one's spirit glows",
      "sourceFile": "0293.md",
      "sourceSha256": "facf415f7ed2468030684f9912a0ccd894c283f2bebe0fe4ce6b046973dda78c"
    },
    {
      "number": 294,
      "lines": [
        "உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்",
        "உள்ளத்து ளெல்லாம் உளன்."
      ],
      "manakkudavar": "தன்னெஞ்சினாற் பொய்யை நினையாது ஒழுகுவனாயின் உலகத்தார் நெஞ்சினுளெல்லாம் உளனாவான் இது பொய்யை நினையாதாரை எல்லாரும் போற்றுவாரென்றது.",
      "pope": "True to his inmost soul who lives,- enshrinedHe lives in souls of all mankind",
      "sourceFile": "0294.md",
      "sourceSha256": "d4a553d224ca40f11834a7f67cac059d81934130cce62bec768fa98347b99703"
    },
    {
      "number": 295,
      "lines": [
        "மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு",
        "தானஞ்செய் வாரின் தலை."
      ],
      "manakkudavar": "தன்னெஞ்சினாற் பொய்யை நினையாது ஒழுகுவனாயின் உலகத்தார் நெஞ்சினுளெல்லாம் உளனாவான். இது பொய்யை நினையாதாரை எல்லாரும் போற்றுவாரென்றது.",
      "pope": "Greater is he who speaks the truth with full consenting mindThan men whose lives have penitence and charity combined",
      "sourceFile": "0295.md",
      "sourceSha256": "54654352513d409853a1dd243013db1e75f6569d44e78c404c217a751441710e"
    },
    {
      "number": 296,
      "lines": [
        "பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை",
        "எல்லா அறமுந் தரும்."
      ],
      "manakkudavar": "பொய்யாமையை யுடையன் என்பதனோடு ஒத்த புகழ் வேறொன்றில்லை; பொய்யாமையானது அவனறியாமல் தானே எல்லா அறங்களையுங் கொடுக்குமாதலான்.",
      "pope": "No praise like that of words from falsehood free;This every virtue yields spontaneously",
      "sourceFile": "0296.md",
      "sourceSha256": "cdddeb247b3e5ee544d71b54a52d06c88e52a5e64c1f2ef28008702dabcb7dfa"
    },
    {
      "number": 297,
      "lines": [
        "பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற",
        "செய்யாமை செய்யாமை நன்று."
      ],
      "manakkudavar": "பொய்யாமையைப் பொய்யாமல் செலுத்துவனாயின் பிற அறங்களைச் செய்தல் நன்றாம்; அல்லது தீதாம்.",
      "pope": "If all your life be utter truth, the truth alone,'Tis well, though other virtuous acts be left undone",
      "sourceFile": "0297.md",
      "sourceSha256": "1ffb66c902f36c31dcbf785cd1bd8d47959ead9ac24d0bf0dcda28b92789a27f"
    },
    {
      "number": 298,
      "lines": [
        "புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை",
        "வாய்மையால் காணப் படும்."
      ],
      "manakkudavar": "உடம்பு தூயதாதல் நீரினாலே யமைந்து விடும்: மனத்தின் தூய்மை மெய்சொல்லுதலினாலே யறியப்படும்.",
      "pope": "Outward purity the water will bestow;Inward purity from truth alone will flow",
      "sourceFile": "0298.md",
      "sourceSha256": "c2c601338d301517a4eefb902920f8b716004186b02fcd27a1168f5972072f6c"
    },
    {
      "number": 299,
      "lines": [
        "எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்",
        "பொய்யா விளக்கே விளக்கு."
      ],
      "manakkudavar": "சான்றோர்க்கு எல்லாவறத்தினாலும் உண்டான ஒளியும் ஒளியல்ல: பொய்யாமையா னுண்டான ஒளியே ஒளியாகும். இது பொய்யாவிளக்குச் சான்றோர்க்கு இன்றியமையாதென்று கூறிற்று.",
      "pope": "Every lamp is not a lamp in wise men's sight;That's the lamp with truth's pure radiance bright",
      "sourceFile": "0299.md",
      "sourceSha256": "b353519b8780cfe1c003d1d4642f4b5281504eaf7ed9360f9a9e386183d7fb47"
    },
    {
      "number": 300,
      "lines": [
        "யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்",
        "வாய்மையின் நல்ல பிற."
      ],
      "manakkudavar": "யாம் மெய்யாக் கண்டவற்றுள் மெய் சொல்லுதல்போல நன்றாயிருப்பன, வேறு யாதொன்றும் இல்லை. இஃது எல்லா அறமும் இதனோடு ஒவ்வாதென்று அதன் தலைமை கூறிற்று.",
      "pope": "Of all good things we've scanned with studious care,There's nought that can with truthfulness compare",
      "sourceFile": "0300.md",
      "sourceSha256": "01f04a6fb7f32c31a6e79169d15dd6a88993514eb9df2b3060e10a632de83684"
    },
    {
      "number": 301,
      "lines": [
        "செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்",
        "காக்கின்என் காவாக்கால் என்?"
      ],
      "manakkudavar": "தனக்கு இயலு மிடத்தே வெகுளாதவன் வெகுளாத வனாவான்; இயலாவிடத்தில் அதனைத் தவிர்ந்ததனாலும் பயனில்லை, தவிராததனாலும் பயனில்லை; இது வெகுளாமையாவது வலியவன் வெகுளாமை யென்றது.",
      "pope": "Where thou hast power thy angry will to work, thy wrath restrain;Where power is none, what matter if thou check or give it rein",
      "sourceFile": "0301.md",
      "sourceSha256": "51e1e76c0fe566c600395f412c24349572c53e4216ed35c04631ff7d08b552cc"
    },
    {
      "number": 302,
      "lines": [
        "செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்",
        "இல்அதனின் தீய பிற."
      ],
      "manakkudavar": "இயலாவிடத்துச் சினந்தீது; இயலுமிடத்திலும் அதிற் றீதாயிருப்பன பிறவில்லை.",
      "pope": "Where power is none to wreak thy wrath, wrath importent is ill;Where thou hast power thy will to work, 'tis greater, evil still",
      "sourceFile": "0302.md",
      "sourceSha256": "7cfa2e49f59c32379e0996fa7b1a67777726edf0d8d76fda85482a498cf1252a"
    },
    {
      "number": 303,
      "lines": [
        "மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய",
        "பிறத்தல் அதனான் வரும்."
      ],
      "manakkudavar": "வெகுளியை யார்மாட்டுஞ் செய்தலை மறக்க; தீயன பிறத்தல் அவ்வெகுளியானே வருமாதலான். இது வெகுளாமை வேண்டுமென்றது.",
      "pope": "If any rouse thy wrath, the trespass straight forget;For wrath an endless train of evils will beget",
      "sourceFile": "0303.md",
      "sourceSha256": "67c637ef8bf2ee2e1afbd17fc6f5c30e21114125aabb5b012d5a92a4902c17c9"
    },
    {
      "number": 304,
      "lines": [
        "நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்",
        "பகையும் உளவோ பிற."
      ],
      "manakkudavar": "நகுதலையும் மகிழ்தலையுங் கெடுக்கின்ற சினத்தைப் போல, பகையா யிருப்பனவும் வேறு சிலவுளவோ? இஃது இன்பக்கேடு வருமென்றது.",
      "pope": "Wrath robs the face of smiles, the heart of joy,What other foe to man works such annoy",
      "sourceFile": "0304.md",
      "sourceSha256": "eedded7f6a5b79651b6528327b582b9f3f2c891f46195643aaf107815b13af83"
    },
    {
      "number": 305,
      "lines": [
        "தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்",
        "தன்னையே கொல்லுஞ் சினம்."
      ],
      "manakkudavar": "ஒருவன் தன்னைத் தான் காக்கவேண்டுவனாயின், சினந்தோன்றாமற் காக்க; காவானாயின் சினம் தன்னையே கொல்லும், இஃது உயிர்க்கேடு வருமென்றது.",
      "pope": "If thou would'st guard thyself, guard against wrath alway;'Gainst wrath who guards not, him his wrath shall slay",
      "sourceFile": "0305.md",
      "sourceSha256": "d72be28fc763a4351d7176c3375457e7780c1bb95d00d8b5e1cdd68c7e935bc5"
    },
    {
      "number": 306,
      "lines": [
        "சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்",
        "ஏமப் புணையைச் சுடும்."
      ],
      "manakkudavar": "சினமென்று சொல்லப் படுகின்ற நெருப்பு தான் துன்பக்கடலிலழுந்தாமல் தன்னைக் கரையேற விடுகின்ற நட்டோராகிய புணையைச் சுடும். சேர்ந்தாரைக் கொல்லி- நெருப்பு: இது காரணக்குறி. இது சினம் தன்னை யடுத்தாரைக் கொல்லு மென்றது.",
      "pope": "Wrath, the fire that slayeth whose draweth near,Will burn the helpful 'raft' of kindred dear",
      "sourceFile": "0306.md",
      "sourceSha256": "46b6675d22c062c552f2fbca11c0fcd72d205084825081645e73ab1ed413e491"
    },
    {
      "number": 307,
      "lines": [
        "சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு",
        "நிலத்தறைந்தான் கைபிழையா தற்று."
      ],
      "manakkudavar": "சினத்தைப் பொருளாகக் கொண்டவன் கெடுதல், நிலத்தெறிந்தவன்கை தப்பாமற் பட்டதுபோலும், இது பொருட்கேடு வருமென்றது.",
      "pope": "The hand that smites the earth unfailing feels the sting;So perish they who nurse their wrath as noble thing",
      "sourceFile": "0307.md",
      "sourceSha256": "fc73e92819b6eb7c81ed7b32a4cc4bc87a7f0b40574b4573019b5774238307c1"
    },
    {
      "number": 308,
      "lines": [
        "இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்",
        "புணரின் வெகுளாமை நன்று."
      ],
      "manakkudavar": "சினத்தைப் பொருளாகக் கொண்டவன் கெடுதல், நிலத்தெறிந்தவன்கை தப்பாமற் பட்டதுபோலும், இது பொருட்கேடு வருமென்றது.",
      "pope": "Though men should work thee woe, like touch of tongues of fire'Tis well if thou canst save thy soul from burning ire",
      "sourceFile": "0308.md",
      "sourceSha256": "5eb32852cc99f5d386aa336a75efb85234fe76104835a487323d46be67825542"
    },
    {
      "number": 309,
      "lines": [
        "உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்",
        "உள்ளான் வெகுளி எனின்."
      ],
      "manakkudavar": "தன்னெஞ்சினால் வெகுளியை நினையானாகில் தானினைத்தனவெல்லாம் ஒருகாலத்தே கூடப்பெறுவன்.",
      "pope": "If man his soul preserve from wrathful fires,He gains with that whate'er his soul desires",
      "sourceFile": "0309.md",
      "sourceSha256": "319b4e6bb85a2cb1186e7bbaf15598593dc7cc0ee0ed589057858fea5a3e3de6"
    },
    {
      "number": 310,
      "lines": [
        "இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்",
        "துறந்தார் துறந்தார் துணை."
      ],
      "manakkudavar": "சினத்தை மிகுந்தார் செத்தாரோடு ஒப்பர், அதனை யொழிந்தார் எல்லாப் பொருளையுந் துறந்தாரோடு ஒப்பர், இது வெகுளாதார் பெரியரென்றது.",
      "pope": "Men of surpassing wrath are like the men who've passed away;Who wrath renounce, equals of all-renouncing sages they",
      "sourceFile": "0310.md",
      "sourceSha256": "18720ada5e65ddd05026f8e74ff580eda89febb4d85d0ea117ffbb401e993f7a"
    },
    {
      "number": 311,
      "lines": [
        "சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா",
        "செய்யாமை மாசற்றார் கோள்."
      ],
      "manakkudavar": "மிகுதியைத் தருகின்ற செல்வத்தைப் பெறினும் பிறர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு. இது பழி வாராத செல்வம் பெறினும் தவிரவேண்டுமென்றது.",
      "pope": "Though ill to neighbour wrought should glorious pride of wealth secure,No ill to do is fixed decree of men in spirit pure",
      "sourceFile": "0311.md",
      "sourceSha256": "711f998b67cfd7840f4aeec2c20e59d3222c7e3e96eb3e270d7f1efe7b705fb9"
    },
    {
      "number": 312,
      "lines": [
        "கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா",
        "செய்யாமை மாசற்றார் கோள்."
      ],
      "manakkudavar": "தாஞ்செய்த குற்றத்தினாலே வெகுண்டு, இன்னாதவற்றைத் தமக்குச் செய்தவன்மாட்டும் தாம் அதற்கு மாறாகப் பின்பு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு.",
      "pope": "Though malice work its worst, planning no ill return, to endure,And work no ill, is fixed decree of men in spirit pure",
      "sourceFile": "0312.md",
      "sourceSha256": "779c3a4a2efa1c0ca0d023318a3da6c13b77b2efb6eb78fb6eb1604f75e042fe"
    },
    {
      "number": 313,
      "lines": [
        "செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்",
        "உய்யா விழுமந் தரும்."
      ],
      "manakkudavar": "தானொரு குற்றஞ் செய்யாதிருக்கத் தனக்கு இன்னாத வற்றைச் செய்தவர்க்கும், இன்னாதவற்றைச் செய்யின் அஃது உய்வில்லாத நோயைத்தரும். இது காரணமின்றி இன்னாதன செய்தவர்க்கும் பொல்லாங்கு செய்தலைத் தவிரவேண்டுமென்றது.",
      "pope": "Though unprovoked thy soul malicious foes should sting,Retaliation wrought inevitable woes will bring",
      "sourceFile": "0313.md",
      "sourceSha256": "9dac5ae7a3e5a7fff1b32dcb01cc53ed3c69abc7cb0a4637995538240b29ee11"
    },
    {
      "number": 314,
      "lines": [
        "இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண",
        "நன்னயஞ் செய்து விடல்."
      ],
      "manakkudavar": "இன்னாதன செய்தாரை ஒறுக்குமாறு என்னையெனின், அவர் நாணும்படியாக நல்ல நயமுடையவற்றைச் செய்துவிடுக. இஃது ஒறுக்கும் நெறி கூறியது.",
      "pope": "To punish wrong, with kindly benefits the doers ply;Thus shame their souls; but pass the ill unheeded by",
      "sourceFile": "0314.md",
      "sourceSha256": "03c5a07552d833b11f2ce23dd6874d4ab2bc656747aaf9e9e92991f7015cd939"
    },
    {
      "number": 315,
      "lines": [
        "அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்",
        "தந்நோய்போல் போற்றாக் கடை."
      ],
      "manakkudavar": "பிறிதோருயிர்க்குஉறும் நோயைத் தனக்கு உறும் நோய்போலக் காவாதவிடத்து, அறிவுடையனாகிய வதனால் ஆகுவதொரு பயன் உண்டாகாது. இஃது அறிவுடையார் செய்யார் என்றது.",
      "pope": "From wisdom's vaunted lore what doth the learner gain,If as his own he guard not others' souls from pain",
      "sourceFile": "0315.md",
      "sourceSha256": "5d69e9fad9cd8c8baaf3e27a60c18653e536e5743243b02f94c4df467ab94563"
    },
    {
      "number": 316,
      "lines": [
        "இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை",
        "வேண்டும் பிறன்கண் செயல்."
      ],
      "manakkudavar": "தான் இன்னாதன இவையென்று அறிந்தவற்றைப் பிறற்குச் செய்தலை மேவாமை வேண்டும். இஃது இன்னா செய்யாமை வேண்டு மென்றது.",
      "pope": "What his own soul has felt as bitter pain,From making others feel should man abstain",
      "sourceFile": "0316.md",
      "sourceSha256": "5a49c7fa1c9f5937c369d4d9fe50809ac99016b904848005bb1cd8106c1b5ce8"
    },
    {
      "number": 317,
      "lines": [
        "எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்",
        "மாணாசெய் யாமை தலை."
      ],
      "manakkudavar": "யாதொன்றாயினும், எல்லா நாளும் யாவர்மாட்டும் இன்னாதவற்றை மனத்தினாலும் செய்யாமை நன்று.",
      "pope": "To work no wilful woe, in any wise, through all the days,To any living soul, is virtue's highest praise",
      "sourceFile": "0317.md",
      "sourceSha256": "e02c308ffdb22a7c952012c74f11f4f9e24eba70b64cab5d1204bf54a572a169"
    },
    {
      "number": 318,
      "lines": [
        "தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ",
        "மன்னுயிர்க்கு இன்னா செயல்."
      ],
      "manakkudavar": "தன்னுயிர்க்கு உற்ற இன்னாமையை உயிரில்லாப் பொருள்கள் போல அறியாது கிடத்தலன்றித் தான் அறியுமவன், பின்னைப் பிறவுயிர்க்கு இன்னாதவற்றைச் செய்கின்றது யாதினைக் கருதியோ?.",
      "pope": "Whose soul has felt the bitter smart of wrong, how canHe wrongs inflict on ever-living soul of man",
      "sourceFile": "0318.md",
      "sourceSha256": "8407e37180808844d9c3fd419ae7e0357117ade391198994cf1d9b04f710e806"
    },
    {
      "number": 319,
      "lines": [
        "பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா",
        "பிற்பகல் தாமே வரும்."
      ],
      "manakkudavar": "பிறர்க்கு இன்னாதவற்றை முற்பொழுது செய்யின், தாமே பிற்பொழுது தமக்கு இன்னாதனவாய் வரும்: மற்றொருவன் செய்யாமல். இன்னாதன செய்ததனால் வருங் குற்றமென்னை யென்றார்க்கு இது கூறப்பட்டது.",
      "pope": "If, ere the noontide, you to others evil do,Before the eventide will evil visit you",
      "sourceFile": "0319.md",
      "sourceSha256": "7656fe9c2b0f6d31b24a54297a604d0fea89e35df8c867ae59e3d51055e95439"
    },
    {
      "number": 320,
      "lines": [
        "நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்",
        "நோயின்மை வேண்டு பவர்."
      ],
      "manakkudavar": "இக்காலத்து நுகர்கின்ற துன்பமெல்லாம் முற்காலத்துப் பிறர்க்குத் துன்பம் செய்தார் மாட்டே யுளவாம்: ஆதலால் இக்காலத்துப் பிறர்க்கு துன்பத்தைச் செய்யார் வருங்காலத்துத் தமக்குத் துன்பம் வாராமையை வேண்டுபவர்.",
      "pope": "O'er every evil-doer evil broodeth still;He evil shuns who freedom seeks from ill",
      "sourceFile": "0320.md",
      "sourceSha256": "9c13adf92a509f65a8f73a9f241d231975a8db0c9f1d26e0a513348800421924"
    },
    {
      "number": 321,
      "lines": [
        "அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்",
        "பிறவினை எல்லாந் தரும்."
      ],
      "manakkudavar": "நல்வினை யாதெனின் கொல்லாமை; கொல்லுதல் எல்லாத் தீவினைப் பயனையுந் தருமாதலால். இஃது அறத்தொழிலாவது கொல்லாமை யென்றது.",
      "pope": "What is the work of virtue? 'Not to kill';For 'killing' leads to every work of ill",
      "sourceFile": "0321.md",
      "sourceSha256": "b3cbcd9e9f2f44146eb5d0d4737995c47982f49811db84541a743ac4883cd040"
    },
    {
      "number": 322,
      "lines": [
        "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்",
        "தொகுத்தவற்றுள் எல்லாந் தலை."
      ],
      "manakkudavar": "பல்லுயிர்களுக்குப் பகுத்துண்டு அவற்றைப் பாதுகாத்தல், நூலுடையார் திரட்டின அறங்களெல்லாவற்றினும் தலையான அறம். இஃது எல்லாச் சமயத்தார்க்கும் நன்றென்றது.",
      "pope": "Let those that need partake your meal; guard every-thing that lives;This the chief and sum of lore that hoarded wisdom gives",
      "sourceFile": "0322.md",
      "sourceSha256": "91b1098c7e46b6de8c1321cf93dc6e1615f24cfb3438dc3a382082553deb0dd3"
    },
    {
      "number": 323,
      "lines": [
        "ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்",
        "பின்சாரப் பொய்யாமை நன்று."
      ],
      "manakkudavar": "இணையின்றாக நல்லது கொல்லாமை; அதன்பின்பே அணைய, பொய்யாமையும் நன்று. இது சொல்லிய அறத்தினும் பொய்யாமை நன்று: அதினும் நன்று கொல்லாமை யென்றது.",
      "pope": "Alone, first of goods things, is 'not to slay';The second is, no untrue word to say",
      "sourceFile": "0323.md",
      "sourceSha256": "416fb95d6cefc1eac8e9b55da0f002a7d10abaae8d2d49739e6dceb854dae3f9"
    },
    {
      "number": 324,
      "lines": [
        "நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்",
        "கொல்லாமை சூழும் நெறி."
      ],
      "manakkudavar": "நல்ல வழியென்று சொல்லப்படுவது யாதெனின், அது யாதொருயிரையுங் கொல்லாமையைச் சிந்திக்கும் வழி. இது நன்னெறியாவது கொல்லாமை யென்றது.",
      "pope": "You ask, What is the good and perfect way?'Tis path of him who studies nought to slay",
      "sourceFile": "0324.md",
      "sourceSha256": "2be7ba17b0f4eef36e5dccbba71dfdaa8e5f43d4135ca589667f581ae7b9af6e"
    },
    {
      "number": 325,
      "lines": [
        "நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்",
        "கொல்லாமை சூழ்வான் தலை."
      ],
      "manakkudavar": "மனைவாழ்க்கையில் நிற்றலை யஞ்சித் துறந்தவரெல்லாரினும் கொலையை யஞ்சிக் கொல்லாமையைச் சிந்திப்பான் தலைமையுடையவன்; இல்வாழ்க்கையில் நிற்பினும். இஃது எல்லாத் துறவினும் நன்றென்றது.",
      "pope": "Of those who 'being' dread, and all renounce, the chief are they,Who dreading crime of slaughter, study nought to slay",
      "sourceFile": "0325.md",
      "sourceSha256": "0ab9c61b955e6b55feb42bbdd73cd3d663e01a45743c6bd374ade156a3397f5c"
    },
    {
      "number": 326,
      "lines": [
        "கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்",
        "செல்லாது உயிருண்ணுங் கூற்று."
      ],
      "manakkudavar": "கொல்லாமையை விரதமாகக் கொண்டு ஒழுகுமவன் வாழ்நாளின் மேல், உயிருண்ணுங் கூற்றுச் செல்லாது. பிறவாமை யுண்டாமாதலால் கூற்றுச் செல்லாது என்றார். இது கொல்லாமையின் பயன் கூறிற்று.",
      "pope": "Ev'n death that life devours, their happy days shall spare,Who law, 'Thou shall not kill', uphold with reverent care",
      "sourceFile": "0326.md",
      "sourceSha256": "b676659b7cdc1789db76723e799323b3a5504302e312c2fa39ecf3ec44e20924"
    },
    {
      "number": 327,
      "lines": [
        "தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது",
        "இன்னுயிர் நீக்கும் வினை."
      ],
      "manakkudavar": "தன்னுயிர் நீங்கினும் செய்யாதொழிக. தான் பிறிதொன்றி னுடைய இனிய வுயிரை விடுக்குந் தொழிலினை. உயிர்க்குக் கேடுவருங் காலத்து நோய்க்கு மருந்தாகக் கொல்லுதல் குற்றமன்று என்பார்க்கு இது கூறப்பட்டது.",
      "pope": "Though thine own life for that spared life the price must pay,Take not from aught that lives gift of sweet life away",
      "sourceFile": "0327.md",
      "sourceSha256": "f15b815f7632e736ce97242e9c8d041da050fcb670c6a093a878638b762f6cdb"
    },
    {
      "number": 328,
      "lines": [
        "நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்",
        "கொன்றாகும் ஆக்கங் கடை."
      ],
      "manakkudavar": "நன்மையாகும் ஆக்கம் பெரியதேயாயினும் ஓருயிரைக் கொன்று ஆகின்ற ஆக்கம் உயர்ந்தோர்க்கு ஆகாது. இது பெரியோர் வீடுபேற்றை விரும்பிக் கன்மத்தை விடுத்தலால் வேள்வியின் வருங் கொலையும் ஆகாதென்றது.",
      "pope": "Though great the gain of good should seem, the wiseWill any gain by staughter won despise",
      "sourceFile": "0328.md",
      "sourceSha256": "d9a8498f1e323b19774c88b17468abbcf415a5c4dedc345482e611a6fbbbedc4"
    },
    {
      "number": 329,
      "lines": [
        "கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்",
        "புன்மை தெரிவா ரகத்து."
      ],
      "manakkudavar": "கொலைத் தொழிலினை யுடையராகிய மாக்கள் பொல்லாமையை யாராய்வாரிடத்துத் தொழிற்புலையராகுவர். இவரை உலகத்தர் கன்மசண்டாளரென்று சொல்லுவார்.",
      "pope": "Whose trade is 'killing', always vile they show,To minds of them who what is vileness know",
      "sourceFile": "0329.md",
      "sourceSha256": "c79c437540caaf5ccada8517535565633accb4f3dde414620b326a04413b88f0"
    },
    {
      "number": 330,
      "lines": [
        "உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்",
        "செல்லாத்தீ வாழ்க்கை யவர்."
      ],
      "manakkudavar": "முற்பிறப்பின்கண் உயிரை யுடம்பினின்று நீக்கினார் இவரென்று பெரியோர் கூறுவர்; குற்றமான வுடம்பினையும் ஊணுஞ் செல்லாத தீய மனை வாழ்க்கையினையும் உடையாரை. இது கொலையினால் வருங் குற்றங் கூறிற்று.",
      "pope": "Who lead a loathed life in bodies sorely pained,Are men, the wise declare, by guilt of slaughter stained",
      "sourceFile": "0330.md",
      "sourceSha256": "ed8d5bace3d3b52365757a9a25c1a58fe7ee35ee905f98f0935f2f9533409a5e"
    },
    {
      "number": 331,
      "lines": [
        "நில்லாத வற்றை நிலையின என்றுணரும்",
        "புல்லறி வாண்மை கடை."
      ],
      "manakkudavar": "நில்லாத பொருள்களை நிலைநிற்பனவென்று நினைக்கின்ற புல்லிய வறிவுடைமை இழிந்தது. எனவே, பொருள்களை யுள்ளவாறு காணவொட்டாத மயக்கத்தைக் கடிய வேண்டுமென்றவாறாயிற்று.",
      "pope": "Lowest and meanest lore, that bids men trust secure,In things that pass away, as things that shall endure",
      "sourceFile": "0331.md",
      "sourceSha256": "9b1cf5593003b286733cc6f4dee1b262ff296a9825be785803f6dc81f1f11bf3"
    },
    {
      "number": 332,
      "lines": [
        "கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்",
        "போக்கும் அதுவிளிந் தற்று."
      ],
      "manakkudavar": "கூத்தாட்டுக் காண்டற்கு அவைக் கூட்டம் திரண்டா லொக்கும் பெருஞ்செல்வத் திரளும்; அந்த அவை யெழுந்து போனாற் போலும் அது போமாறும்.",
      "pope": "As crowds round dancers fill the hall, is wealth's increase;Its loss, as throngs dispersing, when the dances cease",
      "sourceFile": "0332.md",
      "sourceSha256": "5fafa2740c7173b6f02320f839f0fd57d9ab7452185886f9f41a9508028a2127"
    },
    {
      "number": 333,
      "lines": [
        "அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்",
        "அற்குப ஆங்கே செயல்."
      ],
      "manakkudavar": "நில்லாத வியல்பை யுடைத்துச் செல்வம்; அதனைப் பெற்றால் அப்பொழுதே நிற்பனவாகிய அறங்களைச் செய்க. நிலையாமை மூன்று வகைப்படும்: செல்வ நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை என.",
      "pope": "Unenduring is all wealth; if you wealth enjoy,Enduring works in working wealth straightway employ",
      "sourceFile": "0333.md",
      "sourceSha256": "0a71ee5cf6e6c55d561a4f03376dd89b22c9905ad98a0c4e64644b495c08385d"
    },
    {
      "number": 334,
      "lines": [
        "நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்",
        "வாளது உணர்வார்ப் பெறின்."
      ],
      "manakkudavar": "நாளென்பது இன்பந் தருவ தொன்று போலக் காட்டி, உயிரையீர்வதொரு வாளாம்: அதனை யறிவாரைப் பெறின். இஃது உயிரீரும் என்றமையால் இளமை நிலையாமை கூறிற்று.",
      "pope": "As 'day' it vaunts itself; well understood, 'tis knife',That daily cuts away a portion from thy life",
      "sourceFile": "0334.md",
      "sourceSha256": "7d5bb84dbdeded3c0949fef1cae8926d20746b17be3c76fe1357e1d0313ef241"
    },
    {
      "number": 335,
      "lines": [
        "நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை",
        "மேற்சென்று செய்யப் படும்"
      ],
      "manakkudavar": "நாவழங்காமற் செறுத்து விக்குளானது மீதூர்ந்து வருவதன் முன்னே, நல்வினையை மேல் விழுந்து செய்ய வேண்டும். இஃது உயிரானது கழிவதன்முன்னே நல்வினையைச் செய்யவேண்டு மென்றது.",
      "pope": "Before the tongue lie powerless, 'mid the gasp of gurgling breath,Arouse thyself, and do good deeds beyond the power of death",
      "sourceFile": "0335.md",
      "sourceSha256": "4f974d15a0d8857c062f2cbc203d4f0f3fe7fb4306a715a9aa8ddb3ab30c6f54"
    },
    {
      "number": 336,
      "lines": [
        "நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்",
        "பெருமை உடைத்துஇவ் வுலகு."
      ],
      "manakkudavar": "ஒருவன் நேற்றுளனாயிருந்தான், இன்றில்லையாயினா னென்று சொல்லும் பெருமையை இவ்வுலகம் உடைத்து. இது யாக்கை நிலையாமை கூறிற்று.",
      "pope": "Existing yesterday, today to nothing hurled!-Such greatness owns this transitory world",
      "sourceFile": "0336.md",
      "sourceSha256": "a59821b8b31ca8950b6b74cd9f47679edd02659be264518a2e95e05a8b7b3d7b"
    },
    {
      "number": 337,
      "lines": [
        "ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப",
        "கோடியும் அல்ல பல."
      ],
      "manakkudavar": "ஒரு பொழுதளவும் தம்முயிர் நிலைநிற்கும் என்பதனை யறியாராயிருந்தும், தமது வாழ்நாளை கோடியுமல்ல, பலவாகக் கருதுவர் உலகத்தார். மேல் ஒருநாளுளனானவன் பிற்றை ஞான்று செத்தானென்றார் ஈண்டு ஒருபொழுதளவும் உயிர் நிலையாகாது என்றார்.",
      "pope": "Who know not if their happy lives shall last the day,In fancies infinite beguile the hours away",
      "sourceFile": "0337.md",
      "sourceSha256": "dc64af1a361a74a7b397db2ab748cee508d169c26a4859702835fe787dcee9bf"
    },
    {
      "number": 338,
      "lines": [
        "குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே",
        "உடம்பொடு உயிரிடை நட்பு."
      ],
      "manakkudavar": "கூடு தனியேகிடக்கப் புள்ளுப் பறந்து போனாற்போலும்,உடம்போடு உயிர்க்கு உள்ள நட்பு. மேல் ஒருபொழுதென்று காலங்கூறினார் ஈண்டு உயிர் நினைக்காத பொழுது போமென்றார்.",
      "pope": "Birds fly away, and leave the nest deserted bare;Such is the short-lived friendship soul and body share",
      "sourceFile": "0338.md",
      "sourceSha256": "414de06f3843677d7ead85bc43d688d67bb1ecbd1f5e8c6576692919d74b3b97"
    },
    {
      "number": 339,
      "lines": [
        "உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி",
        "விழிப்பது போலும் பிறப்பு."
      ],
      "manakkudavar": "உறங்குவதனோடு ஒக்கும் சாக்காடு: உறங்கி விழிப்பதனோடு ஒக்கும் பிறப்பு. இது போன உயிர் மீண்டும் பிறக்கு மென்பதூஉம், இறத்தலும் பிறத்தலும் உறங்குதலும் விழித்தலும் போல மாறிவருமென்பதூஉம் கூறிற்று.",
      "pope": "Death is sinking into slumbers deep;Birth again is waking out of sleep",
      "sourceFile": "0339.md",
      "sourceSha256": "2c7b0b7c51510a74dc96dba56819428d42710b644061c6e2713a7f70c9eac16c"
    },
    {
      "number": 340,
      "lines": [
        "புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்",
        "துச்சில் இருந்த உயிர்க்கு."
      ],
      "manakkudavar": "தனதல்லாத உடம்பினுள்ளே ஒதுக்குக்குடியாக விருந்த உயிர்க்குப் போயிருப்பதற்கிடம் அமைந்ததில்லையோ? அமைந்ததாயின் இதனுள் இராது. புக்கில் என்பது முத்தி ஸ்தானம் இது மேற்கூறியவற்றால் உயிர் மாறிப் பிறந்து வரினும் ஓரிடத்தே தவறுமென்பது கூறிற்று.",
      "pope": "The soul in fragile shed as lodger courts repose:-Is it because no home's conclusive rest it knows",
      "sourceFile": "0340.md",
      "sourceSha256": "7c4934c89912539ea703aacb566d93006337b29c77205460931192c6b9ffcb6c"
    },
    {
      "number": 341,
      "lines": [
        "யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்",
        "அதனின் அதனின் இலன்."
      ],
      "manakkudavar": "எவன் யாதொன்றினின்றும் யாதொன்றினின்றும் நீங்கினான் அவன் அதனளவு துன்பமுறுதலிலன்.",
      "pope": "From whatever, aye, whatever, man gets free,From what, aye, from that, no more of pain hath he",
      "sourceFile": "0341.md",
      "sourceSha256": "28f56c29b14244354ea949500bdef0c3794f70efe80697e428acacf73a5d8b18"
    },
    {
      "number": 342,
      "lines": [
        "வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்",
        "ஈண்டுஇயற் பால பல."
      ],
      "manakkudavar": "தன்னுயிர்க்கு ஆக்கம் உண்டாக வேண்டின், தன்னுடைமையெல்லாவற்றையுந் துறக்க; துறந்தபின் இவ்விடத்தே யியலும்பகுதியின பல. இஃது இம்மைப் பயன் கூறிற்று.",
      "pope": "'Renunciation' made- ev'n here true pleasures men acquire;'Renounce' while time is yet, if to those pleasures you aspire",
      "sourceFile": "0342.md",
      "sourceSha256": "92824d1b65fb56299c2d302b7104441cc50bc18793e234b83609acae06053b34"
    },
    {
      "number": 343,
      "lines": [
        "அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்",
        "வேண்டிய வெல்லாம் ஒருங்கு."
      ],
      "manakkudavar": "துறப்பார்க்குப் பொறிக ளைந்தினுக்கும் நுகர்ச்சியான ஐந்தினையுங் கொல்லுதல் வேண்டும்: அதற்காகத் தாம் விரும்பின எல்லாவற்றையும் ஒரு காலத்திலே விடுதல் வேண்டும்.",
      "pope": "'Perceptions of the five' must all expire;-Relinquished in its order each desire",
      "sourceFile": "0343.md",
      "sourceSha256": "99c035698880f81512df9174442509739a20cb4e36589782a120cff0e42757c1"
    },
    {
      "number": 344,
      "lines": [
        "இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை",
        "மயலாகும் மற்றும் பெயர்த்து."
      ],
      "manakkudavar": "யாதொரு பொருளும் இலதாதல் தவத்திற்கியல்பாகும்: பொருளுடைமை மீண்டும் பிறத்தற்குக் காரணமான மயக்கத்தைத் தரும்.",
      "pope": "'Privation absolute' is penance true;'Possession' brings bewilderment anew",
      "sourceFile": "0344.md",
      "sourceSha256": "91ae31ea6a5a8589d9a3918aa477a7abb2184c6b9b951ae779fa9e0eab466e65"
    },
    {
      "number": 345,
      "lines": [
        "மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்",
        "உற்றார்க்கு உடம்பும் மிகை."
      ],
      "manakkudavar": "பிறப்பறுக்கலுற்றார்க்கு உடம்பும் மிகையாயிருக்க, மற்றுஞ் சில தொடர்ப்பாடு உளதாவது யாதினைக்கருதியோ?.",
      "pope": "To those who sev'rance seek from being's varied strife,Flesh is burthen sore; what then other bonds of life",
      "sourceFile": "0345.md",
      "sourceSha256": "4a10d1b5de15a6b320fc7b99d9722d75ddf4f173c1e25e99d0fffbbabdee6b7c"
    },
    {
      "number": 346,
      "lines": [
        "யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு",
        "உயர்ந்த உலகம் புகும்."
      ],
      "manakkudavar": "யானென்றும் எனதென்றும் நினைக்கின்ற மயக்கத்தை அறுக்குமவன், தேவர்க்கு மேலாகிய உலகத்தின் கண்ணே செல்லும்.",
      "pope": "Who kills conceit that utters 'I' and 'mine',Shall enter realms above the powers divine",
      "sourceFile": "0346.md",
      "sourceSha256": "cfee9a28971f5f9911d56c2ffda498c92bb6fb281b8935a1974c6ec6af0d47e9"
    },
    {
      "number": 347,
      "lines": [
        "பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்",
        "பற்றி விடாஅ தவர் க்கு."
      ],
      "manakkudavar": "பொருள்களைப் பற்றி விடாதவரைத் துன்பங்கள் விடாதே பற்றி நிற்கும். இது பொருள்களைத் துறவாக்கால் வினை கெடாதென்றது.",
      "pope": "Who cling to things that cling and eager clasp,Griefs cling to them with unrelaxing grasp",
      "sourceFile": "0347.md",
      "sourceSha256": "036583c960bdf75842272c5a7ec9ca0231fe08162e1e566f34adcfdc7e3a73e8"
    },
    {
      "number": 348,
      "lines": [
        "தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி",
        "வலைப்பட்டார் மற்றை யவர்."
      ],
      "manakkudavar": "பற்றறத் துறந்தார் முத்தியைத் தலைப்பட்டார்: அல்லாதார் மயங்கிப் பிறப்பாகிய வலையிலே யகப்பட்டார். இது மறுமைப் பயன் கூறிற்று.",
      "pope": "Who thoroughly 'renounce' on highest height are set;The rest bewildered, lie entangled in the net",
      "sourceFile": "0348.md",
      "sourceSha256": "a285219cee64ef613e6efd48d6a300a89d0508afe05a654243f412b2f0de781d"
    },
    {
      "number": 349,
      "lines": [
        "பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று",
        "நிலையாமை காணப் படும்."
      ],
      "manakkudavar": "ஒருவன் யாதொரு பொருளோடும் பற்றற்ற பொழுதே அது பிறப்பையறுக்கும்: அதனை விடாதபோது நிலையாமை காணப்படும். இஃது எல்லாப் பற்றினையும் அறுக்கப் பிறப்பு அறுமென்றது.",
      "pope": "When that which clings falls off, severed is being's tie;All else will then be seen as instability",
      "sourceFile": "0349.md",
      "sourceSha256": "ffbc65129b972eff10249d94c5f007e76f1363c8b67c68d9e5e36c2e401b8ecd"
    },
    {
      "number": 350,
      "lines": [
        "பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்",
        "பற்றுக பற்று விடற்கு."
      ],
      "manakkudavar": "பற்றறுத்தானது பற்றினைப் பற்றுக; அதனைப் பற்றுங்கால் பயன் கருதிப் பற்றாது பற்று விடுதற்காகப் பற்றுக. பற்றற்றான் பற்றாவது தியான சமாதி. பின் மெய்யுணர்தல் கூறுதலான், இது பிற்படக் கூறப்பட்டது.",
      "pope": "Cling thou to that which He, to Whom nought clings, hath bid thee cling,Cling to that bond, to get thee free from every clinging thing",
      "sourceFile": "0350.md",
      "sourceSha256": "921d94fd1aa525c66ac4b0949c48c898dedab1702a455f686c8835915e020fa0"
    },
    {
      "number": 351,
      "lines": [
        "பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்",
        "மருளானாம் மாணாப் பிறப்பு."
      ],
      "manakkudavar": "பொருளல்லாதவற்றைப் பொருளாகக் கொள்கின்ற மயக்கத்தினாலே உண்டாம்; மாட்சிமையில்லாத பிறப்பு. இது மெய்யுணருங்கால் மயக்கங் காண்பானாயின் பிறப்புண்டாமென்றது.",
      "pope": "Of things devoid of truth as real things men deem;-Cause of degraded birth the fond delusive dream",
      "sourceFile": "0351.md",
      "sourceSha256": "e3d3b51e43cee5c936d275a194162043f938d866d00e6b2c979a6f01f4c61a79"
    },
    {
      "number": 352,
      "lines": [
        "இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி",
        "மாசறு காட்சி யவர்க்கு."
      ],
      "manakkudavar": "மயக்கத்தினின்று நீங்கிக் குற்றமற்ற அறிவுடையார்க்கு, அறியாமையாகிய விருள் நீங்க முத்தியாகிய இன்ப முண்டாம். இது மெய்யுணர்ந்தார்க்கு வினைவிட்டு முத்தியின்ப முண்டா மென்றது.",
      "pope": "Darkness departs, and rapture springs to men who see,The mystic vision pure, from all delusion free",
      "sourceFile": "0352.md",
      "sourceSha256": "aff8771a61560c955258aa980e2075993c083b952cfe1b3cae781cd926252de6"
    },
    {
      "number": 353,
      "lines": [
        "ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்",
        "வானம் நணிய துடைத்து."
      ],
      "manakkudavar": "மெய்ப்பொருளை ஐயப்படுதலினின்று நீங்கித் துணிந்தவர்க்கு இவ்வுலகத்தினும் மேலுலகம் நணித்தாம் தன்மையுடத்து. துணிந்த அறிவின்கண்ணது எல்லாவுலகுமாதலின் அவ்வறிவுடையார்க்கு உலகம் ஒருங்குதோற்றுதலின் நணித்தாமென்றவாறு. இது மெய்யுணர்வு எவ்விடமும் அறியுமென்றது.",
      "pope": "When doubts disperse, and mists of error rollAway, nearer is heav'n than earth to sage's soul",
      "sourceFile": "0353.md",
      "sourceSha256": "fdca51b27414c5e6ba48a9d76c77ffd8c32f806947f3a8822abadf2e33348210"
    },
    {
      "number": 354,
      "lines": [
        "ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே",
        "மெய்யுணர்வு இல்லா தவர்க்கு."
      ],
      "manakkudavar": "மெய் முதலாகிய பொறிகளைந்தினானும் அறியப் படுவனவெல்லாம் அறிந்தவிடத்தும், அதனான் ஒருபயனுண்டாகாது; உண்மையை யறியும் அறிவிலாதார்க்கு.",
      "pope": "Five-fold perception gained, what benefits accrueTo them whose spirits lack perception of the true",
      "sourceFile": "0354.md",
      "sourceSha256": "903db723b813b6e8ec506f6e2f71abfdd490efe1b282935263cc97ac19033282"
    },
    {
      "number": 355,
      "lines": [
        "எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்",
        "மெய்ப்பொருள் காண்பது அறிவு."
      ],
      "manakkudavar": "யாதொரு பொருள் யாதொரு தன்மைத்தாயினும் அப்பொருளினுடைய வுண்மையைத் தான் உண்மையாகக் காண்பது யாதொன்று அஃது அறிவாம். மெய்யென்பதூஉம், அறிவென்பதூஉம் ஒன்று: என்னை? எக்காலத்தும் எவ்விடத்தும் ஒரு தன்மையாக அழியாது நிற்றலின் மெய்யாயிற்று: எல்லாப் பொருளையுங் காண்டலால் அறிவாயிற்று.",
      "pope": "Whatever thing, of whatsoever kind it be,'Tis wisdom's part in each the very thing to see",
      "sourceFile": "0355.md",
      "sourceSha256": "f01d7f21e743366de2cfc429419f464293452215655602d433e303cbe06e3eb5"
    },
    {
      "number": 356,
      "lines": [
        "கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்",
        "மற்றீண்டு வாரா நெறி."
      ],
      "manakkudavar": "இவ்விடத்தே மெய்ப்பொருளை யறிந்துதெளிந்தாரே அடைவார்; மீண்டு இவ்விடத்து வாராத வழியினை. கல்வி யறிவால் அறிவை அறியப் பிறப்பறு மென்றவாறு.",
      "pope": "Who learn, and here the knowledge of the true obtain,Shall find the path that hither cometh not again",
      "sourceFile": "0356.md",
      "sourceSha256": "c4bb79f2f58e9ab839a23b7dc9ead21e142c85c11edf237d18b921803264e3b6"
    },
    {
      "number": 357,
      "lines": [
        "ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்",
        "பேர்த்துள்ள வேண்டா பிறப்பு."
      ],
      "manakkudavar": "உள்ளமானது உள்ள பொருளை யாராய்ந்து ஒருதலையாக வுணருமாயின், பின்னைப் பிறப்புண்டென்று நினையா தொழிக. மெய்யுணர்ந்தவர் பிறப்புண்டென்று நினையாதொழிக வென்றவாறு.",
      "pope": "The mind that knows with certitude what is, and ponders well,Its thoughts on birth again to other life need not to dwell",
      "sourceFile": "0357.md",
      "sourceSha256": "348a7e758ec9fd652ce6c09656ad36dd3fe44009cc1866135103ada43435eaf2"
    },
    {
      "number": 358,
      "lines": [
        "பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்",
        "செம்பொருள் காண்பது அறிவு."
      ],
      "manakkudavar": "பிறப்பாகிய அறியாமையினின்று நீங்கப் பிறவாமை யாகிய செவ்விய பொருளைக் காண்பது அறிவாம். பிறவாமை சிறந்ததாதலின், சிறப்பு என்னப்பட்டது. தான் பிறந்தானாகவும் செத்தானாகவும் கருதுகின்ற அறியாமையை விட்டுத் தனக்குச் சாவில்லையாகவும் பிறப்பில்லையாகவும் தான் நிற்கின்ற நிலைமையைக் காணவேண்டுமென்றவாறாயிற்று.",
      "pope": "When folly, cause of births, departs; and soul can viewThe truth of things, man's dignity- 'tis wisdom true",
      "sourceFile": "0358.md",
      "sourceSha256": "a8fa3782ca1d6c9008647aee844a7175be9de2b2200a924d47ed3cd36fbe77c5"
    },
    {
      "number": 359,
      "lines": [
        "சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்",
        "சார்தரா சார்தரு நோய்."
      ],
      "manakkudavar": "தன்னைச் சார்வனவற்றையறிந்து அவையிற்றின் சார்வுகெட ஒழுகுவானாயின் அவ்வொழுக்கத்தினையழித்துச் சார்தலைச் செய்யா: சாரக்கடவனவாய துன்பங்கள். சார்பு - வினைச்சார்பு. கெட ஒழுகல் - காமம், வெகுளி, மயக்கமின்றி மெய்யுணர்ச்சியான் ஒழுகுதல். இஃது உண்மையைக் கண்டு அக்காட்சியைத் தப்பாமல் முடிய நிற்பனாயின் சாரக்கடவதாய் நிற்கின்ற வினை சாராதே விட்டுப் போமென்றது.",
      "pope": "The true 'support' who knows- rejects 'supports' he sought before-Sorrow that clings all destroys, shall cling to him no more",
      "sourceFile": "0359.md",
      "sourceSha256": "af3fdc2d3ec8075e164bd87137cb38eb7179b7073c7f7d780438c6d10bdf9f26"
    },
    {
      "number": 360,
      "lines": [
        "காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்",
        "நாமம் கெடக்கெடும் நோய்."
      ],
      "manakkudavar": "ஆசையும் வெகுளியும் மயக்கமு மென்னும் இவை மூன்றினது நாமம்போக வினைபோம். வினைகெடுதற்கு வழி இதுவென்று கூறுதலான் இது மெய்யுணர்தலாயிற்று.",
      "pope": "When lust and wrath and error's triple tyranny is o'er,Their very names for aye extinct, then pain shall be no more",
      "sourceFile": "0360.md",
      "sourceSha256": "7a0cd4becc67c99e32aaa03d01655ae48aa259a0043a075b419c487b31345466"
    },
    {
      "number": 361,
      "lines": [
        "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்",
        "தவாஅப் பிறப்பீனும் வித்து."
      ],
      "manakkudavar": "எல்லாவுயிர்க்கும் எல்லா நாளுங் கேடில்லாத பிறப்பைக் கொடுக்கும் விதையாவது ஆசையென்று சொல்லுவர். இஃது ஆசை துன்பம் தருதலேயன்றிப் பிறப்பையும் தருமென்றது.",
      "pope": "The wise declare, through all the days, to every living thingThat ceaseless round of birth from seed of strong desire doth spring",
      "sourceFile": "0361.md",
      "sourceSha256": "e1d86e6dc954edd840f999e74ec93d092501495bd6ae75566ffcca5c88b85c19"
    },
    {
      "number": 362,
      "lines": [
        "வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது",
        "வேண்டாமை வேண்ட வரும்."
      ],
      "manakkudavar": "வேண்டுங்கால் பிறவாமையை விரும்புதல் வேண்டும்: அப்பிறவாமை பொருளை விரும்பாமையை விரும்பத் தானே வரும். இது பிறவாமையும் இதனாலே வருமென்றது.",
      "pope": "If desire you feel, freedom from changing birth require!'I' will come, if you desire to 'scape, set free from all desire",
      "sourceFile": "0362.md",
      "sourceSha256": "e51c6c71ca0ca77e4b56037811330e791b434fa2439e11a65482413c0cf849f1"
    },
    {
      "number": 363,
      "lines": [
        "வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை",
        "ஆண்டும் அஃதொப்பது இல்."
      ],
      "manakkudavar": "அவாவின்மை போல மிக்க செல்வம் இவ்விடத்தில் இல்லை: அவ்விடத்தினும் அதனை யொப்பது பிறிதில்லை. இஃது இதனின் மிக்கதொரு பொருளுமில்லை யென்றது.",
      "pope": "No glorious wealth is here like freedom from desire;To bliss like this not even there can soul aspire",
      "sourceFile": "0363.md",
      "sourceSha256": "7d081db9d124ebe6a4960857d86b671db14166b8d5f1362e6fd58140f2961848"
    },
    {
      "number": 364,
      "lines": [
        "தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது",
        "வாஅய்மை வேண்ட வரும்."
      ],
      "manakkudavar": "ஒருவர்க்கு அழுக்கறுத்தலாவது ஆசையின்மை; அவ்வாசை யின்மை மெய் சொல்லுதலை விரும்ப வரும். இது பொருள்மேலாசையில்லாதார் பொய் கூறாராதலின் மெய் சொல்ல அவாவின்மை வரும் என்று அவாவறுத்தற்குக் கருவி கூறிற்று.",
      "pope": "Desire's decease as purity men know;That, too, from yearning search for truth will grow",
      "sourceFile": "0364.md",
      "sourceSha256": "b1e6f835ab6560720396e043659142ef23fffb34b7ac634f19b290b7e5c58340"
    },
    {
      "number": 365,
      "lines": [
        "அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்",
        "அற்றாக அற்றது இலர்."
      ],
      "manakkudavar": "பற்றற்றவரென்பார் ஆசையற்றவரே; ஆசையறாதவர் பற்றினையறுத்தாராயினும் ஆசையற்றாரைப் போலப் பற்றறுதலிலர்.",
      "pope": "Men freed from bonds of strong desire are free;None other share such perfect liberty",
      "sourceFile": "0365.md",
      "sourceSha256": "29f2a290ef877ddb32316eec55f898f611478a7e3a5e1c8f3bcde06e61d680df"
    },
    {
      "number": 366,
      "lines": [
        "அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை",
        "வஞ்சிப்ப தோரும் அவா."
      ],
      "manakkudavar": "ஒருவனை வஞ்சனை செய்வது ஆசை: ஆதலால் அதனை அஞ்சுவதே அறம். வஞ்சனை செய்தல்- நன்றி செய்வாரைப் போல முன்னே நின்று, பின்னே தீக்கதியுள் உய்த்தல். இஃது ஆசையின்மை வேண்டுமென்றது.",
      "pope": "Desire each soul beguiles;True virtue dreads its wiles",
      "sourceFile": "0366.md",
      "sourceSha256": "979acafdcf987685fc27ce6fdc72c68b4bad716350a968177a496e7af4e70e99"
    },
    {
      "number": 367,
      "lines": [
        "அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை",
        "தான்வேண்டு மாற்றான் வரும்."
      ],
      "manakkudavar": "ஆசையை மிகவும் போக்குவானாயின், கேடில்லாத வினைதான் வேண்டின நெறியாலே வரும்.",
      "pope": "Who thoroughly rids his life of passion-prompted deed,Deeds of unfailing worth shall do, which, as he plans, succeed",
      "sourceFile": "0367.md",
      "sourceSha256": "2ec2379c7e314dfb3f815c3d1bb5e8fcbfe08763290a8654d9ade0d269a9f1ec"
    },
    {
      "number": 368,
      "lines": [
        "அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்",
        "தவாஅது மேன்மேல் வரும்."
      ],
      "manakkudavar": "ஆசையில்லார்க்குத் துன்பம் இல்லையாகும். அஃது உண்டாயின் துன்பமானது கெடாது மேன்மேல் வரும்.",
      "pope": "Affliction is not known where no desires abide;Where these are, endless rises sorrow's tide",
      "sourceFile": "0368.md",
      "sourceSha256": "0fe2992b20a8bd909cb796c995a4cc077119e2d652685e7f92a2a5c4351ca4a6"
    },
    {
      "number": 369,
      "lines": [
        "இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்",
        "துன்பத்துள் துன்பங் கெடின்."
      ],
      "manakkudavar": "அவாவாகிய துன்பங்களுள் மிக்க துன்பம் கெடுமாயின் இன்பமானது இடையறாமல் வந்து மிகும். இஃது இன்பமும் இதனாலே வருமென்றது.",
      "pope": "When dies away desire, that woe of woesEv'n here the soul unceasing rapture knows",
      "sourceFile": "0369.md",
      "sourceSha256": "98c13e9e0e91fe87f5a465d92833d72ef079ba27387489ce97e3a6a1eff0c55d"
    },
    {
      "number": 370,
      "lines": [
        "ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே",
        "பேரா இயற்கை தரும்."
      ],
      "manakkudavar": "நிறையா இயல்பினையுடைய ஆசையை விடுவானாயின் அது விட்ட பொழுதே அழியாத இயல்பினைத் தரும். இயல்பாவது என்றும் ஒருபடிப்பட்டது. இது தன்னுடைய உருவத்தைப் பெறுமென்றது.",
      "pope": "Drive from thy soul desire insatiate;Straight'way is gained the moveless blissful state",
      "sourceFile": "0370.md",
      "sourceSha256": "15e351314ff6f3911f9933df41d6e88940791d0d869042143612d5f176cb770c"
    },
    {
      "number": 371,
      "lines": [
        "ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்",
        "போகூழால் தோன்றும் மடி."
      ],
      "manakkudavar": "ஒருவனுக்கு ஆக்கங் கொடுக்கின்ற ஊழ் தோன்றினால் முயற்சி தோன்றும்; அழிவு கொடுக்கின்ற ஊழ் தோன்றினால் மடிதோன்றும். இஃது ஆக்கத்திற்கும் கேட்டிற்கும் ஏதுவான முயற்சியும் முயலாமையும் ஊழால் வருமென்றது.",
      "pope": "Wealth-giving fate power of unflinching effort brings;From fate that takes away idle remissness springs",
      "sourceFile": "0371.md",
      "sourceSha256": "cd9aa257fb4723871f52ebc36db7584a8be8718d1bf9aaf6597cc66ecc48437d"
    },
    {
      "number": 372,
      "lines": [
        "பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்",
        "ஆகலூழ் உற்றக் கடை."
      ],
      "manakkudavar": "கெடுக்கும் ஊழ் தோன்றினால் அறியாமையை யுண்டாக்கும்; ஆக்கும் ஊழ் தோன்றினால் அறிவை விரிக்கும். இஃது அறிவும் அறியாமையும் ஊழால் வருமென்றது.",
      "pope": "The fate that loss ordains makes wise men's wisdom foolishness;The fate that gain bestows with ampler powers will wisdom bless",
      "sourceFile": "0372.md",
      "sourceSha256": "334eddbec9feb8fea94aa9c2e7ee29ce4301cb7d32dd64a18bbe45873bd4799b"
    },
    {
      "number": 373,
      "lines": [
        "நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்",
        "உண்மை யறிவே மிகும்."
      ],
      "manakkudavar": "நுண்ணியவாக வாராய்ந்த நூல்கள் பலவற்றையுங் கற்றானாயினும், பின்னையும் தனக்கு இயல்பாகிய அறிவே மிகுத்துத் தோன்றும். மேல் அறிவிற்குக் காரணம் ஊழ் என்றார் அஃதெற்றுக்கு? கல்வியன்றே காரணமென்றார்க்கு ஈண்டுக் கல்வியுண்டாயினும் ஊழானாய அறிவு வலியுடைத்தென்றார்.",
      "pope": "In subtle learning manifold though versed man be,'The wisdom, truly his, will gain supremacy",
      "sourceFile": "0373.md",
      "sourceSha256": "817112adf9b8e3d7f4e217a88cc3735b3d37150d385c0f3ff2e0fbaf9e0da2d9"
    },
    {
      "number": 374,
      "lines": [
        "இருவேறு உலகத்து இயற்கை திருவேறு",
        "தெள்ளிய ராதலும் வேறு."
      ],
      "manakkudavar": "செல்வமுடையாராதலும் தெள்ளியாராதலும் வேறு வேறு ஊழினால் வரும்: ஆதலால் இரண்டு வகையாதல் உலகத்தியல்பு.",
      "pope": "Two fold the fashion of the world: some live in fortune's light;While other some have souls in wisdom's radiance bright",
      "sourceFile": "0374.md",
      "sourceSha256": "05e40643a0b7f3d76938281f10939690dfba355e6cb1767c0ff04e294f9d3d3e"
    },
    {
      "number": 375,
      "lines": [
        "நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்",
        "நல்லவாம் செல்வம் செயற்கு."
      ],
      "manakkudavar": "செல்வம் உண்டாக்குவதற்குத் தனக்குமுன்பு தீதாயிருந்தனவெல்லாம் நன்றாம்: அச்செல்வத்தை யில்லை யாக்குவதற்கு முன்பு நன்றாய் இருந்தனவெல்லாம் தீதாம்.",
      "pope": "All things that good appear will oft have ill success;All evil things prove good for gain of happiness",
      "sourceFile": "0375.md",
      "sourceSha256": "2639cde56f1dec6c68166d3d197ed9f3da522d79141a4d07ddebc490dcbb7d79"
    },
    {
      "number": 376,
      "lines": [
        "பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்",
        "சொரியினும் போகா தம."
      ],
      "manakkudavar": "தம்முடைய பகுதியல்லாதனவற்றை வருந்திக் காப்பினும் அவை தமக்கு ஆகா: தம்முடைய பகுதியாயினவற்றைக் கொண்டு சென்று சொரிந்து விடினும் அவை போகா. இது முன்புள்ள செல்வம் காவற்படுதலும் களவு போதலும் ஊழினாலேயா மென்றது.",
      "pope": "Things not your own will yield no good, howe'er you guard with pain;Your own, howe'er you scatter them abroad, will yours remain",
      "sourceFile": "0376.md",
      "sourceSha256": "1e5980fc346112bc972035fc718670cc69e96fcb29eca27ae851bf2539e200dc"
    },
    {
      "number": 377,
      "lines": [
        "வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி",
        "தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது."
      ],
      "manakkudavar": "விதானம் பண்ணினவன் விதானம் பண்ணின வகையினானல்லது கோடி பொருளை யீட்டினவர்க்கும் அதனால் வரும் பயன்கோடல் அருமையுடைத்து. இது பொருள் பெற்றாலும் நுகர்தற்கு ஊழ்வேண்டுமென்றது.",
      "pope": "Save as the 'sharer' shares to each in due degree,To those who millions store enjoyment scarce can be",
      "sourceFile": "0377.md",
      "sourceSha256": "0453a5f5afe1d4b197862af557f33823c3c3d8497df0e83883c1d6f627c0b108"
    },
    {
      "number": 378,
      "lines": [
        "துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால",
        "ஊட்டா கழியு மெனின்."
      ],
      "manakkudavar": "நுகரும்பொரு ளில்லாதார் துறக்க அமைவர்: தமக்கு வந்துறுந் துன்பப்பகுதியானவை உறாதுபோமாயின். இது துறவறமானது ஊழினால் வருமென்றது.",
      "pope": "The destitute with ascetics merit share,If fate to visit with predestined ills would spare",
      "sourceFile": "0378.md",
      "sourceSha256": "81a025e8e87059ab309ea2d0835bea284ab2dc180a45acb694feaa8d398ece32"
    },
    {
      "number": 379,
      "lines": [
        "நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்",
        "அல்லற் படுவ தெவன்?"
      ],
      "manakkudavar": "நன்மை வருங்காலத்து நன்றாகக் காண்பவர் தீமை வருங்காலத்து அல்லற்படுவது யாதினுக்கு?. இஃது அறிந்தவர் வருவனவெல்லாம் இயல்பென்று கொள்ளவேண்டு மென்றது.",
      "pope": "When good things come, men view them all as gain;When evils come, why then should they complain",
      "sourceFile": "0379.md",
      "sourceSha256": "1c11882724abd82ad947fe7db0d267504b88db17f9dfaf5333b95f7cc3cbeea5"
    },
    {
      "number": 380,
      "lines": [
        "ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று",
        "சூழினுந் தான்முந் துறும்."
      ],
      "manakkudavar": "ஊழினும் மிக்க வலியுடையன யாவையுள? பிறிதொன்றை யாராயுங் காலத்தும் தான் முற்பட அவ்வாராய்ச்சிக்கு உடன்பட்டுநிற்கும்.",
      "pope": "What powers so great as those of Destiny? Man's skillSome other thing contrives; but fate's beforehand still",
      "sourceFile": "0380.md",
      "sourceSha256": "4c63be7757a54fd1e93901963314f176b04bd9c4b02eda6f908ab21de9626a65"
    },
    {
      "number": 381,
      "lines": [
        "படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்",
        "உடையான் அரசருள் ஏறு."
      ],
      "manakkudavar": "படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணுமென்னும் ஆறுபொருளினையும் உடையவன் அரசருள் ஏறுபோல்வன். ஈண்டுக் குடியுள் நாடு அடங்கிற்று. இஃது அரசனுக்கு உண்டாக்குவன கூறிற்று.",
      "pope": "An army, people, wealth, a minister, friends, fort: six things-Who owns them all, a lion lives amid the kings",
      "sourceFile": "0381.md",
      "sourceSha256": "b2bb7c80ab64b074e049cb499f5548c6de3e34d5e4d7eff185632033825dc626"
    },
    {
      "number": 382,
      "lines": [
        "அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்",
        "எஞ்சாமை வேந்தர்க் கியல்பு."
      ],
      "manakkudavar": "அஞ்சாமையும் ஈகையும் அறிவுடைமையும் ஊக்கமுடைமையுமென்னும் இந்நான்கு குணமும் ஒழியாமை வேந்தனுக்கியல்பு.",
      "pope": "Courage, a liberal hand, wisdom, and energy: these fourAre qualities a king adorn for evermore",
      "sourceFile": "0382.md",
      "sourceSha256": "1f1925ef61060817175898a6dc5f7797937e9af5113eda13d344472e409a0005"
    },
    {
      "number": 383,
      "lines": [
        "தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்",
        "நீங்கா நிலனான் பவர்க்கு."
      ],
      "manakkudavar": "மடியின்மையும் கல்வியுடைமையும் ஒரு பொருளை ஆராய்ந்து துணிதலுடைமையும் என்று சொல்லப்பட்ட இம்மூன்றும் பூமியை யாள்பவனுக்கு நீங்காமல் வேண்டும்.",
      "pope": "A sleepless promptitude, knowledge, decision strong:These three for aye to rulers of the land belong",
      "sourceFile": "0383.md",
      "sourceSha256": "a93bf74967585961eb10e5f1df2cf98c195424fba104cad20b48edea970a9928"
    },
    {
      "number": 384,
      "lines": [
        "அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா",
        "மானம் உடைய தரசு."
      ],
      "manakkudavar": "அறத்திற் றப்பாமலொழுகி அறமல்லாத காம வெகுளியைக் கடிந்து மறத்திற் றப்பாத மானத்தையுடையவன் அரசன்.",
      "pope": "Kingship, in virtue failing not, all vice restrains,In courage failing not, it honour's grace maintains",
      "sourceFile": "0384.md",
      "sourceSha256": "85485a0cc9d1085ec3aaceeea477ffc10a77b1380fff2cd9b97c24d476afdc93"
    },
    {
      "number": 385,
      "lines": [
        "இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த",
        "வகுத்தலும் வல்ல தரசு."
      ],
      "manakkudavar": "பொருள் வரும்வழி யியற்றலும் அதனை அழியாம லீட்டலும் அதனைச் சோர்வுபடாமற் காத்தலும் காத்த அதனை வேண்டுவனவற்றிற்குப் பகுத்தலும் வல்லவன் அரசனாவான். பகுத்தல்- யானை குதிரை முதலிய படைக்குக் கொடுத்து அவையிற்றை யுண்டாக்குதல். இது பண்டாரங் கூறுமாறு கூறிற்று.",
      "pope": "A king is he who treasure gains, stores up, defends,And duly for his kingdom's weal expends",
      "sourceFile": "0385.md",
      "sourceSha256": "f4f1806a6ac5356d1f52b95d57e0925128333b7bb1ca3d0dce73050a20bc5ccb"
    },
    {
      "number": 386,
      "lines": [
        "காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்",
        "மீக்கூறும் மன்னன் நிலம்"
      ],
      "manakkudavar": "காண்கைக்கு எளியனாய்க் கடுஞ்சொற்கூறுதலும் அல்லனாயின் அம்மன்னனை உலகத்தார் உயர்த்துக் கூறுவர். இது மன்னன் உலகத்தார்மாட்டு ஒழுகுந் திறங் கூறிற்று.",
      "pope": "Where king is easy of access, where no harsh word repels,That land's high praises every subject swells",
      "sourceFile": "0386.md",
      "sourceSha256": "b6d42d0b07e802832f5fa38ddb74d10c68dc439b4407f5d830a6a957be5fdfbc"
    },
    {
      "number": 387,
      "lines": [
        "இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்",
        "தான்கண் டனைத்திவ் வுலகு."
      ],
      "manakkudavar": "இனிய சொல்லோடே கொடுத்துத் தலையளி செய்ய வல்ல அரசனுக்குத் தன்னேவலாலே இவ்வுலகம் தான் கண்டாற் போலும் தன் வசத்தே கிடக்கும்.",
      "pope": "With pleasant speech, who gives and guards with powerful liberal hand,He sees the world obedient all to his command",
      "sourceFile": "0387.md",
      "sourceSha256": "7812c16e4e7bf56241a109510fe4d8daf634d372b37ef95926b2022016a3fdc2"
    },
    {
      "number": 388,
      "lines": [
        "முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு",
        "இறையென்று வைக்கப் படும்."
      ],
      "manakkudavar": "குற்றஞ் செய்தாரை அதற்குச் செய்யும் முறைமை தப்பாமற் செய்து, எல்லாவுயிரையுங் காத்தலைச் செய்கின்ற அரசன் மனிதர்க்கு நாயகனென்று எண்ணப்படுவான்.",
      "pope": "Who guards the realm and justice strict maintains,That king as god o'er subject people reigns",
      "sourceFile": "0388.md",
      "sourceSha256": "8ebb41cbc351745631dc5bbf56312217f4d9b790757a6bfa577e33666c8a3b1b"
    },
    {
      "number": 389,
      "lines": [
        "செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்",
        "கவிகைக்கீழ்த் தங்கும் உலகு."
      ],
      "manakkudavar": "தன் செவி வெறுக்கும்படியாகப் பிறர் செய்த குற்றங்களைக் கேட்டு வைத்தும், அதனைப் பொறுக்கவல்ல குணமுடைய வேந்தனது குடைக் கீழே உலகு தங்கும். சொற்பொறுக்கும் என்பதற்குப் புரோகிதர் தன்னிடத்துச் சொல்லுஞ் சொற்களைப் பொறுக்கவல்ல என்பாருமுளர்.",
      "pope": "The king of worth, who can words bitter to his ear endure,Beneath the shadow of his power the world abides secure",
      "sourceFile": "0389.md",
      "sourceSha256": "86fd262e210562e72cf19ef612ea5cbff0ca0323d042abe8b7db8a4dd6aff1f7"
    },
    {
      "number": 390,
      "lines": [
        "கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்",
        "உடையானாம் வேந்தர்க் கொளி."
      ],
      "manakkudavar": "கொடுத்தலும், தலையளி செய்தலும், செங்கோன்மையும் குடிகளைப் பாதுகாத்தலுமென்று சொல்லப்படுகின்ற இந்நான்கினையு முடையவன் வேந்தர்க்கெல்லாம் விளக்காம். கொடுத்தல்-தளர்ந்த குடிக்கு விதை ஏர் முதலியன கொடுத்தல்: அளித்தல்- அவரிடத்துக் கொள்ளுங் கடமையைத் தளர்ச்சி பார்த்து விட்டு வைத்துப் பின்பு கோடல்: செங்கோன்மை- கொள்ளும் முறையைக் குறையக் கொள்ளாமை: குடியோம்பல்- தளர்ந்த குடிக்கு இறை கழித்தல். இது குடிக்கு அரசன் செய்யுந் திறங் கூறிற்று.",
      "pope": "Gifts, grace, right sceptre, care of people's weal;These four a light of dreaded kings reveal",
      "sourceFile": "0390.md",
      "sourceSha256": "c54bc06313663226802d0180cd3da102fa64bea7d596ea7d6fe1ef2ec5664391"
    },
    {
      "number": 391,
      "lines": [
        "கற்க கசடறக் கற்பவை கற்றபின்",
        "நிற்க அதற்குத் தக."
      ],
      "manakkudavar": "கற்கப்படுவனவற்றைக் குற்றமறக் கற்க: கற்றபின்பு அக்கல்விக்குத் தக வொழுக. இது கற்கவும் வேண்டும்: அதனை கடைப்பிடிக்கவும் வேண்டுமென்றது.",
      "pope": "So learn that you may full and faultless learning gain,Then in obedience meet to lessons learnt remain",
      "sourceFile": "0391.md",
      "sourceSha256": "ef526811004ff490745f74ad563a3494bfcf7fc0c25904886f4ee664df7fe825"
    },
    {
      "number": 392,
      "lines": [
        "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்",
        "கண்ணென்ப வாழும் உயிர்க்கு."
      ],
      "manakkudavar": "எண்ணென்று சொல்லப்படுவனவும் மற்றை எழுத்தென்று சொல்லப்படுவனவுமாகிய இவ்விரண்டு பொருளையும் உலகின்கண் வாழுமுயிர்களுக்குக் கண்ணென்று சொல்லுவர் அறிவோர்.",
      "pope": "The twain that lore of numbers and of letters giveAre eyes, the wise declare, to all on earth that live",
      "sourceFile": "0392.md",
      "sourceSha256": "9a2d77b01004df991216794c8afb9ff98435622c6008b39a38fe43d994d2be17"
    },
    {
      "number": 393,
      "lines": [
        "கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு",
        "புண்ணுடையர் கல்லா தவர்."
      ],
      "manakkudavar": "கற்றோர் கண்ணுடைய ரென்று சொல்லப்படுவர்: கல்லாதார் முகத்தின்கண்ணே இரண்டு புண்ணுடைய ரென்று சொல்லப்படுவர். அறிவு கல்வியின் கண்ணதாகலான் அக்கல்வியில்லாதார் கண் புண்ணாயிற்று.",
      "pope": "Men who learning gain have eyes, men say;Blockheads' faces pairs of sores display",
      "sourceFile": "0393.md",
      "sourceSha256": "3221fb24cfb661a53a76f363f005c46df9416e20d2fff42f46b32332db554461"
    },
    {
      "number": 394,
      "lines": [
        "உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்",
        "அனைத்தே புலவர் தொழில்."
      ],
      "manakkudavar": "மக்களிருவர் உவக்குமாறு கூடி அவர் நினைக்குமாறு பிரிதல் போலும் : கற்றோர் செய்யுந்தொழில். இஃது இன்பம் நுகரினும் வினை செய்யினும் பிறர்க்கும் இன்பம் பயக்கச் செய்தல் கல்வியாலாமென்றது.",
      "pope": "You meet with joy, with pleasant thought you part;Such is the learned scholar's wonderous art",
      "sourceFile": "0394.md",
      "sourceSha256": "4f35ea9f4c36cd9a4e3c58480fc3d7b4782c7ef46e6007e4a0995455d7b63d94"
    },
    {
      "number": 395,
      "lines": [
        "உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்",
        "கடையரே கல்லா தவர்."
      ],
      "manakkudavar": "பொருளுடையார் முன்பு பொருளில்லாதார் நிற்குமாறு போல, அதனைக் காதலித்து நிற்றலுமன்றிக் கற்றாரிடத்தாவர் கல்லாதார். இது கற்றார் எல்லாரினுந் தலையாவாரென்றது.",
      "pope": "With soul submiss they stand, as paupers front a rich man's face;Yet learned men are first; th'unlearned stand in lowest place",
      "sourceFile": "0395.md",
      "sourceSha256": "05e1aa5355cbb24a7294b70d6bc61ba7e64c8a392acf301aa2bbaa60048122e9"
    },
    {
      "number": 396,
      "lines": [
        "தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்",
        "கற்றனைத் தூறும் அறிவு."
      ],
      "manakkudavar": "அகழ்ந்த அளவு மணற்கேணி நீருண்டாம்: அதுபோல மாந்தர்க்குக் கற்ற அளவும் அறிவுண்டாம். இஃது அறிவுண்டாமென்றது.",
      "pope": "In sandy soil, when deep you delve, you reach the springs below;The more you learn, the freer streams of wisdom flow",
      "sourceFile": "0396.md",
      "sourceSha256": "41b07ca0b354674c65f5966af97df852e00bd4056e7bc08fd29af1ceaec043b4"
    },
    {
      "number": 397,
      "lines": [
        "யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்",
        "சாந்துணையுங் கல்லாத வாறு."
      ],
      "manakkudavar": "யாதோரிடத்தே செல்லினும் அதுவே தனது நாடும் ஊரும் போலாம். ஆதலால் ஒருவன் சாந்துணையுங் கல்லா தொழுகுதல் யாதினைக்கருதி?. இது கல்வி எல்லாரானுங் கைக்கொள்ளப்படு மென்றது.",
      "pope": "The learned make each land their own, in every city find a home;Who, till they die; learn nought, along what weary ways they roam",
      "sourceFile": "0397.md",
      "sourceSha256": "06eb621c3506fd891d1754d06f7a83b090aab6e194377d282a90a0c060073cc6"
    },
    {
      "number": 398,
      "lines": [
        "ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு",
        "எழுமையும் ஏமாப் புடைத்து."
      ],
      "manakkudavar": "ஒருவனுக்கு ஒரு பிறப்பிலே கற்ற கல்வி தானே எழுபிறப்பினும் ஏமமாதலை யுடைத்து. கற்ற கல்வி தானென்று கூட்டுக. இது வாசனை தொடர்ந்து நன்னெறிக்கண் உய்க்குமென்றது.",
      "pope": "The man who store of learning gains,In one, through seven worlds, bliss attains",
      "sourceFile": "0398.md",
      "sourceSha256": "8f2ad5de366be91a369e45a8b6f51a5f43da3a9c2ad9c5ec0dd15946f7042099"
    },
    {
      "number": 399,
      "lines": [
        "தாமின் புறுவது உலகின் புறக்கண்டு",
        "காமுறுவர் கற்றறிந் தார்."
      ],
      "manakkudavar": "தாம் இனிதாக நுகர்வதொன்றை உலகத்தார் நுகர்ந்து இன்புறுவாராகக் கண்டால் அதற்கு இன்புறுவர் கற்றறிந்தவர். இஃது அழுக்காறு செய்யாது இன்புறுதல் அறமாதலின் அது கல்வியானே வருமென்றது.",
      "pope": "Their joy is joy of all the world, they see; thus moreThe learners learn to love their cherished lore",
      "sourceFile": "0399.md",
      "sourceSha256": "765e45b70d7043daffd85f04889aca6b02191ca7cdb0b29cf63313270410d97f"
    },
    {
      "number": 400,
      "lines": [
        "கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு",
        "மாடல்ல மற்றை யவை."
      ],
      "manakkudavar": "ஒருவனுக்குக் கேடில்லாத சீரிய பொருளாவது கல்வி: மற்றவையெல்லாம் பொருளல்ல. இது கல்வி அழியாத செல்வமென்றது.",
      "pope": "Learning is excellence of wealth that none destroy;To man nought else affords reality of joy",
      "sourceFile": "0400.md",
      "sourceSha256": "81f548d89d7df05b887791a36906bc94135ebcac7071b4d969ffcfb2844f5f9b"
    },
    {
      "number": 401,
      "lines": [
        "அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய",
        "நூலின்றிக் கோட்டி கொளல்."
      ],
      "manakkudavar": "கொம்மையின்றி வட்டாடினாற் போலும்; நிரம்பிய நூல்களைக் கற்றலின்றி வார்த்தை சொல்லுதல். அரங்கு- சூது: வட்டாடுதல்- உருண்டை யுருட்டல்: கோட்டி கொளல்- 'புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி' என்றாற்போல. இது கல்லாதார் வார்த்தை சொல்லின் அது தப்புமென்றது.",
      "pope": "Like those at draughts would play without the chequered square,Men void of ample lore would counsels of the learned share",
      "sourceFile": "0401.md",
      "sourceSha256": "1ce970b9211dfced0cd136af1e5a4dabed9ce171db9ee24da34da50555d02a15"
    },
    {
      "number": 402,
      "lines": [
        "கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்",
        "இல்லாதாள் பெண்காமுற் றற்று."
      ],
      "manakkudavar": "கல்வியில்லாதான் சொல்லுதற்கு ஆசைப்படுதல், இரண்டு முலையுமில்லாதாள் பெண்மைக்குக் காமுற்றாற்போலும். இது தன்னாசையல்லது சொன்னாலும் விரும்புவாரில்லை யென்றது.",
      "pope": "Like those who doat on hoyden's undeveloped charms are they,Of learning void, who eagerly their power of words display",
      "sourceFile": "0402.md",
      "sourceSha256": "4790114ea1698417e7a08cc48fab81967deaa58a9549c8d8852b577e88994717"
    },
    {
      "number": 403,
      "lines": [
        "கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்",
        "சொல்லா திருக்கப் பெறின்."
      ],
      "manakkudavar": "கல்லாதவரும் ஓரிடத்து மிகவும் நல்லவராவர், கற்றவர் முன்பு உரையாடாதிருக்கக்கூடுமாயின். சொல்லாதொழிய அறிவாரில்லையாவர் என்றவாறாயிற்று. இது கல்லாதார்க்கு உபாயம் இது என்றது.",
      "pope": "The blockheads, too, may men of worth appear,If they can keep from speaking where the learned hear",
      "sourceFile": "0403.md",
      "sourceSha256": "864765a05850f43c27405664a6ca38921afb11db70583821dcd04b3df75588db"
    },
    {
      "number": 404,
      "lines": [
        "கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்",
        "கொள்ளார் அறிவுடை யார்."
      ],
      "manakkudavar": "கல்லாதானது ஒண்மை மிகவும் நன்றாயிருப்பினும் அதனை ஒண்மையாகக் கொள்ளார் அறிவுடையார். ஒண்மை யெனினும் அறிவெனினும் அமையும். இது கல்லாதார் ஒள்ளியாராயினும் மதிக்கப்படாரென்றது.",
      "pope": "From blockheads' lips, when words of wisdom glibly flow,The wise receive them not, though good they seem to show",
      "sourceFile": "0404.md",
      "sourceSha256": "ff59b0230d7fe7c77cb4a582036a5bd8c369bd721bbae48472d574ebe1c64da0"
    },
    {
      "number": 405,
      "lines": [
        "கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து",
        "சொல்லாடச் சோர்வு படும்."
      ],
      "manakkudavar": "கல்லாத ஒருவனது பெருமை கற்றவன் கிட்டி உரையாட மறையும். இது பெருமையுடையாராயினும் மதிக்கப்படாரென்றது.",
      "pope": "As worthless shows the worth of man unlearned,When council meets, by words he speaks discerned",
      "sourceFile": "0405.md",
      "sourceSha256": "dcda411b99997f5c1b3f0bf8d0a3b33192afa31b2b2e6a20200d44d6e6be6cbd"
    },
    {
      "number": 406,
      "lines": [
        "உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்",
        "களரனையர் கல்லா தவர்."
      ],
      "manakkudavar": "உளரென்னும் அளவினையுடையாரல்லது, பயன்படாத களர் நிலத்தை யொப்பர் கல்லாதவர். இது, பிறர்க்குப் பயன்படாரென்றது.",
      "pope": "'They are': so much is true of men untaught;But, like a barren field, they yield us nought",
      "sourceFile": "0406.md",
      "sourceSha256": "f2f4f7a7d34328b2624365ce1ba704babf847baad012c59718e2e6158a136cf1"
    },
    {
      "number": 407,
      "lines": [
        "நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்",
        "மண்மாண் புனைபாவை யற்று."
      ],
      "manakkudavar": "நுண்ணிதாகிய மாட்சிமைப்பட்ட ஆராய்ச்சியையுடைய கல்வியில்லாதான் அழகு, மண்ணினாலே நன்றாகச் செய்த பாவையின் அழகினை யொக்கும். இஃது அழகியராயினும் மதிக்கப்படாரென்றது.",
      "pope": "Who lack the power of subtle, large, and penetrating sense,Like puppet, decked with ornaments of clay, their beauty's vain pretence",
      "sourceFile": "0407.md",
      "sourceSha256": "12e516a7130b7f4eef37fcc9471aeac8117554a6fae0ae0e89a51b1ad91c71ea"
    },
    {
      "number": 408,
      "lines": [
        "நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே",
        "கல்லார்கண் பட் ட திரு."
      ],
      "manakkudavar": "நல்லார்மாட்டு உண்டாகிய வறுமைபோலப் பிறர்க்கு இன்னாமையைச் செய்யும்; கல்லாதார்மாட்டு உண்டாகிய செல்வம். இது செல்வமுண்டாயின், பிறரைத் துன்பமுறுவிப்பரென்றது.",
      "pope": "To men unlearned, from fortune's favour greater-evil springsThan poverty to men of goodly wisdom brings",
      "sourceFile": "0408.md",
      "sourceSha256": "c778db90ebf943cd957c3838b1a010601ec385152c77ebabda7c98caa6f6cfdb"
    },
    {
      "number": 409,
      "lines": [
        "மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்",
        "கற்றார் அனைத்திலர் பாடு."
      ],
      "manakkudavar": "கல்வியில்லாதார் உயர்குலத்திற் பிறந்தாராயினும், இழிகுலத்துப் பிறந்தும் கற்றாரோடு ஒத்த பெருமையிலர். இது குலமுடையாராயினும் மதிக்கப்படாரென்றது.",
      "pope": "Lower are men unlearned, though noble be their race,Than low-born men adorned with learning's grace",
      "sourceFile": "0409.md",
      "sourceSha256": "80fe60c5d50ed1505a651b9e0ac9a6bfd6e9283f3173524069581257744dd166"
    },
    {
      "number": 410,
      "lines": [
        "விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்",
        "கற்றாரோடு ஏனை யவர்."
      ],
      "manakkudavar": "விலங்குச் சாதியோடும் மக்களோடும் உள்ள வேறுபாடுடையர்; விளங்கின நூல்களைக் கற்றவரோடு கல்லாதவர். இது கல்லாதார் விலங்கென்றது.",
      "pope": "Learning's irradiating grace who gain,Others excel, as men the bestial train",
      "sourceFile": "0410.md",
      "sourceSha256": "408453902cd64f9e0f7307725947f84c36b21bdfa11944d359ab60b7d6fec67c"
    },
    {
      "number": 411,
      "lines": [
        "செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்",
        "செல்வத்து ளெல்லாந் தலை."
      ],
      "manakkudavar": "ஒருவற்குச் சிறப்புடைய செல்வமானது செவியான் வருஞ் செல்வம்: அச்செல்வம் பிறசெல்வங்க ளெல்லாவற்றினும் தலையாகலான்.",
      "pope": "Wealth of wealth is wealth acquired be ear attent;Wealth mid all wealth supremely excellent",
      "sourceFile": "0411.md",
      "sourceSha256": "fa05bd7c1bce4484710fe1974558d0d3967e6adb1f31ab924418c756444978e1"
    },
    {
      "number": 412,
      "lines": [
        "செவுக்குண வில்லாத போழ்து சிறிது",
        "வயிற்றுக்கும் ஈயப் படும்."
      ],
      "manakkudavar": "செவிக்கு உணவாகிய கேள்வி யில்லாதபோது வயிற்றுக்கும் சிறிது உணவு கொடுக்கத் தகும். பெருக உண்ணின் கேள்வியை விரும்பாது காமநுகர்ச்சியை விரும்புமாதலான், சிறிது என்றார். இஃது எல்லாக்காலமும் கேட்க வேண்டு மென்றது.",
      "pope": "When 'tis no longer time the listening ear to feedWith trifling dole of food supply the body's need",
      "sourceFile": "0412.md",
      "sourceSha256": "32563dfed2570999d5f185bda86c2b0f8bba33e9b6f464f3d17f7cd4332e463c"
    },
    {
      "number": 413,
      "lines": [
        "செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்",
        "ஆன்றாரோ டொப்பர் நிலத்து."
      ],
      "manakkudavar": "செவிக்கு உணவு போன்ற கேள்வியை யுடையவர் நிலத்தின் கண்ணே யிருப்பினும் அவியை யுணவாக வுடைய தேவரோடு ஒப்பர்.",
      "pope": "Who feed their ear with learned teachings rare,Are like the happy gods oblations rich who share",
      "sourceFile": "0413.md",
      "sourceSha256": "8dc5d9ddbf6639c257f5243e08af254ba1c67b6a79f4a5f926b07df9d19f7698"
    },
    {
      "number": 414,
      "lines": [
        "கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு",
        "ஒற்கத்தின் ஊற்றாந் துணை."
      ],
      "manakkudavar": "கற்கமாட்டானாயினுங் கேட்க: அக்கேள்வி ஒருவன் தளர்ச்சிக்குத் தாங்கலாவதொரு துணையாம். இது கேள்வி வேண்டுமென்றது.",
      "pope": "Though learning none hath he, yet let him hear alway:In weakness this shall prove a staff and stay",
      "sourceFile": "0414.md",
      "sourceSha256": "0aabf7a48baaa30833bdb677c5e519293245fb74ef636d07805c8012bde03a32"
    },
    {
      "number": 415,
      "lines": [
        "இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே",
        "ஒழுக்க முடையார்வாய்ச் சொல்."
      ],
      "manakkudavar": "வழுக்குத லுண்டான விடத்து உதவும் ஊன்றுகோல் போலும்: ஒழுக்கமுடையார் கூறுஞ் சொற்கள். இது கேட்பது ஒழுக்கமுடையார்மாட்டென்பது கூறிற்று.",
      "pope": "Like staff in hand of him in slippery ground who straysAre words from mouth of those who walk in righteous ways",
      "sourceFile": "0415.md",
      "sourceSha256": "a7327be1cf61e1314a5a7c5ac4120677e7688757f5f0e8c30696ad7a7cb2172c"
    },
    {
      "number": 416,
      "lines": [
        "எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்",
        "ஆன்ற பெருமை தரும்."
      ],
      "manakkudavar": "எவ்வளவிற்றாயினும் நல்ல நூல்களைக் கேட்க; அக்கேள்வி அவ்வளவிற்றே யாயினும் நிரம்பின பெருமையைத் தரும். இஃது எல்லாக்காலமுங் கேட்டிலனாயினும், கேட்குங்கால் நல்ல கேட்க வேண்டுமென்றது.",
      "pope": "Let each man good things learn, for e'en as heShall learn, he gains increase of perfect dignity",
      "sourceFile": "0416.md",
      "sourceSha256": "eae7a921faf1a650d975d6d6b1adee738304b986f528c8ec8c2aa576314a6a8a"
    },
    {
      "number": 417,
      "lines": [
        "பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்",
        "தீண்டிய கேள்வி யவர்."
      ],
      "manakkudavar": "ஒரு பொருளைத் தப்ப உணர்ந்தாலும், அறிவின்மை யாயின சொல்லார், ஆராய்ந்துணர்ந்து நிரம்பிய கேள்வியை யுடையார். இது கேட்டறிந்தார் அறியாமை சொல்லா ரென்றது.",
      "pope": "Not e'en through inadvertence speak they foolish word,With clear discerning mind who've learning's ample lessons heard",
      "sourceFile": "0417.md",
      "sourceSha256": "ac5a8f09811966c21b05941ffe0eeb34ec1ca4e8566eebe18a790dccf171a985"
    },
    {
      "number": 418,
      "lines": [
        "கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்",
        "தோட்கப் படாத செவி."
      ],
      "manakkudavar": "ஓசை மாத்திரம் கேட்டனவாயினும் அதுவுங் கேளாத செவி போலும்; நல்லோர் கூறுஞ் சொற்களால் துளைக்கப்படாத செவி. இது கேள்வியில்லாதார் செவிட ரென்றது.",
      "pope": "Where teaching hath not oped the learner's ear,The man may listen, but he scarce can hear",
      "sourceFile": "0418.md",
      "sourceSha256": "7c15ef69a0eeb5506dc19cafb219d83baa063c9cfea00c0f486185d7f59fe0ef"
    },
    {
      "number": 419,
      "lines": [
        "நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய",
        "வாயின ராதல் அரிது."
      ],
      "manakkudavar": "நுண்ணியதாகிய கேள்வியை யுடையாரல்லாதார், தாழ்ந்த சொற்கூறும் நாவுடையாராதல் இல்லை. இது கேள்வியுடையார் தம்மை வியந்து சொல்லா ரென்றது.",
      "pope": "'Tis hard for mouth to utter gentle, modest word,When ears discourse of lore refined have never heard",
      "sourceFile": "0419.md",
      "sourceSha256": "40cc806bc55c88d015b3707f2acb502317a3ed5420b8fdce178e73a6c476b6d5"
    },
    {
      "number": 420,
      "lines": [
        "செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்",
        "அவியினும் வாழினும் என்?"
      ],
      "manakkudavar": "செவியால் நுகரும் இன்பத்தை யறியாத, வாயால் நுகரும் இன்பத்தையறியும் மாக்கள் செத்தால் வருந் தீமை யாது? வாழ்ந்தால் வரும் நன்மை யாது? உலகத்தார்க்கு. இது கேள்வியில்லாதார் பிறர்க்குப் பயன் படாரென்றது.",
      "pope": "His mouth can taste, but ear no taste of joy can give!What matter if he die, or prosperous live",
      "sourceFile": "0420.md",
      "sourceSha256": "5b4062229a8486d79980c3cf61f79f499f3885b05104383c00f00cb082caa8ee"
    },
    {
      "number": 421,
      "lines": [
        "அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்",
        "உள்ளழிக்க லாகா அரண்."
      ],
      "manakkudavar": "ஒருவனுக்குக் குற்றமறைக்குங் கருவியாவது அறிவு: பகைவராலும் உட்புகுந்து அழிக்கலாகா அரணும் அதுதானே. இது தனக்குள்ள குற்றத்தை மறைக்கு மென்றும் பிறரால் வருந்தீமையைக் காக்குமென்றும் அறிவினாலாம் பயன் கூறிற்று.",
      "pope": "True wisdom wards off woes, A circling fortress high;Its inner strength man's eager foes Unshaken will defy",
      "sourceFile": "0421.md",
      "sourceSha256": "a93f5da581d4d8178bb3605eca801505a481a0c6abd65cf5469aa320157c6215"
    },
    {
      "number": 422,
      "lines": [
        "சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ",
        "நன்றின்பால் உய்ப்ப தறிவு."
      ],
      "manakkudavar": "உள்ளஞ் சென்ற விடத்தே உடம்பையுஞ் செல்லவிடாது, தீமையை நீக்கி நன்மைப் பகுதியிலே செலுத்துவது அறிவாவது. இது காம நுகர்ச்சியின்கண் பழியும் பாவமும் பொருட்கேடும் வாராமற் செலுத்துவது அறிவென்றது.",
      "pope": "Wisdom restrains, nor suffers mind to wander where it would;From every evil calls it back, and guides in way of good",
      "sourceFile": "0422.md",
      "sourceSha256": "b463748dc6736ba80b229a6d6158fb26ef47d0a8df02437e795f66c86f3f4a51"
    },
    {
      "number": 423,
      "lines": [
        "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்",
        "மெய்ப்பொருள் காண்ப தறிவு."
      ],
      "manakkudavar": "யாதொரு பொருளை யாவர் சிலர் சொல்லக் கேட்பினும் அப்பொருளினது உண்மையை யாராய்வது அறிவாவது. இது யாவர் சிலர் நட்டோராயினும் பகைவராயினும் அவர் கூறக் கேட்டவற்றில் தெள்ளியராய் ஆராய்ந்து துணித லறிவென்றது.",
      "pope": "Though things diverse from divers sages' lips we learn,'Tis wisdom's part in each the true thing to discern",
      "sourceFile": "0423.md",
      "sourceSha256": "91db9c5ad1ca74007428c35101988982cd555066876d451dd77dcffccfd7373a"
    },
    {
      "number": 424,
      "lines": [
        "எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்",
        "நுண்பொருள் காண்ப தறிவு."
      ],
      "manakkudavar": "அறிதற்கரிய பொருளவாகிய சொற்களைத் தெளியப் பொருளாம்படி பிறரிசையச் சொல்லிப் பிறர் சொல்லுஞ் சொற்களின் நுண்ணியவாகிய பொருள்களை அவர் சொல்லாமல் தானே காண்பது அறிவாவது. இது சொற்பொருள் காண்ட லறிவென்றது.",
      "pope": "Wisdom hath use of lucid speech, words that acceptance win,And subtle sense of other men's discourse takes in",
      "sourceFile": "0424.md",
      "sourceSha256": "a5a49a663714254d9850676d09ec9dc749bfcdb657ce5ffb7070d696b07c174b"
    },
    {
      "number": 425,
      "lines": [
        "உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்",
        "கூம்பலும் இல்ல தறிவு."
      ],
      "manakkudavar": "ஒருவனுக்கு ஒள்ளிமையாவது உலகத்தோடு பொருந்தினது: அதனை நீர்ப்பூப்போல மலர்தலுங் குவிதலுமின்றி யொருதன்மையாகச் செலுத்துதல் அறிவு. இஃது உயர்ந்தாரோடு நட்புப் பண்ணுதலும் அறிவென்றது.",
      "pope": "Wisdom embraces frank the world, to no caprice exposed;Unlike the lotus flower, now opened wide, now petals strictly closed",
      "sourceFile": "0425.md",
      "sourceSha256": "b6fa786364e0e5ce901cd9531a8a66918688fa31ad6974554fd47bb92f34d4a3"
    },
    {
      "number": 426,
      "lines": [
        "எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு",
        "அவ்வ துறைவ தறிவு."
      ],
      "manakkudavar": "யாதொருவாற்றா லொழுகுவது உலகம். அதனோடு கூடத்தானும் அவ்வாற்றா னொழுகுதல் அறிவாவது. அறிவாவாது எத்தன்மைத்து என்றார்க்கு முற்பட உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதல் அறிவு என்றார்.",
      "pope": "As dwells the world, so with the world to dwellIn harmony- this is to wisely live and well",
      "sourceFile": "0426.md",
      "sourceSha256": "6da47f79b3919a598f31f66bc1efac7b4c7bc744a285ab74efd5f97595342c3b"
    },
    {
      "number": 427,
      "lines": [
        "அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்",
        "அஃதறி கல்லா தவர்."
      ],
      "manakkudavar": "பிற்பயக்குமது அறிவார் அறிவுடையாராவார், அதனை யறியாதவர் அறிவில்லாதவராவர். இது மேற் சொல்லுவன எல்லாம் தொகுத்துக் கூறிற்று.",
      "pope": "The wise discern, the foolish fail to see,And minds prepare for things about to be",
      "sourceFile": "0427.md",
      "sourceSha256": "4e88648a746cae36089f03d78e00f10aabcb0e6a75a2811f114033fa94960afa"
    },
    {
      "number": 428,
      "lines": [
        "அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது",
        "அஞ்சல் அறிவார் தொழில்."
      ],
      "manakkudavar": "அஞ்சத் தகுவதனை அஞ்சாதொழிதல் ஒருவர்க்கு அறிவின்மையாகும்; அஞ்சத்தகுவதனை அஞ்சுதல் அறிவுடையார் தொழில். மேல் அஞ்சாமை வேண்டு மென்றாராயினும் ஈண்டு அஞ்ச வேண்டுவனவற்றிற்கு அஞ்சுதல் அறிவென்றார்.",
      "pope": "Folly meets fearful ills with fearless heart;To fear where cause of fear exists is wisdom's part",
      "sourceFile": "0428.md",
      "sourceSha256": "2e38184848c3481686d887fbf561df4e7a47ac6c82d0f431de83ed58ebd79526"
    },
    {
      "number": 429,
      "lines": [
        "எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை",
        "அதிர வருவதோர் நோய்."
      ],
      "manakkudavar": "துன்பம் வருவதற்கு முன்பே வருமென்று நினைத்துக் காக்கும் அறிவையுடையார்க்கு நடுங்க வருவதொரு துன்பம் இல்லை. இது முன்னை வினையால் வருந் துன்பமும் முற்பட்டுக் காக்கின் கடிதாக வாராதென்றது.",
      "pope": "The wise with watchful soul who coming ills foresee;From coming evil's dreaded shock are free",
      "sourceFile": "0429.md",
      "sourceSha256": "ca8ebd8fe219805cbd0bcc1fe660b0785e89e00635e2b795693e5b26302ec648"
    },
    {
      "number": 430,
      "lines": [
        "அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்",
        "என்னுடைய ரேனும் இலர்."
      ],
      "manakkudavar": "அறிவினை யுடையார் யாதொன்றும் இல்லாராயினும் எல்லாமுடையர்: அறிவிலார் எல்லாப் பொருளும் உடையாராயினும் ஒரு பொருளும் இலர். இஃது அறிவுடைமை வேண்டுமென்றது.",
      "pope": "The wise is rich, with ev'ry blessing blest;The fool is poor, of everything possessed",
      "sourceFile": "0430.md",
      "sourceSha256": "326523512099b2ddb4747363f74118e3b303382d50228fe5d3bc3453b6c8b06b"
    },
    {
      "number": 431,
      "lines": [
        "செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்",
        "பெருக்கம் பெருமித நீர்த்து."
      ],
      "manakkudavar": "பிறர்மனை நயத்தலும், வெகுளியும், சிறியார் செய்வன செய்தொழுகுதலும் இல்லாதார்க்கு ஆக்கம் தலையெடுக்கும் நீர்மையுடைத்து என்றவாறு. பிறர்மனை விரும்புதல் செருக்கினால் வருதலின் செருக்கு என்றார்.",
      "pope": "Who arrogance, and wrath, and littleness of low desire restrain,To sure increase of lofty dignity attain",
      "sourceFile": "0431.md",
      "sourceSha256": "71dc5d436f473354948b91dfed86ccd18d7f3ddfd83fae10963dc37fb101a389"
    },
    {
      "number": 432,
      "lines": [
        "இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா",
        "உவகையும் ஏதம் இறைக்கு."
      ],
      "manakkudavar": "உலோபமும் நன்மையைக் கடந்த மானமும் நன்மையைத் தாரா மகிழ்ச்சியுமாகிய இம்மூன்றும் அரசர்க்குக் குற்றமாம். இது பொதுப்படக் கூறாது இறைக்கு என்றமையால் பெரும்பான்மையும் அரசர்க்கே வேண்டுமென்பது கூறிற்று.",
      "pope": "A niggard hand, o'erweening self-regard, and mirthUnseemly, bring disgrace to men of kingly brith",
      "sourceFile": "0432.md",
      "sourceSha256": "b89e6204a51052d64c698546911c232b44efdabb19bfbfe3725849d8330d0646"
    },
    {
      "number": 433,
      "lines": [
        "தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்",
        "கொள்வர் பழிநாணு வார்."
      ],
      "manakkudavar": "தினையளவு குற்றம் வந்ததாயினும் அதனை அவ்வளவிற்றென்று இகழாது பனையளவாகக் கொள்வர் பழிக்கு நாணுவார்.",
      "pope": "Though small as millet-seed the fault men deem;As palm tree vast to those who fear disgrace 'twill seem",
      "sourceFile": "0433.md",
      "sourceSha256": "05f977125e6d43d8321c70f7949baa71d28d405680ab865f4589b70258fa3d06"
    },
    {
      "number": 434,
      "lines": [
        "குற்றமே காக்க பொருளாகக் குற்றமே",
        "அற்றந் த்ரூஉம் பகை."
      ],
      "manakkudavar": "தமக்குப் பொருளாகக் குற்றம் வாராமற்காக்க: அக்குற்றந்தானே இறுதியைத் தரும் பகையும் ஆதலான். இது குற்றங் கடிய வேண்டு மென்றது.",
      "pope": "Freedom from faults is wealth; watch heedfully'Gainst these, for fault is fatal enmity",
      "sourceFile": "0434.md",
      "sourceSha256": "d58e659e1b5435aa2faab0f6f2d391617e2c9cf63d7f0027c3d6e22c7b49545c"
    },
    {
      "number": 435,
      "lines": [
        "வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்",
        "வைத்தூறு போலக் கெடும்."
      ],
      "manakkudavar": "துன்பம் வருவதன்முன், அதற்குத் தக்கது அறிந்து காவல் செய்யானது செல்வம் எரிமுன்னர்க்கிடந்த வைத்திரள் போலக் கெடும். இது முந்துற்றுக் காவல் செய்வன செய்யாமையும் குற்ற மென்றது.",
      "pope": "His joy who guards not 'gainst the coming evil day,Like straw before the fire shall swift consume away",
      "sourceFile": "0435.md",
      "sourceSha256": "d35c6232a7586640c3589e3af0b693528fc82d9c4eeed9fe68fc4c8b29cae05c"
    },
    {
      "number": 436,
      "lines": [
        "தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்",
        "என்குற்ற மாகும் இறைக்கு?"
      ],
      "manakkudavar": "தனக்குள்ள குற்றத்தை நீக்கிப் பிறர்மாட்டுள்ள குற்றத்தை ஆராயவல்லனாயின் அரசனுக்கு என்ன குற்ற முளதாம். இது தன்மாட்டுள்ள குற்றத்தை நீக்குதலே யன்றிப் பிறர் மாட்டுள்ள குற்றத்தையும் கடிய வேண்டுமென்றது.",
      "pope": "Faultless the king who first his own faults cures, and thenPermits himself to scan faults of other men",
      "sourceFile": "0436.md",
      "sourceSha256": "372a8886de6b0ecd272b6d40ea2aba33e09c230985f6cb471d3fc3ae7d18396a"
    },
    {
      "number": 437,
      "lines": [
        "செயற்பால செய்யா திவறியான் செல்வம்",
        "உயற்பால தன்றிக் கெடும்."
      ],
      "manakkudavar": "பொருளால் தனக்குச் செய்துகொள்ளப்படு மவற்றைச் செய்து கொள்ளாது. அதன்கண் பற்றுள்ளஞ் செய்தானது செல்வம் பின் உளதாம் பான்மைத்தன்றி வறிதே கெடும்.",
      "pope": "Who leaves undone what should be done, with niggard mind,His wealth shall perish, leaving not a wrack behind",
      "sourceFile": "0437.md",
      "sourceSha256": "6121a3eb93e7b5b4548ce40a90199618082b125632f762b92c6d07b570d77273"
    },
    {
      "number": 438,
      "lines": [
        "பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்",
        "எண்ணப் படுவதொன் றன்று."
      ],
      "manakkudavar": "கூடின பொருளை விடாமையாகிய உலோபம் யாதொன்றினுள்ளும் எண்ணப்படுவ தொன்றன்று. இஃது உலோபம் தனக்கும் பிறர்க்கும் பயன்படாமையால் ஒரு பொருளாக மதிக்கப்படா தென்றது.",
      "pope": "The greed of soul that avarice men call,When faults are summed, is worst of all",
      "sourceFile": "0438.md",
      "sourceSha256": "a93885d3d1f0b39d001d6ae864fae9a102da8324e5610109d0d53d24a21b3adc"
    },
    {
      "number": 439,
      "lines": [
        "வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க",
        "நன்றி பயவா வினை."
      ],
      "manakkudavar": "எல்லா நாளுந் தன்னைப் பெரியனாக நினைத்து வியவாதொழிக; வியந்தா னாயினும் அவ்வியப்பினானே நன்மை பயவாத வினையைச் செய்யாதொழிக. செய்யிற் கெடு மென்றவாறாயிற்று.",
      "pope": "Never indulge in self-complaisant mood,Nor deed desire that yields no gain of good",
      "sourceFile": "0439.md",
      "sourceSha256": "f2f8097c8a4668aa7bb12d1068be94ecb35ae98045d702dc9ab61fa938cd83c2"
    },
    {
      "number": 440,
      "lines": [
        "காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்",
        "ஏதில ஏதிலார் நூல்."
      ],
      "manakkudavar": "காதலிக்கப்பட்ட யாவற்றின்மேலுஞ் செல்லுங் காதலைப் பிறரறியாமற் செலுத்துவனாயின் பகைவர் இவனைக் கொல்லுமாறு சிந்திக்கும் சிந்தனை இவன் மாட்டுச் செல்லாது, அயலாம். நூலென்பது அவர்கற்ற கல்வி.",
      "pope": "If, to your foes unknown, you cherish what you love,Counsels of men who wish you harm will harmless prove",
      "sourceFile": "0440.md",
      "sourceSha256": "93a91fa3d86912df1b4d7ac9c1fc15402ce5f479d0d1aaea6497b5f021735d82"
    },
    {
      "number": 441,
      "lines": [
        "அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை",
        "திறனறிந்து தேர்ந்து கொளல்."
      ],
      "manakkudavar": "அறத்தின் பகுதியறிந்து முதிர்ந்த அறிவுடையாரது கேண்மையை அவரவர் செய்தியாகிய திறங்களை யறிந்து ஆராய்ந்து கொள்க. இது புரோகிதரைக் கூட்டுமாறு கூறிற்று.",
      "pope": "As friends the men who virtue know, and riper wisdom share,Their worth weighed well, the king should choose with care",
      "sourceFile": "0441.md",
      "sourceSha256": "dbc013166fa9b3432fd05a3e01a54fb6c9879cfd55b6c3378dfe7b884a6a2e69"
    },
    {
      "number": 442,
      "lines": [
        "உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்",
        "பெற்றியார்ப் பேணிக் கொளல்."
      ],
      "manakkudavar": "அரசர் தமக்குற்ற நோயை விடுவித்துப் பின்பு துன்பமுறாமல் முன்னே காக்கவல்ல தன்மையுடையாரை விரும்பிக் கொள்க. பெற்றியாரென்று பொதுப்படக்கூறினமையால், இது மந்திரிகளைக் கூட்டுமாறு கூறிற்று.",
      "pope": "Cherish the all-accomplished men as friends,Whose skill the present ill removes, from coming ill defends",
      "sourceFile": "0442.md",
      "sourceSha256": "50fb186a33ed5f0ee6d1cbf3695652ba69f5ed1a6f63bb4b944d8365831be6c7"
    },
    {
      "number": 443,
      "lines": [
        "அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்",
        "பேணித் தமராக் கொளல்."
      ],
      "manakkudavar": "செய்தற்கரியன வெல்லாவற்றினும் அரிதே; தம்மின் முதிர்ந்த அறிவுடையாரை விரும்பித் தமக்குச் சுற்றமாகக் கொள்ளுதல். பெரியாரைக் கொளலென்பது மந்திரி புரோகிதரைக் கூட்டிக் கொள்கை.",
      "pope": "To cherish men of mighty soul, and make them all their own,Of kingly treasures rare, as rarest gift is known",
      "sourceFile": "0443.md",
      "sourceSha256": "9198af4607f62cd9bf27bfd71af547f966698515148275f9da3064d7e34e1f3c"
    },
    {
      "number": 444,
      "lines": [
        "தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்",
        "வன்மையு ளெல்லாந் தலை."
      ],
      "manakkudavar": "தம்மின் மிக்க அறிவுடையார் தமக்குத் தமராக ஒழுகுதல், வலியானவை யெல்லாவற்றினும் தலையான வலி.",
      "pope": "To live with men of greatness that their own excels,As cherished friends, is greatest power that with a monarch dwells",
      "sourceFile": "0444.md",
      "sourceSha256": "f5121cc3435f9019b9e8f7832c250b9e90ccf6deb60ecd9fa67037232c153b14"
    },
    {
      "number": 445,
      "lines": [
        "சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்",
        "சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்."
      ],
      "manakkudavar": "அரசன் தன்னைச் சூழ்ச்சியாற் கொல்ல நினைப்பாரைத் தானுஞ் சூழ்ச்சியாற் கொல்லவல்லவனாதல் காரியமெண்ண வல்லார் தனக்குக் கண்ணாக வொழுகலான்.",
      "pope": "The king, since counsellors are monarch's eyes,Should counsellors select with counsel wise",
      "sourceFile": "0445.md",
      "sourceSha256": "015688af1afbb2b32a1ccad31344a91d9185a92499407757c403f561796b827d"
    },
    {
      "number": 446,
      "lines": [
        "தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்",
        "செற்றார் செயக்கிடந்த தில்."
      ],
      "manakkudavar": "தகுதியுடையா ரினத்தானாய்த் தானும் அவரோ டொக்க ஒழுகவல்லவனைப் பகைவர் செய்யக் கிடந்ததொருநெறி யில்லை. இஃது இவனைப் பகைவரால் வெல்ல லொண்ணா தென்றது.",
      "pope": "The king, who knows to live with worthy men allied,Has nought to fear from any foeman's pride",
      "sourceFile": "0446.md",
      "sourceSha256": "93047107e3ebe3ec116e0cb5a9176e7d728fa6e35758b4ac152324a3f693f0b3"
    },
    {
      "number": 447,
      "lines": [
        "இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே",
        "கெடுக்குந் தகைமை யவர்."
      ],
      "manakkudavar": "குற்றங் கண்டால் கழறுந் தன்மை யுடையாரைத் தமக்குத் தமராகக் கொள்ள வல்லாரைக் கெடுக்குந் தகைமையுடையார் உலகத்து யாவர். இது கேடில்லை யென்றது.",
      "pope": "What power can work his fall, who faithful ministersEmploys, that thunder out reproaches when he errs",
      "sourceFile": "0447.md",
      "sourceSha256": "74fc4dd066e44e3d0f4952e4dc2086933c1e3202ceae3e094ab197a9b01909c8"
    },
    {
      "number": 448,
      "lines": [
        "இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்",
        "கெடுப்பா ரிலானுங் கெடும்."
      ],
      "manakkudavar": "கழறுவாரை யில்லாத காவலில்லாத அரசன் தன்னைப் பகைவராய் வந்து கெடுப்பார் இல்லையாயினும் தான் வேண்டியவாறொழுகிக் கெடும். இஃது உயிர்க்குக் கேடு வருமென்றது.",
      "pope": "The king with none to censure him, bereft of safeguards all,Though none his ruin work, shall surely ruined fall",
      "sourceFile": "0448.md",
      "sourceSha256": "f0a5f795ed11cc9f01220a1b7b0244d1119687e4d84e57576731ce0935655ff5"
    },
    {
      "number": 449,
      "lines": [
        "முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்",
        "சார்பிலார்க் கில்லை நிலை."
      ],
      "manakkudavar": "முதலில்லாதார்க்கு இலாபமில்லையானாற் போலத் தாங்குதலாகிய சார்பு இல்லாதர்க்கு அரசு நிலைநிற்றல் இல்லை.",
      "pope": "Who owns no principal, can have no gain of usury;Who lacks support of friends, knows no stability",
      "sourceFile": "0449.md",
      "sourceSha256": "06844274df764c7e4cad32a2590ac083e36af89fa85aa86f22b40d41ce047a8b"
    },
    {
      "number": 450,
      "lines": [
        "பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே",
        "நல்லார் தொடர்கை விடல்."
      ],
      "manakkudavar": "பலரோடு பகைகொண்டால் எவ்வளவு துன்பமுறும்; அதனினும் பத்துமடங்கு துன்பமுறும்; பெரியாரைத் துணையாகக் கொள்ளாதொழியின்.",
      "pope": "Than hate of many foes incurred, works greater woeTen-fold, of worthy men the friendship to forego",
      "sourceFile": "0450.md",
      "sourceSha256": "517959ce17ec6fc2bc99c9c6c442fed9eb3b6a65a8623413538762bf0ee43ffe"
    },
    {
      "number": 451,
      "lines": [
        "சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்",
        "சுற்றமாச் சூழ்ந்து விடும்."
      ],
      "manakkudavar": "சிற்றினத்தை யஞ்சுவர் பெரியர்; சிறியவர் அதனைச் சுற்றமாகக் கொண்டு விடுவர். இது பெருமை வேண்டுவார் சிற்றினஞ் சேராரென்றது.",
      "pope": "The great of soul will mean association fear;The mean of soul regard mean men as kinsmen dear",
      "sourceFile": "0451.md",
      "sourceSha256": "0d4edf3160221d521858c030d5673bb4f6ee0fb2c80415493966b05b8890dd7b"
    },
    {
      "number": 452,
      "lines": [
        "நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு",
        "இனத்தியல்ப தாகும் அறிவு."
      ],
      "manakkudavar": "நிலத்தின் தன்மையால் நீர் தன் தன்மை வேறுபட்டு அந்நிலத்தின் தன்மைத்தாவது போல, மக்கட்கு அறிவு இனத்தின் தன்மையதாய் வேறுபடும்.",
      "pope": "The waters' virtues change with soil through which they flow;As man's companionship so will his wisdom show",
      "sourceFile": "0452.md",
      "sourceSha256": "6e3ab6fcd3dc8aa5252e9fdc41271d4564d87aea6635a08e637363c490b48b69"
    },
    {
      "number": 453,
      "lines": [
        "மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்",
        "இன்னான் எனப்படுஞ் சொல்."
      ],
      "manakkudavar": "மாந்தர்க்கு அறிவு மனத்தினானே யுண்டாம், ஆயினும் தான் சேர்ந்த இனத்தினால் இனியனல்லன் என்று பிறரால் பழிக்கப்படுஞ் சொல் உண்டாம். இது பிறரால் பழிக்கப்படுமென்றது.",
      "pope": "Perceptions manifold in men are of the mind alone;The value of the man by his companionship is known",
      "sourceFile": "0453.md",
      "sourceSha256": "1a406c607318adbd56f96ed9fa92e70170d80ed4100c74d710d1c7f207ed8fb5"
    },
    {
      "number": 454,
      "lines": [
        "மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு",
        "இனத்துள தாகும் அறிவு."
      ],
      "manakkudavar": "ஒருவனுக்கு உண்டாகும் அறிவு முற்பட மனத்துள்ளது போலத் தோற்றிப் பின் தான் சேர்ந்த இனத்தினுண்டான அறிவாகும்.",
      "pope": "Man's wisdom seems the offspring of his mind;'Tis outcome of companionship we find",
      "sourceFile": "0454.md",
      "sourceSha256": "0f47e11c99cbe04ba8c8ee31ca3760af633859b6fba98130f25b5e1c8ff0a93f"
    },
    {
      "number": 455,
      "lines": [
        "மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்",
        "இனந்தூய்மை தூவா வரும்."
      ],
      "manakkudavar": "மனம் நன்றாதலும் செய்வினை நன்றாதலுமாகிய இரண்டும். இனம் நன்றாதலைப் பற்றி வரும். இனிச் சேராமையான் வரும் நன்மை கூறுவார் இவையிரண்டும் நன்றாம் என்று கூறினார்.",
      "pope": "Both purity of mind, and purity of action clear,Leaning no staff of pure companionship, to man draw near",
      "sourceFile": "0455.md",
      "sourceSha256": "2fb6e33847a25f69a831b82628e25054fb11c82073bb98044b4106ff4856fe73"
    },
    {
      "number": 456,
      "lines": [
        "மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு",
        "இல்லைநன் றாகா வினை."
      ],
      "manakkudavar": "மனநல்லார்க்குப் பின்பு நிற்கும் காணம் முதலான பொருள்கள் நல்லவாம்: இன நல்லார்க்கு நன்றாகாத தொரு வினையும் இல்லை. இது மேலதற்குப் பயன் கூறிற்று.",
      "pope": "From true pure-minded men a virtuous race proceeds;To men of pure companionship belong no evil deeds",
      "sourceFile": "0456.md",
      "sourceSha256": "b56fef19d58584bc0608d28296a0d8aa14f2ae7218b78f434236a9eebde52d29"
    },
    {
      "number": 457,
      "lines": [
        "மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்",
        "எல்லாப் புகழும் தரும்."
      ],
      "manakkudavar": "மனநன்மை நிலைபெற்ற உயிர்க்கு ஆக்கமாவதுபோல, இன நன்மை எல்லாவற்றானும் வரும் புகழினைத் தரும். இஃது எல்லாப் புகழுந் தருமென்றது.",
      "pope": "Goodness of mind to lives of men increaseth gain;And good companionship doth all of praise obtain",
      "sourceFile": "0457.md",
      "sourceSha256": "824a61fdca61e4847fdcad9ca9b244cf93f32238dbc3b16a47f49076784e3acc"
    },
    {
      "number": 458,
      "lines": [
        "மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு",
        "இனநலம் ஏமாப் புடைத்து."
      ],
      "manakkudavar": "மன நன்மை மிக வுடையராயினும் இன நன்மை யுடைமை சான்றோர்க்குக் காவலாதலையுடைத்து. இஃது இனநலம் அல்லாராயின் பிறரா லிகழப்படுவராதலான் இனநலம் இகழ்ச்சி வாராமற் காக்குமென்றது.",
      "pope": "To perfect men, though minds right good belong,Yet good companionship is confirmation strong",
      "sourceFile": "0458.md",
      "sourceSha256": "dc42b159d1a3805f0d1ebacdb47118a15d50818b8ca3c5ec57622225def0205d"
    },
    {
      "number": 459,
      "lines": [
        "மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்",
        "இனநலத்தின் ஏமாப் புடைத்து."
      ],
      "manakkudavar": "மன நலத்தினாலே மறுமைப் பயன் நன்றாகும். அம்மனத்தின் நன்மையும் இனநன்மையாலே தீத்தொழிலிற் செல்லாமற் காவலாதலையுடைத்து. இது மறுமைக்குத் துணையாமென்றது.",
      "pope": "Although to mental goodness joys of other life belong,Yet good companionship is confirmation strong",
      "sourceFile": "0459.md",
      "sourceSha256": "f3758512be9fccb20182cba5503f81a98b005b3598fc46f88efdbcd249e13dac"
    },
    {
      "number": 460,
      "lines": [
        "நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்",
        "அல்லற் படுப்பதூஉம் இல்."
      ],
      "manakkudavar": "நல்லினத்தின் மிக்க துணையாயிருப்பதூஉம் இல்லை, தீயினத்தின் மிக்க அல்லற்படுப்பதூஉம் இல்லை. இது சேராமைக்குக் காரணங் கூறிற்று.",
      "pope": "Than good companionship no surer help we know;Than bad companionship nought causes direr woe",
      "sourceFile": "0460.md",
      "sourceSha256": "feac7fb1621a0a3c75ecdbf4bd5421a654dec7450a7d38b0d6605c12743b810c"
    },
    {
      "number": 461,
      "lines": [
        "அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்",
        "ஊதியமும் சூழ்ந்து செயல்."
      ],
      "manakkudavar": "வினை செய்து முடித்தற்கு அழியும் பொருளும் அது செய்து முடித்தாலுளதாகும் பொருளுமாய்நின்று அப்பொருளினாற் பின்புண்டாய் வரும் பயனும் எண்ணிப் பின்பு வினைசெய்ய வேண்டும்.",
      "pope": "Expenditure, return, and profit of the deedIn time to come; weigh these- than to the act proceed",
      "sourceFile": "0461.md",
      "sourceSha256": "df33ef74e4dc86618f429a88a9873dd7f7a00d4875aeaf0b7f77554ee7501ed0"
    },
    {
      "number": 462,
      "lines": [
        "தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு",
        "அரும்பொருள் யாதொன்றும் இல்"
      ],
      "manakkudavar": "அமாத்தியர் பலருள் ஆராய்ந்து கூட்டிக்கொள்ளப்பட்ட மந்திரிகளாகிய இனத்தோடே கூடச் செய்யும் வினையை ஆராய்ந்து அதனைச் செய்யுமாறு எண்ணிச் செய்யவல்ல அரசர்க்குப் பெறுதற்கு அரிதா யிருப்பதொரு பொருள் யாதொன்று மில்லை.",
      "pope": "With chosen friends deliberate; next use the private thought;Then act By those who thus proceed all works with ease are wrought",
      "sourceFile": "0462.md",
      "sourceSha256": "b945cf062b5a4d3e4ad0dd5fbd2381f1ee1ca81a8bf0654660842121b717f4a6"
    },
    {
      "number": 463,
      "lines": [
        "ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை",
        "ஊக்கார் அறிவுடை யார்."
      ],
      "manakkudavar": "தமக்கு ஆக்கம் உண்டாகவேண்டி முன்புண்டான முதலும் இழக்க வரும் வினையைச் செய்ய நினையார் அறிவுடையார். இது பிற்பயவாத வினை செய்யலாகாதென்றது.",
      "pope": "To risk one's all and lose, aiming at added gain,Is rash affair, from which the wise abstain",
      "sourceFile": "0463.md",
      "sourceSha256": "a152d5ea6268e3ef8dc66123c0a4890010e74eca142a15e05c36c59889f9aa3b"
    },
    {
      "number": 464,
      "lines": [
        "தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்",
        "ஏதப்பாடு அஞ்சு பவர்."
      ],
      "manakkudavar": "ஆராய்ந்தறிதலில்லாத வினையைச் செய்யத் தொடங்கார், இகழ்ச்சியாகிய குற்றப்பாட்டிற்கு அஞ்சுபவர்.",
      "pope": "A work of which the issue is not clear,Begin not they reproachful scorn who fear",
      "sourceFile": "0464.md",
      "sourceSha256": "743999396f911b4c8eab12c8555bbd4f33f67d90b53eaec18b32da6838dd3936"
    },
    {
      "number": 465,
      "lines": [
        "வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்",
        "பாத்திப் படுப்பதோ ராறு."
      ],
      "manakkudavar": "மேற்சொன்னவகைகளில் போக்கறச் சூழாதே போர்கருதி யெழுதல் பகைஞராகிய விதையை நிலத்தின்கண்ணே இடுவதொரு நெறி. இது பகைவர்க்கு ஆக்க முண்டாமென்றது.",
      "pope": "With plans not well matured to rise against your foe,Is way to plant him out where he is sure to grow",
      "sourceFile": "0465.md",
      "sourceSha256": "3a8074a6bda76613dfb4e5a237ac779cee6c27a621ab99c5fe630528c52d0d3a"
    },
    {
      "number": 466,
      "lines": [
        "செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க",
        "செய்யாமை யானுங் கெடும்."
      ],
      "manakkudavar": "செய்யத்தகாதனவற்றைச் செய்தலாலும் கெடும்; செய்யத் தகுவனவற்றைச் செய்யாமையாலும் கெடும். இது மேற்கூறாதனவெல்லாம் தொகுத்துக் கூறிற்று.",
      "pope": "'Tis ruin if man do an unbefitting thing;Fit things to leave undone will equal ruin bring",
      "sourceFile": "0466.md",
      "sourceSha256": "cf4951f9e6fcf3b5b5cb143f30da9b29d2268b430b31e689b770f1417543b351"
    },
    {
      "number": 467,
      "lines": [
        "எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்",
        "எண்ணுவம் என்பது இழுக்கு."
      ],
      "manakkudavar": "ஒருவினை செய்யத் துணிவதன் முன்னே அதனால் வரும் பயனை எண்ணிப் பின்பு செய்யத் துணிக: துணிந்தபின் எண்ணுவோமென்றல் தப்பாமாதலான்.",
      "pope": "Think, and then dare the deed! Who cry,'Deed dared, we'll think,' disgraced shall be",
      "sourceFile": "0467.md",
      "sourceSha256": "2c1eadb1e70b95b13f5307db49eb4312039b644b71c50e99710612ad37ce3c72"
    },
    {
      "number": 468,
      "lines": [
        "ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று",
        "போற்றினும் பொத்துப் படும்."
      ],
      "manakkudavar": "மேற்கூறிய நெறியினாலே முயலாத பொருள், பலர் நின்று காப்பினும் புரைபடும். இஃது எண்ணிச் செய்யாதது தப்பு மென்றது.",
      "pope": "On no right system if man toil and strive,Though many men assist, no work can thrive",
      "sourceFile": "0468.md",
      "sourceSha256": "aa5267898b486a7ca0da901e71840164e6082b0d8b856f0d33504d3ecbdb06d5"
    },
    {
      "number": 469,
      "lines": [
        "நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்",
        "பண்பறிந் தாற்றாக் கடை."
      ],
      "manakkudavar": "நன்மையைச் செய்யுமிடத்தினும் குற்றமுண்டாம்; அவரவர் குணமறிந்து செய்யாத விடத்து. இதுவுமோரெண்ணம்.",
      "pope": "Though well the work be done, yet one mistake is made,To habitudes of various men when no regard is paid",
      "sourceFile": "0469.md",
      "sourceSha256": "d25483be6409c68b9085e7d9a4a713912cf4f38571e9fa6804251cdc23f2bb57"
    },
    {
      "number": 470,
      "lines": [
        "எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு",
        "கொள்ளாத கொள்ளாது உலகு."
      ],
      "manakkudavar": "முடியுமாயினும் பிறராலிகழப்படாதவற்றை எண்ணிச் செய்தல் வேண்டும்; தமக்குத் தகாத செய்தியை யுலகத்தார் கொள்ளாராதலான். இது பிறராலிகழப்படாதன செய்யவேண்டு மென்றது.",
      "pope": "Plan and perform no work that others may despise;What misbeseems a king the world will not approve as wise",
      "sourceFile": "0470.md",
      "sourceSha256": "7d34fe7c311acfa3d3f2e59c20470314c844524e5c9487bb1d0449d4dc58a7d6"
    },
    {
      "number": 471,
      "lines": [
        "வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்",
        "துணைவலியும் தூக்கிச் செயல்."
      ],
      "manakkudavar": "செய்யும் வினையினது வலியும் தனக்கு உண்டான வலியும் பகைவனது வலியும் தனக்கும் பகைவர்க்கும் துணையாயினார் வலியும் எண்ணிப் பின்பு வினைசெய்க. இது வலியறியும் இடம் கூறிற்று.",
      "pope": "The force the strife demands, the force he owns, the force of foes,The force of friends; these should he weigh ere to the war he goes",
      "sourceFile": "0471.md",
      "sourceSha256": "e384284d12e14149b7c834b902b2d6e9c4786908318cc4e91c1291953d2d7d9a"
    },
    {
      "number": 472,
      "lines": [
        "ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்",
        "செல்வார்க்குச் செல்லாதது இல்."
      ],
      "manakkudavar": "தமக்கியலும் வினைக்கு அறிய வேண்டுவதாய திறம் இதுவென அறிந்து அதன் பின்பு அவ்வளவிலே நின்று ஒழுகுவராயின் அவர்க்கு இயலாதது இல்லை. இது வலியறிந்தாலும் அமைந்தொழுக வேண்டுமென்றது.",
      "pope": "Who know what can be wrought, with knowledge of the means, on this,Their mind firm set, go forth, nought goes with them amiss",
      "sourceFile": "0472.md",
      "sourceSha256": "bb8de3e92898e66829093f166c43bb247b2a13e8d69f2853ad6c9a54c8a2dc7d"
    },
    {
      "number": 473,
      "lines": [
        "உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி",
        "இடைக்கண் முரிந்தார் பலர்."
      ],
      "manakkudavar": "தம்முடைய வலியறியாது மனமிகுதியாலே வினை செய்யத் தொடங்கி அது முடிவதன்முன்னே கெட்டார் பலர். இது வலியறியாதார் கெடுவரென்றது.",
      "pope": "Ill-deeming of their proper powers, have many monarchs striven,And midmost of unequal conflict fallen asunder riven",
      "sourceFile": "0473.md",
      "sourceSha256": "156dcda4575bf5eaf69e3be610c6e774e82ff62ab8d3f8f9dc349eab7bd529d2"
    },
    {
      "number": 474,
      "lines": [
        "அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை",
        "வியந்தான் விரைந்து கெடும்."
      ],
      "manakkudavar": "அமைவுடையனாயொழுகுதலும் இன்றித் தன்வலி யளவும் அறியாதே தன்னை மதித்தவன் விரைந்து கெடுவன். இது மேற்கூறியவாறு செய்தார் கெடுவரென்றது.",
      "pope": "Who not agrees with those around, no moderation knows,In self-applause indulging, swift to ruin goes",
      "sourceFile": "0474.md",
      "sourceSha256": "27cc097650f2019fdfe8df30b06a2f20490b53ec2059403d18bae426471240de"
    },
    {
      "number": 475,
      "lines": [
        "பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்",
        "சால மிகுத்துப் பெயின்."
      ],
      "manakkudavar": "பீலி யேற்றிய சகடமும் அச்சுமுறியும்; அப்பீலியை மிகவும் அளவின்றியேற்றின். இஃது அரண் மிகுதல் நன்றென்றிருப்பார்க்குப் பகைமிகின் அரண் நில்லாதென்று கூறிற்று.",
      "pope": "With peacock feathers light, you load the wain;Yet, heaped too high, the axle snaps in twain",
      "sourceFile": "0475.md",
      "sourceSha256": "2ceb2dd712758ec08575d12328bf0b7d55157c62a3ccc8c0dedfb3abaef4ad78"
    },
    {
      "number": 476,
      "lines": [
        "நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்",
        "உயிர்க்கிறுதி ஆகி விடும்."
      ],
      "manakkudavar": "ஒரு மரத்தின் நுனிக்கொம்பேறினவர் தம்மள வறிந்து வைத்துப் பின்னும் மேலேறுவாராயின் அஃது அவர்தம்முயிர்க்கு இறுதியாகிவிடும். இஃது அரசன் தன்னாற் செல்லலாமெல்லையளவும் சென்றால் பின்பு மீள வேண்டுமென்றது. இதுவும் ஒரு வலியறிதல்.",
      "pope": "Who daring climbs, and would himself upraiseBeyond the branch's tip, with life the forfeit pays",
      "sourceFile": "0476.md",
      "sourceSha256": "7a70ba3cf8affb09e543b384626573ae00659123171ded81f1039b8292dec8c6"
    },
    {
      "number": 477,
      "lines": [
        "ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்",
        "போற்றி வழங்கு நெறி."
      ],
      "manakkudavar": "பொருளை அளவறிந்து கொடுக்கும் வழியாலே கொடுக்க; பொருளையுண்டாக்கி வழங்கும் நெறி அதுவாதலால். இது பொருளினது வலியறிந்து அதற்குத்தக்க செலவுசெய்ய வேண்டுமென்று கூறிற்று.",
      "pope": "With knowledge of the measure due, as virtue bids you give!That is the way to guard your wealth, and seemly live",
      "sourceFile": "0477.md",
      "sourceSha256": "11d2bfbe382ec82c988981c639beb0ff447f419bfaff5bc7bff300922f5e6e80"
    },
    {
      "number": 478,
      "lines": [
        "ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை",
        "போகாறு அகலாக் கடை."
      ],
      "manakkudavar": "பொருள் வரும்வழியளவு சிறிதாயினும் கேடில்லையாம்; அது போம்வழி போகாதாயின். இது முதலுக்குத் தக்க செலவு செய்ய வேண்டுமென்றது.",
      "pope": "Incomings may be scant; but yet, no failure there,If in expenditure you rightly learn to spare",
      "sourceFile": "0478.md",
      "sourceSha256": "0eb69968bde3da63624add1873f539c0f824e6e487cfa4484f4319890f0a4e7e"
    },
    {
      "number": 479,
      "lines": [
        "அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல",
        "இல்லாகித் தோன்றாக் கெடும்."
      ],
      "manakkudavar": "தன்வருவாய் அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோலத் தோன்றி அதன்பின் இல்லையாகித் தோன்றாது கெடும். பின்பு ஆக்கம் தோன்றாதென்றவாறு. இது மேற்கூறியவாறு செய்யாதார் கெடுவரென்றது.",
      "pope": "Who prosperous lives and of enjoyment knows no bound,His seeming wealth, departing, nowhere shall be found",
      "sourceFile": "0479.md",
      "sourceSha256": "9afcb218f65955a0c69ffbc6fe5fb20e8464f27373533c984647123c599687b8"
    },
    {
      "number": 480,
      "lines": [
        "உளவரை தூக்காத ஒப்புர வாண்மை",
        "வளவரை வல்லைக் கெடும்."
      ],
      "manakkudavar": "தனக்கு உள்ளவளவை நினையாதே ஒப்புரவு செய்வானது செல்வத்தினளவு விரைவிற் கெடும். மேல் முதலுக்குச் செலவு குறைய வேண்டுமென்றார். அவ்வாறு செய்யின் ஒப்புரவு செய்யுமாறு என்னை யென்றார்க்கு இது கூறினார்.",
      "pope": "Beneficence that measures not its bound of means,Will swiftly bring to nought the wealth on which it leans",
      "sourceFile": "0480.md",
      "sourceSha256": "a50cb7159390a12391e70c7f00944e029c821138d4730349ea9ed5d33f8a3232"
    },
    {
      "number": 481,
      "lines": [
        "பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்",
        "வேந்தர்க்கு வேண்டும் பொழுது."
      ],
      "manakkudavar": "இராப்பொழுது வெல்லுங் கூகையைக் காக்கை பகற்பொழுது வெல்லும். ஆதலான் மாறுபாட்டை வெல்லும் அரசர்க்குக் காலம் வேண்டும் இது காலமறிதல் வேண்டும் என்றது.",
      "pope": "A crow will conquer owl in broad daylight;The king that foes would crush, needs fitting time to fight",
      "sourceFile": "0481.md",
      "sourceSha256": "6b52c36c27f9b388ccc3370b7a22360874089e268b72bcd95fdb63c528b4d84e"
    },
    {
      "number": 482,
      "lines": [
        "பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்",
        "தீராமை ஆர்க்குங் கயிறு."
      ],
      "manakkudavar": "காலத்தோடு பொருந்த ஒழுகுதல் செல்வத்தை நீங்காமல் கட்டுவதொரு கயிறாம். இனிக் காலமறிந்ததனால் வரும் பயன் கூறுவார் முற்படச் செல்வம் கெடாதென்றார்.",
      "pope": "The bond binds fortune fast is ordered effort made,Strictly observant still of favouring season's aid",
      "sourceFile": "0482.md",
      "sourceSha256": "ff09a3b1a9e09401f2c2ca683be018a38de516abf06c99e10b698e3b1c5a405b"
    },
    {
      "number": 483,
      "lines": [
        "அருவினை யென்ப உளவோ கருவியான்",
        "காலம் அற஧ந்து செயின்."
      ],
      "manakkudavar": "அரிய வினையென்று சொல்லப்படுவன உளவோ? முடிக்கலாங் கருவியோடே கூடக் காலத்தை யறிந்து செய்ய வல்லாராயின்.",
      "pope": "Can any work be hard in very fact,If men use fitting means in timely act",
      "sourceFile": "0483.md",
      "sourceSha256": "32c270a0863e58c3e697315e3196568c6d7c45bb6f3d175bf250a86ae8a9a620"
    },
    {
      "number": 484,
      "lines": [
        "ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்",
        "கருதி இடத்தாற் செயின்."
      ],
      "manakkudavar": "உலகமெல்லாம் பெறுதற்கு நினைத்தானாயினும் பெறலாம்: காலத்தைக் குறித்து இடனறிந்து செய்வனாயின். இஃது எல்லாப் பொருளையு மெய்துமென்றது.",
      "pope": "The pendant world's dominion may be won,In fitting time and place by action done",
      "sourceFile": "0484.md",
      "sourceSha256": "f4a5bfd2b743d5596d5627e8c8bc2b663340a48f4dd71c9909c2eb90d42f8e89"
    },
    {
      "number": 485,
      "lines": [
        "காலம் கருதி இருப்பர் கலங்காது",
        "ஞாலம் கருது பவர்."
      ],
      "manakkudavar": "செய்யுங்காலம் வருமளவு நினைத்து அசைவின்றி யிருப்பார்: ஞாலத்தைக் கொள்ளக் கருதுபவர்.",
      "pope": "Who think the pendant world itself to subjugate,With mind unruffled for the fitting time must wait",
      "sourceFile": "0485.md",
      "sourceSha256": "973660fc2ec5d2400f5b42b8bf49037b42704a5ab19350ed299e349651e186d6"
    },
    {
      "number": 486,
      "lines": [
        "ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்",
        "தாக்கற்குப் பேருந் தகைத்து."
      ],
      "manakkudavar": "மன மிகுதி யுடையவன் காலவரவு பார்த்து ஒடுங்குதல், போரைக் கருதின தகர் வலிபெறத் தாக்குதற் பொருட்டுப் பெயர்ந்தாற் போலும். இது காலம் வருமளவுங் குறைத்தால் வலி மிகுமென்றது.",
      "pope": "The men of mighty power their hidden energies repress,As fighting ram recoils to rush on foe with heavier stress",
      "sourceFile": "0486.md",
      "sourceSha256": "0532b266a282d28ea38bce8c84a546df911974bd260845f567fa975a487aaf3c"
    },
    {
      "number": 487,
      "lines": [
        "பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து",
        "உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்."
      ],
      "manakkudavar": "கதுமென அவ்விடத்தே யுடம்பு வேரார்: தமக்குச் செய்யலாங் காலம் பார்த்து மனம் வேர்ப்பர் ஒள்ளியர். வேர்ப்பு பொறாமையால் வருவதொன்று. இது பகைவர் பொறாதவற்றைச் செய்தாலும் காலம் பார்க்கவேண்டுமென்றது.",
      "pope": "The glorious once of wrath enkindled make no outward show,At once; they bide their time, while hidden fires within them glow",
      "sourceFile": "0487.md",
      "sourceSha256": "15a8f0691d9d457db5898c3894bf337c13b29616a956c15e9bcfbd67419f74ba"
    },
    {
      "number": 488,
      "lines": [
        "செறுநரைக் காணின் சுமக்க இறுவரை",
        "காணின் கிழக்காம் தலை."
      ],
      "manakkudavar": "பகைவரைக் கண்டானாயின் தலையினாற் சுமக்க; இறுமளவாகின் தலை கீழாய் விடலாம்.",
      "pope": "If foes' detested form they see, with patience let them bear;When fateful hour at last they spy,- the head lies there",
      "sourceFile": "0488.md",
      "sourceSha256": "5d51b9a2d60bd886982cd172b8e99d145284d272beef6a7051038ca90b646f89"
    },
    {
      "number": 489,
      "lines": [
        "எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே",
        "செய்தற் கரிய செயல்."
      ],
      "manakkudavar": "பெறுதற்கு அரிய காலம் வந்தால் அப்பொழுதே தன்னாற் செய்தற்கு அரியவாகிய வினைகளைச் செய்து முடிக்க. இது காலம் வந்தால் அரிதென்று காணாமற் செய்யவேண்டு மென்றது.",
      "pope": "When hardest gain of opportunity at last is won,With promptitude let hardest deed be done",
      "sourceFile": "0489.md",
      "sourceSha256": "0a3ebdf54f6d580c1fb0d1bfb22f14f159282aa7d4c180b13bc5aff4811f7c58"
    },
    {
      "number": 490,
      "lines": [
        "கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்",
        "குத்தொக்க சீர்த்த இடத்து."
      ],
      "manakkudavar": "காலம் பார்த்திருக்குமிடத்துக் கொக்குப் போல ஒடுங்கி இகழ்வின்றி யிருக்க, வினை செய்தற்கு வாய்த்த காலம் வந்தவிடத்து அக்கொக்குக் குத்துமாறுபோலத் தப்பாமல் விரைந்து செய்க. இது காலம் வருமளவும் இகழ்ச்சியின்றிக் கொக்குப் போல இருத்தல் வேண்டுமென்பதூஉம் காலம் வந்தால் தப்பாமை விரைந்து செய்ய வேண்டுமென்பதூஉம் கூறிற்று.",
      "pope": "As heron stands with folded wing, so wait in waiting hour;As heron snaps its prey, when fortune smiles, put forth your power",
      "sourceFile": "0490.md",
      "sourceSha256": "5e677cedaafec5d701c57e829aa1c6029ae2ddd8ed30886a7c9fdc3b8753193e"
    },
    {
      "number": 491,
      "lines": [
        "தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்",
        "இடங்கண்ட பின்அல் லது."
      ],
      "manakkudavar": "முடியுமிடங் கண்டாலல்லது யாதொரு வினையுந் தொடங்கா தொழிக; எளிதென்றிகழாதொழிக. இஃது இடமறிதல் வேண்டுமென்பது கூறிற்று.",
      "pope": "Begin no work of war, depise no foe,Till place where you can wholly circumvent you know",
      "sourceFile": "0491.md",
      "sourceSha256": "b1fbff18d794d1a809839c6327b5e32a74d8cc506aad317eded25e09db87d793"
    },
    {
      "number": 492,
      "lines": [
        "முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்",
        "ஆக்கம் பலவுந் தரும்."
      ],
      "manakkudavar": "பகை கொள்ளும் வலியுடையவர்க்கும் அரணைச் சேர்ந்தாகின்ற ஆக்கம் பலபயனையுந் தரும். இது பகைவரிடம் அறிதலே யன்றித் தமக்கு அமைந்த இடமும் அறிய வேண்டுமென்றது.",
      "pope": "Though skill in war combine with courage tried on battle-field,The added gain of fort doth great advantage yield",
      "sourceFile": "0492.md",
      "sourceSha256": "2e04cf879ec2cd4339be146e1ee439ee2ba69ab981c6f5098c3713b338e9e54e"
    },
    {
      "number": 493,
      "lines": [
        "ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து",
        "போற்றார்கண் போற்றிச் செயின்."
      ],
      "manakkudavar": "வலியில்லாதாரும் வலியுடையராய் வெல்வர்: பகைவர்மாட்டு வினைசெய்யும் இடமறிந்து தம்மைக் காத்து வினை செய்வாராயின்.",
      "pope": "E'en weak ones mightily prevail, if place of strong defence,They find, protect themselves, and work their foes offence",
      "sourceFile": "0493.md",
      "sourceSha256": "b144aa19f7fa4de6c86365d704404c72d7b231e5ea0b3e9b3a512cc0f9c3625a"
    },
    {
      "number": 494,
      "lines": [
        "எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து",
        "துன்னியார் துன்னிச் செயின்."
      ],
      "manakkudavar": "தம்மைக் கெடுத்தற் கெண்ணினவர் தங்களெண்ணம் இழப்பர்; வினைசெய்யும் இடமறிந்து நட்டோரானவர் மனம் பொருந்திச் செய்வாராயின். இஃது இடமறிந்து செய்வோர் அமைதியும் வேண்டுமென்றது.",
      "pope": "The foes who thought to triumph, find their thoughts were vain,If hosts advance, seize vantage ground, and thence the fight maintain",
      "sourceFile": "0494.md",
      "sourceSha256": "ac690349918750f311d983834accf06d4fd73cf5f48ac7c4f8f492e2a4dfa22b"
    },
    {
      "number": 495,
      "lines": [
        "நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்",
        "நீங்கின் அதனைப் பிற."
      ],
      "manakkudavar": "நெடிய நீரின்கண் பலவற்றையும் முதலை வெல்லும்; அஃது அந்நீரினின்று நீங்குமாயின் அதனைப் பிறவெல்லாம் வெல்லும். இது மேலதற்குக் காரணங் கூறிற்று. இவை யைந்தும் இடமறியவேண்டு மென்பது கூறின.",
      "pope": "The crocodile prevails in its own flow of water wide,If this it leaves, 'tis slain by anything beside",
      "sourceFile": "0495.md",
      "sourceSha256": "85becf5d10c5b40385f05aad35cc2ec4b7c3045a220ce881c8679a2e565876bf"
    },
    {
      "number": 496,
      "lines": [
        "கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்",
        "நாவாயும் ஓடா நிலத்து."
      ],
      "manakkudavar": "கால் வலிய நெடுந்தேர் கடலின்கண் ஓடாது: கடலின் கண் ஓடும் நாவாயும் நிலத்தின்கண் ஓடாது. இஃது இடத்திற்காங் கருவி பண்ணவேண்டுமென்றது.",
      "pope": "The lofty car, with mighty wheel, sails not o'er watery main,The boat that skims the sea, runs not on earth's hard plain",
      "sourceFile": "0496.md",
      "sourceSha256": "2b06266b9c563d66173c7b2c8a61980d0f7251109120bcad1244e2e9a449defb"
    },
    {
      "number": 497,
      "lines": [
        "அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை",
        "எண்ணி இடத்தால் செயின்."
      ],
      "manakkudavar": "தப்பாமலெண்ணி இடத்தோடு பொருந்த வினை செய்ய வல்லவராயின், அஞ்சாமையே வேண்டுவ தல்லாமல் வேறு துணையாவாரைத் தேட வேண்டுவதில்லை. இஃது இடனறிந்தால் துணையின்றியும் வெல்வரென்றது.",
      "pope": "Save their own fearless might they need no other aid,If in right place they fight, all due provision made",
      "sourceFile": "0497.md",
      "sourceSha256": "70ae238bd74d6cef5b4de0bfa7309154cfd512aca179d1614642aff9f2ca9408"
    },
    {
      "number": 498,
      "lines": [
        "சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்",
        "ஊக்கம் அழிந்து விடும்."
      ],
      "manakkudavar": "சிறுபடையை யுடையவனுக்கு இயலுமிடத்தே பெரும்படையை யுடையவன் பொருந்துவனாயின் மன மிகுதி கெடும். இஃது இகழ்ந்து செல்லின், வெற்றியில்லையாமென்றது.",
      "pope": "If lord of army vast the safe retreat assailOf him whose host is small, his mightiest efforts fail",
      "sourceFile": "0498.md",
      "sourceSha256": "e0ee8fefffd6e86d809b5d922803273e16f82dfdfbf07e593cd83df10e0524d2"
    },
    {
      "number": 499,
      "lines": [
        "சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்",
        "உறைநிலத்தோடு ஒட்டல் அரிது."
      ],
      "manakkudavar": "அரசன் பதியும் பெருமையும் இலராயினும் மாந்தர் உறைநிலத்தின்கண் பொருந்துத லரிது. இது மாந்தர் உறைவிடத்தின்கண் செல்லுங்கால் அறிந்து செல்ல வேண்டுமென்றது.",
      "pope": "Though fort be none, and store of wealth they lack,'Tis hard a people's homesteads to attack",
      "sourceFile": "0499.md",
      "sourceSha256": "5b18e2653e09ef3d5f7c9877f52ce9b4196adcd5a11358e4033247b432347a6f"
    },
    {
      "number": 500,
      "lines": [
        "காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா",
        "வேலாள் முகத்த களிறு."
      ],
      "manakkudavar": "கண்ணஞ்சாத வேலழுத்தப்பட்ட முகத்தினையுடைய களிற்றைக் கால் விழப்பட்ட களரின்கண் நரி கொல்லவற்றாம். இது மேலதற்குக் காரணங் கூறிற்று.",
      "pope": "The jackal slays, in miry paths of foot-betraying fen,The elephant of fearless eye and tusks transfixing armed men",
      "sourceFile": "0500.md",
      "sourceSha256": "45ee875ed9d0df87d7c5449f8810977d2a8b12b839d978bc2dee9b7ee4337c25"
    },
    {
      "number": 501,
      "lines": [
        "அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்",
        "திறந்தெரிந்து தேறப் படும்."
      ],
      "manakkudavar": "அறமும் பொருளும் இன்பமும் உயிரச்சமுமென்னும் நான்கின் கூறுபாட்டினையும் ஆராய்ந்து, ஆராய்ந்தபின்பு ஒருவன் அரசனால் தெளியப்படுவான். முன்பு நான்கு பொருளையும் ஆராயவேண்டுமென்றார் பின்பு தேறப்படுமென்றார்.",
      "pope": "How treats he virtue, wealth and pleasure? How, when life's at stake,Comports himself? This four-fold test of man will full assurance make",
      "sourceFile": "0501.md",
      "sourceSha256": "37e3e3295db8e75e80b8805fa2f7845ee319f5daba8d2ebbf32ca5ab1bb554ca"
    },
    {
      "number": 502,
      "lines": [
        "குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்",
        "நாணுடையான் சுட்டே தெளிவு."
      ],
      "manakkudavar": "உயர்குடியிற் பிறந்து காமம் வெகுளி முதலான குற்றித்தினின்று நீங்கி, தனக்கு வரும் பழியை அறுக்கவல்ல நாணமுடையவன்கண்ணதே அரசனது தெளிவு. இதுவும் உடன்பாடென்று கொள்ளப்படுமென்றவாறு.",
      "pope": "Of noble race, of faultless worth, of generous prideThat shrinks from shame or stain; in him may king confide",
      "sourceFile": "0502.md",
      "sourceSha256": "84b03af372df0227c97cbfeccc92afba1ccaa506e584901fa08fa84d357a7812"
    },
    {
      "number": 503,
      "lines": [
        "அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்",
        "இன்மை அரிதே வெளிறு."
      ],
      "manakkudavar": "கற்றற்கரிய நூல்களைக் கற்றுக் குற்றமற்றார்மாட்டும் ஆராயுங்கால் குற்றமின்மை இல்லை.",
      "pope": "Though deeply learned, unflecked by fault, 'tis rare to see,When closely scanned, a man from all unwisdom free",
      "sourceFile": "0503.md",
      "sourceSha256": "e61318931b69b431cd5290c6177ca1f260655560ac59c589fb04da53a03618da"
    },
    {
      "number": 504,
      "lines": [
        "குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்",
        "மிகைநாடி மிக்க கொளல்."
      ],
      "manakkudavar": "ஒருவனுக்குள்ள குணத்தையும் ஆராய்ந்து குற்றத்தையும் ஆராய்ந்து அவற்றுள் மிக்கதனை யறிந்து அவற்றுள்ளும் தலைமையாயினும் பன்மையாயினும் மிக்கதனைக் கொள்க.",
      "pope": "Weigh well the good of each, his failings closely scan,As these or those prevail, so estimate the man",
      "sourceFile": "0504.md",
      "sourceSha256": "acf8ad6c2a22ec870be5481c2e320fbd5ef55d112dc690166842bfeafbf176c0"
    },
    {
      "number": 505,
      "lines": [
        "பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்",
        "கருமமே கட்டளைக் கல்."
      ],
      "manakkudavar": "ஒருவனைப் பெரியனாக்குதற்கும் மற்றைச் சிறியனாக்குதற்கும் வேறு தேறவேண்டா; அவரவர் செய்யவல்ல கருமந்தானே அதற்குத்தக ஆக்கும் படிக்கல்லாம். இஃது ஒருவனை ஒரு காரியத்திலே முற்படவிட்டு, அவன் செய்யவல்ல அளவுங் கண்டு பின்னைப் பெரியனாக்க அமையுமென்றது. இது குற்றங்கூறாமை பலவற்றிற்கு முள்ள வேறுபாடென்று கொள்ளப்படும்.",
      "pope": "Of greatness and of meanness too,The deeds of each are touchstone true",
      "sourceFile": "0505.md",
      "sourceSha256": "a5d0d4e008c6a54a84dad5e8e1620b9bd71d1a5cf8eb98bbfbb6242a02c76cd9"
    },
    {
      "number": 506,
      "lines": [
        "அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்",
        "பற்றிலர் நாணார் பழி."
      ],
      "manakkudavar": "ஒழுக்கமற்றாரைத் தேறுதலைத் தவிர்க; அவர் ஓரிடத்துப் பற்றுடையாரும் அல்லர், பழிக்கும் நாணாராதலான்.",
      "pope": "Beware of trusting men who have no kith of kin;No bonds restrain such men, no shame deters from sin",
      "sourceFile": "0506.md",
      "sourceSha256": "07ff0d534ed8570b186c92856df8ebbe16cc586f1ed0232dd81a8ddae356e899"
    },
    {
      "number": 507,
      "lines": [
        "காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்",
        "பேதைமை எல்லாந் தரும்."
      ],
      "manakkudavar": "அன்புடைமையே பற்றாக, அறிவுடையாரல்லாதாரைத் தேறுதல் எல்லா அறியாமையும் தரும். அரசர் அன்புடையாரைத் தேறலாமென்பது பராசரர் மதம். இஃது இவ்வளவினால் தேறலாகாதென்றது.",
      "pope": "By fond affection led who trusts in men of unwise soul,Yields all his being up to folly's blind control",
      "sourceFile": "0507.md",
      "sourceSha256": "356a96ffc6619565a112af026c725f9ea269331d5add5e1582b9949ecafc2132"
    },
    {
      "number": 508,
      "lines": [
        "தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை",
        "தீரா இடும்பை தரும்."
      ],
      "manakkudavar": "பிறனை ஆராயாதே வழிமுறையென்று தெளிந்தவனுக்கு அத்தெளிவு தீர்தலில்லாத துன்பமுண்டாக்கும். இது தன் குலத்திலுள்ளாருள் அமாத்தியராயினார் வழியில் உள்ளாரைத் தேறலா மென்றது.",
      "pope": "Who trusts an untried stranger, brings disgrace,Remediless, on all his race",
      "sourceFile": "0508.md",
      "sourceSha256": "ab5427970d734d9d0004b06e052341496d9dcb86a572673dd091b913c91191d0"
    },
    {
      "number": 509,
      "lines": [
        "தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்",
        "தேறுக தேறும் பொருள்."
      ],
      "manakkudavar": "யாவரையும் ஆராயாது தெளியாதொழிக; ஆராய்ந்த பின்பு அவராற் றேறப்படும் பொருளைத் தேறுக. இஃது ஒருபொருளிற் றேற்றமுடையாரை எல்லாப் பொருளினும் தெளிக வென்றது.",
      "pope": "Trust no man whom you have not fully tried,When tested, in his prudence proved confide",
      "sourceFile": "0509.md",
      "sourceSha256": "b4bdaca0a5cd4fa8474a3f05ab89ffc977091330df9d4a6ee8febd9262618a5f"
    },
    {
      "number": 510,
      "lines": [
        "தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்",
        "தீரா இடும்பை தரும்."
      ],
      "manakkudavar": "ஒருவனை ஆராயாது தெளிதலும் தெளிந்து கொள்ளப்பட்டவன் மாட்டுத் தான் ஐயப்படுதலுமாகிய இவ்விரண்டும் நீங்காத துன்பத்தைத் தரும்.",
      "pope": "Trust where you have not tried, doubt of a friend to feel,Once trusted, wounds inflict that nought can heal",
      "sourceFile": "0510.md",
      "sourceSha256": "380fac30639bfdab1152e1d377c1e8d7870f049b4863e67e0cba8bd8a48ee6b7"
    },
    {
      "number": 511,
      "lines": [
        "நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த",
        "தன்மையான் ஆளப் படும்."
      ],
      "manakkudavar": "நன்மையானவற்றையும் தீமையானவற்றையும் ஆராய்ந்து தீமையைப் பொருந்தாது நன்மையின்கண்ணே பொருந்தின தன்மையுடையவன் வினை செய்வானாகச் செய்யப்படும்.",
      "pope": "Who good and evil scanning, ever makes the good his joy;Such man of virtuous mood should king employ",
      "sourceFile": "0511.md",
      "sourceSha256": "380ee32861479612e42b1dfb37210c5e0c6a0462da33269ec08b92c8c429d234"
    },
    {
      "number": 512,
      "lines": [
        "வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை",
        "ஆராய்வான் செய்க வினை."
      ],
      "manakkudavar": "பொருள் வருதற்கு இடமானவற்றை முன்பு நின்ற நிலையிற் பெருக்கி, அவ்விடங்களி லுண்டாகும் பயனை முன்பு நின்ற நிலையிலுண்டாக்கி, அவ்விடத்துற்ற மிகுதி குறைவுகளை ஆராயவல்லவன் வினை செய்வானாக. பொருள் வருதற்கிடமாவது நிலம் முதலான இடம்: அதனைப் பெருக்குதல்- பொருளும் இன்பமும் உண்டாகச் செய்தல்.",
      "pope": "Who swells the revenues, spreads plenty o'er the land,Seeks out what hinders progress, his the workman's hand",
      "sourceFile": "0512.md",
      "sourceSha256": "da7cdf06d92625210f90408df0f07c5183ef9d7d5454b81e55ef349dd4278235"
    },
    {
      "number": 513,
      "lines": [
        "அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்",
        "நன்குடையான் கட்டே தெளிவு."
      ],
      "manakkudavar": "அன்புடைமையும் அறிவுடைமையும் ஒருபொருளை ஆராய்ந்து துணிவுடைமையும் அவாவின்மையுமென்னும் இந்நான்கு குணங்களையும் நிலை பெற உடையான் மேலதே வினையை விட்டிருக்கும் தெளிவு.",
      "pope": "A loyal love with wisdom, clearness, mind from avarice free;Who hath these four good gifts should ever trusted be",
      "sourceFile": "0513.md",
      "sourceSha256": "ec064153829f591c074341968d76477f1574e70e1b793bf228b46f4c114e5224"
    },
    {
      "number": 514,
      "lines": [
        "எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்",
        "வேறாகும் மாந்தர் பலர்."
      ],
      "manakkudavar": "எல்லா வகையினாலும் ஆராய்ந்து தெளிந்தவிடத்திலும் அவர் செய்யும் வினையின் வகையினாலே மனம் வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலர். இது தெளிந்தே மென்று இகழலாகாதென்றது.",
      "pope": "Even when tests of every kind are multiplied,Full many a man proves otherwise, by action tried",
      "sourceFile": "0514.md",
      "sourceSha256": "640bb967f28ab79d516ad4d05e9951ced0c98b049799ec9f71a611065c5ece0f"
    },
    {
      "number": 515,
      "lines": [
        "அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்",
        "சிறந்தானென்று ஏவற்பாற் றன்று."
      ],
      "manakkudavar": "செய்யும் உபாயங்களை யறிந்து, செயலானும் இடையூறுகளானும் வருந் துன்பங்களைப் பொறுத்து முடிவு செய்யவல்லானையல்லது வினைதான் இவன் நம்மாட்டன்புடையானென்று பிறனொருவனையேவும் இயல்புடைத்தன்று.",
      "pope": "No specious fav'rite should the king's commission bear,But he that knows, and work performs with patient care",
      "sourceFile": "0515.md",
      "sourceSha256": "00469598ae6927e2ebcd6c0dc22b00924aadb34643a54d5c583934f5c1223673"
    },
    {
      "number": 516,
      "lines": [
        "செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு",
        "எய்த உணர்ந்து செயல்."
      ],
      "manakkudavar": "வினை செய்வானையும் ஆராய்ந்து அவ்வினையினது இயல்பையும் ஆராய்ந்து அதுமுடியுங் காலத்தோடே பொருந்த அறிந்து, பின்பு அவ்வினை அவன் செய்வானாக அமைக்க வேண்டும்.",
      "pope": "Let king first ask, 'Who shall the deed perform?' and 'What the deed?'Of hour befitting both assured, let every work proceed",
      "sourceFile": "0516.md",
      "sourceSha256": "5c29372b1e13efde6212eb9777119fac41068ca61cee83c39aaee2338c60ed69"
    },
    {
      "number": 517,
      "lines": [
        "இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து",
        "அதனை அவன்கண் விடல்."
      ],
      "manakkudavar": "இக்கருமத்தினை இக்கருவியாலே இவன் செய்து முடிக்க வல்லவனென்று ஆராய்ந்து பின்பு அக்கருமத்தினை அவன்கண்ணே விடுக. இது பெரும்பான்மையுஞ் சேனாதிபதியை நோக்கிக் கூறிற்று.",
      "pope": "'This man, this work shall thus work out,' let thoughtful king command;Then leave the matter wholly in his servant's hand",
      "sourceFile": "0517.md",
      "sourceSha256": "612e29fb54b9f0af3f78eb1b9c0078254e41aac35ea7a2b375513d188d93b401"
    },
    {
      "number": 518,
      "lines": [
        "வினைக்குரிமை நாடிய பின்றை அவனை",
        "அதற்குரிய னாகச் செயல்."
      ],
      "manakkudavar": "இவ்வினைக்கு இவன் உரியவனென்று ஆராய்ந்த பின்பு, அவனை அவ்வினை செய்தற்கு உரியவனாகப் பண்ணுக. இஃது ஒழிந்த காரியங்களின் வினை செய்வாரை ஆக்குமது.",
      "pope": "As each man's special aptitude is known,Bid each man make that special work his own",
      "sourceFile": "0518.md",
      "sourceSha256": "e1d034535c839d1d4d1a5cd5774646b2fde80740022be8d774ed9b6e1386e5bb"
    },
    {
      "number": 519,
      "lines": [
        "வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக",
        "நினைப்பானை நீங்கும் திரு."
      ],
      "manakkudavar": "வினையிடத்து வினை செய்ய வல்லவனது நட்பை வேறுபாடாக நினைக்குமவனைத் திருமகள் நீங்குவள்.",
      "pope": "Fortune deserts the king who ill can bear,Informal friendly ways of men his tolls who share",
      "sourceFile": "0519.md",
      "sourceSha256": "79a25e4d4a2bf259762d33e0affb9443b7e28dc31ac763913663ed46f74b3264"
    },
    {
      "number": 520,
      "lines": [
        "நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்",
        "கோடாமை கோடா துலகு."
      ],
      "manakkudavar": "வினை செய்வான் கோடாதொழிய உலகம் கோடாது செவ்வையிலே நிற்கும், ஆதலான் அவன் செயலை மன்னவன் நாடோறும் ஆராய வேண்டும். இது வினைசெய்வார் செயலை நாடோறும் ஆராய வேண்டுமென்றது.",
      "pope": "Let king search out his servants' deeds each day;When these do right, the world goes rightly on its way",
      "sourceFile": "0520.md",
      "sourceSha256": "ad4924c6f211ee948ec7cbceabcbb3c3e6af99ed0d082d8365b0603247bee4da"
    },
    {
      "number": 521,
      "lines": [
        "பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்",
        "சுற்றத்தார் கண்ணே உள."
      ],
      "manakkudavar": "பொருளற்ற கண்ணும் பழைமையைக் கொண்டாடி விடாதொழுகுதல் சுற்றத்தார்மாட்டே யுளவாம். இஃது இல்லாக் காலத்தினும் விடாரென்றது.",
      "pope": "When wealth is fled, old kindness still to show,Is kindly grace that only kinsmen know",
      "sourceFile": "0521.md",
      "sourceSha256": "1e7a66b7664bc3e7201aaa2cdf8d61c3a23236fff7b9eba75c8a541704104794"
    },
    {
      "number": 522,
      "lines": [
        "விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா",
        "ஆக்கம் பலவும் தரும்."
      ],
      "manakkudavar": "அன்பறாத சுற்றம் ஓரிடத்தே பொருந்தி யொழுகு மாயின், அது கிளைத்தலறாத ஆக்கமாகிய பலவற்றையுந் தரும்.",
      "pope": "The gift of kin's unfailing love bestowsMuch gain of good, like flower that fadeless blows",
      "sourceFile": "0522.md",
      "sourceSha256": "4a33a97c4cec298ea70d39548458c62c06b3d91599e48a0f33947964b2ac3ad0"
    },
    {
      "number": 523,
      "lines": [
        "அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்",
        "கோடின்றி நீர்நிறைந் தற்று."
      ],
      "manakkudavar": "கலக்கப் படுவாரோடு கலப்பின்றி யொழுகுவானது வாழ்க்கை, குளப்பரப்புக் கரையின்றி நீர் நிறைந்தாற் போலும். இது சுற்றந் தழுவாக்கால் செல்வங் காக்கப்படாதென்றது. இத்துணையும் சுற்றத்தாரெல்லாரோடும் ஒழுகுந் திறங் கூறிற்று.",
      "pope": "His joy of life who mingles not with kinsmen gathered round,Is lake where streams pour in, with no encircling bound",
      "sourceFile": "0523.md",
      "sourceSha256": "c27473f41b7489f31a5bb1bd784de82847c5ff1377d666304d8a26fe52a3458d"
    },
    {
      "number": 524,
      "lines": [
        "சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்",
        "பெற்றத்தால் பெற்ற பயன்."
      ],
      "manakkudavar": "சுற்றத்தாராலே சூழப்பட ஒழுகுவது, செல்வத்தைப் பெற்றவதனால் உண்டான பயன். இது சுற்றஞ் சூழ்ந்து வருவதாக ஒழுக வேண்டுமென்றது.",
      "pope": "The profit gained by wealth's increase,Is living compassed round by relatives in peace",
      "sourceFile": "0524.md",
      "sourceSha256": "10ae78b64fc8c0a60e640676fec6dc3aedbafa6bf492176732f3fda03e2ebacf"
    },
    {
      "number": 525,
      "lines": [
        "கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய",
        "சுற்றத்தால் சுற்றப் படும்."
      ],
      "manakkudavar": "வேண்டுமளவு கொடுத்தலும் இன்சொற் கூறுதலும் செய்வனாயின் தனக்கு முன்னாகியும் பின்னாகியும் வருகின்ற சுற்றத்தாராலே சூழப்படுவன். இஃது ஒழுகுந் திறம் கூறிற்று.",
      "pope": "Who knows the use of pleasant words, and liberal gifts can give,Connections, heaps of them, surrounding him shall live",
      "sourceFile": "0525.md",
      "sourceSha256": "0e4ce12dfcc9c5cbb621b70055073582957688602c471b6cd51b8e693a3abc3a"
    },
    {
      "number": 526,
      "lines": [
        "பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்",
        "மருங்குடையார் மாநிலத்து இல்."
      ],
      "manakkudavar": "மிகக் கொடுக்க வல்லவனாய்ச் சினத்தையும் விரும்பானாயின் அவனின் துணையுடையார் பெரிய உலகின்கண் இல்லை. இது மேற்கூறிய அளவின்றி யிவ்வாறு செய்யின் துணை யுடையானா மென்றது.",
      "pope": "Than one who gifts bestows and wrath restrains,Through the wide world none larger following gains",
      "sourceFile": "0526.md",
      "sourceSha256": "2de7b46af201b429927b12ba9d7083bd45693d4a83a0b26853302ff5097e1666"
    },
    {
      "number": 527,
      "lines": [
        "காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்",
        "அன்னநீ ரார்க்கே உள."
      ],
      "manakkudavar": "காக்கை ஓரிரை பெற்றால் அதனை மறையாது தன் சுற்றமெல்லாவற்றையும் அழைத்து உண்ணும். அதுபோலச் செல்வம் பெற்றால் அதனைத் தன் சுற்றத்தா ரெல்லாரோடும் நுகர்வார்க்கே ஆக்கம் உளதாவது. இவை மூன்றும் அன்பமைந்த மக்கட்குச் செய்யுந் திறம் கூறின.",
      "pope": "The crows conceal not, call their friends to come, then eat;Increase of good such worthy ones shall meet",
      "sourceFile": "0527.md",
      "sourceSha256": "5f62e97509b9b8108d61918220b5385a6a1efe3dc2286663234288cc933f90da"
    },
    {
      "number": 528,
      "lines": [
        "பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்",
        "அதுநோக்கி வாழ்வார் பலர்."
      ],
      "manakkudavar": "அரசன் எல்லாரையும் பொதுவாகப் பாராதே ஒருவனைத் தலைமையாலே பார்ப்பானாயின் அப்பார்வை நோக்கி அவனை விடாது வாழுஞ் சுற்றத்தார் பலர். இஃது ஒருவனை இளவரசாக்க வேண்டுமென்றது.",
      "pope": "Where king regards not all alike, but each in his degree,'Neath such discerning rule many dwell happily",
      "sourceFile": "0528.md",
      "sourceSha256": "d42d9482a6910a7dfae919db55e96c348ffbe478ee0d9fd4c7571c7701042f06"
    },
    {
      "number": 529,
      "lines": [
        "தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்",
        "காரணம் இன்றி வரும்."
      ],
      "manakkudavar": "முன்பு தனக்குத் தமராகி வைத்துத் தன்னை விட்டுப் போனவர் பின்பு வந்து சுற்றமாதல் அவர்மாட்டு அமராமைக்குக் காரணம் இன்றி யொழுக வரும். இது தன்னை விட்டுப்போன இராஜபுத்திரரைக் கூட்டிக் கொள்ளுமாறு கூறிற்று.",
      "pope": "Who once were his, and then forsook him, as beforeWill come around, when cause of disagreement is no more",
      "sourceFile": "0529.md",
      "sourceSha256": "d261d3bcda5352cbc88953ecb8f1151eca4ad083268b9e66aafd0841d6e0b55a"
    },
    {
      "number": 530,
      "lines": [
        "உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்",
        "இழைத் திருந்து எண்ணிக் கொளல்."
      ],
      "manakkudavar": "தன்னிடத்தினின்று நீங்கி ஒரு காரணத்தால் வந்தவனை அரசன் அக்காரணத்தைச் செய்துவைத்துப் பின்பு காரியமானபடி யெண்ணி அதற்குத் தக்கபடி கூட்டிக் கொள்ளுக.",
      "pope": "Who causeless went away, then to return, for any cause, ask leave;The king should sift their motives well, consider, and receive",
      "sourceFile": "0530.md",
      "sourceSha256": "ac500c8f8b1bcb9b0245f7a50b40c445a5a93bb2e8b133a81efab86de4461e3b"
    },
    {
      "number": 531,
      "lines": [
        "இறந்த வெகுளியின் தீதே சிறந்த",
        "உவகை மகிழ்ச்சியிற் சோர்வு."
      ],
      "manakkudavar": "மிகுந்த வெகுளியினும் தனக்குத் தீமையைச் செய்யும்; மிக்க உவகைக்களிப்பினால் வரும் மறப்பு. தனக்குச் சிறந்த உவகை தன்மகிழ்ச்சியாற் சோருஞ் சோர்வு என்றும், உய்க்க வேண்டுமவரிடத்து உய்க்கும் உவகை என்றுமாம்.",
      "pope": "'Tis greater ill, it rapture of o'erweening gladness to the soulBring self-forgetfulness than if transcendent wrath control",
      "sourceFile": "0531.md",
      "sourceSha256": "a10f2c1200b6197913ee03f0b8a27623d5d8eec0a0b1ec14fb69fd5bcfd2b53e"
    },
    {
      "number": 532,
      "lines": [
        "பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை",
        "நிச்ச நிரப்புக் கொன் றாங்கு."
      ],
      "manakkudavar": "மறவியாகின்றது புகழைக்கொல்லும்: நாடோறும் இரவால் வருந்தி வயிற்றை நிறைக்கும் ஊண் அறிவைக் கொல்லுமாறு போல. இவை மூன்றினாலும் பொருளின்கண் கடைப்பிடித்தல் கூறினார்.",
      "pope": "Perpetual, poverty is death to wisdom of the wise;When man forgets himself his glory dies",
      "sourceFile": "0532.md",
      "sourceSha256": "d7f99400166b3d10ea49c39e4e74767de4e54d13c5e0cdeee8b4dbec23a8f44d"
    },
    {
      "number": 533,
      "lines": [
        "பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து",
        "எப்பால்நூ லோர்க்கும் துணிவு."
      ],
      "manakkudavar": "பொச்சாப்பு உடையார்க்குப் புகழுடைமையில்லையாம்; அஃது உலகத்து வழங்குகின்ற எவ்வகைப்பட்ட நூலோர்க்குந் துணிவு. இது பொச்சாப்பார்க்குப் புகழாகாதென்றது.",
      "pope": "'To self-oblivious men no praise'; this ruleDecisive wisdom sums of every school",
      "sourceFile": "0533.md",
      "sourceSha256": "621e9d8fc310a5f3fd7102a194d3f383316822b6de1831dc62e34cd10b504b77"
    },
    {
      "number": 534,
      "lines": [
        "அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை",
        "பொச்சாப் புடையார்க்கு நன்கு."
      ],
      "manakkudavar": "அச்சமுடையார்க்கு ஆவதொரு அரணில்லை: அதுபோலப் பொச்சாப்புடையார்க்கு வருவதொரு நன்மை இல்லை. இது பொச்சாப்புடையார்க்குக் காவலில்லை என்றது.",
      "pope": "'To cowards is no fort's defence'; e'en soThe self-oblivious men no blessing know",
      "sourceFile": "0534.md",
      "sourceSha256": "d553047550d58c747b658df171d92dc72896e229c05bc61e40b0296ef5fb81f3"
    },
    {
      "number": 535,
      "lines": [
        "முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை",
        "பின்னூறு இரங்கி விடும்."
      ],
      "manakkudavar": "தன்னாற் காக்கப்படும் துன்பங்களை அவை வருவதற்கு முன்னே அறிந்து காவாது மறந்திருந்தான், பின் வந்துற்றகாலத்துக் காக்கலாகாமையின் அப்பிழைப்பினை நினைந்திரங்கிவிடும்.",
      "pope": "To him who nought foresees, recks not of anything,The after woe shall sure repentance bring",
      "sourceFile": "0535.md",
      "sourceSha256": "1adaebffa0cf5acd46d5ecb5af081ef999ed5c757fb1cf7c427096b37c68eb20"
    },
    {
      "number": 536,
      "lines": [
        "இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை",
        "வாயின் அதுவொப்பது இல்."
      ],
      "manakkudavar": "யாவர்மாட்டும் எல்லாநாளும் தப்புச்செய்யாமை தப்பாமல் வாய்க்குமாயின் அதனையொக்க நன்மை பயப்பது பிறிதொன்று இல்லை. இது முறைமை செய்யுங்கால் கடைப்பிடித்துச் செய்யவேண்டு மென்றது.",
      "pope": "Towards all unswerving, ever watchfulness of soul retain,Where this is found there is no greater gain",
      "sourceFile": "0536.md",
      "sourceSha256": "e3de266a27049026cd4f8474a2ad54390a4646906351ca33fd37a1b06b86c6bf"
    },
    {
      "number": 537,
      "lines": [
        "அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்",
        "கருவியால் போற்றிச் செயின்."
      ],
      "manakkudavar": "செயற்கு அரியனவென்று செய்யலாகாதன வில்லை; மறவாமையாகிய கருவியாலே பாதுகாத்துச் செய்வானாயின். இது வினை செய்யுங்கால் மறவாமை வேண்டுமென்றது.",
      "pope": "Though things are arduous deemed, there's nought may not be won,When work with mind's unslumbering energy and thought is done",
      "sourceFile": "0537.md",
      "sourceSha256": "8375f76b66311f0e237c653cb6d1a9643c94144d912486b24d564571a63b0607"
    },
    {
      "number": 538,
      "lines": [
        "புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது",
        "இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்."
      ],
      "manakkudavar": "உயர்ந்தாரால் புகழப்பட்டவையிற்றைக் கடைப்பிடித்துச் செய்தல்வேண்டும். இவையிற்றைச் செய்யாது இகழ்ந்தவர்க்கு எழுபிறப்பிலும் நன்மையில்லையாமாதலான். இஃது அறத்தின்கண் இகழாமற் செய்வது கூறிற்று.",
      "pope": "Let things that merit praise thy watchful soul employ;Who these despise attain through sevenfold births no joy",
      "sourceFile": "0538.md",
      "sourceSha256": "f05cbffea36b7d4898f32f2e79823ba05926d1d84b726678e98a4652c6944f60"
    },
    {
      "number": 539,
      "lines": [
        "இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்",
        "மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து."
      ],
      "manakkudavar": "அரசர் குறித்துணரும் உணர்ச்சியின்மையாலே முன்பு கெட்ட அரசரை நினைக்க; தாமும் தம்முடைய மகிழ்ச்சியாலே வலியராயிருக்கும் பொழுது. இஃது உண்பவை, உடுப்பவை, பூசுபவை சோதித்துக் கொள்க என்றது.",
      "pope": "Think on the men whom scornful mind hath brought to nought,When exultation overwhelms thy wildered thought",
      "sourceFile": "0539.md",
      "sourceSha256": "0c88daf4d356ff949447d0be2e78dcae032a2b91f4bde06e2b0de33bfbd139b4"
    },
    {
      "number": 540,
      "lines": [
        "உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்",
        "உள்ளியது உள்ளப் பெறின்."
      ],
      "manakkudavar": "தான் நினைந்த பொருளைப் பெறுதல் எளிது; பின்பும் அதனை மறவாதே நினைக்கக் கூடுமாயின். இனிப் பொருளின்கண் மறவாமை கூறுவார் முற்பட நினைத்ததனை மறவாமை வேண்டுமென்றார்.",
      "pope": "'Tis easy what thou hast in mind to gain,If what thou hast in mind thy mind retain",
      "sourceFile": "0540.md",
      "sourceSha256": "f0c9191ecdd60225fb7d6c7f2ebf1905fdbfed72d13dfe733ff73cc94f5945d3"
    },
    {
      "number": 541,
      "lines": [
        "ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்",
        "தேர்ந்துசெய் வஃதே முறை."
      ],
      "manakkudavar": "ஒருவன் செய்த குற்றத்தை ஆராய்ந்து நட்டோரென்று கண்ணோடாது தலைமையைப் பொருந்தி யாவர்மாட்டும் குற்றத்திற்குத் தக்க தண்டத்தை நூல்முகத்தாலாராய்ந்து அதன் வழியே செய்வது முறையென்று சொல்லப்படும். யார்மாட்டும் என்றது தன்சுற்றமாயினு மென்றது.",
      "pope": "Search out, to no one favour show; with heart that justice lovesConsult, then act; this is the rule that right approves",
      "sourceFile": "0541.md",
      "sourceSha256": "6aaa79803492b6cee98fdba7cccacb26daa31ee47f01628d4ce3dd9587aef47d"
    },
    {
      "number": 542,
      "lines": [
        "வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்",
        "கோல் நோக்கி வாழுங் குடி."
      ],
      "manakkudavar": "உலகத்தாரெல்லாம் மழையை நோக்கி யின்புறாநிற்பர்; அதுபோலக் குடிகளும் அரசனது செங்கோன்மையை நோக்கியின்புறாநிற்பர்.",
      "pope": "All earth looks up to heav'n whence raindrops fall;All subjects look to king that ruleth all",
      "sourceFile": "0542.md",
      "sourceSha256": "0c12531fe86447c3cee9f31e3fe188f24f5372d7dd536988b57a0674c68262cc"
    },
    {
      "number": 543,
      "lines": [
        "அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்",
        "நின்றது மன்னவன் கோல்."
      ],
      "manakkudavar": "அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை.",
      "pope": "Learning and virtue of the sages spring,From all-controlling sceptre of the king",
      "sourceFile": "0543.md",
      "sourceSha256": "478a0cf4b5cc2163ef64dc4160ca4d5568c793c08f94209fdf15fbcc9b45fb3f"
    },
    {
      "number": 544,
      "lines": [
        "குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்",
        "அடிதழீஇ நிற்கும் உலகு."
      ],
      "manakkudavar": "குடியைப் பொருந்தி முறைமை செலுத்துகின்ற பெரிய நில மன்னன் அடியைப் பொருந்தி நிற்கும் உலகு. இது முறைமை செய்யும் அரசன்கண்ணதாம் உலகு என்றது.",
      "pope": "Whose heart embraces subjects all, lord over mighty landWho rules, the world his feet embracing stands",
      "sourceFile": "0544.md",
      "sourceSha256": "d401f2a4d1fece981c2ebedbf473a6cd32cde158c6b4a5163305f22cf84d634e"
    },
    {
      "number": 545,
      "lines": [
        "இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட",
        "பெயலும் விளையுளும் தொக்கு."
      ],
      "manakkudavar": "மழைபெய்தலும் விளைதலுங்கூடி, நூல் சொன்ன இயல்பினானே முறையை நடத்த வல்ல அரசனது நாட்டகத்தினவாம் என்றவாறு. இது மேற்கூறிய முறைமை செய்ய மழையும் விளைவும் உண்டாம் என்றது.",
      "pope": "Where king, who righteous laws regards, the sceptre wields,There fall the showers, there rich abundance crowns the fields",
      "sourceFile": "0545.md",
      "sourceSha256": "a58ad3042cdbe3e6c955e57fbd2f941abeb49315d299614c1b5d8da9576d412e"
    },
    {
      "number": 546,
      "lines": [
        "வேலன்று வென்றி தருவது மன்னவன்",
        "கோலதூஉங் கோடா தெனின்."
      ],
      "manakkudavar": "அரசனுக்கு வெற்றி தருவது அவன் கையிலுள்ள வேலன்று, முறை செய்தல்; அவன் அதனைக் கோடச் செய்யானாயின். இது செங்கோன்மை செய்ய வெற்றியுண்டாமென்றது.",
      "pope": "Not lance gives kings the victory,But sceptre swayed with equity",
      "sourceFile": "0546.md",
      "sourceSha256": "4f994ca45496985f82c9a7e811ba73bbe78f1ec43091357a6183590d8c4cb726"
    },
    {
      "number": 547,
      "lines": [
        "இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை",
        "முறைகாக்கும் முட்டாச் செயின்."
      ],
      "manakkudavar": "வையகமெல்லாவற்றையும் அரசன் காக்கும்; அவ்வரசனை அவன்றான் செய்யும் முறை காக்கும். அதனைத் தப்பாமல் செய்யின் என்றவாறு. இது தனக்குக் காவலாம் என்றது.",
      "pope": "The king all the whole realm of earth protects;And justice guards the king who right respects",
      "sourceFile": "0547.md",
      "sourceSha256": "bee1d23b08d4b0740a3ce2aba5fc2aa2c0c3217196c696b2a2d86182561dc413"
    },
    {
      "number": 548,
      "lines": [
        "எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்",
        "தண்பதத்தான் தானே கெடும்."
      ],
      "manakkudavar": "எளிய காலத்தோடே நூலாராய்ந்து முறைமை செய்யாத அரசன் தனது தண்பதத்தினானே கெடுப்பாரின்றித் தானே கெடும். எண்பதமாவது வந்தவர் தங்கள் குறையைச் சொல்லுதற்கு எய்துங்காலம்; தண்பதமாவது குறையைச் சொல்லுதற்குத் தாழ்க்குங்காலம்.",
      "pope": "Hard of access, nought searching out, with partial handThe king who rules, shall sink and perish from the land",
      "sourceFile": "0548.md",
      "sourceSha256": "b997293bb9a78630c56bf2eef7f995c23365b803af0884f18d6e9bd05a0820f0"
    },
    {
      "number": 549,
      "lines": [
        "குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்",
        "வடுவன்று வேந்தன் தொழில்."
      ],
      "manakkudavar": "குடிகளை நலியாமற் காத்து, ஓம்புதற்காகக் குற்றஞ் செய்தாரை ஒறுத்தல் குற்றமன்று; அரசன் தொழில்.",
      "pope": "Abroad to guard, at home to punish, bringsNo just reproach; 'tis work assigned to kings",
      "sourceFile": "0549.md",
      "sourceSha256": "32a317d956f1277f8317e35be5da8e900cd0952df689b41a7aaa781c5c825ffe"
    },
    {
      "number": 550,
      "lines": [
        "கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்",
        "களைகட் டதனொடு நேர்."
      ],
      "manakkudavar": "கொடுமை செய்வாரைக் கொலையினானே அரசன் ஒறுத்தல் குற்றமன்று: உழவன் பைங்கூழ் வளர்தற்குக் களை களைந்ததனோடு ஒக்கும். கொடியாராவார் கள்வர், ஆறலைப்பார், சூறைகொள்வார்.",
      "pope": "By punishment of death the cruel to restrain,Is as when farmer frees from weeds the tender grain",
      "sourceFile": "0550.md",
      "sourceSha256": "57af90b5e4529085baa7cc9b4c7bf52008eb4d6ff89eb3dfb2d402aa25e741d9"
    },
    {
      "number": 551,
      "lines": [
        "கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு",
        "அல்லவை செய்தொழுகும் வேந்து."
      ],
      "manakkudavar": "கொலைத்தொழிலை மேற்கொண்டவரினும் கொடியன், அலைத்தற்றொழிலை மேற்கொண்டு நீதியல்லாதன செய்து ஒழுகுகின்ற அரசன்.",
      "pope": "Than one who plies the murderer's trade, more cruel is the kingWho all injustice works, his subjects harassing",
      "sourceFile": "0551.md",
      "sourceSha256": "355d3fe59c7603a1e079cf018cf72465dcf6d70e6a88a6fea4f9c977a41938aa"
    },
    {
      "number": 552,
      "lines": [
        "வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்",
        "கோலொடு நின்றான் இரவு."
      ],
      "manakkudavar": "தனியிடத்தே வேலொடு நின்றவன் கையிலுள்ளன தா வென்றல்போலும்: முறைசெய்தலை மேற்கொண்டு நின்றவன் குடிகள்மாட்டு இரத்தல். கோலொடு நிற்றல்- செவ்வைசெய்வாரைப் போன்று நிற்றல். நிச்சயித்த கடமைக்குமேல் வேண்டுகோளாகக் கொள்ளினும். அது வழியிற் பறிப்பதனோடு ஒக்குமென்றவாறு.",
      "pope": "As 'Give' the robber cries with lance uplift,So kings with sceptred hand implore a gift",
      "sourceFile": "0552.md",
      "sourceSha256": "3f11be3b673f1b9fdf17e1ef82f56fc33664e3e6d6a1c1f4e3256e572035fc05"
    },
    {
      "number": 553,
      "lines": [
        "நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்",
        "நாடொறும் நாடு கெடும்."
      ],
      "manakkudavar": "குற்றமும் குணமும் நாடோறும் ஆராய்ந்து அதற்குத் தக்க முறை செய்யாத அரசன் நாடு நாடோறும் கெடும். இது நாடு கெடுமென்றது.",
      "pope": "Who makes no daily search for wrongs, nor justly rules, that kingDoth day by day his realm to ruin bring",
      "sourceFile": "0553.md",
      "sourceSha256": "c477cedaf08485e718b83e4a3ead7ce13314ea62852ca62b0fd20dff6b826205"
    },
    {
      "number": 554,
      "lines": [
        "கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்",
        "சூழாது செய்யும் அரசு."
      ],
      "manakkudavar": "பொருளையும் பொருள்தரும் குடியையும் கூட இழப்பன், முறை கோடி ஆராயாது செய்யும் அரசன். இஃது ஆராயாது செய்வதனால்வருங் குற்றங் கூறிற்று.",
      "pope": "Whose rod from right deflects, who counsel doth refuse,At once his wealth and people utterly shall lose",
      "sourceFile": "0554.md",
      "sourceSha256": "5458e27fc249962cda3ce08b5b272c43ac2686deb93f3188fdaf3fe69cc6cb45"
    },
    {
      "number": 555,
      "lines": [
        "அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே",
        "செல்வத்தைத் தேய்க்கும் படை"
      ],
      "manakkudavar": "நீதியல்லன செய்தலானே அல்லற்பட்டு அதற்கு ஆற்றாது அழுத கண்ணீரன்றோ செல்வத்தைத் தேய்க்கும் ஆயுதம். இஃது அவ்வரசன் கெடுமென்றது.",
      "pope": "His people's tears of sorrow past endurance, are not theySharp instruments to wear the monarch's wealth away",
      "sourceFile": "0555.md",
      "sourceSha256": "782f5d1d7b6d2b29644653fc11598818f8d65959eb184c9de725be28a0260d6e"
    },
    {
      "number": 556,
      "lines": [
        "மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்",
        "மன்னாவாம் மன்னர்க் கொளி."
      ],
      "manakkudavar": "அரசர்க்கு ஒளி நிலைபெறுதல் செங்கோன்மை; அஃதில்லை யாயின் அரசர்க்கு ஒளி நிலையாதாம். முறை செய்யாமையால் அவன் நிலைபெறுதல் அருமையெனக் குற்றங் கூறுவார் முற்படப் புகழில்லையாம் என்றார்.",
      "pope": "To rulers' rule stability is sceptre right;When this is not, quenched is the rulers' light",
      "sourceFile": "0556.md",
      "sourceSha256": "687c7ff7750b6feb374406447533614d91d226437f0beabd41591956feaa5d4d"
    },
    {
      "number": 557,
      "lines": [
        "துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்",
        "அளியின்மை வாழும் உயிர்க்கு."
      ],
      "manakkudavar": "உலகத்திற் பல்லுயிர்க்கும் மழையில்லையானால் வருந்துன்பம் எத்தன்மைத்தாகின்றது; அத்தன்மைத்து, அரசன் அருளிலனாதால் அவன் கீழ் வாழும் மக்கட்கு. இஃது அருள் செய்யாமையால் வருங் குற்றங் கூறிற்று.",
      "pope": "As lack of rain to thirsty lands beneath,Is lack of grace in kings to all that breathe",
      "sourceFile": "0557.md",
      "sourceSha256": "5d47a3ddf92d909052ac705ced0b7d027ac645ee88233c46ce10a50433d4e1d1"
    },
    {
      "number": 558,
      "lines": [
        "இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா",
        "மன்னவன் கோற்கீழ்ப் படின்."
      ],
      "manakkudavar": "நல்குரவினும் செல்வம் துன்பமாகும்: முறைசெய்யாத அரசனது கொடுங்கோலின் கீழே குடியிருக்கின். இது பொருளுடையாரும் துன்பமுறுவரென்றது. இவை மூன்றும் முறை செய்யாமையாலே வருங் குற்றங் கூறின.",
      "pope": "To poverty it adds a sharper sting,To live beneath the sway of unjust king",
      "sourceFile": "0558.md",
      "sourceSha256": "c3b699d32aa3c880a27698b2bbb40f9c9c2f3cccded9e780984973a4b992c160"
    },
    {
      "number": 559,
      "lines": [
        "முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி",
        "ஒல்லாது வானம் பெயல்."
      ],
      "manakkudavar": "முறைமைகோட மன்னவன் செய்வனாயின், மழை துளி விடுதலைத் தவிர்ந்து பெய்யாதொழியும்.",
      "pope": "Where king from right deflecting, makes unrighteous gain,The seasons change, the clouds pour down no rain",
      "sourceFile": "0559.md",
      "sourceSha256": "311ef54fc4d17d723e0f18b452c3c47f26989eb53c1de4af74a7e3c0663d82c1"
    },
    {
      "number": 560,
      "lines": [
        "ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்",
        "காவலன் காவான் எனின்."
      ],
      "manakkudavar": "பசுக்கள் பால் குறையும்: அந்தணர் வேதம் ஓதார்: அரசன் காவானாயின். இது காவாமையால் வருங் குற்றங் கூறிற்று.",
      "pope": "Where guardian guardeth not, udder of kine grows dry,And Brahmans' sacred lore will all forgotten lie",
      "sourceFile": "0560.md",
      "sourceSha256": "a2425e99e1a52053030759bb74c2d031982c3c4f27ab0c23683aa41e6ad41a1c"
    },
    {
      "number": 561,
      "lines": [
        "தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்",
        "ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து."
      ],
      "manakkudavar": "குற்றத்திற்குத் தக ஆராய்ந்து, ஒருவர்மேற் செல்லாமை காரணமாக உலகத்துப் பொருந்துமாறு ஒறுப்பவன் அரசன்.",
      "pope": "Who punishes, investigation made in due degree,So as to stay advance of crime, a king is he",
      "sourceFile": "0561.md",
      "sourceSha256": "54bf747d2181dd69719678dec9f90da178c2dd424af9d4cf3f46490567c31e4b"
    },
    {
      "number": 562,
      "lines": [
        "கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்",
        "நீங்காமை வேண்டு பவர்."
      ],
      "manakkudavar": "கடிதாகச் செய்வாரைப் போன்று மெல்லிதாகச் செய்க, நெடிதாக வருகின்ற ஆக்கம் நீங்காமையை வேண்டுவார். இது குற்றத்திற்குத் தக்க தண்டத்தைக் குறையச் செய்யவேண்டு மென்றது.",
      "pope": "For length of days with still increasing joys on Heav'n who call,Should raise the rod with brow severe, but let it gently fall",
      "sourceFile": "0562.md",
      "sourceSha256": "bc817500af02e00b61b3da97ecc3028e3053b5d964899a9c61ada23d5a50be1e"
    },
    {
      "number": 563,
      "lines": [
        "வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்",
        "ஒருவந்தம் ஒல்லைக் கெடும்."
      ],
      "manakkudavar": "அரசன் அஞ்சத்தகுவனவற்றைச் செய்தொழுகும் வெங்கோலையுடையனாயின் அவன் ஒருதலையாகக் கடிதிற் கெடும்.",
      "pope": "Where subjects dread of cruel wrongs endure,Ruin to unjust king is swift and sure",
      "sourceFile": "0563.md",
      "sourceSha256": "ea27d9ecd0b9813f5bc1cbb787d18e2e2bbe336df6e0a111a597e6a5d7c31a2d"
    },
    {
      "number": 564,
      "lines": [
        "இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்",
        "உறைகடுகி ஒல்லைக் கெடும்."
      ],
      "manakkudavar": "தன்னிழலில் வாழ்வாரால் அரசன் கடியனென்று கூறப்பட்ட இன்னாத சொல்லையுடைய வேந்தனானவன் தானுறையும் இடம் வெகுளப்பட்டு விரைந்து கெடும். இது நாடும் தான்உறையும் இடமும் பொறுப்பினும் தெய்வத்தினாற் கெடுவனென்றது.",
      "pope": "'Ah! cruel is our king', where subjects sadly say,His age shall dwindle, swift his joy of life decay",
      "sourceFile": "0564.md",
      "sourceSha256": "99e6374ce0f24f12f0d93ad08613cd14328b178056c483a4b2fe37f7c8c03c34"
    },
    {
      "number": 565,
      "lines": [
        "அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்",
        "பேஎய்கண் டன்னது உடைத்து."
      ],
      "manakkudavar": "காண்டற்கரிய செவ்வியையும் இன்னா முகத்தையும் உடையவனது பெரிய செல்வம் பேயைக்கண்டதொக்க அச்சந் தருதலுடைத்து. இது செல்வத்தை வாங்குவார் இன்மையின் படை சேரா தென்றது.",
      "pope": "Whom subjects scarce may see, of harsh forbidding countenance;His ample wealth shall waste, blasted by demon's glance",
      "sourceFile": "0565.md",
      "sourceSha256": "2e12cd55fbee13cb2cfd073131470a53535681fc53024997bcf938b4dacb0eb3"
    },
    {
      "number": 566,
      "lines": [
        "கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்",
        "நீடின்றி ஆங்கே கெடும்."
      ],
      "manakkudavar": "அரசன் கடிய சொல்லை யுடையவனுமாய்க் கண்ணோட்டமும் இலனாயின் அவனது தொன்றுதொட்டு வருகின்ற செல்வம் பின்பு நிற்றலின்றி அக்காலத்தே கெடும். இஃது குறைதலேயன்றி முழுதுங் கெடுமென்றது.",
      "pope": "The tyrant, harsh in speach and hard of eye,His ample joy, swift fading, soon shall die",
      "sourceFile": "0566.md",
      "sourceSha256": "bb6e9b4a679732ec7caaeb056576ac0fc3f754dd3475ab9ae7ecc636150a8876"
    },
    {
      "number": 567,
      "lines": [
        "கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்",
        "அடுமுரண் தேய்க்கும் அரம்."
      ],
      "manakkudavar": "கடுஞ்சொற் கூறுதலும் குற்றத்தின் மிக்க தண்டஞ் செய்தலும் அரசனுடைய பகைவரை வெல்லும் வலியைத் தேய்க்கும் அரமாம். இது வலியைக் கெடுக்கும் என்றது.",
      "pope": "Harsh words and punishments severe beyond the right,Are file that wears away the monarch's conquering might",
      "sourceFile": "0567.md",
      "sourceSha256": "80dd0164d1ebff54bbbf5cfce619e8db05a5a812d63f8a58d8806d053f3ec6e6"
    },
    {
      "number": 568,
      "lines": [
        "இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்",
        "சீறிற் சிறுகும் திரு."
      ],
      "manakkudavar": "பிறர் செய்த குற்றத்தைத் தனக்கு இனமானாரோடே அமைந்து ஆராயாத அரசன் கடியசொல்லனுமாய்க் கண்ணோட்டமும் இலனாயின் அவனது செல்வம் நாடோறும் சுருங்கும். ஆராயாத அரசன் சின்னெறியிற் றீரானாயின் அவன்செல்வம் குறையுமென்றாவறு. இனம்- மந்திரி, புரோகிதர்.",
      "pope": "Who leaves the work to those around, and thinks of it no more;If he in wrathful mood reprove, his prosperous days are o'er",
      "sourceFile": "0568.md",
      "sourceSha256": "7d10f3577e2777e2932be4c0c04a55316f480af7afc292dbb574fd97274da756"
    },
    {
      "number": 569,
      "lines": [
        "செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்",
        "வெருவந்து வெய்து கெடும்."
      ],
      "manakkudavar": "தனக்குக் காவலானவற்றை முன்னேயமைத்துச் செய்யாத வேந்தன் செருவந்த காலத்து அச்சமுற்றுக் கடிதுகெடும். இது தனக்கும் அச்சம் வருவன செய்யலாகாதென்றது.",
      "pope": "Who builds no fort whence he may foe defy,In time of war shall fear and swiftly die",
      "sourceFile": "0569.md",
      "sourceSha256": "f948452dfbfc21b586e69b2ead0c38bd1fa1916890f39e8a799fcb4bdd788eb4"
    },
    {
      "number": 570,
      "lines": [
        "கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது",
        "இல்லை நிலக்குப் பொறை."
      ],
      "manakkudavar": "கடுங்கோலனாகிய அரசன் அறிவில்லாதாரை அமாத்தியராகக் கூட்டிக் கொள்ளும்; அவ்வரசன் அல்லது நிலத்துக்குப் பாரம் வேறொன்றும் இல்லை.",
      "pope": "Tyrants with fools their counsels share:Earth can no heavier burthen bear",
      "sourceFile": "0570.md",
      "sourceSha256": "0fe26b4cf284074f4b8f3a988d664dc80e90b5d2d57e6a2e563141d5b221e9a4"
    },
    {
      "number": 571,
      "lines": [
        "கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை",
        "உண்மையான் உண்டிவ் வுலகு."
      ],
      "manakkudavar": "கண்ணோட்டமாகிய பெரிய அழகு அரசன்மாட்டு உண்டானபடியினாலே, இவ்வுலகநடை யாகின்றது. இஃது அஃதில்லையாயின் உலகங்கெடும் ஆதலால் கண்ணோடவேண்டுமென்றது.",
      "pope": "Since true benignity, that grace exceeding great, residesIn kingly souls, world in happy state abides",
      "sourceFile": "0571.md",
      "sourceSha256": "677ecd93909ce95fb69e85d60218e42882ef556191785ba70daade1d79ae3940"
    },
    {
      "number": 572,
      "lines": [
        "கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்",
        "உண்மை நிலக்குப் பொறை."
      ],
      "manakkudavar": "உலகநடை கண்ணோட்டத்தின்கண்ணது: ஆதலால், அஃதில்லாதார் உளராயிருத்தல் நிலத்துக்குப் பாரமாம். இது கண்ணோட்டமில்லாதாரை நிலம் பொறாதென்றது.",
      "pope": "The world goes on its wonted way, since grace benign is there;All other men are burthen for the earth to bear",
      "sourceFile": "0572.md",
      "sourceSha256": "b7f089585426cc3408fb29900f5db4672a32752784f47aa921001dd0c16e027a"
    },
    {
      "number": 573,
      "lines": [
        "பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்",
        "கண்ணோட்டம் இல்லாத கண்."
      ],
      "manakkudavar": "பண் என்ன பயனுடைத்தாம், பாடலொடு பொருந்தாதாயின். அதுபோலக் கண் என்ன பயனுடைத்தாம், கண்ணோட்ட மில்லாத காலத்து. இது பிறர்க்கும் இன்பம் பயவாதென்றது.",
      "pope": "Where not accordant with the song, what use of sounding chordsWhat gain of eye that no benignant light affords",
      "sourceFile": "0573.md",
      "sourceSha256": "222397abe196e876f6403d95a484a526cf107c9b0233c76adb16e1c2c12d99ab"
    },
    {
      "number": 574,
      "lines": [
        "உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்",
        "கண்ணோட்டம் இல்லாத கண்."
      ],
      "manakkudavar": "அவரவர் வாழ்வு காரணமாகக் கண்ணோடுதலைச் செய்யாத கண்கள், முகத்தின்கண் உள்ளனபோன்று இருப்பதன்றி வேறென்ன பயனைச் செய்யும்? . அளவென்றது தகுதியை. இது தனக்கும் பயன்படாதென்றது.",
      "pope": "The seeming eye of face gives no expressive light,When not with duly meted kindness bright",
      "sourceFile": "0574.md",
      "sourceSha256": "57792f0abd13ecef3f4019ba5308fa37c1d791b0a722b15d7e411aef676f136f"
    },
    {
      "number": 575,
      "lines": [
        "கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்",
        "புண்ணென்று உணரப் படும்"
      ],
      "manakkudavar": "கண்ணிற்கு அழகு செய்யும் அணிகலமாவது கண்ணோட்டமுடைமை: அஃதில்லையாயின் அவை புண்ணென்றறியப்படும். இது கண்ணோட்டமில்லாத கண்ணிற்குப் பெயர் கூறிற்று.",
      "pope": "Benignity is eyes' adorning grace;Without it eyes are wounds disfiguring face",
      "sourceFile": "0575.md",
      "sourceSha256": "b56a87bef59133cdda1d18b205ff053407469cc939928a1b6f1cac882d3e47e4"
    },
    {
      "number": 576,
      "lines": [
        "மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ",
        "டியைந்துகண் ணோடா தவர்."
      ],
      "manakkudavar": "சுதைமண்ணோடு கூடச்செய்த மரப்பாவையோடு ஒப்பார்: ஒருவன் கண்ணோடு தங்கண்கலந்தபின்பு கண்ணோட்டத்தைச் செய்யாதவர். இது கண்ணோடாமை மரப்பாவைக்கு ஒக்கும் என்றது.",
      "pope": "Whose eyes 'neath brow infixed diffuse no rayOf grace; like tree in earth infixed are they",
      "sourceFile": "0576.md",
      "sourceSha256": "8ea2a5d01d39fb19b47ef63c9cab9bd8913bb6538cf4c25c2722a9d1a4625caf"
    },
    {
      "number": 577,
      "lines": [
        "கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்",
        "கண்ணோட்டம் இன்மையும் இல்."
      ],
      "manakkudavar": "கண்ணோட்டமில்லாதவர் கண்ணிலரே: கண்ணுடையார் கண்ணோட்டமிலராதலும் இல்லை.",
      "pope": "Eyeless are they whose eyes with no benignant lustre shine;Who've eyes can never lack the light of grace benign",
      "sourceFile": "0577.md",
      "sourceSha256": "264744fc3e6b623dfa0365b252c65c5fec3124be4aafb07c6bbd129b1f6f428e"
    },
    {
      "number": 578,
      "lines": [
        "கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு",
        "உரிமை உடைத்திவ் வுலகு."
      ],
      "manakkudavar": "தங்கருமத்திற்கு அழிவு வாராமற் கண்ணோட வல்லவர்க்கு இவ்வுலகம் உரிமையாதலை உடையது. இது நற்குணமாவது கண்ணோட்டமாயினும் அரசர்க்குப் பொருட்கேடு வாராமல் கண்ணோடவேண்டுமென்று கூறிற்று.",
      "pope": "Who can benignant smile, yet leave no work undone;By them as very own may all the earth be won",
      "sourceFile": "0578.md",
      "sourceSha256": "5a0c10cc7792280fc028b7cd4ed188112f5fbe5bf0bc31b2143ac609d4a0f97e"
    },
    {
      "number": 579,
      "lines": [
        "ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்",
        "பொறுத்தாற்றும் பண்பே தலை."
      ],
      "manakkudavar": "தம்மை யொறுத்துச் செய்யும் இயல்புடையார்மாட்டும் கண்ணோடிப் பொறுத்துச் செய்யும் குணமே தலையான குணம்.",
      "pope": "To smile on those that vex, with kindly face,Enduring long, is most excelling grace",
      "sourceFile": "0579.md",
      "sourceSha256": "9f4a7213c19d187a202a1c48d5f4feb041d771d8a87728e783695099cc25e494"
    },
    {
      "number": 580,
      "lines": [
        "பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க",
        "நாகரிகம் வேண்டு பவர்."
      ],
      "manakkudavar": "நஞ்சு பெயக்கண்டும் அதனை மாற்றாது உண்டு அமைவர், எல்லாரானும் விரும்பத் தக்க நாகரிகத்தை விரும்புவார். நாகரிகம்- அறம் பொருள் இன்பத்திற்கண் நற்குணங்கள் பலவும் உடைமை.",
      "pope": "They drink with smiling grace, though poison interfused they see,Who seek the praise of all-esteemed courtesy",
      "sourceFile": "0580.md",
      "sourceSha256": "5f18031278089cb9b9d5d174036fe82ebb3badd49eff165f2015890689205ef8"
    },
    {
      "number": 581,
      "lines": [
        "ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்",
        "தெற்றென்க மன்னவன் கண்."
      ],
      "manakkudavar": "ஒற்றினையும் முறையமைந்த நூலினையும் தெளியவறிந்த மன்னவனுக்கு இவையிரண்டையும் கண்களாகத் தெளிக. அரசர்க்குக் கல்வி இன்றிமையாததுபோல ஒற்றும் இன்றிமையாததென்றவாறு. இஃது ஒற்றுவேண்டுமென்றது.",
      "pope": "These two: the code renowned and spies,In these let king confide as eyes",
      "sourceFile": "0581.md",
      "sourceSha256": "e5ac6777ec573e67b0df48758d987014e90ef4d712b3795462c2b2b5051eb414"
    },
    {
      "number": 582,
      "lines": [
        "எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்",
        "வல்லறிதல் வேந்தன் தொழில்."
      ],
      "manakkudavar": "பகைவராகியும் நட்டாராகியும் மத்திமராகியும் உதாசீனராகியும் இருக்கின்ற அரசர்க்கும், அவர் சுற்றத்திற்கும், தம் சுற்றத்திற்கும், அறம் பொருள் இன்பங்களைப் பற்றி நிகழ்பவை எல்லாவற்றையும் நாடோறும் பிறர் அறிவதன் முன்னர்த் தான் ஒற்றால் விரைந்து அறிதல் வேந்தனது தொழில் என்றவாறு.",
      "pope": "Each day, of every subject every deed,'Tis duty of the king to learn with speed",
      "sourceFile": "0582.md",
      "sourceSha256": "a7e455b83ca5da6237d54ac636ea6da0abfaf56270993772498db64c8b197778"
    },
    {
      "number": 583,
      "lines": [
        "ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்",
        "கொற்றங் கொளக்கிடந்தது இல்."
      ],
      "manakkudavar": "ஒற்றராலே ஒற்றிப் பொருள் விசாரியாத மன்னவன் கொள்ளக் கிடந்ததொரு வெற்றி இல்லை. இஃது ஒற்றின்மையால் வருங் குற்றங்கூறிற்று.",
      "pope": "By spies who spies, not weighing things they bring,Nothing can victory give to that unwary king",
      "sourceFile": "0583.md",
      "sourceSha256": "a1dad77090a9f4a5bd472de7b61032a12b5d7f47ed53db08edac3cb085e23cb9"
    },
    {
      "number": 584,
      "lines": [
        "வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு",
        "அனைவரையும் ஆராய்வது ஒற்று."
      ],
      "manakkudavar": "தமக்குக் காரியமானவற்றைப் பார்த்துச் செய்வாரும் தமக்குச் சுற்றமாயிருப்பாரும் தம்மை வேண்டாதிருப்பாருமாகிய அனைவரையும் ஆராய்ந்தறிவான் ஒற்றனாவன். இவையிரண்டும் ஒற்றவேண்டுமிடங் கூறின.",
      "pope": "His officers, his friends, his enemies,All these who watch are trusty spies",
      "sourceFile": "0584.md",
      "sourceSha256": "bc0d1c7a5de2cc33351a6140480a8abc631356414755d31f6f8983e639eba370"
    },
    {
      "number": 585,
      "lines": [
        "கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்",
        "உகாஅமை வல்லதே ஒற்று."
      ],
      "manakkudavar": "வினாவப்படாத வடிவோடேகூடி கண்ணஞ்சுதலும் இன்றி, அறிந்தபொருளை எவ்விடத்தினும் சோர்வின்றியே அடக்கவல்லவன் ஒற்றனாவன்.",
      "pope": "Of unsuspected mien and all-unfearing eyes,Who let no secret out, are trusty spies",
      "sourceFile": "0585.md",
      "sourceSha256": "31a715a776fbc6f674568bb9619cd64cdd35f8617edff2be8ec2a7eef368a967"
    },
    {
      "number": 586,
      "lines": [
        "துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து",
        "என்செயினும் சோர்விலது ஒற்று."
      ],
      "manakkudavar": "தவஞ்செய்வார் வேடத்தராகி, நாட்டெல்லையைக் கடந்துபோய், அங்குள்ள செய்தியை ஆராய்ந்து அவ்விடத்து அகப்படாமல் அவ்விடத்திலுள்ளார் துன்பமாயினும் இன்பமாயினும் செய்து கேட்டாலும், தன் உள்ளக் கருத்தைச் சோரவிடாதவன் ஒற்றனாவன் என்றவாறு.",
      "pope": "As monk or devotee, through every hindrance making way,A spy, whate'er men do, must watchful mind display",
      "sourceFile": "0586.md",
      "sourceSha256": "52e0dafbc6397d25cdd7e8def01ee2fbc1f19621d1ab9fdc5eda53eee3760360"
    },
    {
      "number": 587,
      "lines": [
        "மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை",
        "ஐயப்பாடு இல்லதே ஒற்று."
      ],
      "manakkudavar": "பிறரால் மறைக்கப்பட்டவற்றைக் கேட்டறிய வல்லனாகி, அறிந்தவற்றைத் தீர அறியவல்லவனே ஒற்றனாவான். இவை மூன்றும் ஒற்றிலக்கணங்கூறின.",
      "pope": "A spy must search each hidden matter out,And full report must render, free from doubt",
      "sourceFile": "0587.md",
      "sourceSha256": "a6c685d77fbf75a0745e4dd1ad6fa86cee74934e01e8069b5f937ae2f1160b3d"
    },
    {
      "number": 588,
      "lines": [
        "ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்",
        "ஒற்றினால் ஒற்றிக் கொளல்."
      ],
      "manakkudavar": "ஒற்றர் மாற்றரசர்மாட்டும் பொருள் பெற்று மாறுபடச் சொல்லுதல் கூடுமாதலால், ஓரொற்று அறிந்து சொன்ன பொருளைப் பின்னையும் ஓரொற்றினாலே ஒற்றியறிந்து பின்பு அதனுண்மை கொள்க.",
      "pope": "Spying by spies, the things they tellTo test by other spies is well",
      "sourceFile": "0588.md",
      "sourceSha256": "a37d177a84b16af45122f56b09ad83b64e75e7295a6e6b503fdd3857a586e3ea"
    },
    {
      "number": 589,
      "lines": [
        "ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்",
        "சொற்றொக்க தேறப் படும்."
      ],
      "manakkudavar": "ஒற்றரை விடுங்கால் ஒருவரையொருவர் அறியாமல் விடுக: மூவர் சொல் உடன்கூடின் அது தெளியப்படுமாதலால். இவை இரண்டும் ஒற்றரை யாளுந்திறங் கூறின.",
      "pope": "One spy must not another see: contrive it so;And things by three confirmed as truth you know",
      "sourceFile": "0589.md",
      "sourceSha256": "9b72c4b8cb5b027fee858e5cacbbf788b23abbe4e626fe598104e4b533dfb63e"
    },
    {
      "number": 590,
      "lines": [
        "சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்",
        "புறப்படுத்தான் ஆகும் மறை."
      ],
      "manakkudavar": "ஒற்றர்க்குச் சிறப்புச் செய்யுங்கால் பிறரறியாமற் செய்க: பிறரறியச் செய்வனாயின் அவர் ஒற்றிவந்த பொருளைப் புறத்துவிட்டானாம். இஃது ஒற்றர்க்குச் சிறப்புச் செய்யுங்கால் பிறரறியாமற் செய்ய வேண்டுமென்றது.",
      "pope": "Reward not trusty spy in others' sight,Or all the mystery will come to light",
      "sourceFile": "0590.md",
      "sourceSha256": "ab54c5d39a8b2acbeddacee9a45cf94201422387ac5c60e15f32714e46cba355"
    },
    {
      "number": 591,
      "lines": [
        "உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்",
        "உடையது உடையரோ மற்று."
      ],
      "manakkudavar": "ஒற்றரையுடைமை யென்று சொல்லப்படுவது ஊக்கமுடைமை: அஃதிலாதார் மற்றுடையதாகிய பொருளெல்லாம் உடையராகார்.",
      "pope": "'Tis energy gives men o'er that they own a true control;They nothing own who own not energy of soul",
      "sourceFile": "0591.md",
      "sourceSha256": "052197add43e9eb433d5e77802f9e0f3a08905ce574eab99dd7c27ccee8a5b85"
    },
    {
      "number": 592,
      "lines": [
        "உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை",
        "நில்லாது நீங்கி விடும்."
      ],
      "manakkudavar": "உடைமையாவது ஊக்கமுடைமை; பொருளுடைமை நிலை நில்லாது நீங்கும். பொருள் உடையார்க்கு எல்லா முண்டாம் என்பார்க்கு இது கூறப்பட்டது.",
      "pope": "The wealth of mind man owns a real worth imparts,Material wealth man owns endures not, utterly departs",
      "sourceFile": "0592.md",
      "sourceSha256": "ca95d722873ba85841cb2ed5f45e0b7946d57fa76a5e37ca81bef214fb7f8065"
    },
    {
      "number": 593,
      "lines": [
        "ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்",
        "ஒருவந்தம் கைத்துடை யார்."
      ],
      "manakkudavar": "செல்வத்தை இழந்தோமென்று அலமரார்; உள்ள மிகுதியை ஒரு தலையாகத் தம்மாட்டுடையார். இது பொருட்கேடுவரினுந் தளராரென்றது.",
      "pope": "'Lost is our wealth,' they utter not this cry distressed,The men of firm concentred energy of soul possessed",
      "sourceFile": "0593.md",
      "sourceSha256": "919805d815f1a12b234c92a2775c410bd01383007e48b75e6642e8b1d81e6d96"
    },
    {
      "number": 594,
      "lines": [
        "ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா",
        "ஊக்க முடையா னுழை."
      ],
      "manakkudavar": "அசைவில்லாத ஊக்கமுடையான்மாட்டு ஆக்கம், தானே வழி கேட்டுச் செல்லும். நினைத்ததனாலே ஊக்கமுண்டாமோ- என்றார்க்கு இது கூறப்பட்டது.",
      "pope": "The man of energy of soul inflexible,Good fortune seeks him out and comes a friend to dwell",
      "sourceFile": "0594.md",
      "sourceSha256": "f5b93d638182d94baea24f8b2c85e206cf7d5ea50d9fe2d9e73d2ddafb8b3683"
    },
    {
      "number": 595,
      "lines": [
        "வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்",
        "உள்ளத் தனையது உயர்வு."
      ],
      "manakkudavar": "புகுந்த நீரின் அளவினது பூக்களது வளர்ச்சி; அதுபோல மாந்தரது உள்ளத்தின் அளவினது ஊக்கம். இஃது ஊக்கம் இதனானே உண்டாமென்றது.",
      "pope": "With rising flood the rising lotus flower its stem unwinds;The dignity of men is measured by their minds",
      "sourceFile": "0595.md",
      "sourceSha256": "9c789af67f8b9c5cd0d99e09926983b347a1f513d152fcc2a1719b195b5bab47"
    },
    {
      "number": 596,
      "lines": [
        "உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது",
        "தள்ளினுந் தள்ளாமை நீர்த்து."
      ],
      "manakkudavar": "நினைப்பனவெல்லாம் உயர்வையே நினைக்க: அந்நினைவு முடியாமல் தப்பினும் முயன்று பெற்றதனோடு ஒக்கும். இது தப்பினும் பழிக்கப்படா தென்றது.",
      "pope": "Whate'er you ponder, let your aim be loftly still,Fate cannot hinder always, thwart you as it will",
      "sourceFile": "0596.md",
      "sourceSha256": "9499bb6002f992068d29ba6cef9246df7d043850639476e6ef6ffd98000f1dc4"
    },
    {
      "number": 597,
      "lines": [
        "சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்",
        "பட்டுப்பா டூன்றுங் களிறு."
      ],
      "manakkudavar": "தளர்ச்சி வந்தவிடத்துத் தளரார் உள்ள மிகுதியுடையார்: மெய் புதைந்த அம்பினுட்பட்டும் பாடூன்றும் களிறுபோல. இஃது உயிர்க்கேடு வரினுந் தளரார் என்றது.",
      "pope": "The men of lofty mind quail not in ruin's fateful hour,The elephant retains his dignity mind arrows' deadly shower",
      "sourceFile": "0597.md",
      "sourceSha256": "9a12785ecbc1e632aa7c8996c9f7d4454890521b7620cc582700211a402564a0"
    },
    {
      "number": 598,
      "lines": [
        "உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து",
        "வள்ளியம் என்னுஞ் செருக்கு."
      ],
      "manakkudavar": "உள்ளமிகுதியில்லாதார் உலகின்கண் வண்மையுடைமை யென்னுங் களிப்பினைப் பெறார். இஃது உள்ளமிகுதி யில்லாதார்க்குப் பொருள்வரவு இல்லையாம் ஆதலான் அவர் பிறர்க்கு ஈயமாட்டாரென்றது.",
      "pope": "The soulless man can never gainTh' ennobling sense of power with men",
      "sourceFile": "0598.md",
      "sourceSha256": "3c25d01a9d0eda99346aa038bcf38c2b6869350a2d198b65e71331afca7457c4"
    },
    {
      "number": 599,
      "lines": [
        "பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை",
        "஦வ்ருஉம் புலிதாக் குறின்."
      ],
      "manakkudavar": "யானை, பெரிய உடம்பினதாய்க் கூரியகோட்டையும் உடைத்தாயினும் புலி பொருமாயின் அஞ்சும். இஃது உள்ளமுடைமை யில்லாதார் பெரியராயினும் கெடுவார் என்றது.",
      "pope": "Huge bulk of elephant with pointed tusk all armed,When tiger threatens shrinks away alarmed",
      "sourceFile": "0599.md",
      "sourceSha256": "371833ed6a90a009f4a9e7782cd9440724ecbb298d9b1fe4074dceab396e6d2c"
    },
    {
      "number": 600,
      "lines": [
        "உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்",
        "மரம்மக்க ளாதலே வேறு."
      ],
      "manakkudavar": "ஒருவனுக்கு அறிவாவாது உள்ளமிகுதியுடைமை: அஃதில்லார் மரமென்று சொல்லப்படுவர்: மக்கள் வடிவாதலே மரத்தின் வேறாகத் தோன்றுகிறது. இஃது அறிவும் இதுதானே யென்றது.",
      "pope": "Firmness of soul in man is real excellance;Others are trees, their human form a mere pretence",
      "sourceFile": "0600.md",
      "sourceSha256": "dad4afa133f67bb0cbe9e1cab9c9c74a1d817f1b709ad1e350645fdf1976a2ec"
    },
    {
      "number": 601,
      "lines": [
        "குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்",
        "மாசூர மாய்ந்து கெடும்."
      ],
      "manakkudavar": "குடியென்று சொல்லப்படுகின்ற குறைவில்லாத ஒளி, மடியென்று சொல்லப்படுகின்ற மாசு மறைக்கத் தோன்றாது கெடும். முன்பே தோற்றமுடைத்தாகிய குடியுங் கெடுமென்றவாறு.",
      "pope": "Of household dignity the lustre beaming bright,Flickers and dies when sluggish foulness dims its light",
      "sourceFile": "0601.md",
      "sourceSha256": "87bc615adf55e8eaddf1b9df0b2b0c4dda3d31f7a3c2bc150b650e08fc2f899e"
    },
    {
      "number": 602,
      "lines": [
        "மடியை மடியா ஒழுகல் குடியைக்",
        "குடியாக வேண்டு பவர்."
      ],
      "manakkudavar": "மடிசெய்தலை மடித்து ஒழுகுக: தங்குடியை உயர் குடியாக வேண்டுபவர். இது சோம்பாமை வேண்டுமென்றது.",
      "pope": "Let indolence, the death of effort, die,If you'd uphold your household's dignity",
      "sourceFile": "0602.md",
      "sourceSha256": "f69903d6daba419ba6e24fe95121c1df4c50cef03fc9f50f2d934e43949ff051"
    },
    {
      "number": 603,
      "lines": [
        "மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த",
        "குடிமடியும் தன்னினும் முந்து."
      ],
      "manakkudavar": "நெஞ்சத்து மடியினாலே வினையின்கண் மடித்தலைச் செய்து ஒழுகாநின்ற அறிவிலி பிறந்தகுடி தனக்கு முன்பே கெடும். சோம்புடையார்க்கு உளதாகுங் குற்றம் என்னையென்றார்க்கு இது கூறப்பட்டது.",
      "pope": "Who fosters indolence within his breast, the silly elf!The house from which he springs shall perish ere himself",
      "sourceFile": "0603.md",
      "sourceSha256": "58d781a05b3aaa7a4aa58cec8b8000a1e7b8b8083d17a0bfd440078735ada4c5"
    },
    {
      "number": 604,
      "lines": [
        "குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து",
        "மாண்ட உஞற்றி லவர்க்கு."
      ],
      "manakkudavar": "குடியுங் கெட்டுக் குற்றமும் மிகும்; சோம்பின்கண்ணே பொருந்தி மாட்சிமைப்பட்ட முயற்சி யில்லாதார்க்கு. இது பிறாரால் இகழப்படுவ ரென்றது.",
      "pope": "His family decays, and faults unheeded thrive,Who, sunk in sloth, for noble objects doth not strive",
      "sourceFile": "0604.md",
      "sourceSha256": "b9c9cf8f394fbfddc620ca5a154ae9916ee2ecce3ea7b3070b010bc77ad24ba8"
    },
    {
      "number": 605,
      "lines": [
        "நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்",
        "கெடுநீரார் காமக் கலன்."
      ],
      "manakkudavar": "விரைந்து செய்யும் வினையை நீட்டித்தலும், செய்ய நினைந்ததனை மறத்தலும், அதனைச் செய்தற்குச் சோம்புதலும், அதனைச் செய்யாது உறங்குதலுமாகிய இவை நான்கும் கெடுந்தன்மையுடையார் காதலித்தேறும் மரக்கலம். காமக்கல னென்றது தன்னைக் காதலித்தேறினாரை நடுக்கடலுள் தள்ளும் மரக்கலம் போலவென்றது. இத்துணையும் மடிமையினால் வருங் குற்றங் கூறினார்.",
      "pope": "Delay, oblivion, sloth, and sleep: these fourAre pleasure-boat to bear the doomed to ruin's shore",
      "sourceFile": "0605.md",
      "sourceSha256": "3489956c9460759b18dd01c29b67be580467d25f902c6f6d41e0c1475c38b616"
    },
    {
      "number": 606,
      "lines": [
        "படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்",
        "மாண்பயன் எய்தல் அரிது."
      ],
      "manakkudavar": "பூமியையுடைய வேந்தர் பலபொருளினாலும் அமைந்த விடத்தும் மடியுடையாராயின், மாட்சிமைப்பட்ட பொருளைப் பெறுதல் இல்லை. இது செல்வமுண்டாயினும் கெடுவரென்றது.",
      "pope": "Though lords of earth unearned possessions gain,The slothful ones no yield of good obtain",
      "sourceFile": "0606.md",
      "sourceSha256": "9ae93dbaa4112a8b082bb1196e7295aa299e67ecb8a5c7f1ceec648fd27e8898"
    },
    {
      "number": 607,
      "lines": [
        "இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து",
        "மாண்ட உஞற்றி லவர்."
      ],
      "manakkudavar": "கழறுதலைச் செய்து பிறர் இகழ்ந்து சொல்லுஞ் சொல்லைக் கேட்பர், மடியைச் செய்து மாட்சிமைப்பட்ட முயற்சி யில்லாதார்.",
      "pope": "Who hug their sloth, nor noble works attempt,Shall bear reproofs and words of just contempt",
      "sourceFile": "0607.md",
      "sourceSha256": "fd74d6b76f1b3494c310fa3aafca9db0e46897d805922c9a131337095e9e2213"
    },
    {
      "number": 608,
      "lines": [
        "மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு",
        "அடிமை புகுத்தி விடும்."
      ],
      "manakkudavar": "குடிப்பிறந்தார்மாட்டே மடிமை தங்குமாயின் அது தன்பகைவர்க்கு அடிமையாக்கிவிடும். இது கீழ்ப்படுத்தலேயன்றி அடிமையும் ஆக்குமென்றது.",
      "pope": "If sloth a dwelling find mid noble family,Bondsmen to them that hate them shall they be",
      "sourceFile": "0608.md",
      "sourceSha256": "ffc6aea104bcf80f2783b3460a0b207c30c6cd85d767b2ba21543e682453cc8f"
    },
    {
      "number": 609,
      "lines": [
        "குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்",
        "மடியாண்மை மாற்றக் கெடும்."
      ],
      "manakkudavar": "குடியை யாளுதலுடைமையின்கண் வந்த குற்றமானது ஒருவன் சோம்புடைமையைக் கெடுக்கக் கெடும். குற்றம்- குடிக்குவேண்டுவன செய்யாமையால் வருங்குற்றம்.",
      "pope": "Who changes slothful habits savesHimself from all that household rule depraves",
      "sourceFile": "0609.md",
      "sourceSha256": "a46a31d7aa39b9033b41c913df044d38433ccee2ae0d3111e0eaeabe7e5d9a23"
    },
    {
      "number": 610,
      "lines": [
        "மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்",
        "தாஅய தெல்லாம் ஒருங்கு."
      ],
      "manakkudavar": "மடியில்லாத மன்னவன் எய்துவன், அடியினால் அளந்தானால் கடக்கப்பட்ட வுலகமெல்லாம் ஒருங்கே. இது மடியின்மையால் வரும் பயன் கூறிற்று.",
      "pope": "The king whose life from sluggishness is rid,Shall rule o'er all by foot of mighty god bestrid",
      "sourceFile": "0610.md",
      "sourceSha256": "d9e3a35e15e9a6af8aad117176b9706f3f7b0e0f616a433a836a1844c9f945a8"
    },
    {
      "number": 611,
      "lines": [
        "அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்",
        "பெருமை முயற்சி தரும்."
      ],
      "manakkudavar": "ஒரு வினையைச் செய்தல் அருமையுடைத்தென்று முயலாமையைத் தவிர்தல் வேண்டும்: முயற்சி தனக்குப் பெருமையைத் தருமாதலால். இது வினைசெய்து முடித்தல் அரிதென்று தவிர்தலாகாதென்றது.",
      "pope": "Say not, 'Tis hard', in weak, desponding hour,For strenuous effort gives prevailing power",
      "sourceFile": "0611.md",
      "sourceSha256": "41c0b5c88f7a535282cd7032b202cc7d55e6236a1e483c905bc36eaef873460b"
    },
    {
      "number": 612,
      "lines": [
        "வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை",
        "தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு."
      ],
      "manakkudavar": "வினைசெய்யுங் காலத்து வினைகெடுதலைத் தவிர்க: வினைக்குறையை முடித்தாரினின்றும் உலகம் விடப்பட்டதன்று. இது தொடங்கின வினையைக் குறைபட விடலாகாதென்றது.",
      "pope": "In action be thou, 'ware of act's defeat;The world leaves those who work leave incomplete",
      "sourceFile": "0612.md",
      "sourceSha256": "1f21cd8caf9a823debdf36c039aec0a524c78e087fa22fc6d469d3f1e054f128"
    },
    {
      "number": 613,
      "lines": [
        "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே",
        "வேளாண்மை என்னுஞ் செருக்கு."
      ],
      "manakkudavar": "முயற்சியாகிய நன்மையின்கண்ணே கிடந்தது: பிறர்க்கு உபகரித்தலாகிய பெருமிதம். இஃது அறஞ் செய்தலும் இதனாலே யாகுமென்றது.",
      "pope": "In strenuous effort doth resideThe power of helping others: noble pride",
      "sourceFile": "0613.md",
      "sourceSha256": "466b575e0aab2786427290a6bb26493854658e5d532a87e77616377933453338"
    },
    {
      "number": 614,
      "lines": [
        "தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை",
        "வாளாண்மை போலக் கெடும்."
      ],
      "manakkudavar": "முயற்சியில்லாதான் பிறர்க்கு உபகரித்தல், படைகண்டாலஞ்சுமவன் கைவாள் பிடித்தாற்போலக் கெடும். இஃது அறம் செய்யமாட்டானென்றது.",
      "pope": "Beneficent intent in men by whom no strenuous work is wrought,Like battle-axe in sexless being's hand availeth nought",
      "sourceFile": "0614.md",
      "sourceSha256": "ad39f9b1a7c3e24a8247c12f488d9a87b3094d84ae4ec44bc58376a26ab0b8cf"
    },
    {
      "number": 615,
      "lines": [
        "இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்",
        "துன்பம் துடைத்தூன்றும் தூண்."
      ],
      "manakkudavar": "தன்னுடம்பிற்கு இன்பத்தை விரும்பாது வினை செய்தலை விரும்புமவன் தன் கேளிர்க்கு உற்ற துன்பத்தை நீக்கி அவரைத் தளராமல் தாங்குவதொரு தூணாம். ஆதலால் வருத்தம் பாராது முயலவேண்டு மென்பது.",
      "pope": "Whose heart delighteth not in pleasure, but in action finds delight,He wipes away his kinsmen's grief and stands the pillar of their might",
      "sourceFile": "0615.md",
      "sourceSha256": "51bda53feff1aae4adff217c0b410fc9e8a9c164ec2d90582203759ca252edec"
    },
    {
      "number": 616,
      "lines": [
        "முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை",
        "இன்மை புகுத்தி விடும்."
      ],
      "manakkudavar": "முயற்சி செல்வத்தை உண்டாக்கும்: முயலாமை வறுமையை உண்டாக்கும். இது செல்வமும் நல்குரவும் இவற்றாலே வருமென்றது.",
      "pope": "Effort brings fortune's sure increase,Its absence brings to nothingness",
      "sourceFile": "0616.md",
      "sourceSha256": "2357ae1174aac7a9f31346f57a313f7c77d8be3c708e199ef5eb14d31d49ccb2"
    },
    {
      "number": 617,
      "lines": [
        "மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்",
        "தாளுளான் தாமரையி னாள்."
      ],
      "manakkudavar": "வினை செய்யுங்கால் அதனைச் செய்யாது சோம்பியிருப்பானது சோம்பலின்கண்ணே மூதேவி உறைவள்; அதனைச் சோம்பலின்றி முயலுபவன் முயற்சியின்கண்ணே திருமகள் உறைவளென்று சொல்லுவர். இது வினையை மடியின்றிச் செய்யவேண்டுமென்பது கூறிற்று.",
      "pope": "In sluggishness is seen misfortune's lurid form, the wise declare;Where man unslothful toils, she of the lotus flower is there",
      "sourceFile": "0617.md",
      "sourceSha256": "c69dac227613f2260f5c589c674d00f88f4af5e8b3ac6c9a21bd22af77828aac"
    },
    {
      "number": 618,
      "lines": [
        "பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து",
        "ஆள்வினை இன்மை பழி."
      ],
      "manakkudavar": "யார்க்கும் புண்ணியமின்மை குற்றமாகாது. அறியத் தகுவன அறிந்து முயற்சியில்லாமையே குற்றமாவது. அறிவு- காரிய அறிவு. புண்ணியமில்லாதார் முயன்றால் வருவதுண்டோ என்றார்க்கு, இது கூறப்பட்டது.",
      "pope": "'Tis no reproach unpropitious fate should ban;But not to do man's work is foul disgrace to man",
      "sourceFile": "0618.md",
      "sourceSha256": "3976c453c93d1d71e92333974f116ff3e0f28fdff9c8d0aa51b2bb26ba7851a4"
    },
    {
      "number": 619,
      "lines": [
        "தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்",
        "மெய்வருத்தக் கூலி தரும்."
      ],
      "manakkudavar": "புண்ணியம் இன்மையால் ஆக்கம் இல்லையாயினும் ஒருவினையின் கண்ணே முயல்வானாயின் முயற்சி தன்னுடம்பினால் வருந்திய வருத்தத்தின் அளவு பயன் கொடுக்கும். இது புண்ணியமில்லையாயினும் பயன் கொடுக்கும் என்றது.",
      "pope": "Though fate-divine should make your labour vain;Effort its labour's sure reward will gain",
      "sourceFile": "0619.md",
      "sourceSha256": "8e68d34eeb7bbfa2b649307d80afc5f365b544e83486da6b8c8c1f0be715e6ce"
    },
    {
      "number": 620,
      "lines": [
        "ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்",
        "தாழாது உஞற்று பவர்."
      ],
      "manakkudavar": "ஒரு வினையை மனத்திற் றளர்வு இன்றி நீட்டியாமல் முயலுமவர், பயன்படாமல் விலக்குகின்ற தீய வினையையும் முதுகு புறங்காண்பர். இஃது ஊழ்தன்னையும் வெல்வ ரென்றது.",
      "pope": "Who strive with undismayed, unfaltering mind,At length shall leave opposing fate behind",
      "sourceFile": "0620.md",
      "sourceSha256": "bd0dac3d6584c5f888ec72c93dec92e60f8727ea7c9d958150f91a20a7932707"
    },
    {
      "number": 621,
      "lines": [
        "இடுக்கண் வருங்கால் நகுக அதனை",
        "அடுத்தூர்வது அஃதொப்ப தில்."
      ],
      "manakkudavar": "தனக்குத் துன்பம் வந்த காலத்தும் நகுக: அத்துன்பத்தை மேன்மேலும் அடர்க்க வல்லது அந்நகுதல் போல்வது பிறிதில்லை. இஃது இடுக்கணுக்கு அழியாமை வேண்டுமென்றது.",
      "pope": "Smile, with patient, hopeful heart, in troublous hour;Meet and so vanquish grief; nothing hath equal power",
      "sourceFile": "0621.md",
      "sourceSha256": "fbabded8f2213ed2917265decefb19b89080a5404a12464aff504ccbe94208bc"
    },
    {
      "number": 622,
      "lines": [
        "வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்",
        "உள்ளத்தின் உள்ளக் கெடும்."
      ],
      "manakkudavar": "வெள்ளம்போன்ற துன்பம், அறிவுடையவன் நெஞ்சினாலே வினைப்பயனென்று நினைக்கக் கெடும். இது பலவா யொருங்கு வரினும், அறிவுடையா னுற்ற இடுக்கண் கெடுமென்றது.",
      "pope": "Though sorrow, like a flood, comes rolling on,When wise men's mind regards it,- it is gone",
      "sourceFile": "0622.md",
      "sourceSha256": "fe2f7e44cf8a593e268a85a53257a742bb22bcdf13d73bb3d6d17f825f293bfe"
    },
    {
      "number": 623,
      "lines": [
        "இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு",
        "இடும்பை படாஅ தவர்."
      ],
      "manakkudavar": "துன்பத்திற்குத் துன்பத்தைச் செய்வார், அத் துன்பத்திற்குத் துன்ப முறாதவர். இது பொறுக்க வேண்டுமென்றது. இவை மூன்றும் பொதுவாகக் கூறப்பட்டன.",
      "pope": "Who griefs confront with meek, ungrieving heart,From them griefs, put to grief, depart",
      "sourceFile": "0623.md",
      "sourceSha256": "63f2a8139f7205301861cf287a2eb9a9a1ceff6f128063e08ac12ab86a25c8e2"
    },
    {
      "number": 624,
      "lines": [
        "மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற",
        "இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து."
      ],
      "manakkudavar": "இடுக்கண் வந்து உற்றவிடத்தெல்லாம் பகடுபோலத் தளர்வின்றிச் செலுத்த வல்லவனை உற்ற துன்பம் இடர்ப்படுதலை யுடைத்து. இது தளர்வில்லாதவன் உற்ற துன்பம் கெடுமென்றது.",
      "pope": "Like bullock struggle on through each obstructed way;From such an one will troubles, troubled, roll away",
      "sourceFile": "0624.md",
      "sourceSha256": "c942a538015d677c18e52ea9ddd24184dc01ea205e02ca4cbc0adae242942152"
    },
    {
      "number": 625,
      "lines": [
        "அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற",
        "இடுக்கண் இடுக்கட் படும்."
      ],
      "manakkudavar": "மேன்மேலே துன்பம் வந்தனவாயினும், மனனழிவில்லாதவன் உற்ற இடுக்கண், தான் இடுக்கண்படும். இது மனனழிவில்லாதவன் உற்றதுன்பம் மேன்மேல் வரினுங் கெடுமென்றது.",
      "pope": "When griefs press on, but fail to crush the patient heart,Then griefs defeated, put to grief, depart",
      "sourceFile": "0625.md",
      "sourceSha256": "bf30795e6398d42151a967ab2cc518d2a921ae6cde5b3e5fab52227a9427232f"
    },
    {
      "number": 626,
      "lines": [
        "அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று",
        "ஓம்புதல் தேற்றா தவர்."
      ],
      "manakkudavar": "பொருளற்றே மென்று இரங்கித் துன்ப முறார், அதனைப் பெற்றோமென்று போற்றி வைத்தலை நன்றென்று தெளியாதவர். இது பொருட்கேட்டினால் வருந் துன்பத்திற்கு அழியாதாரைக் கூறிற்று.",
      "pope": "Who boasted not of wealth, nor gave it all their heart,Will not bemoan the loss, when prosperous days depart",
      "sourceFile": "0626.md",
      "sourceSha256": "dd05dabc444ad3d1623ab5583a7197ae560a8261116e45a8bb7b40130d461624"
    },
    {
      "number": 627,
      "lines": [
        "இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்",
        "கையாறாக் கொள்ளாதாம் மேல்."
      ],
      "manakkudavar": "உடம்பு இடும்பைக்கு இலக்கம் என்று கருதி, தமக்கு உற்ற துன்பத்தைத் துன்பமாகக் கொள்ளார் மேலாயினர். இது மேல் நன்மையாற் றவஞ் செய்யுங்கால் வருந் துன்பத்திற்கு அழியாதாரைக் கூறிற்று.",
      "pope": "'Man's frame is sorrow's target', the noble mind reflects,Nor meets with troubled mind the sorrows it expects",
      "sourceFile": "0627.md",
      "sourceSha256": "e93c731d5c8d310ceadf35513a92269b9a37f59962609b132e6836bc34105adc"
    },
    {
      "number": 628,
      "lines": [
        "இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்",
        "துன்பம் உறுதல் இலன்."
      ],
      "manakkudavar": "இன்ப முறுதலை விரும்பாது இடும்பை யுறுதலை இயல்பாகக் கொள்ளுமவன் துன்ப முறுதல் இல்லை. இஃது இடுக்கணை யியல்பாகக் கொள்ளல்வேண்டு மென்றது.",
      "pope": "He seeks not joy, to sorrow man is born, he knows;Such man will walk unharmed by touch of human woes",
      "sourceFile": "0628.md",
      "sourceSha256": "bdcd3b22f562fc6347f4e095597ff4085cd0c6c2362c697ebfcba3a0ff3aa14f"
    },
    {
      "number": 629,
      "lines": [
        "இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்",
        "துன்பம் உறுதல் இலன்."
      ],
      "manakkudavar": "இன்பம் நுகரு மிடத்து அதனை விரும்பாதவன், அதனால் வருந்துன்பம் நுகருமிடத்து வருத்த முறுதலிலன். இன்பம் நுகரு மிடத்து அதனை விரும்பாமையாவது அவ்விடத்துத் தான் அழிந்து நில்லாமை. இது காமத்தால் வருந்துன்பத்திறகு அழியாதாரைக் கூறிற்று.",
      "pope": "Mid joys he yields not heart to joys' controlMid sorrows, sorrow cannot touch his soul",
      "sourceFile": "0629.md",
      "sourceSha256": "d01bccb0f554673e33e055b94b9375859d7b89a0cbdd7878fcb8e2f0b926d0a1"
    },
    {
      "number": 630,
      "lines": [
        "இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்",
        "ஒன்னார் விழையுஞ் சிறப்பு."
      ],
      "manakkudavar": "இன்னாமையை இன்பம்போலக் கொள்வானாயின் அது தன் பகைவரும் விரும்புவதொரு சிறப்பாம். மேற்கூறியவாற்றால் செய்தலே யன்றித் துன்பத்தையும் இன்பமாகக் கொள்வனாயின் அவனைப் பகைவரும் மதிப்பரென்றவாறு.",
      "pope": "Who pain as pleasure takes, he shall acquireThe bliss to which his foes in vain aspire",
      "sourceFile": "0630.md",
      "sourceSha256": "004251254ec10c53c2ba80e708f668906a6d217a27cec47a0af8f2b25a3e141d"
    },
    {
      "number": 631,
      "lines": [
        "கருவியும் காலமும் செய்கையும் செய்யும்",
        "அருவினையும் மாண்டது அமைச்சு."
      ],
      "manakkudavar": "செய்தற்கு அரியவினையும், அதற்காங்கருவியும், அதற்காங்காலமும், அதனையிடையூறு படாமற் செய்து முடித்தலுமாகிய இந்நான்கும் மாட்சிமைப்பட்டவன் அமைச்சனாவான். செய்தற்கு அரியவினையாவது மறுமண்டலங்கோடல்; கருவியாவது யானை- குதிரை முதலிய படை: காலமாவது நீரும் நிழலுமுள்ள காலம்; செய்தலாவது மடியின்றிச் செய்தல்.",
      "pope": "A minister is he who grasps, with wisdom large,Means, time, work's mode, and functions rare he must discharge",
      "sourceFile": "0631.md",
      "sourceSha256": "85bdf088cea1b69e1fe31e65a077c35b9d4881733654735d1d3e609ee02108c7"
    },
    {
      "number": 632,
      "lines": [
        "வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு",
        "ஐந்துடன் மாண்டது அமைச்சு."
      ],
      "manakkudavar": "அஞ்சாமையும், குடிகாத்தலும், இந்திரியங்களைக் காத்தலும், நூல்முகத்தானறிதலும், முயற்சியும் என்னும் ஐந்தும் கூட மாட்சிமைப்பட்டவன் அமைச்சனாவான். இவை அமைச்சனாவதன் முன்னே வேண்டுமாதலின், இது முற்கூறப்பட்டது.",
      "pope": "A minister must greatness own of guardian power, determined mind,Learn'd wisdom, manly effort with the former five combined",
      "sourceFile": "0632.md",
      "sourceSha256": "f1680a1493557ca7934cd717d24882429eaaa243dc8f67aac78304285355d0f8"
    },
    {
      "number": 633,
      "lines": [
        "பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்",
        "பொருத்தலும் வல்ல தமைச்சு."
      ],
      "manakkudavar": "மாற்றரசரிடத்து உள்ளாரையும் நட்பாகிய அரசரையும் அவரிடத் தினின்று பிரித்தலும், அவ்வாறு பிரிக்கப்பட்டாரை விரும்பித் தம்மிடத்துக் கொளலும், தம்மிடத்து நின்று பிரிந்தாரைக் கூட்டிக் கொளலும் வல்லவன் அமைச்சனாவான்.",
      "pope": "A minister is he whose power can foes divide,Attach more firmly friends, of severed ones can heal the breaches wide",
      "sourceFile": "0633.md",
      "sourceSha256": "a256ed54f03e9765920663562436022fc8ac71d326becb46c23cc02ddfaed3c4"
    },
    {
      "number": 634,
      "lines": [
        "தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்",
        "சொல்லலும் வல்லது அமைச்சு."
      ],
      "manakkudavar": "ஒருவினையை நன்றாக ஆராய்தலும், அதனைச் செய்ய நினைத்தால் முடியுமாறெண்ணிச் செய்தலும், ஐயமாகிய வினையைத் துணிந்து சொல்லுதலும் வல்லவன் அமைச்சனாவான்.",
      "pope": "A minister has power to see the methods help afford,To ponder long, then utter calm conclusive word",
      "sourceFile": "0634.md",
      "sourceSha256": "0e4c3cbbccd850b36897af5476a0022c8347691ae4ce0763109612326ba0c52d"
    },
    {
      "number": 635,
      "lines": [
        "அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்",
        "திறனறிந்தான் தேர்ச்சித் துணை."
      ],
      "manakkudavar": "அறத்தினையும் அறிந்து, நிரம்பியமைந்த சொல்லினையும் உடையனாய் எல்லாக்காலத்தினும் செய்யுந் திறன்களையும் அறியவல்லவன் அரசற்குச் சூழ்ச்சித் துணையாய அமைச்சனாவான்.",
      "pope": "The man who virtue knows, has use of wise and pleasant wordsWith plans for every season apt, in counsel aid affords",
      "sourceFile": "0635.md",
      "sourceSha256": "b7042ff579cb628f211d53c1e34df90c670cfc8c9211eb2791d415375f7e955b"
    },
    {
      "number": 636,
      "lines": [
        "மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்",
        "யாவுள முன்நிற் பவை."
      ],
      "manakkudavar": "மேற்கூறிய நூற்கல்வியோடு கூட நுண்ணியதாகிய மதியினையும் உடையார்க்கு அதனினும் நுண்ணியவாய் மாற்றாராலெண்ணப்பட்டு எதிர் நிற்கும் வினைகள் யாவுள? இது மேற்கூறியவற்றோடு மதியும் வேண்டு மென்றது.",
      "pope": "When native subtilty combines with sound scholastic lore,'Tis subtilty surpassing all, which nothing stands before",
      "sourceFile": "0636.md",
      "sourceSha256": "82049b1893a6eb3ab6f822f106fda7cdf121a6000ebf46f4e6fd4f204ecc79ab"
    },
    {
      "number": 637,
      "lines": [
        "செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து",
        "இயற்கை அறிந்து செயல்."
      ],
      "manakkudavar": "செயத்தகுவன அறிந்த விடத்தும் அது செய்யுங்கால் உலக நடை அறிந்து செய்க. உலகநடை அறிதலாவது அரசர் சீலமும் பரிவாரத்திலுள்ளார் நிலைமையும் அறிதல். இவை யறியாது செய்யிற் குற்றமாமென்றவாறு.",
      "pope": "Though knowing all that books can teach, 'tis truest tactTo follow common sense of men in act",
      "sourceFile": "0637.md",
      "sourceSha256": "0593959b5c30aef93d562d5a0a382e0998c4596523d89d8c3143842d469fd7e9"
    },
    {
      "number": 638,
      "lines": [
        "அறிகொன்று அறியான் எனினும் உறுதி",
        "உழையிருந்தான் கூறல் கடன்."
      ],
      "manakkudavar": "அரசன், அமைச்சன் கூறிய பொருளை யறிக: அவன் ஒன்றறியானாயினும் அவனுக்கு உறுதியாயினவற்றை அருகிருந்த அமைச்சன் சொல்லுதல் கடன். இஃது அரசன் கேளா னென்று சொல்லா தொழிதலாகாதென்று கூறிற்று.",
      "pope": "'Tis duty of the man in place aloud to sayThe very truth, though unwise king may cast his words away",
      "sourceFile": "0638.md",
      "sourceSha256": "3541e6458ef9c5e29947bfab70756539edcf350be58db1959579b2def55bfb4a"
    },
    {
      "number": 639,
      "lines": [
        "பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்",
        "எழுபது கோடி உறும்."
      ],
      "manakkudavar": "குற்றப்பட எண்ணும் அமைச்சரில் எழுபது கோடி மடங்கு நல்லர், உட்பகையாய்த் தன் னருகிலிருப்பவர். இவை யிரண்டும் மந்திரிகளுள் விடப்படுவாரது இலக்கணங் கூறின.",
      "pope": "A minister who by king's side plots evil thingsWorse woes than countless foemen brings",
      "sourceFile": "0639.md",
      "sourceSha256": "92ead789aae90d967ffa6729995842a492aa2ae87a736af8b75f059c42fb3d47"
    },
    {
      "number": 640,
      "lines": [
        "முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்",
        "திறப்பாடு இலாஅ தவர்."
      ],
      "manakkudavar": "அடைவுபட எண்ணியும் தம்மால் முடிவது இல்லாதவற்றையே செய்யா நிற்பர்; வினை செய்யுந் திறன் இல்லாதார். இஃது எண்ணவல்லாராய் வினை செய்ய மாட்டாரென்று கூறிற்று.",
      "pope": "For gain of end desired just counsel nought availsTo minister, when tact in execution fails",
      "sourceFile": "0640.md",
      "sourceSha256": "86acad97ad7d145a700a31bb260347d99a3f44c6106a5cfb22d70a18c15aa020"
    },
    {
      "number": 641,
      "lines": [
        "நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்",
        "யாநலத்து உள்ளதூஉம் அன்று."
      ],
      "manakkudavar": "நாவினது நலமென்று சொல்லப்படுகின்ற நலம் ஒருவற்கு உடைமையாவது; அந்நலம் எல்லா நலத்துள்ளும் உள்ள தொரு நலமன்று; மிக்கது. எல்லா நலத்துள்ளும் உள்ளதொரு நலமன்று என்றமையால் இன்பம் பயக்குமென்பதாயிற்று.",
      "pope": "A tongue that rightly speaks the right is greatest gain,It stands alone midst goodly things that men obtain",
      "sourceFile": "0641.md",
      "sourceSha256": "bb76391971a741c857ba7f1772732c78546990fb83f21a7b37f87c0ed7c209ca"
    },
    {
      "number": 642,
      "lines": [
        "ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்",
        "காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு."
      ],
      "manakkudavar": "ஆக்கமும் கேடும் சொல்லினால் வருதலால் சொல்லின்கண் சோர்வைப் போற்றிக் காக்க வேண்டும். இது சோர்வுபடாமற் சொல்லல்வேண்டு மென்றது.",
      "pope": "Since gain and loss in life on speech depend,From careless slip in speech thyself defend",
      "sourceFile": "0642.md",
      "sourceSha256": "5223bc4381fc0acff43ccaec9457c2d96eeefabd4f0a33b687cd7e9b6f218515"
    },
    {
      "number": 643,
      "lines": [
        "கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்",
        "வேட்ப மொழிவதாம் சொல்."
      ],
      "manakkudavar": "வினாவினாரைப் பிணித்துக் கொள்ளுந் தகையவாய், வினாவாதாரும் விரும்புமாறு சொல்லுதல் சொல்லாவது. இது மேம்படக் கூறல்வேண்டு மென்றது.",
      "pope": "'Tis speech that spell-bound holds the listening ear,While those who have not heard desire to hear",
      "sourceFile": "0643.md",
      "sourceSha256": "0687edc26085773f72b2e24c87e96134ed2a9b5717e64020e16f613c705ca500"
    },
    {
      "number": 644,
      "lines": [
        "திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்",
        "பொருளும் அதனினூஉங்கு இல்."
      ],
      "manakkudavar": "சொல்லைச் சொல்லுந் திறனறிந்து சொல்லுக; அதனின் மேம்பட்ட அறனும் பொருளும் இல்லை. தாமறியவே புறங்கூறாமையும் பயனில சொல்லாமையும் பொய்கூறாமையும் உளவாம்: ஆதலான் அறனாயிற்று; அரசன் மாட்டும் ஏனையோர்மட்டும் தகுதியறிந்து சொல்லுதலான் பொருளாயிற்று.",
      "pope": "Speak words adapted well to various hearers' state;No higher virtue lives, no gain more surely great",
      "sourceFile": "0644.md",
      "sourceSha256": "0f149f806b1b0ab863b04ca32e74438e57307817bc3e03323717b6949caafe15"
    },
    {
      "number": 645,
      "lines": [
        "சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை",
        "வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து."
      ],
      "manakkudavar": "சொல்லைச் சொல்லுக; தான் சொல்ல நினைத்த அச்சொல்லைப் பிறிதொரு சொல்லாய் வெல்லுஞ் சொல் இல்லை யாதலை யறிந்து.",
      "pope": "Speak out your speech, when once 'tis past disputeThat none can utter speech that shall your speech refute",
      "sourceFile": "0645.md",
      "sourceSha256": "ab2daf22f84a695fb9d84d8aaba381c41ca36937a6bd9e43f0c29e491c4ebc37"
    },
    {
      "number": 646,
      "lines": [
        "வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்",
        "மாட்சியின் மாசற்றார் கோள்."
      ],
      "manakkudavar": "தாம் சொல்லுங்கால் பிறர் விரும்புமாறு சொல்லிப் பிறர் சொல்லுங்கால் அச்சொல்லின் பயனைத் தெரிந்து கொள்ளுதல் மாட்சிமையிற் குற்ற மற்றாரது கோட்பாடு. இது நயம்படக் கூறுதலே யன்றி, பிறர் சொல்லுஞ் சொல்லறிந்தும் சொல்லல் வேண்டு மென்றது.",
      "pope": "Charming each hearer's ear, of others' words to seize the sense,Is method wise of men of spotless excellence",
      "sourceFile": "0646.md",
      "sourceSha256": "e15207a64f13eb4d736fcae97f4febd865e88f3b934a9ad4c343997e87e4b8e1"
    },
    {
      "number": 647,
      "lines": [
        "சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை",
        "இகல்வெல்லல் யார்க்கும் அரிது."
      ],
      "manakkudavar": "ஒருவன் சொல்ல வல்லவனுமாய் அதனைச் சோர விடுதலும் இல்லானாய் அஞ்சாது சொல்லுதலும் உடையவனாயின், அவனை மாறுபாட்டின்கண் வெல்லுதல் யாவர்க்கும் அரிது.",
      "pope": "Mighty in word, of unforgetful mind, of fearless speech,'Tis hard for hostile power such man to overreach",
      "sourceFile": "0647.md",
      "sourceSha256": "55830e0d8475a669de7b1a32f3d68025238ecc26591b08b15e558ce13db9ef0b"
    },
    {
      "number": 648,
      "lines": [
        "விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது",
        "சொல்லுதல் வல்லார்ப் பெறின்."
      ],
      "manakkudavar": "இனிதாகச் சொல்ல வல்லாரைப் பெற்றாராயின் உலகத்தார் மேவி விரைந்து சென்று செய்யுந் தொழில் யாது என்று கேட்பர். இது சொற்களைச் சொல்லின் இனிதாகச் சொல்லவேண்டு மென்றது.",
      "pope": "Swiftly the listening world will gather round,When men of mighty speech the weighty theme propound",
      "sourceFile": "0648.md",
      "sourceSha256": "fbfe80eb0ab09ebcd7e4eb36adc361d1c780c406894f15f4d7ec7c4e7f37168b"
    },
    {
      "number": 649,
      "lines": [
        "பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற",
        "சிலசொல்லல் தேற்றா தவர்."
      ],
      "manakkudavar": "பல சொற்களைச் சொல்லக் காதலியா நிற்பர், குற்றமற்ற சில சொற்களைத் தெளியச் சொல்லலை அறியமாட்டாதார். மன்ற - தெளிய. இது சுருங்கச் சொல்லல் வேண்டு மென்றது.",
      "pope": "Who have not skill ten faultless words to utter plain,Their tongues will itch with thousand words man's ears to pain",
      "sourceFile": "0649.md",
      "sourceSha256": "d64105c7c905f6adcc567fcff337e6c57f3ed78e3e2120b5f572ff568ead67e4"
    },
    {
      "number": 650,
      "lines": [
        "இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது",
        "உணர விரித்துரையா தார்."
      ],
      "manakkudavar": "இணராய் மலர்ந்து நாற்ற மில்லாத பூவை யொப்பர், கற்றதனைப் பிறரறிய விரித்துச் சொல்ல மாட்டாதார். இது சுருங்கச் சொல்லுதலே யன்றி வேண்டுமிடத்து விரித்துஞ்சொல்லல் வேண்டு மென்றது.",
      "pope": "Like scentless flower in blooming garland boundAre men who can't their lore acquired to other's ears expound",
      "sourceFile": "0650.md",
      "sourceSha256": "e42a50adabcb3b398a7d7846d9361a3cf81e7bad7e09471ba8bc98f8711f3b0b"
    },
    {
      "number": 651,
      "lines": [
        "துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம்",
        "வேண்டிய எல்லாந் தரும்."
      ],
      "manakkudavar": "துணைநலம் ஆக்கத்தைக் கொடுக்கும்; வினைநலம் அவ்வளவேயன்றி வேண்டிய எல்லாவற்றையும் ஒருங்கு கொடுக்கும். துணைநலம் ஆக்கங் கொடுத்தல் எல்லாரானும் அறியப் படுதலின் ஈண்டு ஏதுவாக வந்தது.",
      "pope": "The good external help confers is worldly gain;By action good men every needed gift obtain",
      "sourceFile": "0651.md",
      "sourceSha256": "61d1f43d7ce8c1b25568353c5c76af519a9f08290e2e32bd7ca8083ff6a52b0d"
    },
    {
      "number": 652,
      "lines": [
        "என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு",
        "நன்றி பயவா வினை."
      ],
      "manakkudavar": "எல்லாக் காலமும் தவிர்தல் வேண்டும், புகழொடு நன்மை பயவாத வினையை. என்று மென்றது செயலற்ற காலமுமென்றது.",
      "pope": "From action evermore thyself restrainOf glory and of good that yields no gain",
      "sourceFile": "0652.md",
      "sourceSha256": "08fa88c8ae531699f9f5a8361b4501c8cdfff4fa88e32e17a007480ed27774c8"
    },
    {
      "number": 653,
      "lines": [
        "ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை",
        "ஆஅதும் என்னு மவர்."
      ],
      "manakkudavar": "தமக்குப் புகழ்கெடவரும் வினையைச் செய்தலையும் ஆக்கங் கருதுவார் தவிர்க. இது முன்புள்ள புகழ் கெடவரும் வினையையும் தவிர்க என்றது.",
      "pope": "Who tell themselves that nobler things shall yet be wonAll deeds that dim the light of glory must they shun",
      "sourceFile": "0653.md",
      "sourceSha256": "1cd01f00ec3038a66df072fa2b41a501998eb45bec013a4ce35b42485746678b"
    },
    {
      "number": 654,
      "lines": [
        "இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்",
        "நடுக்கற்ற காட்சி யவர்."
      ],
      "manakkudavar": "துன்பம் வரினும் இழிவாகிய வினைகளைச் செய்யார் துளக்க மற்ற தெளிவுடையார். இது பிறரால் இகழப்படுவன செய்யற்க வென்றது. இதனையும் கடிய வேண்டு மென்பது கூறப்பட்டது.",
      "pope": "Though troubles press, no shameful deed they do,Whose eyes the ever-during vision view",
      "sourceFile": "0654.md",
      "sourceSha256": "1b71fd13c158f1f7e033881aaf0e822e549fe6acb5d7a4fd526e53171f927efa"
    },
    {
      "number": 655,
      "lines": [
        "எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்",
        "மற்றன்ன செய்யாமை நன்று."
      ],
      "manakkudavar": "துணியப்பட்ட தென்று பின்னிரங்கப்படும் வினையைச் செய்யா தொழிக; வினைசெய்வானாயின் அவை போல்வனவுஞ் செய்யாமையே நல்லது. இது பின்னிரங்கப்படும் வினையைச் செய்யலாகாதென்றது.",
      "pope": "Do nought that soul repenting must deplore,If thou hast sinned, 'tis well if thou dost sin no more",
      "sourceFile": "0655.md",
      "sourceSha256": "82dec82b9de395a0097864f08228c780a6a84359cbc7067fd2027463fd9d9054"
    },
    {
      "number": 656,
      "lines": [
        "ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க",
        "சான்றோர் பழிக்கும் வினை."
      ],
      "manakkudavar": "தன்னைப் பயந்தாள் பசிகண்டானாயினும் சான்றோரால் பழிக்கப்படும் வினையைச் செய்யாதொழிக. இது நல்லோர் பழிக்கும் வினையைத் தவிர்க என்றது.",
      "pope": "Though her that bore thee hung'ring thou behold, no deedDo thou, that men of perfect soul have crime decreed",
      "sourceFile": "0656.md",
      "sourceSha256": "c81cf0afd9bed8acd23b3a94871924a2a57982e400730e5ad76dd276651741cc"
    },
    {
      "number": 657,
      "lines": [
        "பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்",
        "கழிநல் குரவே தலை."
      ],
      "manakkudavar": "பழியைச் சுமந் தெய்திய ஆக்கத்தினும், சான்றோர் மாட்டு உளதாகிய மிக்க நல்குரவே தலைமையுடைத்து. மேற்கூறியவாறு செய்யின் நல்குரவு உளதாகு மென்றார்க்கு இது கூறப்பட்டது.",
      "pope": "Than store of wealth guilt-laden souls obtain,The sorest poverty of perfect soul is richer gain",
      "sourceFile": "0657.md",
      "sourceSha256": "4363a66530be69c67ae271024f2b5bc346f1cfbe6b06f838e654123ad4c45795"
    },
    {
      "number": 658,
      "lines": [
        "கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்",
        "முடிந்தாலும் பீழை தரும்."
      ],
      "manakkudavar": "நல்லோரால் கடியப்பட்டவற்றைக் கடிந்து நீக்காது செய்யுமவர்க்கு அவ்வினைகள் தாம் கருதியவாற்றான் முடிந்த பின்பும் பீடையைத் தரும். இது நன்மையல்லாத வினையைச் செயின், அது தீமை தருமென்றது. அவை பின்பு காட்டப்படும்.",
      "pope": "To those who hate reproof and do forbidden thingWhat prospers now, in after days shall anguish bring",
      "sourceFile": "0658.md",
      "sourceSha256": "f4b358e39b40c6f579434bb29d8d6e0cc3a559c2e4bf28137974be03de2d8fb9"
    },
    {
      "number": 659,
      "lines": [
        "அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்",
        "பிற்பயக்கும் நற்பா லவை."
      ],
      "manakkudavar": "பிறர் அழக்கொண்ட பொருள்களெல்லாம் தாமும் அழப்போம்: அவ்வாறன்றி அறப்பகுதியில் கொண்ட பொருள்கள் இழந்தாராயினும் பின்பு பயன்படும். இது தேடினபொருள் போமென்றது.",
      "pope": "What's gained through tears with tears shall go;From loss good deeds entail harvests of blessings grow",
      "sourceFile": "0659.md",
      "sourceSha256": "9c4d33144696fecade742feb59f5323b479f9462dba39e9eb798efaa42fd6611"
    },
    {
      "number": 660,
      "lines": [
        "சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்",
        "கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று."
      ],
      "manakkudavar": "வஞ்சத்தாலே பொருள்தேடி மகிழ்ந்திருத்தல், பசுமட்கலத்திலே நீரை முகந்து வைத்த தன்மைத்து. இது தானும் பொருளுங் கூடிக் கெடு மென்றது.",
      "pope": "In pot of clay unburnt he water pours and would retain,Who seeks by wrong the realm in wealth and safety to maintain",
      "sourceFile": "0660.md",
      "sourceSha256": "049ae8bdb7f9ae8ec1d3673574f87e192f98dc380f349f707e1e9b9a5aa32ef4"
    },
    {
      "number": 661,
      "lines": [
        "வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்",
        "மற்றைய எல்லாம் பிற."
      ],
      "manakkudavar": "வினையினிடத்துத் திண்மை யென்று சொல்லப்படுவது ஒருவன் மனத்து உண்டான திண்மை; அதனையொழிய மற்றவையெல்லாம் திண்மையென்று சொல்லப்படா. மற்றவையென்றது கருவியும் உபாயமும்.",
      "pope": "What men call 'power in action' know for 'power of mind'Externe to man all other aids you find",
      "sourceFile": "0661.md",
      "sourceSha256": "973b09882a3b3a305f7af88cb4ecc15736d8e1a5983eff77bc610728a90b7255"
    },
    {
      "number": 662,
      "lines": [
        "ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்",
        "ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்."
      ],
      "manakkudavar": "வினைசெய்யுங்கால் உறும் துன்பத்தை ஓரார் ஆதலும் அவ்விடத்துத் துன்பமுற்றால் தளரார் ஆதலுமாகிய இவ்விரண்டினது நெறியென்று சொல்லுவார் நீதி நெறியை ஆராய்ந்தவர்.",
      "pope": "'Each hindrance shun', 'unyielding onward press, If obstacle be there,'These two define your way, so those that search out truth declare",
      "sourceFile": "0662.md",
      "sourceSha256": "5a9791ab02e9638a312ecae2a0eaf41c0218097b2eafd8edf3756b16eab2f51b"
    },
    {
      "number": 663,
      "lines": [
        "கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்",
        "எற்றா விழுமந் தரும்."
      ],
      "manakkudavar": "ஒரு வினையைத் தொடங்கினால் முடிவிலே சென்று மீளல் செய்வது ஆண்மையாவது; இடையிலே மீள்வானாயின் அது மிகுதியைக் கெடாத நோயைக் கொடுக்கும். சென்று மீளல் சுழல்தல் ஆயிற்று. இது தொடங்கின வினையை முடியச் செய்யவேண்டுமென்றது.",
      "pope": "Man's fitting work is known but by success achieved;In midst the plan revealed brings ruin ne'er to be retrieved",
      "sourceFile": "0663.md",
      "sourceSha256": "23fd2f6b591a134e40589d79039febb160cf44951183c52db9381c6e20a4ab2c"
    },
    {
      "number": 664,
      "lines": [
        "சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்",
        "சொல்லிய வண்ணம் செயல்."
      ],
      "manakkudavar": "ஒரு வினையை இவ்வாறு செய்தும் என்று சொல்லுதல் யாவர்க்கும் எளியவாம். அதனைச் சொல்லிய வாற்றால் செய்து முடித்தல் யாவர்க்கும் அரியவாம்.",
      "pope": "Easy to every man the speech that shows the way;Hard thing to shape one's life by words they say",
      "sourceFile": "0664.md",
      "sourceSha256": "c2829a628e7c0e7b5df98dd264462ae8c8262f8051356bf0d37361e64e6da8fa"
    },
    {
      "number": 665,
      "lines": [
        "வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்",
        "ஊறெய்தி உள்ளப் படும்."
      ],
      "manakkudavar": "மிகுதியெய்தி மாட்சிமைப்பட்டாரது வினைத் திட்பமானது அரசன்மாட்டு உறுதலையெய்தி எல்லாராலும் நினைக்கப்படும். இது வினைத்திட்ப முடையாரை எல்லாரும் விரும்புவரென்றது.",
      "pope": "The power in act of men renowned and great,With king acceptance finds and fame through all the state",
      "sourceFile": "0665.md",
      "sourceSha256": "0b0489feb27e9e25a703b04bcf9d0af02efecfb82e3c3d3cff37099af06c047f"
    },
    {
      "number": 666,
      "lines": [
        "எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார்",
        "திண்ணியர் ஆகப் பெறின்."
      ],
      "manakkudavar": "தாம் எண்ணிய பொருள்களை எண்ணினபடியே பெறுவர்: அவ்வாறு எண்ணினவர் அவ்வினையைச் செய்து முடிக்குந் திண்மையுடையாராகப் பெறுவாராயின். இது வினையின்கண் திண்மை வேண்டு மென்றது..",
      "pope": "Whate'er men think, ev'n as they think, may men obtain,If those who think can steadfastness of will retain",
      "sourceFile": "0666.md",
      "sourceSha256": "b845b2723fa249561ad06605fb3b9e163070d7cfefc1534706ea73fc37990415"
    },
    {
      "number": 667,
      "lines": [
        "உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு",
        "அச்சாணி அன்னார் உடைத்து."
      ],
      "manakkudavar": "யாவரையும் வடிவுகண்டு இகழ்தலைத் தவிர்தல் வேண்டும். உருளாநின்ற பெரிய தேர்க்குக் காலாய் நடக்கின்ற உருளையைக் கழலாமல் தாங்கும் அச்சின் புறத்துச் செருகின சிற்றாணியைப் போலத் திண்ணியாரை இவ்வுலகம் உடைத்து: ஆதலால்.",
      "pope": "Despise not men of modest bearing; Look not at form, but what men are:For some there live, high functions sharing, Like linch-pin of the mighty car",
      "sourceFile": "0667.md",
      "sourceSha256": "b186f8eb9af1a431c2bd868f23426147faa44b313a6831fcf8337defb514316a"
    },
    {
      "number": 668,
      "lines": [
        "கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது",
        "தூக்கங் கடிந்து செயல்."
      ],
      "manakkudavar": "கலக்கமின்றி ஆராய்ந்துகண்ட வினையிடத்துப் பின்னைத் துளக்கமின்றி அதனை நீட்டியாது செய்க. இது விரைந்து செய்யவேண்டு மென்றது.",
      "pope": "What clearly eye discerns as right, with steadfast will,And mind unslumbering, that should man fulfil",
      "sourceFile": "0668.md",
      "sourceSha256": "aca1583028c3908931f0d295f4fa4cf589f172c9516f668b045931215cda5b12"
    },
    {
      "number": 669,
      "lines": [
        "துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி",
        "இன்பம் பயக்கும் வினை."
      ],
      "manakkudavar": "முற்பாடு துன்பம் உறவரினும் துணிந்து செய்க, பிற்பாடு இன்பம் பயக்கும் வினையை.",
      "pope": "Though toil and trouble face thee, firm resolve hold fast,And do the deeds that pleasure yield at last",
      "sourceFile": "0669.md",
      "sourceSha256": "66c1312f80d4ec8c03c7fcdb642712310c0a5fed70005ac22de5054a07516b7b"
    },
    {
      "number": 670,
      "lines": [
        "எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்",
        "வேண்டாரை வேண்டாது உலகு."
      ],
      "manakkudavar": "கருவி முதலான வெல்லாவற்றானும் திண்மை பெற்றவிடத்தும் வினையினது திண்மையை விரும்பாதாரை உலகத்தார் விரும்பார். பலபொருளும் அமைதியும் உடையார்க்கு வினைத்திட்பமின்றானால் வருங்குற்ற மென்னை யென்றார்க்கு இது கூறப்பட்டது.",
      "pope": "The world desires not men of every power possessed,Who power in act desire not,- crown of all the rest",
      "sourceFile": "0670.md",
      "sourceSha256": "687193621d7036c7767578f2159dadb4dfbcfa14e57d9b602e179531d52f5148"
    },
    {
      "number": 671,
      "lines": [
        "சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு",
        "தாழ்ச்சியுள் தங்குதல் தீது."
      ],
      "manakkudavar": "சூழ்ச்சிக்கு எல்லை துணிவு பெறுதல்: அவ்வாறு துணிந்தவினை நீட்டித்தலின்கண்ணே கிடைக்குமாயின் அது தீதாம். இது வினைசெயத் துணிந்த காலத்து நீட்டிக்குமாயின் அதனை யறிந்து பகைவர் தம்மைக் காப்பார்: ஆதலால் நீட்டியாது விரைந்து வினை செய்யவேண்டுமென்றது.",
      "pope": "The Resolve is counsel's end, If resolutions halt In weak delays, still unfulfilled, 'tis grievous fault",
      "sourceFile": "0671.md",
      "sourceSha256": "213bdcc35a020ce26cf884bec887528bab8f15948304a3e4c56195d39d36fbea"
    },
    {
      "number": 672,
      "lines": [
        "தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க",
        "தூங்காது செய்யும் வினை."
      ],
      "manakkudavar": "தாழ்த்துச் செய்ய வேண்டும் வினையைத் தாழ்த்துச் செய்க: தாழாமற் செய்யவேண்டும் வினையைத் தாழாமற் செய்க.",
      "pope": "Slumber when sleepy work's in hand beware Thou slumber not when action calls for sleepless care",
      "sourceFile": "0672.md",
      "sourceSha256": "a8e568e0a9fae6212ce499c9ea9e204d90bd07c5ccdec3b13d5b03bda9faac44"
    },
    {
      "number": 673,
      "lines": [
        "ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்",
        "செல்லும்வாய் நோக்கிச் செயல்."
      ],
      "manakkudavar": "இயலும் இடமெல்லாம் வினைசெய்தல் நன்று: இயலாத காலத்து அதனை நினைந்திருந்து இயலும் இடம் பார்த்துச் செய்க. இது வினைசெய்து முடிந்ததில்லை யென்று இகழாது பின்பு காலம் பார்த்துச் செய்கவென்றது.",
      "pope": "When way is clear, prompt let your action be; When not, watch till some open path you see",
      "sourceFile": "0673.md",
      "sourceSha256": "bc0c39099f877c4280672c0c15568039b2eadfdffeb5db0d4535956606627ba8"
    },
    {
      "number": 674,
      "lines": [
        "வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்",
        "தீயெச்சம் போலத் தெறும்."
      ],
      "manakkudavar": "வினையும் பகைமையு மென்னும் இரண்டினது ஒழிபு விசாரிக்குங்காலத்துத் தீயின் ஒழிவுபோலக் கெடுக்கும். எச்சம்- சேஷம். இது வினைசெய்யுங்கால் சிறிதொழியச் செய்தோமென்று விடலாகாதென்றது.",
      "pope": "With work or foe, when you neglect some little thing, If you reflect, like smouldering fire, 'twill ruin bring",
      "sourceFile": "0674.md",
      "sourceSha256": "0382f7ee3a4500491e94fe1980767c16e8b5f4fe1d4a5c8cbb37f44bd54205a3"
    },
    {
      "number": 675,
      "lines": [
        "பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்",
        "இருள்தீர எண்ணிச் செயல்."
      ],
      "manakkudavar": "பொருளும், கருவியும், காலமும், வினையும் வினைசெய்யும் இடமுமென்னும் ஐந்தினையும் மயக்கந்தீர எண்ணிப் பின்பு வினைசெயத் தொடங்குக. இவற்றுள் ஒவ்வொன்றும் இரண்டு இரண்டு வகைப்படும்:-1. பொருளாவது கெடும் பொருளும் பெறும் பொருளும், 2. கருவியாவது தனக்கு உள்ள படையும் மாற்றரசர்க்கு உள்ள படையும், 3. காலமாவது தனக்காங்காலமும் மாற்றரசர்க் காங்காலமும், 4. வினையாவது தான் செய்யும் வினையும் பகைவர் செய்யும் வினையும், 5. இடமாவது தனக்கா மிடமும் பகைவர்க்கா மிடமும் ஆம். இவை செய்யும் வினைக்கு முற்பட வேண்டுதலின் முற் கூறப்பட்டன.",
      "pope": "Treasure and instrument and time and deed and place of act These five, till every doubt remove, think o'er with care exact",
      "sourceFile": "0675.md",
      "sourceSha256": "eae9e21624befe4e5d379363e688c064bbf31be41136e446e73a6e6307884781"
    },
    {
      "number": 676,
      "lines": [
        "முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்",
        "படுபயனும் பார்த்துச் செயல்."
      ],
      "manakkudavar": "வினை தொடங்கினால் அது முடியும் வண்ணமும் அதற்குவரும் இடையூறும் முடிந்தா லுண்டாகும் பெரும் பயனும் முன்பே கண்டு பின்பு வினைசெய்க.",
      "pope": "Accomplishment, the hindrances, large profits won By effort these compare,- then let the work be done",
      "sourceFile": "0676.md",
      "sourceSha256": "235d5c939fe3ec84aedda4ca116ba8934418c785e4085ace3a096a2781773d91"
    },
    {
      "number": 677,
      "lines": [
        "செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை",
        "உள்ளறிவான் உள்ளம் கொளல்."
      ],
      "manakkudavar": "செய்யத்தகும் வினையைச் செய்யுமவன் செய்யும் முறைமையாவது அவ்வினையினது உளப்பாடு அறிவானது உள்ளத்தைக் கூட்டிக் கோடல்.",
      "pope": "Who would succeed must thus begin first let him ask The thoughts of them who thoroughly know the task",
      "sourceFile": "0677.md",
      "sourceSha256": "d1333b055f37547d5bf8e9bf68e53e8646a8f5b36f495a3f05205c2cae594cad"
    },
    {
      "number": 678,
      "lines": [
        "வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்",
        "யானையால் யானையாத் தற்று."
      ],
      "manakkudavar": "ஒரு வினையால் பிறிதொரு வினையைச் செய்து கொள்வது, ஒரு மதயானையால் பிறிதொரு மதயானையைப் பிணித்தாற்போலும். இது தமக்கு ஒரு பகைவர் தோன்றினால் அவர்க்குப் பகையாயினாரை அவரோடு பகைக்குமாறு பண்ணுவார் பக்கல் பகையாய் வருவாரில்லை யென்றது.",
      "pope": "By one thing done you reach a second work's accomplishment; So furious elephant to snare its fellow brute is sent",
      "sourceFile": "0678.md",
      "sourceSha256": "b0795b8945dc717df2f8ac34972f07b67be343707dc27ff56404eeafd644cd03"
    },
    {
      "number": 679,
      "lines": [
        "நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே",
        "ஒட்டாரை ஒட்டிக் கொளல்."
      ],
      "manakkudavar": "தஞ் சுற்றத்திற்கு நல்லவை செய்தலினும் பகைவரைப் பொருந்தி நட்பாகக் கொள்ளுதலை விரைந்து செய்யவேண்டும். இஃது அரசர்க்கும் ஒக்கக் கொள்ளவேண்டு மாயினும் அமைச்சர்தம் தொழிலாக ஈண்டுக் கூறப்பட்டது.",
      "pope": "Than kindly acts to friends more urgent thing to do, Is making foes to cling as friends attached to you",
      "sourceFile": "0679.md",
      "sourceSha256": "12d160c83693b2e0a8c0bc9e27a07136deabe71ae9c56f06579556c6a293cc93"
    },
    {
      "number": 680,
      "lines": [
        "உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்",
        "கொள்வர் பெரியார்ப் பணிந்து."
      ],
      "manakkudavar": "உறையும் இடம் சிறியார் தமது இடம் நடுங்குதற்கு அஞ்சித் தமது குறைதீரப் பெறின் தம்மின் பெரியாரைத் தாழ்ந்து நட்பாகக் கொள்வர். இது சிறையானால் இவ்வாறு செய்தல் வேண்டுமென்றது.",
      "pope": "The men of lesser realm, fearing the people's inward dread, Accepting granted terms, to mightier ruler bow the head",
      "sourceFile": "0680.md",
      "sourceSha256": "fbc82ad5ac15198d41d1923991fd3df81fc43d0cd5bc813d19af27e637aa1986"
    },
    {
      "number": 681,
      "lines": [
        "அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்",
        "பண்புடைமை தூதுரைப்பான் பண்பு."
      ],
      "manakkudavar": "அரசன்மாட்டு அன்புடைமையும், அமைந்த குடியின்கண் பிறத்தலும், வேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையும் தூதாகிச் சென்று சொல்லுமவனது இயல்பாம். வேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையாவது அவன் விரும்புவனவற்றைத் தான் விரும்பாமை.",
      "pope": "Benevolence high birth, the courtesy kings love:-These qualities the envoy of a king approve",
      "sourceFile": "0681.md",
      "sourceSha256": "5f0ee55a716a17a9cf8896751444993a8cbc7b478cd0e34eece6253edfdc3c87"
    },
    {
      "number": 682,
      "lines": [
        "அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு",
        "இன்றி யமையாத மூன்று."
      ],
      "manakkudavar": "அன்புடைமையும், அறிவுடைமையும், தெரிந்த சொல்வன்மையுடைமையும், தூதுரைப்பாற்கு இன்றியமையாத மூன்று குணங்களாம்.",
      "pope": "Love, knowledge, power of chosen words, three things,Should he possess who speaks the words of kings",
      "sourceFile": "0682.md",
      "sourceSha256": "875d721bfc9b1ffffffc4df59fb1a01f1ec698ff40f87ea5cab98de6e097a744"
    },
    {
      "number": 683,
      "lines": [
        "நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்",
        "வென்றி வினையுரைப்பான் பண்பு."
      ],
      "manakkudavar": "எல்லா நூல்களையும் கற்றார்முன்னர் அந்நூல்களைத் தானுஞ் சொல்ல வல்லவனாதல், வேலுடையார் முன்னின்று தன்னரசனுக்கு வெற்றியாகிய வினையைச் சொல்லுமவனது இயல்பாம்.",
      "pope": "Mighty in lore amongst the learned must he be,Midst jav'lin-bearing kings who speaks the words of victory",
      "sourceFile": "0683.md",
      "sourceSha256": "6782e5bee82d67769250a75e84821af1e2e33330462f3d0bf74ce81cd063bb2b"
    },
    {
      "number": 684,
      "lines": [
        "அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்",
        "செறிவுடையான் செல்க வினைக்கு."
      ],
      "manakkudavar": "அறிவும், வடிவும், தெரிந்த கல்வியுமாகிய இம் மூன்றினது அடக்கமுடையவன் வினைக்குச் செல்க. அறிவு- இயற்கையறிவு.",
      "pope": "Sense, goodly grace, and knowledge exquisiteWho hath these three for envoy's task is fit",
      "sourceFile": "0684.md",
      "sourceSha256": "8737247d04257df44b0d68e1051be7ca4f934d1afb6acf8e8ec7011fdbb55431"
    },
    {
      "number": 685,
      "lines": [
        "தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி",
        "நன்றி பயப்பதாந் தூது."
      ],
      "manakkudavar": "சுருங்கச்சொல்லி, விரும்பாத சொற்களை நீக்கி, மகிழுமாறு சொல்லித் தன்னரசனுக்கு நன்மையைத் தருமவன் தூதனாவான். இது சொல்லுமாறு கூறிற்று.",
      "pope": "In terms concise, avoiding wrathful speech, who utters pleasant word,An envoy he who gains advantage for his lord",
      "sourceFile": "0685.md",
      "sourceSha256": "a58c91efe50d34e1f1e72e4ce446fdc2b5797d719f006dde8dca466f4249dbf3"
    },
    {
      "number": 686,
      "lines": [
        "கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்",
        "தக்கது அறிவதாம் தூது."
      ],
      "manakkudavar": "தன்னரசன் சொன்ன மாற்றத்தைச் சொல்லுங்கால் பகையரசன் வெகுண்டானாயின் அது மாற்றுதற்காம் உபாயத்தைக் கற்று, எவ்விடத்தினும் அஞ்சுதலின்றி மகிழ்ச்சி வருமாறு இசையச் சொல்லி நாளோடே கூடச் செய்யத் தகுவன அறிந்து சொல்ல வல்லவன் தூதனாவான்.",
      "pope": "An envoy meet is he, well-learned, of fearless eyeWho speaks right home, prepared for each emergency",
      "sourceFile": "0686.md",
      "sourceSha256": "6cf178c304070efb164de528e277384e859a69b0af21fc63b1727af7bfd7e285"
    },
    {
      "number": 687,
      "lines": [
        "கடனறிந்து காலங் கருதி இடனறிந்து",
        "எண்ணி உரைப்பான் தலை."
      ],
      "manakkudavar": "காரியம் நின்ற முறைமையை யறிந்து காலத்தையும் நினைத்து இடமும் அறிந்து தானேயெண்ணிச் சொல்லவல்லவன் தலையான தூதனாவான். இது தலையான தூதரிலக்கணம் கூறிற்று.",
      "pope": "He is the best who knows what's due, the time considered well,The place selects, then ponders long ere he his errand tell",
      "sourceFile": "0687.md",
      "sourceSha256": "6079b0a28ae09fce58dfd42e8612dc96ca9a43726d9da33998ddcf176c2b5a64"
    },
    {
      "number": 688,
      "lines": [
        "தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்",
        "வாய்மை வழியுரைப்பான் பண்பு."
      ],
      "manakkudavar": "தூய்மையுடைமையும், சுற்றமுடைமையும், ஒரு பொருளை யாராய்ந்து துணிதலுடைமையும், இம்மூன்றின்கண்ணும் மெய்யுடைமையும் தூதற்கு இயல்பாம். தூய்மை- மெய்யும் மனமும் தூயனாதல்.",
      "pope": "Integrity, resources, soul determined, truthfulnessWho rightly speaks his message must these marks possess",
      "sourceFile": "0688.md",
      "sourceSha256": "d8990590b71221067a5b00ee3dea6864dbac6d9cb772d8793ba90951de0d885b"
    },
    {
      "number": 689,
      "lines": [
        "விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்",
        "வாய்சேரா வன்கணவன்."
      ],
      "manakkudavar": "தன்னரசன் சொல்லிவிட்ட மாற்றத்தைப் பகை யரசர்க்குச் சொல்லுமவன் தன்னரசனுக்கு வடுவாகுஞ் சொற்களை மறந்துஞ் சொல்லாத அஞ்சாமையையுடைய தூதனாவான்.",
      "pope": "His faltering lips must utter no unworthy thing,Who stands, with steady eye, to speak the mandates of his king",
      "sourceFile": "0689.md",
      "sourceSha256": "06a5044348853fdc773ca85342297aa8a6c4e422c638fb9bd2510fbe50882de8"
    },
    {
      "number": 690,
      "lines": [
        "இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு",
        "உறுதி பயப்பதாம் தூது."
      ],
      "manakkudavar": "தனக்கு இறுதி வருமாயினும், ஒழியாது தன்னிறைவற்கு நன்மையைத் தருவது தூதாவது.",
      "pope": "Death to the faithful one his embassy may bring;To envoy gains assured advantage for his king",
      "sourceFile": "0690.md",
      "sourceSha256": "f839d80234b9b4401a4277375c3b5dd8f749fc140789f5597f139ff5c9d4d435"
    },
    {
      "number": 691,
      "lines": [
        "அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க",
        "இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்."
      ],
      "manakkudavar": "மாறுபாடுடைய வேந்தரைச் சேர்ந்தொழுகும் அமைச்சர் அவரை அகலுவதுஞ் செய்யாது அணுகுவதுஞ் செய்யாது தீக்காய்வார்போல இருக்க. இது சேர்ந்தொழுகுந் திறங்கூறிற்று.",
      "pope": "Who warm them at the fire draw not too near, nor keep too much aloof;Thus let them act who dwell beneath of warlike kings the palace-roof",
      "sourceFile": "0691.md",
      "sourceSha256": "392b32ff1e454f4b2448305af5e35acc44d071c0da9bbced2fef25e3ac3f6b8e"
    },
    {
      "number": 692,
      "lines": [
        "மன்னர் விழைப விழையாமை மன்னரால்",
        "மன்னிய ஆக்கந் தரும்."
      ],
      "manakkudavar": "எல்லார்க்கும் பொதுவாகக் கருதப்பட்டவையன்றி மன்னரால் விரும்பப்பட்டவற்றை விரும்பாதொழிக; அவ்விரும்ப¬£ம அம்மன்னராலே நிலையுள்ள செல்வத்தைத் தருமாதலான். அவை நுகர்வனவும் ஒப்பனை முதலாயினவுமாம். இஃது அவற்றைத்தவிர்தல் வேண்டு மென்றது.",
      "pope": "To those who prize not state that kings are wont to prize,The king himself abundant wealth supplies",
      "sourceFile": "0692.md",
      "sourceSha256": "dbb23978f66dd6a5e0ba4b257a984e97e248ea650758239304e853c1de3d0fcc"
    },
    {
      "number": 693,
      "lines": [
        "போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்",
        "தேற்றுதல் யார்க்கும் அரிது."
      ],
      "manakkudavar": "காப்பின், காத்தற்கு அரியனவற்றைக் காப்பாற்றுக: ஐயப்பட்ட பின்பு தௌ¤வித்தல் யாவர்க்கும் அரிது. இஃது அடுத்தொன்று சொல்லாம லொழுகவேண்டும்மென்றது.",
      "pope": "Who would walk warily, let him of greater faults beware;To clear suspicions once aroused is an achievement rare",
      "sourceFile": "0693.md",
      "sourceSha256": "d82fed562cb595fa0bb342a96b2da78b6bbbb271ee75de717b7af0e0172d3cb1"
    },
    {
      "number": 694,
      "lines": [
        "செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்",
        "ஆன்ற பெரியா ரகத்து."
      ],
      "manakkudavar": "அமைந்த பெரியாரிடத்து ஒருவன் செவியுட் சொல்லுதலும், ஒருவன் முகம்பார்த்துத் தம்மில் நகுதலும் தவிர்ந்தொழுகல் வேண்டும். இது கூற்றும் நகையும் ஆகாவென்றது.",
      "pope": "All whispered words and interchange of smiles repress,In presence of the men who kingly power possess",
      "sourceFile": "0694.md",
      "sourceSha256": "2f05fba0b403cc6aba8c770114b6f5700f3246187bfcbc4e5fb4b841b29aca2d"
    },
    {
      "number": 695,
      "lines": [
        "எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை",
        "விட்டக்கால் கேட்க மறை."
      ],
      "manakkudavar": "யாதொரு பொருளையும் செவிகொடுத்து ஓராது, தொடர்ந்து கேளாது, அப்பொருளை மறைத்தல் தவிர்ந்தால், பின்பு கேட்க. இது கேட்டல் விருப்பமும் குற்ற மென்றது.",
      "pope": "Seek not, ask not, the secret of the king to hear;But if he lets the matter forth, give ear",
      "sourceFile": "0695.md",
      "sourceSha256": "67e581a0e24679922c4bfa53c361549ea54aa489e2d5e849de8408a8fde8566d"
    },
    {
      "number": 696,
      "lines": [
        "குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில",
        "வேண்டுப வேட்பச் சொலல்."
      ],
      "manakkudavar": "அரசன் குறிப்பறிந்து காலம் பார்த்து வெறுப்பில்லாதனவாய்ச் சொல்ல வேண்டுவனவற்றை விரும்புமாறு சொல்க. இது சொல்லுந் திறம் கூறிற்று.",
      "pope": "Knowing the signs, waiting for fitting time, with courteous care,Things not displeasing, needful things, declare",
      "sourceFile": "0696.md",
      "sourceSha256": "6839ff5f56d0c89679df80accd7e04ef78bf0c6f23f509103b9b3967702cf8b2"
    },
    {
      "number": 697,
      "lines": [
        "வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்",
        "கேட்பினும் சொல்லா விடல்."
      ],
      "manakkudavar": "எப்போதும் வேந்தனால் விரும்பப்படுவனவற்றைச் சொல்லித் தமக்குப் பயன்படாதவற்றைக் கேட்டாலும் சொல்லாது விடுக. சொல்லாது விடலாவது தூதனை அரசர்க்குப் படை எவ்வளவு உண்டென்று பகையரசன் வினவினால் நீ அறியாததொன்றோ வென்று அளவு கூறாமை.",
      "pope": "Speak pleasant things, but never utter idle word;Not though by monarch's ears with pleasure heard",
      "sourceFile": "0697.md",
      "sourceSha256": "7cca125ea3afc66700b9099920e9576c0f43943e4b5d05e0c9da4929e5d48d23"
    },
    {
      "number": 698,
      "lines": [
        "இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற",
        "ஒளியோடு ஒழுகப் படும்."
      ],
      "manakkudavar": "இவர் நமக்கு இளையரென்றும் இத்தன்மையாகிய முறையரென்றும் இகழாது அவர் பெற்றுநின்ற தலைமையோடே பொருந்த ஒழுக வேண்டும்.",
      "pope": "Say not, 'He's young, my kinsman,' despising thus your king;But reverence the glory kingly state doth bring",
      "sourceFile": "0698.md",
      "sourceSha256": "aaffd3c2a4a404c7e9cc89b98f974feb8cfbd979c043ffd444c1c84189f23ed6"
    },
    {
      "number": 699,
      "lines": [
        "கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்",
        "துளக்கற்ற காட்சி யவர்."
      ],
      "manakkudavar": "யாம் அரசனாலே கைக்கொள்ளப்பட்டோமென்று நினைத்து அவன் நெஞ்சிற் கொள்ளாதன செய்யார், அசைவற்ற தௌ¤வுடையார். இஃது அரசன் நெஞ்சிற்குப் பொருந்தினவை செய்ய வேண்டுமென்றது.",
      "pope": "'We've gained his grace, boots nought what graceless acts we do',So deem not sages who the changeless vision view",
      "sourceFile": "0699.md",
      "sourceSha256": "f6195ba26358bd89c61bfc33fec09fdcc70d566a3dab78046998bad9c633b704"
    },
    {
      "number": 700,
      "lines": [
        "பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்",
        "கெழுதகைமை கேடு தரும்."
      ],
      "manakkudavar": "யாம் பழைமையுடையோ மென்று கருதி இயல்பல்லாதனவற்றைச் செய்யும் நட்பின்தகைமை தமக்குக் கேட்டைத்தரும் இது பின் பகையானவற்றைத் தவிரல் வேண்டும்மென்றது.",
      "pope": "Who think 'We're ancient friends' and do unseemly things;To these familiarity sure ruin brings",
      "sourceFile": "0700.md",
      "sourceSha256": "eaa618cc21b421396b6f58ac2a2e92ceeb5ef27570d34860b3bf1dfbd740e63a"
    },
    {
      "number": 701,
      "lines": [
        "கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்",
        "மாறாநீர் வையக் கணி."
      ],
      "manakkudavar": "ரசன் மனநிகழ்ச்சியை அவன் கூறுவதன்முன்னே நோக்கி அறியுமவன், எல்லா நாளும் மாறாநீர் சூழ்ந்த வையத்துக்கு அணிகலனாவான். இது மக்களிற் சிறப்புடையனா மென்றது.",
      "pope": "Who knows the sign, and reads unuttered thought, the gem is he,Of earth round traversed by the changeless sea",
      "sourceFile": "0701.md",
      "sourceSha256": "0e933c363013d168aa813fe428cdfdbb29506b3846c543144d81e208b69875b2"
    },
    {
      "number": 702,
      "lines": [
        "ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்",
        "தெய்வத்தோ டொப்பக் கொளல்."
      ],
      "manakkudavar": "பிறர் நினைத்ததனை ஐயப்படுதலின்றித் துணிந்து அறியவல்லாரைத் தேவரோடு ஒப்பக் கொள்க.",
      "pope": "Undoubting, who the minds of men can scan,As deity regard that gifted man",
      "sourceFile": "0702.md",
      "sourceSha256": "88686b21008201cfc20bcbb61e79eff75856498b15f455d133ddae97c7fddd3d"
    },
    {
      "number": 703,
      "lines": [
        "குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்",
        "யாது கொடுத்தும் கொளல்."
      ],
      "manakkudavar": "ஒருவன் முகக்குறிப்பினானே அவனவன் மனக் குறிப்பையறிய மாட்டாவாயின் தன்னுறுப்புகளுடன் கண்கள் மற்றென்ன பயனைத் தருமோ? இது குறிப்பறியாதார் குருடரோடு ஒப்பா ரென்றது.",
      "pope": "Who by the sign the signs interprets plain,Give any member up his aid to gain",
      "sourceFile": "0703.md",
      "sourceSha256": "056c8a8fc0e1fb566c4d25b71b5057ebd236722ab009b64611d8793b5934c739"
    },
    {
      "number": 704,
      "lines": [
        "குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை",
        "உறுப்போ ரனையரால் வேறு."
      ],
      "manakkudavar": "நினைந்ததனைச் சொல்லாமைக் கொள்ளவல்லாரோடு மற்றையர் உறுப்பால் ஒருதன்மையர் அல்லது அறிவினான் வேற்றுமை யுடையார். இது குறிப்பறியாதார் அறிவில்லாதார் என்றது.",
      "pope": "Who reads what's shown by signs, though words unspoken be,In form may seem as other men, in function nobler far is he",
      "sourceFile": "0704.md",
      "sourceSha256": "d54bdf5ba9df3c82ccdb29501f51152f75be37f0c6b22c1498adf141a5cb596c"
    },
    {
      "number": 705,
      "lines": [
        "குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்",
        "என்ன பயத்தவோ கண்?"
      ],
      "manakkudavar": "முகக் குறிப்பினாலே உள்ளக்கருத்தை அறியுமவர்களை, உறுப்பினுள் அவர் வேண்டுவது யாதொன்றாயினும் கொடுத்து, துணையாகக் கூட்டிக் கொள்க. உறுப்பினுள் என்பதற்குத் தனக்கு அங்கமாயினவற்றுள் எனவும் அமையும்.",
      "pope": "By sign who knows not sings to comprehend, what gain,'Mid all his members, from his eyes does he obtain",
      "sourceFile": "0705.md",
      "sourceSha256": "e0395dea858193673567c0af042a888c08943b1da9a9f24193aa0a8e741e856c"
    },
    {
      "number": 706,
      "lines": [
        "அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்",
        "கடுத்தது காட்டும் முகம்."
      ],
      "manakkudavar": "தன்னையடுத்த வண்ணத்தைக் காட்டுகின்ற பளிங்கைப்போல நெஞ்சத்து மிக்கதனை முகம் காட்டும். இது முகம் நெஞ்சத்து வெகுட்சி யுண்டாயின் கருகியும் மகிழ்ச்சியுண்டாயின் மலர்ந்தும் காட்டுமென்றது.",
      "pope": "As forms around in crystal mirrored clear we find,The face will show what's throbbing in the mind",
      "sourceFile": "0706.md",
      "sourceSha256": "53407e9ab8196cc7d8968ddfbfe95f730eaf84a4d9a61cc2faa6d535f901b7a9"
    },
    {
      "number": 707,
      "lines": [
        "முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்",
        "காயினும் தான்முந் துறும்."
      ],
      "manakkudavar": "முகம்போல முதிர்ந்த அறிவுடையது பிறிதுண்டோ? ஒருவனை உவப்பினும் வெறுப்பினும் தான் முற்பட்டுக் காட்டும். குறிப்பறியுமாறு என்னை யென்றார்க்கு, இது முகம் அறிவிக்குமென்றது.",
      "pope": "Than speaking countenance hath aught more prescient skill?Rejoice or burn with rage, 'tis the first herald still",
      "sourceFile": "0707.md",
      "sourceSha256": "dfab98c4004554cbd4138f09073f2ad4cc1a58fd6d807cf73f757d0a45c7b601"
    },
    {
      "number": 708,
      "lines": [
        "முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி",
        "உற்ற துணர்வார்ப் பெறின்."
      ],
      "manakkudavar": "முகத்தை நோக்கி நிற்க அமையும்; தன் மனத்தை நோக்கி அறியலுற்றதனை அறியவல்லாரைப் பெறின். இஃது அமாத்தியர் குறிப்பை அரசனும் அறியவேண்டு மென்றது.",
      "pope": "To see the face is quite enough, in presence brought,When men can look within and know the lurking thought",
      "sourceFile": "0708.md",
      "sourceSha256": "f57a56c388b7d08bce60e73029f02b46c110a707c14723c29d489ed334bb2ef3"
    },
    {
      "number": 709,
      "lines": [
        "பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்",
        "வகைமை உணர்வார்ப் பெறின்."
      ],
      "manakkudavar": "ஒருவனோடுள்ள பகைமையையும் நட்பையும் கண்கள் சொல்லும்; கண்ணினது வேறுபாட்டையறிவாரைப் பெறின். இது கண் கண்டு குறிப்பறிதல் நுண்ணியார்க்கல்லது பிறர்க்கரிதென்றது.",
      "pope": "The eye speaks out the hate or friendly soul of man;To those who know the eye's swift varying moods to scan",
      "sourceFile": "0709.md",
      "sourceSha256": "d15a97bb51e1a135c9037fc8036f3dbb7ce33d1b169aa14702c7bd7d09fd7cf0"
    },
    {
      "number": 710,
      "lines": [
        "நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்",
        "கண்ணல்லது இல்லை பிற."
      ],
      "manakkudavar": "யாம் நுண்ணிய அறிவையுடையே மென்றிருக்கும் அமைச்சர் பிறரை அளக்குங் கோலாவது ஆராயுமிடத்து அவர் கண்ணல்லது பிற இல்லை.",
      "pope": "The men of keen discerning soul no other test apply(When you their secret ask) than man's revealing eye",
      "sourceFile": "0710.md",
      "sourceSha256": "87001db0561306bbde3615545cbc9645bd9f41a1b66ffec8108fd6e5c6322f43"
    },
    {
      "number": 711,
      "lines": [
        "அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்",
        "தொகையறிந்த தூய்மை யவர்."
      ],
      "manakkudavar": "இருந்த அவை யறிந்தாரை யறிந்து அதற்குத்தக்க சொல்லின் திறத்தை ஆராய்ந்து சொல்லுக: சொல்லின் தொகுதியை அறிந்த தூய்மையையுடையவர். தொகையறிதல்- திறனறிதல். இது அவையறிந்து சொல்லல் வேண்டுமென்றது.",
      "pope": "Men pure in heart, who know of words the varied force,Should to their audience known adapt their well-arranged discourse",
      "sourceFile": "0711.md",
      "sourceSha256": "c43694fb07cf7c811728623bd08c8650bcb304190345b855af38b9677e37f1f7"
    },
    {
      "number": 712,
      "lines": [
        "இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்",
        "நடைதெரிந்த நன்மை யவர்."
      ],
      "manakkudavar": "சொன்னால் அதற்கு வருங்குற்றத்தை ஆராய்ந்து நன்மையாமவற்றை யறிந்து சொல்லுக: சொல்லினது வழக்காராய்ந்த நன்மையுடையார். இஃது ஆராய்ந்து சொல்லுமாறு கூறிற்று.",
      "pope": "Good men to whom the arts of eloquence are known,Should seek occasion meet, and say what well they've made their own",
      "sourceFile": "0712.md",
      "sourceSha256": "b939a08778c30d72fcf07e98f9013944cb60b4d46a978fce4f9bfe0e3f0b8463"
    },
    {
      "number": 713,
      "lines": [
        "அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்",
        "வகையறியார் வல்லதூஉம் இல்."
      ],
      "manakkudavar": "அவையினது அளவை அறியாது ஒன்றைச் சொல்லுதலை மேற்கொள்பவர், சொல்லின் வகையும் அறியார்; அவ்வாறன்றி வேறு வல்லதூஉம் இலராவார்.",
      "pope": "Unversed in councils, who essays to speakKnows not the way of suasive words,- and all is weak",
      "sourceFile": "0713.md",
      "sourceSha256": "7ab66f4babe719bc24b1f5b9c66fec5c7f0c2f1560d29b9a5d1111c0320fb004"
    },
    {
      "number": 714,
      "lines": [
        "ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்",
        "வான்சுதை வண்ணம் கொளல்."
      ],
      "manakkudavar": "ஒள்ளிய அறிவுடையார்முன்பு தாமும் ஒள்ளிய அறிவுடையராயிருத்தலும் வெள்ளிய அறிவுடையார் முன்பு வாலியசுதை வண்ணம் போன்ற வெண்மையைக் கொண்டிருத்தலும் அவையறிதலாவது.",
      "pope": "Before the bright ones shine as doth the lightBefore the dull ones be as purest stucco white",
      "sourceFile": "0714.md",
      "sourceSha256": "d85e406d6dcb5fcef97cf01af91f66103b35c8b8976cc4a7663bcec0e1f13960"
    },
    {
      "number": 715,
      "lines": [
        "நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்",
        "முந்து கிளவாச் செறிவு."
      ],
      "manakkudavar": "நன்றென்று சொல்லப்பட்ட எல்லாவற்றுள்ளும் மிக நன்று, தம்மின் முதிர்ந்தார்முன் அவரின் முற்பட்டு ஒன்றனைச் சொல்லாத அடக்கம். முதுவர்- தவத்தாலும் குலத்தாலும் கல்வியாலும் பிற யாதாலும் முதிர்ந்தார். இஃது இருந்த அவையின்கண் முந்துற்றுச் சொல்லல் ஆகா தென்றது.",
      "pope": "Midst all good things the best is modest grace,That speaks not first before the elders' face",
      "sourceFile": "0715.md",
      "sourceSha256": "e3215585f0c964c121962c02b5cda456a783280e8aa112c5c05a5c961f2ffbd2"
    },
    {
      "number": 716,
      "lines": [
        "ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்",
        "ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு."
      ],
      "manakkudavar": "ஒரு நெறியின்கண் நின்றார் அந்நிலைமை குலைந்தாற் போல இகழப்படும், அகன்ற கல்வியைக் கேட்டறியவல்லார் முன்னர்த் தப்புதல். இது தப்புதல் வாராமற் சொல்லல் வேண்டுமென்றது.",
      "pope": "As in the way one tottering falls, is slip beforeThe men whose minds are filled with varied lore",
      "sourceFile": "0716.md",
      "sourceSha256": "a9bcd70d6e2cb358a7d59a55ebb0046e2e3e3877b90deeeb1aaf113f5df9bd4d"
    },
    {
      "number": 717,
      "lines": [
        "கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்",
        "சொல்தெரிதல் வல்லார் அகத்து."
      ],
      "manakkudavar": "நூல்களைக்கற்று அதன்பயனும் அறிந்துள்ளாரது கல்வி விளங்காநிற்கும்; குற்றமறச் சொற்களைச் சொல்லவல்லார் முன்னர்ச் சொல்லின். இது கல்வியின் விழுப்பம் கற்றார்க்கல்லது பிறர்க்கு அறிதலரிதென்றது.",
      "pope": "The learning of the learned sage shines brightTo those whose faultless skill can value it aright",
      "sourceFile": "0717.md",
      "sourceSha256": "55a8436c2cb87681516c0e6bf8cfd3185ac3cbad6066a254cd226736bd0de6b5"
    },
    {
      "number": 718,
      "lines": [
        "உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்",
        "பாத்தியுள் நீர்சொரிந் தற்று."
      ],
      "manakkudavar": "யாதாயினும் ஒன்றைச் சொல்லுங்கால் அதனைத் தெரிந்தறியும் அறிவுடையார்முன்பு சொல்லுவது, வளர்வதொன்று நின்ற பாத்தியின்கண்ணே நீர் சொரிந்தாற்போலும்.",
      "pope": "To speak where understanding hearers you obtain,Is sprinkling water on the fields of growing grain",
      "sourceFile": "0718.md",
      "sourceSha256": "72fdfc16307486ef3886397dbbe042407aa155af6f5493ae3bf6b9b42e8f2368"
    },
    {
      "number": 719,
      "lines": [
        "புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்",
        "நன்குசலச் சொல்லு வார்."
      ],
      "manakkudavar": "புல்லியவரிருந்த அவையின்கண் மறந்துஞ் சொல்லா தொழிக: நல்லவரிருந்த அவையின்கண் நல்லதனை இசையச் சொல்லவல்லார்.",
      "pope": "In councils of the good, who speak good things with penetrating power,In councils of the mean, let them say nought, e'en in oblivious hour",
      "sourceFile": "0719.md",
      "sourceSha256": "5da45770f862f8fe239c835e9c07c9dc3dec175a6dea9fef021a4c414719d8ff"
    },
    {
      "number": 720,
      "lines": [
        "அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்",
        "அல்லார்முன் கோட்டி கொளல்."
      ],
      "manakkudavar": "அங்கணத்தின்கண் உக்க அமுதம் போல இகழப்படுவர்; தம்முடைய இனத்தாரல்லாதார் முன்னர் ஒன்றைச் சொல்லுவாராயின். கல்வியுடையார் புல்லவையுள் சொன்னால் உளதாகுங் குற்றமென்னை யென்றார்க்கு இஃது இகழப்படுவரென்று கூறிற்று.",
      "pope": "Ambrosia in the sewer spilt, is wordSpoken in presence of the alien herd",
      "sourceFile": "0720.md",
      "sourceSha256": "0f3c2b87cbdd2b8ee406a029ca43a70ae341c14fa7f5381a7bed230e3e906ebb"
    },
    {
      "number": 721,
      "lines": [
        "வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்",
        "தொகையறிந்த தூய்மை யவர்."
      ],
      "manakkudavar": "தப்பினால் வருங் குற்றவகையை யறிந்து கற்றுவல்ல அவையின்கண் அஞ்சுதலால் சோர்வுபடச் சொல்லார், சொற்களின் தொகுதியையறிந்த தூய்மையுடையவர். இது மேற்கூறியவற்றால் கற்றவர் தப்பச் சொல்லாரென்று அக்கல்வியால் வரும் பயன்கூறிற்று.",
      "pope": "Men, pure in heart, who know of words the varied force,The mighty council's moods discern, nor fail in their discourse",
      "sourceFile": "0721.md",
      "sourceSha256": "3ea7466a0eb1296dc125c06ad5a7efab3fb68c9a222927c80e6d075c2433b1cd"
    },
    {
      "number": 722,
      "lines": [
        "கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்",
        "கற்ற செலச்சொல்லு வார்."
      ],
      "manakkudavar": "கற்றாரெல்லாரினும் கற்றாரென்று சொல்லப்படுவார், தாம் கற்றதனைக் கற்றார் முன்பு அவர்க்கு ஏற்கச் சொல்லவல்லார். இது கற்றாரென்பார் அவையஞ்சாதார் என்று கூறிற்று.",
      "pope": "Who what they've learned, in penetrating words heve learned to say,Before the learn'd among the learn'd most learn'd are they",
      "sourceFile": "0722.md",
      "sourceSha256": "1de925f777b836e5fa7859149505caf1cb11f7e8a2c11696e8ce769318505595"
    },
    {
      "number": 723,
      "lines": [
        "பகையகத்துச் சாவார் எளியர் அரியர்",
        "அவையகத்து அஞ்சா தவர்."
      ],
      "manakkudavar": "பகையின்கண் அஞ்சாது நின்று சாவார் பெறுதற்கு எளியர்; அவையின்கண் அஞ்சாது சொல்லவல்லவர் அறிதற்கு அரியர். இஃது அவையஞ்சாமை அரிதென்றது.",
      "pope": "Many encountering death in face of foe will hold their ground;Who speak undaunted in the council hall are rarely found",
      "sourceFile": "0723.md",
      "sourceSha256": "67fd9e8fd40419116adb788fc6514993cda1ac84e85b9feb406537abb9b69034"
    },
    {
      "number": 724,
      "lines": [
        "கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற",
        "மிக்காருள் மிக்க கொளல்."
      ],
      "manakkudavar": "தாம் கற்றதனைக் கற்றவர்முன்பு இசையச் சொல்லித் தாம் கற்றதினும் மிகக் கற்றார்மாட்டு அவர் மிகுதியாகக் கூறும் பொருளைக் கேட்டுக் கொள்ளுதல் அவையஞ்சாமையாவது.",
      "pope": "What you have learned, in penetrating words speak out beforeThe learn'd; but learn what men more learn'd can teach you more",
      "sourceFile": "0724.md",
      "sourceSha256": "2943cab68f60b3c815dd35474c2767fd903891a43b4cafe9f8ce056d87c2228c"
    },
    {
      "number": 725,
      "lines": [
        "ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா",
        "மாற்றங் கொடுத்தற் பொருட்டு."
      ],
      "manakkudavar": "அவையஞ்சாது மறுமாற்றம் சொல்லுதற்காக நெறிமையானே நூல்களை அளவறிந்து கற்க வேண்டும். நூல் கற்றலாவது (1) மெய்யாராய்ச்சியாகிய நூலைக்கற்றலும், (2) வேதமும் ஆகமமும் கற்றலும், (3) உழவும் வாணிகமும் கற்றலும், (4) படைவாங்கல் மநுநீதி முதலியன கற்றலுமென நான்குவகைப்படும்.",
      "pope": "By rule, to dialectic art your mind apply,That in the council fearless you may make an apt reply",
      "sourceFile": "0725.md",
      "sourceSha256": "2c2e67e0e9df9d3a173160db1167234a74be1cac9149e8758aff589f3b223de4"
    },
    {
      "number": 726,
      "lines": [
        "வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்",
        "நுண்ணவை அஞ்சு பவர்க்கு."
      ],
      "manakkudavar": "வன்கண்ணரல்லாதவர்க்கு வாளினாற் பயனென்னை? அதுபோல, நுண்ணிய அவையின்கண் அஞ்சுவார்க்கு நூலினாற் பயனென்னை? இது பிறர்க்குப் பயன்படாமையேயன்றித் தமக்கும் பயன்படாரென்றது.",
      "pope": "To those who lack the hero's eye what can the sword availOr science what, to those before the council keen who quail",
      "sourceFile": "0726.md",
      "sourceSha256": "da8b89fa820bbf5cd6f69e91259a2d2b89c73192338a73115a066067106cd7e5"
    },
    {
      "number": 727,
      "lines": [
        "பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து",
        "அஞ்சு மவன்கற்ற நூல்."
      ],
      "manakkudavar": "பகையின்கண் அஞ்சுமவன் பிடித்த கூர்வாள் போலும், அவையின்கண் அஞ்சுமவன் கற்றநூலும்.மேல் பயனில்லை யென்றார் இங்குப் பயனில்லாதவாறு காட்டினார்.",
      "pope": "As shining sword before the foe which 'sexless being' bears,Is science learned by him the council's face who fears",
      "sourceFile": "0727.md",
      "sourceSha256": "8ca55188e3520358513ef12916f5c7f210dffc299aedd9f606a74e8c7436a442"
    },
    {
      "number": 728,
      "lines": [
        "பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்",
        "நன்கு செலச்சொல்லா தார்."
      ],
      "manakkudavar": "பலநூல்களைக் கற்றாலும் ஒருபயனில்லாதவரே: நல்லவையின்கண் நன்றாக அவர்க்கு ஏற்கச் சொல்ல மாட்டாதார். இஃது அவையஞ்சுவார் கற்றகல்வி பிறர்க்குப் பயன்படாதென்றது.",
      "pope": "Though many things they've learned, yet useless are they all,To man who cannot well and strongly speak in council hall",
      "sourceFile": "0728.md",
      "sourceSha256": "15e3ac07a7d54bd5fc73e569728e902f4f911b9ef9aea8963e7aa19d93fa8fa9"
    },
    {
      "number": 729,
      "lines": [
        "கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்",
        "நல்லா ரவையஞ்சு வார்."
      ],
      "manakkudavar": "கல்லாதவரினும் கடையரென்று சொல்லப்படுவர்; உலகநூல் கற்றறிந்துவைத்தும் நல்லாரிருந்த அவையின்கண் சொல்லுதலஞ்சுவார். இது கல்லாதவரினும் இகழப்படுவரென்றது.",
      "pope": "Who, though they've learned, before the council of the good men quake,Than men unlearn'd a lower place must take",
      "sourceFile": "0729.md",
      "sourceSha256": "57d4f4b5be2e75c334b734c7d16f30b1a159a59e94e944dd762b8b77fc80541c"
    },
    {
      "number": 730,
      "lines": [
        "உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்",
        "கற்ற செலச்சொல்லா தார்."
      ],
      "manakkudavar": "உளராயினும் செத்தாரோடு ஒப்பார்: அவைக்களத்தை அஞ்சித் தாம் கற்றதனை அதற்கு இசையச் சொல்லமாட்டாதார். இது செத்தாரோடு ஒப்பரென்றது. இவை ஐந்தும் அவையஞ்சுதலான் வருங்குற்றம்கூறின.",
      "pope": "Who what they've learned, in penetrating words know not to say,The council fearing, though they live, as dead are they",
      "sourceFile": "0730.md",
      "sourceSha256": "2ee6f82d271c659e615b7920458fed75bd9ac49dc0fabdb5ce3e0e9d4d08098d"
    },
    {
      "number": 731,
      "lines": [
        "தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்",
        "செல்வரும் சேர்வது நாடு."
      ],
      "manakkudavar": "தப்பாமல் விளையும் நிலங்களும் தகுதி யுடையாரும் தாழ்வில்லாத செல்வரும் சேர்வது நாடு. தள்ளா விளையுள்- மழையில்லாத காலத்தினும் சாவிபோகாத நிலம்.",
      "pope": "Where spreads fertility unfailing, where resides a band,Of virtuous men, and those of ample wealth, call that a 'land'",
      "sourceFile": "0731.md",
      "sourceSha256": "ec3c8e865438165339e596e3d7cc27d1b1b9f11ce3d1b89ed44049f87e02df9e"
    },
    {
      "number": 732,
      "lines": [
        "பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்",
        "ஆற்ற விளைவது நாடு."
      ],
      "manakkudavar": "பெரும்பொருளாலே விரும்பத்தக்கதாகிக் கேடரிதாதலோடே மிகவும் விளைவது நாடு. பெரும்பொருள்- நெல்லு. கேடாவது விட்டில், கிளி, நால்வாய், பெரும் புயலென் றிவற்றான் வரும்நட்டம்.",
      "pope": "That is a 'land' which men desire for wealth's abundant share,Yielding rich increase, where calamities are rare",
      "sourceFile": "0732.md",
      "sourceSha256": "fe8019c737ca7e797d39c8db1234404b8d68031d56bad3b4c447d34cace62b9b"
    },
    {
      "number": 733,
      "lines": [
        "பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு",
        "இறையொருங்கு நேர்வது நாடு."
      ],
      "manakkudavar": "குடிமை செய்தால், ஒரு காலத்திலே பல குற்றம் தன்னிடத்துவரினும் அதனைப் பொறுத்து, நிச்சயித்த கடமையை அரசனுக்கு ஒருங்கு கொடுக்க வல்லது நாடு. குடிமையாவது கடமையொழிய வருவது.",
      "pope": "When burthens press, it bears; Yet, With unfailing handTo king due tribute pays: that is the 'land'",
      "sourceFile": "0733.md",
      "sourceSha256": "237efbf06ec7a9aa176d5afa22dcbc2f2425f6e10e6a28f7ddaa0185a769c536"
    },
    {
      "number": 734,
      "lines": [
        "உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்",
        "சேரா தியல்வது நாடு."
      ],
      "manakkudavar": "மிகுந்த பசியும், இடையறாத பிணியும், ஒறுக்கும் பகையும், சேராது இயல்வது நாடு. இது சேர்தலாகாதன கூறிற்று.",
      "pope": "That is a 'land' whose peaceful annals know,Nor famine fierce, nor wasting plague, nor ravage of the foe",
      "sourceFile": "0734.md",
      "sourceSha256": "33bf7b6a7aec0615f78bedab156cb673295fa046f426e24e35b68123aa4eaf36"
    },
    {
      "number": 735,
      "lines": [
        "பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்",
        "கொல்குறும்பும் இல்லது நாடு."
      ],
      "manakkudavar": "பலபலவாய்த் திரளுந் திரட்சியும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்தனை யலைக்கின்ற கொலைத் தொழிலினையுடைய குறும்பரும் இல்லாதது நாடு.",
      "pope": "From factions free, and desolating civil strife, and bandOf lurking murderers that king afflict, that is the 'land'",
      "sourceFile": "0735.md",
      "sourceSha256": "db7d58b0d8d45d54ff3139dc318fd9c0c0b363706a5baa83ce4727b2a6ef881a"
    },
    {
      "number": 736,
      "lines": [
        "கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா",
        "நாடென்ப நாட்டின் தலை."
      ],
      "manakkudavar": "கேடு அறியா - பகைவரால் கெடுதலறியாததாய்; கெட்டவிடத்தும் வளம் குன்றா நாடு - அரிதின் கெட்டதாயினும் அப்பொழுதும் தன் வளங்குன்றாத நாட்டினை; நாட்டின் தலை என்ப- எல்லா நாட்டிலும் தலை என்று சொல்லுவர் நூலோர். ('அறியாத', 'குன்றாத' என்னும் பெயரெச்சங்களின் இறுதி நிலைகள் விகாரத்தால் தொக்கன. கேடு அறியாமை அரசனாற்றலானும், கடவுட்பூசை அறங்கள் என்றிவற்றது செயலானும் வரும். வளம் - ஆகரங்களிற் படுவனவும், வயலினும் தண்டலையினும் விளைவனவுமாம். குன்றாமை: அவை செய்ய வேண்டாமல் இயல்பாகவே உளவாயும் முன் ஈட்டப்பட்டும் குறைவறுதல். இவை ஆறு பாட்டானும் நாட்டது இலக்கணம் கூறப்பட்டது.).",
      "pope": "Chief of all lands is that, where nought disturbs its peace;Or, if invaders come, still yields its rich increase",
      "sourceFile": "0736.md",
      "sourceSha256": "f230042d87f5be2c1d6e189037e0acaade86d360bed6e2e09e6e2bf7fcad5f90"
    },
    {
      "number": 737,
      "lines": [
        "இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்",
        "வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு."
      ],
      "manakkudavar": "இருபுனலும் - 'கீழ் நீர்', 'மேல்நீர்' எனப்பட்ட தன்கண் நீரும்; வாய்ந்தமலையும் - வாய்ப்புடையதாய மலையும்; வருபுனலும் - அதனினின்றும் வருவதாய நீரும்; வல்லரணும் - அழியாத நகரியும்; நாட்டிற்கு உறுப்பு - நாட்டிற்கு அவயமாம். (ஈண்டுப் புனல் என்றது துரவு கேணிகளும் ஏரிகளும்ஆறுகளுமாகிய ஆதாரங்களை, அவயமாதற்குரியன அவையேஆகலின். அவற்றான் வானம் வறப்பினும் வளனுடைமை பெறப்பட்டது. இடையதன்றி ஒருபுடையதாகலும், தன் வளம் தருதலும், மாரிக்கண் உண்ட நீர் கோடைக்கண் உமிழ்தலும் உடைமைபற்றி 'வாய்ந்த மலை' என்றார். அரண் -ஆகுபெயர். இதனான் அதன் அவயவம் கூறப்பட்டது.) .",
      "pope": "Waters from rains and springs, a mountain near, and waters thence;These make a land, with fortress' sure defence",
      "sourceFile": "0737.md",
      "sourceSha256": "10c9e4467278f2e444d9f4fd1f49d8f9d1b059b98a30dcdaf15c89b0f35b949c"
    },
    {
      "number": 738,
      "lines": [
        "பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்",
        "அணியென்ப நாட்டிவ் வைந்து."
      ],
      "manakkudavar": "நோயின்மையும், செல்வமுடைமையும், விளைவுடைமையும், இன்பமுடைமையும், காவலுடைமையுமென்று சொல்லப்பட்ட இவையைந்தும் நாட்டிற்கு அழகென்று சொல்லுவர்.",
      "pope": "A country's jewels are these five: unfailing health,Fertility, and joy, a sure defence, and wealth",
      "sourceFile": "0738.md",
      "sourceSha256": "14e6a6a7d8f9ea61ead71dac8b25273a538fb0932691a08921e0f2ed29e45bf5"
    },
    {
      "number": 739,
      "lines": [
        "நாடென்ப நாடா வளத்தன நாடல்ல",
        "நாட வளந்தரு நாடு."
      ],
      "manakkudavar": "தேடவேண்டாத வளத்தினை யுடைய நாட்டை நாடென்று சொல்லுவர்: தேடினால் வளந்தருகின்ற நாட்டை நாடல்ல வென்று சொல்லுவர்.",
      "pope": "That is a land that yields increase unsought,That is no land whose gifts with toil are bought",
      "sourceFile": "0739.md",
      "sourceSha256": "d30a2a06aec5e4b29e13e0e57030a2a565dea2567dafa48dce0819b4a82020b6"
    },
    {
      "number": 740,
      "lines": [
        "ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே",
        "வேந்தமை வில்லாத நாடு."
      ],
      "manakkudavar": "மேற்கூறியவற்றால் எல்லாம் அமைந்ததாயினும் பயனில்லையாம்; வேந்தனது அமைதியை உடைத்தல்லாத நாடு. இதுநாட்டுக்கு அரசனும் பண்புடையனாகல் வேண்டுமென்றது.",
      "pope": "Though blest with all these varied gifts' increase,A land gains nought that is not with its king at peace",
      "sourceFile": "0740.md",
      "sourceSha256": "c025d8faa7c22b12fe465c598699d26726df8fa089d36da39f21c89bc40c10a8"
    },
    {
      "number": 741,
      "lines": [
        "ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்",
        "போற்று பவர்க்கும் பொருள்."
      ],
      "manakkudavar": "வலியுடையார்க்கும் அரணுடைமை பொருளாவது; பகைவர்க்கு அஞ்சித் தன்னைக் காப்பார்க்கும் அரணுடைமை பொருளாவதாம்; ஆதலால் அதனைச் செய்யவேண்டும்.",
      "pope": "A fort is wealth to those who act against their foes;Is wealth to them who, fearing, guard themselves from woes",
      "sourceFile": "0741.md",
      "sourceSha256": "6f4f1cd86e65909e1ec901271baae536184b4ee120c29c813010a807a77d629f"
    },
    {
      "number": 742,
      "lines": [
        "மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்",
        "காடும் உடைய தரண்."
      ],
      "manakkudavar": "தெளிந்த நீராயினும், நிழலும் நீருமிலாத வெறுநிலமாயினும், மலையாயினும், அழகிய நிழலினையுடைய காடாயினும் உடையது அரணாம். தெளிந்தநீர்- பெருநீர். இது கலங்காதாதலின். அணி நிழற்காடு என்றதனாலே செறிவுடைய காடென்று கொள்ளப்படும்.",
      "pope": "A fort is that which owns fount of waters crystal clear,An open space, a hill, and shade of beauteous forest near",
      "sourceFile": "0742.md",
      "sourceSha256": "d991a7b1535f6dd3d4be3e1dd405284fe6f59b7190cbff603a946525e22347de"
    },
    {
      "number": 743,
      "lines": [
        "உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்",
        "அமைவரண் என்றுரைக்கும் நூல்."
      ],
      "manakkudavar": "உயர்ச்சியும், அகலமும், திண்மையும், கிட்டுதற்கு அருமையுமென்னும் இந்நான்கினது அமைதியுடையது மதிலாமென்று சொல்லுவர் நூலோர். திண்மையென்பது கல்லும் இட்டிகையும் இட்டுச் செய்தல்.",
      "pope": "Height, breadth, strength, difficult access:Science declares a fort must these possess",
      "sourceFile": "0743.md",
      "sourceSha256": "aa3efb31c5115b48f734631eef791caef912099849017f995f625e1563b643de"
    },
    {
      "number": 744,
      "lines": [
        "சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை",
        "ஊக்கம் அழிப்ப தரண்."
      ],
      "manakkudavar": "காக்கவேண்டும் இடம் சிறிதாய், மதிலகம் பெரிய இடத்தையுடைத்தாய், மதிலையுற்ற பகைவரது மிகுதியைக் கெடுப்பது அரணாவது. சிறு காவலாவது ஒருபக்கம் மலையாயினும் நீராயினும் உடைத்தாதல்.",
      "pope": "A fort must need but slight defence, yet ample be,Defying all the foeman's energy",
      "sourceFile": "0744.md",
      "sourceSha256": "75db030160bbb218e5ad36d260fde3a95acd4199c3ba8f09fa2bcf9aea1fc48b"
    },
    {
      "number": 745,
      "lines": [
        "கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்",
        "நிலைக்கெளிதாம் நீரது அரண்."
      ],
      "manakkudavar": "பகைவரால் கொள்ளுதற்கு அரிதாய்த் தன்னகத்தே அமைக்கப்பட்ட உணவையும் உடைத்தாய் அகத்துறைவார்க்கு நிற்றற்கு எளிதாகும் நீரையுடைத்தாயிருப்பது அரணாவது. எனவே, புறத்தார்க்கு நிற்றற்கரிதாகும் நீரையுடைத்தாதலும் வேண்டுமென்றவாறாயிற்று; தூரத்தில் நீரைப் பிறரறியாமல் உள்ளே புகுதவிடுதலும் வேண்டும் என்பதாம்.",
      "pope": "Impregnable, containing ample stores of food,A fort for those within, must be a warlike station good",
      "sourceFile": "0745.md",
      "sourceSha256": "3abcdcb18537fc30c7d72025161f8bdb7af79e41cdb351197aeaddaff4b0d05e"
    },
    {
      "number": 746,
      "lines": [
        "எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்",
        "நல்லாள் உடையது அரண்."
      ],
      "manakkudavar": "எல்லாப் பொருள்களையும் உடைத்தாய், உற்றவிடத்து உதவவல்ல வீரரையுடையது அரண். எல்லாப் பொருளமாவன-நுகரவேண்டுவனவும் படைக்கலங்களும்.",
      "pope": "A fort, with all munitions amply stored,In time of need should good reserves afford",
      "sourceFile": "0746.md",
      "sourceSha256": "a4429f09a667ae84c70f24387561825155a6457ec639ecb2372f02a615653bae"
    },
    {
      "number": 747,
      "lines": [
        "முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்",
        "பற்றற் கரியது அரண்."
      ],
      "manakkudavar": "சூழவிட்டும், சூழவிடாதே ஒருபக்கமாகப் போர் செய்தும், அரணிலுள்ளாரைக் கீழறுத்தும் இம்மூன்றினாலும் கொள்ளுதற்கு அரியது அரணாவது.",
      "pope": "A fort should be impregnable to foes who gird it round,Or aim there darts from far, or mine beneath the ground",
      "sourceFile": "0747.md",
      "sourceSha256": "5939187fe821c9b46ef9c0d54ca39f9f607bc436143f0b41b2b4b77eaf0fb363"
    },
    {
      "number": 748,
      "lines": [
        "முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்",
        "பற்றியார் வெல்வது அரண்."
      ],
      "manakkudavar": "சூழவல்லாரைச் சூழ்ந்து நலிந்தவரையும் தன்னகத்து நின்று காக்கவல்லவராய்க் காப்பவர் வெல்வது அரணாவது. பற்றாற்றுதல் -தாம் பற்றின இடம் விடாது வெல்லுதல்.",
      "pope": "Howe'er the circling foe may strive access to win,A fort should give the victory to those who guard within",
      "sourceFile": "0748.md",
      "sourceSha256": "5f2cbbee5396b69595e280d12036c786af562a4ed266bbdffb2e11d9332b4dbd"
    },
    {
      "number": 749,
      "lines": [
        "முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து",
        "வீறெய்தி மாண்ட தரண்."
      ],
      "manakkudavar": "முந்துற்ற முகத்தினையுடைய பகைவர் கெடும்படியாக, வினை செய்யும் இடத்து வெற்றியெய்தி மாட்சிமைப்பட்டது அரணாவது. அஃதாவது அட்டாலகமும் மதிற்பொறியும் முதலாயின மதிற்றலையில் அமைத்தல்.",
      "pope": "At outset of the strife a fort should foes dismay;And greatness gain by deeds in every glorious day",
      "sourceFile": "0749.md",
      "sourceSha256": "c903cd987c89fb0e94e1a12afe044881ac9532e1df1f15c8a039921f73921efb"
    },
    {
      "number": 750,
      "lines": [
        "எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி",
        "இல்லார்கண் இல்லது அரண்."
      ],
      "manakkudavar": "சொல்லப்பட்ட எல்லா மாட்சிமையும் உடைத்தாயினும் வினையின்கண் மாட்சிமை இல்லாதார்மாட்டு அரணாற் பயனில்லை. இது வினைவல்லாரும் வேண்டு மென்றது.",
      "pope": "Howe'er majestic castled walls may rise,To craven souls no fortress strength supplies",
      "sourceFile": "0750.md",
      "sourceSha256": "2f4c50c3550223080962ee8844220983a4f3ef655555b75a72feb777cdf433a4"
    },
    {
      "number": 751,
      "lines": [
        "பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்",
        "பொருளல்லது இல்லை பொருள்."
      ],
      "manakkudavar": "ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் பொருளாக மதிக்கப் பண்ணுவதாகிய பொருளையல்லது வேறு பொருள் என்று சொல்லப்படுவதில்லை. இது வடிவில்லாதாரைப் பெண்டிரிகழ்வார்; பொருளுடையாரை யாவரும் நன்றாக மதிப்பரென்றது.",
      "pope": "Nothing exists save wealth, that canChange man of nought to worthy man",
      "sourceFile": "0751.md",
      "sourceSha256": "245b9b2469c5414452a865637bb76f47c97627124546de4aa708a2d80e50de85"
    },
    {
      "number": 752,
      "lines": [
        "இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை",
        "எல்லாரும் செய்வர் சிறப்பு."
      ],
      "manakkudavar": "பொருளில்லாதாரை எல்லாரும் இகழுவர்; பொருளுடையாரை எல்லாருஞ் சிறப்புச் செய்வர். இது சிறப்பெய்தலும் பொருளுடைமையாலே வருமென்றது.",
      "pope": "Those who have nought all will despise;All raise the wealthy to the skies",
      "sourceFile": "0752.md",
      "sourceSha256": "43868dfbb27705aceb751986173a31021601b07c9eb67538c7ce57c3ad7f12f3"
    },
    {
      "number": 753,
      "lines": [
        "பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்",
        "எண்ணிய தேயத்துச் சென்று."
      ],
      "manakkudavar": "பொருளென்னும் மெய்யாகிய ஒளி எண்ணப்பட்ட தேசமெல்லாவற்றினுஞ் சென்று பகையென்னும் இருளை அறுக்கும். இது, பொருள் ஒளியில்லாதார்க்கும் ஒளியுண்டாக்கும்; அரசன் பொருளுடையனானால் தான் கருதிய தேசமெல்லாம் தன்னாணை நடத்துவானென்றது.",
      "pope": "Wealth, the lamp unfailing, speeds to every land,Dispersing darkness at its lord's command",
      "sourceFile": "0753.md",
      "sourceSha256": "e7c9122a3fbe34e898a114ccd3aa3902a36be2e9c80213ce50d5e3d14bda55ec"
    },
    {
      "number": 754,
      "lines": [
        "அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து",
        "தீதின்றி வந்த பொருள்."
      ],
      "manakkudavar": "அறத்தையும் தரும்: இன்பதையும் தரும்: பொருள் வருந்திறமறிந்து பிறர்க்குத் தீமை பயத்தலின்றி வந்த பொருள். இது பொருளால் கொள்ளும் பயன் அறஞ்செய்தலும் இன்பம் நுகர்தலும் அன்றே: அவ்விரண்டினையும் பயப்பது நியாயமாகத் தேடியபொருளாமாதலின் என்றது.",
      "pope": "Their wealth, who blameless means can use aright,Is source of virtue and of choice delight",
      "sourceFile": "0754.md",
      "sourceSha256": "40e9823e1fa4eb52cf513ddccbdb551ccdd5301a238348845be66437834a9999"
    },
    {
      "number": 755,
      "lines": [
        "அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்",
        "புல்லார் புரள விடல்."
      ],
      "manakkudavar": "அருளுடைமையோடும் அன்புடைமையோடும் வாராத பொருளால் வரும் ஆக்கத்தைப் பொருந்தாது போக விடுக. இது பொருள் தேடுங்கால் பிறர் வருத்தத்திற்கு உபகரியாதும் பயின்றார் மாட்டுக் காதலில்லாமலும் பொருள்தேடுதலைத் தவிர்கவென்றது.",
      "pope": "Wealth gained by loss of love and grace,Let man cast off from his embrace",
      "sourceFile": "0755.md",
      "sourceSha256": "82aece66bb09d1b8944bbd6e08295be56f37e160d963b90b7d1733a4b8fa8353"
    },
    {
      "number": 756,
      "lines": [
        "உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்",
        "தெறுபொருளும் வேந்தன் பொருள்."
      ],
      "manakkudavar": "தானே வந்துற்ற பொருளும், ஆயத்தால் வரும் பொருளும், தன் பகைவரை யடர்த்துக்கொண்ட பொருளும் அரசனுக்குப் பொருளாம். உறுபொருள்- காவற் பொருள்.",
      "pope": "Wealth that falls to him as heir, wealth from the kingdom's dues,",
      "sourceFile": "0756.md",
      "sourceSha256": "5453c9256f4f52ddc67b93cf654e44e01031d8a7add892391906fb0201c1dfcf"
    },
    {
      "number": 757,
      "lines": [
        "அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்",
        "செல்வச் செவிலியால் உண்டு."
      ],
      "manakkudavar": "அறம் செய்தற்குக் காரணமாகிய அன்பினின்றும் தோன்றிய அருளாகிய குழவி, பொருளென்று சொல்லப்படும் செல்வத்தை யுடைய செவிலித்தாய் வளர்த்தலாலே உண்டாம். இது பொருளுடையார்க்கே அறஞ்செய்தலாவதென்பது கூறிற்று.",
      "pope": "'Tis love that kindliness as offspring bears:And wealth as bounteous nurse the infant rears",
      "sourceFile": "0757.md",
      "sourceSha256": "b5172a31c5a2ee96ade62cd3a18e710e267a578a23342c0b7736dfcd46051f0a"
    },
    {
      "number": 758,
      "lines": [
        "குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று",
        "உண்டாகச் செய்வான் வினை."
      ],
      "manakkudavar": "குன்றின்மேல் ஏறியிருந்து யானையோடு யானை போர் செய்தலைக் கண்டாற் போலும். தன் கையகத்து எய்திய பொருளுண்டாக ஒரு வினையை யெடுத்துக் கொண்டு தொடங்கினவன் செய்யும் வினை. இது பொருளுடையார் தாம் வருந்தாமல் பிறரை வினைசெய்வாராக ஏவி வினைக்கண் விட்டிருக்கலாமென்றது.",
      "pope": "As one to view the strife of elephants who takes his stand,On hill he's climbed, is he who works with money in his hand",
      "sourceFile": "0758.md",
      "sourceSha256": "fff4694c08b7bd0f2f6d36c98e217fbf85b18510a4ea65caecf65e567813638e"
    },
    {
      "number": 759,
      "lines": [
        "செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்",
        "எஃகதனிற் கூரிய தில்."
      ],
      "manakkudavar": "பொருளையுண்டாக்குக; பகைவரது பெருமிதத்தை யறுக்கலாங் கருவி அப்பொருள்போலக் கூரியது பிறிது இல்லை. இது பொருளீட்டல் வேண்டுமென்றது.",
      "pope": "Make money! Foeman's insolence o'ergrownTo lop away no keener steel is known",
      "sourceFile": "0759.md",
      "sourceSha256": "1fb1494e6d836fab2273f5c179bd765ac0ccb8205f384fa06043a9b8eaca9c40"
    },
    {
      "number": 760,
      "lines": [
        "ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்",
        "ஏனை இரண்டும் ஒருங்கு."
      ],
      "manakkudavar": "ஒள்ளிய பொருளை முற்ற உண்டாக்கினார்க்கு ஒழிந்த அறமும் காமமுமாகிய பொருளிரண்டும் ஒருங்கே எளியபொருளாக வெய்தலாம்.",
      "pope": "Who plenteous store of glorious wealth have gained,By them the other two are easily obtained",
      "sourceFile": "0760.md",
      "sourceSha256": "e2fed62b0fad0b026e0d83444c32a6ce5634561a32cc434c0e4175681a16bdd0"
    },
    {
      "number": 761,
      "lines": [
        "உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்",
        "வெறுக்கையுள் எல்லாம் தலை."
      ],
      "manakkudavar": "யானை, குதிரை, தேர், கருவி, காலாளாகிய உறுப்புகளால் அமைந்து, இடுக்கண் உற்றால் அதற்கு அச்சமின்றி, வெற்றியுடைய படை, அரசன் தேடியபொரு ளெல்லாவற்றினும் தலையான பொருள்; ஆதலால் படைவேண்டும்.",
      "pope": "A conquering host, complete in all its limbs, that fears no wound,Mid treasures of the king is chiefest found",
      "sourceFile": "0761.md",
      "sourceSha256": "f1b7d5cab1053654d47e5cbee40611308478552d1c9236af0a71c326598fcc8a"
    },
    {
      "number": 762,
      "lines": [
        "உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்",
        "தொல்படைக் கல்லால் அரிது."
      ],
      "manakkudavar": "அரசர் கெடுமிடத்து வழிவந்த படைக்கு அல்லது பிறபடைக்குப் போர்க்களத்து அழிவு வந்தவிடத்து, உயிர்க்கு வரும் ஊறு அஞ்சாத வன்கண்மை இல்லை. வழிவந்த படை-வீரன் மகன் வீரன்.",
      "pope": "In adverse hour, to face undaunted might of conquering foe,Is bravery that only veteran host can show",
      "sourceFile": "0762.md",
      "sourceSha256": "b5565e4d225d7016de2530055efa5ccfbf9a58cdcec260cac11c44d0fc2d8391"
    },
    {
      "number": 763,
      "lines": [
        "ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை",
        "நாகம் உயிர்ப்பக் கெடும்."
      ],
      "manakkudavar": "கடல்போல ஒலித்தாலும் எலியினது மாறுபாட்டினால் வருந்தீமை யென்னுளதாம்; எலி நாகம் உயிர்த்த அளவிலே கெடும். இது படைமிகுத்தது வெல்லுமென்று கருதாது வீரரைத் தௌ¤ந்தாளல் வேண்டுமென்றது.",
      "pope": "Though, like the sea, the angry mice send forth their battle cry;What then? The dragon breathes upon them, and they die",
      "sourceFile": "0763.md",
      "sourceSha256": "3ff8e42b9c2cf723446edf340177be9d0129a7262207b2ac2b92003d38e93fe4"
    },
    {
      "number": 764,
      "lines": [
        "அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த",
        "வன்க ணதுவே படை."
      ],
      "manakkudavar": "கெடுதலின்றிக் கீழறுக்கப்படாததாகிக் குலத்தின் வழிவந்த அஞ்சாமையையுடையதே படையாவது. வழிவருதல்- வீரன்மகன் வீரனாகுதல். இது படையினது நன்மைகூறிற்று.",
      "pope": "That is a host, by no defeats, by no desertions shamed,For old hereditary courage famed",
      "sourceFile": "0764.md",
      "sourceSha256": "82b588d61d797b643c013d054c95f6f80478283de50dc8b92dd88640eb859c6b"
    },
    {
      "number": 765,
      "lines": [
        "கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்",
        "ஆற்ற லதுவே படை."
      ],
      "manakkudavar": "கூற்றமானது வெகுண்டு தன்மேல்வரினும், சிதறுதல் இன்றியே எதிர் நிற்கவல்ல வலியுடையதே படையாவது. இது மாற்றான் மேல்வந்தால் பொறுக்கவேண்டு மென்றது.",
      "pope": "That is a 'host' that joins its ranks, and mightily withstands,Though death with sudden wrath should fall upon its bands",
      "sourceFile": "0765.md",
      "sourceSha256": "c38e9b7848f8487ed5890b0b78fefa47bb576e7456598d87852df0c7cd001108"
    },
    {
      "number": 766,
      "lines": [
        "மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்",
        "எனநான்கே ஏமம் படைக்கு."
      ],
      "manakkudavar": "மறமும், மானமும், நல்லவழிச்சேறலும், தௌ¤வுடைமையுமென இந்நான்குமே படைக்கு அரணாம். நல்வழிச் சேறலாவது மறஞ்செய்யுங் காலத்துக் கலக்க மின்மை.",
      "pope": "Valour with honour, sure advance in glory's path, with confidence;To warlike host these four are sure defence",
      "sourceFile": "0766.md",
      "sourceSha256": "543406572a5bc92324ac8b575164b43d590fd60bda791c7dfc44188391312876"
    },
    {
      "number": 767,
      "lines": [
        "தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த",
        "போர்தாங்கும் தன்மை அறிந்து."
      ],
      "manakkudavar": "உற்றவிடத்து உற்றபோரினைத் தடுக்கும் இயல்பறிந்து, தாரைப் பொறுத்து மேற்செல்லவல்லது படையாவது. இது முந்திச் செல்லவேண்டுமென்பதூஉம் செல்லுங்கால் இடமறிந்து செல்ல வேண்டுமென்பதூஉம் கூறிற்று.",
      "pope": "A valiant army bears the onslaught, onward goes,Well taught with marshalled ranks to meet their coming foes",
      "sourceFile": "0767.md",
      "sourceSha256": "cf9d853333bec17dc8ade28bd8981aff5144ff857f72c052e2f497959cdd6199"
    },
    {
      "number": 768,
      "lines": [
        "அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை",
        "படைத்தகையால் பாடு பெறும்."
      ],
      "manakkudavar": "பகைவரைக் கொல்லுந் தகுதியும் அவர் மேல்வந்தால் பொறுக்கும் ஆற்றலும் இல்லையாயினும் சேனையானது படையழகினால் பெருமைபெறும்.படையழகென்றது தேர் யானை குதிரைகளின் அலங்காரமும், கொடியும், குடையும், முரசும், காகளமும் முதலாயினவற்றால் அழகு பெறுதல்.இஃது அரசன் படையழகு அமைக்கவேண்டு மென்றது.",
      "pope": "Though not in war offensive or defensive skilled;An army gains applause when well equipped and drilled",
      "sourceFile": "0768.md",
      "sourceSha256": "5fdb37c96b4eb848ef063215c3c477adc0f91da9347d56f0bf541df43cf908c0"
    },
    {
      "number": 769,
      "lines": [
        "சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்",
        "இல்லாயின் வெல்லும் படை."
      ],
      "manakkudavar": "தான் தேய்ந்து சிறிதாகலும், மனத்தினின்று நீங்காத வெறுப்பும், நல்குரவும் தனக் கில்லை யாயின், படை பகையை வெல்லும்.",
      "pope": "Where weakness, clinging fear and povertyAre not, the host will gain the victory",
      "sourceFile": "0769.md",
      "sourceSha256": "0d8a341c8857824a7004d4097a6401d0abda7400251cd0ffe9a80ffde690a22d"
    },
    {
      "number": 770,
      "lines": [
        "நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை",
        "தலைமக்கள் இல்வழி இல்."
      ],
      "manakkudavar": "படையானது நிலையுடைய வீரரைப் பெரிது உடைத்தாயினும் தனக்குத் தலைவரை இல்லாத விடத்துத் தனக்கு வெற்றியில்லையாம். இது படையமைத்தாலும் படைத்தலைவரையும் அமைக்க வேண்டுமென்றது.",
      "pope": "Though men abound, all ready for the war,No army is where no fit leaders are",
      "sourceFile": "0770.md",
      "sourceSha256": "e603dab0a9363df765b96dba1ead10acb212986c114f3f8cb8825010c8cb682d"
    },
    {
      "number": 771,
      "lines": [
        "என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை",
        "முன்நின்று கல்நின் றவர்."
      ],
      "manakkudavar": "என்னுடைய ஐயன் முன்னர்ப் பகைவீரரே! நில்லாது ஒழிமின்; முன்னாள் இவன் முன்னே நின்று, கல்லிலே எழுதப்பட்டு நிற்கின்றார் பலராதலால் என்றவாறு. இஃது எளியாரைப் போகச் சொல்லி, எதிர்ப்பாரோடு பொரவேண்டும் என்றது.",
      "pope": "Ye foes stand not before my lord for many a oneWho did my lord withstand, now stands in stone",
      "sourceFile": "0771.md",
      "sourceSha256": "8086e3b8636d7d6d56da2805496709eb6387f483fc2fc7757699e5c8f9d46b71"
    },
    {
      "number": 772,
      "lines": [
        "கான முயலெய்த அம்பினில் யானை",
        "பிழைத்தவேல் ஏந்தல் இனிது."
      ],
      "manakkudavar": "வீரர்க்குக் காட்டகத்து முயலைப் பட எய்த அம்பினும், யானையைப் பிழைக்க எறிந்த வேலை யேந்துதல் இனிது. இதுமேலதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.",
      "pope": "Who aims at elephant, though dart should fail, has greater praiseThan he who woodland hare with winged arrow slays",
      "sourceFile": "0772.md",
      "sourceSha256": "76b81300a71877a1e08720673993cda57cc1afa5a7f0a06a794e7a66b906542d"
    },
    {
      "number": 773,
      "lines": [
        "பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்",
        "ஊராண்மை மற்றதன் எஃகு."
      ],
      "manakkudavar": "ஒன்று உற்றக்கால் அஞ்சாமையை ஒருவனுக்குப் பெரிய ஆண்மையென்று சொல்லுவர்: உலகியலறிந்து செய்தலை அவ்வாண்மைக்குப் படைக்கலமென்று சொல்லுவர். உலகியலறிவது- தான் உலகியலை வெளியார் சொல்லாமையறிதல்.",
      "pope": "Fierceness in hour of strife heroic greatness shows;Its edge is kindness to our suffering foes",
      "sourceFile": "0773.md",
      "sourceSha256": "94d75ab426aa536c7cd2e8986216baf02d3f2e650895ccf6d708b65253c82605"
    },
    {
      "number": 774,
      "lines": [
        "கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்",
        "மெய்வேல் பறியா நகும்."
      ],
      "manakkudavar": "தன் கையிலுள்ள வேலை ஒரு களிற்றின் உயிரோடே போக்கி, அதன்பின் கருவி தேடிச் செல்பவன் தன் மெய்யின் மேற்பட்ட வேலைப் பறித்துக் கருவி பெற்றே மென்று மகிழும். இது வீரர் செயல் இத்தன்மையாதலால், புண்பட்டால் அதற்காற்றிப் பின்னும் அமரின்கண்சாதல் அல்லது வெல்லல் வேண்டும்என்றது.",
      "pope": "At elephant he hurls the dart in hand; for weapon pressed,He laughs and plucks the javelin from his wounded breast",
      "sourceFile": "0774.md",
      "sourceSha256": "c8e1e1fcef0969f011ade8f7e33f363c01e91519e6d69769ff07042122b54fee"
    },
    {
      "number": 775,
      "lines": [
        "விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்",
        "ஒட்டன்றோ வன்க ணவர்க்கு."
      ],
      "manakkudavar": "மாற்றாரோடு எதிர்த்துச் சிவந்து நோக்கின கண்ணிலே ஒரு வேலினாலே எறிய, அதற்கு மீண்டும் இமைப்பாராயின் அஃது அஞ்சாதார்க்குக் கெட்டதனோடு ஒக்கும். விழித்தகண் என்பதற்கு மாற்றானை நோக்கி யிமையாத கண் எனினும் அமையும்.",
      "pope": "To hero fearless must it not defeat appear,If he but wink his eye when foemen hurls his spear",
      "sourceFile": "0775.md",
      "sourceSha256": "da14be5df55d41d08adffa88399a88514c96851a2f7db8eedd13962835e974ab"
    },
    {
      "number": 776,
      "lines": [
        "விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்",
        "வைக்கும்தன் நாளை எடுத்து."
      ],
      "manakkudavar": "தனது வாழ்நாளாகிய நாளையெண்ணி அவற்றுள் விழுமிய புண்படாத நாளெல்லாவற்றையும் தப்பின நாளுள்ளே யெண்ணி வைக்கும் வீரன். இது போரின்கண் முகத்தினும் மார்பினும் புண்படலும், முதுகுபுறங்கொடாமையும் வேண்டுமென்றது.",
      "pope": "The heroes, counting up their days, set down as vainEach day when they no glorious wound sustain",
      "sourceFile": "0776.md",
      "sourceSha256": "f44a830eadef37d9506bbf7c9e289c6c7636228023284ad8251af5e9da245f2c"
    },
    {
      "number": 777,
      "lines": [
        "சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்",
        "கழல்யாப்புக் காரிகை நீர்த்து."
      ],
      "manakkudavar": "பரவும் புகழை விரும்பி, உயிரை விரும்பாதார், கழல் கட்டுதல் அழகுடைத்து. இது புகழ் விரும்பும் படை வேண்டுமென்றது.",
      "pope": "Who seek for world-wide fame, regardless of their life,The glorious clasp adorns, sign of heroic strife",
      "sourceFile": "0777.md",
      "sourceSha256": "c8adf88c2f26a6eb723858ec698ea2ebd8de43623db43769f8b42873a003dd10"
    },
    {
      "number": 778,
      "lines": [
        "உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்",
        "செறினும் சீர்குன்றல் இலர்."
      ],
      "manakkudavar": "ஒன்று உற்ற காலத்து உயிர்ப்பொருட்டு அஞ்சாத மறவர் தம்மரசனால் செறுக்கப்பட்டாராயினும் தமது முதன்மை குன்றுதல் இலர். இஃது அஞ்சாமையுடையார் வீரியஞ் செய்யுமிடத்துக் குறைய நில்லாமை வேண்டுமென்றது.",
      "pope": "Fearless they rush where'er 'the tide of battle rolls';The king's reproof damps not the ardour of their eager souls",
      "sourceFile": "0778.md",
      "sourceSha256": "ee635f1d5c83d437fd90f99889aaea7240655e1e8442713bf5ad208833025a58"
    },
    {
      "number": 779,
      "lines": [
        "இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே",
        "பிழைத்தது ஒறுக்கிற் பவர்."
      ],
      "manakkudavar": "முற்கூறிய வஞ்சினம் தப்பாமல் சாவாரை அவர் தப்பியது சொல்லிப் பழிக்கவல்லவர் யாவர். இது வஞ்சினம் தப்பின் படவேண்டுமென்றது.",
      "pope": "Who says they err, and visits them scorn,Who die and faithful guard the vow they've sworn",
      "sourceFile": "0779.md",
      "sourceSha256": "b8f758bf17b796075626fceb2c3efbc713608803cb6690a40c3f2a9dbcb36f21"
    },
    {
      "number": 780,
      "lines": [
        "புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு",
        "இரந்துகோள் தக்கது உடைத்து."
      ],
      "manakkudavar": "தம்மை ஆண்டவரது கண் நீர்மல்குமாறு சாக வல்லாராயின் அச்சாக்காடு எல்லாரானும் வேண்டிக் கொள்ளும் தகுதி யுடைத்து. இஃது ஆண்டவனுக்குக் கேடுவரின், படவேண்டுமென்றது.",
      "pope": "If monarch's eyes o'erflow with tears for hero slain,Who would not beg such boon of glorious death to gain",
      "sourceFile": "0780.md",
      "sourceSha256": "106dce7151c1dde2d520ffc10bea65b9232ee2d94fb5244b21e7f8b5f5131171"
    },
    {
      "number": 781,
      "lines": [
        "செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்",
        "வினைக்கரிய யாவுள காப்பு."
      ],
      "manakkudavar": "நட்புப்போல உண்டாக்குதற்கு அரியவான பொருள்கள் யாவையுள? அவ்வாறு உண்டாக்கப்பட்ட நட்புப்போலப் பிறர் நல்வினை செய்தற்கு அரியவாகக் காக்கும் காவல்கள் யாவையுள? இது நட்புத் தேடவரிது என்றது.",
      "pope": "What so hard for men to gain as friendship trueWhat so sure defence 'gainst all that foe can do",
      "sourceFile": "0781.md",
      "sourceSha256": "fb714c9c4b38de3636d88493d52e8d6bc90b6dd41297c3050e3e80a7313da277"
    },
    {
      "number": 782,
      "lines": [
        "நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்",
        "பின்னீர பேதையார் நட்பு."
      ],
      "manakkudavar": "பிறை நிறையும் நீர்மைபோல, ஒருநாளைக் கொருநாள் வளரும் அறிவுடையார்.",
      "pope": "Friendship with men fulfilled of good Waxes like the crescent moon;Friendship with men of foolish mood, Like the full orb, waneth soon",
      "sourceFile": "0782.md",
      "sourceSha256": "7f44416bc851180182fea4b0e7053e122021999c47b1508f46ed50d91571945f"
    },
    {
      "number": 783,
      "lines": [
        "நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்",
        "பண்புடை யாளர் தொடர்பு."
      ],
      "manakkudavar": "படிக்குந்தோறும் நூல்நயம்போல அறிவுதரும், பழகுந்தோறும் பண்புடையாளரது நட்பு. இது குணவானோடு நட்புக்கொள்ளின் அறிவுண்டாமென்றது.",
      "pope": "Learned scroll the more you ponder, Sweeter grows the mental food;So the heart by use grows fonder, Bound in friendship with the good",
      "sourceFile": "0783.md",
      "sourceSha256": "ceb7562d9cab238d61ca4bdca6c61d996f46db7df25ca3d6a75fae05d439d4cc"
    },
    {
      "number": 784,
      "lines": [
        "நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்",
        "மேற்செனறு இடித்தற் பொருட்டு."
      ],
      "manakkudavar": "ஒருவனோடு ஒருவன் நட்புப் பண்ணுதல் நகுதற்பொருட்டன்று; மிகையாயின செய்யுமிடத்து முற்பட்டுக் கழறுதற் பொருட்டு. இது மனமகிழ நட்புக்கோடலன்றித் தீக்கருமங்கண்டால் கழறவும்வேண்டுமென்றது.",
      "pope": "Nor for laughter only friendship all the pleasant day,But for strokes of sharp reproving, when from right you stray",
      "sourceFile": "0784.md",
      "sourceSha256": "851bde53bd7fae58d850474bcbba6fc8f868ffe6eac05f58d333aeaa0d945c63"
    },
    {
      "number": 785,
      "lines": [
        "புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்",
        "நட்பாங் கிழமை தரும்."
      ],
      "manakkudavar": "நட்பாதற்குப் பலநாள் பழகுதல் வேண்டா: ஒருநாள் கண்டாராயினும் உணர்வுடையார்க்கு அவ்வுணர்வுடைமைதானே நட்பாகும் உரிமையைத் தரும். இவ்வுணர்வுடைமைதானே நட்பாகு மென்றவாறு.",
      "pope": "Not association constant, not affection's token bind;'Tis the unison of feeling friends unites of kindred mind",
      "sourceFile": "0785.md",
      "sourceSha256": "d1b8a3407e015fc39e70cf95eb3d2832b4435eb0fdc1e7db778019f5f45574a9"
    },
    {
      "number": 786,
      "lines": [
        "முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து",
        "அகநக நட்பது நட்பு."
      ],
      "manakkudavar": "முகத்தோடு முகமகிழக் கொள்ளும் நட்பு நட்பன்று; மனத்தோடு மனமகிழக் கொள்ளும் நட்பே நட்பாவது.",
      "pope": "Not the face's smile of welcome shows the friend sincere,But the heart's rejoicing gladness when the friend is near",
      "sourceFile": "0786.md",
      "sourceSha256": "19fd11c8798be7f15a8096f92ae5552f3df5f46e8fc28b573b14c4d0bc62661a"
    },
    {
      "number": 787,
      "lines": [
        "அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்",
        "அல்லல் உழப்பதாம் நட்பு."
      ],
      "manakkudavar": "நட்டார்க்கு அழிவு வந்தவிடத்து அவர் துன்பத்தை நீக்கி நல்ல நெறியின்கண் செலுத்தித் தாங்கித் தன்னால் செயலற்ற விடத்து அவரொடு ஒக்கத் தானும் துன்பம் உழப்பது நட்பு.",
      "pope": "Friendship from ruin saves, in way of virtue keeps;In troublous time, it weeps with him who weeps",
      "sourceFile": "0787.md",
      "sourceSha256": "01c61bf1ddd36bb8dc95708cc418c5ed5ff80b4f9563c1cad8440752564ce47f"
    },
    {
      "number": 788,
      "lines": [
        "உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே",
        "இடுக்கண் களைவதாம் நட்பு."
      ],
      "manakkudavar": "உடைசோரநின்றானுக்குக் கைசென்று உடைசோராமற் காத்தாற்போல, இடுக்கண்வந்தால் அப்பொழுதே அவ்விடுக்கணை நீக்குவது நட்பாவது.",
      "pope": "As hand of him whose vesture slips away,Friendship at once the coming grief will stay",
      "sourceFile": "0788.md",
      "sourceSha256": "8de9887c4ffb1c97b0fc911d965bc73a4d887ae0968e40b68e49ee40c5ae0ed9"
    },
    {
      "number": 789,
      "lines": [
        "நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி",
        "ஒல்லும்வாய் ஊன்றும் நிலை."
      ],
      "manakkudavar": "நட்புக்கு மேம்பட இருக்கும் இடம் யாதெனின் மனத்தின்கண் ஐயுற வின்றிச் செல்லுமாற்றால் தளராமைத் தாங்கி நிற்கும் நிலை வீற்றிருத்தல்-தலைப்பட இருத்தல்.",
      "pope": "And where is friendship's royal seat? In stable mind,Where friend in every time of need support may find",
      "sourceFile": "0789.md",
      "sourceSha256": "b00a37da7518a23937ff7b4a527e40fd94266a081a93f5239ec8239b4a11e6fa"
    },
    {
      "number": 790,
      "lines": [
        "இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று",
        "புனையினும் புல்லென்னும் நட்பு."
      ],
      "manakkudavar": "இவர் நமக்கு இத்தன்மையர், யாமும் இவர்க்கு இத்தன்மையோம் என்று பேணிச் சொல்லினும் நட்புவாடும்: ஆதலால் நட்பினைத் தன்னைத்தான் நினைக்குமாறுபோல நினைக்க.",
      "pope": "Mean is the friendship that men blazon forth,'He's thus to me' and 'such to him my worth'",
      "sourceFile": "0790.md",
      "sourceSha256": "0c7edc3b5ae21681164dc7240262640403d9e592302dc0006221a33e7d4083fa"
    },
    {
      "number": 791,
      "lines": [
        "நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்",
        "வீடில்லை நட்பாள் பவர்க்கு."
      ],
      "manakkudavar": "நட்பை விரும்பியாள்பவர்க்கு ஒருவனை ஆராயாது நட்புச் செய்வதுபோலக் கேடு தருவதில்லை: நட்டபின் அவனை விடுதலில்லை யாயின். இது நட்பாராய்தல் வேண்டு மென்றது.",
      "pope": "To make an untried man your friend is ruin sure;For friendship formed unbroken must endure",
      "sourceFile": "0791.md",
      "sourceSha256": "88d60fe17576134980508a4854c02fe33d73ad12a3e9fb8992710cdb63220173"
    },
    {
      "number": 792,
      "lines": [
        "ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை",
        "தான்சாம் துயரம் தரும்."
      ],
      "manakkudavar": "குற்றமும் ஆய்ந்து குணமும் ஆய்ந்து கொள்ளாதான் கொண்ட நட்பு, பிற்காலத்துத் தான் சாதற்கு ஏதுவான துன்பத்தைத் தரும். இஃது ஆராயாமையால் வருங்குற்றங் கூறிற்று.",
      "pope": "Alliance with the man you have not proved and proved again,In length of days will give you mortal pain",
      "sourceFile": "0792.md",
      "sourceSha256": "4f6259421eb0088505c9f212c93ca0a748ff1a1ff9bee678ebb1507cac785324"
    },
    {
      "number": 793,
      "lines": [
        "குணமும் குடிமையும் குற்றமும் குன்றா",
        "இனனும் அறிந்தியாக்க நட்பு."
      ],
      "manakkudavar": "ஒருவனுடைய குணமும் குடிப்பிறப்பும் குற்றமும் குறைவில்லாத சுற்றமும் முன்பே ஆராய்ந்து, பின்பு அவனை நட்பாகக் கொள்க. இவையெல்லாம் ஒத்தனவாயின் உறவு நீளச் செல்லு மென்றவாறாம்.",
      "pope": "Temper, descent, defects, associations freeFrom blame: know these, then let the man be friend to thee",
      "sourceFile": "0793.md",
      "sourceSha256": "d77904a230ff8973f929f1eacdc5ec97affa7382fab2597dc9373d6c467e7e40"
    },
    {
      "number": 794,
      "lines": [
        "குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்",
        "கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு."
      ],
      "manakkudavar": "மேற்கூறியவற்றுள் உயர்குடிப்பிறந்து தன்மாட்டுப் பிறர் சொல்லும் பழிக்கு அஞ்சுமவனை அவன் வேண்டிய தொன்று கொடுத்தும் நட்பாகக் கொள்ளல் வேண்டும்.",
      "pope": "Who, born of noble race, from guilt would shrink with shame,Pay any price so you as friend that man may claim",
      "sourceFile": "0794.md",
      "sourceSha256": "0c68084ff520cbdbc07b99e8376689201c64921addba8e6530962ed5407500dc"
    },
    {
      "number": 795,
      "lines": [
        "அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய",
        "வல்லார்நடபு ஆய்ந்து கொளல்."
      ],
      "manakkudavar": "குற்றம் கண்டால் அழுமாறு சொல்லி, நெறியில்லாதனவற்றிற்குக் கழறி, உலகவழக்கறிய வல்லாரது நட்பை ஆராய்ந்து கொள்க. இது மந்திரிகளுள் நட்பாக்கற் பாலாரைக் கூறிற்று.",
      "pope": "Make them your chosen friend whose words repentance move,With power prescription's path to show, while evil they reprove",
      "sourceFile": "0795.md",
      "sourceSha256": "a53e56f8fa6037e80d20661695b37a1dd9a8fedd0172b5c7872a7d2443b28148"
    },
    {
      "number": 796,
      "lines": [
        "கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை",
        "நீட்டி அளப்பதோர் கோல்."
      ],
      "manakkudavar": "கேடுவந்தவிடத்தும் ஒரு பயனுண்டாம்; அக்கேடு நட்டாரது தன்மையை நீட்டி அளந்தறிதற்கு ஒரு கோலாமாதலால். மேல் கெடுங்காலைக் கைவிடுவாரை விடவேண்டு மென்றார் அவரை அறியுமாறென்னை யென்றார்க்கு, கேட்டாலல்லது அறிதல் அரிதென்றார்.",
      "pope": "Ruin itself one blessing lends:'Tis staff that measures out one's friends",
      "sourceFile": "0796.md",
      "sourceSha256": "714987970694fb744ae9689bba9f5552210f1014e623150a7a2cb6be2bfa0839"
    },
    {
      "number": 797,
      "lines": [
        "ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்",
        "கேண்மை ஒரீஇ விடல்."
      ],
      "manakkudavar": "ஒருவனுக்கு இலாபமென்று சொல்லப்படுவது அறிவில்லாதாரோடு நட்பாகுதலை நீங்கி விடுதல். இது பேதையார் நட்பைத் தவிர்கவென்றது.",
      "pope": "'Tis gain to any man, the sages say,Friendship of fools to put away",
      "sourceFile": "0797.md",
      "sourceSha256": "110bcede23543934486d5e47f6845625ccab5e59e5b652cc2583dcf71e8dbd2a"
    },
    {
      "number": 798,
      "lines": [
        "உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க",
        "அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு."
      ],
      "manakkudavar": "தான் சிறுகுமவற்றை உள்ளத்தால் நினையாதொழிக; அதுபோல, அல்லல் வந்தவிடத்து வலியாகாதாரது நட்பினைக் கொள்ளாதொழிக. இது தீக்குணத்தார் நட்பைத் தவிர்க வென்றது.",
      "pope": "Think not the thoughts that dwarf the soul; nor takeFor friends the men who friends in time of grief forsake",
      "sourceFile": "0798.md",
      "sourceSha256": "86ea8e99bd4165d312408e7bd526de5d73df22abb083d1d8cc971fab122c198a"
    },
    {
      "number": 799,
      "lines": [
        "கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை",
        "உள்ளினும் உள்ளஞ் சுடும்."
      ],
      "manakkudavar": "கெடும்பொழுது கைவிடுவாரது நட்பைத் தன்னைப் பிறர் கொல்லுங் காலத்து நினைப்பினும் நினைத்த மனத்தினை அந்நட்புச் சுடும்: அவர் கொல்லுமதனினும். இது கேட்டிற்கு உதவாதார் நட்பைத் தவிர்க வென்றது.",
      "pope": "Of friends deserting us on ruin's brink,'Tis torture e'en in life's last hour to think",
      "sourceFile": "0799.md",
      "sourceSha256": "fdf99b40d0e73578b769155f0073590210fb8bfa3743a1aa437b4001505d66c5"
    },
    {
      "number": 800,
      "lines": [
        "மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்",
        "ஒருவுக ஒப்பிலார் நட்பு."
      ],
      "manakkudavar": "குற்றமற்றாரது நட்பைக் கொள்க; ஒரு பொருளைக் கொடுத்தாயினும் தனக்கு நிகரில்லாதார் நட்பினின்று நீங்குக.",
      "pope": "Cling to the friendship of the spotless one's; whate'er you payRenounce alliance with the men of evil way",
      "sourceFile": "0800.md",
      "sourceSha256": "a27e92db522d8d1d67a7c5e7ff4ff846843f206507517fb51c463abc7b195e10"
    },
    {
      "number": 801,
      "lines": [
        "பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்",
        "கிழமையைக் கீழ்ந்திடா நட்பு."
      ],
      "manakkudavar": "பழைமையென்று சொல்லப்படுவது யாதெனின் அது யாதொன்றிலும் உரிமையை அறுத்தலில்லாத நட்பு. இது பழையவன் செய்த உரிமையைச் சிறிதுஞ் சிதையாது உடன்படுதல் நட்பாவதென்றது.",
      "pope": "Familiarity is friendship's silent pact,That puts restraint on no familiar act",
      "sourceFile": "0801.md",
      "sourceSha256": "b6334e1fa7e65b95a33916bdd1fd0492486f2bf39f8e0c78283a62634cae0b7c"
    },
    {
      "number": 802,
      "lines": [
        "நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு",
        "உப்பாதல் சான்றோர் கடன்."
      ],
      "manakkudavar": "நட்பிற்கு அங்கமாவது உரிமை: அவ்வுரிமையால் செய்யுமதற்கு உடன்படுதல் சான்றோர்க்கு இயல்பு. இது பேய்ச்சுரைக்காய்க்குப் பல காயம் அமைத்தாலும் இனிமை யுண்டாகாதுபோல, உடன்படாராயின் இனிமை உண்டாகாதாதலான் உடன்படல் வேண்டு மென்றது.",
      "pope": "Familiar freedom friendship's very frame supplies;To be its savour sweet is duty of the wise",
      "sourceFile": "0802.md",
      "sourceSha256": "0833f1c95d60917a345b5e914331608aa3b46dcca41784a20451ef93bda210f0"
    },
    {
      "number": 803,
      "lines": [
        "பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை",
        "செய்தாங்கு அமையாக் கடை."
      ],
      "manakkudavar": "நட்டோரது தப்பைப் பிறர் சொல்லுங்கால் கேளாத உரிமையை யறியவல்லார்க்கு நட்டோர் தப்புச்செய்யின், அந்தநாள் நல்ல நாளாம். இது கேளாது செய்தலே அன்றித் தப்புச் செய்யினும் அமைய வேண்டுமென்றது.",
      "pope": "When to familiar acts men kind response refuse,What fruit from ancient friendship's use",
      "sourceFile": "0803.md",
      "sourceSha256": "6e6a710ce79f9f06546309899140957115c8854de2f58a6af09316a74c5df8e4"
    },
    {
      "number": 804,
      "lines": [
        "விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்",
        "கேளாது நட்டார் செயின்."
      ],
      "manakkudavar": "நட்டோர் தமது உரிமையாலே கேளாது இசைவில்லாதவற்றைச் செய்வாராயின் அதற்கு முனியாது அதனையும் தாம் விரும்பும் தன்மையோடே கூட விரும்பத் தப்பாதிருப்பர் மிக்கார். இஃது உடன்படுதலன்றி விரும்பவும் வேண்டு மென்றது.",
      "pope": "When friends unbidden do familiar acts with loving heart,Friends take the kindly deed in friendly part",
      "sourceFile": "0804.md",
      "sourceSha256": "52e8f3cb3cf6b077358d2c5aa33296aaee71142df55f4b1aa6ae5314f28f5783"
    },
    {
      "number": 805,
      "lines": [
        "பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க",
        "நோதக்க நட்டார் செயின்."
      ],
      "manakkudavar": "தாம் நோவத்தக்கனவற்றை நட்டோர் செய்வாராயின் அதற்கு முனியாது ஒன்றில் அறியாமையாலே செய்தாரென்று கொள்க: ஒன்றில் பெரிய உரிமையாலே செய்தாரென்று கொள்க.",
      "pope": "Not folly merely, but familiar carelessness,Esteem it, when your friends cause you distress",
      "sourceFile": "0805.md",
      "sourceSha256": "74dd3328a9f7d02ac9a94d784ac95e6e36c5f016c72f12347f8db1f59191f5b9"
    },
    {
      "number": 806,
      "lines": [
        "எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்",
        "தொல்லைக்கண் நின்றார் தொடர்பு."
      ],
      "manakkudavar": "ஒழுக்கத்தின்கண்ணே நின்றார் பழைமையின்கண்ணே நின்றாரது நட்பை அவராலே தமக்கு அழிவு வந்தவிடத்தும் விடார். எல்லை- வரம்பு.",
      "pope": "Who stand within the bounds quit not, though loss impends,Association with the old familiar friends",
      "sourceFile": "0806.md",
      "sourceSha256": "c1e5fceefb88788f40ea8c1dccd7760a5ab3c2f07c6c25875893dc929ce70f5a"
    },
    {
      "number": 807,
      "lines": [
        "அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்",
        "வழிவந்த கேண்மை யவர்."
      ],
      "manakkudavar": "தமக்கு அழிவுவரும் கருமங்களைப் பழைய நட்டோர் செய்தாராயினும் அவரோடு உள்ள அன்புவிடார்: முற்காலத்து அன்பின் வழியாக வந்த நட்பையுடையவர். இது கேடுவருவன செய்யினும் அமைய வேண்டு மென்றது.",
      "pope": "True friends, well versed in loving ways,Cease not to love, when friend their love betrays",
      "sourceFile": "0807.md",
      "sourceSha256": "8bef20d0f9a380356e3f26bdd01fec6774393e3ee0b653d100ea64064e34e396"
    },
    {
      "number": 808,
      "lines": [
        "கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு",
        "நாளிழுக்கம் நட்டார் செயின்."
      ],
      "manakkudavar": "நட்டோரது தப்பைப் பிறர் சொல்லுங்கால் கேளாத உரிமையை யறியவல்லார்க்கு நட்டோர் தப்புச்செய்யின், அந்தநாள் நல்ல நாளாம். இது கேளாது செய்தலே அன்றித் தப்புச் செய்யினும் அமைய வேண்டுமென்றது. .",
      "pope": "In strength of friendship rare of friend's disgrace who will not hear,The day his friend offends will day of grace to him appear",
      "sourceFile": "0808.md",
      "sourceSha256": "19cb2d3042842e2db5205654c7d6fac8bd47c5d13120d38068ec57c8b5d54f5c"
    },
    {
      "number": 809,
      "lines": [
        "கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை",
        "விடாஅர் விழையும் உலகு."
      ],
      "manakkudavar": "குற்றம் உண்டாயின் அவ்விடத்து நட்பினிற் கெடாராய்க் குலத்தின்வழி வந்த நட்புடையாராது நட்பை விடுதலின்றி உலகத்தார் விரும்புவர். இது பழைமையைக் கொண்டாடுவாரை உலகத்தார் தாமும் நட்பு ஆகுதற்கு விரும்புவர் என்றது.",
      "pope": "Friendship of old and faithful friends,Who ne'er forsake, the world commends",
      "sourceFile": "0809.md",
      "sourceSha256": "82f064983c3f599f1fa4c822f73680cfded5a7d0c7ef8a95cff5e099942c9bef"
    },
    {
      "number": 810,
      "lines": [
        "விழையார் விழையப் படுப பழையார்கண்",
        "பண்பின் தலைப்பிரியா தார்."
      ],
      "manakkudavar": "பழைய நட்டோர்மாட்டுக் குணத்தினின்று நீங்காதார், விரும்பாதாராலும் விரும்பப்படுவர். இது பகைவரும் விரும்புவாரென்றது.",
      "pope": "Ill-wishers even wish them well, who guardFor ancient friends, their wonted kind regard",
      "sourceFile": "0810.md",
      "sourceSha256": "fd3fed5afb261dac766bb22c6dddc2870a53e85e165b25ce9242add9ae0c25ca"
    },
    {
      "number": 811,
      "lines": [
        "பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை",
        "பெருகலிற் குன்றல் இனிது."
      ],
      "manakkudavar": "கண்ணினால் பருகுவாரைப் போலத் தமக்கு அன்புடையரா யிருப்பினும், குணமில்லாதார் நட்புப் பெருகுமதனினும் குறைதல் நன்று. இது குணமில்லாதார் நட்புத் தீதென்றது.",
      "pope": "Though evil men should all-absorbing friendship show,Their love had better die away than grow",
      "sourceFile": "0811.md",
      "sourceSha256": "8146ca507abfc6362943fef3834f1bc20d3b457cdddce3247f7c6c0c45aa09fe"
    },
    {
      "number": 812,
      "lines": [
        "உறின்நட்டு அறினொருஉம் ஒப்பிலார் கேண்மை",
        "பெறினும் இழப்பினும் என்?"
      ],
      "manakkudavar": "செல்வம் மிக்க காலத்து நட்புக் கொண்டு அஃது அற்ற காலத்து நீங்குகின்ற நிகரில்லாதார் நட்பைப் பெற்றதனால் வரும் நன்மை யாது? இழந்ததனால் வரும் தீமை யாது?. மக்களுள் இவரோடு ஒத்த இழிவுடையார் இன்மையான் ஒப்பிலார் என்றார். இது காலபுருடர் நட்புத் தீதென்றது.",
      "pope": "What though you gain or lose friendship of men of alien heart,Who when you thrive are friends, and when you fail depart",
      "sourceFile": "0812.md",
      "sourceSha256": "3d2fa343bfb24f1ec78437fd22d24a88dc0344d0b526623030f8f55be9bd93e3"
    },
    {
      "number": 813,
      "lines": [
        "உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது",
        "கொள்வாரும் கள்வரும் நேர்."
      ],
      "manakkudavar": "நட்டோர்க்கும் தமக்கும் வரும் நன்மை தீமைகளை யொக்கப் பார்த்துத் தமக்கு நன்மையாகுமதனைச் சீர்தூக்கும் நட்டோரும், பெற்றது கொள்ளும் கணிகையரும், கள்வருமென்று கூறப்பட்டவர் தம்முள் ஒப்பார்.",
      "pope": "These are alike: the friends who ponder friendship's gainThose who accept whate'er you give, and all the plundering train",
      "sourceFile": "0813.md",
      "sourceSha256": "fb23dcf3fbbe55d1a5ef5b953480dcaea58df99bf05492cf9a963a590c2628d0"
    },
    {
      "number": 814,
      "lines": [
        "அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்",
        "தமரின் தனிமை தலை."
      ],
      "manakkudavar": "தெருவின்கண் நெறிப்பட நடந்து அமரின்கண் நெறிப்படாமல் நடந்து ஏறினவன் வலிமையைக் கெடுக்கும் அறிவில்லாத குதிரையைப் போல்வார் தமராவதினும் ஒருவன் தனியனாதல் நன்று. இது பகைவர் நட்புத் தீமைபயக்கு மென்றது.",
      "pope": "A steed untrained will leave you in the tug of war;Than friends like that to dwell alone is better far",
      "sourceFile": "0814.md",
      "sourceSha256": "8eb8d8a1b6ae19ff37e80461afec856d8845059ef6f7d82183d07aa55dd51e27"
    },
    {
      "number": 815,
      "lines": [
        "செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை",
        "எய்தலின் எய்தாமை நன்று."
      ],
      "manakkudavar": "நட்புச் செய்தாலும் தனக்குப் பாதுகாவலாதல் இல்லாத புல்லியாரது புல்லிய நட்பைப் பெறுவதினும் பெறாமை நன்று. இது சிறியார் நட்புத் தீமைதருமென்றது. சிறியார்- சூதர், வேட்டைக்காரர், பெண்டிர் போல்வார்.",
      "pope": "'Tis better not to gain than gain the friendship profitlessOf men of little minds, who succour fails when dangers press",
      "sourceFile": "0815.md",
      "sourceSha256": "ee077f82cdcf149d8c6a6f89bff2ec41f1652748513f1f869aa44538b1b106af"
    },
    {
      "number": 816,
      "lines": [
        "பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்",
        "ஏதின்மை கோடி உறும்."
      ],
      "manakkudavar": "அறிவில்லாதார் மிகவும் கெழுமிய நட்பாகுமதனினும், அறிவுடையார் பகைமை கோடிமடங்கு மிக்க நன்மையை உண்டாக்கும். இது பேதைமையார் நட்புத் தீமை பயக்கு மென்றது.",
      "pope": "Better ten million times incur the wise man's hate,Than form with foolish men a friendship intimate",
      "sourceFile": "0816.md",
      "sourceSha256": "011c7467f3dbd97c1c15b20686e563c529c0c059f6e0dd38c3ad9114d75bbce1"
    },
    {
      "number": 817,
      "lines": [
        "நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்",
        "பத்தடுத்த கோடி உறும்."
      ],
      "manakkudavar": "நகையின் பகுதியார் செய்த நட்பினும், பகைவராலே பத்துக்கோடி மடங்கு நன்மை மிகும். நகைவகையர்- காமுகர், வேழம்பர் முதலாயினார். இஃது இவர்கள் நட்புத் தீதென்றது.",
      "pope": "From foes ten million fold a greater good you gain,Than friendship yields that's formed with laughers vain",
      "sourceFile": "0817.md",
      "sourceSha256": "4ab146311fe9b3cf67aba4c45b43f1e382e1c4667d4329da6bfe888d060cf9d1"
    },
    {
      "number": 818,
      "lines": [
        "ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை",
        "சொல்லாடார் சோர விடல்."
      ],
      "manakkudavar": "தம்மாலியலும் கருமத்தை முடியாது வருத்துமவர் நட்பை, நட்பென்று சொல்லுவதும் செய்யாராய் வீழவிடுக. இஃது அழுக்காறுடையார் நட்புத் தீதென்றது.",
      "pope": "Those men who make a grievous toil of what they doOn your behalf, their friendship silently eschew",
      "sourceFile": "0818.md",
      "sourceSha256": "1583d865b6ea67641ff4d05e3cef475a9dc02a43ff86673c1636821060990004"
    },
    {
      "number": 819,
      "lines": [
        "கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு",
        "சொல்வேறு பட்டார் தொடர்பு."
      ],
      "manakkudavar": "செய்யுந்தொழில் வேறாகச் சொல்லுங்கூற்று வேறாக, ஒழுகுவாரது நட்பு, பயன்படும் நனவின்கண்ணேயன்றிக் கனவின் கண்ணும் இன்னாது. இது பொய்கூறுவார் நட்புத் தீதென்றது.",
      "pope": "E'en in a dream the intercourse is bitternessWith men whose deeds are other than their words profess",
      "sourceFile": "0819.md",
      "sourceSha256": "62654d7d5013726efd545e72ca22a66e107fdfbe56edf35716dbdab9cba1ddc2"
    },
    {
      "number": 820,
      "lines": [
        "எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ",
        "மன்றில் பழிப்பார் தொடர்பு."
      ],
      "manakkudavar": "மனையின்கண் நட்டோராயிருந்து, மன்றின்கண் குற்றம் கூறுவாரது நட்பைச் சிறிதும் செறிதலைத் தவிர்க. இது புறங்கூறுவார் நட்புத் தீதென்றது.",
      "pope": "In anywise maintain not intercourse with those,Who in the house are friends, in hall are slandering foes",
      "sourceFile": "0820.md",
      "sourceSha256": "b34ed338e254a2e7a317ffaf708ee75a3d9d80f6f949eb03007496dd9e20f9e7"
    },
    {
      "number": 821,
      "lines": [
        "சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை",
        "நேரா நிரந்தவர் நட்பு."
      ],
      "manakkudavar": "முடியுமிடங்காணின் மற்றொருவன் எறிதற்குப் பட்டடையாம்; மனத்தினால் ஒவ்வாது புறத்து வேறுமிகச் செய்து வந்தாரது நட்பு. இது கருமங்காரணமாக நட்டாரோடு கூடும் திறங் கூறிற்று. பட்டடையாவது தான் தாங்குவது போல நின்று வெட்டுவார்க்கு உதவி செய்வது.",
      "pope": "Anvil where thou shalt smitten be, when men occasion find,Is friendship's form without consenting mind",
      "sourceFile": "0821.md",
      "sourceSha256": "2adf53bf1c06b23b6b35a27cb1bcb999f1edcb8e0bfe405f9438d88bc8e76054"
    },
    {
      "number": 822,
      "lines": [
        "இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்",
        "மனம்போல வேறு படும்."
      ],
      "manakkudavar": "நட்டோர் போன்று மனத்தினான் நட்பில்லாதார் நட்பு, பெண் மனம்போல வேறுபடும்; ஆதலால், அவருள்ளக் கருத்தறிந்து கொள்க. இது நட்பாயொழுகுவாரது உள்ளக்கருத்தறிய வேண்டு மென்றது.",
      "pope": "Friendship of those who seem our kin, but are not really kindWill change from hour to hour like woman's mind",
      "sourceFile": "0822.md",
      "sourceSha256": "54405f0b5880c942839f2a4c44514d02adc18d1e88aa33acf1740b43c2dbc61f"
    },
    {
      "number": 823,
      "lines": [
        "பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்",
        "ஆகுதல் மாணார்க் கரிது."
      ],
      "manakkudavar": "நல்லவாகிய பல நூல்களைக் கற்றவிடத்தும், மனம் நல்லாராகுதல் மாட்சியில்லார்க்கு அரிது. இது கல்வியால் அறிதல் அரிதென்றது.",
      "pope": "To heartfelt goodness men ignoble hardly may attain,Although abundant stores of goodly lore they gain",
      "sourceFile": "0823.md",
      "sourceSha256": "290a811a30995a094944d16f24fa6b3381a619764197643e6c448db2f17ccd34"
    },
    {
      "number": 824,
      "lines": [
        "முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா",
        "வஞ்சரை அஞ்சப் படும்."
      ],
      "manakkudavar": "முகத்தால் இனியவாக நக்கு மனத்தால் இன்னாதவாக நினைக்கும் வஞ்சகரை அஞ்சவேண்டும்.",
      "pope": "'Tis fitting you should dread dissemblers' guile,Whose hearts are bitter while their faces smile",
      "sourceFile": "0824.md",
      "sourceSha256": "bd79ab95b74a0cc1594f8536154076109eaf8288918c15ad1ad6308616acc2c1"
    },
    {
      "number": 825,
      "lines": [
        "மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்",
        "சொல்லினால் தேறற்பாற்று அன்று."
      ],
      "manakkudavar": "மனத்தால் பொருத்தமில்லாதவரை யாதொன்றன் கண்ணும் அவர் சொல்லினால் தௌ¤தற்பாலதன்று. இது சொல்லினால் அறிதலரிதென்றது.",
      "pope": "When minds are not in unison, 'its never; just,In any words men speak to put your trust",
      "sourceFile": "0825.md",
      "sourceSha256": "9d7ce31e51430fa397977ff43c2791745248a2e6de19fbb0ebf8ab57d80cb264"
    },
    {
      "number": 826,
      "lines": [
        "நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்",
        "ஒல்லை உணரப் படும்."
      ],
      "manakkudavar": "உற்றாரைப்போல நல்லவானவை சொன்னாராயினும் பகைவர் சொல்லுஞ்சொல் விரைந்தறியப்படும்.",
      "pope": "Though many goodly words they speak in friendly tone,The words of foes will speedily be known",
      "sourceFile": "0826.md",
      "sourceSha256": "19f24fd8e35ad78d8737e40b88d1221377674d3a1c149bd020cddb6c6acc42f5"
    },
    {
      "number": 827,
      "lines": [
        "சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்",
        "தீங்கு குறித்தமை யான்."
      ],
      "manakkudavar": "வில்லினது வணக்கம் தீமையைக் குறித்தமை ஏதுவாகத் தாழச்சொல்லுஞ் சொல்லைப் பகைவார்மாட்டு நன்று சொன்னாரென்று கொள்ளாதொழிக. இது தாழச்சொல்லினும் தேறப்படா ரென்றது.",
      "pope": "To pliant speech from hostile lips give thou no ear;'Tis pliant bow that show the deadly peril near",
      "sourceFile": "0827.md",
      "sourceSha256": "29e6828349ed1dc217934e774c11110901f7a54c7233e469aa64ec578d0aa7ae"
    },
    {
      "number": 828,
      "lines": [
        "தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்",
        "அழுதகண் ணீரும் அனைத்து."
      ],
      "manakkudavar": "தொழுதகையுள்ளும் கொலைக்கருவி ஒடுங்கும்: பகைவர் அழுதகண்ணீரும் அத்தன்மையதாமென்று கொள்க. மெல்லியராகத் தொழுதுவந்து ஒத்தார்போல ஒழுகுவாரது நட்பென்றவாறு. இது கூடாநட்பினால்வருங் குற்றங் கூறிற்று. கூடா நட்பினர் வேறு காலத்தினும் அழுதகாலத்தினும் தேறப்படாரென்க.",
      "pope": "In hands that worship weapon ten hidden lies;Such are the tears that fall from foeman's eyes",
      "sourceFile": "0828.md",
      "sourceSha256": "297f6a743d90e2f1aeba4cd4b606894ca5c8bb17a6563a53cbce44dda3940c79"
    },
    {
      "number": 829,
      "lines": [
        "மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து",
        "நட்பினுள் சாப்புல்லற் பாற்று."
      ],
      "manakkudavar": "பகைமை தோன்றாமல் புறத்தின்கண் நட்பினை மிகச்செய்து அகத்தின்கண் தம்மையிகழும் பகைவரைத் தாமும் அந்நட்பின்கண்ணே நின்று, புறத்தின்கண் அவர் மகிழும் வண்ணஞ் செய்து, அகத்தின்கண் அது சாம் வண்ணம் பொருந்தற்பான்மை யுடைத்து அரசநீதி.",
      "pope": "'Tis just, when men make much of you, and then despise,To make them smile, and slap in friendship's guise",
      "sourceFile": "0829.md",
      "sourceSha256": "79117588495c3afdd9f481124356487baa23bc9a507c6cfbf201c60e5bf8ff9a"
    },
    {
      "number": 830,
      "lines": [
        "பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு",
        "அகநட்பு ஒரீஇ விடல்."
      ],
      "manakkudavar": "பகைவர் நட்பாங்காலம் வந்தவிடத்து, முகத்தால் நட்பினைச் செய்து அகநட்பு நீங்கவிடுக.",
      "pope": "When time shall come that foes as friends appear,Then thou, to hide a hostile heart, a smiling face may'st wear",
      "sourceFile": "0830.md",
      "sourceSha256": "363b46fd60a3ae355a5101336bda28870788dc8835be9e7d2cfc0a02edf53816"
    },
    {
      "number": 831,
      "lines": [
        "பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு",
        "ஊதியம் போக விடல்."
      ],
      "manakkudavar": "அறியாமையென்று சொல்லப்படுவதொன்று யாதெனின், அது குற்றம் பயப்பனவற்றைக் கொண்டு நன்மை பயப்பனவற்றைப் போகவிடல். இது பேதைமையின் இலக்கணம் கூறிற்று.",
      "pope": "What one thing merits folly's special name.Letting gain go, loss for one's own to claim",
      "sourceFile": "0831.md",
      "sourceSha256": "f184afa121ae3ed514bda431ffe51cf4093429fe202fad2300278f3b1f187f99"
    },
    {
      "number": 832,
      "lines": [
        "பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை",
        "கையல்ல தன்கட் செயல்."
      ],
      "manakkudavar": "அறியாமை யெல்லாவற்றுள்ளும் அறியாமையாவது தனக்குக் கைவராத பொருளின்கண் காதன்மை செய்தல். இது வருந்தினாலும் பெறாததற்குக் காதல் செய்தலும் பேதைமையென்றது.",
      "pope": "'Mid follies chiefest folly is to fix your loveOn deeds which to your station unbefitting prove",
      "sourceFile": "0832.md",
      "sourceSha256": "7fdd5bdf589c8a81d982561104213677e277e98974998269b2b2a9bf2aefceb5"
    },
    {
      "number": 833,
      "lines": [
        "நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்",
        "பேணாமை பேதை தொழில்"
      ],
      "manakkudavar": "நாணமில்லாமையும், தெரிந்துணராமையும், ஈரமின்மையும், யாதொரு பொருளையும் போற்றாமையும் பேதையார் தொழில். இது பேதையார்செயல் கூறிற்று.",
      "pope": "Ashamed of nothing, searching nothing out, of loveless heart,Nought cherishing, 'tis thus the fool will play his part",
      "sourceFile": "0833.md",
      "sourceSha256": "a6f21e7901eb5e87c9f8fabbc727680a8e8e5f88b79efe215ae70bf257ead1a8"
    },
    {
      "number": 834,
      "lines": [
        "ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்",
        "பேதையின் பேதையார் இல்."
      ],
      "manakkudavar": "நூல்களைக் கற்றறிந்தும் அவற்றைப் பிறர்க்கு இசையச் சொல்லியும், தான் அடங்குதலைச் செய்யாத பேதையார்போலப் பேதையார் உலகத்தில் இல்லை.",
      "pope": "The sacred law he reads and learns, to other men expounds,-Himself obeys not; where can greater fool be found",
      "sourceFile": "0834.md",
      "sourceSha256": "968675bbf0a9dd767f7ba5da4b5563b815a9f1087e6646eaecee045e4194b346"
    },
    {
      "number": 835,
      "lines": [
        "ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்",
        "தான்புக் கழுந்தும் அளறு."
      ],
      "manakkudavar": "பேதை ஒருபிறப்பின்கண் செய்யும் செயலாலே செய்ய வல்லவன், எழுபிறப்பினும் தான் புக்கழுந்தும் நரகத்தை. புக்கழுந்தல்- ஒருகால் நரகத்திலே பிறந்தால் அவ்வுடம்பு நீங்கினாலும் அதனுள்ளே பிறத்தல்.",
      "pope": "The fool will merit hell in one brief life on earth,In which he entering sinks through sevenfold round of birth",
      "sourceFile": "0835.md",
      "sourceSha256": "e8f7cbdb5b5b049056fbb923a0476d29abf164ded8212a4be063efe762a6dc7d"
    },
    {
      "number": 836,
      "lines": [
        "பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்",
        "பேதை வினைமேற் கொளின்."
      ],
      "manakkudavar": "ஒழுக்கமறியாதா னொருபேதையான் ஒருகருமத்தை மேற்கொண்டானாயின், அப்பொழுது பொய்யனென்னவும் பட்டுப் பிறர்க்குப் புனைபூணும். புனைபூணல் - சிறைபடுதல்.",
      "pope": "When fool some task attempts with uninstructed pains,It fails; nor that alone, himself he binds with chains",
      "sourceFile": "0836.md",
      "sourceSha256": "59d8b665e420c41d963712ede81235cd22b8146933452078cbd2d210c9ebbf5f"
    },
    {
      "number": 837,
      "lines": [
        "ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை",
        "பெருஞ்செல்வம் உற்றக் கடை."
      ],
      "manakkudavar": "அயலார் உண்ண, உற்றார் பசியாநிற்பர்; பேதையானவன் பெரிய செல்வத்தை உற்றவிடத்து. இதுபேதை பொருள்பெற்றால் வழங்குந்திறங் கூறிற்று.",
      "pope": "When fools are blessed with fortune's bounteous store,Their foes feed full, their friends are prey to hunger sore",
      "sourceFile": "0837.md",
      "sourceSha256": "d6c09cafdde3e1d6a21078f17294c9b1a709cdbbccc75eba681083c1f77e8254"
    },
    {
      "number": 838,
      "lines": [
        "மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்",
        "கையொன்று உடைமை பெறின்."
      ],
      "manakkudavar": "முன்னே பித்தாய் மயங்கிய ஒருவன் பின்பு கள்ளினை நுகர்ந்து களித்தாற் போலாவதொன்று, பேதை தன்கையின்கண் ஒன்றுடையனானவிடத்து.",
      "pope": "When folly's hand grasps wealth's increase, 'twill beAs when a mad man raves in drunken glee",
      "sourceFile": "0838.md",
      "sourceSha256": "eb4fe47c2ff66609135044e8a4fc6bd63ceb6d23ff0d9e73ae75d143c5ce9b1d"
    },
    {
      "number": 839,
      "lines": [
        "பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்",
        "பீழை தருவதொன் றில்."
      ],
      "manakkudavar": "மக்கட்குப் பேதையாரது நட்பு மிகவும் இனிது: பிரிந்தவிடத்துத் தருவதொரு துன்பம் இல்லையாதலான். இது பேதை காமந்துய்க்குமாறு கூறிற்று.",
      "pope": "Friendship of fools is very pleasant thing,Parting with them will leave behind no sting",
      "sourceFile": "0839.md",
      "sourceSha256": "24e2f3e25d4d22e9c09e7eec81187f17f8912bdf4c8ca1be5f5f30cc37ac60f0"
    },
    {
      "number": 840,
      "lines": [
        "கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்",
        "குழாஅத்துப் பேதை புகல்."
      ],
      "manakkudavar": "கழுவாத காலைப் பள்ளியின்கண் வைத்தாற்போலும், சான்றோர் அவையின்கண் பேதை புகுந்து கூடியிருத்தல். இது பேதை யிருந்த அவை யிகழப்படுமென்றது.",
      "pope": "Like him who seeks his couch with unwashed feet,Is fool whose foot intrudes where wise men meet",
      "sourceFile": "0840.md",
      "sourceSha256": "0f6271c80e2dd9257ce38b6430dbcff6bdc3aeba3d5f240d128bcc506b4b5d70"
    },
    {
      "number": 841,
      "lines": [
        "அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை",
        "இன்மையா வையா துலகு."
      ],
      "manakkudavar": "நல்குரவினுள் நல்குரவாவது அறிவின்மை: பொருளின்மையை நல்குரவாக எண்ணார் உலகத்தார்: அது புண்ணியம் செய்யாதார்மாட்டே சேருமாதலான்.",
      "pope": "Want of knowledge, 'mid all wants the sorest want we deem;Want of other things the world will not as want esteem",
      "sourceFile": "0841.md",
      "sourceSha256": "e08eb67e036b74a2fabf566e1d9e3a34de4e792ea45a93254984227f5ffba3cc"
    },
    {
      "number": 842,
      "lines": [
        "அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்",
        "இல்லை பெறுவான் தவம்."
      ],
      "manakkudavar": "அறிவில்லாதான் அரிதாக எண்ணின மறைப் பொருளைச் சோரவிடுவன்; அதுவேயன்றித் தனக்குத்தானே பெரிய துன்பத்தினையும் செய்துகொள்ளுவன். சோரவிடுதல்- பிறர்க்குச் சொல்லுதல். இது பொருட்கேடும் உயிர்க்கேடும் தானே செய்யுமென்றது.",
      "pope": "The gift of foolish man, with willing heart bestowed, is nought,But blessing by receiver's penance bought",
      "sourceFile": "0842.md",
      "sourceSha256": "f8a37b715019d97029fd83e7f48c11a986e031301ecb90044cfe910dd7db206d"
    },
    {
      "number": 843,
      "lines": [
        "அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை",
        "செறுவார்க்கும் செய்தல் அரிது."
      ],
      "manakkudavar": "அறிவில்லாதார் தாமே தம்மை யிடர்ப்படுத்தும் இடர்ப்பாடு, பகைவர்க்கும் செய்தல் அரிது. இது மேற்கூறியதனை வலியுறுத்திற்று.",
      "pope": "With keener anguish foolish men their own hearts wring,Than aught that even malice of their foes can bring",
      "sourceFile": "0843.md",
      "sourceSha256": "668c62af9fb78f136a09530bc75876f7a6767462fbe8807f55283426198116c7"
    },
    {
      "number": 844,
      "lines": [
        "வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை",
        "உடையம்யாம் என்னும் செருக்கு."
      ],
      "manakkudavar": "புல்லறி வென்று சொல்லப்படுவது யாதெனின், அது யாம் அறிவுடையோ மென்று தம்மைத் தாம் மதிக்குங்களிப்பு.",
      "pope": "What is stupidity? The arrogance that cries,'Behold, we claim the glory of the wise.'",
      "sourceFile": "0844.md",
      "sourceSha256": "2e75e8056563c85896700623e2a8bbbd01550cc28c97d3a4dd06e1d4f13b9294"
    },
    {
      "number": 845,
      "lines": [
        "கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற",
        "வல்லதூஉம் ஐயம் தரும்."
      ],
      "manakkudavar": "தாம் உய்யக் கல்லாதவற்றைக் கற்றாராக மேற்கொண்டொழுகல், குற்றந்தீரக் கற்றதனையும் ஐயமாக்கும். இது கல்லாததனை மேற்கொள்ளுதல் புல்லறிவென்றது.",
      "pope": "If men what they have never learned assume to know,Upon their real learning's power a doubt 'twill throw",
      "sourceFile": "0845.md",
      "sourceSha256": "32cc64005eb8feec5121494e76d102d3f19ab2fbb7eb364162c6ff8b4f1d9952"
    },
    {
      "number": 846,
      "lines": [
        "அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்",
        "குற்றம் மறையா வழி."
      ],
      "manakkudavar": "தம்பாலுள்ள குற்றத்தைப் பிறரறியாமல் தாம் மறையாத காலத்துப் பிறர் காணாமல் மறைக்க வேண்டும் உறுப்பை ஆடையால் மறைத்தலும் புல்லறிவு. எனவே, அதுவும் மறையானாயின் குற்றம் நாடுவாரில்லை யென்றவாறாயிற்று. இது குற்றமறையாமை புல்லறிவென்றது.",
      "pope": "Fools are they who their nakedness conceal,And yet their faults unveiled reveal",
      "sourceFile": "0846.md",
      "sourceSha256": "827b5cdadeca594a8b3ba2a3c03ca81480a10c8a87c831217565a0785c6c5130"
    },
    {
      "number": 847,
      "lines": [
        "அருமறை சோரும் அறிவிலான் செய்யும்",
        "பெருமிறை தானே தனக்கு."
      ],
      "manakkudavar": "அறிவில்லாதான் அரிதாக எண்ணின மறைப் பொருளைச் சோரவிடுவன்; அதுவேயன்றித் தனக்குத்தானே பெரிய துன்பத்தினையும் செய்துகொள்ளுவன். சோரவிடுதல்- பிறர்க்குச் சொல்லுதல். இது பொருட்கேடும் உயிர்க்கேடும் தானே செய்யுமென்றது.",
      "pope": "From out his soul who lets the mystic teachings die,Entails upon himself abiding misery",
      "sourceFile": "0847.md",
      "sourceSha256": "aae4666426e005e51e074b28feee843843721086cb3d7393ae33efce71f6840a"
    },
    {
      "number": 848,
      "lines": [
        "ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்",
        "போஒம் அளவுமோர் நோய்."
      ],
      "manakkudavar": "அறிவுடையார் சொல்லவும் செய்யான்; தானும் தௌ¤யான்; அத்தன்மையனாகிய சீவன் போமளவும் உலகத்தார்க்கு ஒரு நோய் போல்வன். இஃது ஈட்டின பொருளைக் கொடுத்தலும் தொகுத்தலும் செய்யாமை புல்லறி வென்றது.",
      "pope": "Advised, he heeds not; of himself knows nothing wise;This man's whole life is all one plague until he dies",
      "sourceFile": "0848.md",
      "sourceSha256": "8019417bbdfa3b37f9477fc7ca1733b074de214dfb1cedaaa2547545d38a8a1f"
    },
    {
      "number": 849,
      "lines": [
        "காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்",
        "கண்டானாம் தான்கண்ட வாறு."
      ],
      "manakkudavar": "அறியாதானை அறிவிக்கப் புகுதுமவன் தானறியான்: அவ்வறியாதவன் தான் அறிந்தபடியை அறிந்தானாயிருக்குமாதலான். இது கொண்டது விடாமை புல்லறி வென்றது.",
      "pope": "That man is blind to eyes that will not see who knowledge shows;-The blind man still in his blind fashion knows",
      "sourceFile": "0849.md",
      "sourceSha256": "e6836e8e9ebbefcdd7d294a2f8687a1ad5c557911a098e58f8b2e864f4775999"
    },
    {
      "number": 850,
      "lines": [
        "உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து",
        "அலகையா வைக்கப் படும்."
      ],
      "manakkudavar": "உலகத்தில் அறிவுடையார் பலர் உண்டென்பதாகிய ஒரு பொருளை இல்லையென்று சொல்லுமவன், இவ்வுலகத்தின் கண்ணே திரிவதாகிய பேயென்று எண்ணப்படுவன். இஃது உயர்ந்தோர் உண்டென்பதனை இல்லையென்றல் புல்லறிவென்றது.",
      "pope": "Who what the world affirms as false proclaim,O'er all the earth receive a demon's name",
      "sourceFile": "0850.md",
      "sourceSha256": "6d9735222eba78d01b59a422598a93e8690d41ba989053dc8e51eb8d1c1a7e22"
    },
    {
      "number": 851,
      "lines": [
        "இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்",
        "பண்பின்மை பார஧க்கும் நோய்."
      ],
      "manakkudavar": "எல்லா வுயிர்க்கும் வேறுபடுதலாகிய குணமின்மையைப் பரப்பும் துன்பத்தை, இகலென்று சொல்லுவார் அறிவோர். இஃது இகலாவது இதுவென்று கூறிற்று.",
      "pope": "Hostility disunion's plague will bring,That evil quality, to every living thing",
      "sourceFile": "0851.md",
      "sourceSha256": "2f8a8caded117a934e67f3af2c9098cb5ca7fc196af88cfc9ace9c8cde641493"
    },
    {
      "number": 852,
      "lines": [
        "பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி",
        "இன்னாசெய் யாமை தலை."
      ],
      "manakkudavar": "தம்மோடு பற்றில்லாதார் வேறுபடுதலைக் கருதி இன்னாதவற்றைச் செய்தாராயினும் அவரோடு மாறுபடுதலைக் கருதித் தாமும் அவர்க்கு அவற்றைச் செய்யாமை நன்று. இது மேற்கூறிய குற்றமும் குணமும் பயக்குமாதலின் மாறுபடுதற்குக் காரணமுள வழியும் அதனைத் தவிர்தல் வேண்டும் என்றது.",
      "pope": "Though men disunion plan, and do thee much despite'Tis best no enmity to plan, nor evil deeds requite",
      "sourceFile": "0852.md",
      "sourceSha256": "a8ff466a9d0b12b85ed748d64adea5cc81afbc51861c3578b845635ed1781ceb"
    },
    {
      "number": 853,
      "lines": [
        "இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்",
        "தாவில் விளக்கம் தரும்."
      ],
      "manakkudavar": "மாறுபடுதலாகிய இன்னாத நோயை நீக்குவானாயின், அந்நீக்குதல் கேடில்லாத குற்றமற்ற ஒளியினைத் தரும். இது தோற்றமுண்டா மென்றது.",
      "pope": "If enmity, that grievous plague, you shun,Endless undying praises shall be won",
      "sourceFile": "0853.md",
      "sourceSha256": "1d37c5fe729a4212cd6ac249e4d99adcdb632578d8a0b3b0c83ab723666c747b"
    },
    {
      "number": 854,
      "lines": [
        "இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்",
        "துன்பத்துள் துன்பங் கெடின்."
      ],
      "manakkudavar": "இன்பத்தின் மிக்க இன்பம் எய்தும்: மாறுபாடாகிய துன்பத்தின் மிக்க துன்பம் கெடுமாயின். எல்லா இன்பத்தின்மிக்க வீடுபேற்றின்பம் எய்தும் என்றவாறு.",
      "pope": "Joy of joys abundant grows,When malice dies that woe of woes",
      "sourceFile": "0854.md",
      "sourceSha256": "d39ecefa7c46016c7bd960844af804e4b0dbf478e271179794c78950eac6e89a"
    },
    {
      "number": 855,
      "lines": [
        "இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே",
        "மிக்லூக்கும் தன்மை யவர்."
      ],
      "manakkudavar": "இகலின் எதிர் சாய்ந்தொழுக வல்லாரை வெல்ல நினைக்கும் தன்மையவர் யார்தான். சாய்ந்தொழுக வேண்டுமென்றார் அது தோல்வி யாகாதோ வென்றார்க்கு அவரை வெல்வாரில்லை யென்றார்.",
      "pope": "If men from enmity can keep their spirits free,Who over them shall gain the victory",
      "sourceFile": "0855.md",
      "sourceSha256": "61dc543c3398306c8edfc52be2ef4e2060eace59190351f4aa12c6423cc393b6"
    },
    {
      "number": 856,
      "lines": [
        "இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை",
        "தவலும் கெடலும் நணித்து."
      ],
      "manakkudavar": "பிறருடன் மாறுபாட்டின்கண் மிகுதல் இனிதென்று கருதுமவனும், அவன் வாழ்க்கையும் சாதலும் கெடுதலும் நணித்து. நிரனிறை. இது சாயானாயின் உயிர்க்கேடும் பொருட்கேடு முண்டாமென்றது.",
      "pope": "The life of those who cherished enmity hold dear,To grievous fault and utter death is near",
      "sourceFile": "0856.md",
      "sourceSha256": "e64ccb2d2e0d785d968c7a98db39362319dd62fc2b8adad0783f57793f383ef7"
    },
    {
      "number": 857,
      "lines": [
        "மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்",
        "இன்னா அறிவி னவர்."
      ],
      "manakkudavar": "மிகுதலைப் பொருந்துகின்ற உண்மைப் பொருளைக் காணமாட்டார், மாறுபாட்டினைப் பொருந்தின இன்னாத அறிவுடையார். இது மாறுபடுவார்க்கு மெய்ப்பொருள் தோன்றாதென்றது.",
      "pope": "The very truth that greatness gives their eyes can never see,Who only know to work men woe, fulfilled of enmity",
      "sourceFile": "0857.md",
      "sourceSha256": "3a02325744444c37eaef58f8f94f4826f2e9c077a90c89ce6e5f1c4b4c688e6a"
    },
    {
      "number": 858,
      "lines": [
        "இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை",
        "மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு."
      ],
      "manakkudavar": "மாறுபாட்டிற்குச் சாய்தொழுகுதல் ஆக்கமாம்: அதனை மிகுதலை நினைக்கின் கேடு மிகும். இது மாறுபாட்டிற்குச் சாய்ந்தொழுகல் வேண்டுமென்றது.",
      "pope": "'Tis gain to turn the soul from enmity;Ruin reigns where this hath mastery",
      "sourceFile": "0858.md",
      "sourceSha256": "89db599c161537b9eb8e86af6b5f797a08d85a8579c08aa790f14d1240f1bcf3"
    },
    {
      "number": 859,
      "lines": [
        "இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை",
        "மிகல்காணும் கேடு தரற்கு."
      ],
      "manakkudavar": "மாறுபடுதற்குக் காரண முண்டாயினும் ஆக்கம் வருங்காலத்து மாறுபாடு காணான்: கேடு வருங்காலத்து அதனை மிகுதலைக் காணும். இம் மாறுபாடு நல்வினை யுடையார்க்குத் தோன்றாதென்றவாறு.",
      "pope": "Men think not hostile thought in fortune's favouring hour,They cherish enmity when in misfortune's power",
      "sourceFile": "0859.md",
      "sourceSha256": "3c49c82860190f68eeefb4a87e4d7466d713c0274a47dc7b76d01235f72c01b5"
    },
    {
      "number": 860,
      "lines": [
        "இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்",
        "நன்னயம் என்னும் செருக்கு."
      ],
      "manakkudavar": "மாறுபாட்டினாலே துன்பங்களெல்லாம் உளவாம்: உடன்பட்டு நகுதலாலே நல்ல நயமாகிய உள்ளக்களிப்பு உண்டாம்.",
      "pope": "From enmity do all afflictive evils flow;But friendliness doth wealth of kindly good bestow",
      "sourceFile": "0860.md",
      "sourceSha256": "d4001e9ed7a3e5d77dda58228cc681eedacc4fb4b9d3350dd8752835cd93b905"
    },
    {
      "number": 861,
      "lines": [
        "வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா",
        "மெலியார்மேல் மேக பகை."
      ],
      "manakkudavar": "தம்மின் வலியார்க்குப் பகையா யெதிர்தலைத் தவிர்க: தம்மைப் போற்றாத எளியார்மாட்டுப் பகைகோடலை மேவுக. இது தனக்கு எளியாரோடு பகை கோடலாமென்றது.",
      "pope": "With stronger than thyself, turn from the strife away;With weaker shun not, rather court the fray",
      "sourceFile": "0861.md",
      "sourceSha256": "642fe8b557736bad7440a19bcd5080159fe215a9dab73973213ac27b19ce8247"
    },
    {
      "number": 862,
      "lines": [
        "அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்",
        "என்பரியும் ஏதிலான் துப்பு."
      ],
      "manakkudavar": "சுற்றத்தார்மாட்டு அன்புறுதலும் இலன்; வேற்றரசராகிய வலிய துணையும் இலன்: ஆதலான், தான் வலியிலன்; இப்பெற்றிப்பட்டவன், மேல் வந்த பகைவன் வலியை யாங்ஙனம் தொலைப்பன்?.",
      "pope": "No kinsman's love, no strength of friends has he;How can he bear his foeman's enmity",
      "sourceFile": "0862.md",
      "sourceSha256": "f6c37c146e5b4cba7df13dbffe94c5616977fffd4f44dc0af112ea90c26618b5"
    },
    {
      "number": 863,
      "lines": [
        "அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்",
        "தஞ்சம் எளியன் பகைக்கு."
      ],
      "manakkudavar": "அஞ்சவேண்டாதவற்றிற்கு அஞ்சுவான், பகைவனது வலிமை அறியான், மதியிலன், ஈயமாட்டான்: இப்பெற்றிப் பட்டவன் பகைவர்க்கு மிகவும் எளியன். இஃது இவை நான்கு முடையவன் தோற்கு மென்றது.",
      "pope": "A craven thing! knows nought, accords with none, gives nought away;To wrath of any foe he falls an easy prey",
      "sourceFile": "0863.md",
      "sourceSha256": "c9b27e28855eaa182dc28e0a55fc34957c9d94c66c88128d5d8a219d533b8c83"
    },
    {
      "number": 864,
      "lines": [
        "நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்",
        "யாங்கணும் யார்க்கும் எளிது."
      ],
      "manakkudavar": "வெகுளியின் நின்று நீங்கானாய் நிறையுடைமை இலனாயின் அவனை வெல்லுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் யாவர்க்கும் எளிது. இஃது இவையிரண்டு முடையவ னெல்லார்க்குந் தோற்கு மென்றது.",
      "pope": "His wrath still blazes, every secret told; each dayThis man's in every place to every foe an easy prey",
      "sourceFile": "0864.md",
      "sourceSha256": "e4c0f9a0c3b88e7672c2b0cfc655e6a10a1e28c6f678d22a272c3dcd840f917f"
    },
    {
      "number": 865,
      "lines": [
        "வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்",
        "பண்பிலன் பற்றார்க்கு இனிது."
      ],
      "manakkudavar": "ஒருவினை செய்யத்தொடங்குங்கால் பின் வருவன பாரான், பயன்படுவனவற்றைச் செய்யான், அதனால் உறும் பழியைப் பாரான், குணமுமிலன்; இவன் பகைமை பகைவர்க்கு இனிது. இஃது இவன் பகைமையால் பகைவர்க்கு இனிமை உண்டாமென்றது.",
      "pope": "No way of right he scans, no precepts bind, no crimes affright,No grace of good he owns; such man's his foes' delight",
      "sourceFile": "0865.md",
      "sourceSha256": "bc021c73f28249e6ecdc88139b886af1f08a74f5d882a4d2e2a48e9df0cbd1c9"
    },
    {
      "number": 866,
      "lines": [
        "காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்",
        "பேணாமை பேணப் படும்."
      ],
      "manakkudavar": "மீண்டும் பாராத சினத்தனுமாய் மிகப்பெருகிய காமத்தனுமாகியவன் பகை விரும்பப்படும். இஃது இவையுடையார் நட்டோரிலராதலால் இவரிடத்துப் பகை கொள்ளலா மென்றது.",
      "pope": "Blind in his rage, his lustful passions rage and swell;If such a man mislikes you, like it well",
      "sourceFile": "0866.md",
      "sourceSha256": "9d917f929cff9d9a0bb4146308d0c78356ad9196e76986cdd100deeaf106df4e"
    },
    {
      "number": 867,
      "lines": [
        "கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து",
        "மாணாத செய்வான் பகை."
      ],
      "manakkudavar": "பகையை உற்றிருந்தும் மாட்சியையில்லாதன செய்யுமவன் பகையினைத் துணிந்து ஒன்றனைக் கொடுத்தும் கொள்ளல் வேண்டும். மாணாதசெய்தலாவது பகைக்காவன செய்யாது பிறிது செயல். இஃது இவன் பகைசெய்யமாட்டானாதலால் அப்பகை கோடலாமென்றது.",
      "pope": "Unseemly are his deeds, yet proffering aid, the man draws nigh:His hate- 'tis cheap at any price- be sure to buy",
      "sourceFile": "0867.md",
      "sourceSha256": "a250f1e57c237acf26f8f02eeee8486f54dc9624dfd21e3e0cd5ad810af02ec2"
    },
    {
      "number": 868,
      "lines": [
        "குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு",
        "இனனிலனாம் ஏமாப் புடைத்து."
      ],
      "manakkudavar": "குணங்களுள் யாதும் இலனாய்க் குற்றங்கள் பல உடையனாயின் அவன் துணையிலனாம்; அது மாற்றார்க்கு ஏமமாதலை உடைத்தாம்.",
      "pope": "No gracious gifts he owns, faults many cloud his fame;His foes rejoice, for none with kindred claim",
      "sourceFile": "0868.md",
      "sourceSha256": "223baafce82b0b0b71c9c293b1603ff0350458bdc509f1c6558e55e32272d2e3"
    },
    {
      "number": 869,
      "lines": [
        "செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா",
        "அஞ்சும் பகைவர்ப் பெறின்."
      ],
      "manakkudavar": "அறிவில்லாத அச்சமுடைய பகைவரைப் பெறின் அவரைச் செறுவார்க்கு இன்பம் தூரப்போகாது, அணித்தாக வரும். அறிவு- காரியவறிவு.",
      "pope": "The joy of victory is never far removed from thoseWho've luck to meet with ignorant and timid foes",
      "sourceFile": "0869.md",
      "sourceSha256": "5ebefad709d824ae6401f71df2117285051a201640b7cb92fbe530491fe515d3"
    },
    {
      "number": 870,
      "lines": [
        "கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்",
        "ஒல்லானை ஒல்லா தொளி."
      ],
      "manakkudavar": "கல்லாதானுமாய், வெகுளியுடையனுமாய்ச் சிறு பொருளனுமாகிய பகைவனை எல்லாநாளும் ஒளி பொருந்தாது.",
      "pope": "The task of angry war with men unlearned in virtue's loreWho will not meet, glory shall meet him never more",
      "sourceFile": "0870.md",
      "sourceSha256": "20fcbd6591bb20e016e19ad7d30e05e1d423c318886f04ba41b1810fbd832f5e"
    },
    {
      "number": 871,
      "lines": [
        "பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்",
        "நகையேயும் வேண்டற்பாற்று அன்று."
      ],
      "manakkudavar": "பகை யென்று சொல்லப்படுகின்ற குணமில்லாததனை, ஒருவன் விளையாட்டின்கண்ணும் விரும்பற்பாலதன்று. இஃது எவ்விடத்தும் பகைகோடல் தீது என்றது.",
      "pope": "For Hate, that ill-conditioned thing not e'en in jestLet any evil longing rule your breast",
      "sourceFile": "0871.md",
      "sourceSha256": "f3ea9d872b2dabbeaf30fc2c71bac282b35d940d7183c7c45006e3653797b62d"
    },
    {
      "number": 872,
      "lines": [
        "வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க",
        "சொல்லேர் உழவர் பகை."
      ],
      "manakkudavar": "வில்லை ஏராக உடைய பகைவரோடு பகைகொளினும் சொல்லை ஏராக உடைய உழவரோடு பகை கொள்ளாதொழிக. இஃது அரசரோடு பகைகொளினும் அமைச்சரோடு பகை கொள்ளலாகாதென்றது.",
      "pope": "Although you hate incur of those whose ploughs are bows,Make not the men whose ploughs are words your foes",
      "sourceFile": "0872.md",
      "sourceSha256": "029c4067ec93a3c7336d2ae0a36bf167bd7d643a0b27cae1f06e13b5b17923d6"
    },
    {
      "number": 873,
      "lines": [
        "ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்",
        "பல்லார் பகைகொள் பவன்."
      ],
      "manakkudavar": "பித்து உற்றவரினும் அறிவிலன், தனியனாயிருந்து பலரோடு பகை கொள்ளுமவன். இது பலரோடும் பகைக்கொள்ளலாகா தென்றது.",
      "pope": "Than men of mind diseased, a wretch more utterly forlorn,Is he who stands alone, object of many foeman's scorn",
      "sourceFile": "0873.md",
      "sourceSha256": "ed2bbb47e1fe485badf4fe8ff48c0a40d74b44d1d50c1958c772470039f127c6"
    },
    {
      "number": 874,
      "lines": [
        "பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்",
        "தகைமைக்கண் தங்கிற்று உலகு."
      ],
      "manakkudavar": "பகைவரை நட்புபோலக் கொண்டொழுகவல்ல பண்புடையவன் பெருமையின்கீழே உலகம் தங்கும். இது பகை கொள்ளாமையால் வரும் பயன் கூறிற்று.",
      "pope": "The world secure on his dexterity depends,Whose worthy rule can change his foes to friends",
      "sourceFile": "0874.md",
      "sourceSha256": "644b8afa9cece6000b0d3237191dca95d6294527eb9513599501c3270b3ae287"
    },
    {
      "number": 875,
      "lines": [
        "தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்",
        "இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று."
      ],
      "manakkudavar": "பகையிரண்டாய்த் தான் ஒருவனாய்த் தனக்குத் துணையும் இலனாயின் அப்பகை யிரண்டினுள் ஒன்றை இனிய துணையாகச் செய்து கொள்க. இஃது இருவரோடு பகைக்கொள்ளலாகா தென்றது.",
      "pope": "Without ally, who fights with twofold enemy o'ermatched,Must render one of these a friend attached",
      "sourceFile": "0875.md",
      "sourceSha256": "476a7d07879a64b55e476eb4eb39f4a5e865829beee448a9377bc30e3b9b5e02"
    },
    {
      "number": 876,
      "lines": [
        "தேறினும் தேறா விடினும் அழிவின்கண்",
        "தேறான் பகாஅன் விடல்."
      ],
      "manakkudavar": "பகைவனை ஆக்கமுள்ள காலத்து நட்டோனென்று தௌ¤யலுமாம்; பகைவனென்று ஐயப்படலுமாம்; அழிவுவந்த விடத்துத் தௌ¤வதுஞ் செய்யாது நீக்குவதுஞ் செய்யாது ஒழுகுக. இது பகையாயினார்மாட்டு அழிவின்கண் செய்வதோரியல்பு கூறிற்று.",
      "pope": "Whether you trust or not, in time of sore distress,Questions of diff'rence or agreement cease to press",
      "sourceFile": "0876.md",
      "sourceSha256": "b04a06303541f4980a4a58329e2161f75f0dcbb15e1fabcf32b0d4fc0d1cc82e"
    },
    {
      "number": 877,
      "lines": [
        "நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க",
        "மென்மை பகைவர் அகத்து."
      ],
      "manakkudavar": "தாம் வருத்த முற்றதனை அறியாதார்க்கு வருத்த முற்றுச் சொல்லா தொழிக; அதுபோலப் பகைவரிடத்துத் தமது மென்மையைத் தோற்றுவித்தலை விரும்பாதொழிக. இது பகைவர்மாட்டுத் தமது மென்மையைத் தோற்றுவியா தொழிகவென்றது.",
      "pope": "To those who know them not, complain not of your woes;Nor to your foeman's eyes infirmities disclose",
      "sourceFile": "0877.md",
      "sourceSha256": "5d81ad001d058f44ebd3c869131ebe17c13d27f61d1ed4736c8e3ae909e95c52"
    },
    {
      "number": 878,
      "lines": [
        "வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்",
        "பகைவர்கண் பட்ட செருக்கு."
      ],
      "manakkudavar": "வினைசெய்யும் வகையை யறிந்து, தன்னைப் பெருக்கித் தான் தன்னைக் காக்கப் பகைவர்மாட்டு உண்டான பெருமிதம் கெடும். இது பகைவரைக் கொல்லுந் திறங் கூறிற்று.",
      "pope": "Know thou the way, then do thy part, thyself defend;Thus shall the pride of those that hate thee have an end",
      "sourceFile": "0878.md",
      "sourceSha256": "8642347d8f653ce1682299311b0e2bebbba68c7f79961bb623f3fa4319db1e07"
    },
    {
      "number": 879,
      "lines": [
        "இளைதாக முள்மரம் கொல்க களையுநர்",
        "கைகொல்லும் காழ்த்த இடத்து."
      ],
      "manakkudavar": "முள்மரத்தை இளைதாகவே களைக: முற்றினவிடத்துத் தன்னைக் களைவார் கையைக் கொல்லுமாதலால். இது பகைவர் வலியராவதன்முன்னே களைதல் வேண்டுமென்றது.",
      "pope": "Destroy the thorn, while tender point can work thee no offence;Matured by time, 'twill pierce the hand that plucks it thence",
      "sourceFile": "0879.md",
      "sourceSha256": "4aa25461b23ec77e4b3f94f0b8bf29e19178fc02b5db079a57023150478e2def"
    },
    {
      "number": 880,
      "lines": [
        "உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்",
        "செம்மல் சிதைக்கலா தார்."
      ],
      "manakkudavar": "பகைவரது தலைமையைக் கெடுக்க மாட்டாதார், அப்பகைவர் உயிர்க்கும் மாத்திரத்திலே அறுதியாகச் சாவார். இது பகை கொள்ளுங்கால் வலியாரோடு பகைகோடலாகா தென்றது.",
      "pope": "But breathe upon them, and they surely die,Who fail to tame the pride of angry enemy",
      "sourceFile": "0880.md",
      "sourceSha256": "abc7e7d7f2f4c054afa22dd692007b47b72a3e16aab9f78588c4ee76fc16e29d"
    },
    {
      "number": 881,
      "lines": [
        "நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்",
        "இன்னாவாம் இன்னா செயின்."
      ],
      "manakkudavar": "நிழலகத்து நீர் இனிதேயாயினும் அவற்றுள் இன்னாத செய்யும் நீர் இன்னாதாகும். அதுபோலச் சுற்றத்தார் நன்மை இனிதாயினும் அவர் இன்னாதவற்றைச் செய்வாராயின் அஃது இன்னாதாயே விடும். இது சுற்றமென் றிகழற்க என்றது.",
      "pope": "Water and shade, if they unwholesome prove, will bring you painAnd qualities of friends who treacherous act, will be your bane",
      "sourceFile": "0881.md",
      "sourceSha256": "7f7a2ec16971b8c04f36178a01bf28a6308216063cb363659ad391992e2ae7a2"
    },
    {
      "number": 882,
      "lines": [
        "வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக",
        "கேள்போல் பகைவர் தொடர்பு."
      ],
      "manakkudavar": "வாள்போலக் கொல்லுந் திறனுடைய பகைவரை அஞ்சாதொழிக; புறம்பு நட்டாரைப் போல மனத்தினாற் பகைத்திருப்பார் தொடர்பை அஞ்சுக. இது பகை அஞ்சுவதினும் மிக அஞ்சவேண்டுமென்றது.",
      "pope": "Dread not the foes that as drawn swords appear;Friendship of foes, who seem like kinsmen, fear",
      "sourceFile": "0882.md",
      "sourceSha256": "d4dcb7405ca1c02939d94684e0b7f8a1c9a929eaff79afe28b22f35d7b965801"
    },
    {
      "number": 883,
      "lines": [
        "உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து",
        "மட்பகையின் மாணத் தெறும்."
      ],
      "manakkudavar": "உடனே வாழும் பகைவரை அஞ்சித் தன்னைக் காக்க: அவர் தனக்குத் தளர்ச்சி வந்தவிடத்துக் குயவன் கலத்தை அறுங்குங் கருவிபோலத் தப்பாமல் கொல்லுவர். மட்பகை தான் அறுக்குங்கால் பிரறியாமல் நின்று அறுக்கும்.",
      "pope": "Of hidden hate beware, and guard thy life;In troublous time 'twill deeper wound than potter's knife",
      "sourceFile": "0883.md",
      "sourceSha256": "ada2ae20c49825d2d8ad0689136c2ea739d1817dc9bba66762726c11bdbdb278"
    },
    {
      "number": 884,
      "lines": [
        "மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா",
        "ஏதம் பலவும் தரும்."
      ],
      "manakkudavar": "மனம் நன்றாகாத உட்பகை தோன்றுமாயின் தனக்கு இனமாயினார் நல்லராகார்; அஃதன்றிப் பல குற்றங்களும் உண்டாம். இஃது இனம் பொருந்தாமல் கூடநின்று பகைப்பிக்கு மென்றது.",
      "pope": "If secret enmities arise that minds pervert,Then even kin unkind will work thee grievous hurt",
      "sourceFile": "0884.md",
      "sourceSha256": "884d78c6e9aa31f6316f197b6c64c6ad46a54060037a393b4c9540518c1befb5"
    },
    {
      "number": 885,
      "lines": [
        "உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்",
        "ஏதம் பலவும் தரும்."
      ],
      "manakkudavar": "உறவு முறையோடே வுட்பகை தோன்றுமாயின், அது கெடுதல் முறைமையோடே கூடப் பல துன்பத்தினையும் தரும். இது சுற்றத்தாராகிய உட்பகையினால் வரும் தீமை கூறிற்று.",
      "pope": "Amid one's relatives if hidden hath arise,'Twill hurt inflict in deadly wise",
      "sourceFile": "0885.md",
      "sourceSha256": "5f454c4c88d8202bf15d59df0cfee0799848b9ef8e2e4bfec53537eda6fac504"
    },
    {
      "number": 886,
      "lines": [
        "ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்",
        "பொன்றாமை ஒன்றல் அரிது."
      ],
      "manakkudavar": "தன் ஒன்றினார்மாட்டு ஒன்றாமை உளதாயின், எந்நாளினும் சாவாமையைக் கூடுதல் அரிது. இது நட்டோராகிய உட்பகையினால் வரும் தீமை கூறிற்று.",
      "pope": "If discord finds a place midst those who dwelt at one before,'Tis ever hard to keep destruction from the door",
      "sourceFile": "0886.md",
      "sourceSha256": "adaa6d2e7a173c8cb99d885eedbcefced86b80d504390797d68e2c94132e3190"
    },
    {
      "number": 887,
      "lines": [
        "செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே",
        "உட்பகை உற்ற குடி."
      ],
      "manakkudavar": "உட்பகையும் அஃது உற்ற குடியும், செப்பும் மூடியும் பொருந்தினாற் போலப் பொருந்தினவாயினும், பொருத்தமில்லவாம். உட்பகையுற்றார் செப்பும் மூடியும் ஒன்றுபட்டாற்போல இருந்து செப்பகத்துப் பொருள் வாங்குவார்க்கு மூடி துணையாய் அகன்று நிற்குமதுபோல அகன்று நிற்பரென்றவாறு.",
      "pope": "As casket with its cover, though in one they live alway,No union to the house where hate concealed hath sway",
      "sourceFile": "0887.md",
      "sourceSha256": "9a8e1ddb33cdb5f8bad053af905947f16a28f93b2aea6ab8de0ef86c92d1249e"
    },
    {
      "number": 888,
      "lines": [
        "அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது",
        "உட்பகை உற்ற குடி."
      ],
      "manakkudavar": "உட்பகையானது உற்ற குடி, அரத்தினால் தேய்க்கப்பட்ட பொன்னைப் போல, அதனால் பொரப்படவே வலி தேயும். இஃது உட்பகை அழகு செய்வது போலப் பலத்தைக் கெடுக்குமென்றது.",
      "pope": "As gold with which the file contends is worn away,So strength of house declines where hate concealed hath sway",
      "sourceFile": "0888.md",
      "sourceSha256": "846b2d6ab44acd332e2acc033463b248c6d41d241a98890fb063f672bea1f45c"
    },
    {
      "number": 889,
      "lines": [
        "எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்",
        "உட்பகை உள்ளதாங் கேடு."
      ],
      "manakkudavar": "எள்ளின் பிளவு போன்ற சிறுமைத்தேயாயினும் உடனே வாழும் பகையினான் ஒருவர்க்குக் கேடு உளதாம். இது பகை சிறிதென் றிகழற்க வென்றது.",
      "pope": "Though slight as shred of 'seasame' seed it be,Destruction lurks in hidden enmity",
      "sourceFile": "0889.md",
      "sourceSha256": "2716aa1990906f698c7a940471c4de3844dcbad4bfc69bef5daf4053460135c3"
    },
    {
      "number": 890,
      "lines": [
        "உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்",
        "பாம்போடு உடனுறைந் தற்று."
      ],
      "manakkudavar": "மனத்தினால் பொருத்த மில்லாதாரோடு ஒத்து வாழும் வாழ்க்கை, ஒரு குடிலகத்தே பாம்போடு கூடி வாழ்ந்தாற் போலும். இது பாம்பு இடம் வந்தால் கடிக்கும்; அதுபோல உட்பகைவர் இடம் வந்தால் கொல்லுவரென்றது.",
      "pope": "Domestic life with those who don't agree,Is dwelling in a shed with snake for company",
      "sourceFile": "0890.md",
      "sourceSha256": "dce3fbc3d264023a5d4dbf43887fc54a0cd2c5421f9544d9b74ffd26504b4218"
    },
    {
      "number": 891,
      "lines": [
        "ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்",
        "போற்றலுள் எல்லாம் தலை."
      ],
      "manakkudavar": "தவத்தினாலும் வலியினாலும் பெரியாரது வலியை இகழாதொழிதல், தம்மைக் காப்பார்க்குக் காவலாகிய எல்லாவற்றுள்ளும் தலையான காவலாம். இது பெரியாரைப் பிழையாமையால் வரும் பயன் கூறிற்று.",
      "pope": "The chiefest care of those who guard themselves from ill,Is not to slight the powers of those who work their mighty will",
      "sourceFile": "0891.md",
      "sourceSha256": "0632972d52f4ad98910887842a3f3908f590f125375d5883c3ff0cfd1c8d386e"
    },
    {
      "number": 892,
      "lines": [
        "பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்",
        "பேரா இடும்பை தரும்."
      ],
      "manakkudavar": "பெரியவர்களைப் போற்றாது ஒழுகுவனாயின் அவ்வொழுக்கம் அவராலே எல்லாரானும் இகழப்படும் நீங்காத துன்பத்தைத் தரும். இது முனிவரைப் போற்றா தொழியின் அது குற்றம் பயக்கு மென்றது.",
      "pope": "If men will lead their lives reckless of great men's will,Such life, through great men's powers, will bring perpetual ill",
      "sourceFile": "0892.md",
      "sourceSha256": "f3faa3ec754f2c825b9ac4ee5be73e3340205e5d2216ea45f42c9d33556d4537"
    },
    {
      "number": 893,
      "lines": [
        "கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்",
        "ஆற்று பவர்கண் இழுக்கு."
      ],
      "manakkudavar": "தான் கெடுதல் வேண்டுவனாயின், பெரியாரைக் கேளாதே ஒருவினையைச் செய்க. தன்னைக் கொல்ல வேண்டுவனாயின், வலியுடையார் மாட்டே தப்புச் செய்க.",
      "pope": "Who ruin covet let them shut their ears, and do despiteTo those who, where they list to ruin have the might",
      "sourceFile": "0893.md",
      "sourceSha256": "549cdc5ab9e2f545e3ace745026627ded5a4df2b46a6331d48c0779eb96e8ca8"
    },
    {
      "number": 894,
      "lines": [
        "கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு",
        "ஆற்றாதார் இன்னா செயல்."
      ],
      "manakkudavar": "வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற் போலும்.",
      "pope": "When powerless man 'gainst men of power will evil deeds essay,Tis beck'ning with the hand for Death to seize them for its prey",
      "sourceFile": "0894.md",
      "sourceSha256": "53b370c097a7e85f5b14128e9da64800fb9ef6e9981c10360b2c1eb1b143853c"
    },
    {
      "number": 895,
      "lines": [
        "யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்",
        "வேந்து செறப்பட் டவர்."
      ],
      "manakkudavar": "எவ்விடத்துச் செல்லினும் எவ்விடத்தும் உளராகார்: வெய்ய வலிமையுடைய வேந்தனால் செறப்பட்டார். இது கெட்டுப்போனாலும் இருக்கலாவதோர் அரணில்லை யென்றது.",
      "pope": "Who dare the fiery wrath of monarchs dread,Where'er they flee, are numbered with the dead",
      "sourceFile": "0895.md",
      "sourceSha256": "77cd137fc13ccda07fd92730e5899df83e91cfc843b480558a58506516845c1f"
    },
    {
      "number": 896,
      "lines": [
        "எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்",
        "பெரியார்ப் பிழைத்தொழுகு வார்."
      ],
      "manakkudavar": "தீயினால் சுடப்படினும் உய்தல் உண்டாம்: பெரியாரைப் பிழைத்தொழுகுவார் உய்யார். இது முனிவரைப் பிழைத்தலினால் வருங்குற்றம் கூறிற்று. முற்பட உயிர்க்கேடு வருமென்று கூறினார்.",
      "pope": "Though in the conflagration caught, he may escape from thence:He 'scapes not who in life to great ones gives offence",
      "sourceFile": "0896.md",
      "sourceSha256": "1ad6fbb2dfabcb062ec3d8b625794e814cdd21d420f41c4113ffd528e8529efc"
    },
    {
      "number": 897,
      "lines": [
        "வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்",
        "தகைமாண்ட தக்கார் செறின்."
      ],
      "manakkudavar": "எல்லா வகையானும் மாட்சிமைப்பட்ட வாழ்க்கையும் மிக்க பொருளும் என்ன பயனுடையனவாம்: பெருமையால் மிக்க தகுதியுடையார் செறுவாராயின். எல்லா வகையுமாவன சுற்றமும், நட்டோரும், நற்றனயரும், இல்லும், நிலமும் முதலாயின.",
      "pope": "Though every royal gift, and stores of wealth your life should crown,What are they, if the worthy men of mighty virtue frown",
      "sourceFile": "0897.md",
      "sourceSha256": "35464eaf02c6e7bb19441a495f5883c24f013c63ddcbcc51c27a43aadb8cf46e"
    },
    {
      "number": 898,
      "lines": [
        "குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு",
        "நின்றன்னார் மாய்வர் நிலத்து."
      ],
      "manakkudavar": "மலைபோலப் பெரியாரைக் குறைய மதிப்பாராயின், உலகத்தின் கண்ணே நின்றாற்போலத் தோன்றுகின்றவர் குடியோடே கூடமாய்வர். குன்ற மதித்தல்- அவமதித்தல்.",
      "pope": "If they, whose virtues like a mountain rise, are light esteemed;They die from earth who, with their households, ever-during seemed",
      "sourceFile": "0898.md",
      "sourceSha256": "d98aa4a760b55d2c636e8873aea34997d2cbec540f9ccda97bab1aa199f7bd51"
    },
    {
      "number": 899,
      "lines": [
        "ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து",
        "வேந்தனும் வேந்து கெடும்."
      ],
      "manakkudavar": "உயர்ந்த கோட்பாட்டை யுடையார் வெகுள்வராயின், இந்திரனும் இடையிலே இற்றுத் தன்னரசு இழக்கும். இது பொருட்கேடு வருமென்று கூறிற்று.",
      "pope": "When blazes forth the wrath of men of lofty fame,Kings even fall from high estate and perish in the flame",
      "sourceFile": "0899.md",
      "sourceSha256": "f34e344d545007b5b7479735156652097b59c48a94759590106b5afdee88e519"
    },
    {
      "number": 900,
      "lines": [
        "இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்",
        "சிறந்தமைந்த சீரார் செறின்."
      ],
      "manakkudavar": "மிகவும் அமைந்த துணையுடைய ராயினும் கெடுவர்: மிகவும் அமைந்த சீர்மையுடையார் செறுவாராயின். இது துணையுடையாராயினும் உயிர்க்கேடு வருமென்றது.",
      "pope": "Though all-surpassing wealth of aid the boast,If men in glorious virtue great are wrath, they're lost",
      "sourceFile": "0900.md",
      "sourceSha256": "7668fd32ffc4d2ed0d231f5b94975aefcac6f0708a3ef61597ba8be75e9cd0ce"
    },
    {
      "number": 901,
      "lines": [
        "மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்",
        "வேண்டாப் பொருளும் அது."
      ],
      "manakkudavar": "மனையாளைக் காதலித்தொழுகுவார் நற்பயனைப் பெறார்: யாதானும் ஒருவினையைச் செய்து முடிக்கவேண்டுவார் விரும்பாத பொருளும் அவரை விழையாமை. இஃது அறத்தினும் பொருளினும் காதலின்றி அவர்தம்மையே காதலிப்பார்க்கு அறனும் பொருளும் இல்லையாமென்றது.",
      "pope": "Who give their soul to love of wife acquire not nobler gain;Who give their soul to strenuous deeds such meaner joys disdain",
      "sourceFile": "0901.md",
      "sourceSha256": "50181a8eba5df25f6b175474b6f640660ac6b4febe6d0c97fa1f08a40980c31a"
    },
    {
      "number": 902,
      "lines": [
        "பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்",
        "நாணாக நாணுத் தரும்."
      ],
      "manakkudavar": "அறத்தினையும் பொருளினையும் பேணாது மனையாளைக் காதலிப்பானது செல்வம், பெரியதோர் நாணம் உலகத்தே நிற்கும்படியாகத் தனக்கு நாணினைத் தரும்.",
      "pope": "Who gives himself to love of wife, careless of noble nameHis wealth will clothe him with o'erwhelming shame",
      "sourceFile": "0902.md",
      "sourceSha256": "36771e158a7da320d9b8fade33848e1cc65aa760d3719e726db697237c883fb7"
    },
    {
      "number": 903,
      "lines": [
        "இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்",
        "நல்லாருள் நாணுத் தரும்."
      ],
      "manakkudavar": "மனையாள்மாட்டுந் தாழ்ந்தொழுகும் இயல்பாகிய கேடு எல்லா நாளும் நல்லாரிடத்து நாணுதலைத் தரும்.",
      "pope": "Who to his wife submits, his strange, unmanly moodWill daily bring him shame among the good",
      "sourceFile": "0903.md",
      "sourceSha256": "37cc86ae82ca5486ed18f793f5ca59d7cd888fa3952bdf5e110cf297ab8cc56a"
    },
    {
      "number": 904,
      "lines": [
        "மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்",
        "வினையாண்மை வீறெய்த லின்று."
      ],
      "manakkudavar": "மனையாளை அஞ்சுகின்ற மறுமைப் பயனெய்தாதவன் ஒரு வினையை ஆளுந்தன்மை, பெருமை எய்துதல் இல்லை. இது பொருள் செய்ய மாட்டானென்றது.",
      "pope": "No glory crowns e'en manly actions wroughtBy him who dreads his wife, nor gives the other world a thought",
      "sourceFile": "0904.md",
      "sourceSha256": "20d08e6b53ddee81d605bb2c8b393b611279565a67b6da2ec5c8590b61173aec"
    },
    {
      "number": 905,
      "lines": [
        "இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்",
        "நல்லார்க்கு நல்ல செயல்."
      ],
      "manakkudavar": "மனையாளை அஞ்சுவான், எஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்லவை செய்தலை அஞ்சும். இஃது அறஞ்செய்ய மாட்டானென்றது.",
      "pope": "Who quakes before his wife will ever tremble too,Good deeds to men of good deserts to do",
      "sourceFile": "0905.md",
      "sourceSha256": "38f305787e948acd6268a58b88317156992aebeef46ac3b010e5bde624733745"
    },
    {
      "number": 906,
      "lines": [
        "இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்",
        "அமையார்தோள் அஞ்சு பவர்."
      ],
      "manakkudavar": "தேவரைப்போல இன்புற்று வாழினும், பெருமை யிலராவர்; மனையாளது வேய்போலும் தோளை அஞ்சுபவர். இது செல்வமுடையராயினும் பிறரால் மதிக்கப்படாரென்றது.",
      "pope": "Though, like the demi-gods, in bliss they dwell secure from harm,Those have no dignity who fear the housewife's slender arm",
      "sourceFile": "0906.md",
      "sourceSha256": "dce1dd2ddf4f8c0ab25cc30f93c657a08c5a02fac960c85a94b8e1df46a32a46"
    },
    {
      "number": 907,
      "lines": [
        "பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்",
        "பெண்ணே பெருமை உடைத்து."
      ],
      "manakkudavar": "பெண்டிர் ஏவின தொழிலைச் செய்தொழுகும் ஆண்மையின், நாணமுடைய பெண்மையே தலைமை உடைத்தாம். இது பிறரால் மதிக்கப்படாரென்றது.",
      "pope": "The dignity of modest womanhood excelsHis manliness, obedient to a woman's law who dwells",
      "sourceFile": "0907.md",
      "sourceSha256": "f022b841fbbe78c479b5cc8e099828b543a51b3d69e71e84165721b9c8b55957"
    },
    {
      "number": 908,
      "lines": [
        "நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்",
        "பெட் டாங்கு ஒழுகு பவர்."
      ],
      "manakkudavar": "நல்ல நுதலினை யுடையாள் விரும்பியவாறு செய்தொழுகுவார், தம்மோடு நட்டார்.",
      "pope": "Who to the will of her with beauteous brow their lives conform,Aid not their friends in need, nor acts of charity perform",
      "sourceFile": "0908.md",
      "sourceSha256": "1428e1ea8b46317d68b23b00e8b52502ca01f08c69ad9a6e9d42a2a655bebb54"
    },
    {
      "number": 909,
      "lines": [
        "அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்",
        "பெண்ஏவல் செய்வார்கண் இல்."
      ],
      "manakkudavar": "அறஞ்செய்தலும் அமைந்த பொருள் செய்தலும் ஒழிந்த காமம் நுகர்தலும் பெண்ணேவல் செய்வார்மாட்டு இல்லையாம். இஃது அச்சமில்லாராயினும் சொன்னது செய்வாராயின் இம்மூன்று பொருளும் எய்தார் என்றது.",
      "pope": "No virtuous deed, no seemly wealth, no pleasure, restsWith them who live obedient to their wives' behests",
      "sourceFile": "0909.md",
      "sourceSha256": "d639ca9aeeda0159c7e09d5844b66c7f9d0086f5580133137651efe80e7904d8"
    },
    {
      "number": 910,
      "lines": [
        "எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்",
        "பெண்சேர்ந்தாம் பேதைமை இல்."
      ],
      "manakkudavar": "எண்ணஞ் சேர்ந்த மனத்தினை விரிவாக உடையார்க்கு எல்லா நாளும் பெண்ணைச் சேர்ந்து ஆகும் அறியாமை இல்லையாம். எண்ணஞ்சேர்தல் - இதனால் வருங்குற்றத்தினைத் தெரிந்துணர்தல்.",
      "pope": "Where pleasures of the mind, that dwell in realms of thought, abound,Folly, that springs from overweening woman's love, is never found",
      "sourceFile": "0910.md",
      "sourceSha256": "975307b4dc95bc07205f6b6f8fd95ab673f716009816fd6a03f23428e3b47d94"
    },
    {
      "number": 911,
      "lines": [
        "அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்",
        "இன்சொல் இழுக்குத் தரும்."
      ],
      "manakkudavar": "அன்பால் கலத்தலின்றிப் பொருளால் கலக்கும் ஆய்தொடியார் சொல்லும் இன்சொல், பின்பு கேட்டினைத் தரும்.",
      "pope": "Those that choice armlets wear who seek not thee with love,But seek thy wealth, their pleasant words will ruin prove",
      "sourceFile": "0911.md",
      "sourceSha256": "0da79de7e1ac051fa65b27cbc12cf8df6b5342c13b7e52b6359e5097fbb1a487"
    },
    {
      "number": 912,
      "lines": [
        "பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்",
        "நயன்தூக்கி நள்ளா விடல்."
      ],
      "manakkudavar": "தமக்கு உளதாகும் பயனை நோக்கிக் குணமாகக்கூறும் குணமில்லாத மகளிரது இன்பத்தை யாராய்ந்து பார்த்து அவரைச் சாராதொழிக. இதனாலே கணிகையர் இலக்கண மெல்லாம் தொகுத்துக் கூறினார்.",
      "pope": "Who weigh the gain, and utter virtuous words with vicious heart,Weighing such women's worth, from their society depart",
      "sourceFile": "0912.md",
      "sourceSha256": "2fd3d0af6f1b274c2b437b9dc2866b54f55301aec0d722a8fe1996f7f789845b"
    },
    {
      "number": 913,
      "lines": [
        "பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்",
        "ஏத஧ல் பிணந்தழீஇ அற்று."
      ],
      "manakkudavar": "பொருளே கருதும் பெண்டிர் ஒருவனோடு பொய்யே முயங்கும் முயக்கம், இருட்டறையினுள்ளே கிடந்ததொரு வேற்றுப் பிணத்தைக் கூலிக்குத் தழுவியதுபோலும். இவை இரண்டினாலும் கணிகையர் கூட்டத்தினால் வரும் குற்றம் கூறப்பட்டது.",
      "pope": "As one in darkened room, some stranger corpse inarms,Is he who seeks delight in mercenary women's charms",
      "sourceFile": "0913.md",
      "sourceSha256": "e1c7b5258d69aeb9798b9e021c99c259dd0af42e8be433e611c3b024a4b13850"
    },
    {
      "number": 914,
      "lines": [
        "பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்",
        "ஆயும் அறிவி னவர்."
      ],
      "manakkudavar": "பொருளைப் பொருளாகக் கொள்வாராது புல்லிய நலத்தைத் தோயார், அருளைப் பொருளாக ஆராயும் அறிவுடையார்.",
      "pope": "Their worthless charms, whose only weal is wealth of gain,From touch of these the wise, who seek the wealth of grace, abstain",
      "sourceFile": "0914.md",
      "sourceSha256": "bddbd01bdfc976e3dc9a89284a8d410ea3956550b18b362dcc4a41eda9343b78"
    },
    {
      "number": 915,
      "lines": [
        "பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்",
        "மாண்ட அறிவி னவர்."
      ],
      "manakkudavar": "மதிநலத்தாலே மாட்சிமைப்பட்ட அறிவுடையார், எல்லார்க்கும் பொதுவாகிய நலத்தினையுடையவரது புல்லிய நலத்தைச் சேரார். இது புத்திமான் சேரானென்றது.",
      "pope": "From contact with their worthless charms, whose charms to all are free,The men with sense of good and lofty wisdom blest will flee;",
      "sourceFile": "0915.md",
      "sourceSha256": "430bf0cbaf56e2dd74938c9b2ccc79dae5277f35c22436e7d8d8fb105e956263"
    },
    {
      "number": 916,
      "lines": [
        "தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்",
        "புன்னலம் பாரிப்பார் தோள்."
      ],
      "manakkudavar": "தகை செருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள் - ஆடல், பாடல், அழகு என்பனவற்றால் களித்துத், தம் புல்லிய நலத்தை விலை கொடுப்பார் யாவர்மாட்டும் பரப்பும் மகளிர் தோளினை; தம் நலம் பாரிப்பார் தோயார் - அறிவொழுக்கங்களானாய தம் புகழை உலகத்துப் பரப்புதற்குரிய உயர்ந்தோர் தீண்டார். (ஆடல் முதலிய மூன்றும் உடைமை அவர்க்கு மேம்பாடாகலின் 'தகை' என்றும், தோயின் அறிவொழுக்கங்கள் அழியும் ஆகலின் அவற்றால் புகழ் பரப்புவார் 'தோயார்' என்றும் கூறினார். தம்நலம் என்புழி 'நலம்' ஆகுபெயர். இவை மூன்று பாட்டானும் அவரை உயர்ந்தோர் தீண்டார் என்பது கூறப்பட்டது.).",
      "pope": "From touch of those who worthless charms, with wanton arts, display,The men who would their own true good maintain will turn away",
      "sourceFile": "0916.md",
      "sourceSha256": "61296929b4f1bc0416dac3b59b4b8efa6be93b16dfabcf76c175d0fe698427ae"
    },
    {
      "number": 917,
      "lines": [
        "நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்",
        "பேணிப் புணர்பவர் தோள்."
      ],
      "manakkudavar": "நிறையுடைய நெஞ்சில்லாதார் தோய்வர்: இன்பமில்லாத பிறவாகிய பொருளை நெஞ்சினாலே விரும்பிவைத்து அன்புற்றார் போலப் புணருமவரது தோளினை. இது நிறையில்லாதார் சேர்வரென்றது.",
      "pope": "Who cherish alien thoughts while folding in their feigned embrace,These none approach save those devoid of virtue's grace",
      "sourceFile": "0917.md",
      "sourceSha256": "bde28f9e0c8b4355d276cb3231a906e119bc4890ecb2d7ecd1dfa5a629722903"
    },
    {
      "number": 918,
      "lines": [
        "ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப",
        "மாய மகளிர் முயக்கு."
      ],
      "manakkudavar": "யாதானும் ஒரு பொருளை உள்ளவாறு ஆராய்ந்தறியும் அறிவுடையரல்லாதார்க்கு வருத்தமாமென்று சொல்லுவர், மாயத்தை வல்ல மகளிரது முயக்கத்தை. இஃது இவரை அறிவில்லாதவர் சேர்வரென்றது.",
      "pope": "As demoness who lures to ruin woman's treacherous loveTo men devoid of wisdom's searching power will prove",
      "sourceFile": "0918.md",
      "sourceSha256": "de40a74ad971cac3f90c7d38ccf108982a195d6cac963f8dd184091bd0d967de"
    },
    {
      "number": 919,
      "lines": [
        "வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்",
        "பூரியர்கள் ஆழும் அளறு."
      ],
      "manakkudavar": "முயக்கத்தில் வரைவில்லாத மாணிழையாரது மெல்லிய தோளாவது, உயர்வில்லாத கயவர் அழுந்தும் நரகம். இஃது இழிந்தார் சார்வரென்றது.",
      "pope": "The wanton's tender arm, with gleaming jewels decked,Is hell, where sink degraded souls of men abject",
      "sourceFile": "0919.md",
      "sourceSha256": "4b4983bcfc933974bc4d060a80a6934d4702d43fcf0eca8844ede6ad51b4ed28"
    },
    {
      "number": 920,
      "lines": [
        "இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்",
        "திருநீக்கப் பட்டார் தொடர்பு."
      ],
      "manakkudavar": "கவர்த்த மனத்தையுடைய பெண்டிரும், கள்ளும், கவறும் திருமகளால் கடியப்பட்டாரது நட்பு. இது நல்குரவாவார் சார்வரென்றது.",
      "pope": "Women of double minds, strong drink, and dice; to these giv'n o'er,Are those on whom the light of Fortune shines no more",
      "sourceFile": "0920.md",
      "sourceSha256": "88efec6cec0d388c9f9363b1f99a3f912f5bc3c10b79b301e754fe3f442b7506"
    },
    {
      "number": 921,
      "lines": [
        "உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்",
        "கட்காதல் கொண்டொழுகு வார்."
      ],
      "manakkudavar": "பிறரால் மதிக்கவும் படார், தோற்றமும் இழப்பர், எல்லா நாளும் கள்ளின்கண் காதல்கொண்டு ஒழுகுவார். இது மதிக்கவும் படார்: புகழும் இலராவரென்றது.",
      "pope": "Who love the palm's intoxicating juice, each day,No rev'rence they command, their glory fades away",
      "sourceFile": "0921.md",
      "sourceSha256": "db5b1a97427f9e7b0d7b96363b626dfb0edf8352ea129348828fc447775a1a48"
    },
    {
      "number": 922,
      "lines": [
        "உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்",
        "எண்ணப் படவேண்டா தார்."
      ],
      "manakkudavar": "கள்ளினை உண்ணாதொழிக; உண்ணவேண்டின் சான்றோரால் மதிக்கப்படுதலை வேண்டாதார் உண்க.",
      "pope": "Drink not inebriating draught Let him count well the costWho drinks, by drinking, all good men's esteem is lost",
      "sourceFile": "0922.md",
      "sourceSha256": "e296ba4fe0d7d78976dd787171bb7da37a9e0c322e347be75c6da211f1967dfe"
    },
    {
      "number": 923,
      "lines": [
        "ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்",
        "சான்றோர் முகத்துக் களி."
      ],
      "manakkudavar": "தன்னைப்பயந்தாள் முன்பாயினும் கள்ளுண்டு களித்தல் இன்னாதாம்: அங்ஙனமாகச் சான்றோர் முன்பு களித்தல் மற்றியாதாகும்? எல்லார் முன்பும் இன்னாமையே பயப்பதென்றவாறாயிற்று.",
      "pope": "The drunkard's joy is sorrow to his mother's eyes;What must it be in presence of the truly wise",
      "sourceFile": "0923.md",
      "sourceSha256": "6551bf7c155ac67eb4dc2d063f5353a4657608a227e173fcad4793182b482c31"
    },
    {
      "number": 924,
      "lines": [
        "நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்",
        "பேணாப் பெருங்குற்றத் தார்க்கு."
      ],
      "manakkudavar": "நாணமென்று சொல்லப்படுகின்ற நன்மடந்தை பின்பு காட்டிப்போம்; கள்ளுண்டலாகிய பிறரால் விரும்பப்படாத பெரிய குற்றத்தினையுடையார்க்கு. இது நாணம் போமென்றது.",
      "pope": "Shame, goodly maid, will turn her back for aye on themWho sin the drunkard's grievous sin, that all condemn",
      "sourceFile": "0924.md",
      "sourceSha256": "23eea01ebda432a61feec48f2d2d275ca54b018f01e5933680a63d3c04223294"
    },
    {
      "number": 925,
      "lines": [
        "கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து",
        "மெய்யறி யாமை கொளல்."
      ],
      "manakkudavar": "பயன் அறியாமை யுடைத்து: பொருளினைக் கொடுத்துத் தம்மெய் அறியாமையைச் செய்யும் கள்ளினைக் கோடல். இது மேற்கூறியகுற்ற மெல்லாம் பயத்தலின், அதனை அறிவுடையார் செய்யா ரென்றது.",
      "pope": "With gift of goods who self-oblivion buys,Is ignorant of all that man should prize",
      "sourceFile": "0925.md",
      "sourceSha256": "44a47798fdd971009a1c59957775cca75ac8be428bd82daee3de3a6d4403c877"
    },
    {
      "number": 926,
      "lines": [
        "துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்",
        "நஞ்சுண்பார் கள்ளுண் பவர்."
      ],
      "manakkudavar": "உறங்கினார் செத்தாரோடு ஒப்பர், அறிவிழத்தலான்; அதுபோல எல்லாநாளும் கள்ளுண்பார் நஞ்சுண்பவரோடு ஒப்பர், மயங்குதலான். இஃது அறிவிழப்பரென்றது.",
      "pope": "Sleepers are as the dead, no otherwise they seem;Who drink intoxicating draughts, they poison quaff, we deem",
      "sourceFile": "0926.md",
      "sourceSha256": "42e060166d6610e1a1fd5648169dc6347c5b100c0041052e32a7edfb07d04c11"
    },
    {
      "number": 927,
      "lines": [
        "உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்",
        "கள்ளொற்றிக் கண்சாய் பவர்"
      ],
      "manakkudavar": "தங்கள் ஒழுக்கத்தை உள்புக்கு அறிந்த உள்ளூராலே இகழப்படுவர்; எல்லாநாளும் கள்ளுள்ளவிடத்தை நாடி, அதன்கண்ணே தாழ்வார்.",
      "pope": "Who turn aside to drink, and droop their heavy eye,Shall be their townsmen's jest, when they the fault espy",
      "sourceFile": "0927.md",
      "sourceSha256": "b728b21416d52154ef554ce30442e3d973c7a6e546a8047afa420c0f9e23daa2"
    },
    {
      "number": 928,
      "lines": [
        "களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து",
        "ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்."
      ],
      "manakkudavar": "கள்ளுண்டால் களித்தறியே னென்பதனைக் கைவிடுக: மனத்தின்கண்ணே கரந்ததூஉம் அப்பொழுதே வாய்சேர்ந்து புலப்படும்; அது கள்ளிற்கு இயல்பு. உளம் கெடாதென்பார்க்கு இது கூறப்பட்டது.",
      "pope": "No more in secret drink, and then deny thy hidden fraud;What in thy mind lies hid shall soon be known abroad",
      "sourceFile": "0928.md",
      "sourceSha256": "f7cbc3d4ccf64c2d8d652e5d028bf7d0fca47d7cb1dc818b1c839e61d4ce2832"
    },
    {
      "number": 929,
      "lines": [
        "களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்",
        "குளித்தானைத் தீத்துரீஇ அற்று."
      ],
      "manakkudavar": "கள்ளுண்டு களித்தவனைக் காரணங் காட்டித் தௌ¤வித்தல், நீரின்கீழே முழுகினானைத் தீயினாற் சுட்டது போலும். இது பிறர்சொல்லவும் கேளாரென்றது.",
      "pope": "Like him who, lamp in hand, would seek one sunk beneath the waveIs he who strives to sober drunken man with reasonings grave",
      "sourceFile": "0929.md",
      "sourceSha256": "99a1d13e20d90ef99a448a0d89c6d98fcae35cc5927dcfee38bb92f4143e26c3"
    },
    {
      "number": 930,
      "lines": [
        "கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்",
        "உள்ளான்கொல் உண்டதன் சோர்வு."
      ],
      "manakkudavar": "தான் கள்ளுண்ணாதபோது கள்ளுண்டு களித்தவனைக் கண்டவிடத்துத் தான் கள்ளுண்டபோழ்து தளக்குள்ளதாகுஞ் சோர்வினை நினையான்போலும்; நினைப்பானாயின் தவிரும்.",
      "pope": "When one, in sober interval, a drunken man espies,Does he not think, 'Such is my folly in my revelries'",
      "sourceFile": "0930.md",
      "sourceSha256": "6f9220160ecc7682bef11808c4eab67ee8d2c210af53816208520006b99a9413"
    },
    {
      "number": 931,
      "lines": [
        "வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்",
        "தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று."
      ],
      "manakkudavar": "வெல்லுமாயினும் சூதினை விரும்பாதொழிக; வென்று பெற்ற பொருளும் தூண்டிலின்கண்ணுண்டாகிய பொருளை மீன் விழுங்கினாற்போலும். இது பின் கேடுபயக்குமென்றது.",
      "pope": "Seek not the gamester's play; though you should win,Your gain is as the baited hook the fish takes in",
      "sourceFile": "0931.md",
      "sourceSha256": "361cc99f9ff92b6ca87006b63db48ada21f6ee21bbd03de1a1ce34caea6d0d50"
    },
    {
      "number": 932,
      "lines": [
        "ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்",
        "நன்றெய்தி வாழ்வதோர் ஆறு."
      ],
      "manakkudavar": "முன்பு ஒருபொருளைப் பெற்று அவ்வாசையாலே மற்றொரு பொருளினைப் பெறலாமென்று நூறு பொருளை யிழக்கின்ற சூதாடிகளுக்கு நன்றெய்தி வாழ்வதொரு நெறி உண்டாமோ?.",
      "pope": "Is there for gamblers, too, that gaining one a hundred lose, some wayThat they may good obtain, and see a prosperous day",
      "sourceFile": "0932.md",
      "sourceSha256": "1b82c93418fab0e7223269e22457f6e8b02d3bf25fb81647ca7ccef9c1eb942d"
    },
    {
      "number": 933,
      "lines": [
        "உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்",
        "போஒய்ப் புறமே படும்."
      ],
      "manakkudavar": "புரளும் கவற்றை இடைவிடாது எக்காலத்தும் கூறுவானாயின், பொருள்வரவு தன்னைவிட்டுப் போய்ப் பிறர்பாற் செல்லும்.",
      "pope": "If prince unceasing speak of nought but play,Treasure and revenue will pass from him away",
      "sourceFile": "0933.md",
      "sourceSha256": "328cc4f003fbbbee80a96a17ab1adb98fd03bc5018ae7af5b48dc8a22e015125"
    },
    {
      "number": 934,
      "lines": [
        "சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின்",
        "வறுமை தருவதொன்று இல்."
      ],
      "manakkudavar": "துன்பமாயின பலவற்றையுஞ் செய்து தலைமையை யழிக்கும் சூதுபோல வறுமையைத் தருவது பிறிதொன்று இல்லை.",
      "pope": "Gaming brings many woes, and ruins fair renown;Nothing to want brings men so surely down",
      "sourceFile": "0934.md",
      "sourceSha256": "7ce7fafb7aa4fe4ce20bc63c4ffbc236351722e0649a15b0b1424668c9d11a72"
    },
    {
      "number": 935,
      "lines": [
        "கவறும் கழகமும் கையும் தருக்கி",
        "இவறியார் இல்லாகி யார்."
      ],
      "manakkudavar": "கவற்றினையும், கழகத்தினையும், கைத்தொழிலினையும் விரும்பி விடாதவர் முற்காலத்தினும் வறுவியரானார். கவறு - நெத்தம், கழகம் - உருண்டையுருட்டு மிடம், கைத் தொழில் - கவடி பிடித்தல்.",
      "pope": "The dice, and gaming-hall, and gamester's art, they eager sought,Thirsting for gain- the men in other days who came to nought",
      "sourceFile": "0935.md",
      "sourceSha256": "dcc10e22ad969d3aa0cb03567273b558386ba25054871bf9b6489a6c05494edd"
    },
    {
      "number": 936,
      "lines": [
        "அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்",
        "முகடியான் மூடப்பட் டார்."
      ],
      "manakkudavar": "தமக்கு உள்ளதாகிய இந்திரியங்களும் மனமும் இன்புற்று நிறையப்பெறார்; அதுவேயன்றி அல்லற்படுவதும் செய்வர்; சூதாகிய மூதேவியாலே மறைக்கப்பட்டார். மறைத்தல்- நற்குணங்களைத் தோன்றாமல் மறைத்தல்.",
      "pope": "Gambling's Misfortune's other name: o'er whom she casts her veil,They suffer grievous want, and sorrows sore bewail",
      "sourceFile": "0936.md",
      "sourceSha256": "fa0b7602c3b29c8eef38cf31146e53b2a4444c673ab172dd0fc3f6782b18b868"
    },
    {
      "number": 937,
      "lines": [
        "பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்",
        "கழகத்துக் காலை புகின்."
      ],
      "manakkudavar": "சூதுகழகத்தின்கண்ணே காலைப்பொழுது புகுவானாயின், அது தொன்றுதொட்டு வருகின்ற செல்வத்தினையும் தமக்கியல்பாகிய குணத்தினையும் கெடுக்கும்.",
      "pope": "Ancestral wealth and noble fame to ruin haste,If men in gambler's halls their precious moments waste",
      "sourceFile": "0937.md",
      "sourceSha256": "06a54c0c303c5c4cb4a0da10214dcde174b9bf00992718c1e7a96e8366fd20d9"
    },
    {
      "number": 938,
      "lines": [
        "பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து",
        "அல்லல் உழப்பிக்கும் சூது."
      ],
      "manakkudavar": "சூது, முற்படப் பொருளைக் கெடுத்து அதன் பின்னர்ப் பொய்யை மேற்கொள்ளப்பண்ணி அருளுடைமையைக் கெடுத்து அல்லற்படுத்துவிக்கும்.",
      "pope": "Gambling wastes wealth, to falsehood bends the soul: it drives awayAll grace, and leaves the man to utter misery a prey",
      "sourceFile": "0938.md",
      "sourceSha256": "ba94cb5560c5b31041d019ab5200d63bc91692ab710f0df3aa1a42c3982ad5f6"
    },
    {
      "number": 939,
      "lines": [
        "உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்",
        "அடையாவாம் ஆயங் கொளின்."
      ],
      "manakkudavar": "உடையும், செல்வமும், உணவும், புகழும், கல்வியுமென்று சொல்லப்பட்ட ஐந்தும் சூதினைக் கொள்ளின் சாராவாம். செல்வம்- பொன்னும், மனையும், பூமியும், அடிமையும் முதலாயின.",
      "pope": "Clothes, wealth, food, praise, and learning, all departFrom him on gambler's gain who sets his heart",
      "sourceFile": "0939.md",
      "sourceSha256": "edd6f98e925ca8fe2c8c568d06423cbd582bae7c9cb8fca1af69c5ab6eed5093"
    },
    {
      "number": 940,
      "lines": [
        "இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்",
        "உழத்தொறூஉம் காதற்று உயிர்."
      ],
      "manakkudavar": "பொருளை இழக்குந்தோறும் பொருளைக் காதலிக்கும் சூதுபோலத் துன்பத்தை உழக்குந்தோறும் இன்பத்திலே காதலுடைத்து உயிர். இவை இரண்டினுக்கும் அஃதியல்பு.",
      "pope": "Howe'er he lose, the gambler's heart is ever in the play;E'en so the soul, despite its griefs, would live on earth alway",
      "sourceFile": "0940.md",
      "sourceSha256": "2188fbc68b54a424e3abc0fa9e7544737c3ca22577de9ae95f7135e5be53f2c5"
    },
    {
      "number": 941,
      "lines": [
        "மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்",
        "வளிமுதலா எண்ணிய மூன்று."
      ],
      "manakkudavar": "உணவும் உறக்கமும் இணைவிழைச்சும் தன்னுடம்பின் அளவிற்கு மிகினும் குறையினும், நூலோரால் எண்ணப்பட்ட வாதமும் பித்தமும் சீதமுமாகிய மூன்றும் நோயைச் செய்யும்.",
      "pope": "The learned books count three, with wind as first; of these,As any one prevail, or fail; 'twill cause disease",
      "sourceFile": "0941.md",
      "sourceSha256": "acf12047249e1c32c4d200cdaeb7ddda64205cb11c5e0a07d0939fceee5f0d39"
    },
    {
      "number": 942,
      "lines": [
        "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது",
        "அற்றது போற்றி உணின்."
      ],
      "manakkudavar": "யாக்கைக்கு மருந்தென்பதொன்று வேண்டா, குற்றமற முற்காலத்து அருந்திய உணவு அற்றமையறிந்து பாதுகாத்து உண்பானாயின். இஃது இவ்வாறு செய்யின் மருந்து தேடவேண்டாமென்றது.",
      "pope": "No need of medicine to heal your body's pain,If, what you ate before digested well, you eat again",
      "sourceFile": "0942.md",
      "sourceSha256": "eb018ac2df3e14d5734c1931d9bcca6e22694c2058697e6c079c45b6a59b0659"
    },
    {
      "number": 943,
      "lines": [
        "அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு",
        "பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு."
      ],
      "manakkudavar": "முன்பு உண்டது அற்றால், பின்பு உண்ணுங்கால் இத்துணையறுமென்று தான் அறிந்து உண்க. அஃது உடம்பு பெற்றவன் அதனை நெடுங்காலம் செலுத்துதற்குரிய வழி.",
      "pope": "Who has a body gained may long the gift retain,If, food digested well, in measure due he eat again",
      "sourceFile": "0943.md",
      "sourceSha256": "f4e5ac2035bb31daa9587e7769cee38753f3743c8f3106bf1766796b359e7fcd"
    },
    {
      "number": 944,
      "lines": [
        "அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல",
        "துய்க்க துவரப் பசித்து."
      ],
      "manakkudavar": "முன்பு உண்டவுணவு அற்றதனை அறிந்து பின்பு அறுமளவும் கடைப்பிடித்து உண்ணுங்கால் ஒன்றினோடொன்று மாறுகொள்ளாத உணவினை மிகவும் பசித்து உண்க. மாறுகோடலாவது நெய்யும் தேனும் இனியவாயினும் தம்மிலளவொக்குமாயின் கொல்லும்; அதுபோல்வதாம். இஃது உண்ணுங்கால் அளவறிந்துண்ணலேயன்றி மாறல்லவும் உண்ணவேண்டு மென்றது.",
      "pope": "Knowing the food digested well, when hunger prompteth thee,With constant care, the viands choose that well agree",
      "sourceFile": "0944.md",
      "sourceSha256": "b49bf4a5e461597035178fa855ca344d095c123bb352f2bbabca09deaba10f90"
    },
    {
      "number": 945,
      "lines": [
        "மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்",
        "ஊறுபாடு இல்லை உயிர்க்கு."
      ],
      "manakkudavar": "சுவையும் வீரியமும் மாறுபாடில்லாத உணவை நீக்கி யுண்பானாயின் தன்னுயிர்க்கு வரும் இடையூறு இல்லை. மாறுபாடு- பலாப்பழந்தின்றால் சுக்குத் தின்றல்.",
      "pope": "With self-denial take the well-selected meal;So shall thy frame no sudden sickness feel",
      "sourceFile": "0945.md",
      "sourceSha256": "de7e632490bd09a755dae99df4885d406b9f37c1d59a42b97519211d5a2503a5"
    },
    {
      "number": 946,
      "lines": [
        "இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்",
        "கழிபேர் இரையான்கண் நோய்."
      ],
      "manakkudavar": "அறும் அளவறிந்து உண்பவன்கண் இன்பம்போல உண்டாம், மிக உண்பான்கண் நோய்.",
      "pope": "On modest temperance as pleasures pure,So pain attends the greedy epicure",
      "sourceFile": "0946.md",
      "sourceSha256": "e44c1d1cb58520cc801b239f652d8c40707ea1d9b5c42269a1de191878da2e2b"
    },
    {
      "number": 947,
      "lines": [
        "தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்",
        "நோயள வின்றிப் படும்."
      ],
      "manakkudavar": "பசியின் அளவின்றி ஆராயாதே மிகவுண்பானாயின் மிகநோய் உண்டாம். இது, நோய் தீர்ந்தாலும் பசியளவு அறியாதே உண்பானாயின் மீண்டும் நோயா மாதலான் அளவறிந்து உண்ணல் வேண்டுமென்றது.",
      "pope": "Who largely feeds, nor measure of the fire within maintains,That thoughtless man shall feel unmeasured pains",
      "sourceFile": "0947.md",
      "sourceSha256": "19492d19ecb32b6353e2112e49714ced843215d0287de962f25d03cc9125b609"
    },
    {
      "number": 948,
      "lines": [
        "நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்",
        "வாய்நாடி வாய்ப்பச் செயல்."
      ],
      "manakkudavar": "நோயினையும் ஆராய்ந்து நோய்வருதற்குக் காரணமும் ஆராய்ந்து அந்நோய் தீர்க்கும் நெறியையும் ஆராய்ந்து அது தீர்க்குங்கால் தப்பாமற் செய்க. இது நோய் தீர்க்குமாறு கூறிற்று.",
      "pope": "Disease, its cause, what may abate the ill:Let leech examine these, then use his skill",
      "sourceFile": "0948.md",
      "sourceSha256": "9b015e022fcca79a55fc2e413dcc672858c688d615404060dcec4bdfebea7609"
    },
    {
      "number": 949,
      "lines": [
        "உற்றான் அளவும் பிணியளவும் காலமும்",
        "கற்றான் கருதிச் செயல்."
      ],
      "manakkudavar": "நோயுற்றவனது அளவும் நோயினது அளவும் அதுபற்றிய காலமும் அறிந்து அதற்குத்தக்கவாறு மருந்து செய்க: ஆயுள் வேதம் வல்லவன்.",
      "pope": "The habitudes of patient and disease, the crises of the illThese must the learned leech think over well, then use his skill",
      "sourceFile": "0949.md",
      "sourceSha256": "9b22db7581c02de465a9ba2ff9127654667c62ddcfca7726e9f130d92412f2a6"
    },
    {
      "number": 950,
      "lines": [
        "உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று",
        "அப்பால் நாற் கூற்றே மருந்து."
      ],
      "manakkudavar": "நோயுற்றவனும், நோய்தீர்க்குமவனும், மருந்தும், அதற்குத்தக்க மருந்தினைக் காலம் தப்பாமல் இயற்றுவானும் என்றிவ்வகைப்பட்ட நான்கு திறத்தது மருந்து.",
      "pope": "For patient, leech, and remedies, and him who waits by patient's side,The art of medicine must fourfold code of laws provide",
      "sourceFile": "0950.md",
      "sourceSha256": "5a4ecaca2ed87137ab213be3884c4a96478db2262a680f89bc4d832831636224"
    },
    {
      "number": 951,
      "lines": [
        "இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்",
        "செப்பமும் நாணும் ஒருங்கு."
      ],
      "manakkudavar": "உயர்குடிப்பிறந்தார்மாட்டல்லது பிறர்மாட்டு நடுவு நிலைமையும், பழி நாணுதலும், இயல்பாக ஒருங்கே உண்டாகா. இஃது இல்பிறந்தார் இவையிரண்டும் இயல்பாக உடையரென்றது.",
      "pope": "Save in the scions of a noble house, you never findInstinctive sense of right and virtuous shame combined",
      "sourceFile": "0951.md",
      "sourceSha256": "caac63b5e072481af4479ce6099e5fd1556962c7ed0a4fde4a262d631e7bf891"
    },
    {
      "number": 952,
      "lines": [
        "ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்",
        "இழுக்கார் குடிப்பிறந் தார்."
      ],
      "manakkudavar": "ஒழுக்க முடைமையும் மெய்ம்மை கூறுதலும் அற்றம் மறைத்தலாகிய நாணமுடைமையும் ஆகிய இம்மூன்றினையும் தப்பார் உயர்குடிப்பிறந்தார்.",
      "pope": "In these three things the men of noble birth fail not:In virtuous deed and truthful word, and chastened thought",
      "sourceFile": "0952.md",
      "sourceSha256": "7fc45c579ec481e75f5630f1d22025efd4563d9911482d9dfbc7eb87cfa83769"
    },
    {
      "number": 953,
      "lines": [
        "நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்",
        "வகையென்ப வாய்மைக் குடிக்கு."
      ],
      "manakkudavar": "முகமலர்ச்சியும், கொடையும், இனியவை கூறுதலும், பிறரை இகழாமையுமாகிய நான்கினையும் மெய்ம்மையுடைய குலத்தினுள்ளார்க்கு அங்கமென்று சொல்லுவர்.",
      "pope": "The smile, the gift, the pleasant word, unfailing courtesyThese are the signs, they say, of true nobility",
      "sourceFile": "0953.md",
      "sourceSha256": "d8ac53b069c427204f34c665d54b5f025db260c3ba54467901fe3c1766164f99"
    },
    {
      "number": 954,
      "lines": [
        "அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்",
        "குன்றுவ செய்தல் இலர்."
      ],
      "manakkudavar": "பல கோடிப் பொருளைப் பெறினும் உயர்குடிப்பிறந்தார் தங்குடிக்குத் தாழ்வாயின செய்யார். இது சான்றாண்மை விடாரென்றது.",
      "pope": "Millions on millions piled would never winThe men of noble race to soul-degrading sin",
      "sourceFile": "0954.md",
      "sourceSha256": "78d5fbd37a37872f1632be18ac9081f0e4fab53d3918ee8ee036b532280dbfc0"
    },
    {
      "number": 955,
      "lines": [
        "வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி",
        "பண்பில் தலைப்பிரிதல் இன்று."
      ],
      "manakkudavar": "வழங்கும் பொருள் தம்மளவிற்குக் குன்றிச் சுருங்கியவிடத்தும், பழைய பண்பு வழுவாத குடிப்பிறந்தார் தமது இயல்பினின்றும் நீங்குத லிலர். இது பண்புடைமை விடாரென்றது.",
      "pope": "Though stores for charity should fail within, the ancient raceWill never lose its old ancestral grace",
      "sourceFile": "0955.md",
      "sourceSha256": "fceec2a906b23e9f187591eae2d8ac7f6baad6f29a537b5d3c90544151de7065"
    },
    {
      "number": 956,
      "lines": [
        "சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற",
        "குலம்பற்றி வாழ்தும் என் பார்."
      ],
      "manakkudavar": "பொய்யைச் சார்ந்து அமைவில்லாதன செய்யார், குற்றமற்ற குலத்தைச் சார்ந்து உயிர்வாழ்வோ மென்று கருதுவார். இது சான்றாண்மை விடார் என்றது.",
      "pope": "Whose minds are set to live as fits their sire's unspotted fame,Stooping to low deceit, commit no deeds that gender shame",
      "sourceFile": "0956.md",
      "sourceSha256": "d55a70d258f205f26ef02b485a62e808d17f134a975e70d7316ac66dd6ed24b6"
    },
    {
      "number": 957,
      "lines": [
        "குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்",
        "மத஧க்கண் மறுப்போல் உயர்ந்து."
      ],
      "manakkudavar": "உயர்குடிப் பிறந்தார்மாட்டுக் குற்றமுளதாயின், அது வானத்தின் மதியின்கணுள்ள மறுப்போல உயர்ந்து விளங்கும். ஆதலால் குற்றப்பட ஒழுகற்க. இது குற்றம் செய்தலைத் தவிர வேண்டுமென்றது.",
      "pope": "The faults of men of noble race are seen by every eye,As spots on her bright orb that walks sublime the evening sky",
      "sourceFile": "0957.md",
      "sourceSha256": "69084dbe7d647493520a0ed1319a3e862088c08288912a7fafbe8e7e926c85a6"
    },
    {
      "number": 958,
      "lines": [
        "நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்",
        "குலத்தின்கண் ஐயப் படும்."
      ],
      "manakkudavar": "ஒருவன் குடிநலத்தின்கண்ணே நீர்மை யின்மை தோன்றுமாயின் அவனைக் குலத்தின்கண் தப்பினவனென்று ஐயப்படுக.",
      "pope": "If lack of love appear in those who bear some goodly name,'Twill make men doubt the ancestry they claim",
      "sourceFile": "0958.md",
      "sourceSha256": "c5896745d236ee4f7a3fc20e91482af9682d1f8460c056d9553461d31380406a"
    },
    {
      "number": 959,
      "lines": [
        "நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்",
        "குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்."
      ],
      "manakkudavar": "வித்து நிலத்தின்கண் மறைந்து கிடப்பினும் அது மறைந்து கிடந்தமையை அதன் முளை யறிவிக்கும். அதுபோல உயர்குடிப்பிறந்தாரை அவரவர் வாயிற்சொல் அறிவிக்கும்.",
      "pope": "Of soil the plants that spring thereout will show the worth:The words they speak declare the men of noble birth",
      "sourceFile": "0959.md",
      "sourceSha256": "ad74b86abef88da4dc227712e8419f1216aec81283acd61ac5177baf74afbaa6"
    },
    {
      "number": 960,
      "lines": [
        "நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்",
        "வேண்டுக யார்க்கும் பணிவு."
      ],
      "manakkudavar": "ஒருவர் தமக்கு நலத்தை வேண்டுவாராயின் நாணுடமையை விரும்புக: அவ்வண்ணமே குலத்தை விரும்புவாராயின் யாவர்மாட்டும் தாழ்ந்தொழுகுதலை விரும்புக. இது பணிந்தொழுக வேண்டு மென்றது.",
      "pope": "Who seek for good the grace of virtuous shame must know;Who seek for noble name to all must reverence show",
      "sourceFile": "0960.md",
      "sourceSha256": "e56bbf3a0a240c2bb53c78c6c0530f45dac308e9bac7f0b35fc5a12f73534386"
    },
    {
      "number": 961,
      "lines": [
        "இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்",
        "குன்ற வருப விடல்."
      ],
      "manakkudavar": "இன்றியமையாத சிறப்புடையனவாயினும் தமது தன்மை குறையவரும் பொருளையும் இன்பத்தையும் விடுக. இது பொருளும் இன்பமும் மிகினும் தன்மை குறைவன செய்யற்க வென்றது.",
      "pope": "Though linked to splendours man no otherwise may gain,Reject each act that may thine honour's clearness stain",
      "sourceFile": "0961.md",
      "sourceSha256": "e081641c202a1421f29a7ea6c487dc74fdcbab31bb3cbe3d1595592c6da3b063"
    },
    {
      "number": 962,
      "lines": [
        "சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு",
        "பேராண்மை வேண்டு பவர்."
      ],
      "manakkudavar": "தமக்குப் பொருள் மிகுதி உண்டாமாயினும் நிகரல்லாதன செய்யார், தலைமையோடே கூடப் பெரிய ஆண்மையை விரும்புவார்.",
      "pope": "Who seek with glory to combine honour's untarnished fame,Do no inglorious deeds, though men accord them glory's name",
      "sourceFile": "0962.md",
      "sourceSha256": "8e9c420d51c4c552fdb09a90078f37c711d09216653a6767a999b480af13c943"
    },
    {
      "number": 963,
      "lines": [
        "பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய",
        "சுருக்கத்து வேண்டும் உயர்வு."
      ],
      "manakkudavar": "செல்வம் பெருகிய காலத்து எல்லார்க்கும் பணிதல் வேண்டும்: செல்வம் மிகவுஞ் சுருங்கின் காலத்துத் தமது தன்மை குறைவுபடாமல் ஒழுகல் வேண்டும்.",
      "pope": "Bow down thy soul, with increase blest, in happy hour;Lift up thy heart, when stript of all by fortune's power",
      "sourceFile": "0963.md",
      "sourceSha256": "57d8817bf17c35f3f0e2c48644ef68975e3befdd44ab30e3c7d792a41434f978"
    },
    {
      "number": 964,
      "lines": [
        "தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்",
        "நிலையின் இழிந்தக் கடை."
      ],
      "manakkudavar": "தலையினின்று இறங்கிய மயிரைப்போல இகழப்படுவர்: மாந்தர் தமது நிலையினின்று நீங்கித் தாழ ஒழுகின விடத்து.",
      "pope": "Like hairs from off the head that fall to earth,When fall'n from high estate are men of noble birth",
      "sourceFile": "0964.md",
      "sourceSha256": "33ac5816daaea16c10bb1f95b14cc8bd204de4cc81458a3ab8df856591b55554"
    },
    {
      "number": 965,
      "lines": [
        "குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ",
        "குன்றி அனைய செயின்."
      ],
      "manakkudavar": "மலைபோலப் பெரிய உயர்வுடையாரும் தமது தன்மை குறைபடுவர்: ஒரு குறைவு வருவனவற்றைக் குன்றி அளவாயினும் செய்வாராயின். இது மிக்காராயினும் இகழப்படுவ ரென்றது.",
      "pope": "If meanness, slight as 'abrus' grain, by men be wrought,Though like a hill their high estate, they sink to nought",
      "sourceFile": "0965.md",
      "sourceSha256": "c798ee9e25a27776441da970724231c6680ce7bbc3c16f7d1c4ed6ac4a4d12ab"
    },
    {
      "number": 966,
      "lines": [
        "புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று",
        "இகழ்வார்பின் சென்று நிலை."
      ],
      "manakkudavar": "இம்மைப் பயனாகிய புகழைத் தாராதாயின், மறுமைப் பயனாகிய சுவர்க்கத்துப் புகுதலில்லை ஆயின், தன்னை இகழ்ந்துரைப்பார்பின் சென்று ஒருவன் நிற்கின்றது பின்னை என்ன பயனைக் கருதி? இது தம்மை இகழ்வார்மாட்டுச் சென்று நிற்றலைத் தவிர்க வென்றது.",
      "pope": "It yields no praise, nor to the land of Gods throws wide the gate:Why follow men who scorn, and at their bidding wait",
      "sourceFile": "0966.md",
      "sourceSha256": "9e701c0a4fc7c60ace726ab3e2408f650e118ccbe0f6ee45229a0df4af0532da"
    },
    {
      "number": 967,
      "lines": [
        "ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே",
        "கெட்டான் எனப்படுதல் நன்று."
      ],
      "manakkudavar": "ஒருவன் தன்னை இகழ்வார்பின் சென்று வாழும் வாழ்க்கையின், அவர்பால் செல்லாத அந்நிலையே நின்று கெட்டானென்று பிறரால் சொல்லப்படுதல் நன்று.",
      "pope": "Better 'twere said, 'He's perished!' than to gainThe means to live, following in foeman's train",
      "sourceFile": "0967.md",
      "sourceSha256": "32b48b08a80e1fd015d5d893e0f9a1c57d60db52eda1bfa0e899d675c3780261"
    },
    {
      "number": 968,
      "lines": [
        "மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை",
        "பீடழிய வந்த இடத்து."
      ],
      "manakkudavar": "தமது பெரிய தகைமை வலியழிய வந்தவிடத்துச் சாவாதே இருந்து உயிரினை ஓம்பி வாழும் வாழ்க்கை பின்பும் ஒருகாலஞ் சாவாமைக்கு மருந்தாமோ. பெருந்தகைமை அழியவந்தவிடத் தென்று கூட்டுக.",
      "pope": "When high estate has lost its pride of honour meet,Is life, that nurses this poor flesh, as nectar sweet",
      "sourceFile": "0968.md",
      "sourceSha256": "83c9a65301e33e7cb67c6a3898d2ab1d0e1e5557ab249ff71cbadaf4b2ab9729"
    },
    {
      "number": 969,
      "lines": [
        "மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்",
        "உயிர்நீப்பர் மானம் வரின்."
      ],
      "manakkudavar": "ஒரு மயிர் நீங்கின் உயிர்வாழாத கவரிமாவைப் போன்ற மானமுடையார், மானம் அழியவரின் உயிர்விடுவர்.",
      "pope": "Like the wild ox that, of its tuft bereft, will pine away,Are those who, of their honour shorn, will quit the light of day",
      "sourceFile": "0969.md",
      "sourceSha256": "03e99e2b8efa4f7bcd88890e469046e35f20e50eb48c9fff335940f18708d4e1"
    },
    {
      "number": 970,
      "lines": [
        "இளிவரின் வாழாத மானம் உடையார்",
        "ஒளிதொழுது ஏத்தும் உலகு."
      ],
      "manakkudavar": "இளிவரவு உண்டானால் உயிர் வாழாத மானமுடையாரது புகழைத் தொழுது துதிக்கும் உலகு.",
      "pope": "Who, when dishonour comes, refuse to live, their honoured memoryWill live in worship and applause of all the world for aye",
      "sourceFile": "0970.md",
      "sourceSha256": "aed00fb8f878e7d5e45f40228ec7cd61112f004862bf29117e035487fd115bbd"
    },
    {
      "number": 971,
      "lines": [
        "ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு",
        "அஃதிறந்து வாழ்தும் எனல்."
      ],
      "manakkudavar": "ஒருவனுக்கு மனப்பெருமை புகழாம்: அதனை நீங்கி வாழுமென்று பிறர் சொல்லுதல் ஒருவனுக்கு இளிவாமாதலான். இது பெருமையாவது நிறையுடைமை யென்று கூறிற்று.",
      "pope": "The light of life is mental energy; disgrace is hisWho says, 'I 'ill lead a happy life devoid of this.'",
      "sourceFile": "0971.md",
      "sourceSha256": "a1c47336cf0308528d6306d3d9e0c42215a58c23c0caa9e9dcf349c0a31b2ee4"
    },
    {
      "number": 972,
      "lines": [
        "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா",
        "செய்தொழில் வேற்றுமை யான்."
      ],
      "manakkudavar": "எல்லா வுயிர்க்கும் பிறப்பால் ஒரு வேறுபாடில்லை. ஆயினும் தான்செய் தொழிலினது ஏற்றச் சுருக்கத்தினாலே பெருமை ஒவ்வாது. எனவே, இது பெருமையாவது குலத்தினால் அறியப்படா தென்பதூஉம் அதற்குக் காரணமும் கூறிற்று.",
      "pope": "All men that live are one in circumstances of birth;Diversities of works give each his special worth",
      "sourceFile": "0972.md",
      "sourceSha256": "6b2645fed2ff1c67508e4cdb0cb46f2d26f6d7677943ea407b3d67ef68613eb4"
    },
    {
      "number": 973,
      "lines": [
        "மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்",
        "கீழல்லார் கீழல் லவர்."
      ],
      "manakkudavar": "மேலான இடத்திருந்தாலும், மேன்மையில்லாதார் மேன்மக்களாகார்: கீழான இடத்திருந்தாலும் கீழ்மை யில்லாதார் கீழ்மக்களாகார். இடமென்பது செல்வத்தினால் இருக்குமிடம்.",
      "pope": "The men of lofty line, whose souls are mean, are never greatThe men of lowly birth, when high of soul, are not of low estate",
      "sourceFile": "0973.md",
      "sourceSha256": "c5d4283d23099a1b5d15f51a05ee5cd23c7369db106c921f7706423dd9c9d58a"
    },
    {
      "number": 974,
      "lines": [
        "ஒருமை மகளிரே போலப் பெருமையும்",
        "தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு."
      ],
      "manakkudavar": "கவராத மனத்தினையுடைய மகளிர் நிறையின் வழுவாமல் தம்மைத் தாம் காத்துக்கொண்டொழுகுமாறு போலப் பெருமைக் குணனும் ஒருவன் நிறையின் வழுவாமல் தன்னைத்தான் காத்துக் கொண்டொழுகுவானாயின் அவன்கண் உண்டாம்.",
      "pope": "Like single-hearted women, greatness too,Exists while to itself is true",
      "sourceFile": "0974.md",
      "sourceSha256": "a7a8e5b4dc2103d9cb64ee364d2e87b78b70784a35682fff838b90c72273d2dd"
    },
    {
      "number": 975,
      "lines": [
        "பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்",
        "அருமை உடைய செயல்."
      ],
      "manakkudavar": "பெருமையாவது செருக்கின்மை: சிறுமை செருக்கினை மேற்கொண்டொழுகுதலான். மேல் குலத்தினாலும் பெரியாரைப் பெரியாரென்று கொள்ளல் படாதென்றார். இனிப் பெருமை யிலக்கணங் கூறுவார், முற்படச்செருக்கின்மை பெருமையென்று கூறினார்.",
      "pope": "The man endowed with greatness true,Rare deeds in perfect wise will do",
      "sourceFile": "0975.md",
      "sourceSha256": "45d582ac02b5095231fcd1fed466bca8585b588f3c25c621ab86f2e9bc4d577e"
    },
    {
      "number": 976,
      "lines": [
        "சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்",
        "பேணிக் கொள் வேம் என்னும் நோக்கு."
      ],
      "manakkudavar": "சிறுமையுடையார் உணர்வின்கண் இல்லை, பெருமை யுடையாரைப் போற்றித் துணையாகக் கொள்வேமென்னும் கருத்து. இது பெரியாரைப் பெறுதலும் பெருமையென்று கூறிற்று.",
      "pope": "'As votaries of the truly great we will ourselves enroll,'Is thought that enters not the mind of men of little soul",
      "sourceFile": "0976.md",
      "sourceSha256": "fe668170cd54438230ad07e361b78ee58675dbace5381f250c32e36dd05a201c"
    },
    {
      "number": 977,
      "lines": [
        "இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்",
        "சீரல் லவர்கண் படின்."
      ],
      "manakkudavar": "செல்வமானது தனக்கு நிகரில்லாதார்மாட்டே நிற்குமாயின், நிதியை இறப்பாரிடத்தே பொருந்தின தொழிலை உடைத்தாம். சீரல்லவர்- பெரியரல்லர்.",
      "pope": "Whene'er distinction lights on some unworthy head,Then deeds of haughty insolence are bred",
      "sourceFile": "0977.md",
      "sourceSha256": "f68ef3fac55ffe141369737853c28cab0ac52bb0a3a5a1f6d723494b18645a52"
    },
    {
      "number": 978,
      "lines": [
        "பணியுமாம் என்றும் பெருமை சிறுமை",
        "அணியுமாம் தன்னை வியந்து."
      ],
      "manakkudavar": "பெருமை எக்காலத்தும் பிறரைத் தாழ்ந்தொழுகும்: சிறுமை தன்னைப் பெருக்க நினைத்து அலங்கரிக்கும். இது பெருமையாவது பணிந்தொழுகுதலென்று கூறிற்று.",
      "pope": "Greatness humbly bends, but littleness alwaysSpreads out its plumes, and loads itself with praise",
      "sourceFile": "0978.md",
      "sourceSha256": "877646e75492de6e4a776e26839a988ca8f8743fc041fe46b75fd21d269d4da9"
    },
    {
      "number": 979,
      "lines": [
        "பெருமை பெருமிதம் இன்மை சிறுமை",
        "பெருமிதம் ஊர்ந்து விடல்."
      ],
      "manakkudavar": "பெருமையுடையவர் நெறியினானே செய்யவல்லர்: செய்தற்கு அருமையுடைய செயல்களை. இது செய்தற்கு அரிய செய்வார் பெரியரென்றது.",
      "pope": "Greatness is absence of conceit; meanness, we deem,Riding on car of vanity supreme",
      "sourceFile": "0979.md",
      "sourceSha256": "dd5da65cb8f64a839f3c1f0efeb5c1cb86534cbf7fe8abe22c727b1c55681f23"
    },
    {
      "number": 980,
      "lines": [
        "அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்",
        "குற்றமே கூறி விடும்."
      ],
      "manakkudavar": "பெருமை பிறருடைய குறைவை மறைத்துச் சொல்லும்: சிறுமை அவர்க்குள்ள நன்மை சொல்லுதலைத் தவிர்ந்து குற்றத்தையே சொல்லிவிடும். இது குற்றம் கூறாமை பெருமையென்று கூறிற்று.",
      "pope": "Greatness will hide a neighbour's shame;Meanness his faults to all the world proclaim",
      "sourceFile": "0980.md",
      "sourceSha256": "5ea4d5e8562067c83cf3c2fed86cbee20c7130595eff9a742fd3b98da9c0bd60"
    },
    {
      "number": 981,
      "lines": [
        "கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து",
        "சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு."
      ],
      "manakkudavar": "நமக்குத் தகுவது இதுவென்றறிந்து சான்றாண்மையை மேற்கொண்டொழுகுவார்க்கு நல்லனவாய குணங்களெல்லாம் இயல்பாயிருக்குமென்று சொல்லுவர் நூலோர்.",
      "pope": "All goodly things are duties to the men, they sayWho set themselves to walk in virtue's perfect way",
      "sourceFile": "0981.md",
      "sourceSha256": "f1bef02ccaf60bda995a06fff4f713f53879bc800754b3f1b985ef30dcc58070"
    },
    {
      "number": 982,
      "lines": [
        "குணநலம் சான்றோர் நலனே பிறநலம்",
        "எந்நலத்து உள்ளதூஉம் அன்று."
      ],
      "manakkudavar": "சான்றோர்க்கு நலமாவது குணநல்லராகுதல்: குணநலம், பிற நலமாகிய எல்லா நலத்தினும் உள்ளதொரு நலமன்று. இது குணநலம் சால்பிற்கு அழகென்றது.",
      "pope": "The good of inward excellence they claim,The perfect men; all other good is only good in name",
      "sourceFile": "0982.md",
      "sourceSha256": "916c3cbb2d1b4796156e233308a4c0c64a2c9c41c1fe4e0985c529b86e6eff65"
    },
    {
      "number": 983,
      "lines": [
        "அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு",
        "ஐந்துசால் ஊன்றிய தூண்."
      ],
      "manakkudavar": "அன்புடைமையும், பழிநாணுதலும், ஒப்புரவுடைமையும், கண்ணோட்டமும், மெய்யுரையுமென்று சொல்லப்பட்ட ஐந்தும் சால்பினைத் தாங்கும் தூண். இஃது இவை ஐந்தும் சால்பிற்கு அங்கமென்றது.",
      "pope": "Love, modesty, beneficence, benignant grace,With truth, are pillars five of perfect virtue's resting-place",
      "sourceFile": "0983.md",
      "sourceSha256": "6e18564fe063536d0ff5d66651d3c937679b1cf747bcae9e11d63b4ac118dc94"
    },
    {
      "number": 984,
      "lines": [
        "கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை",
        "சொல்லா நலத்தது சால்பு."
      ],
      "manakkudavar": "தவத்துக்கு உறுப்பான சீலங்கள் பல உண்டாயினும் கொல்லாத நலத்தையுடையது தவம். அதுபோலச் சாண்றாண்மைக்கு உறுப்பான நற்குணங்கள் பல உண்டாயினும் பிறர் பழியைச் சொல்லாத நலத்தையுடையது சால்பு.",
      "pope": "The type of 'penitence' is virtuous good that nothing slays;To speak no ill of other men is perfect virtue's praise",
      "sourceFile": "0984.md",
      "sourceSha256": "cec56053af8efdbfc6d5275ad5e0345275e8a4d2b8a6d88a4fe376675b7213e7"
    },
    {
      "number": 985,
      "lines": [
        "ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்",
        "மாற்றாரை மாற்றும் படை."
      ],
      "manakkudavar": "பெரியார் பெருமையாவது எல்லார்க்கும் தாழ்ந்தொழுகுதல்: சான்றோர்தம் பகைவரை ஒழிக்கும் கருவியும் அதுவே.",
      "pope": "Submission is the might of men of mighty acts; the sageWith that same weapon stills his foeman's rage",
      "sourceFile": "0985.md",
      "sourceSha256": "351c69c1e9328b93d15a04e5983bae718b5509064d8ab447565a4277833993d6"
    },
    {
      "number": 986,
      "lines": [
        "சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி",
        "துலையல்லார் கண்ணும் கொளல்."
      ],
      "manakkudavar": "சால்பாகிய பொன்னினளவறிதற்கு உரைகல்லாகிய செயல் யாதெனின், அது தம்மினுயர்ந்தார் மாட்டுக் கொள்ளுந் தோல்வியை இழிந்தார் மாட்டுங் கோடல்.",
      "pope": "What is perfection's test? The equal mindTo bear repulse from even meaner men resigned",
      "sourceFile": "0986.md",
      "sourceSha256": "cc2aad58bc394ab7eb69e496e215c4d45d07fbe2f29370c6a4d6310a76e4c606"
    },
    {
      "number": 987,
      "lines": [
        "இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்",
        "என்ன பயத்ததோ சால்பு."
      ],
      "manakkudavar": "தமக்கின்னாதவற்றைச் செய்தார்க்குஞ் சால்புடையார் இனியவற்றைச் செய்யாராயின் அச்சால்பு வேறென்ன பயனை யுடைத்து.",
      "pope": "What fruit doth your perfection yield you, say!Unless to men who work you ill good repay",
      "sourceFile": "0987.md",
      "sourceSha256": "0b758e3c699ae388d5c1569ff78a76dae6106d20a2f6a4e4329820ccbbe5b17f"
    },
    {
      "number": 988,
      "lines": [
        "இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்",
        "திண்மை உண் டாகப் பெறின்."
      ],
      "manakkudavar": "ஒருவனுக்குச் சால்பாகிய நிலை உண்டாகப் பெறின் பொருளின்மை இளிவாகாது. இஃது அமைதியுடையராதல் பெறுதற்கரிதென்றது.",
      "pope": "To soul with perfect virtue's strength endued,Brings no disgrace the lack of every earthly good",
      "sourceFile": "0988.md",
      "sourceSha256": "90ca567f8b0337caffd6cfef5b6260b7abc30d1e7b27c008adabf805e1a8756f"
    },
    {
      "number": 989,
      "lines": [
        "ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு",
        "ஆழி எனப்படு வார்."
      ],
      "manakkudavar": "சால்புடைமையாகிய கடற்குக் கரையென்று சொல்லப்படுவார், ஏனைக் கடலுங் கரையுள் நில்லாமற் காலந் திரிந்தாலும் தாம்திரியார்.",
      "pope": "Call them of perfect virtue's sea the shore,Who, though the fates should fail, fail not for evermore",
      "sourceFile": "0989.md",
      "sourceSha256": "3d610060dd61118c2b8abb4abd8987a3e4bd6fc7afcf0bb23480d97b56364c08"
    },
    {
      "number": 990,
      "lines": [
        "சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்",
        "தாங்காது மன்னோ பொறை."
      ],
      "manakkudavar": "பலகுணங்களானும் நிறைந்தவர் தம்தன்மை குன்றுவராயின் மற்றை யிருநிலந்தானுந் தன்பொறையைத் தாங்காதாய் முடியும்.",
      "pope": "The mighty earth its burthen to sustain must cease,If perfect virtue of the perfect men decrease",
      "sourceFile": "0990.md",
      "sourceSha256": "301c91c65a8652adef33d5e212503ea19ebdd68cf4a6ebbce4229632967b17d3"
    },
    {
      "number": 991,
      "lines": [
        "எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்",
        "பண்புடைமை என்னும் வழக்கு."
      ],
      "manakkudavar": "யாவர் மாட்டு மெளிய செவ்வியராதலால் அரிதாய பண்புடைமையென்னும் நன்னெறியினை யெய்துதல் எளிதென்று சொல்லுவர் நூலோர்.",
      "pope": "Who easy access give to every man, they say,Of kindly courtesy will learn with ease the way",
      "sourceFile": "0991.md",
      "sourceSha256": "d274077a5d552bfd82b7af176f4807d553dc8b5e14f77ad7ff9a214b12b30360"
    },
    {
      "number": 992,
      "lines": [
        "அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்",
        "பண்புடைமை என்னும் வழக்கு."
      ],
      "manakkudavar": "பிறர்மேலன்புடையனாதலும் உலகத்தோடமைந்த குடியின்கட் பிறத்தலுமாகிய இவ்விரண்டும் ஒருவனுக்குப் பண்புடைமை யென்று உலகத்தார் சொல்லும் நன்னெறி.",
      "pope": "Benevolence and high born dignity,These two are beaten paths of courtesy",
      "sourceFile": "0992.md",
      "sourceSha256": "3c52d901d6c5a52cf7b713eb651850346104e1297c8838531394b7f00e06e537"
    },
    {
      "number": 993,
      "lines": [
        "உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க",
        "பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு."
      ],
      "manakkudavar": "செறியத்தகாத உடம்பாலொத்தல் ஒருவனுக்கு நன்மக்களோடொப்பாகாமையின் அது பொருந்துவதன்று; இனிப் பொருந்துவதாய ஒப்பாவது செறியத்தக்க பண்பாலொத்தல்.",
      "pope": "Men are not one because their members seem alike to outward view;Similitude of kindred quality makes likeness true",
      "sourceFile": "0993.md",
      "sourceSha256": "2351d18b8913efc02a23015024ef007c9604b33789cec861860c52b02943862a"
    },
    {
      "number": 994,
      "lines": [
        "நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்",
        "பண்புபா ராட்டும் உலகு."
      ],
      "manakkudavar": "நீதியையும் அறத்தையும் விரும்புதலாற் பிறர்க்குந் தமக்கும் பயன்படுதலுடையாரது பண்பினை உலகத்தார் கொண்டாடா நிற்பர்.",
      "pope": "Of men of fruitful life, who kindly benefits dispense,The world unites to praise the 'noble excellence.'",
      "sourceFile": "0994.md",
      "sourceSha256": "e27571942127bffda5e6ca375f3efe24edeee0097d17fbbec24a8fd83126e3ba"
    },
    {
      "number": 995,
      "lines": [
        "நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்",
        "பண்புள பாடறிவார் மாட்டு."
      ],
      "manakkudavar": "தன்னை யிகழ்தல் ஒருவற்கு விளையாட்டின்கண்ணும் இன்னாது: ஆகலாற் பிறர் பாடறிந் தொழுகுவார்மாட்டுப் பகைமையுள் வழியும் அஃதுளதாகாது இனியவாய பண்புகளே உளவாவன.",
      "pope": "Contempt is evil though in sport They who man's nature know,E'en in their wrath, a courteous mind will show",
      "sourceFile": "0995.md",
      "sourceSha256": "428ee3432546db3a24de4bc115632c9118886adb83ecf747ffc877f8deb41fce"
    },
    {
      "number": 996,
      "lines": [
        "பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்",
        "மண்புக்கு மாய்வது மன்."
      ],
      "manakkudavar": "பண்புடையார்கண்ணே படுதலால் உலகியல் எஞ்ஞான்று முண்டாய் வாராநின்றது: ஆண்டுப் படுதலில்லையாயின் அது மண்ணின்கட்புக்கு மாய்ந்து போவதாம்.",
      "pope": "The world abides; for 'worthy' men its weight sustainWere it not so, 'twould fall to dust again",
      "sourceFile": "0996.md",
      "sourceSha256": "87c4c4f591571d551d4ffa45aee402743e01291c4c1b9bd0f1dbbc5e4198a7af"
    },
    {
      "number": 997,
      "lines": [
        "அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்",
        "மக்கட்பண்பு இல்லா தவர்."
      ],
      "manakkudavar": "நன்மக்கட்கேயுரிய பண்பில்லாதவர் அரத்தின் கூர்மை போலுங் கூர்மையுடையரே யாயினும், ஓரறிவிற்றாய மரத்தினை யொப்பர்.",
      "pope": "Though sharp their wit as file, as blocks they must remain,Whose souls are void of 'courtesy humane'",
      "sourceFile": "0997.md",
      "sourceSha256": "808d8bb7baded72b79bc4f07dd6042e7b5b0c08ff3ad4abb653ea0f85de35600"
    },
    {
      "number": 998,
      "lines": [
        "நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்",
        "பண்பாற்றார் ஆதல் கடை."
      ],
      "manakkudavar": "தம்மொடு நட்பினைச்செய்யாது பகைமையைச் செய்தொழுகுவார்மாட்டும் தாம் பண்புடையராய் ஒழுகாமை அறிவுடையார்க் கிழுக்காம்.",
      "pope": "Though men with all unfriendly acts and wrongs assail,'Tis uttermost disgrace in 'courtesy' to fail",
      "sourceFile": "0998.md",
      "sourceSha256": "66c20b27c77059363e582b674d9d3124363c117b7f9bf9da231ef195f7540ecd"
    },
    {
      "number": 999,
      "lines": [
        "நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்",
        "பகலும்பாற் பட்டன்று இருள்."
      ],
      "manakkudavar": "பண்பின்மையான் ஒருவரோடும் கலந்து உண்மகிழ்தல் மாட்டாதார்க்குப் பெரிய ஞாலம் இருளில்லாத பகற்பொழுதினும் இருளின்கட் கிடந்ததாம்.",
      "pope": "To him who knows not how to smile in kindly mirth,Darkness in daytime broods o'er all the vast and mighty earth",
      "sourceFile": "0999.md",
      "sourceSha256": "dbc0bd4edfb70d28c4ec46e97c90aea9d10e25caca001cada4c13b484b3140ff"
    },
    {
      "number": 1000,
      "lines": [
        "பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்",
        "கலந்தீமை யால்திரிந் தற்று."
      ],
      "manakkudavar": "பண்பில்லாதவன் முன்னை நல்வினையா னெய்திய பெரிய செல்வம் அக்குற்றத்தால் ஒருவர்க்கும் பயன்படாது கெடுதல், நல்ல ஆன்பால் ஏற்ற கலத்தின் குற்றத்தால் இன்சுவைத்தாகாது கெட்டாற்போலும்.",
      "pope": "Like sweet milk soured because in filthy vessel poured,Is ample wealth in churlish man's unopened coffers stored",
      "sourceFile": "1000.md",
      "sourceSha256": "1dbe017bda953160f2114b9b0f65781cb50d9e4135f2f2678c17223620e5a0d7"
    },
    {
      "number": 1001,
      "lines": [
        "வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்",
        "செத்தான் செயக்கிடந்தது இல்."
      ],
      "manakkudavar": "இடம் நிறைந்த பெரும்பொருளை ஈட்டிவைத்தானொருவன் அதனை நுகரானாயின் செத்தான்; அவன் பின்பு செய்யக்கிடந்தது யாது மில்லை. இஃது ஈட்டினானாயினும் தானொருபயன் பெறானென்றது.",
      "pope": "Who fills his house with ample store, enjoying none,Is dead Nought with the useless heap is done",
      "sourceFile": "1001.md",
      "sourceSha256": "d3b38a1394b076e960e21b3fa8c15e68a5da6db2a54f1d73109d6f4560006d3a"
    },
    {
      "number": 1002,
      "lines": [
        "பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்",
        "மருளானாம் மாணாப் பிறப்பு"
      ],
      "manakkudavar": "பொருளினாலே யெல்லாச்சிறப்பும் எய்தலாமென்று பிறர்க்கு யாதொன்றும் ஈயாது உலோபஞ் செய்கின்ற மயக்கத்தினாலே மாட்சிமையில்லாத பிறப்பு உண்டாம். இது தீக்கதியுள் உய்க்குமென்றது.",
      "pope": "Who giving nought, opines from wealth all blessing springs,Degraded birth that doting miser's folly brings",
      "sourceFile": "1002.md",
      "sourceSha256": "fd16e2cc62abd857e4d7fec8d3ecbdf7f369791c2778128491eb65e4619957b7"
    },
    {
      "number": 1003,
      "lines": [
        "ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்",
        "தோற்றம் நிலக்குப் பொறை."
      ],
      "manakkudavar": "பொருளீட்டுதலை விரும்பிப் புகழை விரும்பாத மாந்தர், தாம் பிறந்த நிலத்துக்குப் பாரமாவர். இஃது இவர் பிறப்பதினும் பிறவாமை நன்றென்றது.",
      "pope": "Who lust to heap up wealth, but glory hold not dear,It burthens earth when on the stage of being they appear",
      "sourceFile": "1003.md",
      "sourceSha256": "a6fdb63dae7850afbbedb779d26dad490baa390722324ae84ec7676bca0cb00d"
    },
    {
      "number": 1004,
      "lines": [
        "எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்",
        "நச்சப் படாஅ தவன்."
      ],
      "manakkudavar": "ஒருவராலும் நச்சப்படாத செல்வமுடையவன், தனக்குப் பின்பு நிற்பதென்று யாதினை எண்ணுமோ?. இது புகழில்லையா மென்றது.",
      "pope": "Whom no one loves, when he shall pass away,What doth he look to leave behind, I pray",
      "sourceFile": "1004.md",
      "sourceSha256": "431cdcd6aa4cda07f69c2415552f412f985ab6d649f0683dbfd7462784351bd2"
    },
    {
      "number": 1005,
      "lines": [
        "கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய",
        "கோடியுண் டாயினும் இல்."
      ],
      "manakkudavar": "பிறர்க்குக் கொடுத்தலும் தாம் நுகர்தலும் இல்லாதார்க்குப் பல கோடிப் பொருள் உண்டாயினும் அவை இன்மையோ டொக்கும்.",
      "pope": "Amid accumulated millions they are poor,Who nothing give and nought enjoy of all they store",
      "sourceFile": "1005.md",
      "sourceSha256": "0e039a1ab6b3a2799a33234c31bba5bfe0155c1a7f856f15e6851b281f4046cf"
    },
    {
      "number": 1006,
      "lines": [
        "ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று",
        "ஈதல் இயல்பிலா தான்."
      ],
      "manakkudavar": "தானுந் துவ்வாது பிறர்க்கும் ஒன்று ஈயாத இயல்பினை யுடையான் பெற்ற பெருஞ் செல்வம் குற்றமுடைத்து.",
      "pope": "Their ample wealth is misery to men of churlish heart,Who nought themselves enjoy, and nought to worthy men impart",
      "sourceFile": "1006.md",
      "sourceSha256": "8c30ad3fecc98ed307723e4264f5ef2a794688e8d6620a122648a1531fa7cf66"
    },
    {
      "number": 1007,
      "lines": [
        "அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்",
        "பெற்றாள் தமியள்மூத் தற்று."
      ],
      "manakkudavar": "பொருளற்றார்க்கு யாதானு மொன்றைக் கொடாதவனுடைய செல்வம், மிக்க அழகினைப் பெற்றாளொருத்தி¢ தனியாளாய் முதிர்ந்தாற்போலும். இது செல்வம் தானும் ஒருபயன் பெறாதென்றது.",
      "pope": "Like woman fair in lonelihood who aged grows,Is wealth of him on needy men who nought bestows",
      "sourceFile": "1007.md",
      "sourceSha256": "7b4c28eefe725ea801f2febc357af69e0dc4d071cb3f4f7be7218a5ad8b285ab"
    },
    {
      "number": 1008,
      "lines": [
        "நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்",
        "நச்சு மரம்பழுத் தற்று."
      ],
      "manakkudavar": "பிறரால் ஆசைப்படாதவனது செல்வம், ஊர் நடுவுள் பழுத்து நிற்பதொரு நச்சுமரம் பழுத்த தன்மைத்து. இது நச்சுமரப்பழம் தமதாசையாலே தின்பாருண்டாயின் அவரைக் கொல்லுமென்றது.",
      "pope": "When he whom no man loves exults in great prosperity,'Tis as when fruits in midmost of the town some poisonous tree",
      "sourceFile": "1008.md",
      "sourceSha256": "73db7512bec621e003a30c327813b95a1c20e2340a845a58433c126f9ced03f0"
    },
    {
      "number": 1009,
      "lines": [
        "அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய",
        "ஒண்பொருள் கொள்வார் பிறர்."
      ],
      "manakkudavar": "பொருள் தேடுங்கால் பிறர்மாட்டு அன்பு செய்தலையும் நீக்கி, அது தேடினானாகிய தன்னைக் காத்தலுமின்றி அறத்தையுஞ் செய்யாது, தொகுத்த ஒள்ளிய பொருளைக் கொள்வார் பிறர்.",
      "pope": "Who love abandon, self-afflict, and virtue's way forsakeTo heap up glittering wealth, their hoards shall others take",
      "sourceFile": "1009.md",
      "sourceSha256": "187f3a2c497c27b4e981db581a46118edbdb866f2ebe3664d6ebdfe632fdb0b8"
    },
    {
      "number": 1010,
      "lines": [
        "சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி",
        "வறங்கூர்ந் தனையது உடைத்து."
      ],
      "manakkudavar": "சீருடைய செல்வர் சிறுதுனியால் ஈயாதொழிதல், மாரி பெய்யாமை மிக்காற் போலும் மேற்கூறிய நன்றியில் செல்வமுடையாரன்றி நற்செல்வமுடையாரும் பிறர்க்கு ஈயாராயின், மழை பெய்யாதாயின் உலகம் துன்பமுறுமாறு போல அவர் துன்பமுறுவர் என்றவாறு.",
      "pope": "'Tis as when rain cloud in the heaven grows day,When generous wealthy man endures brief poverty",
      "sourceFile": "1010.md",
      "sourceSha256": "380d0f10ac1f2d401a1a5507613d310d9caebb1ff7bf588d36a695e5c18275ba"
    },
    {
      "number": 1011,
      "lines": [
        "கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்",
        "நல்லவர் நாணுப் பிற."
      ],
      "manakkudavar": "தாம் செய்யும் வினையினாலே நாணுதல் நாணம். அஃதல்லாத நாணம் அழகிய நுதலினாலே நல்லாராகிய கணிகையர் நாணத்தோ டொக்கும். மேற்கூறிய நாணம் எத்தன்மைத் தென்றார்க்கு இது கூறப்பட்டது.",
      "pope": "To shrink abashed from evil deed is 'generous shame';Other is that of bright-browed one of virtuous fame",
      "sourceFile": "1011.md",
      "sourceSha256": "40eb73916067e68d47da34672e663d20d10ba898e61313c92202e5723c3691ff"
    },
    {
      "number": 1012,
      "lines": [
        "ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல",
        "நாணுடைமை மாந்தர் சிறப்பு."
      ],
      "manakkudavar": "உணவும் உடையும் ஒழிந்தனவும் புன்மக்க ளெல்லார்க்கும் வேண்டும்; தலைமக்களுக்கு விசேடமாக வேண்டுவது நாணுடைமை. இது நாணம் வேண்டுமென்றது.",
      "pope": "Food, clothing, and other things alike all beings own;By sense of shame the excellence of men is known",
      "sourceFile": "1012.md",
      "sourceSha256": "3957175e7938173669d978c2663125a3fce4fe3c1ea40b54f6e4c4ced75d7a84"
    },
    {
      "number": 1013,
      "lines": [
        "ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்",
        "நன்மை குறித்தது சால்பு."
      ],
      "manakkudavar": "பலவகை உயிரும் மேற்கூறிய எல்லாவற்றினும் உண்டியைக் கருதிற்று: அதுபோலச் சால்பு, நாணமாகிய நன்மையைக் கருதிற்று. இது சான்றோர்க்கு நற்குணங்கள் பலவும் வேண்டுமாயினும், இஃது இன்றியமையாதென்றது.",
      "pope": "All spirits homes of flesh as habitation claim,And perfect virtue ever dwells with shame",
      "sourceFile": "1013.md",
      "sourceSha256": "8d6d12ab805191896e92552a1e63bd76c9b77f37744c06ade2d73a032acd23df"
    },
    {
      "number": 1014,
      "lines": [
        "அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்",
        "பிணிஅன்றோ பீடு நடை."
      ],
      "manakkudavar": "சான்றோர்க்கு நாணுடைமையாவது அழகன்றோ? அஃதில்லையாயின் பெரிய நடை நோயன்றோ? இது சான்றோர்க்கழகாவது நாணுடைமை யென்றது.",
      "pope": "And is not shame an ornament to men of dignity?Without it step of stately pride is piteous thing to see",
      "sourceFile": "1014.md",
      "sourceSha256": "de4526601f586ce1affe785b8e4c173fc2054e8867a12d6406c2167cfd99e153"
    },
    {
      "number": 1015,
      "lines": [
        "பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு",
        "உறைபதி என்னும் உலகு."
      ],
      "manakkudavar": "பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியைப்போல அஞ்சி நாணுமவர்களை நாணுக்கு இருப்பிடமென்று சொல்லுவர் உலகத்தார். இது தம்பழிக்கு அஞ்சி நாணுதலேயன்றிப் பிறர்பழிக்கும் அஞ்சி நாண வேண்டுமென்றது.",
      "pope": "As home of virtuous shame by all the world the men are known,Who feel ashamed for others, guilt as for their own",
      "sourceFile": "1015.md",
      "sourceSha256": "b74aa6f9905308250d73fbb0e8c770a208642da18219962882c3c554568b194b"
    },
    {
      "number": 1016,
      "lines": [
        "நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்",
        "பேணலர் மேலா யவர்."
      ],
      "manakkudavar": "உயர்ந்தவர் தமக்கு ஏமமாக நாணினைக் கொள்வதன்றி அகன்ற ஞாலத்தைக் கொள்ள விரும்பார்.",
      "pope": "Unless the hedge of shame inviolate remain,For men of lofty soul the earth's vast realms no charms retain",
      "sourceFile": "1016.md",
      "sourceSha256": "97000e3d52709155d17b81a609f13d64d9fc853c913b65f4ae9b85a9e876def5"
    },
    {
      "number": 1017,
      "lines": [
        "நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்",
        "நாண்துறவார் நாணாள் பவர்."
      ],
      "manakkudavar": "நாணுடைமைப் பொருட்டாக உயிரைத் துறப்பார்: உயிர்ப் பொருட்டாக நாணைத்துறவார், நாணம் வேண்டுபவர். இது நாண் உயிரினும் சிறந்ததென்றது.",
      "pope": "The men of modest soul for shame would life an offering make,But ne'er abandon virtuous shame for life's dear sake",
      "sourceFile": "1017.md",
      "sourceSha256": "56b820517393d27c19b555c3a3df93326d8c679c751097a5bf9ad5b5b8c1ee66"
    },
    {
      "number": 1018,
      "lines": [
        "பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்",
        "அறம்நாணத் தக்கது உடைத்து."
      ],
      "manakkudavar": "உயர்ந்தார் பலரும் நாணத்தகுவ தொன்றினைத் தான் நாணாது செய்வனாயின் அவனை அறம் நாணியடையா தொழியும் தகுதியுடைத்தாம். இது நாணமில்லாதாரை அறம் சாரா தென்றது.",
      "pope": "Though know'st no shame, while all around asha med must be:Virtue will shrink away ashamed of thee",
      "sourceFile": "1018.md",
      "sourceSha256": "563713cd77e45b1c9732764334dbe3e59179631ba442827d50e19b5bc0f8b52d"
    },
    {
      "number": 1019,
      "lines": [
        "குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்",
        "நாணின்மை நின்றக் கடை."
      ],
      "manakkudavar": "ஒழுக்கம் தப்புமாயின் அத்தப்புதல் குலத்தினைச் சுடும்: அதுபோல நாணின்மை நிற்குமாயின் தமது நலத்தினைச் சுடும். இது நலமில்லையா மென்றது.",
      "pope": "'Twill race consume if right observance fail;'Twill every good consume if shamelessness prevail",
      "sourceFile": "1019.md",
      "sourceSha256": "c6b218a64234697a05c9f81d2e3d01c0c3f615d42b0b59819edba1c77a40a294"
    },
    {
      "number": 1020,
      "lines": [
        "நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை",
        "நாணால் உயிர்மருட்டி அற்று."
      ],
      "manakkudavar": "மனத்தின்கண் நாணமில்லாதார் இயங்குதல், மரப்பாவை கயிற்றினாலே இயங்கி உயிருள்ளதுபோல மயக்குமதனை ஒக்கும். இது நாணமில்லாதார் மக்களல்லரென்றது.",
      "pope": "'Tis as with strings a wooden puppet apes life's functions, whenThose void of shame within hold intercourse with men",
      "sourceFile": "1020.md",
      "sourceSha256": "a18fdd9e74e79a128baffd663b63ddd10a286989ead96240b57d5aaab837baa8"
    },
    {
      "number": 1021,
      "lines": [
        "கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்",
        "பெருமையின் பீடுடையது இல்."
      ],
      "manakkudavar": "ஒருவன் கருமஞ்செய்தற்கு நான் ஒழியே னென்று சொல்லுகின்ற பெருமைபோலப் பெருமையுடையது பிறிது இல்லை.",
      "pope": "Who says 'I'll do my work, nor slack my hand',His greatness, clothed with dignity supreme, shall stand",
      "sourceFile": "1021.md",
      "sourceSha256": "8069855fe187df1f52a0e1312793b1e7e64adda6a3afd0656af1237398d2c584"
    },
    {
      "number": 1022,
      "lines": [
        "ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்",
        "நீள்வினையால் நீளும் குடி."
      ],
      "manakkudavar": "முயற்சியும் நிரம்பின அறிவும் என்று சொல்லப்பட்ட இரண்டினாலும் வளருகின்ற வினையினாலே குடி உயரும்.",
      "pope": "The manly act and knowledge full, when these combineIn deed prolonged, then lengthens out the race's line",
      "sourceFile": "1022.md",
      "sourceSha256": "fdfd7cc4ec2171b233b4d710af0814a4643d863ebec6c47078aae7eccbadfc19"
    },
    {
      "number": 1023,
      "lines": [
        "குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்",
        "மடிதற்றுத் தான்முந் துறும்."
      ],
      "manakkudavar": "குடியை யோம்புவனென்று கருதி முயலுமவனுக்குத் தெய்வம் மடிதற்றுக் கொண்டு தான் முற்பட்டு முயலும். மடிதற்றல் - தொழில்செய்வார் ஆடையை இறுக உடுத்தல்.",
      "pope": "'I'll make my race renowned,' if man shall say,With vest succinct the goddess leads the way",
      "sourceFile": "1023.md",
      "sourceSha256": "ecc2b5003c22a3bd0f753d33081bc1899c1245bb07643b0de08c8027aea46c00"
    },
    {
      "number": 1024,
      "lines": [
        "சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்",
        "தாழாது உஞற்று பவர்க்கு."
      ],
      "manakkudavar": "தங்குடியைத் தாழச் செய்யாதே உயரச்செய்யக் கருதுவார்க்கு அவ்வுயர்ச்சி எண்ணாமல் தானே முடிவுபெறும்.",
      "pope": "Who labours for his race with unremitting pain,Without a thought spontaneously, his end will gain",
      "sourceFile": "1024.md",
      "sourceSha256": "3aad616afde142cfc4394b876fb110b58e67344ecea4f41ed92af31e74245fb1"
    },
    {
      "number": 1025,
      "lines": [
        "குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்",
        "சுற்றமாச் சுற்றும் உலகு."
      ],
      "manakkudavar": "குற்றப்பட ஒழுகுத லினாய்த் தன்குடியை யோம்பி வாழுமவனை உலகத்தாரெல்லாரும் தமக்குற்ற சுற்றமாக நினைத்துச் சூழ்ந்துவரும்.",
      "pope": "With blameless life who seeks to build his race's fame,The world shall circle him, and kindred claim",
      "sourceFile": "1025.md",
      "sourceSha256": "a01692312627f29970fdaa01e22000d63fc8827215656dd23237de61ac5e92cb"
    },
    {
      "number": 1026,
      "lines": [
        "நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த",
        "இல்லாண்மை ஆக்கிக் கொளல்."
      ],
      "manakkudavar": "ஒருவனுக்கு மிக்க ஆண்மையென்று சொல்லப்படுவது, தான் பிறந்த குடியை ஆளுதலுடைமையை மனத்தின்கண் போக்கிக் கோடல். ஆளுதலுடைமை- குடியோம்புதலை எப்பொழுதுஞ் சிந்தித்தல். எனவே இது குடியோம்புதல் வேண்டுமென்றது.",
      "pope": "Of virtuous manliness the world accords the praiseTo him who gives his powers, the house from which he sprang to raise",
      "sourceFile": "1026.md",
      "sourceSha256": "328fd09dd4178328975bce6d4e53d46419a58f407cc57b620a2f215af4c6f278"
    },
    {
      "number": 1027,
      "lines": [
        "அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்",
        "ஆற்றுவார் மேற்றே பொறை."
      ],
      "manakkudavar": "போர்க்களத்துச் செல்வார் பலருளராயினும் போர்தாங்கல் வன்கண்ணர்மாட்டே உளதானாற்போல, ஒருகுடியிற் பிறந்தார் பலருளராயினும் குடியோம்பல் வல்லவர்கண்ணதே குடியாகிய பாரத்தைப் பொறுத்தல்.",
      "pope": "The fearless hero bears the brunt amid the warrior throng;Amid his kindred so the burthen rests upon the strong",
      "sourceFile": "1027.md",
      "sourceSha256": "02878f09d0a32fc85d31f8f18d7320af46543073554dbc294a55f29b7e8cc6bc"
    },
    {
      "number": 1028,
      "lines": [
        "குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து",
        "மானங் கருதக் கெடும்."
      ],
      "manakkudavar": "குடியோம்புவார்க்குப் பருவம் இல்லை; தம் குடும்பத்தின் குறையை நினைத்து மடிசெய்து அதனை உயர்த்துவதனாலுள தாகும் குற்றத்தை நினைக்கக் குடிகெடும் ஆதலான். இது குடிசெய்வார் இன்பநுகர்ச்சியை விரும்பாரென்றது.",
      "pope": "Wait for no season, when you would your house uprear;'Twill perish, if you wait supine, or hold your honour dear",
      "sourceFile": "1028.md",
      "sourceSha256": "f3be1108c4617dea4f95d10d9b37f5c766b21e45331ab323dbbaf105c3eb6476"
    },
    {
      "number": 1029,
      "lines": [
        "இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்",
        "குற்ற மறைப்பான் உடம்பு."
      ],
      "manakkudavar": "சுற்றத்தார்மாட்டு உளதாகிய குறையை மறைக்கக் கருதுவான் உடம்பு துன்பத்திற்குக் கொள்கலமாம்.",
      "pope": "Is not his body vase that various sorrows fill,Who would his household screen from every ill",
      "sourceFile": "1029.md",
      "sourceSha256": "bedb0e76e81ab93735b25fa693666bd098dbb0f71b964c95c4972be47376e670"
    },
    {
      "number": 1030,
      "lines": [
        "இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்",
        "நல்லாள் இலாத குடி."
      ],
      "manakkudavar": "இடும்பையாகிய நவியம் அடுத்துத் தனது வேரை வெட்டுதலானே வீழும்: பக்கத்திலே அடுத்து ஊன்றுகின்ற முட்டுக்கோல்போலத் தாங்கவல்ல நல்ல ஆண்மக்கள் இல்லாத குடியாகிய மரம். (நவியம்-கோடரி). இது குடியோம்புவாரில்லாக்கால் அக்குடி கெடுமென்று கூறிற்று.",
      "pope": "When trouble the foundation saps the house must fall,If no strong hand be nigh to prop the tottering wall",
      "sourceFile": "1030.md",
      "sourceSha256": "d087ac1b1708c3772a5178970171ea16279314739a27f8cb71a4272bc5778d9c"
    },
    {
      "number": 1031,
      "lines": [
        "சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்",
        "உழந்தும் உழவே தலை."
      ],
      "manakkudavar": "உழவு ஒழிந்த எல்லா நெறிகளிலும் சுழன்று திரிந்தாலும் ஏருடையவர் வழியே வருவர் உலகத்தார்: ஆதலான் வருந்தியும் உழுதலே தலைமையுடையது. இஃது உழவு வேண்டுமென்றது.",
      "pope": "Howe'er they roam, the world must follow still the plougher's team;Though toilsome, culture of the ground as noblest toil esteem",
      "sourceFile": "1031.md",
      "sourceSha256": "3547f20da6bcd89cc26a0f1c6af6fefb6b6036c42dcd4ef86a54515ec591eac5"
    },
    {
      "number": 1032,
      "lines": [
        "உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது",
        "எழுவாரை எல்லாம் பொறுத்து."
      ],
      "manakkudavar": "உலகத்தாராகிய தேரினுக்கு அச்சாணிபோல்வார் உழுவாரே: அதனைச் செய்யாதாரே பிறர் பெருமிதத்தினால் செய்வனவெல்லாம் பொறுத்துத் தொழுது நிற்பார். இஃது உழுவார் தம்மையும் அரசனையும் பெரியராக்குதலன்றி உலகத்தையும் தாங்குவரென்பது கூறிற்று.",
      "pope": "The ploughers are the linch-pin of the world; they bearThem up who other works perform, too weak its toils to share",
      "sourceFile": "1032.md",
      "sourceSha256": "480113131c8aba83bf575c9445b7c01b911807354c9ca718af4c454d36f31096"
    },
    {
      "number": 1033,
      "lines": [
        "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்",
        "தொழுதுண்டு பின்செல் பவர்."
      ],
      "manakkudavar": "உலகின்கண் வாழ்வாராவார் உழுதுண்டு வாழ்பவரே; மற்று வாழ்கின்றா ரெல்லாரும் பிறரைத் தொழுது உண்டு அவரேவல் செய்கின்றவர். இது செல்வமானது உழவினால் வருஞ் செல்வமென்றது.",
      "pope": "Who ploughing eat their food, they truly live:The rest to others bend subservient, eating what they give",
      "sourceFile": "1033.md",
      "sourceSha256": "315ac14f47547a2343fb84a28491ead9d0773f6ad8e7b61412120b07da6e390d"
    },
    {
      "number": 1034,
      "lines": [
        "பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்",
        "அலகுடை நீழ லவர்."
      ],
      "manakkudavar": "பல அரசர் குடைநிழலும் தம் அரசர் குடைநிழற்கீழே வரக்காண்பர், குடையில்லா நிழலை யுடையவர். குடையில்லா நிழலாவது பைங்கூழ் நிழல். இது தாம் வாழ்தலே அன்றித் தம் அரசனையும் வாழ்விப்பர் என்றது. (அலகுடைய நீழல்-கதிர்களையுடைய நெற்பயிரின்நிழல்).",
      "pope": "O'er many a land they 'll see their monarch reign,Whose fields are shaded by the waving grain",
      "sourceFile": "1034.md",
      "sourceSha256": "9d8232f179d81392f1dc2249eb7862417c2298388253be7d386465f399916f38"
    },
    {
      "number": 1035,
      "lines": [
        "இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது",
        "கைசெய்தூண் மாலை யவர்."
      ],
      "manakkudavar": "பிறரை இரவார்; தம்மை இரப்பார்க்குக் காத்தலின்றி யாதொன்றாயினும் ஈவர்; கையாலே உழவுத் தொழிலைச் செய்து உண்ணும் இயல்பினையுடையார்.",
      "pope": "They nothing ask from others, but to askers give,Who raise with their own hands the food on which they live",
      "sourceFile": "1035.md",
      "sourceSha256": "772077c49fbee320f0119a255eb8c75c9606d8939f81c8614d9c0d2db9833f70"
    },
    {
      "number": 1036,
      "lines": [
        "உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்",
        "விட்டேம்என் பார்க்கும் நிலை."
      ],
      "manakkudavar": "உழவை யுடையவர் அத்தொழிலைச் செய்யாது கைம்மடங்கு வராயின், யாதொரு பொருளின்கண்ணும் விரும்புவதனையும் விட்டேமென்பார்க்கு அந்நிலையின்கண் நிற்றல் இல்லை. எனவே துறவறத்திண்கண் நிற்பாரை நிறுத்துதல் உழவர்கண்ண தென்றவாறு. .",
      "pope": "For those who 've left what all men love no place is found,When they with folded hands remain who till the ground",
      "sourceFile": "1036.md",
      "sourceSha256": "5065a945afb19f2b3cbdeb20cc7d94e349f3a6e985aaf01f326ba6e1e4271424"
    },
    {
      "number": 1037,
      "lines": [
        "தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்",
        "வேண்டாது சாலப் படும்."
      ],
      "manakkudavar": "ஒரு பலப்புழுதியைக் கஃசாக உணக்குவனாயின், ஒரு கையாற் பிடித்தது எருவும் இடவேண்டாமல் அமைந்து விளையும். மேற்கூறிய உழவு செய்யுந்திறன் கூறுவார் முற்படப் புழுதியுணக்க வேண்டுமென்றார்.",
      "pope": "Reduce your soil to that dry state, When ounce is quarter-ounce's weight;Without one handful of manure, Abundant crops you thus secure",
      "sourceFile": "1037.md",
      "sourceSha256": "4cfc1a0dadb946ca23544c13a0f25543ea3f592cafe286fb13c48c181a174ef0"
    },
    {
      "number": 1038,
      "lines": [
        "ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்",
        "நீரினும் நன்றதன் காப்பு."
      ],
      "manakkudavar": "உழுகின்றதினும் நன்றாம் எருவிடுதல்; களை கட்டபின்பு நீர் விடுதலினும் நன்றாம் அதனை அழியாமற் காத்தல். இது பல்கால் உழவு வேண்டுமென்பதூஉம் எருவிடவேண்டும்மென்பதூஉம், களைபறிக்க வேண்டுமென்பதூஉம் பசுப்புகுதாமற் காக்க வேண்டுமென்பதூஉம் கூறிற்று.",
      "pope": "To cast manure is better than to plough;Weed well; to guard is more than watering now",
      "sourceFile": "1038.md",
      "sourceSha256": "c6539e527f53698f471378f9df5a4e2be5a59b3b8d27665e538a90275f5eb025"
    },
    {
      "number": 1039,
      "lines": [
        "செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து",
        "இல்லாளின் ஊடி விடும்."
      ],
      "manakkudavar": "நிலத்திற்கு உரியவன் நாடோறும் அந்நிலத்தின்பாற் செல்லாது மனையகத்திருப்பானாயின், அது தான் செல்லாமையாற் புலந்த இல்லாளைப் போலப் புலந்துவிடும். இது நாடோறுஞ்சென்று பார்க்க வேண்டுமென்றது.",
      "pope": "When master from the field aloof hath stood;Then land will sulk, like wife in angry mood",
      "sourceFile": "1039.md",
      "sourceSha256": "fd305198e9395b11340034617c63b7d759f29d1bf95472d21311751c80b73373"
    },
    {
      "number": 1040,
      "lines": [
        "இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்",
        "நிலமென்னும் நல்லாள் நகும்."
      ],
      "manakkudavar": "பொருளிலோமென்று சோம்பி இரப்பாரைக் கண்டால் நிலமாகிய நல்லாள் இகழ்ந்து நகும். இது நிலம் மடியில்லாதார்க்கு வேண்டியது கொடுக்குமென்றது.",
      "pope": "The earth, that kindly dame, will laugh to see,Men seated idle pleading poverty",
      "sourceFile": "1040.md",
      "sourceSha256": "98175327721f9547117ddde0d4f45c5cf5948633a710fd4056768c542d45e985"
    },
    {
      "number": 1041,
      "lines": [
        "இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்",
        "இன்மையே இன்னா தது."
      ],
      "manakkudavar": "நல்குரவுபோல இன்னாதது யாதெனின் நல்குரவுபோல இன்னாதது தானே. (தானே - நல்குரவே). இது தன்னை யொத்த இன்னாதது பிறிதில்லை யென்றது.",
      "pope": "You ask what sharper pain than poverty is known;Nothing pains more than poverty, save poverty alone",
      "sourceFile": "1041.md",
      "sourceSha256": "ca217099ec2bf264095b92c4b0155816fd1302e00f2ff27a3d1177b669dd343e"
    },
    {
      "number": 1042,
      "lines": [
        "இன்மை எனவொரு பாவி மறுமையும்",
        "இம்மையும் இன்றி வரும்."
      ],
      "manakkudavar": "நல்குரவென்று கூறப்படுகின்ற நிகரில்லாத பாவத்தை யுடையவன் இம்மையின்கண்ணும் மறுமையின்கண்ணும் நுகர்ச்சி இன்றி விடும். தன்மம் பண்ணாமையால் மறுமையின்கண்ணும் நுகர்ச்சியில்லாமையாயிற்று. இது நல்குரவு துன்பமாக்கு மென்றது.",
      "pope": "Malefactor matchless! poverty destroysThis world's and the next world's joys",
      "sourceFile": "1042.md",
      "sourceSha256": "0aeeccadfd2f7abf90187674be2a29cfa5198e05a25107fc619bf151677eb85b"
    },
    {
      "number": 1043,
      "lines": [
        "தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக",
        "நல்குரவு என்னும் நசை."
      ],
      "manakkudavar": "தொன்றுதொட்டு வருகின்ற குடிப்பிறப்பினையும் வடிவழகினையும் ஒருங்கு கெடுக்கும்; நல்குரவென்று சொல்லப் படுகின்ற ஆசைப்பாடு. நல்குரவு ஆசையைப் பண்ணுதலினால் ஆசையாயிற்று. தொல்- ஆகுபெயர். இது குலத்தினையும் அழகினையும் கெடுக்குமென்றது.",
      "pope": "Importunate desire, which poverty men name,Destroys both old descent and goodly fame",
      "sourceFile": "1043.md",
      "sourceSha256": "df1eb9f788e0794c775e5d4e37193b4f213b488be105d553f5ce22aee98564d6"
    },
    {
      "number": 1044,
      "lines": [
        "இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த",
        "சொற்பிறக்கும் சோர்வு தரும்."
      ],
      "manakkudavar": "நல்குரவு, குடிப்பிறந்தார்மாட்டேயும் இளிவரவான சொற்கள் பிறக்குஞ் சோர்வினை உண்டாக்கும்.",
      "pope": "From penury will spring, 'mid even those of noble race,Oblivion that gives birth to words that bring disgrace",
      "sourceFile": "1044.md",
      "sourceSha256": "bef0bca7ea1bc376308b2cbbc4cc65845bb1a5a0373a1152006f0b618b462e6a"
    },
    {
      "number": 1045,
      "lines": [
        "நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்",
        "துன்பங்கள் சென்று படும்."
      ],
      "manakkudavar": "வறுமை யெனப்படும் இடும்பையுள் பலவாகிய வன்மையுடைய துன்பங்கள் வந்து சோர்வுபடும். இது துன்பங்கள் சென்றுளவாமென்றது. பல்குரைத் துன்பம்- இரப்பார்க்கு உரைக்கத் துன்பம்.",
      "pope": "From poverty, that grievous woe,Attendant sorrows plenteous grow",
      "sourceFile": "1045.md",
      "sourceSha256": "7cc06af74c0029306b7fbfdf0d1cd57c4bf8288fd203e11b16ab7ec18d10874b"
    },
    {
      "number": 1046,
      "lines": [
        "நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்",
        "சொற்பொருள் சோர்வு படும்."
      ],
      "manakkudavar": "நல்ல பொருளினை மிகவும் ஆராய்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொல்லும் பொருள் சோர்வு படும். ஏற்றுக்கொள்வாரில்லை என்றவாறாயிற்று. இது கல்வி கெடும்: சுற்றத்தாரும் கைவிடுவ ரென்றது.",
      "pope": "Though deepest sense, well understood, the poor man's words convey,Their sense from memory of mankind will fade away",
      "sourceFile": "1046.md",
      "sourceSha256": "fa2cc0e40e71909c61a92014b8c2279b6c319a03264c31ac1a07533fc13ac301"
    },
    {
      "number": 1047,
      "lines": [
        "அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்",
        "பிறன்போல நோக்கப் படும்."
      ],
      "manakkudavar": "அறத்தோடு இயைபில்லாத நல்குரவுடையான், தன்னை ஈன்ற தாயானும் பிறனைக் கருதுமாறு போலக் கருதி நோக்கப்படும்.",
      "pope": "From indigence devoid of virtue's grace,The mother e'en that bare, estranged, will turn her face",
      "sourceFile": "1047.md",
      "sourceSha256": "7d796f049ae62808f8c4e15ffc5865aac1b9d38613e78ca8f99ded90d6983a82"
    },
    {
      "number": 1048,
      "lines": [
        "இன்றும் வருவது கொல்லோ நெருநலும்",
        "கொன்றது போலும் நிரப்பு."
      ],
      "manakkudavar": "இன்றும் வரும்போலும்; நெருநற்றும் என்னைக் கொன்றது போலுற்ற நிரப்பிடும்பை. இது நாடோறும் அச்ச முறுத்து மென்று கூறிற்று.",
      "pope": "And will it come today as yesterday,The grief of want that eats my soul away",
      "sourceFile": "1048.md",
      "sourceSha256": "2aa21521ec6cfcdb46e454c4c43691515c85bdb076f73ef0ec7f8b63e6a893ce"
    },
    {
      "number": 1049,
      "lines": [
        "நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்",
        "யாதொன்றும் கண்பாடு அரிது."
      ],
      "manakkudavar": "நெருப்பினுள்ளே கிடந்து உறங்குதலும் ஆகும்; நிரப்பிடும்பையுள் உறங்குதல் யாதொரு முகத்தினாலும் அரிது. இஃது உறங்கவொட்டா தென்றது.",
      "pope": "Amid the flames sleep may men's eyelids close,In poverty the eye knows no repose",
      "sourceFile": "1049.md",
      "sourceSha256": "8edb1b5a83fb76cfe092cad07fd2f282d7112d79e1890cb6d927e0e45449d295"
    },
    {
      "number": 1050,
      "lines": [
        "துப்புர வில்லார் துவரத் துறவாமை",
        "உப்பிற்கும் காடிக்கும் கூற்று."
      ],
      "manakkudavar": "நுகரும்பொருள் இல்லாதார் பொருளின்மேற் பற்றறத் துறவாது வருந்துதல், உப்பிற்குங் காடிக்குங் கேடாக வேண்டியாம். துறப்பாராயின் நன்றென்வாறாயிற்று. நல்கூர்ந்தார்க்குத் துன்பமுறுதலன்றி இன்ப நுகரும் நெறியுளவோ என்றார்க்கு, இது துறப்பாராயின், இன்ப முறலா மென்று கூறிற்று.",
      "pope": "Unless the destitute will utterly themselves deny,They cause their neighbour's salt and vinegar to die",
      "sourceFile": "1050.md",
      "sourceSha256": "bc4af63bf8fbbe43e2baf35da080c31c4d359b882dad3cc9a72dd8a03c6dca8f"
    },
    {
      "number": 1051,
      "lines": [
        "இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்",
        "அவர்பழி தம்பழி அன்று."
      ],
      "manakkudavar": "தமக்கு இல்லாதவிடத்து இரக்கத்தக்காரைக் காணின் இரந்து கொள்க: அவர் இல்லை யென்பாராயின் அஃது அவர்க்குப் பழியாம்; தமக்குப் பழியாகாது. இது கூறுகின்ற இரத்தல் எல்லார்மாட்டுஞ் செயலாகா தென்பதூஉம், தக்கார் மாட்டிரத்தலென்பதூஉம் கூறிற்று.",
      "pope": "When those you find from whom 'tis meet to ask,- for aid apply;Theirs is the sin, not yours, if they the gift deny",
      "sourceFile": "1051.md",
      "sourceSha256": "9ec1e61a6493c7674f938b81e8d7914871a3708e1b36ff744dff94f3ecec0898"
    },
    {
      "number": 1052,
      "lines": [
        "இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை",
        "துன்பம் உறாஅ வரின்."
      ],
      "manakkudavar": "இரத்தல் ஒருவர்க்கு இன்பமாம், இரக்கப்பட்ட பொருள்கள் தான் வருத்தமுறாதவகை எய்துமாயின். இது வேண்டிய பொருள் பெறின் துன்பமாகா தென்றது.",
      "pope": "Even to ask an alms may pleasure give,If what you ask without annoyance you receive",
      "sourceFile": "1052.md",
      "sourceSha256": "f9c225cbd40915e5fd7799a025ce2a7b087c25c843a876de11283269326547c1"
    },
    {
      "number": 1053,
      "lines": [
        "கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று",
        "இரப்புமோ ரேஎர் உடைத்து."
      ],
      "manakkudavar": "கரப்பிலாத நெஞ்சினை யுடைய ஒப்புரவறிவார் முன்பே நின்று, இரத்தலும் ஓரழகுடைத்து. இஃது ஒப்புரவறிவார் மாட்டு இரத்தலா மென்றது.",
      "pope": "The men who nought deny, but know what's due, before their faceTo stand as suppliants affords especial grace",
      "sourceFile": "1053.md",
      "sourceSha256": "e649270ff27a78994bc8f3926498a5ac41f2a6ddce8c120be7b155d21c462289"
    },
    {
      "number": 1054,
      "lines": [
        "இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்",
        "கனவிலும் தேற்றாதார் மாட்டு."
      ],
      "manakkudavar": "கரத்தலைக் கனவின்கண்ணும் அறியாதார்மாட்டு இரந்து சேறலும் கொடுப்பதனோடு ஒக்கும். ஈதலேபோலும் என்பதற்குக் கரத்தல் கனவிலுந் தேற்றதார் என்றமையால் இரப்பான் தாரானென்று கொள்ளப்படும்.",
      "pope": "Like giving alms, may even asking pleasant seem,From men who of denial never even dream",
      "sourceFile": "1054.md",
      "sourceSha256": "4fc628f4da1e57f026ee1e8266b76572056d7f40065d61145f0bbae64f51611b"
    },
    {
      "number": 1055,
      "lines": [
        "கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று",
        "இரப்பவர் மேற்கொள் வது."
      ],
      "manakkudavar": "ஒருவன் முன்னே நின்று இரத்தலை இரப்பார் மேற்கொள்வது, கரப்பில்லாதார் உலகத்து உண்டாதலானே; மற்றொன்றாலன்று. மேல் கரவாதார்மாட்டு இரக்கவென்றார்; உலகத்தில் அவரைப் பெறுத லரிதென்றார்க்கு இது கூறினார்.",
      "pope": "Because on earth the men exist, who never say them nay,Men bear to stand before their eyes for help to pray",
      "sourceFile": "1055.md",
      "sourceSha256": "34a10e7acb1a939802204e7e620953aea46e8a91f7a93e779640d1caab97cf48"
    },
    {
      "number": 1056,
      "lines": [
        "கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை",
        "எல்லாம் ஒருங்கு கெடும்."
      ],
      "manakkudavar": "கரப்பிடும்பை இல்லாதரைக் காண்பாராயின், நிரப்பினான் ஆகிய இடும்பை யெல்லாம் ஒருங்கு கெடும். கரப்பிடும்பை யில்லார் என்றமையால் இது செல்வராயினார் மாட்டு இரக்க லாகா தென்றது.",
      "pope": "It those you find from evil of 'denial' free,At once all plague of poverty will flee",
      "sourceFile": "1056.md",
      "sourceSha256": "d3760e0269ff0275141191d8170eda27b47636b1a305c2557ff0c894291a24c9"
    },
    {
      "number": 1057,
      "lines": [
        "இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்",
        "உள்ளுள் உவப்பது உடைத்து."
      ],
      "manakkudavar": "இரப்பாரைக் கண்டால் உதாசனித்தலும் இன்றி அவர் சொன்ன மாற்றத்தை இகழ்ந்துரைத்தலும் செய்யாது வேண்டப்பட்டதனைக் கொடுப்பாரைக் காணின், இரந்து சென்றவர் மனம் மகிழ்ந்து நின்று உள்ளுள்ளே இன்புறுந் தன்மை யுடைத்து.",
      "pope": "If men are found who give and no harsh words of scorn employ,The minds of askers, through and through, will thrill with joy",
      "sourceFile": "1057.md",
      "sourceSha256": "4fa62c8af182c80cacbc19f7c6e103443d4a340710b7b803a5013fb02e3184ca"
    },
    {
      "number": 1058,
      "lines": [
        "இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்",
        "மரப்பாவை சென்றுவந் தற்று."
      ],
      "manakkudavar": "குளிர்ந்த இடத்தையுடைய பெரிய உலகம் இரக்குமவர்களை உடைத்தல்லவாயின், உள்ள மக்களது இயக்கம் மரப்பாவை சென்றுவந்து இயங்கினாற்போலும். இஃது இரத்தலும் ஈதலும் உலகியல்பாதலான் இரத்தல் இழிவென்று கொள்ளப்படா தென்றது.",
      "pope": "If askers cease, the mighty earth, where cooling fountains flow,Will be a stage where wooden puppets come and go",
      "sourceFile": "1058.md",
      "sourceSha256": "8931842cdcf09ef458c636587b9fce2da6ccdba4affd29871d66010e34061189"
    },
    {
      "number": 1059,
      "lines": [
        "ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்",
        "மேவார் இலாஅக் கடை."
      ],
      "manakkudavar": "இரந்து கோடலைப் பொருந்துவார் இல்லாதவிடத்து ஈயக கருதியிருப்பார்மாட்டுப் புகழ் யாதான் உண்டாம். இஃது இரப்பாரில்லாராயின் புகழுடையார் இலராவார். ஆதலால் இரவு பழிக்கப்படா தென்றது.",
      "pope": "What glory will there be to men of generous soul,When none are found to love the askers' role",
      "sourceFile": "1059.md",
      "sourceSha256": "240dabca0a2bb2f8b8f97477ebf2c8110511ff34e820bd25fac36b02c88a106b"
    },
    {
      "number": 1060,
      "lines": [
        "இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை",
        "தானேயும் சாலும் கரி."
      ],
      "manakkudavar": "ஒருவனை யிரந்தால் அவன் ஈந்தில னென்று தான் வெகுளா தொழிதல் வேண்டும். பொருளரிதென்பதற்குத் தன்னுடைய நிரப்பிடும்பை தானேயும் அமையுஞ் சான்று. இஃது இரப்பார்க்கு வேண்டியதோ ரியல்பு கூறிற்று.",
      "pope": "Askers refused from wrath must stand aloof;The plague of poverty itself is ample proof",
      "sourceFile": "1060.md",
      "sourceSha256": "50347e32870cf88f87963aaeeedadf2c376729687e91b35ba30e8f4d0d099849"
    },
    {
      "number": 1061,
      "lines": [
        "கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்",
        "இரவாமை கோடி உறும்."
      ],
      "manakkudavar": "தமக் குள்ளது கரவாது இவர் வரப்பெற்றேமென்று உண் மகிழ்ந்துகொடுக்குங் கண்போலச் சிறந்தார்மாட்டும் இரவாதே ஒருவன் வறுமை கூர்தல் செல்வமெய்தலிற் கோடிமடங்கு நன்று.",
      "pope": "Ten million-fold 'tis greater gain, asking no alms to live,Even from those, like eyes in worth, who nought concealing gladly give",
      "sourceFile": "1061.md",
      "sourceSha256": "e9b4dc356988c4cccd74b782574edce0724e48634a11fc8281b58d703245f3cb"
    },
    {
      "number": 1062,
      "lines": [
        "இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து",
        "கெடுக உலகியற்றி யான்."
      ],
      "manakkudavar": "துப்புரவு இல்லாக்கால் இறந்துபடாதே பிறர்மாட்டு இரந்து கொண்டும் உயிர் வாழ்தல் வேண்டுமாயின், உலக நடையை இவ்வாறாகக் கற்பித்த முதல்வன் மிகக் கெடுவானாக வேண்டும். இஃது இரக்குமதனின் இறத்தல் அமையு மென்றது.",
      "pope": "If he that shaped the world desires that men should begging go,Through life's long course, let him a wanderer be and perish so",
      "sourceFile": "1062.md",
      "sourceSha256": "4a1c707b92bda02c6a8ed254de7a05762b95dab7b35406f3c812d0582d39a34a"
    },
    {
      "number": 1063,
      "lines": [
        "இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்",
        "வன்மையின் வன்பாட்ட தில்."
      ],
      "manakkudavar": "வறுமையாலுற்ற துன்பத்தைப் பிறர்மாட்டு இரந்து பெற்ற பொருளினாலே தீர்ப்பே மென்று கருதுகின்ற வன்மைபோல, வன்பாயிருப்பது பிறிது இல்லை. இஃது இரந்தாலும் நல்குரவு தீரா தென்றது.",
      "pope": "Nothing is harder than the hardness that will say,'The plague of penury by asking alms we'll drive away.'",
      "sourceFile": "1063.md",
      "sourceSha256": "01326b3cc8eb1b3be27305631d7a604d0ab74b96f51bf86669de94a751a21bdb"
    },
    {
      "number": 1064,
      "lines": [
        "இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்",
        "காலும் இரவொல்லாச் சால்பு."
      ],
      "manakkudavar": "தஞ்சுற்றத்தளவு தமக்கு வருவாய் இல்லாக் காலத்தினும் பிறரை இரத்தற்கு இசையாத சால்பு, அகன்ற உலகமெல்லாம் கொள்ளாத பெருமையே யுடைத்து. இஃது இரவாதார் பெரிய ரென்றது.",
      "pope": "Who ne'er consent to beg in utmost need, their worthHas excellence of greatness that transcends the earth",
      "sourceFile": "1064.md",
      "sourceSha256": "8901d8939ad9aa4c852411d13cf619095343b19e185892fcb92e6ac6769e4600"
    },
    {
      "number": 1065,
      "lines": [
        "தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது",
        "உண்ணலின் ஊங்கினிய தில்."
      ],
      "manakkudavar": "மோரினும் காடியினும் அடப்பெறாது தெளிந்த நீரினாலே யட்ட புற்கையாயினும் தனது தாளாண்மையால் வந்ததனை உண்ணுதலின் மிக இனிதாயிருப்பது பிறிது இல்லை.",
      "pope": "Nothing is sweeter than to taste the toil-won cheer,Though mess of pottage as tasteless as the water clear",
      "sourceFile": "1065.md",
      "sourceSha256": "2a7e7d90117558142a058b1f7f6d330e01e4408161b533e27521fb85820c0862"
    },
    {
      "number": 1066,
      "lines": [
        "ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு",
        "இரவின் இளிவந்த தில்."
      ],
      "manakkudavar": "இப் பசுவிற்குத் தண்ணீர் தருமினென்று பிறரை இரப்பினும் நாவினுக்கு இரத்தல்போல இளிவரவு தருவது பிறிது இல்லை. இஃது அறத்திற்காக இரத்தலும் ஆகா தென்றது.",
      "pope": "E'en if a draught of water for a cow you ask,Nought's so distasteful to the tongue as beggar's task",
      "sourceFile": "1066.md",
      "sourceSha256": "d2b2436a9fbfabc37b0648ba58bc751121b5caeaf076d6e80c2d62ea14e25e2b"
    },
    {
      "number": 1067,
      "lines": [
        "இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்",
        "கரப்பார் இரவன்மின் என்று."
      ],
      "manakkudavar": "பிறர்மாட்டு இரந்து செல்வா ரெல்லாரையும் யானிரந்து கொள்ள நின்றேன்: இரக்குமிடத்து இல்லை யென்பவர்மாட்டு ஒரு பொருளை இரந்து சொல்லன்மின் என்று சொல்லி. இரந்து சொல்லாமை இரந்து பெற்ற பொருளினும் கோடி மடங்கு மிகுதியுடைத்தென்றவாறு. இஃது ஈவார்மாட்டும் இரத்தலாகா தென்றது.",
      "pope": "One thing I beg of beggars all, 'If beg ye may,Of those who hide their wealth, beg not, I pray.'",
      "sourceFile": "1067.md",
      "sourceSha256": "9c4315cadfde3d10a93b8570bee26b69191a3da90dca3f7fde9c5c94b4ce9e77"
    },
    {
      "number": 1068,
      "lines": [
        "இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்",
        "பார்தாக்கப் பக்கு விடும்."
      ],
      "manakkudavar": "ஒருவன் வறுமையாகிய கடலை நீந்திக் கடக்க அமைத்துக் கொண்ட இரத்தலாகிய அரணில்லாத தோணி, இரக்கப்பட்டார் மாட்டுக் கரத்தலாகிய கல்லோடே தாக்க இறந்துவிடும். இஃது நல்குரவு தீராமைக்குக் காரணங் கூறிற்று.",
      "pope": "The fragile bark of beggaryWrecked on denial's rock will lie",
      "sourceFile": "1068.md",
      "sourceSha256": "c9bc9dfcf0f771b96067d23fbca98a1d195a77d4697986a93012eae3e700c7c4"
    },
    {
      "number": 1069,
      "lines": [
        "இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள",
        "உள்ளதூஉம் இன்றிக் கெடும்."
      ],
      "manakkudavar": "இரப்பென்று நினைக்க உள்ளம் கரையும்: இரக்கப்பட்டவர் கரக்கு மதனை நினைக்கக் கரைந்து நின்ற உள்ளமும் மாய்ந்து கெடும். இஃது இரப்பார்க்கு ஆக்கமில்லை என்றது.",
      "pope": "The heart will melt away at thought of beggary,With thought of stern repulse 'twill perish utterly",
      "sourceFile": "1069.md",
      "sourceSha256": "951f462dbedff66dffd7c2f406508dd5f65abb581366e58c16b931ed894fcac2"
    },
    {
      "number": 1070,
      "lines": [
        "கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்",
        "சொல்லாடப் போஒம் உயிர்."
      ],
      "manakkudavar": "எமக்கு யாதும் இல்லை, சிறிது ஈயவேண்டு மென்று சொல்லுவார்க்குக் குறித்தவர்கள் இல்லையென்று சொன்ன அளவிலே அவர் உயிர்போய்ப் பிணம்போல நிற்பார்: பொருள் உடையராய் வைத்து அவர் சொன்ன இல்லையென்னுஞ் சொல்லையே சொல்லி ஈயாதார்க்கு உயிர் எவ்விடத்து ஒளித்து நிற்கின்றதோ. இது பிணத்தை யொப்பரென்றது.",
      "pope": "E'en as he asks, the shamefaced asker dies;Where shall his spirit hide who help denies",
      "sourceFile": "1070.md",
      "sourceSha256": "f60cc253f65a72fa79db06120799937fbd04cba50185efd3f2b22a8d0c9a5e27"
    },
    {
      "number": 1071,
      "lines": [
        "மக்களே போல்வர் கயவர் அவரன்ன",
        "ஒப்பாரி யாங்கண்ட தில்."
      ],
      "manakkudavar": "மக்களை யொப்பவர் கயவர்; அம்மக்களை யொக்குமாறு போல ஒப்பது ஒன்றனோடு மற்றொன்று உவமை கூறப்படுமவற்றில் யாங்கண்டறிவது இல்லை. உறுப்பொத்துக் குணமொவ்வாமையால் கயவர் மக்களல்லராயினார்.",
      "pope": "The base resemble men in outward form, I ween;But counterpart exact to them I've never seen",
      "sourceFile": "1071.md",
      "sourceSha256": "af8e0806a350562c495f4872707c6e7fcf0086c8dbe02b3f6964f90b4ecfb1b5"
    },
    {
      "number": 1072,
      "lines": [
        "நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்",
        "நெஞ்சத்து அவலம் இலர்."
      ],
      "manakkudavar": "நன்மையறிவாரினும் கயவர் திருவுடையர்; இம்மை மறுமைக்கு உறுதியாயின செய்யப்பெறுகிலோமென்னும் கவற்சி நெஞ்சின்கண் உறுதலிலராதலான். இது தாமறியா ரென்பது.",
      "pope": "Than those of grateful heart the base must luckier be,Their minds from every anxious thought are free",
      "sourceFile": "1072.md",
      "sourceSha256": "547e41e5b8c08d4a0e66e4cf9469e70129c59b271580306842dd175b56f085ba"
    },
    {
      "number": 1073,
      "lines": [
        "தேவர் அனையர் கயவர் அவருந்தாம்",
        "மேவன செய்தொழுக லான்."
      ],
      "manakkudavar": "கயவர் தேவரை யொப்பவர்: அத்தேவரும் இக்கயவரைப் போலத் தாம் வேண்டியன செய்தொழுகுவராதலான். இது கயவர் வேண்டியன செய்வாரென்றது.",
      "pope": "The base are as the Gods; they tooDo ever what they list to do",
      "sourceFile": "1073.md",
      "sourceSha256": "f23cfc8cb8707412ef43be48fda0352052581f3e4629cb127f22d6fe754654ce"
    },
    {
      "number": 1074,
      "lines": [
        "அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்",
        "மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்."
      ],
      "manakkudavar": "மனையகத்திருந்து பொற்புடையராகிய பெண்டிரைக் காணின், அவரினும் மிகப் பொற்புடையாராய் அதனைப் பெற்றேமென்று இறுமாப்பர் கயவர். இது நிறையிலரென்றது.",
      "pope": "When base men those behold of conduct vile,They straight surpass them, and exulting smile",
      "sourceFile": "1074.md",
      "sourceSha256": "3a24828b31bf2a88046f3222138d9c10f614d100a9d34efd37cc42a0ef023e60"
    },
    {
      "number": 1075,
      "lines": [
        "அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்",
        "அவாவுண்டேல் உண்டாம் சிறிது."
      ],
      "manakkudavar": "கயவர் ஆசாரமுடையராதற்குக் காரணம் அச்சமே: அஃதொழிய ஒருபொருள்மேல் ஆசையுடையராயின் அது காரணமாகவும் சிறிது ஒழுக்கம் உண்டாம். இஃது இயல்பான ஒழுக்கம் இலரென்றது.",
      "pope": "Fear is the base man's virtue; if that fail,Intense desire some little may avail",
      "sourceFile": "1075.md",
      "sourceSha256": "e778f6f440b1c39c01a241a5d1dcb9e78ed0014f3c44e6a80bd747e9f46213e2"
    },
    {
      "number": 1076,
      "lines": [
        "அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட",
        "மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்."
      ],
      "manakkudavar": "கயவர் அறையும் பறைபோல்வர்; தாங்கேட்ட மறைகளைப் பிறர்க்குக் கொண்டு சென்று அறிவித்தலான். இஃது அடக்கமில ரென்றது.",
      "pope": "The base are like the beaten drum; for, when they hearThe sound the secret out in every neighbour's ear",
      "sourceFile": "1076.md",
      "sourceSha256": "584b2bba7c95364fbd3d587c3f16d417a94e184f996bc59b1d9e3ecaeef5b4a8"
    },
    {
      "number": 1077,
      "lines": [
        "ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்",
        "கூன்கையர் அல்லா தவர்க்கு."
      ],
      "manakkudavar": "தம்கதுப்பினை ஒடிக்கும் வளைந்த கையினை உடையரல்லாதார்க்கு, ஈரக்கையையுந் தெரியார் கயவர். ஈரக்கை- கழுவினகை. இஃது இரப்பார்க்குக் கொடா ரென்றது.",
      "pope": "From off their moistened hands no clinging grain they shake,Unless to those with clenched fist their jaws who break",
      "sourceFile": "1077.md",
      "sourceSha256": "427b2a433b3b19537a81661d55a170b9d9cb3141d48246840f87c5e296a032d0"
    },
    {
      "number": 1078,
      "lines": [
        "சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்",
        "கொல்லப் பயன்படும் கீழ்."
      ],
      "manakkudavar": "பிறர் தங்குறையைச் சொல்ல அதற்கு இரங்கிப் பயன்படுவர் மேன்மக்கள். அவ்வாறன்றிக் கரும்பு பயன்படுமாறு போலத் தம்மை நெருக்கினால் பயன்படுவர் கீழ்மக்கள். இஃது ஒறுப்பார்க்குக் கொடுப்பரென்றது.",
      "pope": "The good to those will profit yield fair words who use;The base, like sugar-cane, will profit those who bruise",
      "sourceFile": "1078.md",
      "sourceSha256": "683b80c5ac1a79ecfaf2a1a5448492609a3daad755616cd2f6838fd88afea6aa"
    },
    {
      "number": 1079,
      "lines": [
        "உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்",
        "வடுக்காண வற்றாகும் கீழ்."
      ],
      "manakkudavar": "பிறர் உடுப்பதனையும் உண்பதனையும் காண்பாராயின், அவர்மாட்டு உள்ள குற்றங்களை ஆராயவல்லாராவர் கயவர். இஃது அழுக்காறுடையா ரென்றது.",
      "pope": "If neighbours clothed and fed he see, the baseIs mighty man some hidden fault to trace",
      "sourceFile": "1079.md",
      "sourceSha256": "757271070f7abc23966f0247b88fd90368fbd542a24b8309c026423d3e5714ee"
    },
    {
      "number": 1080,
      "lines": [
        "எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்",
        "விற்றற்கு உரியர் விரைந்து."
      ],
      "manakkudavar": "கயவர் யாதினுக்கு வல்லரெனின், தமக்கு ஒரு துன்பமுற்றால் விரைந்து தம்மை விற்க வல்லவர். இது நிலையிலர் என்றது.",
      "pope": "For what is base man fit, if griefs assail?Himself to offer, there and then, for sale",
      "sourceFile": "1080.md",
      "sourceSha256": "6db31e46296d15467c8270ff2ac38f1a134f1c9041348099cc9fce95c9502699"
    },
    {
      "number": 1081,
      "lines": [
        "அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை",
        "மாதர்கொல் மாலும் என் நெஞ்சு."
      ],
      "manakkudavar": "இக்கனங்குழையை யுடையாள் தெய்வங்கொல்லோ? நல்லதோர் மயில் கொல்லோ? அன்றி, மக்களுள்ளாள் கொல்லோ? என்மனம் மயங்கா நின்றவற்றுள் யாதோ?.",
      "pope": "Goddess? or peafowl rare? She whose ears rich jewels wear,Is she a maid of human kind? All wildered is my mind",
      "sourceFile": "1081.md",
      "sourceSha256": "994e90322fe35c34e806ce04982e98f148f7c93016d7de5640dd2154e3c86bdf"
    },
    {
      "number": 1082,
      "lines": [
        "நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு",
        "தானைக்கொண் டன்ன துடைத்து."
      ],
      "manakkudavar": "இவ்வழகினையுடையவள் எனது நோக்கின் எதிர் நோக்குதல், தானே வருத்தவல்ல தெய்வம் அஞ்சாமல்வரும் தானையைக் கொண்டு வந்தது போலும். தானைக்கு உவமை நோக்கம். இது மெய்கண்டு வருந்துவான் கண் கண்டதனால் வருத்த மிக்கது கூறியது.",
      "pope": "She of the beaming eyes, To my rash look her glance replies,As if the matchless goddess' hand Led forth an armed band",
      "sourceFile": "1082.md",
      "sourceSha256": "4ad413a4a6cc629172ce5a0a92f4e86d1cb4160554001c04427063cf805cf33c"
    },
    {
      "number": 1083,
      "lines": [
        "பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்",
        "பெண்டகையால் பேரமர்க் கட்டு."
      ],
      "manakkudavar": "பண்டு கூற்றின்வடிவு இன்னபெற்றித்தென்பதை அறியேன்: இப்பொழுது அறிந்தேன். அது பெண்டகைமையோடே பெருத்து அமர்த்த கண்களையுடைத்து. இது நம்மை வருத்தற்குத் தக்காளென்னுங் குறிப்பு.",
      "pope": "Death's form I formerly Knew not; but now 'tis plain to me;He comes in lovely maiden's guise, With soul-subduing eyes",
      "sourceFile": "1083.md",
      "sourceSha256": "61934237e32ca18b77a16893c854139faec5d10a14e883538e6acbc25f3f492b"
    },
    {
      "number": 1084,
      "lines": [
        "கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்",
        "பேதைக்கு அமர்த்தன கண்."
      ],
      "manakkudavar": "தம்மைக்கண்டவர்கள் உயிரையுண்ணும் தோற்றத்தாலே பெண் தகைமையையுடைய பேதைக்கு ஒத்தன கண்கள். அமர்தல் - மேவல். இது பேதையோடு ஒத்த தொழிலுடைத் தென்று கண்ணின் கொடுமையை யுட்கொண்டு கூறியது.",
      "pope": "In sweet simplicity, A woman's gracious form hath she;But yet those eyes, that drink my life, Are with the form at strife",
      "sourceFile": "1084.md",
      "sourceSha256": "b29ca6c8ff388bdfa4ee9eff8033fbd93d2cfc1e3d72f10d288578b71b007aba"
    },
    {
      "number": 1085,
      "lines": [
        "கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்",
        "நோக்கமிம் மூன்றும் உடைத்து."
      ],
      "manakkudavar": "கொடுமை செய்தலால் கூற்றமோ? ஓடுதலால் கண்ணோ? வெருவுதலால் மானோ? மடவரலே! நினது நோக்கம் இம்மூன்று பகுதியையும் உடைத்து. இக்கொடிய புருவம் இவள் கண் என்னைத் துன்பஞ்செய்வதன் முன்னே அதனைக் கோடி மறைத்ததாயினும் அஃது அதனைக் கடத்தலும் உடையது. அதனால் அவற்றுள் யாதோ? என்றவாறு. இது தலைமகள் குறிப்பறிதற் பொருட்டுத் தலைமகன் கூறியது.",
      "pope": "The light that on me gleams, Is it death's dart? or eye's bright beams?Or fawn's shy glance? All three appear In form of maiden here",
      "sourceFile": "1085.md",
      "sourceSha256": "06d1e136713b2bd7f1db5c24d4c5e06777589260320f37923eeb6f38557169b7"
    },
    {
      "number": 1086,
      "lines": [
        "கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்",
        "செய்யல மன்இவள் கண்."
      ],
      "manakkudavar": "வளைந்த புருவங்கள் தாம் செப்பமுடையனவாய் விலக்கினவாயின் இவள் கண்கள் அவற்றைக் கடந்து போந்து எனக்கு நடுங்குந் துன்பத்தைச் செய்யலாற்றா. இது மேல் தலைமகன் கூறிய சொற்கேட்டுத் தலைமகள் தலையிறைஞ்சிய வழி கண்ணை மறைத்துத் தோற்றிய புருவ முறிவு கண்டு அவன் கூறியது.",
      "pope": "If cruel eye-brow's bow, Unbent, would veil those glances now;The shafts that wound this trembling heart Her eyes no more would dart",
      "sourceFile": "1086.md",
      "sourceSha256": "8c6999b2643865cc02cba22d2f2d647da2e8ece512e71eaf0a4fdcd588797a1e"
    },
    {
      "number": 1087,
      "lines": [
        "கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்",
        "படாஅ முலைமேல் துகில்."
      ],
      "manakkudavar": "மதயானை முகத்துக் கண்மறைவாக இட்ட படாம் போலும் மாதரே! நினது படாமுலைமேல் இட்டதுகில்.",
      "pope": "As veil o'er angry eyes Of raging elephant that lies,The silken cincture's folds invest This maiden's panting breast",
      "sourceFile": "1087.md",
      "sourceSha256": "4de78cb63185781efe71c4ae3f945df7ad7b764de4a70786b0a4107be29282e6"
    },
    {
      "number": 1088,
      "lines": [
        "ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்",
        "நண்ணாரும் உட்குமென் பீடு."
      ],
      "manakkudavar": "இவ்வொள்ளிய நுதற்கு மிகவுங் கெட்டது, போரின்கண் கிட்டாதாரும் உட்கும் எனது வலி. இது மேற்கூறிய தலைமகன் மிகவுங் கவிழ்ந்து நிலம்நோக்கிப் புருவத்தின் மேற்றோன்றிய தலைமகள் நுதல் கண்டு கூறியது.",
      "pope": "Ah woe is me my might, That awed my foemen in the fight,By lustre of that beaming brow Borne down, lies broken now",
      "sourceFile": "1088.md",
      "sourceSha256": "82e6d24aeec693b52530fea214787ed70c304ee31e2204ed3428c75fe075eccc"
    },
    {
      "number": 1089,
      "lines": [
        "பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு",
        "அணியெவனோ ஏதில தந்து."
      ],
      "manakkudavar": "பிணையையொத்த மடப்பத்தினையுடைய நோக்கினையும் நாணினையும் உடைய வட்குப் பிறிது கொணர்ந்து அணிவது யாதினைக் கருதியோ? பிறரை வருத்துவதற்கு இவைதாமே அமையும். இது, தான் அவளைக் கொடுமை கூறுவான் போல நலம் பாராட்டியது.",
      "pope": "Like tender fawn's her eye; Clothed on is she with modesty;What added beauty can be lent; By alien ornament",
      "sourceFile": "1089.md",
      "sourceSha256": "02e0785cc45897c0c2e5a2f7019a4c20ccc686d72376823766cc66942ffe0565"
    },
    {
      "number": 1090,
      "lines": [
        "உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்",
        "கண்டார் மகிழ்செய்தல் இன்று."
      ],
      "manakkudavar": "அடப்பட்ட நறவு, உண்டார்மாட்டல்லது காமம் போலக் கண்டார் மாட்டு மகிழ்வு செய்தலின்று. இது தலைமகள் தலைமகனைக் கண்டுழி வருத்தமுற்றுக் கருதியது.",
      "pope": "The palm-tree's fragrant wine, To those who taste yields joys divine;But love hath rare felicity For those that only see",
      "sourceFile": "1090.md",
      "sourceSha256": "b5f1f64ddf1215bca1ceaf20d1a5489b456e4a433b3f18e202eae0493f966e16"
    },
    {
      "number": 1091,
      "lines": [
        "இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு",
        "நோய்நோக்கொன் றந்நோய் மருந்து."
      ],
      "manakkudavar": "இவள் உண் கண்ணிலுள்ள நோக்கு இரண்டு வகைத்து; அவ்விரு வகையினும் ஒரு நோக்கு நோய் செய்யும்; ஒரு நோக்கு அதற்கு மருந்தாம். நோய்நோக்கென்பது முதல்நோக்கின நோக்கம்: மருந்து நோக்கென்பது இதனால் வருத்தமுற்ற தலைமகனைத் தலைமகள் உள்ளங்கலங்கி நாணோடுகூடி நோக்கின நோக்கம். இது நாணமுடைய பெண்டிரது உள்ளக்கருத்து வெளிப்படுமாறு கூறியது.",
      "pope": "A double witchery have glances of her liquid eye;One glance is glance that brings me pain; the other heals again",
      "sourceFile": "1091.md",
      "sourceSha256": "efad166df205d3c61d3bc5753608fd859657588bf935e27900bf4a66570b24ce"
    },
    {
      "number": 1092,
      "lines": [
        "கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்",
        "செம்பாகம் அன்று பெரிது."
      ],
      "manakkudavar": "என்கண்களைச் சோர்வுபார்த்துக் களவினால் நோக்குகின்ற சிறிய நோக்கம், வேண்டப்பட்ட பொருளிற் பாதியேயன்று; பெரிது. தலைமகள் தலைமகன் காணாமைநோக்குதலின் அது களவாயிற்று.",
      "pope": "The furtive glance, that gleams one instant bright,Is more than half of love's supreme delight",
      "sourceFile": "1092.md",
      "sourceSha256": "be67113c3796bbe19b905179d85143887af9a3a7a1147a98fb711b16546ec7e6"
    },
    {
      "number": 1093,
      "lines": [
        "நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்",
        "யாப்பினுள் அட்டிய நீர்."
      ],
      "manakkudavar": "முற்பட நோக்கினாள், நோக்கினபின்பு நாணினாள். அஃது அவள் நட்புப்பயிர் வளர அதன்கண் வார்த்த நீர். தலைமகள் நாண் போகாமைக்குக் காரணங் கூறியவாறாம்.",
      "pope": "She looked, and looking drooped her head:On springing shoot of love 'its water shed",
      "sourceFile": "1093.md",
      "sourceSha256": "24c59b76071a2139c4a488afeca5c39a3053b10d3b291828618256e07d5c70c8"
    },
    {
      "number": 1094,
      "lines": [
        "யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்",
        "தான்நோக்கி மெல்ல நகும்."
      ],
      "manakkudavar": "யான் தன்னைப்பார்க்குங்கால் தான் நிலத்தைப் பார்க்கும்; யான் பாராத விடத்துத் தான்பார்த்துத் தோன்றாமை நகும். மெல்ல நகுதல்- முகிழமுகிழ்த்தல்.",
      "pope": "I look on her: her eyes are on the ground the while:I look away: she looks on me with timid smile",
      "sourceFile": "1094.md",
      "sourceSha256": "1a49c09cd4632ec405eca3fb4dd0d5e8bad92835114f7bead7163514ac028345"
    },
    {
      "number": 1095,
      "lines": [
        "குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்",
        "சிறக்கணித்தாள் போல நகும்"
      ],
      "manakkudavar": "குறித்துக் கொண்டு நோக்காமை யல்லது ஒருகால் உடம்பட்டாள் போல நகா நின்றாள். அஃதாவது காமக்குறிப்புடையார்போல நகுதல். அது வெளிப்பட நில்லாமையின் போல என்றார். இது தன்குறிப்புத் தோன்றாமல் நகுதல் உடன்படுதலாமென்றது.",
      "pope": "She seemed to see me not; but yet the maidHer love, by smiling side-long glance, betrayed",
      "sourceFile": "1095.md",
      "sourceSha256": "ca0af8f6fa2ae7df6c914944318ff7c72ad93eedfba5125c1e43a41db38dba08"
    },
    {
      "number": 1096,
      "lines": [
        "உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்",
        "ஒல்லை உணரப் படும்."
      ],
      "manakkudavar": "கூடாதவர் போலச் சொல்லினும், செறுதலில்லாதார் சொல்லை அதற்குக் காரணமாகப் பிறிதொன்று உளதென்று விரைந்தறிதல் வேண்டும். இஃது உறுப்பினாலிசைவுகாட்டி, உரையினால் மறுப்பினும் உடன்படுதலாமென்றது.",
      "pope": "Though with their lips affection they disown,Yet, when they hate us not, 'tis quickly known",
      "sourceFile": "1096.md",
      "sourceSha256": "1dc7266d3449c2fa5ed601302c45a082b5e3b73a8bdb1668894c190fe273f2f5"
    },
    {
      "number": 1097,
      "lines": [
        "செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்",
        "உறாஅர்போன்று உற்றார் குறிப்பு."
      ],
      "manakkudavar": "செறுதலில்லாக் கடுஞ்சொல்லும், செற்றார்போல நோக்குதலும், அன்புறாதார் போல அன்புற்றாரது குறிப்பென்று கொள்ளப்படும். இஃது அன்பின்மை தோற்ற நில்லாமையின் உடன்பாடென்று தேறியது.",
      "pope": "The slighting words that anger feign, while eyes their love revealAre signs of those that love, but would their love conceal",
      "sourceFile": "1097.md",
      "sourceSha256": "844def4b0d8dca24981f22c9bf04ee84508e3d68a8f93bf32bd1bad9ac62c53f"
    },
    {
      "number": 1098,
      "lines": [
        "அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்",
        "பசையினள் பைய நகும்."
      ],
      "manakkudavar": "அசைந்த இயல்பினையுடையாட்கு அவ்விடத்தோர் அழகுண்டு; யான் நோக்க நெகிழ்ந்து மெல்ல நகாநின்றாள் அவ்விடமென்றது தானே நெகிழ்ந்து நக்க இடம்: அழகு- தன்வடிவினுள் மிக்க குணம்: பைய நகுதல்- ஓசைப்படாமல் நகுதல்.",
      "pope": "I gaze, the tender maid relents the while;And, oh the matchless grace of that soft smile",
      "sourceFile": "1098.md",
      "sourceSha256": "f34ce6e416f90b4fe66105e85852371505510706e18220b294dc502f69cb00ac"
    },
    {
      "number": 1099,
      "lines": [
        "ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்",
        "காதலார் கண்ணே உள."
      ],
      "manakkudavar": "அயலார்போலப் பொது நோக்கத்தால் நோக்குதல் காதலித்தார் மாட்டே யுளதாம். இது குறித்து நோக்காமையும் உடன்படுதலென்றது.",
      "pope": "The look indifferent, that would its love disguise,Is only read aright by lovers' eyes",
      "sourceFile": "1099.md",
      "sourceSha256": "fc571a8b48b0eee17433a46f6affa57ddae465ff7122d86401e6b47d1b772c87"
    },
    {
      "number": 1100,
      "lines": [
        "கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்",
        "என்ன பயனும் இல."
      ],
      "manakkudavar": "கண்களோடு கண்கள் காமக்குறிப்பினால் நோக்கும் நோக்கம் ஒக்குமாயின் வாயினாற் சொல்லுஞ் சொற்கள் ஒரு பயனுடையவல்ல. இது சார்தலுறுகின்ற தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.",
      "pope": "When eye to answering eye reveals the tale of love,All words that lips can say must useless prove",
      "sourceFile": "1100.md",
      "sourceSha256": "7398b9a0f82da0b1557870cfa302b857c9c8e0d39f7a9ec6b2a80a3fce2d3e1a"
    },
    {
      "number": 1101,
      "lines": [
        "கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்",
        "ஒண்தொடி கண்ணே உள."
      ],
      "manakkudavar": "கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலனும் இவ்வொள்ளிய தொடியை யுடையாள் மாட்டே யுள. இது பொறிகள் ஐந்தினுக்கும் ஒருகாலத்தே யின்பம் பயந்ததென்று புணர்ச்சியை வியந்து கூறியது.",
      "pope": "All joys that senses five- sight, hearing, taste, smell, touch- can give,In this resplendent armlets-bearing damsel live",
      "sourceFile": "1101.md",
      "sourceSha256": "f0402f8bedaf3b98b142b39c6d955a8ecaf9ed98bc09b139db2ccccb79ea8858"
    },
    {
      "number": 1102,
      "lines": [
        "பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை",
        "தன்நோய்க்குத் தானே மருந்து."
      ],
      "manakkudavar": "நோயுற்றால் அதற்கு மருந்தாவது பிறிதொன்று: இவ்வணியிழையால் வந்த நோய்க்குக் காரணமாகிய இவள் தானே மருந்தாம். இது புணர்வதன் முன்னின்ற வேட்கை தணிந்தமை கூறிற்று.",
      "pope": "Disease and medicine antagonists we surely see;This maid, to pain she gives, herself is remedy",
      "sourceFile": "1102.md",
      "sourceSha256": "918484cac0420e6343dc7d84c1fd8f2faf0be9b3cbc63bedf889c99d17602cbd"
    },
    {
      "number": 1103,
      "lines": [
        "தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்",
        "தாமரைக் கண்ணான் உலகு."
      ],
      "manakkudavar": "தம்மால் விரும்பப்படுவாரது மெல்லிய தோளின்கண் துயிலுந் துயிலினும் இனிதோ? இந்திரனது சுவர்க்கம். இது சுவர்க்கத்தின்பமும் இதுதானே யென்று கூறியது.",
      "pope": "Than rest in her soft arms to whom the soul is giv'n,Is any sweeter joy in his, the Lotus-eyed-one's heaven",
      "sourceFile": "1103.md",
      "sourceSha256": "47c91dcd93c26931644365b033b2e69d13a3c2558f3c0b364bd626fbbc21589c"
    },
    {
      "number": 1104,
      "lines": [
        "நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்",
        "தீயாண்டுப் பெற்றாள் இவள்?"
      ],
      "manakkudavar": "தன்னை நீங்கினவிடத்துச் சுடும். குறுகினவிடத்துக் குளிரும்: இத்தன்மையாகிய தீ எவ்விடத்துப் பெற்றாள் இவள். இது புணர்ச்சி உவகையாற் கூறுதலான், புணர்ச்சி மகிழ்தலாயிற்று.",
      "pope": "Withdraw, it burns; approach, it soothes the pain;Whence did the maid this wondrous fire obtain",
      "sourceFile": "1104.md",
      "sourceSha256": "7666c3f52134baf48d3b6eba291bbf708ff21b65ce24f6712d79d22481ec2936"
    },
    {
      "number": 1105,
      "lines": [
        "வேட்ட பொழுதின் அவையவை போலுமே",
        "தோட்டார் கதுப்பினாள் தோள்."
      ],
      "manakkudavar": "காதலித்தபொழுது காதலிக்கப்பட்ட அவ்வப்பொருள்களைப் போலும், தோளின்கண் தாழ்ந்த கூந்தலினையுடையவள் தோள். தோட்டாழ்கதுப்பு- புணர்ச்சிக்காலத்து அசைந்து தாழ்ந்த கூந்தல்.",
      "pope": "In her embrace, whose locks with flowery wreaths are bound,Each varied form of joy the soul can wish is found",
      "sourceFile": "1105.md",
      "sourceSha256": "73ddfbdf7105b072b48afd21130e70abe9e92e1429ecb118f4b164492e058857"
    },
    {
      "number": 1106,
      "lines": [
        "உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு",
        "அமிழ்தின் இயன்றன தோள்."
      ],
      "manakkudavar": "சாருந்தோறும் என்னுயிர் தழைப்பச் சார்தலால் பேதைக்குத் தோள்கள் அமுதினால் செய்யப்பட்டனவாக வேண்டும். சாராதகாலத்து இறந்துபடுவதான உயிரைத் தழைக்கப் பண்ணுதலான் அமுதம் போன்றதென்றவாறு. இது கூடிய தலைமகன் மகிழ்ந்து கூறியது.",
      "pope": "Ambrosia are the simple maiden's arms; when I attainTheir touch, my withered life puts forth its buds again",
      "sourceFile": "1106.md",
      "sourceSha256": "e31add388a8c4f0acce519435dd2c363836f295bc2daf21faf4db4b3d2f69ee2"
    },
    {
      "number": 1107,
      "lines": [
        "தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்",
        "அம்மா அரிவை முயக்கு."
      ],
      "manakkudavar": "தம்மிடத்திலே யிருந்து, தமது தாளாண்மையால் பெற்ற பொருளை இல்லாதார்க்குப் பகுத்து உண்டாற்போலும், அழகிய மாமை நிறத்தினையுடைய அரிவை முயக்கம்.",
      "pope": "As when one eats from household store, with kindly graceSharing his meal: such is this golden maid's embrace",
      "sourceFile": "1107.md",
      "sourceSha256": "5e1fd01db24cb244e72bde0a54680985de8c8d6bd72fdf513d989fe1b256878f"
    },
    {
      "number": 1108,
      "lines": [
        "வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை",
        "போழப் படாஅ முயக்கு."
      ],
      "manakkudavar": "ஒத்த காதலுடையா ரிருவர்க்கும் இனிதாம்; காற்றால் இடை யறுக்கப்படாத முயக்கம். இது புணர்ச்சி விருப்பினால் கூறினமையால் புணர்ச்சி மகிழ்தலாயிற்று. இது குறிப்பினால் புகழ்ந்தது.",
      "pope": "Sweet is the strict embrace of those whom fond affection binds,Where no dissevering breath of discord entrance finds",
      "sourceFile": "1108.md",
      "sourceSha256": "06d83b66121d45ba0496300d4b7b9de39b9298d9dbe3193c74094333bcd41ca1"
    },
    {
      "number": 1109,
      "lines": [
        "ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்",
        "கூடியார் பெற்ற பயன்."
      ],
      "manakkudavar": "ஊடுதலும் ஊடல் தீர்தலும், பின்னைப் புணர்தலுமென்னுமிவை அன்பினாற் கூடினார் பெற்ற பயன். காமம் - அன்பு. புணர்தலெனினும் பேணுதலெனினும் ஒக்கும். ஊடற் குறிப்பு தோன்றநின்ற தலைமகளை ஊடல் தீர்த்துப் புணர்ந்த தலைமகன் அதனால் வந்த மகிழ்ச்சி கூறியது.",
      "pope": "The jealous variance, the healing of the strife, reunion gained:These are the fruits from wedded love obtained",
      "sourceFile": "1109.md",
      "sourceSha256": "2fa6b8d53f3f4b8225241e97b653052abd614bec420766ae9c405e212a70de74"
    },
    {
      "number": 1110,
      "lines": [
        "அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்",
        "செறிதோறும் சேயிழை மாட்டு."
      ],
      "manakkudavar": "யாதானும் ஒன்றை அறியுந்தோறும் அறியாமை தோன்றினாற்போலும், இச்சேயிழைமாட்டுப் புணர்ச்சியும் புணருந்தோறும் அமையாமை. காமப்புணர்ச்சியாயிற்று. இஃது அமையாமையின் கூற்று.",
      "pope": "The more men learn, the more their lack of learning they detect;'Tis so when I approach the maid with gleaming jewels decked",
      "sourceFile": "1110.md",
      "sourceSha256": "7df60a7b8a3f9af8f5ea79f69df3c249a81783b809bc084ee22ea06be4494520"
    },
    {
      "number": 1111,
      "lines": [
        "நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்",
        "மென்னீரள் யாம்வீழ் பவள்."
      ],
      "manakkudavar": "அனிச்சப்பூவே! நீ நல்ல நீர்மையை யுடையாய்; எம்மால் விரும்பப்பட்டவள் நின்னினும் மிக நீர்மையாள் காண். இஃது உடம்பினது மென்மை கூறிற்று.",
      "pope": "O flower of the sensitive plant! than theeMore tender's the maiden beloved by me",
      "sourceFile": "1111.md",
      "sourceSha256": "b16f00460c21fa0d899512ed6a1f05c167cd94e1285e9e01b8b822c3766b1b94"
    },
    {
      "number": 1112,
      "lines": [
        "மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்",
        "பலர்காணும் பூவொக்கும் என்று."
      ],
      "manakkudavar": "நெஞ்சே! நீ இவள்கண் மலராயினும் பலரால் காணப்படும் பூவையொக்கு மென்று மலரைக் கண்டபொழுதே மயங்கா நின்றாய். இது கண் பூவினது நிறமொக்குமாயினும் குணமொவ்வா தென்று கூறிற்று.",
      "pope": "You deemed, as you saw the flowers, her eyes were as flowers, my soul,That many may see; it was surely some folly that over you stole",
      "sourceFile": "1112.md",
      "sourceSha256": "0e4c22d10854a14dd9dc76909bbd658401e0f5312e01bde1e90df331c336c928"
    },
    {
      "number": 1113,
      "lines": [
        "முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்",
        "வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு."
      ],
      "manakkudavar": "தளிர்போலும் மேனி: முத்துப்போலும் முறுவல்: நறுநாற்றம் போலும் நாற்றம்: வேல்போலும் உண்கண்: வேயொத்த தோளினை யுடையாளுக்கு. இது நிறமும், எயிறும், நாற்றமும், கண்ணின் வடிவும், தோளும் புகழ்ந்து கூறிற்று.",
      "pope": "As tender shoot her frame; teeth, pearls; around her odours blend;Darts are the eyes of her whose shoulders like the bambu bend",
      "sourceFile": "1113.md",
      "sourceSha256": "484b6317dbf8cf364b26dfcbacd621b35c7b097e959c667e62be4eb4e6e8adbf"
    },
    {
      "number": 1114,
      "lines": [
        "காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்",
        "மாணிழை கண்ணொவ்வேம் என்று."
      ],
      "manakkudavar": "குவளைமலர் காணவற்றாயின் மாட்சிமைப்பட்ட இழையினை யுடையாளது கண்ணை ஒவ்வோமென்று நாணி, கவிழ்ந்து நிலத்தை நோக்கும். இது காணுந்தோறும் ஒவ்வாதென்றது.",
      "pope": "The lotus, seeing her, with head demiss, the ground would eye,And say, 'With eyes of her, rich gems who wears, we cannot vie.'",
      "sourceFile": "1114.md",
      "sourceSha256": "9b0c86ed978ace9ddd444baafdf11bf63ce68c239e8e8935c5c316fa5bc2094d"
    },
    {
      "number": 1115,
      "lines": [
        "அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு",
        "நல்ல படாஅ பறை."
      ],
      "manakkudavar": "அனிச்சப்பூவைக் காம்புகள் அறாது மயிரில் அளைந்தாள்: இனி இவளது நுசுப்பிற்கு நல்லவாக ஒலிக்கமாட்டா பறை. இஃது இடையினது நுண்மை கூறிற்று.",
      "pope": "The flowers of the sensitive plant as a girdle around her she placed;The stems she forgot to nip off; they 'll weigh down the delicate waist",
      "sourceFile": "1115.md",
      "sourceSha256": "26d9de32626e7a8151f53562e67f34b8b88c070c0e079d6372e48404a66f0c45"
    },
    {
      "number": 1116,
      "lines": [
        "மதியும் மடந்தை முகனும் அறியா",
        "பதியின் கலங்கிய மீன்."
      ],
      "manakkudavar": "மதியினையும் மடந்தை முகத்தினையும் கண்டு இவ்விரண்டினையும் அறியாது தன்னிலையினின்றுங் கலங்கித் திரியா நின்றன மீன்கள். மீன் இயக்கத்தைக் கலங்குதலாகக் கூறினார். இம் மீன் கலங்கித் திரிதலானே இவள் முகம் மதியோடு ஒக்கு மென்று கூறியது.",
      "pope": "The stars perplexed are rushing wildly from their spheres;For like another moon this maiden's face appears",
      "sourceFile": "1116.md",
      "sourceSha256": "2f9bb337c3e6c52d377f6896f137a8eccbb5a354785e3f43bc5380f3a4becb66"
    },
    {
      "number": 1117,
      "lines": [
        "அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் க்குப் போல",
        "மறுவுண்டோ மாதர் முகத்து."
      ],
      "manakkudavar": "குறையிடை நிறைந்த ஒளிர்மதிக்குப்போல இம்மாதர் முகத்துக்கு மறுவுண்டோ?. இது மேல் கலக்கமுற்றுத் திரிகின்ற மீன் கலங்குதற்குக் காரணம் அறிவின்மையாம்; இவள் முகத்து மறுவில்லையாதலான் அது மதியோடு ஒவ்வாதென்று கூறியது.",
      "pope": "In moon, that waxing waning shines, as sports appear,Are any spots discerned in face of maiden here",
      "sourceFile": "1117.md",
      "sourceSha256": "589fbd2358df6b065d26d092b4659da9debe9cb85a2fd53821765912165585ab"
    },
    {
      "number": 1118,
      "lines": [
        "மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்",
        "காதலை வாழி மத஧."
      ],
      "manakkudavar": "மதியே! நீ இம்மாதர் முகம்போல ஒளிவிட வல்லையாயின் நீயும் எம்மாற் காதலிக்கப்படுதி. வாழி- அசை. இது மறுப்போயினதாய முகமென்று கூறப்பட்டது.",
      "pope": "Farewell, O moon! If that thine orb could shineBright as her face, thou shouldst be love of mine",
      "sourceFile": "1118.md",
      "sourceSha256": "51f0a9cea60070a51d568a3a80e79075d9d5d3a1a5c304542b5555ba7bfc752f"
    },
    {
      "number": 1119,
      "lines": [
        "மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்",
        "பலர்காணத் தோன்றல் மதி."
      ],
      "manakkudavar": "மதியே! நீ மலர்போலுங் கண்களை யுடையாளது முகத்தை ஒப்பையாயின், பலர் காணுமாறு தோன்றாதொழிக. இது மதி ஒளியும் வடிவும் ஒத்ததாயினும் குணத்தினாலே ஒவ்வாதென்றது.",
      "pope": "If as her face, whose eyes are flowers, thou wouldst have charms for me,Shine for my eyes alone, O moon, shine not for all to see",
      "sourceFile": "1119.md",
      "sourceSha256": "7817ca1d49141d543c719cc1a945a54e9a2b783602c559e08b24e5da82ac82d8"
    },
    {
      "number": 1120,
      "lines": [
        "அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்",
        "அடிக்கு நெருஞ்சிப் பழம்."
      ],
      "manakkudavar": "அனிச்சப்பூவும், அன்னத்தின் தூவியும், மாதரடிக்கு நெருஞ்சிப் பழத்தோடு ஒக்கும். இஃது அவையிற்றினும் மெல்லியது அடியென்று கூறிற்று.",
      "pope": "The flower of the sensitive plant, and the down on the swan's white breast,As the thorn are harsh, by the delicate feet of this maiden pressed",
      "sourceFile": "1120.md",
      "sourceSha256": "c6b4555cfe80ccde9ee1dc8910866c4c0d678d92d5a707b9bde0e3631e9ce7fd"
    },
    {
      "number": 1121,
      "lines": [
        "பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி",
        "வாலெயிறு ஊறிய நீர்."
      ],
      "manakkudavar": "பாலொடுகூடத் தேனைக்கலந்தாற் போலும்: மிகவும் இனிமைதரும் புகழினையுடையாளது வெள்ளிய எயிற்றினின்று ஊறிய நீர். இது புணர்ச்சியுண்மையும் காதல் மிகுதியும் தோன்றத் தலைமகன் கூறியது.",
      "pope": "The dew on her white teeth, whose voice is soft and low,Is as when milk and honey mingled flow",
      "sourceFile": "1121.md",
      "sourceSha256": "7d2145cca3f73f0388cd4c817104d1999b6416b88f79a7ce98cc34d5c0fd4e63"
    },
    {
      "number": 1122,
      "lines": [
        "உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன",
        "மடந்தையொடு எம்மிடை நட்பு."
      ],
      "manakkudavar": "உடம்போடு உயிரிடையுள்ள நட்பு எத்தன்மைத்து அத்தன்மைத்து, மடப்பத்தையுடையாளோடு எம்மிடையுள்ள நட்பு. நின்னிற் பிரியமாட்டே னென்றவாறு. இது தலைமகன் தனது காதல் மிகுதி கூறியது.",
      "pope": "Between this maid and me the friendship kindIs as the bonds that soul and body bind",
      "sourceFile": "1122.md",
      "sourceSha256": "ac8bc50c56d46defb8609476cd5b7e00f3cca0919334da51887e49508a5dafbc"
    },
    {
      "number": 1123,
      "lines": [
        "கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்",
        "திருநுதற்கு இல்லை இடம்."
      ],
      "manakkudavar": "என் கண்ணுட் கருமணியகத்து நிற்கும் பாவாய்! நீ அங்கு நின்று போதுவாயாக, எம்மால் விரும்பப்பட்ட அழகிய நுதலினையுடையாட்கு இருத்தற்கிடம் போதாது.",
      "pope": "For her with beauteous brow, the maid I love, there place is none;To give her image room, O pupil of mine eye, begone",
      "sourceFile": "1123.md",
      "sourceSha256": "0d15db0030fb5d04586e7e5704d8544f2c2c74c133772ada458cfdf0a13f8f34"
    },
    {
      "number": 1124,
      "lines": [
        "வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்",
        "அதற்கன்னள் நீங்கும் இடத்து."
      ],
      "manakkudavar": "கூடுமிடத்து இவ்வாயிழை உயிர்க்கு வாழ்தலோடு ஒப்பள்: நீங்குமிடத்து அவ்வுயிர்க்குச் சாதலோடு ஒப்பள். இஃது இரண்டாங்கூட்டத்துப் புணர்ந்து நீங்கானென்று கருதிய தலைமகள் கேட்பத் தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.",
      "pope": "Life is she to my very soul when she draws nigh;Dissevered from the maid with jewels rare, I die",
      "sourceFile": "1124.md",
      "sourceSha256": "c9728c65672ee7f546042d809f3ed89e64bcb00598d47a2b4c191f520d6d0d0c"
    },
    {
      "number": 1125,
      "lines": [
        "உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்",
        "ஒள்ளமர்க் கண்ணாள் குணம்."
      ],
      "manakkudavar": "மறந்தேனாயின் நினைப்பேன் யான்: மறத்தலறியேன்: ஒள்ளமர்க் கண்ணாள் குணத்தினை. தோழியிற் கூடிநீங்குத் தலைமகனை நோக்கி எங்களை நினைக்கிலீரோ? என்ற தோழிக்குத் தலைமகன் கூறியது. இவை ஐந்தும் தலைமகன் கூற்று. இனிக் கூறும் ஐந்துந் தலைமகள் கூற்று.",
      "pope": "I might recall, if I could once forget; but from my heartHer charms fade not, whose eyes gleam like the warrior's dart",
      "sourceFile": "1125.md",
      "sourceSha256": "4770d246421d5ec6e68a45a55fb72a49f1fb9bf8057edec1dca160d83dd3d58f"
    },
    {
      "number": 1126,
      "lines": [
        "கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா",
        "நுண்ணியர்எம் காத லவர்."
      ],
      "manakkudavar": "என் கண்ணுள் நின்று நீங்கார்; இமைப்பேனாயின், இவட்கு உறுத்துமென்று பருவருத்திருப்பதுஞ் செய்யார்: ஆதலான் எம்மாற் காதலிக்கப்பட்டார் நுண்ணியவறிவை யுடையார்.",
      "pope": "My loved one's subtle form departs not from my eyes;I wink them not, lest I should pain him where he lies",
      "sourceFile": "1126.md",
      "sourceSha256": "2faabcaecf643accad4499bd37702d62bbda31ae62aeb5b488cdf41ac7aff049"
    },
    {
      "number": 1127,
      "lines": [
        "கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்",
        "எழுதேம் கரப்பாக்கு அறிந்து."
      ],
      "manakkudavar": "எங்காதலவர் கண்ணுள்ளார்: ஆதலானே கண்ணும் மையெழுதேம்: அவர் ஒளித்தலை யறிந்து. எப்பொழுதும் நோக்கியிருத்தலால் கோலஞ்செய்தற்குக் காலம் பெற்றிலேனென்றவா றாயிற்று.",
      "pope": "My love doth ever in my eyes reside;I stain them not, fearing his form to hide",
      "sourceFile": "1127.md",
      "sourceSha256": "8399bbdbb8f42639343c9c499a0b016a4e617db7d678f0879e693809c3849adc"
    },
    {
      "number": 1128,
      "lines": [
        "நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்",
        "அஞ்சுதும் வேபாக் கறிந்து."
      ],
      "manakkudavar": "எம்மாற் காதலிக்கப்பட்டவர் எம்நெஞ்சத்திலிருக்கின்றார்: ஆதலானே வெய்தாக வுண்டலை அஞ்சாநின்றோம், அவர்க்குச் சுடுமென்பதனையறிந்து. இது நீ உண்ணாததென்னையென்று வினாயதோழிக்குத் தலைமகள் உணவில் காதலில்லை யென்று கூறியது. இது கரணத்து உறவு உரைத்தல்.",
      "pope": "Within my heart my lover dwells; from food I turnThat smacks of heat, lest he should feel it burn",
      "sourceFile": "1128.md",
      "sourceSha256": "215d5a62679621b8f88626a88fddcb2b50a14e1895cbf422d9c3de8781b85849"
    },
    {
      "number": 1129,
      "lines": [
        "இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே",
        "ஏதிலர் என்னும் இவ் வூர்."
      ],
      "manakkudavar": "கண்ணிமைக்குமாயின் அவரொளிக்குமது யானறிவேன், அவ்வொளித்தற்கு அவரை நமக்கு ஏதிலரென்று சொல்லும் இவ்வூர்; அதற்காக இமைக்கிலன். இது கண் துயில்மறுத்தலென்னும் மெய்ப்பாடு.",
      "pope": "I fear his form to hide, nor close my eyes:'Her love estranged is gone!' the village cries",
      "sourceFile": "1129.md",
      "sourceSha256": "a2a900ca8bcdd3e4bd367f0a1a2f3356d15ee25d1a074ed49b8149848dbd2ebb"
    },
    {
      "number": 1130,
      "lines": [
        "உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்",
        "ஏதிலர் என்னும் இவ் வூர்."
      ],
      "manakkudavar": "அவர் எனது நெஞ்சத்தே என்றும் மகிழ்ந்து உறையாநிற்பர்; அவரை ஏதிலராய் நீங்கி யுறைவர் என்றே சொல்லா நின்றது இவ்வூர். தலைமகள் வேறுபாடுகண்டு தலைமகனை அன்பிலாரென்று இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் என்னெஞ்சில் நின்று நீங்காரென்று நெஞ்சின்மேல் வைத்துக் கூறியது.",
      "pope": "Rejoicing in my very soul he ever lies;'Her love estranged is gone far off!' the village cries",
      "sourceFile": "1130.md",
      "sourceSha256": "cc67a3b844bdc70b395b865356b4469f10fc142df2e01bc1e46a7659923fa740"
    },
    {
      "number": 1131,
      "lines": [
        "காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்",
        "மடலல்லது இல்லை வலி."
      ],
      "manakkudavar": "காமம் காரணமாக முயன்று வருந்தினார்க்கு ஏமமாவது மடல் ஏறுவதல்லது மற்றும் வலி யில்லை. இது தலைமகனை தோழி சேட்படுத்தியவிடத்து மடலேறுவேனென்று தலைமகன் கூறியது.",
      "pope": "To those who 've proved love's joy, and now afflicted mourn,Except the helpful 'horse of palm', no other strength remains",
      "sourceFile": "1131.md",
      "sourceSha256": "e80771d0547359af3c4de732be8008031e09c25872e54d0f796da9b6d3145e16"
    },
    {
      "number": 1132,
      "lines": [
        "நோனா உடம்பும் உயிரும் மடலேறும்",
        "நாணினை நீக்கி நிறுத்து."
      ],
      "manakkudavar": "பொறுத்த லில்லாத உடம்பும் உயிரும் மடலேறும்: நாணினை நீக்கி நின்று. இஃது உடம்போடு உயிரும் மடலேறுமெனத் தலைமகன் கூறியது.",
      "pope": "My body and my soul, that can no more endure,Will lay reserve aside, and mount the 'horse of palm'",
      "sourceFile": "1132.md",
      "sourceSha256": "1993d7e547130de3ed7bbf61a8ac9e0ae5892a505a6760d4e536af60048771ae"
    },
    {
      "number": 1133,
      "lines": [
        "நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்",
        "காமுற்றார் ஏறும் மடல்."
      ],
      "manakkudavar": "நாணமிக்க நிலைமையும் சிறந்த ஆண்மையும் யான் பண்டுடையேன்; காமமிக்கார் ஏறும் மடலினை இன்றுடையேனானேன்.",
      "pope": "I once retained reserve and seemly manliness;To-day I nought possess but lovers' 'horse of palm'",
      "sourceFile": "1133.md",
      "sourceSha256": "4cde5d2c43de5d040333a562a4af77a50d85a65072f7504782c1aea191538487"
    },
    {
      "number": 1134,
      "lines": [
        "காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு",
        "நல்லாண்மை என்னும் புணை."
      ],
      "manakkudavar": "யான் தன்னைக் கடத்தற்குக் கொண்ட நாணும் நல்லாண்மையுமாகிய புணைகளை என்னிற் பிரித்துக் காமமாகிய கடியபுனல் கொண்டுபோகா நின்றது.",
      "pope": "Love's rushing tide will sweep away the raftOf seemly manliness and shame combined",
      "sourceFile": "1134.md",
      "sourceSha256": "f2aa804f7b3b3163b9c59833c9ebfa81a01c59ee9a7ec9ed1d78f6789abf9ffb"
    },
    {
      "number": 1135,
      "lines": [
        "தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு",
        "மாலை உழக்கும் துயர்."
      ],
      "manakkudavar": "மாலைபோலச் செய்யப்பட்ட சிறுவளையினை யுடையாள் மடலோட கூட மாலைக்காலத்து உறுந்துயரினைத் தந்தாள். தொடலை யென்பதற்குச் சோர்ந்த வளை யெனினும் அமையும். குறுந்தொடி- பிள்ளைப்பணி. இவை ஏழும் தலைமகன் கூற்று.",
      "pope": "The maid that slender armlets wears, like flowers entwined,Has brought me 'horse of palm,' and pangs of eventide",
      "sourceFile": "1135.md",
      "sourceSha256": "875c6ddd453f042ca7686b855ec507f5d4d72000506adad5341dd2a5fcd345d0"
    },
    {
      "number": 1136,
      "lines": [
        "மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற",
        "படல்ஒல்லா பேதைக்கென் கண்."
      ],
      "manakkudavar": "பேதை பொருட்டு என்கண் உறங்குதலை இசையாது: ஆதலானே மடலூர்தலை ஒருதலையாக யாமத்தினும் நினைப்பேன். இது மடலேறுவது நாளையன்றே; இராவுறக்கத்திலே மறந்துவிடுகின்றீர் என்ற தோழிக்கு என் கண் உறங்காது ஆதலான் மறவேனென்று தலைமகன் கூறியது.",
      "pope": "Of climbing 'horse of palm' in midnight hour, I think;My eyes know no repose for that same simple maid",
      "sourceFile": "1136.md",
      "sourceSha256": "379504695f69c2ca95e7cea3a267e68a68f3f6eecff2b16d2de2f3676ebe6a90"
    },
    {
      "number": 1137,
      "lines": [
        "கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்",
        "பெண்ணின் பெருந்தக்க தில்."
      ],
      "manakkudavar": "கடலையொத்த காமநோயாலே வருந்தியும், மடலேற நினையாத பெண்பிறப்புப்போல மேம்பட்டது இல்லை. இது நும்மாற் காதலிக்கப்பட்டாள் தனக்கும் இவ்வருத்த மொக்கும்: பெண்டிர்க்கு இப்பெண்மையான் மடலேறாததே குறையென்று தலைமகன் ஆற்றாமை நீங்குதற்பொருட்டுத் தோழி கூறியது.",
      "pope": "There's nought of greater worth than woman's long-enduring soul,Who, vexed by love like ocean waves, climbs not the 'horse of palm'",
      "sourceFile": "1137.md",
      "sourceSha256": "ba15b8411045c2974a73a8becd904d1651d8aea0a37c253f3730cf90b72d45cb"
    },
    {
      "number": 1138,
      "lines": [
        "நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்",
        "மறையிறந்து மன்று படும்."
      ],
      "manakkudavar": "நிறையிலர், மிக அளிக்கத்தக்கா ரென்னாது என் காமமானது மறைத்தலைக் கடத்தலுமன்றி மன்றின்கண் படரா நின்றது. இஃது அம்பலும் அலரும் ஆகாவென்று தோழி பகற்குறி மறுத்தது.",
      "pope": "In virtue hard to move, yet very tender, too, are we;Love deems not so, would rend the veil, and court publicity",
      "sourceFile": "1138.md",
      "sourceSha256": "3c73b0a115b530f6458f82e327e20750df9293e571d73de9e97012dfb2818e7b"
    },
    {
      "number": 1139,
      "lines": [
        "அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்",
        "மறுகின் மறுகும் மருண்டு."
      ],
      "manakkudavar": "என்னை யொழிந்த எல்லாரும் அறிவிலரென்றே சொல்லி என் காமமானது தலை மயங்கி மறுகின் கண்ணே வெளிப்படச் சுழலா நின்றது. சுழல்தல் - இவ்வாறு சொல்லித் திரிதல்.",
      "pope": "'There's no one knows my heart,' so says my love,And thus, in public ways, perturbed will rove",
      "sourceFile": "1139.md",
      "sourceSha256": "fe1bf5d880631435ea3702693196b9f8ea3752a5c711f2bdeb79e9bd001a6502"
    },
    {
      "number": 1140,
      "lines": [
        "யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்",
        "யாம்பட்ட தாம்படா ஆறு."
      ],
      "manakkudavar": "யாங் கேட்குமாறு மன்றிக் கண்ணாற் காணுமாறு எம்மை யறிவிலார் நகாநின்றார். அவரங்ஙனஞ் செய்கின்றது யாமுற்ற நோய்கள் தாமுறாமையான்.",
      "pope": "Before my eyes the foolish make a mock of me,Because they ne'er endured the pangs I now must drie",
      "sourceFile": "1140.md",
      "sourceSha256": "963b9f8ab620b523d89ea4038d7b2734dfc0f8792c661c5fa4b2545bc8f9c9aa"
    },
    {
      "number": 1141,
      "lines": [
        "அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்",
        "பலரறியார் பாக்கியத் தால்."
      ],
      "manakkudavar": "நமது புணர்ச்சியால் வந்த அலர் எழுதலினானே அவளது ஆருயிர் நிற்கும். அவ்வாறு உயிர்நிற்றலை எங்கள் புண்ணியத்தாலே பலரறியா ராயினார்: அறிவாராயின் எமக்கு ஏதிலராய் அலர்தூற்றுவார், இவள் இறந்துபட வேண்டுமென்று தூற்றார்.",
      "pope": "By this same rumour's rise, my precious life stands fast;Good fortune grant the many know this not",
      "sourceFile": "1141.md",
      "sourceSha256": "4c85aa6346572fb82f8a68ce4900819871a73b47317c2e2e6bba8394eee260a8"
    },
    {
      "number": 1142,
      "lines": [
        "மலரன்ன கண்ணாள் அருமை அறியாது",
        "அலரெமக்கு ஈந்ததிவ் வூர்."
      ],
      "manakkudavar": "பூவொத்த கண்ணாளது இற்பிறப்பின் அருமையை யறியாதே, இவ்வூரவர் எங்கட்கு அலரைத் தந்தார். எளியாரைச் சொல்லுமாறுபோலச் சொல்லாநின்றா ரென்றவாறு.",
      "pope": "The village hath to us this rumour giv'n, that makes her mine;Unweeting all the rareness of the maid with flower-like eyne",
      "sourceFile": "1142.md",
      "sourceSha256": "f83ef9650afdce7ff046b62a86bcfa929daf21d06ddd1c053137750de02fcf29"
    },
    {
      "number": 1143,
      "lines": [
        "உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்",
        "பெறாஅது பெற்றன்ன நீர்த்து."
      ],
      "manakkudavar": "ஊரறிந்த அலர் வருவதொன்றன்றோ? அவ்வலரைத் தீதாகக் கொள்ளாது, பெறாததொன்றைப் பெற்றாலொத்த நீர்மைத்தாகக் கொள்ளல் வேண்டும். இஃது அலரறிவுறுத்த தோழிக்கு அவ்வலரினான் என்றும் தமராவார் உடன்படுவரென்று தலைமகன் கூறியது.",
      "pope": "The rumour spread within the town, is it not gain to me?It is as though that were obtained that may not be",
      "sourceFile": "1143.md",
      "sourceSha256": "32b8a8b93bd5737a7b2849ddb85adedc2f09780634085c0f28d26bda466d41bb"
    },
    {
      "number": 1144,
      "lines": [
        "கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்",
        "தவ்வென்னும் தன்மை இழந்து."
      ],
      "manakkudavar": "அலரினானே அலர்தலை யுடைத்துக் காமம்; அவ்வலரில்லை யாயின் தனது தன்மை யிழந்து பொலிவழியும். செவ்வை யுடையதனைச் செவ்விது என்றாற்போலக் கவ்வையுடையதனைக் கவ்விது என்றார்.",
      "pope": "The rumour rising makes my love to rise;My love would lose its power and languish otherwise",
      "sourceFile": "1144.md",
      "sourceSha256": "7513362178e15a5a0451d3b4a2c952abbfcd736776fb476cba144dda5e9fae2b"
    },
    {
      "number": 1145,
      "lines": [
        "களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்",
        "வெளிப்படுந் தோறும் இனிது."
      ],
      "manakkudavar": "மயங்குந்தோறும் கள்ளுண்டலை விரும்பினாற்போலக் காமமும் அலராகுந்தோறும் இனிதாகும். இஃது அலரறிவுறுத்த தோழியை நோக்கி நுமக்குத் துன்ப மாயிற்றே இவ்வலரென்று வினாவிய தலைமகற்குத் தோழி கூறியது.",
      "pope": "The more man drinks, the more he ever drunk would be;The more my love's revealed, the sweeter 'tis to me",
      "sourceFile": "1145.md",
      "sourceSha256": "84ab334b1cb4d8092742b553f8ffde7f6aad81004f94e4c595b981a70cc25945"
    },
    {
      "number": 1146,
      "lines": [
        "கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்",
        "திங்களைப் பாம்புகொண் டற்று."
      ],
      "manakkudavar": "யான் கண்ணுற்றது ஒருநாள்; அக்காட்சி திங்களைப் பாம்பு கொண்டாற்போல, எல்லாரானும் அறியப்பட்டு அலராகா நின்றது.",
      "pope": "I saw him but one single day: rumour spreads soonAs darkness, when the dragon seizes on the moon",
      "sourceFile": "1146.md",
      "sourceSha256": "1d7f8fb0187a70544948b0fb10359c9200c5cd2004a69b06aa84b20a1cc19df9"
    },
    {
      "number": 1147,
      "lines": [
        "ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்",
        "நீராக நீளும்இந் நோய்."
      ],
      "manakkudavar": "ஊரார் எடுத்த அலர் எருவாக அன்னை சொல்லும் சொற்கள் நீராக இந்நோய் வளராநின்றது. இஃது அலரின் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. இவையிரண்டிற்கும் வரைவானாதல் பயன்.",
      "pope": "My anguish grows apace: the town's reportManures it; my mother's word doth water it",
      "sourceFile": "1147.md",
      "sourceSha256": "624ca17350c01645bc75f9b9087ac3e1053304f4741f2896feb964a9b8b62a04"
    },
    {
      "number": 1148,
      "lines": [
        "நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்",
        "காமம் நுதுப்பேம் எனல்."
      ],
      "manakkudavar": "எரிகின்ற நெருப்பை நெய்யினாலே அவிப்போமென்று நினைத்தாற்போலும்; அலரினானே காமத்தை அவிப்போமென்று நினைத்தல். இது தலைமகன் பின்னுங் களவொழுக்கம் வேண்டினமை கண்டு தோழி கூறியது.",
      "pope": "With butter-oil extinguish fire! 'Twill proveHarder by scandal to extinguish love",
      "sourceFile": "1148.md",
      "sourceSha256": "98eda646b9bc7f13447559a3ae421fb2cabdb0dd1f864a7e8c01603997d9aaab"
    },
    {
      "number": 1149,
      "lines": [
        "அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்",
        "பலர்நாண நீத்தக் கடை."
      ],
      "manakkudavar": "அலராகுமென்று நாணுதல் இயல்வதோ? அஞ்சுதலைத் தவிரென்று சொன்னவர் பலரும் நாணுமாறு நம்மை நீங்கினவிடத்து. பலரென்றது தோழியும் செவிலியும் முதலாயினாரை.",
      "pope": "When he who said 'Fear not!' hath left me blamed,While many shrink, can I from rumour hide ashamed",
      "sourceFile": "1149.md",
      "sourceSha256": "cc5cbc786fde04f7e0be17e95219fc2f4b97e9090f942a46ca2952de9d191e53"
    },
    {
      "number": 1150,
      "lines": [
        "தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்",
        "கெளவை எடுக்கும்இவ் வூர்."
      ],
      "manakkudavar": "யாம் விரும்ப, அலரையும் இவ்வூரார் எடுத்தார். ஆதலான் இனித் தாங்களே விரும்பிக் கொடுப்பர் நமது காதலார்க்கு.",
      "pope": "If we desire, who loves will grant what we require;This town sends forth the rumour we desire",
      "sourceFile": "1150.md",
      "sourceSha256": "90db543331dcb808d64b73c0d4c3e84b7665d6329f711c7149f538c8a8f7e618"
    },
    {
      "number": 1151,
      "lines": [
        "செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்",
        "வல்வரவு வாழ்வார்க் குரை."
      ],
      "manakkudavar": "காதலர் போகாமையுண்டாயின் எனக்குக் கூறு பிரிந்தார் நீட்டியாது விரைந்து வருவாரென்று சொல்லுகின்ற வரவினைப் பின்புளராய் வாழ்வார்க்குக் கூறு. இது கடிதுவருவாரென்ற தோழிக்குத் தலைமகள் ஆற்றாமையாற் கூறியது.",
      "pope": "If you will say, 'I leave thee not,' then tell me so;Of quick return tell those that can survive this woe",
      "sourceFile": "1151.md",
      "sourceSha256": "9285821a127a116be1dc1ae84316fffbc64dfd346af54eb03f50a20ebcee93ee"
    },
    {
      "number": 1152,
      "lines": [
        "இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்",
        "புன்கண் உடைத்தால் புணர்வு."
      ],
      "manakkudavar": "நங்காதலரை வரவு பார்த்திருக்குமது இன்பத்தை யுடைத்து; அவரைப் புணர்ந்திருக்கும் இருப்பு. பிரிவாரோ என்று அஞ்சப்படும் துன்பத்தை யுடைத்து.",
      "pope": "It once was perfect joy to look upon his face;But now the fear of parting saddens each embrace",
      "sourceFile": "1152.md",
      "sourceSha256": "6189c42b71f35e5d45600641686e527a22b274d6e14b4f7c837fc2fb0c8e4ce2"
    },
    {
      "number": 1153,
      "lines": [
        "அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்",
        "பிரிவோ ரிடத்துண்மை யான்."
      ],
      "manakkudavar": "பிரியேனென்ற தஞ்சொல்லும் நம்பிரிவாற்றாமையும் அறிதலுடையராய காதலர்கண்ணும் ஒரோ வழிப் பிரிவு நிகழ்தலான் அவர் சொல்லும் தலையளியும் பற்றி நம்மாட்டன்புடையரெனத் தேறுந்தேற்றம் அரிதாயிருந்தது.",
      "pope": "To trust henceforth is hard, if ever he depart,E'en he, who knows his promise and my breaking heart",
      "sourceFile": "1153.md",
      "sourceSha256": "e6bc4ab5269d664fc2055fc8ed67d84e020f0dca0454f87c0b1a26256107c84c"
    },
    {
      "number": 1154,
      "lines": [
        "அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்",
        "தேறியார்க்கு உண்டோ தவறு."
      ],
      "manakkudavar": "நம்மைத் தலையளிசெய்து நின்னிற் பிரியேன். நீ அஞ்சல் என்றவர் தாமே நீங்கிப் போவாராயின் அவர் தௌ¤வித்த சொல்லைத் தௌ¤ந்தவர்க்கு வருவதொரு குற்றம் உண்டோ? தன்மையைப் படர்க்கைபோற் கூறினார்.",
      "pope": "If he depart, who fondly said, 'Fear not,' what blame's incurredBy those who trusted to his reassuring word",
      "sourceFile": "1154.md",
      "sourceSha256": "638e5647e25a6167019d1fb4bdcd58e227ec1b00817be6314dbe8eeb247f662e"
    },
    {
      "number": 1155,
      "lines": [
        "ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்",
        "நீங்கின் அரிதால் புணர்வு."
      ],
      "manakkudavar": "காக்கலாமாயின் அமைந்தார் தம்முடைய பிரிவைக் காக்க; அவர் பிரிவராயின் பின்பு கூடுதல் அரிது. மேல் தலைமகன் கூறிய சொற்கேட்டு யாது சொல்வேனென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.",
      "pope": "If you would guard my life, from going him restrainWho fills my life! If he depart, hardly we meet again",
      "sourceFile": "1155.md",
      "sourceSha256": "024181df2d0bd2e4ea8b354a570c5ea529d48c5a77a1b127b3ca23ad387b18fc"
    },
    {
      "number": 1156,
      "lines": [
        "பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்",
        "நல்குவர் என்னும் நசை."
      ],
      "manakkudavar": "பிரிவினை யுரைக்கும் வன்கண்மையை யுடையராயின் அவர் மறுத்துவந்து நல்குவரென்னும் ஆசை யில்லை. இது தலைமகன் பிரிந்தானென்று கேட்டவிடத்து நின்னிற் பிரியேனென்ற சொல்லை உட்கொண்டு தலைமகள் கூறியது.",
      "pope": "To cherish longing hope that he should ever gracious be,Is hard, when he could stand, and of departure speak to me",
      "sourceFile": "1156.md",
      "sourceSha256": "668bc57b66ff17499a112f86bf788bd851187efd78a096a6253e1552812b6b98"
    },
    {
      "number": 1157,
      "lines": [
        "துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை",
        "இறைஇறவா நின்ற வளை."
      ],
      "manakkudavar": "இறைவன் பிரிகின்றமையை எமக்கு அறிவியாவோ? முன் கையின் இறையைக் கடவாநின்ற வளைகள். முன்பே அறிதலான், உடம்பு மெலிந்தது என்றவா றாயிற்று.",
      "pope": "The bracelet slipping from my wrist announced beforeDeparture of the Prince that rules the ocean shore",
      "sourceFile": "1157.md",
      "sourceSha256": "b945aad5f3a3a12dceee38f6e554ee60e1cdb9692ae7d0675226b16a63cced7c"
    },
    {
      "number": 1158,
      "lines": [
        "இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்",
        "இன்னாது இனியார்ப் பிரிவு."
      ],
      "manakkudavar": "தமக்கு இனமில்லாதவூரின்கண் இருந்து வாழ்தல் இன்னாது: இனியாரைப் பிரிதல் அதனினும் இன்னாது. இது பிரிவுணர்த்திய தலைமகற்கு இவ்விரண்டு துன்பமும் எங்கட்குளவாமென்று பிரிவுடன்படாது தோழி கூறியது.",
      "pope": "'Tis sad to sojourn in the town where no kind kinsmen dwell;'Tis sadder still to bid a friend beloved farewell",
      "sourceFile": "1158.md",
      "sourceSha256": "0eb06afac28c646e31996f1dcfd05287c1d5359621e77ba4a0169d43b154930e"
    },
    {
      "number": 1159,
      "lines": [
        "தொடிற்சுடின் அல்லது காமநோய் போல",
        "விடிற்சுடல் ஆற்றுமோ தீ."
      ],
      "manakkudavar": "தீண்டினாற் சுடுமதல்லது காமநோய்போல, நீங்கினாற் சுடவற்றோ தீ. தலைமகன் பிரிந்துழித் தலைமகளாற்றாமை கண்டு தோழி கூறியது.",
      "pope": "Fire burns the hands that touch; but smart of loveWill burn in hearts that far away remove",
      "sourceFile": "1159.md",
      "sourceSha256": "ee541f80dc0330eb699d4939e5a6fe8d71eed431d781a7f097098781b9e711cb"
    },
    {
      "number": 1160,
      "lines": [
        "அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்",
        "பின்இருந்து வாழ்வார் பலர்."
      ],
      "manakkudavar": "பொறத்தற்கரியதனைப் பொறுத்து, அல்லல் செய்யும் நோயை நீக்கிப் பிரிவையும் பொறுத்துக் காதலரை நீங்கியபின் தமியராயிருந்து வாழ்வார் பலர். அல்லல்நோய்- காமவேதனை. பிரிவாற்றுதல்- புணர்ச்சியின்மையைப் பொறுத்தல்.",
      "pope": "Sorrow's sadness meek sustaining, Driving sore distress away,Separation uncomplaining Many bear the livelong day",
      "sourceFile": "1160.md",
      "sourceSha256": "2b1c41460658e7e01cf20aadf7222de54afccbd65ec62d8cdbeddb2c0d679ab6"
    },
    {
      "number": 1161,
      "lines": [
        "மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு",
        "ஊற்றுநீர் போல மிகும்."
      ],
      "manakkudavar": "இந்நோயை யான் மறைப்பேன்; மறைப்பவும் இஃது இறைப்பார்க்கு ஊற்றுநீர்போல மிகாநின்றது. தலைமகள் ஆற்றாமை கண்டு இதனை இவ்வாறு புலப்பட விடுத்தல் தகாதென்று தோழிக்குத் தலைமகள் கூறியது.",
      "pope": "I would my pain conceal, but see! it surging swells,As streams to those that draw from ever-springing wells",
      "sourceFile": "1161.md",
      "sourceSha256": "40eeef1709b8436d78f5bf5b139d59534c2d16cbf951ab63176c253da7cc1ab0"
    },
    {
      "number": 1162,
      "lines": [
        "கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு",
        "உரைத்தலும் நாணுத் தரும்."
      ],
      "manakkudavar": "இந்நோயை மறைக்கவும் அறிகின்றிலேன். இந்நோயைச் செய்தார்க்குச் சொல்லவும் நாணமாகாநின்றது என்றவாறு.<br /> இது குறிப்பறிதற் பொருட்டுக் கூறிய தோழிக்குத் தலைமகள் கூறியது.",
      "pope": "I cannot hide this pain of mine, yet shame restrainsWhen I would tell it out to him who caused my pains",
      "sourceFile": "1162.md",
      "sourceSha256": "4a120b4da7499d3e0b20758e1b50d3e7e769005c0ed06b4c1240a2b758e5def2"
    },
    {
      "number": 1163,
      "lines": [
        "காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்",
        "நோனா உடம்பின் அகத்து."
      ],
      "manakkudavar": "வேட்கையும் நாணமும் என்னுயிரே காத்தண்டாகத் தூங்கா நின்றன, பொறுக்கமாட்டாத என்னுடம்பினுள்ளே நின்று. (காத்தண்டாக- காவடித்தண்டாக: தூங்குதல்- தொங்குதல்) இது தலைமகள் மனமகிழ்ச்சி யிதுவென்று கூறியது.",
      "pope": "My soul, like porter's pole, within my wearied frame,Sustains a two-fold burthen poised, of love and shame",
      "sourceFile": "1163.md",
      "sourceSha256": "7848b2f5bbb4a5f032df832f2811b88b458715f89d71921703b3cf897414e32a"
    },
    {
      "number": 1164,
      "lines": [
        "காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்",
        "ஏமப் புணைமன்னும் இல்."
      ],
      "manakkudavar": "காமக்கடல் நிலையாக உண்டே; அது கடக்கும் ஏமமாகிய புணை நிலையாக இல்லையே. இது தலைமகள் ஆற்றாமை கண்டு நெருங்கிக் கூறிய தோழியைக் குறித்து நமக்குத் துணையாவார் இல்லையெனத் தலைமகள் கூறியது.",
      "pope": "A sea of love, 'tis true, I see stretched out before,But not the trusty bark that wafts to yonder shore",
      "sourceFile": "1164.md",
      "sourceSha256": "39a03ea5c0fac278b88955e03da084d197fe05c237e5ddde524eb20edd0a653b"
    },
    {
      "number": 1165,
      "lines": [
        "துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு",
        "நட்பினுள் ஆற்று பவர்."
      ],
      "manakkudavar": "மென்மை செய்ய வேண்டும் நட்டோர்மாட்டே துன்பம் வருதலைச் செய்கின்றவர், வன்மை செய்ய வேண்டுமிடத்து யாங்ஙனஞ் செய்கின்றாரோ? இது பகைதணி வினையின்கண் பிரிந்த தலைமகனது கொடுமையை உட்கொண்டு தலைமகள் தோழிக்குச் சொல்லியது.",
      "pope": "Who work us woe in friendship's trustful hour,What will they prove when angry tempests lower",
      "sourceFile": "1165.md",
      "sourceSha256": "103f8113f33c28567609670012b9038567ddbbdb09906304c70338a2c9768adf"
    },
    {
      "number": 1166,
      "lines": [
        "இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்",
        "துன்பம் அதனிற் பெரிது."
      ],
      "manakkudavar": "காமப்புணர்வினால் நமக்குவரும் இன்பம் கடல்போலப் பெரிது; பிரிவினான். அஃது அடுங்காலத்து வருந்துன்பம் அக்கடலினும் பெரிது. இஃது இன்பமுற்றார் துன்பமுறுதல் உலகியலென்று ஆற்றுவித்த தோழிக்கு ஆற்றலரிதென்று தலைமகள் கூறியது.",
      "pope": "A happy love 's sea of joy; but mightier sorrows rollFrom unpropitious love athwart the troubled soul",
      "sourceFile": "1166.md",
      "sourceSha256": "fc7a2c249cf0976b831b002f4e2079196b913b73c285cc41e643e73a06749320"
    },
    {
      "number": 1167,
      "lines": [
        "காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்",
        "யாமத்தும் யானே உளேன்."
      ],
      "manakkudavar": "காமமாகிய பெருக்காற்றினை நீந்திக் கரை காண்கின்றிலேன். அரையிருள் யாமத்தினும் உறங்காது யானேயுளேன் மற்று உறங்காதாரில்லை இதுகாதலர் குறித்தநாள் வருந்துணையும் ஆற்றுமாறு என்னையென்று தலைமகள் தன்னுள்ளே சொல்லியது.",
      "pope": "I swim the cruel tide of love, and can no shore descry,In watches of the night, too, 'mid the waters, only I",
      "sourceFile": "1167.md",
      "sourceSha256": "8c12ddb9b8bb183c4ec73e504cb2c1c24a3fd1865ddf999ae2d56ba98ca25349"
    },
    {
      "number": 1168,
      "lines": [
        "மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா",
        "என்னல்லது இல்லை துணை."
      ],
      "manakkudavar": "இவ்விரா அளித்தா யிருந்தது; உலகத்து வாழ்கின்ற உயிர்களெல்லாவற்றையும் துயிலப்பண்ணி என்னையல்லது வேறுதுணை யில்லையாக இருந்தது. இது பிற்றை ஞான்று வினாவிய தோழிக்குத் தலைமகள் கண் உறங்குகின்றதில்லை யென்று சொல்லியது.",
      "pope": "All living souls in slumber soft she steeps;But me alone kind night for her companing keeps",
      "sourceFile": "1168.md",
      "sourceSha256": "c58aa83c5ef2ba7b848bb5f64e010d2dd0632f028eb1d9c3e3410f78314e70e4"
    },
    {
      "number": 1169,
      "lines": [
        "கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்",
        "நெடிய கழியும் இரா."
      ],
      "manakkudavar": "கொடியவர் செய்த கொடுமையினும் தாம் கொடியனவாய் நின்றன: இக்காலத்து நெடியவாய்க் கழிகின்ற இராப்பொழுதுகள். இது பொழுது விடிகின்றதில்லை யென்று தலைமகள் தோழிக்குச் சொல்லியது.",
      "pope": "More cruel than the cruelty of him, the cruel one,In these sad times are lengthening hours of night I watch alone",
      "sourceFile": "1169.md",
      "sourceSha256": "90d52b08f6d2fe09bed09392bdafc46d7ffaf70cd29c5b4ad6f8cc32ce828e6f"
    },
    {
      "number": 1170,
      "lines": [
        "உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்",
        "நீந்தல மன்னோஎன் கண்."
      ],
      "manakkudavar": "அவருள்ளவிடத்து நெஞ்சினைப்போல என் கண்கள் செல்லவல்லனவாயின், வெள்ளமாகிய நீரின்கண் புகுந்து நீந்தா. இது காண்டல் விருப்பினால் தலைமகள் கூறியது.",
      "pope": "When eye of mine would as my soul go forth to him,It knows not how through floods of its own tears to swim",
      "sourceFile": "1170.md",
      "sourceSha256": "0fe4d900b3ae18d586225f637124fcfc5cb9f20f6eb477c76db323d7e14fe064"
    },
    {
      "number": 1171,
      "lines": [
        "கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்",
        "தாம்காட்ட யாம்கண் டது."
      ],
      "manakkudavar": "அமையாத நோயை யாங்கண்டது அந்நோய் செய்தாரைத் தாங்காட்டுதலானே யன்றே? பின்னர் அக்கண்கள்தாம் காண்டல் வேட்கையாற் கலுழ்கின்றது யாவர் காட்டுவாராகக் கருதி? இது தலைமகள் காட்டுவாரில்லை யென்று தோழியைக் குறித்துச் சொல்லியது.",
      "pope": "They showed me him, and then my endless painI saw: why then should weeping eyes complain",
      "sourceFile": "1171.md",
      "sourceSha256": "bdd160f5c4336c39a3b15a00fc2e25df38ec6af18f19d9a40323a1cd684efe6c"
    },
    {
      "number": 1172,
      "lines": [
        "தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்",
        "பைதல் உழப்பது எவன்?"
      ],
      "manakkudavar": "முன்பு அவர் நல்லரென்று தெரிந்து உணர்ந்து நோக்கிய உண்கண்கள் இப்பொழுது வருத்தமுற்று, நல்லரென்று உணராவாய், துன்பமுழப்பது எற்றுக்கு? இது கண்ணினறியாமையைத் தோழிக்குச் சொல்லியது.",
      "pope": "How glancing eyes, that rash unweeting looked that day,With sorrow measureless are wasting now away",
      "sourceFile": "1172.md",
      "sourceSha256": "14230873e843cfe56724437b1923842a8bceb936f9190852a307bc773cbc4556"
    },
    {
      "number": 1173,
      "lines": [
        "கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்",
        "இதுநகத் தக்க துடைத்து."
      ],
      "manakkudavar": "இக்கண்கள் அன்று விரைந்து தாமேநோக்கி இன்று தாமே கலுழாநின்ற; இது சிரிக்கத்தக்க துடைத்து. இஃது ஆற்றாமை மிகுதியால் நகுதல் மிக்க தலைமகளை இந்நகுதற்குக் காரண மென்னையென்று வினாவிய தோழிக்கு அவள் கூறியது.",
      "pope": "The eyes that threw such eager glances round erewhileAre weeping now. Such folly surely claims a smile",
      "sourceFile": "1173.md",
      "sourceSha256": "e2e2cab2e9f5532efa01bf883c54dc7b19595baae93fe79f9af7a8f54191820d"
    },
    {
      "number": 1174,
      "lines": [
        "பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா",
        "உய்வில்நோய் என்கண் நிறுத்து."
      ],
      "manakkudavar": "உயல் ஆற்றாத என்மாட்டு உய்வில்லாத நோயை உண்கண்கள் நிறுத்தித் தாமும் அழமாட்டாவாய் நீருலந்தன. கண்கள் தாம் நினைத்தது முடித்துத் தொழின்மாறினவென்று கூறியவாறு.",
      "pope": "Those eyes have wept till all the fount of tears is dry,That brought upon me pain that knows no remedy",
      "sourceFile": "1174.md",
      "sourceSha256": "3c4ee8e30ea5b573bcc1d43d225a6472b720c848d2481b796ab16c3d7023f4ec"
    },
    {
      "number": 1175,
      "lines": [
        "படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்",
        "காமநோய் செய்தஎன் கண்."
      ],
      "manakkudavar": "கடலினும் மிக்க காமநோயை என்மாட்டு நிறுத்துதலானே கண்கள் தாம் உறங்கமாட்டாவாய்த் துன்பமுறாநின்றன. இது பிறர்க்கு இன்னாமை செய்தார்க்கு இன்னாமை வந்ததென்று தோழிக்குத் தலைமகள் கூறியது.",
      "pope": "The eye that wrought me more than sea could hold of woes,Is suffering pangs that banish all repose",
      "sourceFile": "1175.md",
      "sourceSha256": "825dab8e5339ca1ce39beb0c647b0e1985296a3398ae3abc985fd46111d5ef3e"
    },
    {
      "number": 1176,
      "lines": [
        "ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்",
        "தாஅம் இதற்பட் டது."
      ],
      "manakkudavar": "எமக்கு இந்நோயைச் செய்த கண்கள் தாமும் இந்நோயகத்துப்பட்டது மிகவும் இனிது. இது நின்கண் கலங்கிற்று; அஃதெனக்கு இன்னாதாயிற்று என்ற தோழிக்கு அது மிகவும் இனிதென்று தலைமகள் கூறியது.",
      "pope": "Oho! how sweet a thing to see! the eyeThat wrought this pain, in the same gulf doth lie",
      "sourceFile": "1176.md",
      "sourceSha256": "8443a2e525db974e2301fa441bef0780e2004cbdaf26d983a15ba6adf589d010"
    },
    {
      "number": 1177,
      "lines": [
        "உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து",
        "வேண்டி அவர்க்கண்ட கண்."
      ],
      "manakkudavar": "அழுதலை யுழந்துழந்து உள்ளநீர் அறுவனவாக; தாம் வேண்டினவரை விரும்பி நெகிழ்ந்து கண்டகண்கள். இஃது இவ்வாறு அழுதல் தகாதென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.",
      "pope": "Aching, aching, let those exhaust their stream,That melting, melting, that day gazed on him",
      "sourceFile": "1177.md",
      "sourceSha256": "7f8c7bfa186d4df765a710ad60ce5a8706f7a8fb92b6d4421ce82a00c7057dfc"
    },
    {
      "number": 1178,
      "lines": [
        "பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்",
        "காணாது அமைவில கண்."
      ],
      "manakkudavar": "விரும்பத்தகாததனை விரும்புவாரும் உளரோ? நம்மைக் கண்டால் விருப்பமின்றிப்போன அவரைக் காணாது அமைகின்றில என் கண்கள்: இதனை ஒழியப் பிறவு முளவோ?",
      "pope": "Who loved me once, onloving now doth here remain;Not seeing him, my eye no rest can gain",
      "sourceFile": "1178.md",
      "sourceSha256": "aef8d4d7e87f0ee175cacc282fd78ac256216f381f84d45f6beddc0fdc6f55c4"
    },
    {
      "number": 1179,
      "lines": [
        "வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை",
        "ஆரஞர் உற்றன கண்."
      ],
      "manakkudavar": "அவர் வாராத காலத்துப் புணர்ச்சி வேட்கையால் துஞ்சா; வந்த காலத்துப் பிரிவாரென்று அஞ்சித்துஞ்சா: அவ்விரண்டிடத்தினும் மிக்க துன்பமுற்றன கண்கள். இது நீ உறங்கவேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் இன்றேயல்ல எஞ்ஞான்றும் உறக்கமில்லை யென்றது.",
      "pope": "When he comes not, all slumber flies; no sleep when he is there;Thus every way my eyes have troubles hard to bear",
      "sourceFile": "1179.md",
      "sourceSha256": "48b991959dc5e834ed1798597d108ffad95a027257d1530a47b2f1bec50f5b5f"
    },
    {
      "number": 1180,
      "lines": [
        "மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்",
        "அறைபறை கண்ணார் அகத்து."
      ],
      "manakkudavar": "எம்மைப்போல அறைபறையாகிய கண்களையுடையார் மாட்டு உளதாகிய மறையை யறிதல் ஊரார்க்கு எளிது.",
      "pope": "It is not hard for all the town the knowledge to obtain,When eyes, as mine, like beaten tambours, make the mystery plain",
      "sourceFile": "1180.md",
      "sourceSha256": "e55b1223e1e551221a255691fe98bdafc9d2cd659e9caf4ea211bf92a8d7df36"
    },
    {
      "number": 1181,
      "lines": [
        "நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்",
        "பண்பியார்க்கு உரைக்கோ பிற."
      ],
      "manakkudavar": "காதலிக்கப்பட்டவர்க்கு அவர் அருளாமையை இசைந்த யான் பசந்தவெனது நிறத்தை மற்று யாவர்க்குச் சொல்லுவேன். இது தலைமகள் இப்பசப்பை யாவரால் நீக்குவேனென்று வெருட்சி கொண்டு கூறியது.",
      "pope": "I willed my lover absent should remain;Of pining's sickly hue to whom shall I complain",
      "sourceFile": "1181.md",
      "sourceSha256": "a651d6cce25870872d99f452d09e8f36d9211ec79e05d102490540ba770ff43d"
    },
    {
      "number": 1182,
      "lines": [
        "அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்",
        "மேனிமேல் ஊரும் பசப்பு."
      ],
      "manakkudavar": "காதலர் வரவிட்டாரென்னும் மிகுதியானே, பசப்பு என்னுடம்பின்மேலே பரந்து ஊரும். இஃது இப்பசலையை நீக்கவேண்டுமென்ற தோழிக்கு இஃது என் குறிப்பினாலே வந்ததல்ல: நீக்கவேண்டுவாயாயின் அவர்க்குச் சொல்லென்று கூறியது.",
      "pope": "'He gave': this sickly hue thus proudly speaks,Then climbs, and all my frame its chariot makes",
      "sourceFile": "1182.md",
      "sourceSha256": "c487cc6c0f76bd290aebcb47e1c9e0765834d3cc8e816e559db3f8cc64122009"
    },
    {
      "number": 1183,
      "lines": [
        "சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா",
        "நோயும் பசலையும் தந்து."
      ],
      "manakkudavar": "மென்மையும் நாணமும் அவர் கொண்டு போனார்; அதற்கு மாறாக நோயையும் பசலையும் தந்து. மென்மை- பெண்மை. இது தலைமகள் வெருட்சிகண்டு அது பெண்மையும் நாணமும் உடையார் செயலன்றென்று கடிந்து கூறிய தோழிக்கு அவள் ஆற்றாமைற் கூறியது.",
      "pope": "Of comeliness and shame he me bereft,While pain and sickly hue, in recompense, he left",
      "sourceFile": "1183.md",
      "sourceSha256": "f625975c812e33bb9ec7ab220cb4e75a4e5f0cc23b2525459f7b57aae8b32391"
    },
    {
      "number": 1184,
      "lines": [
        "உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்",
        "கள்ளம் பிறவோ பசப்பு."
      ],
      "manakkudavar": "யான் எக்காலமும் நினைப்பேன், சொல்லுவதும் அவர் திறமே, இத்தன்மையேனாகவும் பசலை வஞ்சனையாகப் பரவா நின்றது. இதற்கு நிலை யான் அறிகிலேன். இஃது ஆற்றாமை மிகாநின்றதென்று கூறியது.",
      "pope": "I meditate his words, his worth is theme of all I say,This sickly hue is false that would my trust betray",
      "sourceFile": "1184.md",
      "sourceSha256": "fab5677562bff21d55274868c64260ff0217a257db9d6c59399c7f7995b9c470"
    },
    {
      "number": 1185,
      "lines": [
        "உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்",
        "மேனி பசப்பூர் வது."
      ],
      "manakkudavar": "எங்காதலராகச் செல்கின்றாரை உங்கே பாராய்; என்மேனி மேலே பசப்புப் பரவுதலை இங்கே பாராய். இஃது அவர் பிரிந்தது இப்பொழுதாயிருக்கப் பசலை பரவாநின்றது. அவர் வருமளவும் யாங்ஙனமாற்றுதும் என்று தலைமகள் கூறியது.",
      "pope": "My lover there went forth to roam;This pallor of my frame usurps his place at home",
      "sourceFile": "1185.md",
      "sourceSha256": "5a37aba7c658ac771b1677c26121fc5bfda43d270273c0ea4b975a79772eee3c"
    },
    {
      "number": 1186,
      "lines": [
        "விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்",
        "முயக்கற்றம் பார்க்கும் பசப்பு."
      ],
      "manakkudavar": "விளக்கினது இறுதிபார்க்கும் இருளே போலக் கொண்கன் முயக்கினது இறுதிபார்த்து நின்றது பசப்பு. இஃது அவர் பிரிந்தது இப்பொழுது; இப்பசப்பு யாங்ஙன் வந்தது என்று தோழிக்குத் தலைமகள் கூறியது.",
      "pope": "As darkness waits till lamp expires, to fill the place,This pallor waits till I enjoy no more my lord's embrace",
      "sourceFile": "1186.md",
      "sourceSha256": "1bd281493cd80d2ae5bb874ae5214f3222d84909441d8d3589e9e2de65ae5443"
    },
    {
      "number": 1187,
      "lines": [
        "புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்",
        "அள்ளிக்கொள் வற்றே பசப்பு."
      ],
      "manakkudavar": "முயங்கிக்கொண்டு கிடந்த யான் அறியாது புடை பெயர்ந்தனன்: அவ்வளவிலே அள்ளிக்கொள்ளலாம்படி செறிந்தது பசலை. இது தலைமகனால் சொல்லாது பிரியப்பட்ட தலைமகளைப் பிற்றைஞான்று இவள் வேறுபாடு கண்டு இஃதெற்றினாயிற்று என்று குறித்து நோக்கிய தோழிக்குத் தலைமகள் கூறியது.",
      "pope": "I lay in his embrace, I turned unwittingly;Forthwith this hue, as you might grasp it, came on me",
      "sourceFile": "1187.md",
      "sourceSha256": "3866ba779e13fdfb650b4a848daaef089716c60aa385c8f5dcaffc0ee459f433"
    },
    {
      "number": 1188,
      "lines": [
        "பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்",
        "துறந்தார் அவர்என்பார் இல்."
      ],
      "manakkudavar": "இவள் பசந்தாளென்று எனக்குக் குற்றம் நாடுமதல்லது, இவளைத் துறந்தார் அவரென்று அவரது கொடுமையைச் சொல்லுவார் இல்லை. இஃது இப்பசப்பு வரலாகாதென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.",
      "pope": "On me, because I pine, they cast a slur;But no one says, 'He first deserted her.'",
      "sourceFile": "1188.md",
      "sourceSha256": "146bb14d8dba46b575c64f59088c5249794d0f37c03f26e55deceba26911eed5"
    },
    {
      "number": 1189,
      "lines": [
        "பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்",
        "நன்னிலையர் ஆவர் எனின்."
      ],
      "manakkudavar": "என்னுடம்பு நிலையாக என்றும் பசப்பதாக: நம்மைக் காதலித்தவரும் நம்மைப்போலத் துன்பமுறுவாராயின். இது தலைமகனது கொடுமையை உட்கொண்டு கூறியது.",
      "pope": "Well let my frame, as now, be sicklied o'er with pain,If he who won my heart's consent, in good estate remain",
      "sourceFile": "1189.md",
      "sourceSha256": "ec0139a6bf43bd84e9cd0a3ffb0251e2b409a201b9d8c4a5b7d222c2d29caa69"
    },
    {
      "number": 1190,
      "lines": [
        "பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்",
        "நல்காமை தூற்றார் எனின்."
      ],
      "manakkudavar": "பசந்தாளெனப் பேர்பெறுதல் நன்று: நம்மைக் காதலிப்பித்தவர் அருளாமையை இவ்வூரார் கூறாராயின். இது நின்மேனி பசந்ததென்ற தோழிக்கு அவ்வளவாய்க் குற்றமில்லையென்று தலைமகள் கூறியது.",
      "pope": "'Tis well, though men deride me for my sickly hue of pain;If they from calling him unkind, who won my love, refrain",
      "sourceFile": "1190.md",
      "sourceSha256": "17dbe8b512ae45ecae1919319074336d8456e268b38993c713b97f17feb67310"
    },
    {
      "number": 1191,
      "lines": [
        "தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே",
        "காமத்துக் காழில் கனி."
      ],
      "manakkudavar": "தாம் காதலித்தாரால் தம்மைக் காதலிக்கப்பெற்ற மகளிர் காம நுகர்ச்சியின்கண் பரலில்லாததோர் பழத்தைப் பெற்றவராவர். இது தடையின்றி நுகரலாமென்றது.",
      "pope": "The bliss to be beloved by those they love who gains,Of love the stoneless, luscious fruit obtains",
      "sourceFile": "1191.md",
      "sourceSha256": "34cd4c4b94d94a37feda804795e9d94f4eeb81d0acec7029bd3a9840883b033f"
    },
    {
      "number": 1192,
      "lines": [
        "வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு",
        "வீழ்வார் அள஧ க்கும் அளி."
      ],
      "manakkudavar": "காதலித்தார்க்குக் காதலிக்கப்பட்டார் அருளும் அருள், உயிர் வாழ்வார்க்கு, மழை பெய்தாற்போலும்; அஃதில்லார்க்கு வாடுதலே யுள்ளது. இது நின்மேனி பொலிவழிந்த தென்னும் தோழிக்குத் தலைமகள் கூறியது.",
      "pope": "As heaven on living men showers blessings from above,Is tender grace by lovers shown to those they love",
      "sourceFile": "1192.md",
      "sourceSha256": "9fc876fd56cd58f82f3271db18819fe00b645adeb62560a85797c92bd1d71548"
    },
    {
      "number": 1193,
      "lines": [
        "வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே",
        "வாழுநம் என்னும் செருக்கு."
      ],
      "manakkudavar": "தாம் காதலித்தாரால் காதலிக்கப்படுவார்க்கு உலகின்கண் இருந்து உயிர்வாழ்வேமென்னுங் களிப்பு அமையும். இது, தலைமகள், இருந்தாலும் பயனில்லை: அதிற்சாதல் அமையுமென்று வாழ்க்கையை முனிந்து தோழிக்குக் கூறியது.",
      "pope": "Who love and are beloved to them aloneBelongs the boast, 'We've made life's very joys our own.'",
      "sourceFile": "1193.md",
      "sourceSha256": "6877dbf21a8848afdd5070d7bae6f55ffc4c0957573a50c3717bd56386d61c7f"
    },
    {
      "number": 1194,
      "lines": [
        "வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்",
        "வீழப் படாஅர் எனின்."
      ],
      "manakkudavar": "நற்குணங்கள் பலவுடையரென்று உலகத்தாரால் விரும்பப்பட்டாரும் தம்மால் காதலிக்கப்பட்டவரால் தாம் காதலிக்கப்படாராயின், விருப்பமில்லாராவர். இது வாழ்க்கையை முனிந்து கூறிய தலைமகளுக்கு நீ இவ்வாறு கூறுவையாயின் நின்னைப் புகழ்கின்ற உலகத்தாருள் மிக வாழ்வார் யாரென்ற தோழிக்கு அவள் கூறியது. கொண்டான் காயிற் கண்டான் காயுமென்பது பழமொழி.",
      "pope": "Those well-beloved will luckless prove,Unless beloved by those they love",
      "sourceFile": "1194.md",
      "sourceSha256": "f07f33f617490d6982152cfacf0d2d3ac4209baa857ab6c389cc85463868105a"
    },
    {
      "number": 1195,
      "lines": [
        "நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ",
        "தாம்காதல் கொள்ளாக் கடை."
      ],
      "manakkudavar": "நாம் காதலித்தார் நமக்கு யாதினைச் செய்வர்: தாம் காதலியாதவிடத்து.",
      "pope": "From him I love to me what gain can be,Unless, as I love him, he loveth me",
      "sourceFile": "1195.md",
      "sourceSha256": "244806d307b434089a862c2096f3bf64bd50beefa0f3871284091959d7e70552"
    },
    {
      "number": 1196,
      "lines": [
        "ஒருதலையான் இன்னாது காமம்காப் போல",
        "இருதலை யானும் இனிது."
      ],
      "manakkudavar": "ஒருதலை அன்பினாலுண்டாகிய காமம் இன்னாது: காவினது பாரம்போல இரண்டு தலையும் ஒத்த அன்பினா லுண்டாகிய காமமே இனிதாவது. இது மேற்கூறிய சொற்கேட்ட தலைவர் அருள் செய்வாரென்றும் தெய்வக் குறிப்பினாற் கூறிய சொற்கேட்டுக் கூடினாலும் பயனில்லை யென்றும் தலைமகள் கூறியது.",
      "pope": "Love on one side is bad; like balanced loadBy porter borne, love on both sides is good",
      "sourceFile": "1196.md",
      "sourceSha256": "692f990f4826da92784d3fd53eeb849c588fc035213c18ce478a9462529ef368"
    },
    {
      "number": 1197,
      "lines": [
        "பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்",
        "ஒருவர்கண் நின்றொழுகு வான்."
      ],
      "manakkudavar": "தான் ஒருவர் பக்கமாகநின்று ஒழுகித் துன்பஞ்செய்கின்ற காமதேவன் நமது தடுமாற்றமும் நாம் உறுகின்ற துன்பமும் காணானோ? காண்பானாயின் நம்மை வருத்தானே, தெய்வமாகலான்.",
      "pope": "While Kaman rushes straight at me alone,Is all my pain and wasting grief unknown",
      "sourceFile": "1197.md",
      "sourceSha256": "61225608ee1361587c7762960121bd34c8db340415050cf3b5cdb07543ea06c2"
    },
    {
      "number": 1198,
      "lines": [
        "வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து",
        "வாழ்வாரின் வன்கணார் இல்."
      ],
      "manakkudavar": "தம் காதலரிடத்துநின்று வரும் இனியசொற்களைக் கேளாது உயிர்வாழ்வாரைப்போல வன்கண்மையுடையார் இவ்வுலகத்து இல்லை.",
      "pope": "Who hear from lover's lips no pleasant word from day to day,Yet in the world live out their life,- no braver souls than they",
      "sourceFile": "1198.md",
      "sourceSha256": "af376890e1d873ae923ac4fff326db160c6b24a4dcbbb298025103a6eec28f52"
    },
    {
      "number": 1199,
      "lines": [
        "நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு",
        "இசையும் இனிய செவிக்கு."
      ],
      "manakkudavar": "எம்மால் காதலிக்கப்பட்டார் எமக்கு அருளாராயினும் அவர் பக்கத்தனவாகிய சொற்களும் எங்கள் செவிக்கு இனியவாம்.",
      "pope": "Though he my heart desires no grace accords to me,Yet every accent of his voice is melody",
      "sourceFile": "1199.md",
      "sourceSha256": "22f3724d1fbb2688d8438ba66888464b8bf0750fb2db69cfa0bbf10a5eb12563"
    },
    {
      "number": 1200,
      "lines": [
        "உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்",
        "செறாஅஅய் வாழிய நெஞ்சு."
      ],
      "manakkudavar": "நெஞ்சே! நம்மோடு அன்புற்றார்க்குத் தூது விட்டாலும் பயனில்லை யென்று உன்னோடு உறாதார்க்கு நீயுற்ற நோயைச் சொல்ல நினையா நின்றாய்: நம்மை உறங்காமல் வருத்துகின்ற கடலைத் தூர்ப்பாயாயின் அஃது அதனினும் நன்று. இது தூதுவிடக் கருதிய நெஞ்சுக்குத் தூதுவிட்டாலும் பயனில்லை யென்று தலைமகள் கூறியது.",
      "pope": "Tell him thy pain that loves not thee?Farewell, my soul, fill up the sea",
      "sourceFile": "1200.md",
      "sourceSha256": "cc99b0fb7881b71b22916f125b59379e9071c26bf237b53fb4da05ba542c4f0f"
    },
    {
      "number": 1201,
      "lines": [
        "உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்",
        "கள்ளினும் காமம் இனிது."
      ],
      "manakkudavar": "தம்மாற் காதலிக்கப்பட்டவரை நினைத்தாலும் அது நீங்காத பெருங்களிப்பைத் தரும்: ஆதலால் கள்ளினும் காமம் இனிது.",
      "pope": "From thought of her unfailing gladness springs,Sweeter than palm-rice wine the joy love brings",
      "sourceFile": "1201.md",
      "sourceSha256": "5abc10d4a939806fb9bb8a8e50c7b5faee53930261b747395d8c81788fc8e647"
    },
    {
      "number": 1202,
      "lines": [
        "எனைத்தொனறு இனிதேகாண் காமம்தாம் வீழ்வார்",
        "நினைப்ப வருவதொன்று ஏல்."
      ],
      "manakkudavar": "காமம் யாதொன்றினானும் இனியதே காண்; தாம் விரும்பப்படுவாரை நினைக்க வருவதொரு துன்பம் இல்லையாயின். இது நீ இவ்வாறு ஆற்றாயாகின்றது துன்பம் பயக்குமென்ற தோழிக்குத் தலைமகள் மறுத்துக் கூறியது.",
      "pope": "How great is love! Behold its sweetness past belief!Think on the lover, and the spirit knows no grief",
      "sourceFile": "1202.md",
      "sourceSha256": "14dafaaed58d792fdb81142df947a863a3066f8da4bd59922bd04d299eac7ddf"
    },
    {
      "number": 1203,
      "lines": [
        "நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்",
        "சினைப்பது போன்று கெடும்."
      ],
      "manakkudavar": "அவர் நம்மை நினைப்பவர்போன்று நினையார் கொல்லோ: தும்மல் தோன்றுவதுபோன்று கெடாநின்றது. தலைமகள் உலகத்துப் பெண்டிராயுள்ளார் கூறுவதொன்றை ஈண்டுக் கூறினாள்.",
      "pope": "A fit of sneezing threatened, but it passed away;He seemed to think of me, but do his fancies stray",
      "sourceFile": "1203.md",
      "sourceSha256": "ff9b0738549de86397f95de1739ba9472ddbe4183cd3c881e65d725e85f77259"
    },
    {
      "number": 1204,
      "lines": [
        "யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து",
        "ஓஒ உளரே அவர்."
      ],
      "manakkudavar": "அவர் நெஞ்சத்து யாமும் உளேங்கொல்லோ: எம்முடைய நெஞ்சின்கண் எப்பொழுதும் அவர் உளராகா நின்றார். ஓஒ என்பது மிகுதிப்பொருளின்கண் வந்ததாதலான், எப்பொழுதும் என்னும் பொருளதாயிற்று.",
      "pope": "Have I a place within his heart!From mine, alas! he never doth depart",
      "sourceFile": "1204.md",
      "sourceSha256": "42ab664c6541a1d42c37c32726eaf2fbf9068a046e60378076b5903cd95a4cb0"
    },
    {
      "number": 1205,
      "lines": [
        "தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்",
        "எம்நெஞ்சத்து ஓவா வரல்."
      ],
      "manakkudavar": "தமது நெஞ்சின்கண் எம்மை யாம் சொல்லாமல் காவல்கொண்டார் எமது நெஞ்சின்கண் ஒழியாதே வருதலைக் காணாரோ. இது நினையாரோ நினைப்பாரோ என்று ஐயப்பட்ட தலைமகள் நினையாரென்று தெளிந்து கூறியது.",
      "pope": "Me from his heart he jealously excludes:Hath he no shame who ceaseless on my heart intrudes",
      "sourceFile": "1205.md",
      "sourceSha256": "26a10b5ff882734b2c9d5082d3fe852383de685126c1fbdc8e748477c58351c5"
    },
    {
      "number": 1206,
      "lines": [
        "மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்",
        "உற்றநாள் உள்ள உளேன்."
      ],
      "manakkudavar": "யான்அவரோடு புணர்ந்த நாள் இன்பத்தை நினைத்தலானே உயிர் வாழ்கின்றேன் அல்லது யாதொன்றினான் யான் உளேனாய் வாழ்கின்றேன்; இது தலைமகன் தலையளியை நினைந்து ஆற்றாளாயின தலைமகளை நோக்கி நீ இவ்வாறு நினைந்திரங்கல் உயிர்க்கு இறுதியாகுமென்ற தோழிக்கு அவள் கூறியது.",
      "pope": "How live I yet? I live to ponder o'erThe days of bliss with him that are no more",
      "sourceFile": "1206.md",
      "sourceSha256": "6b9595c6b5e58738ae7219fb75d8409e7d749431efb59b883043c32d8eed550c"
    },
    {
      "number": 1207,
      "lines": [
        "மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்",
        "உள்ளினும் உள்ளம் சுடும்."
      ],
      "manakkudavar": "அவரை மறந்தால் என்னாவன் கொல்லோ: மறப்பறியேனாய் நினைக்கவும் இக்காமம் நெஞ்சத்தைச் சுடாநின்றது. இது சீரியன உள்ளிப் பூரியன மறத்தல் வேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.",
      "pope": "If I remembered not what were I then? And yet,The fiery smart of what my spirit knows not to forget",
      "sourceFile": "1207.md",
      "sourceSha256": "1af42fb30792ce3bc5b65612732e96d8af33f2129f9458e682a274ae6b690846"
    },
    {
      "number": 1208,
      "lines": [
        "எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ",
        "காதலர் செய்யும் சிறப்பு."
      ],
      "manakkudavar": "யாம் காதலரை எவ்வளவு நினைப்பினும் வெகுளார்; அவ்வளவன்றோ அவர் செய்யும் அருள். அருள் செய்தலாவது குற்றம் கண்டாலும் வெகுளாமை.",
      "pope": "My frequent thought no wrath excites It is not so?This honour doth my love on me bestow",
      "sourceFile": "1208.md",
      "sourceSha256": "deebbf3451bc42ff6c245260c8a97ad52871acba1817a33efd347e4fea070ab5"
    },
    {
      "number": 1209,
      "lines": [
        "விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்",
        "அளியின்மை ஆற்ற நினைந்து."
      ],
      "manakkudavar": "நம்முள் நாம் வேறல்லமென்று சொன்னவர் அருளின்மையை மிகவும் நினைந்து எனது உயிர் அழியா நின்றது. இது தலைமகன் நினையானென்று தெரிந்து தலைமகள் தோழிக்குக் கூறியது.",
      "pope": "Dear life departs, when his ungracious deeds I ponder o'er,Who said erewhile, 'We're one for evermore'",
      "sourceFile": "1209.md",
      "sourceSha256": "7dabc483f28967e042fd79799068eee7c4eaa72fc86cdbd53d68cce2d78cc54a"
    },
    {
      "number": 1210,
      "lines": [
        "விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்",
        "படாஅதி வாழி மதி."
      ],
      "manakkudavar": "என்னெஞ்சை விடாது போனவரைக் கண்ணினாற் காணுமாறு படுகின்றதில்லை இம்மதி. பட்டதாயின் என்கண் உறங்கும்; உறங்கினால் அவரைக் காணலாமென்பது கருத்து. இது மதியுடன் புலந்து கூறியது. இதனாலே நனவினால் வருத்தமுற்றதும் கூறினாளாம்.",
      "pope": "Set not; so may'st thou prosper, moon! that eyes may seeMy love who went away, but ever bides with me",
      "sourceFile": "1210.md",
      "sourceSha256": "5f17ae3277996e0cd86241586dfefbc088d740c92e9c63818e318202fd8f5479"
    },
    {
      "number": 1211,
      "lines": [
        "காதலர் தூதொடு வந்த கனவினுக்கு",
        "யாதுசெய் வேன்கொல் விருந்து."
      ],
      "manakkudavar": "நங்காதலர் விட்ட தூதரோடே வந்த கனவினுக்கு யான் யாது விருந்து செய்வேன்?. இது தலைமகளாற்றுதற் பொருட்டுக் காதலர் வாராநின்றாரென்று தூதர் வரக் கனாக் கண்டேனென்று தோழி சொல்லியது.",
      "pope": "It came and brought to me, that nightly vision rare,A message from my love,- what feast shall I prepare",
      "sourceFile": "1211.md",
      "sourceSha256": "f427fc4220428fe404341a55f2c8ffb16c6fee0a2c4162dbccbd9dddf226b498"
    },
    {
      "number": 1212,
      "lines": [
        "கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு",
        "உயலுண்மை சாற்றுவேன் மன்."
      ],
      "manakkudavar": "என்னுடைய கயல்போலும் உண்கண் யான் வேண்டிக் கொள்ள உறங்குமாயின் நம்மோடு கலந்தார்க்கு நாம் உய்தலுண்மையைச் சொல்லுவேனென்று உறங்குகின்றதில்லையே. மன்- ஒழியிசையின்கண் வந்தது. கயலுண்கண்- பிறழ்ச்சி யுடைய கண்.",
      "pope": "If my dark, carp-like eye will close in sleep, as I implore,The tale of my long-suffering life I'll tell my loved one o'er",
      "sourceFile": "1212.md",
      "sourceSha256": "b2a78c4160b61dddb87def98b741c8beca0f8676d628c5ec487f5b70e95b78a5"
    },
    {
      "number": 1213,
      "lines": [
        "நனவினால் நல்கா தவரைக் கனவினால்",
        "காண்டலின் உண்டென் உயிர்."
      ],
      "manakkudavar": "நனவின்கண் நமக்கு அருளாதவரைக் கனவு தேடித் தருதலால், அக்கனவின் கண்ணே எனக்கு இன்பம் உண்டாகும். இது கண்டாற் பயனென்னை? காம நுாகர்ச்சியில்லையே என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.",
      "pope": "Him, who in waking hour no kindness shows,In dreams I see; and so my lifetime goes",
      "sourceFile": "1213.md",
      "sourceSha256": "72433ae87fc14cbbdaaa022faaaccbf884d9e0b3817046faa8cc6e8f374612dc"
    },
    {
      "number": 1214,
      "lines": [
        "கனவினான் உண்டாகும் காமம் நனவினான்",
        "நல்காரை நாடித் தரற்கு."
      ],
      "manakkudavar": "நனவின்கண் நமக்கு அருளாதவரைக் கனவு தேடித் தருதலால், அக்கனவின் கண்ணே எனக்கு இன்பம் உண்டாகும். இது கண்டாற் பயனென்னை? காம நுாகர்ச்சியில்லையே என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.",
      "pope": "Some pleasure I enjoy when him who loves not meIn waking hours, the vision searches out and makes me see",
      "sourceFile": "1214.md",
      "sourceSha256": "b557e54e028208236f43c1d8bdb9275a7080d965070a54b589a1e0ea4908921e"
    },
    {
      "number": 1215,
      "lines": [
        "நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்",
        "கண்ட பொழுதே இனிது."
      ],
      "manakkudavar": "நனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் அப்பொழுதைக்கு இன்பமாம்; அதுபோலக் கனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் கண்ட அப்பொழுதைக்கு இன்பமாம். இது கனவிற் புணர்ச்சி இன்பம் தருமோவென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.",
      "pope": "As what I then beheld in waking hour was sweet,So pleasant dreams in hour of sleep my spirit greet",
      "sourceFile": "1215.md",
      "sourceSha256": "7338d5ce9b1b14fcaf49b26e37949de08ebace90225a2fc0eeae5764ba874772"
    },
    {
      "number": 1216,
      "lines": [
        "நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்",
        "காதலர் நீங்கலர் மன்."
      ],
      "manakkudavar": "நனவென்று சொல்லப்படுகின்ற ஒருபாவி இல்லையாயின் கனவின்கண் வந்து கூடிய காதலர் என்னைப் பிரியார்.",
      "pope": "And if there were no waking hour, my loveIn dreams would never from my side remove",
      "sourceFile": "1216.md",
      "sourceSha256": "557266efda33c3ab7d3ca9d0b2840ee2f6b693b55df35a7cf7e112dcc268d6ec"
    },
    {
      "number": 1217,
      "lines": [
        "நனவினால் நல்காக் கொடியார் கனவனால்",
        "என்எம்மைப் பீழிப் பது."
      ],
      "manakkudavar": "நனவின்கண் அருளாத கொடுமையையுடையார் கனவின்கண் வந்து எம்மைத் துன்பம் உறுத்துவது எற்றுக்கு?. இது விழித்த தலைமகள் ஆற்றாமையால் தோழிக்குக் கூறியது.",
      "pope": "The cruel one, in waking hour, who all ungracious seems,Why should he thus torment my soul in nightly dreams",
      "sourceFile": "1217.md",
      "sourceSha256": "2c4bfe4b95048947b5373c00de9015f2f62e310cd40c7046a85c2f6ef766df44"
    },
    {
      "number": 1218,
      "lines": [
        "துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்",
        "நெஞ்சத்தர் ஆவர் விரைந்து."
      ],
      "manakkudavar": "காதலர் உறங்குங்காலத்துத் தோள்மேலராகி விழித்தகாலத்து விரைந்து மனத்தின்கண்ணே புகுவர். இஃது உறக்கம் நீங்கினால் யாண்டுப் போவரென்று நகைக் குறிப்பினாற் கூறிய தோழிக்குத் தலைமகள் கூறியது.",
      "pope": "And when I sleep he holds my form embraced;And when I wake to fill my heart makes haste",
      "sourceFile": "1218.md",
      "sourceSha256": "bc131e3f7cda193085891575f06dda7851964aed0d26e64009f88d101ab376b7"
    },
    {
      "number": 1219,
      "lines": [
        "நனவினால் நல்காரை நோவர் கனவினால்",
        "காதலர்க் காணா தவர்."
      ],
      "manakkudavar": "நனவின்கண் வந்து காதலரை நோவாநிற்பர், கனவின்கண் அவரைக் காணாதவர்: காண்பாராயின், நோவார். இது தலைமகள் ஆற்றாமை கண்டு தலைமகனை யியற்பழித்த தோழிக்கு அயலார்மேல் வைத்துத் தலைமகள் கூறியது.",
      "pope": "In dreams who ne'er their lover's form perceive,For those in waking hours who show no love will grieve",
      "sourceFile": "1219.md",
      "sourceSha256": "44f19bebd0e3520034a4916ce515b5b9b30290ff5d800fb84a03239870cc5df7"
    },
    {
      "number": 1220,
      "lines": [
        "நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்",
        "காணார்கொல் இவ்வூ ரவர்."
      ],
      "manakkudavar": "இவ்வூரார் நனவின்கண்ணே நம்மை நீக்கியகன்றா ரென்று அவரைக் கொடுமை கூறாநிற்பர்: அவர் அவரைக் கனவின்கண் காணார்களோ?. இஃது இவ்வேறுபாடு அலராயிற்று என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.",
      "pope": "They say, that he in waking hours has left me lone;In dreams they surely see him not,- these people of the town;",
      "sourceFile": "1220.md",
      "sourceSha256": "1ffd842b833db8dc435979d9f1d32d72fe8e92021f4047eef11a41791daaf58d"
    },
    {
      "number": 1221,
      "lines": [
        "மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்",
        "வேலைநீ வாழி பொழுது."
      ],
      "manakkudavar": "பொழுதே! நீ வெப்பமுடையை யானமையான் மாலையோ எனின் அல்லை: முன்பு கூடிப் பிரியப்பட்டார் உயிரை உண்பதாகியவொரு வேலாயிருந்தாய். இது மாலைப்பொழுது கண்டு தலைமகள் ஆற்றாமையாற் கூறியது.",
      "pope": "Thou art not evening, but a spear that doth devourThe souls of brides; farewell, thou evening hour",
      "sourceFile": "1221.md",
      "sourceSha256": "3b0470989aa8beba5b0e691ff7745445b627890bddef0013aad64f5f4c815701"
    },
    {
      "number": 1222,
      "lines": [
        "புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்",
        "வன்கண்ண தோநின் துணை."
      ],
      "manakkudavar": "மயங்கிய மாலைப்பொழுதே! நீ வாழ்வாயாக; புன்கண்மையை யுடையையாயிருந்தாய்; எம்முடைய கேளிரைப் போல வன்கண்மையை யுடைத்தோ நின்துணையும். இது தன்னுட்கையாறெய்திடு கிளவி.",
      "pope": "Thine eye is sad; Hail, doubtful hour of eventide!Of cruel eye, as is my spouse, is too thy bride",
      "sourceFile": "1222.md",
      "sourceSha256": "f9134b6281a040442e775c25f20036b65cc5639166f0e50a6e4bae15898b398b"
    },
    {
      "number": 1223,
      "lines": [
        "பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்",
        "துன்பம் வளர வரும்."
      ],
      "manakkudavar": "நெருநல் எனக்கு நடுக்கத்தை யுண்டாக்கித் தானும் புன்மை கொண்டிருந்த மாலைப்பொழுது இன்றும் எனக்கு வெறுப்புத்தோன்றி வருத்தம் மிகும்படியாக வாரா நின்றது. இது முன்னை ஞான்று மாலையாலடர்ப்புண்ட தலைமகள் பிற்றைஞான்று மாலை வருவது கண்டு கூறியது.",
      "pope": "With buds of chilly dew wan evening's shade enclose;My anguish buds space and all my sorrow grows",
      "sourceFile": "1223.md",
      "sourceSha256": "32c8bac865aa08c61adb6850779f87d3b0bd23797c6e7ac35798b7124e4d2f76"
    },
    {
      "number": 1224,
      "lines": [
        "காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து",
        "ஏதிலர் போல வரும்."
      ],
      "manakkudavar": "காதரில்லாதவிடத்து இம்மாலைப்பொழுது கொலைக் களத்துப் பகைவரைப்போல வரும். இது மாலைக்காலத்து நோய் மிகுதற்குக் காரணமென்னை யென்ற தோழிக்குத் தலைமகள் காரணங்கூறியது.",
      "pope": "When absent is my love, the evening hour descends,As when an alien host to field of battle wends",
      "sourceFile": "1224.md",
      "sourceSha256": "c293c255c5721bdc9351e5481a40fb9c2388e7578f885c5866a9199837fe116c"
    },
    {
      "number": 1225,
      "lines": [
        "காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்",
        "மாலைக்குச் செய்த பகை?"
      ],
      "manakkudavar": "காதலர் பிரிவதன் முன்னம், பிரிவரென்று அச்சத்தைத் தந்த காலைப்பொழுது பிரிந்தபின்பு வருத்தாது ஒழிதற்கு யான் செய்த நன்மை யாதோ? அவரோடு இன்பம் நுகர்தற்கு நட்பாயிருந்த மாலைப்பொழுது பிரிந்த பின்பு வருத்துவதற்கு யான் செய்த பகைமை யாதோ?. இது மாலையது பண்பின்மையை உட்கொண்டு தலைமகள் கூறியது.",
      "pope": "O morn, how have I won thy grace? thou bring'st reliefO eve, why art thou foe! thou dost renew my grief",
      "sourceFile": "1225.md",
      "sourceSha256": "6990af1e099f69ee775c1b5e4636dec9fe7ffbc83d83dc625c1631d9ba3eec8d"
    },
    {
      "number": 1226,
      "lines": [
        "மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத",
        "காலை அறிந்த திலேன்."
      ],
      "manakkudavar": "மாலைப்பொழுது நோய் செய்தலை என்னோடு கூடினவர் பிரியாத காலத்தே அறியப் பெற்றிலேன். அறிந்தேனாயின், இது நோய் செய்யுமென்று கூறியிருப்பேன். இது மாலையால் வருத்தமுற்ற தலைமகள் தலைமகனை நினைந்து கூறியது.",
      "pope": "The pangs that evening brings I never knew,Till he, my wedded spouse, from me withdrew",
      "sourceFile": "1226.md",
      "sourceSha256": "227a7133be5be1742dbba4b4f2e5177cf3c1c154616a9e126819aa58acac4ac1"
    },
    {
      "number": 1227,
      "lines": [
        "காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி",
        "மாலை மலரும்இந் நோய்."
      ],
      "manakkudavar": "இக்காம நோயாகிய பூ விடியற்காலத்தே அரும்பிப் பகற்பொழுதெல்லாம் முகிழ் முகிழ்த்து மாலைக்காலத்தே மலரா நின்றது.",
      "pope": "My grief at morn a bud, all day an opening flower,Full-blown expands in evening hour",
      "sourceFile": "1227.md",
      "sourceSha256": "a94349abc9d0349b3e88cf6badedebf5b02dcca856cbd0f43ce2d74e0a652525"
    },
    {
      "number": 1228,
      "lines": [
        "அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்",
        "குழல்போலும் கொல்லும் படை."
      ],
      "manakkudavar": "நெருப்பையொத்த இம்மாலைப் பொழுதிற்கு முன்பு தூதாகி வந்து இப்பொழுது கொல்லுதற்குப் படையுமாகி வரவல்லது ஆயன் ஊதுங்குழலோ?. இப்பொழுது வருத்துதலின் படை என்றாள்.",
      "pope": "The shepherd's pipe is like a murderous weapon, to my ear,For it proclaims the hour of ev'ning's fiery anguish near",
      "sourceFile": "1228.md",
      "sourceSha256": "67998cbdf06f50c695191165eaacd11169717fd615e5b64963fda4b7a51133d1"
    },
    {
      "number": 1229,
      "lines": [
        "பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு",
        "மாலை படர்தரும் போழ்து."
      ],
      "manakkudavar": "என்மதி நிலைகலங்க மயக்கத்தை யுடைத்தாகிய மாலைக்காலம் வரும்பொழுது இப்பதியெல்லாம் மயங்கித் துன்பமுறாநிற்கும். மதி - மானம்.",
      "pope": "If evening's shades, that darken all my soul, extend;From this afflicted town will would of grief ascend",
      "sourceFile": "1229.md",
      "sourceSha256": "cc8f23d9aa9ae8a98e2f476dabde92e7e79cdcdf45b86e8bba299ce8bc398e43"
    },
    {
      "number": 1230,
      "lines": [
        "பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை",
        "மாயும்என் மாயா உயிர்."
      ],
      "manakkudavar": "பொருள் தேடுதலையே தமக்கு இயல்பாக உடையவரை நினைத்து மயங்கின மாலைப்பொழுதிலே எனது சாகமாட்டாத உயிர் மெலியாநின்றது. இது மாலையாலடர்ப்புண்ட தலைமகள் தலைமகன் அன்பும் அறனும் இலனென்று நினைத்துத் தன்னுள்ளே சொல்லியது.",
      "pope": "This darkening eve, my darkling soul must perish utterly;Remembering him who seeks for wealth, but seeks not me",
      "sourceFile": "1230.md",
      "sourceSha256": "7c25891c5b82af20e1e5f620948d53b29367adaa8670f3b920d223cb0edd2a00"
    },
    {
      "number": 1231,
      "lines": [
        "சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி",
        "நறுமலர் நாணின கண்."
      ],
      "manakkudavar": "நமக்குத் துன்பம் ஒழிய வேண்டி நெடுநெறிக்கண் சென்றாரை நினைத்துக் கண்கள் நறுவிய பூக்களைக் கண்டு நாணா நின்றன. பலகால் அழுதலால் நிறங்கெட்டதென்றாவா றாயிற்று.",
      "pope": "Thine eyes grown dim are now ashamed the fragrant flow'rs to see,Thinking on him, who wand'ring far, leaves us in misery",
      "sourceFile": "1231.md",
      "sourceSha256": "d99b7871b10acf494e803ef60c2fbcbc6ff1d710889263f02ea19104c389f807"
    },
    {
      "number": 1232,
      "lines": [
        "நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்",
        "பசந்து பனிவாரும் கண்."
      ],
      "manakkudavar": "முன்பு நம்மை விரும்பினவர் நமக்கு அருளாமையைப் பிறர்க்குச் சொல்லுவனபோ லாகாநின்றன: பசப்புற்று நீர்சொரிகின்ற கண்கள். இது தலைமகள் ஆற்றாமை கண்டு இக்கண்ணீர் அலராகா நின்றதென்று அவள் ஆற்றுதற்பொருட்டுத் தோழி கூறியது.",
      "pope": "The eye, with sorrow wan, all wet with dew of tears,As witness of the lover's lack of love appears",
      "sourceFile": "1232.md",
      "sourceSha256": "7b8839f6aeab4606c122d5815297c6dc133b98b3d83e37b433e39cdaa7041713"
    },
    {
      "number": 1233,
      "lines": [
        "தணந்தமை சால அறிவிப்ப போலும்",
        "மணந்தநாள் வீங்கிய தோள்."
      ],
      "manakkudavar": "காதலர் கூடின நாள்களிற் பூரித்ததோள்கள். அவர் நீங்கினமையை மிகவும் பிறர்க்கு அறிவிப்பன போலாகாநின்றன. கருவியைக் கருத்தாவாகக் கூறினார். பிரிவிடை யாற்றாளாகிய தலைமகள் தனதுதோள் வாட்ட முற்றதுகண்ட தோழிக்குச் சொல்லியது.",
      "pope": "These withered arms, desertion's pangs abundantly display,That swelled with joy on that glad nuptial day",
      "sourceFile": "1233.md",
      "sourceSha256": "0c0c6e4dac97b6eda2a12131d901432484ecd5ac3a2b14ca11e61fe44f9f9003"
    },
    {
      "number": 1234,
      "lines": [
        "பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்",
        "தொல்கவின் வாடிய தோள்."
      ],
      "manakkudavar": "துணைவர் நீங்குதலானே பழைய அழகு அழிந்த தோள் பெருமை நீங்குதலானே பசுத்த வளைகளைக் கழலவிடாநின்றது. பசுத்த வளை- மரகதத்தினாற் செய்த வளை. தோள் அழகழிதலேயன்றி மெலிவதுஞ் செய்யாநின்றதென்று தோழிக்குத் தலைமகள் சொல்லியது.",
      "pope": "When lover went, then faded all their wonted charms,And armlets' golden round slips off from these poor wasted arms",
      "sourceFile": "1234.md",
      "sourceSha256": "7c7cf3383809d93ad533c584c91c34211cec3cfef2a8050eaa0482f0f735df3a"
    },
    {
      "number": 1235,
      "lines": [
        "கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு",
        "தொல்கவின் வாடிய தோள்."
      ],
      "manakkudavar": "கொடியாரது கொடுமையைச் சொல்லாநின்றன வளையோடே கூடப் பழையவாகிய அழகினை யிழந்த தோள்களும். இது தலைமகளாற்றுதற்பொருட்டுத் தலைமகனை இயற்பழித்துத் தோழி கூறியது.",
      "pope": "These wasted arms, the bracelet with their wonted beauty gone,The cruelty declare of that most cruel one",
      "sourceFile": "1235.md",
      "sourceSha256": "ddd8ee8ed8d6a1e6da3b8680d3f23256710f3ff1f3a29eb5d0f14979225718ec"
    },
    {
      "number": 1236,
      "lines": [
        "தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்",
        "கொடியர் எனக்கூறல் நொந்து."
      ],
      "manakkudavar": "வளையோடே தோள்கள் பண்டுபோல் இறுகாது நெகிழவும், நினக்குச் சொல்லாது யானே நோவேன்: நீ அவரைக் கொடியரென்று சொல்லுகின்றதற்கு நொந்து. இஃது ஆற்றாளெனக் கவன்றதோழிக்கு ஆற்றவலென்பதுபடத் தலைமகள் சொல்லியது.",
      "pope": "I grieve, 'tis pain to me to hear him cruel chid,Because the armlet from my wasted arm has slid",
      "sourceFile": "1236.md",
      "sourceSha256": "7b52d3e51ba4a7d7abf5a94c9266c679dbd94eea25e65731afbdfd4e6787afca"
    },
    {
      "number": 1237,
      "lines": [
        "பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்",
        "வாடுதோட் பூசல் உரைத்து."
      ],
      "manakkudavar": "நெஞ்சே! இக்கொடுமை செய்தவர்க்கு எனதுதோள் வாடுதலானே ஊரிலெழுந்த அலரைச் சென்று சொல்லி நீயும் நினது வாட்டம் நீங்கி அழகு பெறுவாயோ?. இது நீ அவர்பாற் போகல் வேண்டுமென்று நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது.",
      "pope": "My heart! say ought of glory wilt thou gain,If to that cruel one thou of thy wasted arms complain",
      "sourceFile": "1237.md",
      "sourceSha256": "006dcb0549df9ff1b857371c8af1137b3365d55125741caad11bb926de933340"
    },
    {
      "number": 1238,
      "lines": [
        "முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது",
        "பைந்தொடிப் பேதை நுதல்."
      ],
      "manakkudavar": "யான் பிரிவதாக நினைத்து அவள் முயங்கிய கைகளை நீக்கினேனாக; அதனை யறிந்து பசுத்ததொடியினையுடைய பேதை நுதல் பசந்தது.",
      "pope": "One day the fervent pressure of embracing arms I checked,Grew wan the forehead of the maid with golden armlet decked",
      "sourceFile": "1238.md",
      "sourceSha256": "f3617f5ac52557163603fd5aafb75ef1536a6e14f097897685d8c23f54d9e2a4"
    },
    {
      "number": 1239,
      "lines": [
        "முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற",
        "பேதை பெருமழைக் கண்."
      ],
      "manakkudavar": "யான் பிரிவதாக நினைத்து முயக்கத்தின்கண்ணே எனது உடம்பை அகற்ற, அம்முயக்கிடையே சிறு காற்று ஊடறுத்தலானே எனது நீக்கத்தைப் பொறாது பேதையுடைய பெருத்த குளிர்ந்த கண்கள் பசப்புற்றன. இது முதலாக மூன்று குறள் தலைமகன் கூறுவன.",
      "pope": "As we embraced a breath of wind found entrance there;The maid's large liquid eyes were dimmed with care",
      "sourceFile": "1239.md",
      "sourceSha256": "bf4d3d325ae7d7cb29c2bbcb6e45a2e9f9f8e903a91d516de15a865294e94629"
    },
    {
      "number": 1240,
      "lines": [
        "கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே",
        "ஒண்ணுதல் செய்தது கண்டு."
      ],
      "manakkudavar": "ஒள்ளியநுதல் பசந்ததுகண்டு கண்ணிலுண்டான பசலை கலங்கிற்று.",
      "pope": "The dimness of her eye felt sorrow now,Beholding what was done by that bright brow",
      "sourceFile": "1240.md",
      "sourceSha256": "d199d18703a545d94f8c4e3e1bf6a6570fad864c4ab358e1f319d0f18a527ebe"
    },
    {
      "number": 1241,
      "lines": [
        "நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்",
        "எவ்வநோய் தீர்க்கும் மருந்து."
      ],
      "manakkudavar": "நெஞ்சே! நீ எனக்கு உற்ற எவ்வநோயைத் தீர்க்கும் மருந்தாவது யாதொன்றாயினும் ஒன்றை விசாரித்துச் சொல்லாய். இஃது ஆற்றுதலரி தென்று கூறியது. இவையெல்லாம் தனித்தனி சிலகூற்றென்று கொள்ளப்படும்.",
      "pope": "My heart, canst thou not thinking of some med'cine tell,Not any one, to drive away this grief incurable",
      "sourceFile": "1241.md",
      "sourceSha256": "3c6d4c77b46a5dfc9f73ebbef6f3558ccf40dd12f4a95ed3f4107b1e0a55a0fc"
    },
    {
      "number": 1242,
      "lines": [
        "காதல் அவரிலர் ஆகநீ நோவது",
        "பேதைமை வாழியென் நெஞ்சு."
      ],
      "manakkudavar": "அவர் நம்மேற் காதலிலராக, என் நெஞ்சே! நீ கூட்டத்தைக் கருதி வருந்துகின்றது பேதைமை. இஃது அன்பிலார்மாட்டு வருந்தினாலும் பயனில்லை யென்றது.",
      "pope": "Since he loves not, thy smartIs folly, fare thee well my heart",
      "sourceFile": "1242.md",
      "sourceSha256": "73f50723e94d503071f1469b480154698de3aae5090dfbecbadda63ad775220f"
    },
    {
      "number": 1243,
      "lines": [
        "இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்",
        "பைதல்நோய் செய்தார்கண் இல்."
      ],
      "manakkudavar": "நெஞ்சே! நீ இறந்துபடாது இருந்து அவர்வரவை நினைந்து வருந்துகின்றது யாதிற்கு? வருத்தமுற்று நினைத்தல் நமக்குச் சிறுமைசெய்யும் நோயைத் தந்தார்மாட்டு இல்லை யாயின். இது வாராது வருந்துகின்றாமென்று கூறியது.",
      "pope": "What comes of sitting here in pining thought, O heart? He knowsNo pitying thought, the cause of all these wasting woes",
      "sourceFile": "1243.md",
      "sourceSha256": "5590360fa70029093ad526fd3e03c6b9f2ca6fa89ecca09b853f53402044e8da"
    },
    {
      "number": 1244,
      "lines": [
        "கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்",
        "தின்னும் அவர்க்காணல் உற்று."
      ],
      "manakkudavar": "நெஞ்சே! நீ அவர்மாட்டுச் செல்லுவையாயின் இக்கண்களும் அவரைக்காணும்படி கொண்டு செல்வாயாக: அவரைக் காணலுற்று இவை என்னைத் தின்பனபோல நலியாநின்றன. கொள - பார்க்க.",
      "pope": "O rid me of these eyes, my heart; for they,Longing to see him, wear my life away",
      "sourceFile": "1244.md",
      "sourceSha256": "52d6d2b05a995c3992434b7518e872196df07215b6e42610382a959e8669f5b0"
    },
    {
      "number": 1245,
      "lines": [
        "செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்",
        "உற்றால் உறாஅ தவர்."
      ],
      "manakkudavar": "நெஞ்சே! யாம் உற்றபின்பு உறாது போனவர் செறுத்தாரென்று அவரைக் கைவிடுதல் இயல்போ?. உறுதல்- விரைந்துறுதல். தலைமகள் தலைமகன் கொடுமையை உட்கொண்ட நெஞ்சிற்குச் சொல்லியது.",
      "pope": "O heart, as a foe, can I abandon utterlyHim who, though I long for him, longs not for me",
      "sourceFile": "1245.md",
      "sourceSha256": "72dd76ef600f8e59cfacc691fd242d2b7a814d0db078f1363b971e8a0e8bb7fc"
    },
    {
      "number": 1246,
      "lines": [
        "கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்",
        "பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு."
      ],
      "manakkudavar": "என்நெஞ்சே! நீ காதலர் கொடுமையை அவர்க்கு உட்பட்டு அறிந்து வைத்தும் அவரைக்கண்டால் புலந்து கலக்கமாட்டாது முன்பே கலப்பை: இப்பொழுது பொய்க்காய்வு காயாநின்றாய்.",
      "pope": "My heart, false is the fire that burns; thou canst not wrath maintain,If thou thy love behold, embracing, soothing all thy pain",
      "sourceFile": "1246.md",
      "sourceSha256": "6592c1d37c28e7fe76f365e30a39bcb3d57cf33936faa7e50991797ce4849ada"
    },
    {
      "number": 1247,
      "lines": [
        "காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே",
        "யானோ பொறேன்இவ் விரண்டு."
      ],
      "manakkudavar": "எனக்கு நல்லநெஞ்சே! ஒன்றிற் காமத்தை விடுதல் வேண்டும்: ஒன்றில் நாணத்தை விடுதல் வேண்டும்: யான் இவ்விரண்டினையுங்கூடப் பொறுத்தலரிது. இது பிரிவிடையாற்றாளாய்த் தலைமகனிருந்துழிச் செல்லக் கருதிய தலைமகள் நாணம் தடுத்தமை கண்டு கூறியது.",
      "pope": "Or bid thy love, or bid thy shame depart;For me, I cannot bear them both, my worthy heart",
      "sourceFile": "1247.md",
      "sourceSha256": "e98be6309b6e46455c36985c680cc6ac2a9a6c13e39c6749033431de0ebfa1f3"
    },
    {
      "number": 1248,
      "lines": [
        "பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்",
        "பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு."
      ],
      "manakkudavar": "என்னெஞ்சே! நீ வருத்தமுற்று அவர் அருளுகின்றிலரென்று இரங்கி நம்மைவிட்டுப்போனவர் பின்னே போகாநின்றாய், பேதையா யிருந்தாய். இது தலைமகள் தலைமகனிருந்த தேயத்தை நினைத்துக்கவன்ற நெஞ்சிற்குச் சொல்லியது.",
      "pope": "Thou art befooled, my heart, thou followest him who flees from thee;And still thou yearning criest: 'He will nor pity show nor love to me.'",
      "sourceFile": "1248.md",
      "sourceSha256": "a7a310c4331d2f56e48aa4ee695f51244788858adfe185ea78872559421c57d2"
    },
    {
      "number": 1249,
      "lines": [
        "உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ",
        "யாருழைச் சேறியென் நெஞ்சு."
      ],
      "manakkudavar": "என்னெஞ்சே! நின்னாற் காதலிக்கப்பட்டவர் நினது உள்ளத்திலே யிருப்பாராக, நீ நினைத்து யாவர்மாட்டுச் செல்கின்றாய். இது தலைமகள் வாராதேபோனால் இங்கே காணலாமென்று கூறியது.",
      "pope": "My heart! my lover lives within my mind;Roaming, whom dost thou think to find",
      "sourceFile": "1249.md",
      "sourceSha256": "de8f3ea2ae035c422dfc370bd490863762506d05b374b69d4bca1fd56cd7b252"
    },
    {
      "number": 1250,
      "lines": [
        "துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா",
        "இன்னும் இழத்தும் கவின்."
      ],
      "manakkudavar": "மனமே! நம்மோடு செறியாராய்த் துறந்து போனவரை நெஞ்சகத்தே யுடையோமாயின் முன்னும் இழந்த கவினொழிய இன்னமுமுள்ள கவினை இழப்போம்; ஆதலான் மறத்தலே கருமம். ஈண்டு நெஞ்சென்றது மனத்துடைய தானத்தை. இது நினைக்கின்றதனால் பயனில்லை யென்று கூறியது.",
      "pope": "If I should keep in mind the man who utterly renounces me,My soul must suffer further loss of dignity",
      "sourceFile": "1250.md",
      "sourceSha256": "a779caf9cfc7eeb178172d2899f90e5595dff276e188f08587655224e21113d1"
    },
    {
      "number": 1251,
      "lines": [
        "காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்",
        "நாணுத்தாழ் வீழ்த்த கதவு."
      ],
      "manakkudavar": "காமமாகிய மழு உடையாநின்றது: நாணமாகிய தாழில் அடைக்கப்பட்ட அறிவாகிய கதவினை. இஃது அறிவும் நாணமும் உடையார் இவ்வாறு செய்யாரென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.",
      "pope": "Of womanly reserve love's axe breaks through the door,Barred by the bolt of shame before",
      "sourceFile": "1251.md",
      "sourceSha256": "386c10c0eea83a8521694efc155a31a9e11ca8c292edd78339a9ee7ab019b82d"
    },
    {
      "number": 1252,
      "lines": [
        "காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை",
        "யாமத்தும் ஆளும் தொழில்."
      ],
      "manakkudavar": "காமமென்றொன்று கண்ணோட்டமுடைத்தன்று: என்னெஞ்சத்தை நடுநாள் யாமத்தினும் தொழில்கொள்ளா நின்றது. தொழில் கொள்ளுதலாவது அப்பொழுது அவர்மாட்டுப் போக விடுத்தல். இது நெஞ்சின் மிக்கது வாய்சோர்ந்து ஆற்றாமையால் தலைமகள் தோழிக்குக் கூறியது.",
      "pope": "What men call love is the one thing of merciless power;It gives my soul no rest, e'en in the midnight hour",
      "sourceFile": "1252.md",
      "sourceSha256": "bf6c5fa723070099e14b343c926fe39700ddac536749ba992b33cb4a6b43f3aa"
    },
    {
      "number": 1253,
      "lines": [
        "மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்",
        "தும்மல்போல் தோன்றி விடும்."
      ],
      "manakkudavar": "காமத்தை யான் அடக்கக்கருதுவேன்: அவ்வாறு செய்யவும். அது தும்மல் தோன்றுமாறுபோல என் குறிப்பின்றியும் தோன்றாநின்றது. இது தலைமகள் நிறையழிந்து கூறிய சொற்கேட்டு இவ்வாறு செய்யாது இதனை மறைத்தல் வேண்டுமென்ற தோழிக்கு அவள் கூறியது.",
      "pope": "I would my love conceal, but like a sneezeIt shows itself, and gives no warning sign",
      "sourceFile": "1253.md",
      "sourceSha256": "dd2796c4e3ac83b1b6c56b0bc315b0f6c1a5855ee9bda58ab61726a3c55e4093"
    },
    {
      "number": 1254,
      "lines": [
        "நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்",
        "மறையிறந்து மன்று படும்."
      ],
      "manakkudavar": "யானே நிறையுடையே னென்றிருப்பன்; இப்படி இருக்கவும், என் காமமானது மறைத்தலைக்கடந்து மன்றின்கண் வெளிப்படாநின்றது. இது தலைமகள் ஆற்றாமையாற் கூறிய சொற்கேட்டு நிறையுடையார் இவ்வாறு செய்யாரென்ற தோழிக்கு அவள் கூறியது.",
      "pope": "In womanly reserve I deemed myself beyond assail;But love will come abroad, and casts away the veil",
      "sourceFile": "1254.md",
      "sourceSha256": "f401525a45e8b55a69ad057f7e70d687896018df78da0ba0c110a8c1173e6e23"
    },
    {
      "number": 1255,
      "lines": [
        "செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்",
        "உற்றார் அறிவதொன்று அன்று."
      ],
      "manakkudavar": "தம்மை யிகழ்ந்தார்பின் செல்லாத பெரிய தகைமை காம நோயுற்றால் அறிவதொன்று அன்று. இது தம்மை யிகழ்ந்து போனவர்பின்சென்று இரங்குதல் பெரியார்க்குத் தகாது என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.",
      "pope": "The dignity that seeks not him who acts as foe,Is the one thing that loving heart can never know",
      "sourceFile": "1255.md",
      "sourceSha256": "f5a47ed719296d965dfdb303079be74a697b614b986d1e2ec96e8c66865c6284"
    },
    {
      "number": 1256,
      "lines": [
        "செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ",
        "எற்றென்னை உற்ற துயர்."
      ],
      "manakkudavar": "செறுத்தார்பின்னே யான் சேறலை வேண்டுதலால் என்னை யடைந்த துயர் எத்தன்மைத்து; நன்றாக இருக்கின்றது. இது தனித்திருந்து துயருறுதல் காமத்திற்கு இயற்கையென்று கூறிய தலைமகளை நோக்கி இது நின்போல்வார்க்குத் தகாதென்ற தோழிக்கு அவள் சொல்லியது.",
      "pope": "My grief how full of grace, I pray you see!It seeks to follow him that hateth me",
      "sourceFile": "1256.md",
      "sourceSha256": "85d854ad7afd3de43e9e88bf9edc4963669dadf81a9179b3fac2d9f7ae60fadd"
    },
    {
      "number": 1257,
      "lines": [
        "நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்",
        "பேணியார் பெட்ப செயின்."
      ],
      "manakkudavar": "நாணென்பதொன்று அறியார் மகளிர், காமம் காரணமாக விரும்பப்பட்டவர் தாம் விரும்புமாறு செய்வாராயின். அவர் விரும்புமாறு செய்வாராயின் நாணமுண்டாகா தென்றவாறு.",
      "pope": "No sense of shame my gladdened mind shall prove,When he returns my longing heart to bless with love",
      "sourceFile": "1257.md",
      "sourceSha256": "989a1bfb5f458404948c5cd2afca5a7d4b3888721b3ced92c8041cfcaee7a97b"
    },
    {
      "number": 1258,
      "lines": [
        "பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்",
        "பெண்மை உடைக்கும் படை."
      ],
      "manakkudavar": "பலபொய்களையும் பேசவல்ல கள்வனது தாழ்ந்த மொழியல்லவோ நமது பெண்மையை அழிக்குங் கருவி?. இது பெண்மையல்ல என்ற தோழிக்கு அவன் என்னோடு கலந்த நாளில் சொன்ன சொற்கள் காண் நம் பெண்மையைக் கெடுக்கின்றது: அல்லது கெடாதென்று தலைமகள் கூறியது.",
      "pope": "The words of that deceiver, versed in every wily art,Are instruments that break through every guard of woman's heart",
      "sourceFile": "1258.md",
      "sourceSha256": "7f97b4a862e5c3c2a04b9835dc91c0989baec4b62e8f66c58e168edd68c70503"
    },
    {
      "number": 1259,
      "lines": [
        "புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்",
        "கலத்தல் உறுவது கண்டு."
      ],
      "manakkudavar": "புலப்பலெனச் சென்ற யான் முயங்கினேன்: நெஞ்சு முற்பட்டுப் பொருந்துதல் உறுவதனைக் கண்டு. இஃது கூடுதல் தீமையென்ற தோழிக்கு முன்னொருகால் அவனைப் பிரிந்து கூடிய என்மனம் செய்தது இதுவென்று தலைமகள் கூறியது.",
      "pope": "'I 'll shun his greeting'; saying thus with pride away I went:I held him in my arms, for straight I felt my heart relent",
      "sourceFile": "1259.md",
      "sourceSha256": "7a8598ff667eaedf8be0fc31ad1bac4e08e8b0df6df3cfdef4f1b65b98749ce2"
    },
    {
      "number": 1260,
      "lines": [
        "நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ",
        "புணர்ந்தூடி நிற்பேம் எனல்."
      ],
      "manakkudavar": "தீயின்கண்ணே நிணத்தையிட்டாற்போல, உருகும் நெஞ்சினை யுடையார்க்குக் காதலரை யெதிர்ப்பட்டு வந்து ஊடி நிற்போமென்று நினைத்தல் உளதாகுமோ?.",
      "pope": "'We 'll stand aloof and then embrace': is this for them to say,Whose hearts are as the fat that in the blaze dissolves away",
      "sourceFile": "1260.md",
      "sourceSha256": "ce2af24ca164c3f831f0d90b8ca16b94d31d4bb30c4b429e60a7259fb8d16a68"
    },
    {
      "number": 1261,
      "lines": [
        "வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற",
        "நாளொற்றித் தேய்ந்த விரல்."
      ],
      "manakkudavar": "கண்களும் அவர் வரவைப்பார்த்து நோதலால் ஒளியிழந்து புல்லென்றன: விரல்களும் அவர்போன நாள்களை யெண்ணி முடக்குதலாய்த் தேய்ந்தன. இது வரவு காணாமையால் தலைமகள் கூறியது.",
      "pope": "My eyes have lost their brightness, sight is dimmed; my fingers worn,With nothing on the wall the days since I was left forlorn",
      "sourceFile": "1261.md",
      "sourceSha256": "cd9b761dfe1c0acc6434dbb28e8e6436363ad693a18ff00e513d1f22198c8450"
    },
    {
      "number": 1262,
      "lines": [
        "இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்",
        "கலங்கழியும் காரிகை நீத்து."
      ],
      "manakkudavar": "இலங்கிய இழையையுடையவளே! யான் இன்று அவரை மறப்பேனாயின் பண்டை மெல்லிய என்னுடைய தோள்கள் தம்மழகினை நீக்கி வளை முதலான அணிகலங்களையும் கழலவிடும். இலங்கிழாய் என்றவதனால் வருத்தமில்லாதவளே என்று விளித்தாளென்பது கொள்ளப்படும்.",
      "pope": "O thou with gleaming jewels decked, could I forget for this one day,Henceforth these bracelets from my arms will slip, my beauty worn away",
      "sourceFile": "1262.md",
      "sourceSha256": "c4083aa481c798ed57d86878d5e701311c45a5b7696572e68cbff7d3b2b9fb6f"
    },
    {
      "number": 1263,
      "lines": [
        "உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்",
        "வரல்நசைஇ இன்னும் உளேன்."
      ],
      "manakkudavar": "இன்பத்தை நச்சாது வலிமையையே நச்சிப் பேசுகின்ற மனமே துணையாகச் சென்றவர் வருவாரென்கின்ற ஆசைப்பாட்டினால் இன்னும் உளேனானேன். இஃது அவர் வாராரென்று கூறியது.",
      "pope": "On victory intent, His mind sole company he went;And I yet life sustain And long to see his face again",
      "sourceFile": "1263.md",
      "sourceSha256": "9ecfad876bf82027c9a0f78a41b10ebc2d6162f965d595cf2c4a16d6029e4aec"
    },
    {
      "number": 1264,
      "lines": [
        "கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்",
        "கோடுகொ டேறுமென் நெஞ்சு."
      ],
      "manakkudavar": "கூடுதற்கு அரிய காமத்தைக் கூடப் பெற்றுப்பிரிந்தவர் வருவாராக நினைந்தே என்னெஞ்சம் மரத்தின்மேலேறிப் பாராநின்றது. உயர்ந்த மரத்தின்மேல் ஏறினால் சேய்த்தாக வருவாரைக் காணலாமென்று நினைத்து அதனை ஏறிற்றாகக் கூறினாள்.",
      "pope": "'He comes again, who left my side, and I shall taste love's joy,'-My heart with rapture swells, when thoughts like these my mind employ",
      "sourceFile": "1264.md",
      "sourceSha256": "314d55531b1a1e89b1c5fc7cb8a6b8ec42d60b0a6afc7e717eaa59d0fb4480c8"
    },
    {
      "number": 1265,
      "lines": [
        "காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்",
        "நீங்கும்என் மென்தோள் பசப்பு."
      ],
      "manakkudavar": "என்கண்கள் கொண்கனை நிறையக் காண்பனவாக; அவனைக் கண்டபின்பு எனது மெல்லிய தோளிலுண்டான பசலை நீங்கும். இது காண்டல் வேட்கையால் கூறியது.",
      "pope": "O let me see my spouse again and sate these longing eyes!That instant from my wasted frame all pallor flies",
      "sourceFile": "1265.md",
      "sourceSha256": "ebbab0a1fd2e766365614580843ac27dec5e17420d8b8bbaba222743689bd5eb"
    },
    {
      "number": 1266,
      "lines": [
        "வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்",
        "பைதல்நோய் எல்லாம் கெட."
      ],
      "manakkudavar": "கொண்கன் ஒருநாள் வருவானாக வேண்டும்: வந்தானாகில் என் பசலைநோயெல்லாங் கெடப் பருகுவேன். இது வரவு வேட்கையாற் கூறியது.",
      "pope": "O let my spouse but come again to me one day!I'll drink that nectar: wasting grief shall flee away",
      "sourceFile": "1266.md",
      "sourceSha256": "f27fa045c70ea9913a8b3bdd82b4ec438a83eae2e5a04a8a575c10aee0d257f2"
    },
    {
      "number": 1267,
      "lines": [
        "புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்",
        "கண்அன்ன கேளிர் விரன்."
      ],
      "manakkudavar": "கண்போற் சிறந்தகேளிர் வருவாராயின், அவர் வரவு நீட்டித்தமை நோக்கி யான் புலக்கக் கடவேனோ: அன்றி என்னாற்றாமை நோக்கிப் புல்லக்கடவேனோ: அவ்விரண்டும் வேண்டுதலான் அவ்விரு செயல்களையும் விரவக் கடவேனோ: யாதுசெய்யக் கடவேன்?.",
      "pope": "Shall I draw back, or yield myself, or shall both mingled be,When he returns, my spouse, dear as these eyes to me",
      "sourceFile": "1267.md",
      "sourceSha256": "4b36427149089f0944874fd0782a87aa4e3b674ce548e5d938f4a8de4e4c25fe"
    },
    {
      "number": 1268,
      "lines": [
        "வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து",
        "மாலை அயர்கம் விருந்து."
      ],
      "manakkudavar": "நம் வேந்தன் போரின்கண்ணே பொருந்தி வெல்வானாக: யாமும் மனையிலே பொருந்தி இம்மாலைப்பொழுதிலே நம்காதலர்க்கு விருந்து செய்வேமாக. வருதற்கு இடையீடு அவன் வினை முடியாமையென்று நினைத்து அவனை வெல்க என்றாள். மனை - அட்டில்.",
      "pope": "O would my king would fight, o'ercome, devide the spoil;At home, to-night, the banquet spread should crown the toil",
      "sourceFile": "1268.md",
      "sourceSha256": "744b334a612ff703896dc35a20b3d0ba466705e4c14533e3b4709bd309bf7c36"
    },
    {
      "number": 1269,
      "lines": [
        "ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்",
        "வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு."
      ],
      "manakkudavar": "நெடுநெறிக்கட்சென்றார் வருநாளைக்குறித்து இரங்குமவர்களுக்கு ஒருநாளைப்பொழுதுதானே ஏழுநாளைப் போலச் செல்கின்றது.",
      "pope": "One day will seem like seven to those who watch and yearnFor that glad day when wanderers from afar return",
      "sourceFile": "1269.md",
      "sourceSha256": "612a49130f3bd6e3ec10cf505731d33ad3ef84964461b4afbfaf44827c35b093"
    },
    {
      "number": 1270,
      "lines": [
        "பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்",
        "உள்ளம் உடைந்துக்கக் கால்."
      ],
      "manakkudavar": "எனது உள்ளம் உடைந்து போயின் பின்பு அவரைப்பெறுவேமென்று இருந்ததனாற் பயன் என்னுண்டாம்? முன்பே பெற்றேமானேம், அதனால் பயன் என்னுண்டாம்? இப்பொழுது உற்றேமாயின் அதனால் பயன் என்னுண்டாம்?. இது வருவாரென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.",
      "pope": "What's my return, the meeting hour, the wished-for greeting worth,If she heart-broken lie, with all her life poured forth",
      "sourceFile": "1270.md",
      "sourceSha256": "1c95b82ced9f668b26da9f1dca8d10cb69e8cd5d2ab775db60fca8b62b9a5d8d"
    },
    {
      "number": 1271,
      "lines": [
        "கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்",
        "உரைக்கல் உறுவதொன் றுண்டு."
      ],
      "manakkudavar": "நீ சொல்லாது மறைத்தாயாயினும் அதற்குடம்படாதே நின்னைக் கைகடந்து நின்னுண்கண்களே எனக்குச் சொல்லலுறுவதொரு காரியமுண்டாயிராநின்றது: இனியதனை நீயே தெளியச் சொல்வாயாக.",
      "pope": "Thou hid'st it, yet thine eye, disdaining all restraint,Something, I know not, what, would utter of complaint",
      "sourceFile": "1271.md",
      "sourceSha256": "245bc77e0294d68eb22f553ba125fe141ed62edf4fc19121fa3ebce343a0b025"
    },
    {
      "number": 1272,
      "lines": [
        "கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்",
        "பெண்நிறைந்த நீர்மை பெரிது."
      ],
      "manakkudavar": "காண்பார் கண்ணிறைந்த அழகினையும் காம்பையொத்த தோளினையும் உடைய பேதைக்குப் பெண்மை நிறைந்த நீர்மை பெரிது.",
      "pope": "The simple one whose beauty fills mine eye, whose shoulders curveLike bambu stem, hath all a woman's modest sweet reserve",
      "sourceFile": "1272.md",
      "sourceSha256": "250d63f7b5b0e8c873c3e2117cfde52cd7918ebfd29f9d76cbf7114ced61365e"
    },
    {
      "number": 1273,
      "lines": [
        "மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை",
        "அணியில் திகழ்வதொன்று உண்டு."
      ],
      "manakkudavar": "கோவைப்பட்ட நீலமணியின்கண்ணே தோற்றுகின்ற நூல்போல, இம்மடந்தை அழகினுள்ளே இவள் மறைக்கவும் தோற்றுகின்றதொரு துன்பம் உணடு. அழகு - புணர்ச்சியால் வந்த அழகுபோலுமென்னும் குறிப்பு.",
      "pope": "As through the crystal beads is seen the thread on which they 're strungSo in her beauty gleams some thought cannot find a tongue",
      "sourceFile": "1273.md",
      "sourceSha256": "775e0e69eb8045ace300eb6df926fff04ae59f81fad57dee0e7425f6b9023dd8"
    },
    {
      "number": 1274,
      "lines": [
        "முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை",
        "நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு."
      ],
      "manakkudavar": "மொட்டின் முகிழ்ப்பின்கண் உளதாகிய நாற்றம்போலப் பேதையுடைய நகைமுகிழ்ப்பின்கண்ணே உள்ளதோ ரின்பம் உண்டு. இஃது இரந்து பின்னின்ற தலைமகனைத் தோழி நகைசெய்து சேட்படுத்திய போது இவள் குறிப்பு நமக்கு இன்பம் பயக்குமென்று அவன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.",
      "pope": "As fragrance in the opening bud, some secret liesConcealed in budding smile of this dear damsel's eyes",
      "sourceFile": "1274.md",
      "sourceSha256": "46e7989186352f984420cc6803623ae4559902decedd50b3b04023abd918cdba"
    },
    {
      "number": 1275,
      "lines": [
        "செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்",
        "தீர்க்கும் மருந்தொன்று உடைத்து."
      ],
      "manakkudavar": "செறிந்தவளையினை யுடையாள் செய்து அகன்ற களவு நீ உற்றதொரு துன்பத்தைத் தீர்ப்பதொரு மருந்தாதலை உடைத்து. தோழி மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தவழி, கேளாரைப்போலத் தலைமகள் அகன்ற செவ்வியுள் எதிர்ப்பட்ட தலைமகற்கு நின்குறை முடியும்; நீ இவ்விடைச்செல் லென்று தோழி கூறியது.",
      "pope": "The secret wiles of her with thronging armlets decked,Are medicines by which my raising grief is checked",
      "sourceFile": "1275.md",
      "sourceSha256": "4d71413ada8d69adc35128fcae43e05839f6c46bc5b8c283a3b89a502a24e2f6"
    },
    {
      "number": 1276,
      "lines": [
        "பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி",
        "அன்பின்மை சூழ்வ துடைத்து."
      ],
      "manakkudavar": "ஊடினகாலத்து அதன் அளவின்றி மிகவுமாற்றிப் புணருங்காலத்து முன்புபோலாகாது மேன்மேலும் விரும்புமாறு புணர்தல், யான் அரிதாக ஆற்றியிருந்து தம்மன்பின்மையை யெண்ணுவதொரு பிரிவுடைத்து. இது பிரியலுற்ற தலைமகனது குறிப்பறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.",
      "pope": "While lovingly embracing me, his heart is only grieved:It makes me think that I again shall live of love bereaved",
      "sourceFile": "1276.md",
      "sourceSha256": "cd6c35940ae65dd529c4576a6a83bbe9f73613bd90ba20ecc9b063d0ffb7f102"
    },
    {
      "number": 1277,
      "lines": [
        "தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்",
        "முன்னம் உணர்ந்த வளை."
      ],
      "manakkudavar": "குளிர்ந்த துறையையுடையவன் நம்மை நீங்கினமையை நாமறிவதற்கும் முன்னே வளைகள் அறிந்தன.",
      "pope": "My severance from the lord of this cool shore,My very armlets told me long before",
      "sourceFile": "1277.md",
      "sourceSha256": "06a821ab743ef041958a57d2e9b5cd97adaaa9233265f53ef8af34ed0b9d0763"
    },
    {
      "number": 1278,
      "lines": [
        "நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்",
        "எழுநாளேம் மேனி பசந்து."
      ],
      "manakkudavar": "எமது காதலர் பிரிந்து நெருநற்றுச் சென்றார், யாமும் மேனி பசந்து ஏழுநாளுடையமாயினேம். இஃது அவர் பிரிவதன் முன்னும் பிரிவரென் றேங்கி இன்புற்றிலமென்று தலைமகள் கூறியது.",
      "pope": "My loved one left me, was it yesterday?Days seven my pallid body wastes away",
      "sourceFile": "1278.md",
      "sourceSha256": "62682f6dcbc83b4540b38afccd99e7f7e65dc0654d2e77f3c3f9d122b5beca8d"
    },
    {
      "number": 1279,
      "lines": [
        "தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி",
        "அஃதாண் டவள்செய் தது."
      ],
      "manakkudavar": "தொடியையும் நோக்கி, மெல்லிய தோளினையும் நோக்கி, அடியையும் நோக்கி, அவள் அவ்விடத்துச் சென்ற குறிப்பு அதுவாயிருந்தது. அது - உடன்போக்கு.",
      "pope": "She viewed her tender arms, she viewed the armlets from them slid;She viewed her feet: all this the lady did",
      "sourceFile": "1279.md",
      "sourceSha256": "59d5805e90bb057a927e084241fa56a39b02eca1bb855bedec0561f6b7c61a5a"
    },
    {
      "number": 1280,
      "lines": [
        "பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்",
        "காமநோய் சொல்லி இரவு."
      ],
      "manakkudavar": "வாயாற் சொல்லாது கண்ணினாலே காமநோயைச் சொல்லி வேண்டிக்கோடல், தமது இயல்பாகிய பெண்மையோடே பின்னையும் ஒரு பெண்மையுடைத்தென்று சொல்லுவர் அறிவோர். இது பிரிவுணர்த்திய தலைமகள் குறிப்புக்கண்டு தலைமகற்குத் தோழி சொல்லியது.",
      "pope": "To show by eye the pain of love, and for relief to pray,Is womanhood's most womanly device, men say",
      "sourceFile": "1280.md",
      "sourceSha256": "363e29caaeff42ce04b671666f5f395c2ac758354757c58114e54cf97868029c"
    },
    {
      "number": 1281,
      "lines": [
        "உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்",
        "கள்ளுக்கில் காமத்திற் குண்டு."
      ],
      "manakkudavar": "காதலரை நினைத்த அளவிலே களிப்புப் பெறுதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி பெறுதலும் களித்தலையும் மகிழ்தலையும் தனக்கு இயல்பாகவுடைய கள்ளிற்கு இல்லை: காமத்திற்கு உண்டு. கள்ளிற்கு உண்ணக்களித்தலும் மகிழ்தலுமுண்டு: காமத்திற்கு உள்ளக் களித்தலும் காண மகிழ்தலுமுண்டு என்றவாறு.",
      "pope": "Gladness at the thought, rejoicing at the sight,Not palm-tree wine, but love, yields such delight",
      "sourceFile": "1281.md",
      "sourceSha256": "92d7a6f4c8101f5f44ad64e47959a7606777a4c79893ed203c85ec68c64e15f3"
    },
    {
      "number": 1282,
      "lines": [
        "தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்",
        "காமம் நிறைய வரின்."
      ],
      "manakkudavar": "நெஞ்சே! நீ தினையளவும் ஊடாதொழிதல் வேண்டும்: பனை யளவினும் மிகக் காமநுகர்ச்சி வருமாயின். இஃது ஊடநினைத்த நெஞ்சிற்குத் தலைமகள் கூறியது.",
      "pope": "When as palmyra tall, fulness of perfect love we gain,Distrust can find no place small as the millet grain",
      "sourceFile": "1282.md",
      "sourceSha256": "18a066c8d2cd982943306dab50bd7306810d0e39ff56046d82be1a63570fc7c6"
    },
    {
      "number": 1283,
      "lines": [
        "பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்",
        "காணா தமையல கண்."
      ],
      "manakkudavar": "தம்மை விரும்பாது தன்மனம் விரும்புவனவே செய்தானாயினும் கொண்கனைக் காணாது என்கண்கள் அமையமாட்டா. இவையெல்லாம் ஊடற்பகுதியானமையும் முன்னுறுபுணர்ச்சி யின்மையும் ஆமாறு கண்டுகொள்க.",
      "pope": "Although his will his only law, he lightly value me,My heart knows no repose unless my lord I see",
      "sourceFile": "1283.md",
      "sourceSha256": "1ff4d07059e7ad742989993dcfedd2186905d509587ce20bc29e1dab4731c4f5"
    },
    {
      "number": 1284,
      "lines": [
        "ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து",
        "கூடற்கண் சென்றது என் னெஞ்சு."
      ],
      "manakkudavar": "தோழி! யான் ஊடலைக் கருதிச்சென்றேன். அவனைக் கண்டபொழுதே அதனை மறந்து கூடலைக்கருதிற்று என்னெஞ்சு. இது நீ அவனோடு புலவாது கூடியதென்னை யென்று நகையாடிய தோழிக்குத் தலைமகள் கூறியது.",
      "pope": "My friend, I went prepared to show a cool disdain;My heart, forgetting all, could not its love restrain",
      "sourceFile": "1284.md",
      "sourceSha256": "1a09673ce13e18e1d667910ddcd27ffa9de7ae037f676b82d5e329530716dc6c"
    },
    {
      "number": 1285,
      "lines": [
        "எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்",
        "பழிகாணேன் கண்ட இடத்து."
      ],
      "manakkudavar": "கண்ணெழுதுங் காலத்துத் தன் இமையகத்துப் புகுந்த கோலைக் காணாத கண்ணைப் போலக் கொண்கனது குற்றத்தினையும் அவனைக்கண்ட விடத்துக் கண்டிலேன். இது மேற்கூறிய சொற்கேட்டு நீ அவனைக்கூறிய குற்றமெல்லாம் யாண்டுப்போயின வென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.",
      "pope": "The eye sees not the rod that paints it; nor can ISee any fault, when I behold my husband nigh",
      "sourceFile": "1285.md",
      "sourceSha256": "77f835469cab0b047d1caf038dde10e5bbd0d4834242db3f91efd7eb84d49af3"
    },
    {
      "number": 1286,
      "lines": [
        "காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்",
        "காணேன் தவறல் லவை."
      ],
      "manakkudavar": "அவனைக்கண்டபொழுது அவன் குற்றமாயினயாவும் காணேன்: அவனைக்காணாத காலத்து அவன் குற்றமல்லாதன யாவும் காணேன்.",
      "pope": "When him I see, to all his faults I 'm blind;But when I see him not, nothing but faults I find",
      "sourceFile": "1286.md",
      "sourceSha256": "c09678039ecea2cb7715c2f104be18003369a5d3b6c6cb495025a9be73b51b2f"
    },
    {
      "number": 1287,
      "lines": [
        "உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்",
        "பொய்த்தல் அறிந்தென் புலந்து."
      ],
      "manakkudavar": "தம்மை ஈர்ப்ப அதனையறிந்து வைத்தும், புனலுள் பாய்பவரைப் போல நெஞ்சு பொய்ப்படுதல் அறிந்து வைத்தும் புலக்கின்றது ஏதுக்கு?. இது புலவிக்குறிப்பு நீங்குவாள் தன்னுள்ளே சொல்லியது.",
      "pope": "As those of rescue sure, who plunge into the stream,So did I anger feign, though it must falsehood seem",
      "sourceFile": "1287.md",
      "sourceSha256": "7c8c3259fa665f4b34d615b2a0a86e7d575bf46c8bc755b60155b51fb3aaaf45"
    },
    {
      "number": 1288,
      "lines": [
        "இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்",
        "கள்ளற்றே கள்வநின் மார்பு."
      ],
      "manakkudavar": "பிறர் இகழத்தக்க இன்னாமையை நீ எமக்குச் செய்யவும் மதுவுண்டு களித்தார்க்கு அதனாலுள்ள குற்றத்தினைக்கண்டு வைத்தும் அதனை யுண்ணல்வேட்கை நிகழுமாறுபோலப் புணர்வு வேட்கையைத் தாராநின்றது, வஞ்சகா! நின் மார்பு. இது புலவிக்குறிப்பு நீங்கின தலைமகள் தலைமகற்குச் சொல்லியது.",
      "pope": "Though shameful ill it works, dear is the palm-tree wineTo drunkards; traitor, so to me that breast of thine",
      "sourceFile": "1288.md",
      "sourceSha256": "7fc4b86283a7eaa79b3551a6187787c39b09c178e55d4a549e0b967b33b1d024"
    },
    {
      "number": 1289,
      "lines": [
        "மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்",
        "செவ்வி தலைப்படு வார்."
      ],
      "manakkudavar": "எல்லாவற்றினும் மெல்லிதாகிய பூவினும் மெல்லிதாயிருக்கும் காமம்: அதனது செவ்வியைப் பெறுவார் உலகத்துச் சிலர். இது தலைமகன் புணர்ச்சிக் குறிப்புக்கண்டு பின் ஊடிக்கொள்ளலாம்: இப்பொழுது ஊடுவையாயின் இக்காமஞ் செவ்வி தப்புமென்று புணர்ச்சி வேட்கையால் தலைமகள் நெஞ்சொடு கூறியது.",
      "pope": "Love is tender as an opening flower In season dueTo gain its perfect bliss is rapture known to few",
      "sourceFile": "1289.md",
      "sourceSha256": "46654d49dcd903dc456c6eedce56550b3d73f3defcb85fa327e3d9a36ef370ae"
    },
    {
      "number": 1290,
      "lines": [
        "கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்",
        "என்னினும் தான்விதுப் புற்று."
      ],
      "manakkudavar": "கண்ணாலே புலந்தும் அதனையும் ஊடி நிறுத்தாது கலக்கமுற்றாள், புணர்தலை என்னினும் மிகத் தான் விரைதலானே. இது தலமகளூடற் குறிப்புப் புணர்வுவேட்டல் கண்டு தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.",
      "pope": "Her eye, as I drew nigh one day, with anger shone:By love o'erpowered, her tenderness surpassed my own",
      "sourceFile": "1290.md",
      "sourceSha256": "8c7c6b3ab0a36ea0fbdbf22827d6ae986f624dc6c55f145f5508e7201d58bc8f"
    },
    {
      "number": 1291,
      "lines": [
        "அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே",
        "நீஎமக்கு ஆகா தது."
      ],
      "manakkudavar": "அவருடைய நெஞ்சம் அவர்வழி நின்று நம்மை நினையாமையைக் கண்டு வைத்தும் நெஞ்சே! நீ எம்வழி நில்லாது அவரை நினைத்தல் யாதினைக் கருதியோ?. இது தலைமகள் வருங்காலத்து வாராத தலைமகனை உள்ளிய நெஞ்சோடு புலந்து கூறியது.",
      "pope": "You see his heart is his aloneO heart, why not be all my own",
      "sourceFile": "1291.md",
      "sourceSha256": "bdd52a5881e58d4b2ed04a35e6bf0fa17ab4e420f95d1a02e84da7af96d86985"
    },
    {
      "number": 1292,
      "lines": [
        "உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்",
        "செறாஅரெனச் சேறியென் நெஞ்சு."
      ],
      "manakkudavar": "என்னெஞ்சே! நீ அன்புறாதாரைக் கண்ட விடத்தும் செற்றம் நீங்குவாரென அவர்மாட்டுச் செல்லாநின்றாய். இது தலைமகள் தலைமகன்மாட்டுச் செல்லக் கருதிய நெஞ்சோடு புலந்து கூறியது.",
      "pope": "'Tis plain, my heart, that he 's estranged from thee;Why go to him as though he were not enemy",
      "sourceFile": "1292.md",
      "sourceSha256": "06784772f42cc29a76c469fbd0432e9836bbaa974c9298c4dacdcde3d60db8d4"
    },
    {
      "number": 1293,
      "lines": [
        "கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ",
        "பெட்டாங்கு அவர்பின் செலல்."
      ],
      "manakkudavar": "நெஞ்சே! நீ என்னிடத்து நில்லாது வேண்டின வண்ணமே அவர் பின்பே செல்கின்றது, கெட்டார்க்கு நட்டார் இல்லையென்பதனானேயோ?.",
      "pope": "'The ruined have no friends, 'they say; and so, my heart,To follow him, at thy desire, from me thou dost depart",
      "sourceFile": "1293.md",
      "sourceSha256": "07edd66d7b7c07be3da7752ad6a550655b64585c6e38a270cdbaf72d4693e0d7"
    },
    {
      "number": 1294,
      "lines": [
        "இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே",
        "துனிசெய்து துவ்வாய்காண் மற்று."
      ],
      "manakkudavar": "நெஞ்சே! நீ புலவியை நீளச்செய்து பின்னை நுகரமாட்டாய்: ஆதலான் இனி அப்பெற்றிப்பட்ட எண்ணத்தை நின்னோடு எண்ணுவார் யார்? இல்லை.",
      "pope": "'See, thou first show offended pride, and then submit,' I bade;Henceforth such council who will share with thee my heart",
      "sourceFile": "1294.md",
      "sourceSha256": "750cf3d1aa7262653b9c7c90a57ef359fd5fc0252fb86ba54e75899610faad33"
    },
    {
      "number": 1295,
      "lines": [
        "பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்",
        "அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு."
      ],
      "manakkudavar": "காதலரைப் பெறாதகாலத்துப் புணர்வு இல்லையோ என்று அஞ்சும்; பெற்றோமாயின் பிரிவாரோ என்று அஞ்சும்; ஆதலால் இடைவிடாத துன்பத்தை உடைத்து என்னெஞ்சு. இது தலைமகள் ஆற்றாமைகண்டு தூதுவிடக் கருதிய தோழிக்கு அவர் வந்தாலும் இதற்குள்ளது துன்பமே யென்று அதனொடு புலந்து கூறியது.",
      "pope": "I fear I shall not gain, I fear to lose him when I gain;And thus my heart endures unceasing pain",
      "sourceFile": "1295.md",
      "sourceSha256": "2d8df6979eeab0ae500737f70ee78c51d78b7a0a76064dfa5c0d7588a3e01cd0"
    },
    {
      "number": 1296,
      "lines": [
        "தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்",
        "தினிய இருந்ததென் நெஞ்சு."
      ],
      "manakkudavar": "என்னெஞ்சு, யான் தனிப்பட்டிருந்து நினைத்தால் உடம்படாது என்னை நலிவதாக இருந்தது. இது தலைமகள். நெஞ்சு அவர் செய்கின்ற கொடுமையை யுட்கொண்டு உள்ளாதே, யான்தனிப்பட்டால் நலிவதாக இருந்தது. நீ வருதலானே இப்பொழுது தப்பினேனென்று அதனோடு புலந்து தோழிக்குக் கூறியது.",
      "pope": "My heart consumes me when I ponder lone,And all my lover's cruelty bemoan",
      "sourceFile": "1296.md",
      "sourceSha256": "84647e2558c12c30a9fea2d9a5fdbd6c9beb9294f6e88d2e6757ccf0cc87ac2c"
    },
    {
      "number": 1297,
      "lines": [
        "நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்",
        "மாணா மடநெஞ்சிற் பட்டு."
      ],
      "manakkudavar": "என்கண் நெறிவர நினையும் நாணத்தையும் கடைப்பிடித்திலேன்: அவரை மறக்கமாட்டாத என் நன்மையில்லாத பேதை நெஞ்சோடு கூட்டுப்பட்டு. இது தலைமகள் யான் நாணாது தூதுவிட்டது, பின்நெஞ்சு மறவாமையாலேயென்று அதனோடு புலந்து கூறியது.",
      "pope": "Fall'n 'neath the sway of this ignoble foolish heart,Which will not him forget, I have forgotten shame",
      "sourceFile": "1297.md",
      "sourceSha256": "540d64b0f1d32186c13bb4e1205e14dee455799ff6108a16cf0a6195368c8d39"
    },
    {
      "number": 1298,
      "lines": [
        "எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்",
        "உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு."
      ],
      "manakkudavar": "அவர் திறத்தைத் தானும் இகழ்ந்தால் அதனானே தனக்கு இளிவரவு உளவாகக் கருதி நினையாநின்றது சாவமாட்டாத நெஞ்சு?. இது தலைமகள் நெஞ்சு அவரைப்போலத் தானும் இகழலாயிருக்க, இகழா நின்றதுமில்லை: அவர் செயலைக் கேளாது சாவவும் வல்லுகின்றதில்லை யென்று அதனோடு புலந்து கூறியது.",
      "pope": "If I contemn him, then disgrace awaits me evermore;My soul that seeks to live his virtues numbers o'er",
      "sourceFile": "1298.md",
      "sourceSha256": "a8d70ddd41410dd9102578e02e45db653fd02e05d6cd70531e2b55d0fefff6ce"
    },
    {
      "number": 1299,
      "lines": [
        "துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய",
        "நெஞ்சந் துணையல் வழி."
      ],
      "manakkudavar": "துன்பமுற்றால் அதற்குத் துணையாவர் உண்டோ? தம்முடைய நெஞ்சும் தமக்குத் துணையல்லாத காலத்து. இது தலைமகள் துணையாவார் யாரென்ற தோழிக்குக் கூறியது.",
      "pope": "And who will aid me in my hour of grief,If my own heart comes not to my relief",
      "sourceFile": "1299.md",
      "sourceSha256": "e2991e607a935d93859df0538c44b3fcce0787f2011947d946120fe4ded7272d"
    },
    {
      "number": 1300,
      "lines": [
        "தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய",
        "நெஞ்சம் தமரல் வழி."
      ],
      "manakkudavar": "தம்முடைய நெஞ்சும் தமக்குச் சுற்றமல்ல வாகுங்காலத்து, ஏதிலார் சுற்றமல்லாராவது சொல்லல் வேண்டுமோ?.",
      "pope": "A trifle is unfriendliness by aliens shown,When our own heart itself is not our own",
      "sourceFile": "1300.md",
      "sourceSha256": "049f7c4dc9320e084b822b1cbe16daf00533b021b77af5ba6a410f35e5980689"
    },
    {
      "number": 1301,
      "lines": [
        "புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்",
        "அல்லல்நோய் காண்கம் சிறிது."
      ],
      "manakkudavar": "நம் காதலர் வந்தால் புல்லாதிருந்து புலத்தல் வேண்டும்: அவ்விடத்து அவருறும் கலக்கத்தை யாம் சிறிது காண்பேமாக. இது வாயில் வேண்டிச் சென்ற தோழி தலைமகள் புலவிக் குறிப்புக் கண்டு முகங்கொடாமைப் பொருட்டு இனிமை கூறியது.",
      "pope": "Be still reserved, decline his profferred love;A little while his sore distress we 'll prove",
      "sourceFile": "1301.md",
      "sourceSha256": "092db869faca1864510b1061907e1aa4810e86f958ac128ab0a0c85fa0685a69"
    },
    {
      "number": 1302,
      "lines": [
        "உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது",
        "மிக்கற்றால் நீள விடல்."
      ],
      "manakkudavar": "நுகர்வனவற்றிற்கு உப்பமைந்தாற்போல இனிமை யுண்டாக்கும் புலவி: அதனை நீளவிடல் அவ்வுப்பு சிறிது மிக்காற்போல இன்னாதாம். இது வாயில் வேண்டிய தோழிக்குத் தலைமகள் மறுத்த விடத்துப் புலவியை நீளவிடுதல் தகாதென்று அவள் கூறியது.",
      "pope": "A cool reserve is like the salt that seasons well the mess,Too long maintained, 'tis like the salt's excess",
      "sourceFile": "1302.md",
      "sourceSha256": "53a9ab7032ab92fd871a7083f7c01b6c6a73ba48a3d3a69b137ff55229a7d4f8"
    },
    {
      "number": 1303,
      "lines": [
        "அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்",
        "புலந்தாரைப் புல்லா விடல்."
      ],
      "manakkudavar": "தம்மைப் பெறாது புலந்த மகளிரைப் புலவிநீக்கிக் கலவாது ஆடவர் சேறல், பண்டே துன்பமுற்றழிந்தாரை அதன் மேலும் மிக்க துன்பத்தினைச் செய்தாற்போலும்.",
      "pope": "'Tis heaping griefs on those whose hearts are grieved;To leave the grieving one without a fond embrace",
      "sourceFile": "1303.md",
      "sourceSha256": "564d54dbbdb6ac7fe291227714e6e5da45f99db0414578080f79ebd65d0f4027"
    },
    {
      "number": 1304,
      "lines": [
        "ஊடி யவரை உணராமை வாடிய",
        "வள்ளி முதலரிந் தற்று."
      ],
      "manakkudavar": "நும்மோடு ஊடிக்கண்டும் இவையிற்றால் வரும் பயன் இல்லை: நின்னோடு நெருநல் ஊடிய காமக்கிழத்தியரை ஊடல் தீராது பெயர்தல், வாடிய கொடியை அடியிலே அறுத்தாற்போலும். இது காமக்கிழத்தியரை ஊடல் தீராமை தீது; ஆண்டுப் போமேன்ற தலைமகள் கூறியது.",
      "pope": "To use no kind conciliating art when lover grieves,Is cutting out the root of tender winding plant that droops",
      "sourceFile": "1304.md",
      "sourceSha256": "ee83f9de0c4bd1a5caf3d095a1329f29ac38f870ede91c7917a9d7b25e811931"
    },
    {
      "number": 1305,
      "lines": [
        "நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை",
        "பூஅன்ன கண்ணார் அகத்து."
      ],
      "manakkudavar": "நலத்தகையினானே நல்லாரான பரத்தையர்க்கு ஓரழகாம், பூ வன்னகண்ணார்மாட்டுப் புலத்தல். நமக்கு ஆவார்மாட்டுப் புலத்தல் தீதென்றவாறு. இது பரத்தையரோடு புலந்து கூறிய தலைமகட்குத் தோழி கூறியது.",
      "pope": "Even to men of good and worthy mind, the petulanceOf wives with flowery eyes lacks not a lovely grace",
      "sourceFile": "1305.md",
      "sourceSha256": "b2e590f0e728467e78f4f5ccdaa8b5180c39f9a51758de5235dfcb506813e4dd"
    },
    {
      "number": 1306,
      "lines": [
        "துனியும் புலவியும் இல்லாயின் காமம்",
        "கனியும் கருக்காயும் அற்று."
      ],
      "manakkudavar": "உணராது நீட்டிக்கின்ற துனியும் உணர மீள்கின்ற புலவியும் இல்லையாயின் காமம் அழுகிய பழம்போலப் புளிக்கும்: காய்போலத் துவர்க்கும் ஆதலால். இஃது உணர்தற்கு நல்லது உளதென்று தலைமகள் கூறியது.",
      "pope": "Love without hatred is ripened fruit;Without some lesser strife, fruit immature",
      "sourceFile": "1306.md",
      "sourceSha256": "f90d950433cffc44d36091bcfa50b77240ef1275b7b58c3d610d07c37e30e0a0"
    },
    {
      "number": 1307,
      "lines": [
        "ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது",
        "நீடுவ தன்று கொல் என்று."
      ],
      "manakkudavar": "குளிர்ச்சியைத் தனக்கு இயல்பாகவுடைய நீரும் நிழலின் கண்ணதே யாயின், இனிதாம்: அதுப்போலப் புலவியும் அன்புடையார்மாட்டேயாயின் இனிதாம்.",
      "pope": "A lovers' quarrel brings its pain, when mind afraidAsks doubtful, 'Will reunion sweet be long delayed?'",
      "sourceFile": "1307.md",
      "sourceSha256": "93f16941e48d8e4f68eede23bfb4e48ae08c1528298a1c470fd9b06b269ad4f4"
    },
    {
      "number": 1308,
      "lines": [
        "நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்",
        "காதலர் இல்லா வழி."
      ],
      "manakkudavar": "யான் நோகின்றதனால் பயனென்னை? இவர் நொந்தாரென்று நினைத்து அதனை யறிந்து தீர்க்கும் காதலர் மனமிலாராகியவிடத்து. இஃது உணர்ப்புவயின் வாரா வூடற்கண் தலைமகன் புலந்துழி. அதனையறிந்து அகம்புக்க தோழி அவனுக்குச் சொல்லியது.",
      "pope": "What good can grieving do, when none who loveAre there to know the grief thy soul endures",
      "sourceFile": "1308.md",
      "sourceSha256": "804e3b04eaa02228b27e7d0fb2f6b64368d338d5bde873325bbef29697c8ba4f"
    },
    {
      "number": 1309,
      "lines": [
        "நீரும் நிழலது இனிதே புலவியும்",
        "வீழுநர் கண்ணே இனிது."
      ],
      "manakkudavar": "ஊடல் செய்யின் இன்பம் உண்டாயினும், அதன் கண்ணும் ஒரு துன்பம் உண்டு: புணருங்கால் அது நீட்டிக்குங்கொல்லோ? நீட்டியாதோ? என்று ஐயுறுதலால். இது தலைமகள் ஆற்றாமை வாயிலாகப் புலக்கத் தலைமகன் அது கண்டு சொல்லியது.",
      "pope": "Water is pleasant in the cooling shade;So coolness for a time with those we love",
      "sourceFile": "1309.md",
      "sourceSha256": "d2e609fdc485ef5ce3c1d7716ef225b671c91ca8537da2c9ad6ef22eae2c41b5"
    },
    {
      "number": 1310,
      "lines": [
        "ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்",
        "கூடுவேம் என்பது அவா."
      ],
      "manakkudavar": "என் புலவியைச் சாகவிட்டிருக்க வல்லாரோடு என்னெஞ்சு, கூடுவேமென்று நினைக்கின்றது தன்னாசைப்பாட்டால். இத புலவி நீங்கவேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் புலவி தீர்வாளாய்ச் சொல்லியது.",
      "pope": "Of her who leaves me thus in variance languishing,To think within my heart with love is fond desire",
      "sourceFile": "1310.md",
      "sourceSha256": "1e0b86973e7b030b4081fefd2a580255f1125968464edef3c38423fa9e9e54ca"
    },
    {
      "number": 1311,
      "lines": [
        "பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்",
        "நண்ணேன் பரத்தநின் மார்பு."
      ],
      "manakkudavar": "என் புலவியைச் சாகவிட்டிருக்க வல்லாரோடு என்னெஞ்சு, கூடுவேமென்று நினைக்கின்றது தன்னாசைப்பாட்டால். இத புலவி நீங்கவேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் புலவி தீர்வாளாய்ச் சொல்லியது.",
      "pope": "From thy regard all womankind Enjoys an equal grace;O thou of wandering fickle mind, I shrink from thine embrace",
      "sourceFile": "1311.md",
      "sourceSha256": "1f1f6a24633bd1c1aff92363b87cc001d776f75a5fb30f16ff68d633eb147a6b"
    },
    {
      "number": 1312,
      "lines": [
        "ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை",
        "நீடுவாழ் கென்பாக் கறிந்து."
      ],
      "manakkudavar": "தம்மோடு புலந்து உரையாடாது இருந்தேமாக: அவ்விடத்து யாம் தம்மை நெடிதுவாழுவீரென்று சொல்லுவே மென்பதனை யறிந்து தும்மினார். இது தலைமகள் தோழிக்குக் கூறியது.",
      "pope": "One day we silent sulked; he sneezed: The reason well I knew;He thought that I, to speak well pleased, Would say, 'Long life to you!'",
      "sourceFile": "1312.md",
      "sourceSha256": "568abdf207566a70c3b6e30457277b504c4eb1de9ef51ce91ba745afe2467f40"
    },
    {
      "number": 1313,
      "lines": [
        "கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்",
        "காட்டிய சூடினீர் என்று."
      ],
      "manakkudavar": "பக்கப்பூச் சூடினும் ஒருத்திக்குக் காட்டுதற்காகச் சூடினீரென்று சொல்லிக் காயும். பக்கப்பூ- ஒப்பனைப்பூ. கோட்டுப்பூ சூடினீர் என்பதற்கு வளைப்பூச்சூடினீரெனினுமாம். இது கோலஞ்செய்யினும் குற்றமென்று கூறியது.",
      "pope": "I wreathed with flowers one day my brow, The angry tempest lowers;She cries, 'Pray, for what woman now Do you put on your flowers?'",
      "sourceFile": "1313.md",
      "sourceSha256": "b5d84f2de0fef8231ed5b3ae99292a3d2bdd4097c1bd3a48a32df7a5e4cb9028"
    },
    {
      "number": 1314,
      "lines": [
        "யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்",
        "யாரினும் யாரினும் என்று."
      ],
      "manakkudavar": "ஒருவனும் ஒருத்தியுமாகி அன்பினால் புணர்ந்தார் யாவரினும் யாம் காதலுடையே மென்று சொன்னேனாக, அதனை அவ்வாறு கொள்ளாது, நீர் அன்புபட்டார் பலருள்ளும் யாரினும் அன்புடையீ ரென்று சொல்லி ஊடினாள்.",
      "pope": "'I love you more than all beside,' 'T was thus I gently spoke;'What all, what all?' she instant cried; And all her anger woke",
      "sourceFile": "1314.md",
      "sourceSha256": "bdf28ff2c23a5a7e1b30a263b88c689059e903734f7f3b90ac62a8cc3abf9dc2"
    },
    {
      "number": 1315,
      "lines": [
        "இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்",
        "கண்நிறை நீர்கொண் டனள்."
      ],
      "manakkudavar": "இப்பிறப்பிலே யாம் பிரியோமென்று சொன்னேனாக, அதனால் மறுபிறப்பின்கண் பிரிவுண்டென்று கருதிக் கண்ணிறைய நீர் கொண்டாள்.",
      "pope": "'While here I live, I leave you not,' I said to calm her fearsShe cried, 'There, then, I read your thought'; And straight dissolved in tears",
      "sourceFile": "1315.md",
      "sourceSha256": "7a69610629523e969aa31b0c88ec7574434b566ccd036d96f2d5a46ec6153bee"
    },
    {
      "number": 1316,
      "lines": [
        "உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்",
        "புல்லாள் புலத்தக் கனள்."
      ],
      "manakkudavar": "அவ்விடத்து எம்மை நினைத்தோமென்றீர்: மறந்தாரன்றே நினைப்பார். ஆதலான் எங்களை மறந்தீரென்று சொல்லி எம்மை முயங்காளாய்ப் புலவிக்குத் தகுதியாளாயினாள். இது நினைத்தோமெனினும் குற்றமென்று கூறியது.",
      "pope": "'Each day I called to mind your charms,' 'O, then, you had forgot,'She cried, and then her opened arms, Forthwith embraced me not",
      "sourceFile": "1316.md",
      "sourceSha256": "1a2b63b0d7ed166b0539643227252d96daf9fb5519dca41b1a6d8c4960ac3f62"
    },
    {
      "number": 1317,
      "lines": [
        "வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்",
        "யாருள்ளித் தும்மினீர் என்று."
      ],
      "manakkudavar": "யாம் தும்மினேம்; அதற்காக வாழ்த்தினாள்; நும்மை யார் நினைக்கத் தும்மினீர் என்று சொல்லி மீட்டும் அழுதாள். இது தும்மினும் குற்றமென்று கூறியது.",
      "pope": "She hailed me when I sneezed one day; But straight with anger seized,She cried; 'Who was the woman, pray, Thinking of whom you sneezed?'",
      "sourceFile": "1317.md",
      "sourceSha256": "954edfa334cc5e5cdd4db15fa0c8ee7c6ae9c8bfa8fe25956623b760a7457850"
    },
    {
      "number": 1318,
      "lines": [
        "தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்",
        "எம்மை மறைத்திரோ என்று."
      ],
      "manakkudavar": "தும்மல் தோற்ற அதனை யடக்கினேன். அதற்காக நுமர் உள்ளினமையை எமக்கு மறைக்கின்றீரோ வென்று சொல்லி அழுதாள். இது தும்மாதொழியினும் குற்றமென்று கூறியது.",
      "pope": "And so next time I checked my sneeze; She forthwith wept and cried,(That woman difficult to please), 'Your thoughts from me you hide'",
      "sourceFile": "1318.md",
      "sourceSha256": "c2c215600d0c43c5942852dba6f342372f7cdb712482c2501442b60ef99f9aaa"
    },
    {
      "number": 1319,
      "lines": [
        "தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்",
        "இந்நீரர் ஆகுதிர் என்று."
      ],
      "manakkudavar": "தன்னை ஊடல் தீர்த்தற்கு உணர்த்தினும், பிறர்க்கும் நீர் இவ்வாறு செய்வீரே யென்றுசொல்லி வெகுளும். இது தன்னைப் போற்றினும் குற்றமென்று கூறியது.",
      "pope": "I then began to soothe and coax, To calm her jealous mind;'I see', quoth she, 'to other folks How you are wondrous kind",
      "sourceFile": "1319.md",
      "sourceSha256": "f44034e5cc33c8a838b5c880f12e81950eaf635a8dcb113583322564c643ea24"
    },
    {
      "number": 1320,
      "lines": [
        "நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்",
        "யாருள்ளி நோக்கினீர் என்று."
      ],
      "manakkudavar": "தனது உறுப்புகளோடு வேறொன்றை உவமிக்க ஒண்ணாமையை யெண்ணி நோக்க இருப்பினும், என்னுறுப் பெல்லாம் நீர் காதலித்தவர்களில் யாருறுப்புக்கு ஒக்குமென்று நினைத்திருந்து நோக்கினீரென்று சொல்லி வெகுளும். இது பார்க்கிலும் குற்றமென்று கூறியது.",
      "pope": "I silent sat, but thought the more, And gazed on her Then sheCried out, 'While thus you eye me o'er, Tell me whose form you see'",
      "sourceFile": "1320.md",
      "sourceSha256": "12f510ce63ab1329e0234585c198b5d5e385ae8029e487f4ee5bb286772c88e0"
    },
    {
      "number": 1321,
      "lines": [
        "இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்",
        "வல்லது அவர்அள஧க்கு மாறு."
      ],
      "manakkudavar": "அவர்மாட்டுத் தவறில்லையானாலும் அவர்செய்யும் அருள் ஊடுதலைச் செய்யவற்று. இது துன்பம் பயப்பதாகிய புலவியைச் செய்கின்றது எற்றுக்கென்று வினாவிய தோழிக்குத் தலைமகள் கூறியது.",
      "pope": "Although there be no fault in him, the sweetness of his loveHath power in me a fretful jealousy to move",
      "sourceFile": "1321.md",
      "sourceSha256": "7686186cdc1270650ed16767af6a05317d7f7a0e931f02b07ca3ec8d4f4ae6b0"
    },
    {
      "number": 1322,
      "lines": [
        "ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி",
        "வாடினும் பாடு பெறும்."
      ],
      "manakkudavar": "ஊடலின்கண் எதிராது சாய்ந்தவர் வென்றார்: அவ்வெற்றியை நிலைபெறாநின்ற கூடலின்கண்ணே காணலாகும்.",
      "pope": "My 'anger feigned' gives but a little pain;And when affection droops, it makes it bloom again",
      "sourceFile": "1322.md",
      "sourceSha256": "a85bc37cbb692e1e2b417494ba78c93a40aa2f6df2ebf26c3a9031132dab3396"
    },
    {
      "number": 1323,
      "lines": [
        "புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு",
        "நீரியைந் தன்னார் அகத்து."
      ],
      "manakkudavar": "நிலனும் நீரும் பொருந்தினாற்போல ஒன்றுபட்ட நெஞ்சுடையார்மாட்டுப் புலத்தல்போல, இன்பந்தருவதொரு புத்தேள் உலகம் உண்டோ?. நிலத்தோடு நீரியைதலால் அவை வெப்பமும் தட்பமும் கூடியிருக்குமாறு போல இன்பமும் துன்பமும் கூட அனுபவிப்பார் மாட்டென்றவாறு.",
      "pope": "Is there a bliss in any world more utterly divine,Than 'coyness' gives, when hearts as earth and water join",
      "sourceFile": "1323.md",
      "sourceSha256": "1f0c590e163576b8dd8b1ed484f34b7c283e3b64037d81b07b720e53ba2b4671"
    },
    {
      "number": 1324,
      "lines": [
        "புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்",
        "உள்ளம் உடைக்கும் படை."
      ],
      "manakkudavar": "என் உள்ளத்தை அழிக்குங் கருவி, புல்லினவிடத்து விட்டுப் புலந்தவிடத்துத் தோன்றும். அது புணர்ந்த பின்பு தோன்றாமையால் அதனைக் கெடுக்கும் இன்பமுடைத்தென்று கூறியவாறு. படை- பணிமொழி. இவை யெட்டும் தலைமகன் கூற்று.",
      "pope": "'Within the anger feigned' that close love's tie doth bind,A weapon lurks, which quite breaks down my mind",
      "sourceFile": "1324.md",
      "sourceSha256": "71210f07ab4920342691a43b064f5f4b6a5da25b386682db931c0e48ae0697fa"
    },
    {
      "number": 1325,
      "lines": [
        "தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்",
        "அகறலின் ஆங்கொன் றுடைத்து."
      ],
      "manakkudavar": "தாம் தவறிலராயினும் தாம் காதலிக்கப்பட்டாரது மென்றோள்களை நீங்குதலானே, அஃது ஓரின்பமுடைத்து. இது குற்றம் உண்டாயினும் இல்லையாயினும் ஊடலிற் கூடல் நன்றென்றது.",
      "pope": "Though free from fault, from loved one's tender armsTo be estranged a while hath its own special charms",
      "sourceFile": "1325.md",
      "sourceSha256": "cde341475c165bb68509f32df2ede94c8d4ebfe5fc32cef671f8cb88cae62fb2"
    },
    {
      "number": 1326,
      "lines": [
        "உணலினும் உண்டது அறல்இனிது காமம்",
        "புணர்தலின் ஊடல் இனிது."
      ],
      "manakkudavar": "உண்பதினும் உண்டது அறுதல் உடம்பிற்கு இன்பமாம்: அதுபோலக் காமத்திற்குப் புணர்தலினும் ஊடுதல் இன்பமாம். பசியினால் உண்ணும் உணவு இன்பந்தருவது போல ஊடலினால் கூடல் இன்பந் தரும் என்றவாறு.",
      "pope": "'Tis sweeter to digest your food than 'tis to eat;In love, than union's self is anger feigned more sweet",
      "sourceFile": "1326.md",
      "sourceSha256": "2dc9d10a2bb08667826c700807785541d37734e189f44012dbdeba515bbac475"
    },
    {
      "number": 1327,
      "lines": [
        "ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்",
        "கூடலிற் காணப் படும்."
      ],
      "manakkudavar": "ஊடலிற் றோன்றும் சிறியதுனி, மிக்க அருள் பெறாதொழியினும் அழகு உடைத்து. புணராதொழியினும் இன்பமாமென்று கூறியவாறு.",
      "pope": "In lovers' quarrels, 'tis the one that first gives way,That in re-union's joy is seen to win the day",
      "sourceFile": "1327.md",
      "sourceSha256": "4faa5fd71556f18aace71339f27700dd2c604465d531824c207aacc7856958d1"
    },
    {
      "number": 1328,
      "lines": [
        "ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்",
        "கூடலில் தோன்றிய உப்பு."
      ],
      "manakkudavar": "நுதல்வெயர்ப்பக்கூடிய கூட்டத்தாலே யுண்டாகிய இன்பத்தை இன்னும் ஒருகால் ஊடிப் பெறுவோமோ?. ஊடுதல் இருவர்க்கும் உண்டாமாதலால் பொதுப்படக் கூறினார். இஃது ஊடினார்க்கு அல்லது இன்பம் பெறுதலரிதென்றது.",
      "pope": "And shall we ever more the sweetness know of that embraceWith dewy brow; to which 'feigned anger' lent its piquant grace",
      "sourceFile": "1328.md",
      "sourceSha256": "c1d9b65d7fe15f152418b8e618d9708b7b074051a38d6676cdebadc35456c122"
    },
    {
      "number": 1329,
      "lines": [
        "ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப",
        "நீடுக மன்னோ இரா."
      ],
      "manakkudavar": "விளங்கிய இழையினையுடையாள் என்றும் ஊடுவாளாக வேண்டும்: யாம் இவளை இரந்து ஊடல் தீர்க்கும் அளவும் இராப்பொழுது நெடிதாக வேண்டும். இது மனவூக்கத்தின்கண் வந்தது.",
      "pope": "Let her, whose jewels brightly shine, aversion feignThat I may still plead on, O night, prolong thy reign",
      "sourceFile": "1329.md",
      "sourceSha256": "4b27bb021482772cf6993c07aaf8b8bc3ebf06121696841fbac84659a27fb0b9"
    },
    {
      "number": 1330,
      "lines": [
        "ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்",
        "கூடி முயங்கப் பெறின்."
      ],
      "manakkudavar": "காமத்திற்கு ஊடுதல் இன்பமாம்: அதன்பின் கூடிக்கலக்கப் பெற்றால் அதற்கு இன்பமாம். இது யாம் பெற்றோம்; பிறர் அதன் செவ்வியறியாமையால் பெறுதலரிதென்று கூறியது.",
      "pope": "A 'feigned aversion' coy to pleasure gives a zest;The pleasure's crowned when breast is clasped to breast",
      "sourceFile": "1330.md",
      "sourceSha256": "cff45c125710b3b80d02c2c8cdd44bc06e46d0e04373c9c6ca89d605cf5c782a"
    }
  ]
}
